Feb 28, 2010

வி.தா.வ – கெளதமின் ***தி

46 கருத்துக்குத்து

 

விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு உலகப் படம்..

தமிழ் சினிமாவின் மொக்கை மசாலாக்கள் மத்தியில் ஒரு குறிஞ்சிப்பூ..

இந்தப் படம் பிடிக்காதவர்கள் c,d,e,f….z  செண்டர்களில்  வாழ்பவர்கள்..

இந்தப் படம் ஓடாவிட்டால் இனி அசலும், வேட்டைக்காரனும் தான் தமிழகத்தின் தலைவிதியாகும். ஜாக்கிரதை.

கெளதம் ஒரு கிளாஸிக் ஃபில்ம் மேக்கர். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக எடுத்திருக்கிறார்.

ஸப்ப்பா.. இதுக்கே கண்ணை கட்டுதே…..

__________________________

பி.கு: இந்த நரகத்தை காண நாம் நிச்சயம் விண்ணைத் தாண்டி செல்லத்தான் வேண்டும். அதுதான் பெயர் காரணம். தலைப்பு வாந்தி, பூந்தி வரிசையில் ”கெளதமின் சதி”

Feb 26, 2010

லக்கி மன்னிப்பாராக

19 கருத்துக்குத்து

 

  தேன் கிண்ணம்

மின்காந்த அலையாக
வரவேற்பறைக்கு வந்தவள்
விழிகாந்த அலையால்
மனவறைக்குள் நுழைந்தாள்
அடுக்கி வைத்த
அடுக்குமாடி குடியிருப்புகள்
எதிர்பார்த்தவளுக்கு
புறநகரில்
பரந்து விரிந்துகிடக்கும்
காலி மனைகளாக இருந்த
இதயம் பிடித்துவிட்டது.
”அய்யோ நம்பவே முடியல”
“ஒரு ஹாய் சொல்லுங்க”
“எங்க அண்ணன் உங்க ஃபேன்”
டெம்ப்ளேட் பேச்சுகளின்றி
"பிடிச்சிருக்கு" என்றதை ரசித்தாள்.
பதிலாய் பாடினாள்.
பழக்க தோஷம்.
“அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி..”

Feb 25, 2010

கிங் மேக்கர்

38 கருத்துக்குத்து

 

    உலகெங்கும் இருந்து ஃபோனும், மெயில்களும் வந்த வண்ணம் இருந்தன. அது என்ன வண்ணம்? பச்சை பச்சையா திட்டினாங்களா?சிவப்பு கலர்ல ரத்தம் வர அடிச்சாங்களா? மெயிலிலே உனக்கு கருப்பு கொடி காட்டினாங்களா என்றெல்லாம் மொக்கை போடாம சொல்றத கேளுங்க. நேத்து நான் கிரிக்கெட் பற்றி எழுதிய ராசிதான் சச்சின் 200 அடிச்சாராம். ரெண்டு பேரும் வேற தனுசு ராசியாம். இல்ல இல்ல, ஒரே தனுசு ராசிதான்.  இந்த வேற… வேற.

   என்னன்னு பதில் அனுப்பறது சொல்லுங்க? இட்ஸ் ஓக்கேன்னு அனுப்பினாலும் தப்பு. பதில் அனுப்பாவிட்டாலும் தப்பு. என்னடா செய்யலாம்னு யோசிச்சப்ப ஒரு ஐடியா பல்பு சூர்யா பல்பு மாதிரி பளீருன்னு எரிஞ்சுது. என்னது?எந்த பல்பா?  எரிஞ்சது ஐடியா பல்புதாங்க. ஆனா சூர்யா பப்லு..ச்சே உங்களால குழம்பிட்டேன். சூர்யா பல்பு மாதிரி பிரகாசமா எரிஞ்சுதுன்னு சொல்ல வறேன். எங்க வறேன்னா? அடிங்.. அந்த பல்பு என்னன்னா, ராசி மேல இவ்ளோ நம்பிக்கையா இருக்கிறவங்களுக்கு ஜோஸ்யத்தை வச்சே பதில் சொல்லனும்ன்னுறதுதான். நாமளாம் லீவுல போனா வெகேஷன் ரெஸ்பான்ஸ் வைப்போம் இல்ல.. அந்த மாதிரி ஒரு டிராஃப்ட் ரெடி பண்ணேன்.

“அன்புடையீர்,

நிகழும் விரோதி ஆண்டு பங்குனி மாசம்.. ச்சே அண்ணனுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சதில் இருந்து இது ஒட்டிக்கிச்சு. அன்புடையீர்ன்னு தொடங்கி 10 சேம்பிள் காட்டியாச்சு அம்மாவுக்கு. ஆனா எதுவும் செட் ஆகல. ஆவ்வ்..ரூட் மாறுது. வாங்க

அன்புடையீர்,

தங்கள் மடலுக்கு நன்றி. நடைபெறும் சனி திசையில், தனுசு ராசிக்காரரான எனக்கு ஜிமெயிலில் கண்டம் இருப்பதாக என் ஆஸ்தான ஜோதிடர் குன்சாபுரம் கூதலப்பர் சொல்லியிருப்பதால் இன்னும் மூன்று மண்டலங்களுக்கு இந்த மெயிலை செக் செய்ய மாட்டேன். அதன் பின் பதில் அனுப்புகிறேன். நன்றி

இபப்டி ஒரு மெயிலை அனுப்பிய அனைவருக்கும் அனுப்பிட்டேங்க. எந்த வேலையும் செய்யாம எனக்கு கிங் மேக்கர்ன்னு பட்டம் வேற கொடுத்திருந்தாங்க ஒரு நல்லவங்க. இந்த குறையை எப்படிடா போக்கலாம்னு யோசிச்சப்ப.. இருங்க பல்பு எல்லாம் எரியல. இப்படி ஓடறீங்க. இந்த முறை நிலா. அதுவும் வெள்ளி நிலா.

ஆமாங்க. நம்ம வெள்ளி நிலா ஷர்ஃபுதின் கூப்ட்டாரு. ஒரு சூப்பர் மேட்டர் பேசினோம். வலையுலகில் யூத் அணி இருக்கு. அட விடுங்க. சொன்னா கேளுங்க. சரி அதுக்கு நான் தான் கேப்டன்.(பய புள்ளைக்கு சந்தோஷத்த பாரு)  கவிதை அணிக்கு அனுஜன்யா. சினிமா அணிக்கு கேபிள். இப்படி பல அணிகளாக வித்தியாசப்பட்டு இருந்தாலும் எல்லோருக்குமே பொதுவான விஷயம் என்னன்னு சொல்லுங்க.? ம்ஹும் அது இல்லை. இந்த சப்பை மேட்டர் கூட தெரியல உங்களுக்கு. அது தொப்பை. விளையாட்டு அணி என்று ஒன்று இல்லாததே அதுக்கு காரணம். நாம் ஏன் ஒரு வலையுலக கிரிக்கெட் அணி ஆரம்பிக்கக் கூடாதுன்னு நாங்க யோசிக்க காரணமா இருந்தது அந்த தொப்பைதான்.

நர்சிம், எறும்பு,பலாபட்டறை ஷங்கர், புலிகேசி, ரோமியோன்னு பல பேரு ஆர்வமா இருக்காங்களாம். அதான் இங்க இருந்து ஒரு சச்சின உருவாக்கி அப்புறமா அந்த கிங் மேக்கர் பட்டத்த ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆகவே இவ்ளோ நீள மொக்கைக்கு அப்புறம் சொல்ல வர்ற மேட்டர் என்னன்னா… யார் யாருக்கெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆர்வம் இருக்கோ… அதுல யார் யாரெல்லாம் சென்னைல இருக்கிங்களோ.. அதுல யார் யாரெல்லாம் சனி, ஞாயிறு ஃப்ரீயா இருப்பிங்களோ…அவங்க மட்டும் தயவு செய்து சின்ன பசங்க மாதிரி கைய தூக்காம பேர பின்னுட்டத்தில் சொல்லுங்க. எந்த பால், எந்த கிரவுண்ட், எந்த தேதி, இதெல்லாம் பேசி தீர்த்துப்போம். நான் பேட்டிங் சைடு. என்னது? நீங்க செண்ட்டர்லதான் பேட் பண்னுவீங்களா? நான் அதை சொல்லல. உஙக்ளையெல்லாம் எப்படி ட்ரெயின் பண்ணி சச்சின் ஆக்கப் போறேனோ? ட்ரெயின் பண்ன முடியாவிட்டாலும், ஒரு பஸ், கார் ஷேர் ஆட்டோவாச்சும் பண்ணல.. என் பேரு கிங்மேக்கர் கார்க்கி கிடையாது. ரெடி ஸ்டார்ட். பேர கொடுங்க.

afp20100224210701778

அதுக்கு முன்னாடி நம்ம மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு வாழ்த்துகள் சொல்லிடுவோம். 36 வயசுல ஆதி 90க்கே முழி பிதுங்குறப்ப, 37 வயசுல 200 அடிச்சிட்டு ஸ்டெடியா நின்னாரே.. அங்க நிக்குறாரு.. ஓ ஆல்ரெடி நின்னாரேன்னு சொல்லிட்டேனா? அதாங்க சச்சின்.

Feb 24, 2010

க்ரிக்கெட் தொடர்(புடைய)பதிவு

41 கருத்துக்குத்து

 

  தொடர்பதிவு என்றாலே எனக்கு அலர்ஜி. தொடர்பதிவினால் வரும் தொல்லைகளை எல்லாம் ஒரு பதிவாக எழுதி அதை நர்சிம்மையும், ஆதியயையும் தொடர சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முள்ளை முள்ளால தானே எடுக்கனும்? பின் ஏனோ அதை பதிவேற்றவில்லை. ஆனால் இந்த கிரிக்கெட் தொடர்பதிவை பார்த்ததும் கடவுளைக்(அவர சொல்லலப்பா) கண்ட பக்தனாக பரவசமடைந்தேன். ஒவ்வொருவர் பதிவாக போய் பார்த்தால் நம்மை வசதியாக மறந்திருந்தனர். இதென்னடா வம்பா போச்சுன்னு வாலன்ட்டியரா போய் கமெண்ட் போட்டு முகிலனிடம் சான்ஸ் கேட்டு வாங்கினேன். போதும் வாங்க நிகழ்ச்சிக்கு போவோம்.ச்சே பதிவுக்கு போவோம்.

________________________________________________________

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். (ச்சே. இதை பார்க்காம அவசரப்பட்டுட்டேனே)

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை (அப்போ ஃபுட்பால் ப்ளேயர பத்தி சொல்லலாமா)

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும். (இப்பவே சொல்லிடறேன். ஒசாமா, ஒபாமா)

*******

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) :

கார்க்கி (ஜெயிக்கும்போது)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? :

கார்க்கி (தோற்கும் போது)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் :

கார்க்கி ( 60 கி.மீ போனாலே ஓவர் ஸ்பிடாமே)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் :

கார்க்கி (ஸ்டாப் லைனை தாண்டி போகும்போது அல்லது போடும்போது)

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :

கார்க்கி (கல்லில் பட்டு டர்ன் ஆகும்படி போடும்போது)

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் :

கார்க்கி (கல்லில் படாமல் பந்து போடும்போது)

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் :

கார்க்கி (வலது கையில் ஆடி சிக்சர் அடிக்கும் போது)

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் :

கார்க்கி (வலது கையில் ஆடி அவுட்டாகும் போது)

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் :

கார்க்கி (சின்ன பசங்களிடம் லெஃப்ட்டுல ஆடுவதாக கூறி காஜு ஆடும் போது)

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் :

கார்க்கி (சின்ன பசங்க பந்துல க்ளீன் போல்ட் ஆகும்போது)

11. பிடித்த களத்தடுப்பாளர் :

கார்க்கி (பந்தைப் பிடிக்கும் போது)

12. பிடிக்காத களத்தடுப்பாளர் :

கார்க்கி (பந்தை விட்டு களத்தில் தடுக்கி விழும்போது)

13. பிடித்த ஆல்ரவுண்டர் :

கார்க்கி ( ஆள் ரவுண்டாக இருப்பதால். ஹிஹிஹி)

14. பிடித்த நடுவர் :

கார்க்கி (ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்)

15. பிடிக்காத நடுவர் :

கார்க்கி (நானே நான் அவுட்டில்லை என்று முடிவு செய்து சண்டையிட்டதால்)

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் :

கார்க்கி (க்ரிக்கெட்டை பற்றின்னு சொல்லலையே. நான் நல்லா வர்ணிப்பேன்)

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் :

கார்க்கி (எல்லா பெண்களையும் கண்ண முடிக்கிட்டு அழகா இருக்காங்கன்னு வர்ணிப்பதால்)

18. பிடித்த அணி :

அறிவான கார்க்கி (ஹிஹிஹி.வஞ்ச புகழ்ச்சி அணி)

19. பிடிக்காத அணி :

அழகான கார்க்கி (இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி-

ஆடித்தான் பழக்கம். வேடிக்க பார்த்து அல்ல (பன்ச் டயலாக்)

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி-

20க்கான பதிலு ரிப்பீட்டேய்

22. பிடித்த அணி தலைவர் :

கார்க்கி (அணியில் அவர் மட்டுமே இருந்தாலும்)

23. பிடிக்காத அணித்தலைவர் :

கார்க்கி (அவரே அவருக்கு தலைமை ஏற்றதால்)

24. பிடித்த போட்டி வகை :

கார்க்கிக்கு மட்டன் போட்டிதான் புடிக்கும்.

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி :

கார்க்கியும், அவர் கூட ஆடுபவரும்.(கார்க்கி ஆடுவதால் புடிக்கும்)

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி :

கார்க்கியும், அவர் கூட ஆடுபவரும்.(கார்க்கி கூட ஆடுபவர் மட்டுமே ரன் அடிப்பதால் )

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் :

கார்க்கி. (அவர் வீரரா என்று இன்னமும் டெஸ்ட் செய்வதால்)

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் :

எனக்கும் தலை கனம் கிடையாது. அதனால் நீங்களே கார்க்கின்னு படிச்சிடுங்க.ப்ளீஸ்.

Feb 23, 2010

தோழி அப்டேட்ஸ்

36 கருத்துக்குத்து

 

  ட்விட்டும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஒரு செட்டா போய் ஒரே நேரத்தில் கும்ம ஆரம்பித்த்தால் சொகமா போது நேரம்.சென்ற வாரம் ஃபேவரிட் டயலாக் என்று பரிசல் எடுத்துவிட 10 பேருக்கு மேல் ஆர்வத்துடன் 300க்கும் அதிகமான வசனம் பேசி அசத்தினார்கள். சரி. நம்ம மேட்டருக்கு வருவோம். தோழி அப்டேட்ஸ் என்று ட்விட்டரில் அவ்வபோது சொல்லி வருகிறேன். 140 எழுத்துகளில் சொல்வதில் பல சமயம் சிக்கல் வருவதால் பதிவிலும் போடலாமே என்று ஞானம் வந்தது. இதோ ஆரம்பித்தாகிவிட்டது..

  கேக் சாப்பிடும் தோழி, உனக்கு வேண்டுமா என்கிறாள். பின் அவளே உனக்கு ஸ்வீட் பிடிக்காது இல்ல என்கிறாள். அவளை பிடிக்காமல் எப்படி பேசுவேன் என்று கூட யோசிக்காமல் இருக்கும் அவளை என்ன செய்வது? # டவுட்டு

ட்விட்டரில் இதைப் பார்த்துவிட்டு, இதையெல்லாமா ட்விட்டரில் போடுவேன்னு கேட்கிறாள் தோழி. உடனழைத்து கொடுத்த தொலைபேசி முத்தத்தை சொன்னாளா, அல்லது எதை சொன்னாள் என தெரியவில்லை # அகைன் டவுட்டு

  வீக் எண்ட் பிளான் பற்றி கேட்ட நண்பனிடம் ஈ.சி.ஆர் என்றேன். நாலு வாரம் போயும் போரடிக்கலையா என்று கேட்கிறான். ஒரே கதையென்றாலும் எம்.ஜி.ஆருக்கு பதில் ரஜினி நடித்தால் சுவாரஸ்யமாகத்தானே இருக்குமென்றேன். புரியவில்லை என்கிறான். # வாயால் வடை சுடுவது

பைக் வேணாம். உன் ஸ்கூட்டில போலாம். நீயே ஓட்டு என்றேன். நீ வேஸ்ட்டுடா என்ற தோழி, என் சில்மிஷங்களை மிஸ் பண்ண போற என்றாள். நான் தல ரசிகன் இல்லை. இருந்தாலும் எனக்கு தன்னம்பிக்கை அதிகம் என்றேன். ஸ்கூட்டி கிளம்பியது #வா.வ.சு

தூக்கம் வருது. ஒரு நல்ல பாட்டு சொல்லேன் என்றேன். தூங்காத விழிகள் இரண்டு என்று பாடினாள் தோழி. # கொடுமை

ட்விட்டும் இன்னொரு தோழி பார்த்துவிட்டு, டேய் நான் வேற பாட்டில்ல பாடினேன் என்கிறாள்  # அடுத்த கொடுமை.

Sing a song என்றாள் தோழி.  இந்த மான் உந்தன் சொந்த மான் என்ற பாடலை டைப்பினேன். என்ன மேன் உளர்ற என்கிறாள் பீட்டர் தோழி # இதுவும் வா.வ.சு

என் வானிலே.. ஒரே கார்க்கிதான் என்றார்  தோழி. என் வானமே நீதான் என்றேன். அதன் பின் பதிலில்லை. என்ன ஆயிருக்கும் அவருக்கு? #அவசரம்108

Feb 22, 2010

பிரார்த்தனையும், வாழ்த்துகளும்

40 கருத்துக்குத்து

 

PA070020[2]

பதிவர் பரிசலுக்கு சனிக்கிழமை சிறு விபத்து நேர்ந்துவிட்டது. காரில் சென்றுக் கொண்டிருந்தபோது முன்னே சென்றவன் சட்டென்று நிறுத்த, இவரும் சடென் பிரேக் அடிக்க, பின்னால் வந்த அசுமந்தம்,  பரிசல் காரின் பின்னாடி(பரிசல்காரரின் பின்னாடி அல்ல)  மோதியிருக்கிறான். இவர் காரின் முன்கண்ணாடியில் போய் மோதி, தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்த்தவுடன் என்ன பண்ணிங்க என்றிருக்கிறார் டாக்டர்.

“பார்க்கிறவங்க எல்லாம் குழந்தை முகம்னே சொல்றாங்க டாக்டர். அதான் ரவுடி ஆகலாம்னு ஒரு வெட்டு போட்டுக்கிட்டேன் என்றாராம். நொந்துப் போன டாக்டர், ஒரு ஸ்கேன் செஞ்சி  உள்ள எதுவும் ஆகலையான்னு பார்த்திடலாம் என்றாராம். அதற்கும் “வேணாம். டாக்டர். உள்ள எதுவும் இல்லைன்றதும் தெரிஞ்சுடுமே” என்றாராம்.

பேசாமலே சிகிச்சை பார்த்தாராம் மருத்துவர். தொடர்ந்த நண்பர் அழைப்புகளால் பிசி ஆகிவிட்டார் பரிசல். ஒரு பாசக்கார நண்பர் “கண்ணு பட்டுடுச்சு பரிசல்” என்றிருக்கிறார். நம்ம எழுத்தாளர் பதில் சொன்னாராம் “இல்ல பாஸ். கண்னாடிதான் பட்டிடுச்சு”

விஷயம் அவ்வளவு சீரியஸில்லை. பரிசல் ஜாலியாகத்தான் இருக்கிறார் என்ற விஷயம் நண்பர்களிடத்தில் பரவியவுடன் சற்று நிம்மதி அடைந்தனர். பரிசலை கலாய்க்க ஃபோன் செய்த அந்த கிரிமினல் பதிவர், “என்ன சகா? காருக்கு கூட ஹெல்மேல் போடனும் போல இருக்கே” என்றாராம். எழுத்தாளர்ன்னா சும்மாவா? “காருக்கு எதுக்குங்க? நமக்குதான் ஹெல்மேட் போடனும்”. டொக்.

தலைக்கு நேரம் சரியில்லை. அடி விழுந்திட்டே இருக்கு என்றார் சிலேடையுடன்.

என்னடா இவன்.. இவ்ளோ சீரியஸ் மேட்டரிலும் இப்படி விளையாடறேன்னு நினைக்காதிங்க. 10 தையல்னாலும் பயப்பட ஒன்னுமில்லை என்பதை சொல்லவே இந்தப் பதிவு. சீக்கிரம் அவர் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திப்போம்.

___________________________________________________________________________________

இன்று **வது பிறந்த நாள் காணும் பதிவர் புன்னகையை வாழ்த்தலாம் வாங்க. அவர் இன்று போல என்றும் பிறந்த நாளைக் கொண்டாடமல், அடுத்த வருடம் திருமதி. புன்னகையாக கொண்டாட வாழ்த்துகிறேன்.

மனதில் உண்மை மட்டும் இருக்கும் இடத்தில் புன்னகை எப்போதும் இருக்கும் என்பார் இவர்.

IMG_0659

பிறந்த நாள் வாழ்த்துகள்

மேலே உள்ள படத்தின் வயதறிய தொலபொருள் ஆராய்ச்சியாளரின் உதவியை நாடவிருக்கிறேன். உங்களுக்கு யாரையாவது தெரியுமா என்றேன் நண்பர் ஒருவரிடம். அவர் “கேமரா கண்டுபிடிச்சே சில நூற்றாண்டுகள்தான் சகா ஆகுது” என்றார் சிரிப்புடன். ஆயிரத்தில் ஒருவன் படமென்றால் லாஜிக் வேண்டாமென்ற அவர், ஆயிரத்தில் ஒருத்தியின் படத்திற்கு மட்டும் தலைகீழாய் நின்று லாஜிக் தேடுவது ஏனோ?

என்னம்மோ போங்கப்பா..

Feb 18, 2010

ஒரு சூறாவளி கிளம்பியதே

57 கருத்துக்குத்து

 

  அதிவேகத்தில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். 9.30க்கு எல்லாம் எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டுமென்பதில் குறியாய் இருப்பேன் நான். அன்று பப்லுவிற்கு விடுமுறை. சேவாக்கின் அட்டகாச பவுண்டரியை பார்க்கவிடாமல் சாராவையோ டோராவையோ வைத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தான். மணி 9.10. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் 9.30க்கு செல்ல முடியாது. இருந்தாலும் சேவாக்கை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனிடம் சண்டை போட்டு இரண்டு பவுண்டரிகள் பார்த்தேன். லேட்டா ஆயிடுச்சா என்று பரிகசித்தான் பப்லு. 9.30க்கு ஆஃபீஸ் போயிட்டு ஃபோன்(லேண்ட்லைனில் இருந்து)  பண்றேன் பாருடா என்று கிளம்பினேன். என்ன லேட்டானாலும் காதில் இயர்பிளகை மாட்டாமல் கிளம்பமாட்டேன். ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து அவனுக்கு பை சொல்லிவிட்டு ஐபோடை ஆன் செய்து ரிப்பீட் பட்டனைத் தட்டினேன்.

ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

ரட்சகன் படத்தில் நாகர்ஜுனனுக்கு ஆனது போல் நரம்புகள் புடைக்கிறதா என்று பார்த்தேன். ம்ஹூம். ஆக்ஸீலேட்டரை திருகி கிளட்ச்சை விட்ட போது முன்சக்கரம் குதிரை போல கனைத்துக் கொண்டே மேலேழுந்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்

பப்லு. மனதுக்குள் கத்திக் கொண்டே விர்ர்ர்ர்ர்ர்ரென கிளம்பினேன். பிக்கப் மட்டுமே பஜாஜ் வண்டியில் எதிர்பார்க்கலாம். வ்ரூஊஊஊஊஉமென்று மெதுவாக பறக்கத் தொடங்கினேன்

கோடீஸ்வரா அனுபவிப்பாய்
கோடீஸ்வரா நீ அனுபவிப்பாய்

பப்லுவை பார்த்து பாடினால், கேடீஸ்வரா என்றுதானே வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பந்தயம் என்னவென்று மீண்டும் யோசித்தேன். ஒரு வாரம் என்னை வாடா போடா சொல்ல மாட்டான். நினைத்துப் பார்க்கவே எவ்ளோ நல்லா இருக்கு? பஜாஜ் XCDல் நான்கு கியர் மட்டும்தான் போலும். அதற்கு மேல் அழுத்தினாலும் விழவில்லை.

ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

குறுக்கு சந்துகளை கடந்து மெயின்ரோட்டை அடைந்த போது கிறுக்கு பசங்க வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சந்துக்குள் பைக்கை செலுத்தினேன்.

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்

எதிர்பாராமல் அங்கே ஒரு கட்டை கட்டியிருந்தது. காலால் தட்டியவுடன் பிரச்சினையில்லாமல் கிழே விழுந்து வழிவிட்டது. கட்டையை சட்டை செய்யாமல் முன்னேறி சென்றேன். கை வந்த கலைதானே? ஏன் காலால் தட்டினோம் என்று யோசிப்பதற்குள் அடுத்த வரியை பாடிவிட்டார் ஷங்கர் மகாதேவன்.

பணத் திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தவன் யாரு இவன்தான்

மீண்டும் மெயின் ரோட்டில் ஏறியபோது டிராஃபிக் மாமா, ச்சே போலிஸ் வழி மறித்தார். ஒன்வே என்றார். நான் என் வே சார் என்றேன். காலையிலே கரன்சியை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்ததும், ஃபைன் போடுங்க சார்.கட்டிட்டு போறேன் என்று வண்டியை குறுக்கே நிறுத்தேனேன். என்ன நினைத்தாரோ போங்க சார். இனிமேல் வராதிங்க என்றார்.

இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி

எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில் தூங்காது விழி.

3 நிமிடங்கள் வீணாகிவிட்ட துயரத்தில் இன்னும் முறுக்கினேன். வண்டியின் அலறல் சத்தத்தில் தானாக விலகி வழிவிட்டனர் சென்னை வாசிகள். அது ஜெயிக்க வேண்டுமென்று என் ரத்த செல்கள் போட்ட சத்தம் என்பது பிற்பாடுதான் எனக்கே தெரிந்தது

தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது

கடைசி சிக்னல். இதைத் கடந்துவிட்டால் இலக்கை அடைந்துவிடலாம். ஷார்ப்பாக ”ரெட்” சிக்னல் விழுந்தது. சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். ஸ்பைக் தலையுடன் அதே பில்லா கண்ணாடியுடன்  “அசல்” போஸ்டரில்  அட்டகாசமாக நடந்துக் கொண்டிருந்தார் அஜித். நேற்று அந்த போஸ்டர்  பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான்  நடக்கிறார் தல. அதுக்கெல்லாம் நேரமில்லை. புதிய வரலாறு படைக்கப் போகும் நேரமது. தல போஸ்டர் ஒட்டியிருந்த சுவரோரமாக லாவகமாக நுழைந்து சிக்னலை கடந்தேன். நேரம் 9.28.

இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது

மூச்சிறைக்க ஓடி வந்து அலுவலக விளக்குகளை எரியவிட்டேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என தமிழனைப் போல எல்லா நிறங்களிலும் விளக்குகள் எரிந்தன. லேண்ட்லைனில் இருந்து வீட்டிற்கு அழைத்தேன். லேண்ட்லைனில் சிகப்பு நிறம்.

சிவா சிவா சிவா சிவா
சிவா சிவா சிவா சிவா

அம்மாதான் எடுத்தார்கள். ஏம்மா எனக்கு சிவான்னு பேர் வைக்கல என்றேன்.

அதெல்லாம் வீட்டுக்கு வா சொல்றேன் என்றார்கள்.

இன்னைக்கு நான் வர லேட்டாகும்ன்னு சொன்னேனே.

டேய்.லேப்டாப்ப விட்டுட்டு போயிட்ட. வந்து எடுத்துட்டு போ.

ஷிட். அப்பவே ஃபோன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே?

ஃபோனும் இங்கதான் இருக்கு.

டொக்.

பொறுமையாக இறங்கி வந்து மெதுவாக ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து ஐபோடை ஆன் செய்தேன்.

ஓ மகசீயா ஓ மகசீயா.. நாக்க முக்க நாக்க.. ஓ ஷக்கலக்கா..ஓ ரண்டக்கா

பின்னால் இருந்து ஹார்ன் அடித்துக் கொண்டே வந்திருக்கிறார் ஒருவர். என்னை ஒவர்டேக் செய்த போது ஏதோ சொல்லிக் கொண்டே சென்றார். சத்தத்தை குறைத்து என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.

கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.

Feb 17, 2010

கார்க்கியை சந்தித்த கார்க்கி

63 கருத்துக்குத்து

 

சிறு வயதில் என் அப்பாவிடம் நான் அதிகம் கேட்ட கேள்வி “ஏம்ப்பா இந்த பேரு வச்சீங்க?”. கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள். மேக்ஸிம் கார்க்கி(Maxim Gorky) என்ற அந்த ரஷ்ய எழுத்தாளர் தனது வாழ்க்கை முழுவதும் துயரத்தை மட்டுமே சந்தித்தவர். இதையெல்லாம் அவர் என்னிடம் சொல்ல முடியுமா? எனக்கு பிடிக்கிற மாதிரி பதில் சொல்லுவார், வைரமுத்துவின் மகன் பெயரும் கார்க்கிதான்.மதன் கார்க்கி. அந்த பதில் எந்த விதத்தில் என்னை திருப்திபடுத்தியது என்று தெரியவில்லை. அதன் பின் என் பெயர் குறித்து கேட்பவரிடத்தில் எல்லாம் நான் தவறாமல் சொல்லும் விஷயம் “வைரமுத்து அவர்களின் மகன் பெயரும் மதன் கார்க்கிதான்.”

   இப்படியாக முகமே பார்க்காமல் மதன் கார்க்கி என்ற கதாபாத்திரத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரைப் பற்றிய செய்திகளை தவறாமல் படிக்கத் தொடங்கினேன்.  வாசிக்க தொடங்கிய காலத்தில் முதலில் என் கைகளில் கிடைத்த “சிற்பியே உன்னை செதுக்குகிறேன்” கவிப்பேரரசு மீது பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. நம்ம கார்க்கியோட அப்பாவாச்சே என்பதும் காரணம் என்று  சொன்னால் நம்புவீர்களோ மாட்டீர்களோ என்பதால் சொல்லாமல் விடுகிறேன். என்னுடைய பல கதைகளில் நாயகனின் பெயர் மதனாகத்தான் இருக்கும். மதன். எனக்கு நானே சூட்டிக் கொண்ட இன்னொரு பெயர். அதற்கு காரணமும் மதன் கார்க்கிதான்.

mad 8

   எனக்கும் அவருக்குமிடையேயான ஸ்நானபிராப்தி அவ்வளவுதான். ஒரு பொன்மாலைப் பொழுதில் அவரைப் பற்றி நான் எழுதி இருந்த பதிவில் கமெண்ட்டியிருந்தார். சந்தோஷத்துடன் போனது அந்நன்னாள். பின் ட்விட்டரில் உரையாடிக் கொண்டோம். காதலர் தினத்தை முன்னிட்டு காதல் கவிதைகள் விளையாட்டை நான், பரிசல், இளா , குசும்பன் விளையாடிக் கொண்டதை பார்த்து பதிலிட்டார். முதலில் பொன்மாலைப் பொழுதென்று சொன்னோமல்லவா? இப்போது இளைய நிலா பொழியும் வேளையென்று போட்டுக்கோங்க.. ட்விட்டரில் ஒரு டைரக்ட் மெசெஜ் வந்திருந்தது. அனுப்பியவர் மதன் கார்க்கி.

madhankarky: கார்க்கி, வரும் செவ்வாய் மதியம் ஒரு மணிக்கு தமிழ் பட்டிமன்றம் நடக்குது. நடுவரா வருவதற்கு உங்களுக்கு நேரம் இருக்குமா? டெக்கோஃபெஸ் சார்புல.”

விளையாடாதிங்க பாஸ் என்றால் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கான பட்டிமன்ற போட்டியது. நிஜமாகவே ஒரு யூத் வந்தால் நன்றாக இருக்குமென நினைப்பதாக சொன்னார். வலையுலக நிகழ்ச்சிகளில் கூட சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்வதிலோ, மற்ற சம்பிராதயங்களுக்கோ என்னை அழைக்க மாட்டார்கள். அவன் சின்னப்பையன் என்று சொல்வதே வழக்கம். அதனால் இந்த அழைப்பு எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. சரி. போய்தான் பார்ப்போமே என்று பதில் அனுப்பினேன். செவ்வாய் மதியம் நிகழ்ச்சி. அதன் பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை சொன்னார்.

செவ்வாய் மதியம் கார்க்கியிடமிருந்து அழைப்பு. நிகழ்ச்சிக்கு முன் மதிய உணவு அவருடன் என்று முடிவானது. என் அலுவலகத்தின் அருகே வந்து அலைபேசியில் அழைத்தார். இறங்கி சென்ற போது எனக்காக காத்துக் கொண்டிருந்தார். இருவரும் அஞ்சப்பர் சென்றோம். சிக்கனமாக பேசினோம். கூடவே சிலவகை சிக்கன்களையும் உண்டோம். பரஸ்பர அறிமுகத்துக்குப் பின் பேச்சு சினிமாவை நோக்கி திரும்பியது. கண்டேன் காதலில் ஓடோ ஓடோ ஓடோடி போறேன் என்ற பாடலைத் தொடர்ந்து எந்திரனில் ஒரு பாடல் எழுதியுள்ளாராம். அதுதான் அவரது முதல் பாடல் கூட. மட்டுமின்றி, எந்திரனில் டெக்னிக்கல் கோ ஆர்டினேட்டர் என்ற பொறுப்பும் உண்டு. கிட்டத்தட்ட இவரின் பங்கு மேக்கிங்கை பொறுத்தவரை எல்லாவற்றிலுமே இருக்கிறது. இயக்கம் மீதும் ஆர்வம் உள்ள இவர் விரைவில் ஒரு நல்ல படம் இயக்க வாழ்த்துவோம்.

இதையெல்லாம் விட அவரின் மற்ற புராஜெக்டுகள்தான் என்னை வியப்பில் ஆழ்த்தின. தமிழை தொழில்நுட்பத்தோடு இணைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் ஆச்சரியமானவை. அசாத்தியமானவை. கிட்டத்தட்ட இவரின் எல்லா முயற்சிகளுமே தமிழை கணிணி உலகில் பீடு நடை போட வைப்பதாகவே இருக்கிறது. அவரின் தனி அறையில் அவர் செய்து கொண்டிருக்கும் புராஜக்டுகளை எனக்கு விளக்கிய போது ஒரு விதமான பரவச நிலையிலே இருந்தேன். ஆஸ்திரேலியாவில் டாக்டரேட் முடித்தவர், தமிழகத்தில் ஒரு கல்லூரி பேராசிரியராக தமிழுக்காக உழைக்கிறார். அறைக்கதவில் “முனைவர். மதன் கார்க்கி” என்ற பெயர்ப்பலைகையே நம்மை வரவேற்கிறது.அவர் தந்தை தமிழுக்கு செய்த தொண்டை விட இவரின் பங்கு அதிகமானது என்பேன் நான்.

_____________________________________________________________

உலகமயமாக்கலால் இந்தியா வளர்ந்திருக்கிறதா வளைந்திருக்கிறதா?

இணையம்.. மாணவர்களை சீராக்குகிறதா? சீரழிக்கிறதா?

மாணவர்கள் தமிழை விட ஆங்கில புத்தகங்களையே அதிகம் வாசிக்க காரணம், அவர்களை கவரும்படி எழுதாத தமிழ் எழுத்தாளர்களின் தவறா அல்லது ஆங்கில மோகமா?

இந்த தலைப்புகள்தான் நான் சொல்லியிருந்தேன். அது குறித்தும், மாணவர்களின் பேச்சு குறித்தும் அடுத்த பதிவில்..

Feb 14, 2010

காதல் மொழி.

38 கருத்துக்குத்து

 

பயம் வேண்டாம். நேற்றோடு காதல் ஸ்பெஷல் முடிந்துவிட்டது. நேற்று இரவு ஹலோ எஃப்,எம்மில் ”காதல் மொழி” என்ற தலைப்பில் ஒலிபரப்பப் பட்டதை பதிவு செய்ய இயலவில்லை. ஒரு வேளை,  தப்பித்தவறி,  தெரியாத்தனமாக,  யாராவது பதிவு செய்திருந்தால் மடலிடுங்கள். இதோ  எழுத்து வடிவமாக உங்கள் பார்வைக்கு. ஹலோ எஃப்.எம்முக்கு மீண்டும் ஒரு நன்றி

_________________________________________

  தமிழ் மொழிதான் என்றாலும் அதிலே பல பிரிவு உண்டு. கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ் முக்கியமாக சென்னைத் தமிழ்.. இப்படி பல வட்டார மொழி இருப்பது போல அவரவர் செய்யும் வேலையின் அடிப்படையிலும் பல மொழி இருக்குங்க.

உதாரணத்திற்கு.. காவல்துறையில் அய்யா என்றால் இன்ஸ்பெக்டருக்கும் மேல் இருப்பவர்கள், சினிமாவில் சார் என்றால் கண்டிப்பா டைரக்டர் அல்லது ஹீரோ தான்.. சாஃப்ட்வேர் சக்கரவர்த்திகள் Np(நோ பிராப்ளமாம்), tc(டேக் கேராம்), vgm(வெறி..ச்சே வெரி குட் மார்னிங்) என்பார்கள்.. பேசும்போதா என்று கேட்காதிங்க. அவங்க பக்கத்து டெஸ்க் அக்கா கூடவே சேட்தான் பண்ணுவாங்க.

அட மத்த தொழிலெல்லாம் விடுங்க. நம்மள மாதிரி காதல் செய்யும் தொழிலாளர்கள் எப்படி பேசுவாங்க? அவங்களுடைய ஸ்பெஷல் மொழி என்ன? கொஞ்சம் பார்ப்போமா?

1950,60களில் அழகாய் பேசுவார்கள் காதலர்கள்.

நாதா.. என்று காதலிகள் சொல்லும்போதே நமக்கு திருப்தி கிடைத்துவிடும். நாக்கில் தேன்குழைத்து பேசுவார்களோ என்பது போல் இருக்கும். குரல் மட்டுமல்ல, மாடுலேஷனிலும் பின்னுவார்கள். ஒரு முத்தம் கேட்டால் போதும் “தங்கள் சித்தம். என் பாக்கியம்” என்பார்கள். அதைக் கேட்டால் முத்தமெல்லாம் தேவையில்லாமல் ஆகிவிடும். கடிதமெல்லாம் தேவையில்லை. எழுதுவது போலவே பேசவும் செய்வார்கள் அந்தக் கால ரோமியோக்கள்.

அப்படியே 1970,80கள் பக்கம் வருவோம். பேச்சுத்தமிழுக்கும் எழுத்துக்கும் நிறைய வித்தியாசம் ஏற்பட்டுவிட்ட சமயம். காதலிக்கு கடிதம் கொடுப்பதும், கவிதை எழுதுவதும் என கெளபாய்கள் பிசி.

அன்பே, ஆருயிரே, மதிமுக நாயகியே என கடிதங்கள் புயலென புறப்பட்ட சமயம். ”பாவை புருவத்தை வளைப்பது ஒரு விதம். அதில் பரதமும் படிக்குது அபிநயம்” என்று எழுதத் தெரிந்தால் போதும், டீ.ஆர்களுக்கு கூட பெண்கள் மடங்கிய, மயங்கிய காலம். காதலர்கள் பேசும்போது கூட கடல் அலை, உன் மூக்கு கிளி, கண்ணு மீன் என காதலியை வர்ணிப்பதிலே நேரம் கழித்தார்கள் பாக்யராஜ்களும், டீ.ஆர்களும்.  மெல்லினங்கள் பாடு பெண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும் என சகட்டு மேனிக்கு தாங்கினார்கள் தத்தம் காதலிகளை, மொழியின் வாயிலாக.

1990-2000 கலக்கல் காலம். தபூஷங்கர் பாணி கவிதைகளில் காதலிகளை நீராட்டினார்கள் ப்ளேபாய்கள். அம்மு, செல்லம், கன்னுகுட்டி, என்ற செல்லப்பெயர்கள் பரவலாக்கப்பட்டன. நன்றியில்லாத பெண்கள் பசங்களுக்கு வைத்த பெயர்கள் “பொறுக்கி, தடியா, நாட்டி, இடியட்”. எந்த அளவுக்கு உங்களுக்கு மோசமான பெயர் கிடைக்கிறதோ அந்தளவுக்கு அவரின் காதல் என்று புதுவித அர்த்தம் கற்பித்தார்கள் அந்தக் கால காதல்நாயகிகள்.

2000க்கு பின் அசுர வளர்ச்சி காதலுக்கு. ஐ லவ் யுக்கள் i think i am in love with u என்றானது. what about coffee ல் தொடங்கும் சிநேகம் எளிதில் wanna be my girl friendsல் மாறுகிறது. அன்பேக்கள் honey, darling, sweety ஆகிவிட்டது. காதலி girl friend ஆகி விட்டாள். முத்த பரிமாற்றங்கள் சம்பிராதயம் ஆகிவிட்டது.

மொத்தத்தில் இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.

Feb 13, 2010

இன்னைக்கு ரேடியோ கேளுங்கப்பா

23 கருத்துக்குத்து

 

நாலு நல்ல விஷயங்கள் இன்று(14-02-2010)

1) இன்று இரவு 8 மணிக்கு ரேடியோ ஹலோ எஃப்.எம் 106.4 ல் “Hello magazine” என்ற நிகழ்ச்சியில் அடியேனின் படைப்பு ஒன்றும் வருகிறது. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் மட்டுமே வருமென்றாலும், விளம்பரங்கள் குறுக்கிடுமென்றாலும் பொறுமையாக கேளுங்கள். வலையுலகில் மட்டுமே காதலை கொண்டாடிய எனக்கு, தமிழகம் முழுவதும் காதல் மொழி பேச வாய்ப்பளித்த ஹலோ எஃப்.எம்முக்கு நன்றி. தமிழகம் முழுவதும்  எல்லா ஊர்களிலும் இந்நிகழ்ச்சியை கேட்டு ரசிக்கலாம்.

நான் பரிசலில் புத்தக வெளியீட்டில் இருக்கக்கூடுமென்பதால் நண்பர்கள் யாராவது நிகழ்ச்சியை பதிவு செய்து அனுப்ப முடிந்தால் கோடான கோடி நன்றியை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

____________________________________________________________

2) பரிசல் மற்றும் கேபிளின் புத்தக வெளியீடு. ஏற்கனவே நர்சிம்மின் புத்தகம் மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இப்போது பரிசல். பலருக்கும் தெரிந்திருக்கும், பரிசல் எனக்கு வலையுலக பிதாமகன். எழுத வந்த சில மாதங்களிலே பல வழிகளில் என்னை ஊக்கப்படுத்தியவர். என்னைப் பற்றி அடிக்கடி எழுதி பிரபலபடுத்தியவர். சந்தோஷத்தில் இருக்கிறேன். நாகரத்னா பதிப்பகத்திற்கு நன்றி.

கேபிள் பற்றி சொல்லியா தெரியனும்? இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். சீக்கிரம் ஒரு படம் பண்ணுங்க பாஸ்.

____________________________________________________________

3) யூத்ஃபுல் விகடனில் எனது கவிதைகள் சில காதலர் தின சிறப்பு பக்கத்தில் வெளிவந்திருக்கிறது. விகடன் குழுமத்திற்கு நன்றி.

____________________________________________________________

4) எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துகள். இந்த வாரம் முழுவதும் பின்னூட்டமிட்டும் , மடலனுப்பியும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இந்த நல்ல நாளில் என்னுடைய மெஸெஜ்.

Spread the love and heal the world.

Pair

அவ்ளோதாம்ப்பா

ஐ அம் ஜஸ்ட் அஸிஸ்டெண்ட்

20 கருத்துக்குத்து

 

ஆண்ட்டி.

சொல்லுடா செல்லம்.

என் ஃப்ரெண்ட் நிதின்க்கு இன்னைக்கு பர்த்டே. எட்டு மணிக்கு கேக் கட் பண்ணுவான். அவங்க வீட்டுக்கு வறீங்களா?

தெரியுமே. காலைல அவன் வந்து சொன்னான். நீ வேற சொல்லனுமா?

என் ஃப்ரெண்ட் பர்த்டே இல்ல. அதான். வரும்போது அனிதாவையும் கூட்டிட்டு வந்துடுங்க. (குடுகுடு)

நில்லுடா. அனிதா இல்லைன்னா நான் வரக்கூடாதா? வாலு. வாலு

___________________________________________________

ஹலோ அங்கிள். ஸ்வீட் எடுத்துக்கோங்க.

ஹாய் என்ன ஸ்பெஷல்ப்பா?

நம்ம ஃப்ளாட் அகிலன் டென்த்ல ஸ்டேட் செகண்ட் வந்திருக்கான்.

நீ என்ன மார்க்க்ப்பா?

நான் இப்பதான் நைன்த் அங்கிள். அடுத்த வருஷம் அவன் ஸ்வீட் தருவான்.

குட் ஃப்ரெண்ட்ஸ்.

தேங்க்ஸ் அங்கிள். மதுமிதா இல்லையா?

__________________________________________________

ஹாய் வித்யா

ஹாய். ஹவ் ஆர் யூ?

ஃபைன். ஹேய்.. நம்ம மதன் பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசனும்

ஐ நோ. ஏன் அவன் பேச மாட்டானா?

அவனுக்காக நான் பேசக்கூடாதா? ஐ வாண்ட் ஹிம் டு பீ ஹேப்பி ஆல்வேஸ். அவன் உன்னை ரொம்ப டீப்பா லவ் பண்றான் வித்யா.

தெரியும்டா. இன் ஃபேக்ட்.. நானும்தான்.(தரையை பார்க்கிறார்)

ரியலி? என் வேலை மிச்சம்.

இடியட். இதை சொல்லக் கூட பயமா அவனுக்கு,

லீவ் இட். பை தி வே, ஷீலா எங்க மியூசிக் கிளாஸ் போறானு தெரியுமா?

__________________________________________________

அதேதான் மக்கா.

நண்பர் பரிசல்,கேபிளின் புத்தகம் வருது. இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க. மறக்காம புக்க வாங்கிடுங்க. முடிஞ்சவங்க ஞாயித்துக்கிழமை வந்துடுங்க. காதலர் தினத்தப்ப வச்சா எப்படி வறதுன்னு ஃபீல் பண்ற என்னை மாதிரி யூத்கள்… அங்க வாங்க. ஒரு வித்தியாசமான காதலர் தினமா இருக்கட்டும். காதலரே இல்லைன்னு சொல்றவங்க.. சரி விடுங்க.அத இன்னொரு நாள் பார்ப்போம்.

தேதி : 14.02.10
நேரம் : மாலை 5.30

சிறப்பு விருந்தினர்கள் : நீங்கள்... மற்றும்
பிரமிட் நடராஜன் - நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் - இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா - எழுத்தாளர்
பொன்.வாசுதேவன் - பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78


பரிசல் காரன் : 9894747014
கேபிள் சங்கர் : 9840332666
குகன் : 9940448599

Feb 12, 2010

நான்..நீ…காதல்..

22 கருத்துக்குத்து

 

 

 

வீடியோ பார்க்க முடியாத நண்பர்கள்  தரவிறக்கி இந்த ஃப்ளாஷ் ஃபைலை காணலாம்.

http://www.mediafire.com/?lnjwdzwdynm

(2005ல் இதை நான் எழுதிய போது NHm எல்லாம் இல்லை. ஏதோ ஒரு தமிழ் எடிட்டரில் எழுதிய போது தாவூ தீர்ந்தது. எனவே பிழைகளை பொறுத்தருளுங்கள்)

______________________________________________________

ஃபேவரிட் பாடல்

Feb 11, 2010

காதலும் கேமராவும்

38 கருத்துக்குத்து

“Puppy”  Love

Pure Love

puppylove

By Nandhu F/o Nila

  நாய்1: பிள்ளையார் கோவிலுக்கு போகக் கூடாது சரியா?

நாய்2: முதல்ல நீங்க கார்க்கி பிளாக படிக்காதிங்க

_____________________________________________________

3277582441_941b106acb

By Suresh Babu

தும்பி  :அப்பாடா.. இங்க இருந்து பார்த்தா சாளரம் தெரியல

_____________________________________________________________

Look closer and wiser..

love is everywhere

CupShadow 

By Truth

________________________________________________________________

குங்குமமும் மஞ்சளும்

Jodi

By truth

_______________________________________________________________

'இரு கால்களின் ஒரு பயணம்..

காதல் வீதியில்'

P8150158

 

By Parisalkaran

மனைவி: கோவிலுக்கு எதுக்கு ஷூ போட்டுட்டு வந்தீங்க?

கண்வன்: நீதானேம்மா ஷூ ஷூன்னு சொன்ன.

மனைவி: ஷு ஷுன்னு பேசாம இருக்க சொன்னா  ஷூவையா போட்டுட்டு வருவீங்க?

_____________________________________________________________

பி.கு: பார்க்க ஒக்கே, படிக்க???????? என்பவர்கள் அவன்..அவள்..மழை என்ற என் பழைய பதிவை படிக்கலாம். :)))

Feb 9, 2010

முத்தம் முத்தம் முத்தமா..

47 கருத்துக்குத்து

 

முதன்முறை எப்போது..

   ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.

    அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்து கொண்டது என் சிற்றறிவு.

      மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்ததற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.

     மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம்  சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரியவில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.

     மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்ற உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடீரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.

     உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருணத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சிணுங்கினாய்.

      நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.

     அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன்.  “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய்.

     இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது.

Feb 8, 2010

பிள்ளையார் எனும் களவாணிப்பையன்

50 கருத்துக்குத்து

 

உனக்கொரு குட்டி தங்கை

உண்டா என்றபோது முறைத்தாய்

ஹைக்கூவைப் பற்றி

நான்

தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பொண்ணு பின்னாடி சுத்தறான்

என்று யாரோ அம்மாவிடம்

சொல்லி இருக்கிறார்கள்.

இல்லை சரியா பாருங்க

அவன் தேவதை பின்னால்தானே போறான்

என்றார்களாம் உன் அத்தை

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எதற்கு தோதாக

கருப்பு நிற பொட்டு

என கேட்க நினைத்து

உனக்குத்தாண்டா என்று

நீ சொல்லிவிடக்கூடுமென்பதால்

விட்டுவிட்டேன்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ

கன்னத்தில் கை வைத்திருக்கும்

அழகைப் பார்க்க

எத்தனை

கப்பலை வேண்டுமென்றாலும்

கவிழ்க்கலாமடி..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பிள்ளையாரிடம் வேண்டும்போது

கண்களை மூடிக் கொள்ளாதே..

களவாணிப்பையன்..

உன் முன்பு வந்து

தோப்புக்கரணம் போட்டு

என்னத்த வேண்டிக்கிட்டானோ?

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கோவிலுக்கு வருபவர்களெல்லாம்

உண்டியலில் சில்லறை போடுகிறார்கள்.

நீ போய்

சிரித்து விட்டு வந்துவிடு

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பையன் எவ்ளோம்மா சம்பாதிக்கிறார்

என்ற தரகரிடம்

”கைநிறைய” என்றார் அம்மா.

இனி முத்தத்தை கைகளில்

தந்துவிடு

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Feb 7, 2010

காதல் – கடவுளின் மொழி

30 கருத்துக்குத்து

 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காதலர்கள் தினம்.

   கடவுள் பல வழிகளில் நம்முடன் உரையாடிகிறார். குழந்தையும்,காதலும் அவரின் இரு முக்கியமான வழிகள் என்கிறார் ஒரு கஜல் காதலன். கஜல் என்றால் காதலியுடன் பேசுவது என்று அர்த்தமாம்.பெரும்பாலும் கஜல், காதலின் சோகத்தையே பாடும். அதில்தான் காதலின் ஆழமும் புரியும். எனக்கு மிகவும் பிடித்த கஜல் கவிதையொன்று

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

தமிழை பொறுத்தவரை பெரும்பாலான காதலர்களுக்கு பரிச்சயமானவர் தபூ சங்கர்.

எனக்குப் பெண் கிடைப்பது முக்கியமில்லை
என் காதலுக்கொரு
காதலி கிடைக்க வேண்டும்.

என்கிறார் தபூ.ஒவ்வொரு மனிதனும் முழுமையாவது காதலிக்கும் போதுதான் என்று நம்புகிறேன். இதயத்தை மயிலிறகால் சில நேரம் வருடுவதும், சில நேரம் தணலில் போட்டு வறுப்பதுமென காதலின் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமானவை.

பேஸ்மெண்ட் பலம் போதுமென நினைக்கிறேன். இந்த வாரம் முழுவதும் காதல் சிறப்பு வாரமாக கொண்டாடலாம் என நினைக்கிறேன். முதல் பதிவாக நான் எழுதிய காதல் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றிலிருந்து தொடங்குவோம். இனி வருபவையெல்லாம் புதிய பதிவாகத்தான் இருக்கும்.

_________________________________________

உலகை அழிக்க வந்த உலக அழகி

  பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறித்து ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி பொக்கெயென உன் பிறந்த நாளுக்கு தர மனமில்லை எனக்கு. எனக்காக ஒரே ஒரு முறை ரோஜாத் தோட்டத்திற்கு வா. நீங்களெல்லாம் அழகான ரோஜாவல்ல என அவைகளிடம் சொல்லும் போதெல்லாம் இளக்காரம் செய்கின்றன. உன்னைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் சில ரோஜாப்பூக்களை சேகரித்து தருகிறேன்.பொக்கெயன.

  நினைவிருக்கிறதா? சென்ற பிறந்தநாளன்று கடற்கரைக்கு சென்றோம். காற்றுக் கூட நம்மிடையே நுழைய முடியாதபடி நெருக்கமாக அமர்ந்தாய். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய். நம் காதல் வந்து  உட்கார்ந்துக் கொண்டது அந்த இடைவெளியில்.

   வெள்ளை நிற சுடிதாரில் உன்னைப் பார்த்த அன்று, நல்லவேளை பாரதிராஜா கண்களில் படாமல் போனாய் என உன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என்னுடன் சமாதானமாக போக வேண்டியே அந்த உடை என அவர்களில் ஒருத்தி சொல்லித்தான் தெரிந்துக் கொண்டேன். நமக்குள் என்ன சண்டை என உன்னிடம் கேட்டபோது சொன்னாய். ” இனிமேல் அப்படிப் பார்க்காதீங்க. ”

    நீ பிறக்குமுன் எந்தக் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் உன் அம்மாவும், அப்பாவும்? அந்த ரகசியத்தை பிறருக்கும் சொன்னால் இன்னும சில ஆண்கள் என்னைப் போல அந்தரத்தில் நடக்கக் கூடுமல்லவா!!!

   என்னிடம் நீ வாங்கிச் சென்ற ரோஜாச்செடி மொட்டு மட்டுமே தருகிறது. பூக்கவே இல்லையென அலுத்துக் கொள்பவளே, உன்னை யார் மொட்டாய் இருக்கும் போதே அதற்கு முத்தம் தர சொன்னது? அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல.

   குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு.

   முதலிரவைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம் என்றேன். இரவு தொலைபேசியில் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாய். அன்றிரவு, "என்னடா செல்லம் உன் டவுட்டு" என்ற உன்னிடம் “மத்த பழமெல்லாம் ஓக்கே. ஈசியா சாப்பிடலாம்.எதுக்கு அன்னாசி பழம் வைக்கறாங்க. உனக்குத் தெரியுமா?” என்றேன். சில நொடி அமைதி  கலைத்து சொன்னாய் “அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு”.

பி.கு: அடுத்த வாரம் பழைய டெம்ப்ளேட் மாற்றப்படும். இதை விட சிறந்த வேலண்ட்டைஸ் டே சிறப்பு டெம்ப்ளேட் கிடைத்தால் எனக்கு இ.மெயில் அனுப்புங்கள்.

Feb 5, 2010

”அசல்” விமர்சனம்

46 கருத்துக்குத்து

 

டிஸ்கி: இது போலியான விமர்சனம் இல்லை. படத்தைப் பற்றிய என் அசல் விமர்சனம்.

மீண்டும் அஜித்-சரண்-பரத்வாஜ்,வைரமுத்து கூட்டணி. தல போல வருமா பாடல் வேறு தல ரசிகர்களை முறுக்கேற வைத்திருக்கிறது. எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் படம்?

100 சதவீதம் பொழுதுபோக்கு என்று சப்-டைட்டில் போடாமல் விட்டுவிட்டார்களே... என்று வருத்தப்பட வைக்கிற படம். இருந்தாலும் லாஜிக் மாறாமல் திரைக்கதையை எடுத்துச் சென்றதில் இயக்குநர் சரணுக்கு ஷொட்டு வைக்கலாம்.

அஜித் + அஜித் என இரட்டைக் குழந்தைகள். அப்பா நிழல்கள் ரவி, அம்மா சுஜாதா, தாதா பாபு ஆன்டனி கையாளாக இருந்து, அவராலேயே கொல்லப்படுகிறார் நிழல்கள் ரவி. இதை குழந்தையாக இருக்கும் ஒரு அஜித் பார்த்து விட, அவரையும் ஆன்டனி குறி வைக்கிறார். வேறு வழியில்லாமல், வெளிநாட்டுத் தம்பதிக்கு அந்த குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டு மற்றொரு குழந்தையுடன் சென்னையில் செட்டிலாகிறார் சுஜாதா... என்று ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

அம்மாவோடு வாழும் அஜித், டிரைவிங் ஸ்கூல் நடத்த, அங்கு வந்து சேர்கிறார் நாயகி. இந்தக் கூட்டணி காதல் பாடல் படிக்க, கருணாஸ் - வையாபுரி கூட்டணி காமெடியில் கலக்குகிறது. மற்றொரு, அஜித் வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்து நிறைய தங்க நகைகளோடு தூத்துக்குடியில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார். அம்மா, தம்பி மீது அவருக்கு ஏக கோபம்.

சென்னை அஜித், ஏதேச்சையாக தூத்துக்குடி செல்ல குழப்பம் ஆரம்பிக்கிறது. வில்லன்கள் மகாதேவன் - ஆன்டனி துரத்த அடிதடி ஆரம்பிக்கிறது. தாதா அஜித் சென்னையிலும், இவர் தூத்துக்குடியிலும் மாறிக் கொள்ள, ஒரு கட்டத்தில் உண்மையைப் புரிந்து கொண்டு அம்மாவிடம் அன்பு காட்டும் தாதா அஜித், எதிரிகளை வீழ்த்துகிறார்.

அஜித் - நாயகி கூட்டணி அட்டகாசத்தைத் தொடர, மீண்டும் தூத்துக்குடிக்குப் புறப்படுகிறார் மற்றொருவர். அப்புறமென்ன... சுபம் தான்.

மீண்டும் அஜித் - இரட்டை வேடம் என்பதால் ஏற்படும் ஈர்ப்புக்கு பாதகம் வராமல் இருக்க அஜித் நிறைய சிரமப்பட்டிருக்கிறார். ஒரு அஜித் அமைதியாக, அதிர்ந்து பேசாத, சாதுவாக இருக்க... மற்றொருவர் அடாவடியாக தடாலடியாக செய்கிறார். ஒருவர் சென்னைத் தமிழ்,.... மற்றொருவர் தூத்துக்குடி தமிழ்...

அழகுப் பதுமையாக வந்து செல்லும் பூஜா நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. அஜித்துக்கு ஜோடியாக இவர் இன்னும் வளர வேண்டும். காமெடிக் கூட்டணியான கருணாஸ் - வையாபுரி ரமேஷ்கண்ணா நிறையத் தந்திருக்கின்றனர். குறிப்பாக, கருணாஸ் - அஜித்தின் ஆட்டோஸ்டார்ட் காமெடி நிறைய நகைக்க வைக்கிறது.

இரட்டை வேட அஜித், மாறி மாறிக் காட்சிகள் என்று இயக்குனருக்கு நிறையச் சிரமம் தரும் திரைக்கதையை லாவகமாகக் கையாண்டிருக்கிறார் சரண். என்டர்டெயின்மென்ட் என்பதற்காக லாஜிக் மீறாமல் நகர்த்தியிருப்பதில் அவருக்கு வெற்றிதான்.

வழக்கமாக ஜொலிக்கும் சரண் - பரத்வாஜ் கூட்டணிக்கு என்ன ஆச்சு? பாடல்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அதுபோல, பாடல் காட்சிகளை பதிவு செய்வதிலும் ஏனோ... அவசரம்.

மொத்தத்தில் அட்டகாசம், சுமாரான கமர்ஷியல் மசலா

____________________________________________________________________________

பி.கு: சத்யமாக இது நகைச்சுவை பதிவல்ல. அட்டகாசம் படத்தின் விமர்சனம் தான்

Feb 4, 2010

பங்கு போடப்பட்ட அந்தப்புரம்

23 கருத்துக்குத்து

 

  அன்று தர்பார் முழுவதும் மயான அமைதியில் இருந்தது. மயானத்தில் யாரும் இருப்பதில்லை என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா அல்லது எவ்வளவு ஆடினாலும்,மரணத்திற்குப் பின் மயானத்தில் அமைதியாய்த்தான் துயிலமுடியும் என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா என்ற சிந்தனைக்கெல்லாம் மொக்கை தர்பாரில் இடம் கிடையாது. அவ்வாறு சிந்திப்பவர்கள் தலைப்பாகையோடு மூளையையும் கழட்டி வைத்துவிட்டு உள்ளே வரவும். எனக்கு சிரமமில்லை. நான் தலைப்பாகையோடு வருகிறேன்.

  அந்த அமைதிக்கு காரணம் மாமன்னர் மொக்கைவர்ம பல்லவன்  இன்றுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் தேர்வு வைக்கப் போகிறார் என்பதே. துறைகளும், சம்பளமும் அந்தத் தேர்வின் அடிப்படையிலே அமையுமென்று மன்னரின் செய்தி குறிப்பில் சொல்லப் பட்டிருந்தது.

  அரசின் அமைச்சர்கள் யாருமே திறம்பட செயல்படவில்லை என்பது மன்னரின் குற்றச்சாட்டு. மேலும் எல்லா அமைச்சர்களுக்கும் கூடுதல் பொறுப்பாக வட மண்டல அந்தப்புரம், தென்மண்டல அந்தப்புரம்,வடமேற்கு தென்கிழக்கு அந்தப்புரம் என்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது மன்னருக்கு பிடிக்கவில்லை.அதன்படி அந்தப்புரத்தை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மண்டலமும் வெறும் 3 அடி மட்டுமே இருக்கும். அதனால் ராணிகள் ஹாயாக கை, கால்களை நீட்டி உறங்கக் கூட முடியாத நிலை. மற்ற பின் விளைவுகளை விலாவாரியாகவோ, சுருக்கமாகவோ சொன்னால் கூட காக்கா* பறந்து வந்து கொத்துமென்பதால் நாம் கேள்விக்குப் போவோம்.

(* இரட்டை அர்த்த வசனங்களோ, சொல்லக் கூடாத விஷயங்களோ சொன்னால் காக்கா பறந்து வந்து தலையில் கொத்தும் என்பது பல்லவ மரபு. ஆதாரம்: தமிழ்ப்படம் என்ற தமிழ்ப்படம்.)

முதல் கேள்வி விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிம்ப்பிக்கோ மொய்யோ தீனிடம் கேட்கப்பட்டது.

தானத்திலே பெரிய தானம் எது?

மன்னர் எப்படியும் நிதானம் என்று சொல்லி ராஜகுருவாக முயற்சி செய்வார் என்று எதிர்பார்த்த அமைச்சர் நிதானமே இல்லாமல் வேகமாக “நிதானம்” என்றார்.

வெற்றி சிரிப்பு சிரித்த மன்னனின் தலையசைப்பு இல்லை என்பதை சொல்வதாக அமைந்ததைக் கண்டு அமைச்சரின் தலை தொங்கியது.

ரத்த தானம், கண் தானம், விதானம், ஏன் சூதானமா என்று கூட சொல்லிப் பார்த்துவிட்டார் அமைச்சர். மன்னனின் தலை இடவலமாக அசைந்ததேயன்றி, மேலும் கீழுமாக அசையவே இல்லை. அவர் சொல்லாமல் விட்ட ஒரே தானம் சந்தானம் தான். ஆனால் அப்போதெல்லாம் லொள்ளு சபா கிடையாது என்பதால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை . தோல்வியை ஒப்புக் கொண்ட பின் மன்னரிடம் விடை கேட்டார் மந்திரி, மன்னிக்க, வெறும் ஒலிம்பிக்கோ.

நீரெல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறீர் என்று அதிர்ந்த மன்னன் அழுகுணியிடம் “அழுகுணி நாம் எங்கே விளையாடுவோம்?” என்றார்.

புதிதாக சமைந்த பெண்ணைப் போல வெட்கப்பட்ட அழுகுணி மன்னரை ஏறெடுத்தும் பார்க்காமல் வளைந்து, நெளிந்து, குழைந்து “அந்தப்புரத்தில் மன்னா” என்று சொல்லிவிட்டு தமிழ்ப்பட கதாநாயகனைப் போல் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அழுகுணி என்று மீண்டும் மன்னர் கொக்கரித்தார்

இன்னும் வெட்கம் போகாத அழுகுணி, ”இன்னும் ஏராளமான இடங்கள் மன்னா. இங்கே சொல்லலாமா?”

அழுகுணி.. நான் பந்து விளையாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஓ. அதுவா மன்னா(காக்கா பறக்கிறது) என்று இழுத்த அழுகுணியின் முகம் அநியாயத்திற்கு  வெட்கத்திலும், மன்னரின் முகம் கோவத்திலும் சிவந்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வீரன் ஒருவன் அழுகுணிக்கு சிக்னல் கொடுக்க, மன்னரை நிமிர்ந்து பார்த்த அழுகுணி செய்வதறியாது திகைத்தார். கையில் வாளுடன் மன்னர் “சொல். எது பெரிய தானம்” என்று அதட்ட, “சமாதானம் மன்னா சமாதானம்” என்றார். பால்யகால நண்பன் என்பதால் அவனை மன்னித்த மன்னர் விடையை சொல்லத் தயாரானார்.

தானத்தில் பெரிய தானம் “மைதானம்”. யாருக்கும் விடை தெரியாததால் நானே அந்தத் துறையை எடுத்துக் கொள்கிறேன்.

அந்தப்புரத்தில் வடமேற்கு தென்கிழக்கு மண்டலத்தை கைப்பற்றிய பூரிப்பு மன்னரின் முகத்தில் தெரிந்தது

(மொக்குவோம்)

Feb 3, 2010

பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி

39 கருத்துக்குத்து

 

மு.கு: சமீபத்தில் வந்த பல எஸ்.எம்.எஸ்கள் பட்டையை கிளப்புக்கின்றன. நான் ரசித்த சில குறுஞ்செய்திகள் தான் இவை

sms-message-path

1) ஒரு ஆண் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்ய என்ன செய்ய வேண்டும்?

respect her.. care for her.. protect her..love her..

அதுவே ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ் செய்ய???? ஒரே ஒரு ஸ்மைல் போதும்.

விடு மச்சி. நமக்கு குழந்தை மனசுடா
_________________________________________________________________________

2) எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என் கைய பிடிச்சுக்கோ செல்லம். உன்னை நான் பத்திரமா வாசன் ஐ கேர் கூட்டிட்டு போறேன்

_________________________________________________________________________

3) அற்பமாக இருக்கும் 10ஆண்களை கொடுங்கள்,  சிற்பமாக்கி காட்டுகிறேன் –

விவேகானந்தர்

சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொடுங்கள். கர்ப்பமாக்கி காட்டுகிறேன் – பிரேமானந்தா

_________________________________________________________________________

4) பெண்களை ப்ரபோஸ் செய்ய புது வழி :

பையன்: அய். நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே இருக்கிங்க.

பொண்ணு: உங்க வைஃப் பேரு என்ன?

பையன்: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.

_________________________________________________________________________

5) பொறம்போக்கு….

;;

;;

;;

;;

லேண்ட் ஃபார் சேல். தொடர்புக்கு – 9789887654(அல்லது உங்க நம்பர்)

_________________________________________________________________________

6) டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?

மாணவன்: புலி உறுமுது

டீச்சர்:  தேசிய பூ?

மாணவன்: ஒரு சின்னத் தாமரை

டீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா

மாணவன்: கரிகாலன் காலைப் போல

டீச்சர் : (அடிக்கிறார்)

மாணவன்:  நான் அடிச்சா தாங்கமாட்ட

டீச்சர் : குட்டுக்கிறார்

மாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது

டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்

மாணவன் :??????????????????????????????

_____________________________________________________________________________

7) நண்பன்: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.

நண்பன் 2: விடறா. ஃபீல் பண்ணாத

நண்பன் 1: இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது

நண்பன் 2: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

__________________________________________________________________________

 

all rights reserved to www.karkibava.com