Feb 4, 2010

பங்கு போடப்பட்ட அந்தப்புரம்


 

  அன்று தர்பார் முழுவதும் மயான அமைதியில் இருந்தது. மயானத்தில் யாரும் இருப்பதில்லை என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா அல்லது எவ்வளவு ஆடினாலும்,மரணத்திற்குப் பின் மயானத்தில் அமைதியாய்த்தான் துயிலமுடியும் என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா என்ற சிந்தனைக்கெல்லாம் மொக்கை தர்பாரில் இடம் கிடையாது. அவ்வாறு சிந்திப்பவர்கள் தலைப்பாகையோடு மூளையையும் கழட்டி வைத்துவிட்டு உள்ளே வரவும். எனக்கு சிரமமில்லை. நான் தலைப்பாகையோடு வருகிறேன்.

  அந்த அமைதிக்கு காரணம் மாமன்னர் மொக்கைவர்ம பல்லவன்  இன்றுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் தேர்வு வைக்கப் போகிறார் என்பதே. துறைகளும், சம்பளமும் அந்தத் தேர்வின் அடிப்படையிலே அமையுமென்று மன்னரின் செய்தி குறிப்பில் சொல்லப் பட்டிருந்தது.

  அரசின் அமைச்சர்கள் யாருமே திறம்பட செயல்படவில்லை என்பது மன்னரின் குற்றச்சாட்டு. மேலும் எல்லா அமைச்சர்களுக்கும் கூடுதல் பொறுப்பாக வட மண்டல அந்தப்புரம், தென்மண்டல அந்தப்புரம்,வடமேற்கு தென்கிழக்கு அந்தப்புரம் என்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது மன்னருக்கு பிடிக்கவில்லை.அதன்படி அந்தப்புரத்தை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மண்டலமும் வெறும் 3 அடி மட்டுமே இருக்கும். அதனால் ராணிகள் ஹாயாக கை, கால்களை நீட்டி உறங்கக் கூட முடியாத நிலை. மற்ற பின் விளைவுகளை விலாவாரியாகவோ, சுருக்கமாகவோ சொன்னால் கூட காக்கா* பறந்து வந்து கொத்துமென்பதால் நாம் கேள்விக்குப் போவோம்.

(* இரட்டை அர்த்த வசனங்களோ, சொல்லக் கூடாத விஷயங்களோ சொன்னால் காக்கா பறந்து வந்து தலையில் கொத்தும் என்பது பல்லவ மரபு. ஆதாரம்: தமிழ்ப்படம் என்ற தமிழ்ப்படம்.)

முதல் கேள்வி விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிம்ப்பிக்கோ மொய்யோ தீனிடம் கேட்கப்பட்டது.

தானத்திலே பெரிய தானம் எது?

மன்னர் எப்படியும் நிதானம் என்று சொல்லி ராஜகுருவாக முயற்சி செய்வார் என்று எதிர்பார்த்த அமைச்சர் நிதானமே இல்லாமல் வேகமாக “நிதானம்” என்றார்.

வெற்றி சிரிப்பு சிரித்த மன்னனின் தலையசைப்பு இல்லை என்பதை சொல்வதாக அமைந்ததைக் கண்டு அமைச்சரின் தலை தொங்கியது.

ரத்த தானம், கண் தானம், விதானம், ஏன் சூதானமா என்று கூட சொல்லிப் பார்த்துவிட்டார் அமைச்சர். மன்னனின் தலை இடவலமாக அசைந்ததேயன்றி, மேலும் கீழுமாக அசையவே இல்லை. அவர் சொல்லாமல் விட்ட ஒரே தானம் சந்தானம் தான். ஆனால் அப்போதெல்லாம் லொள்ளு சபா கிடையாது என்பதால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை . தோல்வியை ஒப்புக் கொண்ட பின் மன்னரிடம் விடை கேட்டார் மந்திரி, மன்னிக்க, வெறும் ஒலிம்பிக்கோ.

நீரெல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறீர் என்று அதிர்ந்த மன்னன் அழுகுணியிடம் “அழுகுணி நாம் எங்கே விளையாடுவோம்?” என்றார்.

புதிதாக சமைந்த பெண்ணைப் போல வெட்கப்பட்ட அழுகுணி மன்னரை ஏறெடுத்தும் பார்க்காமல் வளைந்து, நெளிந்து, குழைந்து “அந்தப்புரத்தில் மன்னா” என்று சொல்லிவிட்டு தமிழ்ப்பட கதாநாயகனைப் போல் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அழுகுணி என்று மீண்டும் மன்னர் கொக்கரித்தார்

இன்னும் வெட்கம் போகாத அழுகுணி, ”இன்னும் ஏராளமான இடங்கள் மன்னா. இங்கே சொல்லலாமா?”

அழுகுணி.. நான் பந்து விளையாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஓ. அதுவா மன்னா(காக்கா பறக்கிறது) என்று இழுத்த அழுகுணியின் முகம் அநியாயத்திற்கு  வெட்கத்திலும், மன்னரின் முகம் கோவத்திலும் சிவந்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வீரன் ஒருவன் அழுகுணிக்கு சிக்னல் கொடுக்க, மன்னரை நிமிர்ந்து பார்த்த அழுகுணி செய்வதறியாது திகைத்தார். கையில் வாளுடன் மன்னர் “சொல். எது பெரிய தானம்” என்று அதட்ட, “சமாதானம் மன்னா சமாதானம்” என்றார். பால்யகால நண்பன் என்பதால் அவனை மன்னித்த மன்னர் விடையை சொல்லத் தயாரானார்.

தானத்தில் பெரிய தானம் “மைதானம்”. யாருக்கும் விடை தெரியாததால் நானே அந்தத் துறையை எடுத்துக் கொள்கிறேன்.

அந்தப்புரத்தில் வடமேற்கு தென்கிழக்கு மண்டலத்தை கைப்பற்றிய பூரிப்பு மன்னரின் முகத்தில் தெரிந்தது

(மொக்குவோம்)

23 கருத்துக்குத்து:

டம்பி மேவீ on February 4, 2010 at 7:54 AM said...

me the 1st

டம்பி மேவீ on February 4, 2010 at 8:03 AM said...

"தானத்தில் பெரிய தானம் “மைதானம்”. யாருக்கும் விடை தெரியாததால் நானே அந்தத் துறையை எடுத்துக் கொள்கிறேன். அந்தப்புரத்தில் வடமேற்கு தென்கிழக்கு மண்டலத்தை கைப்பற்றிய பூரிப்பு மன்னரின் முகத்தில் தெரிந்தது"


இது என்ன அரசியல் பதிவா ??????

இல்லாட்டி தமிழக அரசியல் மொக்கையா இருக்கு என்று சொல்லாமல் சொல்லும் பதிவா

டம்பி மேவீ on February 4, 2010 at 8:05 AM said...

காக்கா வந்து உங்க கம்ப்யூட்டர் மேல கக்கா போடமா பார்த்துகோங்க .....

மேலும் conpect ல மகாநடிகன் பட வாசனை அடிக்குதே ???

நாய்க்குட்டி மனசு on February 4, 2010 at 8:16 AM said...

இப்பல்லாம் மன்னர் கதை படிச்சாலே வடிவேலு தான் நினைவுக்கு வருகிறார். காக்கா கதை சொல்லி அவரவர் கற்பனையை வளர்க்கிறீங்க ம்ம்ம்ம்ம்ம்

காவேரி கணேஷ் on February 4, 2010 at 8:19 AM said...

நல்லா யோசிக்கிறப்பா.

காவேரி கணேஷ் on February 4, 2010 at 8:20 AM said...

மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம்-தொகுப்பு--புகைப்படங்கள்

www.kaveriganesh.blogspot.com

தராசு on February 4, 2010 at 9:26 AM said...

கலக்கல், ஆனா சட்டுனு முடிஞ்சாப்புல இருக்கே,

அவசர கதியில எழுதப்பட்டதா மன்னா???

பிரியமுடன்...வசந்த் on February 4, 2010 at 10:17 AM said...

ஒலிம்ப்பிக்கோ மொய்யோ தீனிடம் //

அடப்பாவி சகா பேர் கூட பின்நவீனமா இருக்கு...

இந்த தடவை நகைச்சுவை குறைச்சலா இருக்கே சகா...

vanila on February 4, 2010 at 10:24 AM said...

வழக்கம் போல.. keep Going.

taaru on February 4, 2010 at 10:59 AM said...

என்னாண்ணே இம்புட்டு கொஞ்சமா எழுதி இருக்கீரு?? பட் போன தடவைக்கு இந்த தபா சோக்கு செம சூப்பரு... செமையாய் மொக்குவோம் தல...
பின் குறிப்பு:இன்னும் என் இனிய பொன் நிலாவே கேட்கல; சீக்கிரம் கேட்டுட்டு அப்புறம் மெயில் அனுப்பப்படும்.

விக்னேஷ்வரி on February 4, 2010 at 11:05 AM said...

எனக்கு சிரமமில்லை. நான் தலைப்பாகையோடு வருகிறேன் //
அது தான் சரி. ஏன்னா, உங்க கிட்ட சிந்திக்க மூளை கிடையாது. ;)

என்ன, இன்னிக்கு ஓவர் மொக்கையா இருக்கு...

நல்லாருக்கு.

Dinesh on February 4, 2010 at 11:50 AM said...

நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்துலயும் மொக்க வெறி ஊறிப்போன ஒருத்தனால தான் இப்புடி மொக்க போட முடியும்.

உண்மயிலயே செம மொக்க. மேன்மேலும் மொக்க வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி on February 4, 2010 at 12:06 PM said...

:)))))))))))

கார்க்கி on February 4, 2010 at 12:26 PM said...

மேவி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பெயர் தெரியுமா?

@நாய்க்குட்டி,
நன்றி

@காவிரி கணேஷ்,
நன்றி

@தராசு,
போன பதிவுல ரொம்ப பெருசா இருக்குன்னு சொன்னாங்களே!!!

@வசந்த்,
ஆமா சகா. கவனத்துல வச்சிக்கிறேன்

@வானிலா,
நன்றிங்க

@டாரு,
உங்க உற்சாகத்திலே தெரியுது. இன்னும் வீடியோ பார்க்கலைன்னு :)

@விக்கி,
நானும் அதைத்தான் சொன்னேன். எப்பவும் மொக்கைதாங்க இருக்கும்

@தினேஷ்,
என்னங்க? என்னைப் போய் பாட்ஷா ரேஞ்சுக்கு. கண்ணுல தண்ணி வச்சுட்டன் :))

@ஸ்ரீமதி,
மறுபடியும் முதல்ல இருந்தா?????

குறும்ப‌ன் on February 4, 2010 at 1:19 PM said...

//அவர் சொல்லாமல் விட்ட ஒரே தானம் சந்தானம்//

ஹாஹ்ஹா, சூப்ப‌ர் கார்க்கி:)

சுசி on February 4, 2010 at 1:35 PM said...

//சிந்தனைக்கெல்லாம் மொக்கை தர்பாரில் இடம் கிடையாது. //
:)))) ஐ லைக் யுவர் நேர்மை கார்க்கி.

மைதானமாஆ??
// “சமாதானம்//
கார்க்கி
// சமாதானம்” //
//தோல்வியை ஒப்புக் கொண்ட பின் //
சொல்கிறேன்.. உங்க ரேஞ்சுக்கு நம்மளால மொக்கையா சிந்திக்க முடியாதுப்பா :))

நல்லா எழுதி இருக்கீங்க வ.போ.. :))

டம்பி மேவீ on February 4, 2010 at 1:51 PM said...

"கார்க்கி said...
மேவி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பெயர் தெரியுமா?"


சத்யமா ....தெரியாது ....ஆனால் அவர் விளையாட்டு துறையிலிருந்து தான் வந்து இருப்பாரா என்பது சந்தேகம் தான் ....

மற்றப்படி அவரும் விளையாடி இருப்பார் .....சிறுவயதில்

டம்பி மேவீ on February 4, 2010 at 1:52 PM said...

@ கார்க்கி : அவரை நான் கூப்பிட போவது இல்லை .....அதனால் நான் தெரிந்து கொள்ளவில்லை

அன்புடன் அருணா on February 4, 2010 at 4:50 PM said...

மொக்குங்க! மொக்குங்க!

Karthik on February 4, 2010 at 7:25 PM said...

ஸ்ரீமதிக்கு ஒரு ரிப்பீட்டேய்ய் போட்டுக்கரேன். :)))))))))))

வெற்றி on February 4, 2010 at 7:50 PM said...

சகா கொஞ்சம் கம்மியா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு :)

இந்த பதிவை படிக்கிறவங்களுக்கு விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் அப்படின்னு தெரியாதுன்னு நினைக்கிறேன்..அது தெரிஞ்சி படிச்சா இன்னும் சுவாரசியமா இருக்கும்..

கார்க்கி on February 5, 2010 at 9:56 AM said...

அனைவருக்கும் நன்றி..

வெற்றி, ரைட்டுப்பா.. யாருமே அண்டஹ் பேர் ஏன் அபப்டி இருக்குன்னு கூட கேட்கலையேன்னு கஷ்டத்தில் இருந்தேன் :))

ஆதிமூலகிருஷ்ணன் on February 5, 2010 at 5:02 PM said...

தராசுக்கு ரிப்பீட்டு..

 

all rights reserved to www.karkibava.com