Feb 5, 2010

”அசல்” விமர்சனம்


 

டிஸ்கி: இது போலியான விமர்சனம் இல்லை. படத்தைப் பற்றிய என் அசல் விமர்சனம்.

மீண்டும் அஜித்-சரண்-பரத்வாஜ்,வைரமுத்து கூட்டணி. தல போல வருமா பாடல் வேறு தல ரசிகர்களை முறுக்கேற வைத்திருக்கிறது. எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் படம்?

100 சதவீதம் பொழுதுபோக்கு என்று சப்-டைட்டில் போடாமல் விட்டுவிட்டார்களே... என்று வருத்தப்பட வைக்கிற படம். இருந்தாலும் லாஜிக் மாறாமல் திரைக்கதையை எடுத்துச் சென்றதில் இயக்குநர் சரணுக்கு ஷொட்டு வைக்கலாம்.

அஜித் + அஜித் என இரட்டைக் குழந்தைகள். அப்பா நிழல்கள் ரவி, அம்மா சுஜாதா, தாதா பாபு ஆன்டனி கையாளாக இருந்து, அவராலேயே கொல்லப்படுகிறார் நிழல்கள் ரவி. இதை குழந்தையாக இருக்கும் ஒரு அஜித் பார்த்து விட, அவரையும் ஆன்டனி குறி வைக்கிறார். வேறு வழியில்லாமல், வெளிநாட்டுத் தம்பதிக்கு அந்த குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டு மற்றொரு குழந்தையுடன் சென்னையில் செட்டிலாகிறார் சுஜாதா... என்று ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

அம்மாவோடு வாழும் அஜித், டிரைவிங் ஸ்கூல் நடத்த, அங்கு வந்து சேர்கிறார் நாயகி. இந்தக் கூட்டணி காதல் பாடல் படிக்க, கருணாஸ் - வையாபுரி கூட்டணி காமெடியில் கலக்குகிறது. மற்றொரு, அஜித் வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்து நிறைய தங்க நகைகளோடு தூத்துக்குடியில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார். அம்மா, தம்பி மீது அவருக்கு ஏக கோபம்.

சென்னை அஜித், ஏதேச்சையாக தூத்துக்குடி செல்ல குழப்பம் ஆரம்பிக்கிறது. வில்லன்கள் மகாதேவன் - ஆன்டனி துரத்த அடிதடி ஆரம்பிக்கிறது. தாதா அஜித் சென்னையிலும், இவர் தூத்துக்குடியிலும் மாறிக் கொள்ள, ஒரு கட்டத்தில் உண்மையைப் புரிந்து கொண்டு அம்மாவிடம் அன்பு காட்டும் தாதா அஜித், எதிரிகளை வீழ்த்துகிறார்.

அஜித் - நாயகி கூட்டணி அட்டகாசத்தைத் தொடர, மீண்டும் தூத்துக்குடிக்குப் புறப்படுகிறார் மற்றொருவர். அப்புறமென்ன... சுபம் தான்.

மீண்டும் அஜித் - இரட்டை வேடம் என்பதால் ஏற்படும் ஈர்ப்புக்கு பாதகம் வராமல் இருக்க அஜித் நிறைய சிரமப்பட்டிருக்கிறார். ஒரு அஜித் அமைதியாக, அதிர்ந்து பேசாத, சாதுவாக இருக்க... மற்றொருவர் அடாவடியாக தடாலடியாக செய்கிறார். ஒருவர் சென்னைத் தமிழ்,.... மற்றொருவர் தூத்துக்குடி தமிழ்...

அழகுப் பதுமையாக வந்து செல்லும் பூஜா நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. அஜித்துக்கு ஜோடியாக இவர் இன்னும் வளர வேண்டும். காமெடிக் கூட்டணியான கருணாஸ் - வையாபுரி ரமேஷ்கண்ணா நிறையத் தந்திருக்கின்றனர். குறிப்பாக, கருணாஸ் - அஜித்தின் ஆட்டோஸ்டார்ட் காமெடி நிறைய நகைக்க வைக்கிறது.

இரட்டை வேட அஜித், மாறி மாறிக் காட்சிகள் என்று இயக்குனருக்கு நிறையச் சிரமம் தரும் திரைக்கதையை லாவகமாகக் கையாண்டிருக்கிறார் சரண். என்டர்டெயின்மென்ட் என்பதற்காக லாஜிக் மீறாமல் நகர்த்தியிருப்பதில் அவருக்கு வெற்றிதான்.

வழக்கமாக ஜொலிக்கும் சரண் - பரத்வாஜ் கூட்டணிக்கு என்ன ஆச்சு? பாடல்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அதுபோல, பாடல் காட்சிகளை பதிவு செய்வதிலும் ஏனோ... அவசரம்.

மொத்தத்தில் அட்டகாசம், சுமாரான கமர்ஷியல் மசலா

____________________________________________________________________________

பி.கு: சத்யமாக இது நகைச்சுவை பதிவல்ல. அட்டகாசம் படத்தின் விமர்சனம் தான்

46 கருத்துக்குத்து:

Gatz on February 5, 2010 at 8:32 AM said...

சகா night படத்த பாத்துட்டு விமர்சனம் போடுங்க

அழகேசன்

Gatz on February 5, 2010 at 8:33 AM said...

Ai me the first :):)

♠ ராஜு ♠ on February 5, 2010 at 8:34 AM said...

அட்டகாசமான எழுத்து நடை தல..!

எறும்பு on February 5, 2010 at 8:40 AM said...

அருமையான விமர்சனம்

கார்க்கி on February 5, 2010 at 8:40 AM said...

நன்றி கட்ஸ்

நன்றி ராஜு..அது ஒன்னும்ல்லைப்பா, நமக்கு சரின்னு படறது தப்பா இருnந்தாலுmம் சரியா செஞ்சடும்னு சொன்னாங்க. அதான் :))

அசல் வெற்றி பெற்று, வேட்டைக்காரனின் ஓப்பனிங் ரெக்கார்டை ப்ரேக் செய்ய வாழ்த்டதுகள்

Dinesh on February 5, 2010 at 9:13 AM said...

என்ன கார்கி சார், உங்களுக்கும் ஹிட்ஸ் மோகம் வந்துருச்சு போல...
சூடான டாபிக் கைய்யில எடுத்துகிட்டு கலக்குறீங்க ?

டம்பி மேவீ on February 5, 2010 at 9:13 AM said...

profile photo nalla irukku.....

அறிவிலி on February 5, 2010 at 9:28 AM said...

"அசல்" அசல் இல்ல போலிருக்கே, போலி மாதிரி தெரியுதே.

சங்கர் on February 5, 2010 at 9:41 AM said...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:))))))))))

Vels on February 5, 2010 at 9:46 AM said...

பரவால்ல. விஜய் ரசிகரா இருந்தாலும், ஹிட்ஸ் - க்காக "தல" யை கைல எடுத்துட்டீங்க.
ஆனா இதுதான் அட்டகாசத்தோட அசல் விமர்சனம். அட்டகாசம் பாக்காதவங்க இதுதான் அசல்னு நினைச்சுக்கப்போறாங்க.

"பட் உங்க டைமிங் ரொம்ப பிடிச்சுருக்கு".

||| Romeo ||| on February 5, 2010 at 9:50 AM said...

லேடா எழுதினாலும் லேட்டஸ்டா இருக்கு சகா..

கார்க்கி on February 5, 2010 at 9:52 AM said...

நன்றி எறும்பு

தினேஷ், அதெல்லாம் இல்லைங்கண்ணா. வேட்டைக்காரன் வந்தப்ப எல்லொரும் எம்.ஜி.ஆர் படத்தை பத்தி எழுதுனாங்க. அந்த மாதிரி ஒரு ஐடியா சிக்கிடுச்சுன்னு எழுதினேன். 1000ல் ஒருவனையும், தமிழ்ப்படத்தையும் பார்த்துட்டு ரெண்டு நாள் கழிச்சுதான் விமர்சனமே எழுதினேன். முத நாளே எழுதி இருந்தா இன்னும் 2000 ஹிட்ஸ் குட கிடைச்சிருக்கும். :)))))

நன்றி மேவீ

நன்றி அறிவிலி. நீங்க அறிவாளிண்ணே

சங்கர், சைலன்ஸ் ..கத்தக் கூடாது :))

நர்சிம் on February 5, 2010 at 9:56 AM said...

ஒரு ஓட்டவேற போட்டேன்..அட்டகாசம்..ஹும்

முகிலன் on February 5, 2010 at 10:12 AM said...

தல போல வருமா பாட்டைப் பத்தி ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டிங்களே சகா?

LOSHAN on February 5, 2010 at 10:16 AM said...

ஆகா.. :)
'அசல்' படம் பாருங்க சகா..
அத்தோட ராத்திரிக்கு கொஞ்சம் நல்லாவே தூங்கப் பாருங்க.. கனவில் காத்து கீத்து அடிச்சிருக்குப் போல.. ;)

பரிசல்காரன் on February 5, 2010 at 10:34 AM said...

சகா இத எத்தனை பேர் புரிஞ்சுக்காம அசல் படத்தோட அசல் விமர்சனம்னு நெனைக்கப் போறாங்கன்னு தெரியல...

கார்க்கி on February 5, 2010 at 10:36 AM said...

வேல்ஸ்,
ஹிட்ஸ் முக்கியம்தான்.இல்லைன்னு சொல்லல. ஆனா இது அதுக்காக எழுதல. சும்மா ஜாலியா ஒரு ஐடியா சிக்குச்சுன்னு எழுதினேன். அதிகமாக hitS வாஙுவது எபாடின்னு ஒரு பதிவே போட போறேன்..:))

நன்றி ரோமியோ

நன்றி சகா :))

சேர்த்தாச்சு முகிலன்

லோஷன்,படம் பார்த்தாதானே அடிக்கும்? :))

பரிசல், நிஜமாவா????????????

Jaya on February 5, 2010 at 11:25 AM said...
This comment has been removed by the author.
பிரியமுடன்...வசந்த் on February 5, 2010 at 11:33 AM said...

அட்டகாசம் சகா சத்தியமா ஏமாந்தது அவனுங்களாத்தான் இருக்கும்...முழிக்குறானுக பாருங்க...

Jaya on February 5, 2010 at 11:33 AM said...

:)

எப்போ அட்டகாசமான(அப்படி இருக்குமா ?? Nambuvom..)அசல் விமர்சனம் போட போறீங்க? :)))

தராசு on February 5, 2010 at 11:45 AM said...

விமர்சனம்,

கலக்கல், உள்குத்துகள் ரசிக்கப்பட்டன.

Chitra on February 5, 2010 at 11:58 AM said...

அசல் அஜித் பட விமர்சனம் - அட்டகாசமான ஐடியா. அசத்தல்.

Anbu on February 5, 2010 at 11:58 AM said...

Raittu....

:-)

Anonymous said...

நிச்சயம் அசல் பாக்கத்தான் போறேன்.

குறும்ப‌ன் on February 5, 2010 at 1:22 PM said...

ண்ணா, அடுத்த‌ "ஐடியா ம‌ணி" நீங்க‌தாணுங்ணா:)

susi on February 5, 2010 at 1:55 PM said...

உங்க அட்டகாசத்துக்கு அளவே இல்லையா?

அடங்கவே மாட்டீங்களா நீங்க?

நானும் என் பங்குக்கு திட்டி வச்சிட்டேன் கார்க்கி :))

இருந்தாலும் நான் இத எதிர் பார்க்கல..
செம..:))

ஆதிமூலகிருஷ்ணன் on February 5, 2010 at 4:51 PM said...

இப்ப இது தேவையா.?

subamgurunathan on February 5, 2010 at 5:01 PM said...

oru second adi poyitten, appuramathan ungal "asal" vimarsanam purinthathu

Muthu on February 5, 2010 at 6:11 PM said...

ஏன் இந்த கொலை வெறி சகா ?...
don't worry be happy

கார்க்கி on February 5, 2010 at 9:42 PM said...

அனைவருக்கும் நன்றி. இதில் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் எதுவும் இல்லை. ஆயிரத்தில் ஒருவன் வந்தபோது எம்ஜிஆரின் படத்திற்கு சிலர் விமர்சனம் எழுதியது போல் மொக்கையாக யோசித்து எழுதியது. மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை.

அனைவருக்கும் நன்றி...

நாளைப்போவான் on February 5, 2010 at 10:02 PM said...

:D:D:D:D


Mudiyala Sir!!!

Karthik on February 5, 2010 at 10:20 PM said...

உஸ்.. ஏன்?

:)))

Karthik on February 5, 2010 at 10:22 PM said...

Oora emathura intha profile pic ah eppo mathuveenga? ;)

Kiruthikan Kumarasamy on February 6, 2010 at 4:59 AM said...

இன்னும் வெளிவராத படத்துக்கு ஏன் சகா விமர்சனம்??? ஹி ஹி

Subha on February 6, 2010 at 11:12 AM said...

i have got one doubt to all the respected bloggers......when do you get the larger than life feeling? when people(not the fellow e bloggers) start reading your blogs? or here and there some magazine write few statements and fill their pages? I really appreciate and quite enjoy your writings...but one thing i could not digest is...how come you guys take people granted and write in a way that people are dumb?????

கார்க்கி on February 6, 2010 at 12:36 PM said...

@சுபா,

நாம் நகைச்சுவை, மொக்கை என்று நினைப்பது எல்லோருக்கும் அபப்டியே தோன்றாது. இதை நான் ஜாலியாகத்தான் போட்டேன். ஆயிரத்தில் ஒருவன் வந்த போது எம்.ஜி.ஆரின் படங்களுக்கு சிலர் விமர்சனம் எழுதியது போல். மற்ற்படி யாரையும் மிஸ்லீட் செய்ய அல்ல. சிலர் ரசித்திருக்கிறார்கள். உங்களைப் போல் சிலருக்கு பிடிக்கவில்லை. டென்ஷன் வேண்டாம்.

நேர்மையாக உங்கள் எண்ணத்தை சொன்னதுக்கு நன்றி என்றெல்லாம் சொல்ல தோன்றவில்லை. மற்றபடி நீங்கள் நினைப்பது போலெல்லாம் பெருசா நினைச்சுக்கிறது இல்ல.அட்லீஸ்ட் நான் நினைப்பது இல்லை. படிக்கிறவங்களுக்கு பிடிக்காம போக தொடங்கும் நாளில் நமக்கே தெரிந்துவிடும்.

ஃப்ரீயா விடுங்க பாஸ்>.. இது ஜாலியா போட்டதுதான்:))

பரிசல்காரன் on February 6, 2010 at 12:44 PM said...

4 லட்சத்துக்கு முதல் வாழ்த்துகள்!

சுசி on February 6, 2010 at 10:14 PM said...

4 லட்சத்து 410 க்கு முதல் வாழ்த்துக்கள் கார்க்கி :)))

சங்கர் on February 6, 2010 at 10:37 PM said...

நானும் நானும்,

4 லட்சத்தி 432 க்கு வாழ்த்துகள்

சிங்கக்குட்டி on February 7, 2010 at 11:28 AM said...

எழுத்து நடை அருமை.

என்னதான் சொல்லுங்க "தல போல வருமா!" :-)

ஜோசப் பால்ராஜ் on February 7, 2010 at 12:03 PM said...

கார்கி,
இந்தப் பதிவுக்கு இங்க நான் விமர்சனம் எழுதுறத விட தனிமடல் அனுப்புறேன் சகா.

Dinesh on February 7, 2010 at 4:14 PM said...

இப்போ தான் படம் பாத்துட்டு வந்தேன். படம் செம மொக்க. புதுசா எதுவும் இல்ல...

கார்க்கி on February 8, 2010 at 12:09 AM said...

வாழ்த்தியவர்களுக்கு நன்றி..

ஜோசப், :)))

தினேஷ், நான் சொன்னா ஒத்துப்பாங்களா? அதான் இப்படி ஒரு விமர்சனம்.. அதுவும் சிலருக்கு பிடிக்கவில்லை.

எல்லோருக்கும் பிடித்த பதிவு எழுதுவது முடியுமா?

suN of GuN on February 17, 2010 at 12:09 AM said...

ipa ena solla varinga? padam parkalama venama? onnum puriala....!eeeeeeee

jai sorav on July 21, 2011 at 4:23 PM said...

very very bore film

jai sorav on July 21, 2011 at 4:23 PM said...

very bore film

 

all rights reserved to www.karkibava.com