Feb 7, 2010

காதல் – கடவுளின் மொழி


 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காதலர்கள் தினம்.

   கடவுள் பல வழிகளில் நம்முடன் உரையாடிகிறார். குழந்தையும்,காதலும் அவரின் இரு முக்கியமான வழிகள் என்கிறார் ஒரு கஜல் காதலன். கஜல் என்றால் காதலியுடன் பேசுவது என்று அர்த்தமாம்.பெரும்பாலும் கஜல், காதலின் சோகத்தையே பாடும். அதில்தான் காதலின் ஆழமும் புரியும். எனக்கு மிகவும் பிடித்த கஜல் கவிதையொன்று

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

தமிழை பொறுத்தவரை பெரும்பாலான காதலர்களுக்கு பரிச்சயமானவர் தபூ சங்கர்.

எனக்குப் பெண் கிடைப்பது முக்கியமில்லை
என் காதலுக்கொரு
காதலி கிடைக்க வேண்டும்.

என்கிறார் தபூ.ஒவ்வொரு மனிதனும் முழுமையாவது காதலிக்கும் போதுதான் என்று நம்புகிறேன். இதயத்தை மயிலிறகால் சில நேரம் வருடுவதும், சில நேரம் தணலில் போட்டு வறுப்பதுமென காதலின் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமானவை.

பேஸ்மெண்ட் பலம் போதுமென நினைக்கிறேன். இந்த வாரம் முழுவதும் காதல் சிறப்பு வாரமாக கொண்டாடலாம் என நினைக்கிறேன். முதல் பதிவாக நான் எழுதிய காதல் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றிலிருந்து தொடங்குவோம். இனி வருபவையெல்லாம் புதிய பதிவாகத்தான் இருக்கும்.

_________________________________________

உலகை அழிக்க வந்த உலக அழகி

  பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறித்து ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி பொக்கெயென உன் பிறந்த நாளுக்கு தர மனமில்லை எனக்கு. எனக்காக ஒரே ஒரு முறை ரோஜாத் தோட்டத்திற்கு வா. நீங்களெல்லாம் அழகான ரோஜாவல்ல என அவைகளிடம் சொல்லும் போதெல்லாம் இளக்காரம் செய்கின்றன. உன்னைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் சில ரோஜாப்பூக்களை சேகரித்து தருகிறேன்.பொக்கெயன.

  நினைவிருக்கிறதா? சென்ற பிறந்தநாளன்று கடற்கரைக்கு சென்றோம். காற்றுக் கூட நம்மிடையே நுழைய முடியாதபடி நெருக்கமாக அமர்ந்தாய். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய். நம் காதல் வந்து  உட்கார்ந்துக் கொண்டது அந்த இடைவெளியில்.

   வெள்ளை நிற சுடிதாரில் உன்னைப் பார்த்த அன்று, நல்லவேளை பாரதிராஜா கண்களில் படாமல் போனாய் என உன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என்னுடன் சமாதானமாக போக வேண்டியே அந்த உடை என அவர்களில் ஒருத்தி சொல்லித்தான் தெரிந்துக் கொண்டேன். நமக்குள் என்ன சண்டை என உன்னிடம் கேட்டபோது சொன்னாய். ” இனிமேல் அப்படிப் பார்க்காதீங்க. ”

    நீ பிறக்குமுன் எந்தக் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் உன் அம்மாவும், அப்பாவும்? அந்த ரகசியத்தை பிறருக்கும் சொன்னால் இன்னும சில ஆண்கள் என்னைப் போல அந்தரத்தில் நடக்கக் கூடுமல்லவா!!!

   என்னிடம் நீ வாங்கிச் சென்ற ரோஜாச்செடி மொட்டு மட்டுமே தருகிறது. பூக்கவே இல்லையென அலுத்துக் கொள்பவளே, உன்னை யார் மொட்டாய் இருக்கும் போதே அதற்கு முத்தம் தர சொன்னது? அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல.

   குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு.

   முதலிரவைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம் என்றேன். இரவு தொலைபேசியில் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாய். அன்றிரவு, "என்னடா செல்லம் உன் டவுட்டு" என்ற உன்னிடம் “மத்த பழமெல்லாம் ஓக்கே. ஈசியா சாப்பிடலாம்.எதுக்கு அன்னாசி பழம் வைக்கறாங்க. உனக்குத் தெரியுமா?” என்றேன். சில நொடி அமைதி  கலைத்து சொன்னாய் “அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு”.

பி.கு: அடுத்த வாரம் பழைய டெம்ப்ளேட் மாற்றப்படும். இதை விட சிறந்த வேலண்ட்டைஸ் டே சிறப்பு டெம்ப்ளேட் கிடைத்தால் எனக்கு இ.மெயில் அனுப்புங்கள்.

30 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on February 7, 2010 at 11:05 PM said...

குங்குமத்தில் வந்ததுதானே இது :)

உங்க அம்மா யாரு இது கேட்டதா சொன்னிங்களே

இப்பவாது உங்க அம்மாகிட்ட அந்த பொண்ணு பேரை சொல்லிட்டிங்களா இல்லையா

Chitra on February 8, 2010 at 12:01 AM said...

Valentine's Day/week special! - நடத்துங்க, நடத்துங்க.

வெற்றி on February 8, 2010 at 12:05 AM said...

வாவ் !!! கீழே இருக்கிற கட்டுரைய நீங்களா எழுதுனீங்க..ஆவ்சம் சகா..

அதிலை on February 8, 2010 at 12:10 AM said...

you really rock man..though lots of tabu shankar 'influence'

சுசி on February 8, 2010 at 1:49 AM said...

சரியான தலைப்பு கார்க்கி..

அசத்தலா இருக்கு ஆரம்பமே..

//ஒவ்வொரு மனிதனும் முழுமையாவது காதலிக்கும் போதுதான் என்று நம்புகிறேன். //
நானும்.. நானும்..


இந்த உலக அழகி முன்னாடி படிக்கப்பட்டவங்கன்னாலும் மறுபடி மயக்கிட்டாங்க.

பிரியமுடன்...வசந்த் on February 8, 2010 at 2:31 AM said...

காற்றுக் கூட நம்மிடையே நுழைய முடியாதபடி நெருக்கமாக அமர்ந்தாய். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய். நம் காதல் வந்து உட்கார்ந்துக் கொண்டது அந்த இடைவெளியில்//

இந்த வாரம் முழுசும் களைகட்டபோகுது

ஸ்பெசல் டெம்ப்ளேட் நல்லா இருக்கு சகா

தலைப்பு காதல்-கடவுளின்மொழி

காதல்-கண்களின்மொழியும் கூட...

Anonymous said...

காதலர் தினம் வருது. நடத்துங்க

தராசு on February 8, 2010 at 9:21 AM said...

டெம்பிளேட் கலக்கல்.

இனி ஒரு வாரம் பூரா காதல் தானா, கடவுளே.....

சுரேகா.. on February 8, 2010 at 9:27 AM said...

சூப்பரான டெம்ப்ளேட்...!

ஆமா.. அது என்ன பெரிய இதயத்து பக்கத்துல நிறைய சின்ன இதயங்கள்! ஒண்ணுதானே இருக்கணும்?

முகம் தெரியாத கார்க்கியின் காதலியே ! பையன் சரியில்லை! பாத்துக்கம்மா!

:))

கார்க்கி on February 8, 2010 at 9:58 AM said...

தா.பி,
அதேதான். பொண்ணு பேரு எனக்கே தெரியாத போது, என்னன்னு சொல்ல? இப்போதைக்கு பொண்ணுன்னு மட்டும் சொல்லியிருக்கேன் :)

@சித்ரா,
நன்றி

@வெற்றி,
ஆமா சகா. குங்குமத்தில் கூட வந்தது

@அதிலை,
நன்றி சகா. லைட்டா:))

@சுசி,
மயக்கியது உலக அழகியா? அவளை அழகாய் சொன்னதா? :))

@வசந்த்,
நன்றி சகா. கண்களின் மொழி என்பதை விட இதயத்தின் மொழி எனலாம். நாம தான்(நாமன்னா அந்த நாம இல்ல) காதல் கோட்டை கட்டினவங்களாச்சே

@அம்மிணி,
அதுக்குதாங்க

@தராசு,
இந்த வாரம் முழுக்க உங்கள, கேபிள் எல்லாம் உள்ளவே விடக்கூடாது. இது நிஜ யூத்துக்காக பாஸ்

@சுரேகா,
நன்றி. இதயத்தை சில்லு சில்லா உடைத்தாலும் இன்னொரு இதயமாகத்தான் பாஸ் மாறுது. உடைந்த கண்ணாதுண்டுகளில் எல்லாம் அவளின் ஒரே முகம் தெரிவது போல..

Anbu on February 8, 2010 at 9:59 AM said...

:-))))))

Dinesh on February 8, 2010 at 10:04 AM said...

காதல் ஒண்ணும் கடவுள் இல்லாயாட, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை தானடா.. - கமல் ஹாசன்.

நர்சிம் on February 8, 2010 at 10:19 AM said...

14க்கு இப்பலேர்ந்தா..ரைட்ட்டு சகா..காதல் டெம்ப்ளேட்ட லேட் ஆக்காம போட்டு இருக்கீங்க..ஆல் த பெஸ்ட்..அவங்களுக்கு.

taaru on February 8, 2010 at 10:32 AM said...

காதல் இளவளரசன் கார்க்கி..
டேம்பிளட் சூப்பர்.. அத விட அந்த போட்டோ சூப்பர்...
காதலர் தினமா.... ஹம்..இப்போ எல்லாம் பெருசுங்களும் யூத் மாதிரி பேசுறது fashion ஆ போச்சு... :-P; என்னா? கார்க்கி...!!

Sure on February 8, 2010 at 10:36 AM said...

ஆரம்பிச்சிடார்யா , ஆரம்பிச்சிடார்யா

radhika on February 8, 2010 at 10:36 AM said...

wow.. Real treat for us. Romantic Template karki. As usual you rock.

Global warming.. still remember that older post. Chanceless thinking.

profile pic is too gud.

Real star week.

கார்க்கி on February 8, 2010 at 11:53 AM said...

நன்றி அன்பு,

@தினேஷ்,
நீ ஒரு காதல் சங்கீடம்.. வாய்மொழி சொன்னால் தெய்வீகம் - இதுவும் கமல்தான் பாஸ் :)

@நர்சிம்,
ரைட்டு சகா.. ஆனான் அந்த ”அவங்க”.. யாரு?

@டாரு,
ஹலோ பாஸ்> நாங்க ரியல் யூத்து

@sure,
இனிமேலதாங்க :))

@ராதிகா,
நன்றிங்க. ரொம்ப நன்றிங்க. ரொம்ப ரொம்ப நன்றிங்க :))

Kafil on February 8, 2010 at 12:45 PM said...

Intha Ponnungale Ipdithaan Yesamaan, Kuthunga yesaman kuthunga

நாய்க்குட்டி மனசு on February 8, 2010 at 1:01 PM said...

இதயத்தை மயிலிறகால் சில நேரம் வருடுவதும், சில நேரம் தணலில் போட்டு வறுப்பதுமென காதலின் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமானவை.//
எனக்கு ரொம்ப பிடித்த வாஸ்தவமான வார்த்தைகள்.
காதல் வாரம் கொண்டாடுறதெல்லாம் இருக்கட்டும், கல்யாணம் எப்போ?

முரளிகுமார் பத்மநாபன் on February 8, 2010 at 1:41 PM said...

டெம்ளேட் கலக்கல் சகா, பரிசல் கேள்விக்கு பதில் சொல்ற மாதிரி இருக்கே :-)

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே?

கரெக்டா சகா?

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on February 8, 2010 at 2:45 PM said...

//.. “அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு”..//

:-)))))

கார்க்கி on February 8, 2010 at 4:24 PM said...

@காஃபில்,
நோ.. நோ.. அப்படி எல்லாம் சொல்லக் கூடாது....... இந்த வாரத்துல :)

@நாய்க்குட்டி மனசு,
இருங்க இப்பதான் எல்.கே.ஜி. அதுக்குள்ள பத்தாவது எக்ஸாமா?

@முரளி,
நானும் அதத்தான் நினைச்சேன் சகா:)

@திரு,
:))

Karthik on February 8, 2010 at 4:31 PM said...

சூப்பர்ப் ஆரம்பம். உங்க பழைய காதல் பதிவுகள்லாம் என்னோட பேவரைட். நிறைய எதிர்பார்க்கிறேன். :))

||| Romeo ||| on February 8, 2010 at 5:49 PM said...

டெம்ப்ளேட் சூப்பர் ..காதலர் தினது ஸ்பெஷலா மொக்கை போடாம இருந்தா சரி .. ஹி ஹி ஹி

விக்னேஷ்வரி on February 8, 2010 at 5:54 PM said...

அய்யோ, இந்த வாரம் முழுக்க உங்க மொக்கையைத் தாங்கணுமா....

பரிசல்காரன் on February 8, 2010 at 6:03 PM said...

வாவ்!

அசத்தல் ஐடியா கார்க்கி!

அப்படியே ப்ரொஃபைல் கேப்ஷனையும் ரொமாண்டிக்கா மாத்தீடு.. இப்படி...
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஏ சலசாலா இஸ்குபராரா அசக்குமொராயா..

பூம் பூம் ஜகாகா முக்காலா மையா மையா

லாலாக்கு லாலாக்கு டோல்டப்பிமா..

அன்புடன் அருணா on February 8, 2010 at 8:17 PM said...

மொத்தத்துலே இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு........
ஏ சலசாலா இஸ்குபராரா அசக்குமொராயா..

பூம் பூம் ஜகாகா முக்காலா மையா மையா

லாலாக்கு லாலாக்கு டோல்டப்பிமா.

தமிழ்ப்பறவை on February 8, 2010 at 9:22 PM said...

நல்லா இருக்கு சகா டெம்ப்ளேட்...
ஆனா விசயம் எழுதுற இடம் ரொம்பக் கம்மியா இருக்கே... (உங்க) காதலைப் பற்றி எழுத இந்த இடம் போதுமா?

கார்க்கி on February 8, 2010 at 11:40 PM said...

நன்றி கார்த்திக். முயற்சி செய்கிறேன்

ரோமியோ, கொஞ்சம் கஷ்டம் தான் சகா

விக்கி, அப்போ அடுத்த வாரம்?

பரிசல்.. சூப்பர். மாத்தியாச்சு.. லாலாக்கு..லாலக்கு :))

நன்றி டீச்சர்

ஆமாம் பறவை. எனக்கு அகலம் மாற்றத் தெரியவில்லை. இப்ப வேற டெம்ப்ளேட். இதில் சில குறைகள் இருந்தாலும் முகப்பு படத்துக்காக போட்டிருக்கிறேன்

ஆதிமூலகிருஷ்ணன் on February 11, 2010 at 9:46 PM said...

உன்னைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் சில ரோஜாப்பூக்களை சேகரித்து தருகிறேன்.. பொக்கேயென.//

நான் மிக ரசித்த வரிகள். முதலிரவு ஜோக் கொள்ளை அழகு.

 

all rights reserved to www.karkibava.com