Jan 31, 2010

C.S.அமுதனின் பூந்தி


 

tamil-padam-08 

    வழக்கமாய் எல்லோரும் நிறைகளை முதலில் சொல்லிவிட்டு குறைகளை சொல்வார்கள். நாம் குறையை சொல்லி ஆரம்பிப்போம். எனக்கு அதுதான் தெரியுமாமே!!

“சத்தியமா இது வித்தியாசமான படம் அல்ல”

    என்னய்யா நினைச்சுக்கிறீங்க? இதைப் போல் ஒரு படம் தமிழில் வந்திருக்கா? எல்லாத் தமிழ்ப்படத்தை வைச்சுதான் இந்த தமிழ்ப்படம் எடுக்கப்பட்டாலும் இது புதுசுதான். இது எல்லாம் வித்தியாசம் இல்லைன்னு நினைக்கிறதாலதான் “போறவங்க வர்றவங்க” எல்லாம் உலகப் படமா எடுக்கிறாங்க.

    கதை, கந்தாயம் எல்லாம் இந்நேரம் தெரிந்துக் கொண்டிருப்பீர்கள். வசனம், வெங்காயம் எல்லாம் படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். அப்ப நான் என்னதான் எழுதப் போறேன்? என் கொண்டாட்ட மனநிலையை. வீட்டில் ஒரு திருமணம் நடந்தால் எப்படி ஃபீல் பண்ணுவோமா கிட்டததட்ட அப்படியொரு சந்தோஷத்தை இரண்டு மணி நேரத்தில் தந்திருக்கிறார்கள். காலத்துக்கும் மறக்க மாட்டோம் பாஸ்.(நீங்க ப்பாஸ் பண்ணிட்டிங்க. அதான் பாஸ்..) இனி குறைகளை பார்ப்போம். குறைகளை மட்டும் பார்ப்போம்.

   ஒவ்வொரு காமெடியும் புன்னகையெல்லாம் இல்லை, ஹாஹாவென விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. மனசாட்சி வேண்டாம்? ஒரு மனுஷன் இவ்வளவுதான் சிரிக்க முடியும் என்று ஒரு கணக்கு வேண்டாமா என வடிவேலு பாணியில் கேட்க வைக்கிறார்கள். பார்வையாளர்களை வதைக்கும் தல, தளபதிகளை கிண்டலடிக்கிறேன் என்று நீங்களும்தான் வதைக்கிறீர்கள். திரும்பும் வழியில் சிக்னலில் தனியே சிரித்துக் கொண்டிருந்த  என்னைக் கண்டு ஒதுங்கியது ஒரு ஃபிகர். படத்தின் முதல் குறை. அளவில்லா காமெடி. ஃபிகர் போனதால் என்னைப் பொறுத்த வரை எக்ஸ்ட்ரா லார்ஜ் குறைதான்.

   இடைவிடாமல் சிரித்துக் கொண்ட எனக்கு பெரும் அதிர்ச்சி தந்தார்கள். என்னால் அந்தக் காட்சியை இப்போது வரை ஜீரணிக்க முடியவில்லை. எடிட்டருக்கு நிச்சயம் கல்மனசுதான். இல்லையெனில் இப்படி செய்ய முடியாது.  இடைவேளையாம். தேவையா அந்த கருமம்? இது குறையில்லையா?

    இந்த மாதிரி படத்தில் தான் லாஜிக் பார்க்க வேண்டுமாமே!! பெரியவங்க சொன்னாங்க.  டூயட் பாட வெளிநாடு சென்று திரும்பும் நாயகனிடம் எங்கடா ரெண்டு நாளா காணோம்ன்னு பாட்டி கேட்க, உண்மையை உரக்க சொல்கிறார். ஊர் எல்லையில் இருந்த அம்மன் சிலை திடிரென எழுந்து ஆட..ஆஹா லாஜிக் மிஸ் ஆகுதே என்று பார்த்தால், அதற்கும் ஒரு காரணம். நம்பும்படி. வில்லனுக்கு D என பேர் எப்படி வைக்கலாம்? டா என்றுதானே வைக்கனும்? அதற்கும் க்ளைமேக்ஸில் சரியான பதில்.  சின்ன சின்ன லாஜிக் கூட மிஸ் ஆகவில்லை. அப்புறம் எப்படித்தான் நாங்க பதிவெழுதுவது? அடுத்த குறை.

      2007ல் டாடாவில் வேலை செய்து கொண்டிருந்தேன். சென்னை, நந்தனத்தில் தான் அலுவலகம். அப்போதுதான் சென்னை-28 கலக்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் வேகமாய் வெளிவந்து ரோட்டை கடந்தவன், ஒருவரைப் பார்த்து நம்ம உலகநாயகன் நாயகியை பார்த்து பேக் அடிப்பது போல் அடித்தேன். என்னை முந்திக் கொண்டு அவர் ஹாய் சொன்னார். அவர் ஷிவா. சில நிமிடங்கள் பேசினோம். அதே மாதிரிதான் படம் முழுக்க பேசியிருக்கிறார். சின்ன வித்தியாசம் கூட இல்லை. நடிப்பு என்றால் இப்படியா? சுத்தமாக  பிடிக்கவில்லை ஷிவா. வசனம் முடியும்போது கண்கள் மூடி தலை சாய்க்கும் மேனரிசம் சகிக்கலை. அதே போல் “செம” என்ற வார்த்தையின் மாடுலேஷன். சுத்தமாக பிடிக்கவில்லை.ஷிவா. இன்னொரு குறை.

    இசை. ஏற்கனவே பாடல்கள் பற்றி எழுதிவிட்டேன். இருந்தாலும். ஹரிஹரனுக்கு தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை. எப்படித்தான் லாலாக்கு..லாலாக்கு டோல் டப்பிமாவை சிரிக்காமல் பாட முடிந்தது? அதற்கு ஷிவாவின் ரியாக்‌ஷன். ங்கொய்யால. அலறுகிறது தியேட்டர். அழகான ஒரு மெலடியை இதைவிட அதிகமாக டேமேஜ் செய்ய முடியாது. இந்தப் பாவத்திற்கு எமதர்மன் உங்களுக்கு “சினிமாப்பட்டி சிங்கம் வாடா. சிரிசிரிக்க வைச்சு போடா” என்ற தண்டனைதான் தரப்போகிறார். அதே போல் ஒரு சூறாவளி கிளம்பியதே பாடல். காஃபி ஆறினால் என்ன? வில்லனுக்குத்தானே? அதற்காக பாட்டை ரெண்டே நிமிடத்தில் முடிப்பதா? மூளை இல்ல? மோசக்காரங்களா. குறையோ குறை இது.

    வசனம். கெட்ட வார்த்தைதான் வருது.எனக்கு. வசனகர்த்தாவுக்கு இல்ல.  அந்த ஷிவாவைப் பார்த்தாலே சிரிப்பு வருது. இதுல வசனத்த வேற இப்படி எழுதி கொடுத்தா? பணத்தை விட மனுஷங்கதான் முக்கியம் என்று சொல்வதற்கு முகேஷை விட சரியா உதாரணம் தர முடியுமா? அதே போல் மணிரத்னம் டைப் வசனம். பாஸ்.உண்மைய சொல்லுங்க. படம் முடிந்த பின் வரும் அந்த வாக்கிங் மேட்டர், நீங்க எழுதி தந்ததுதானே? செம மொக்கை. படத்தின் இன்னொரு பெரிய குறை.

      இப்படி அடுக்கிக் கொண்டே போகிறேனே. நல்ல விஷயமே இல்லையா என்று கேட்கறீங்களா? படத்தின் கடைசி சில சீன்கள் நல்லா இருக்கு. இவ்ளோ மொக்கையான படத்தை 2 மணி நேரத்தில் முடிச்சது நல்லா இருக்கு. தலைப்பு பூந்தி என வைத்ததற்கு காரணம் உண்டு. அய்யய்யோ அது இல்லைங்க. உதிரியாக காமெடி சூப்பர் என்றாலும் முழுப்படமாக இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். இருந்திருந்தால் அமுதனின் லட்டு என்று தலைப்பு வைத்திருப்பேன்.

     ஒட்டு மொத்த யூனிட்டுக்கும் ஒரு பெரிய நன்றி. நீங்கள் சேர்த்திருக்கும் புண்ணியத்தை இனி தொடர்ந்து வரப் போகும் ஸ்பூஃப் படங்களும், கதையே கேட்காமல் ஷிவா நடிக்கப் போகும் படங்களோ வந்து தீர்த்துக் கட்டட்டும். நீங்கள் தீர்க்கமாக இதே போல் ஆராவாரமான இன்னொரு படத்திற்கு தயாராகுங்கள்.

தமிழ்ப்படம் : தங்கமான படம்.

42 கருத்துக்குத்து:

மோகன் குமார் on January 31, 2010 at 12:31 PM said...

நான்தான் First-டு

மோகன் குமார் on January 31, 2010 at 12:33 PM said...

யப்பா என்னமா யோசிக்கிறீங்க!! இப்படியாய்யா விமர்சனம் எழுதுவாங்க? செம different. ஒரே உயர்வு நகிழ்ச்சி அணியாக உள்ளது. நானும் படம் பார்த்து enjoy செய்தேன். விமர்சனம் எழுதியாச்சு..முடிஞ்சா பாருங்க

எறும்பு on January 31, 2010 at 12:51 PM said...

ஒரு தமிழன் படத்த இத்தனை குறை சொன்னால், தமிழன் எப்படி வளருவான்.

சங்கர் on January 31, 2010 at 1:23 PM said...

நான் மைனஸ் ஓட்டு போட்டுட்டேன் (இதையும் உங்க விமர்சனம் மாதிரியே அர்த்தம் எடுத்துக்குங்க)

ஆர்.கே.சதீஷ்குமார் on January 31, 2010 at 1:34 PM said...

அடேயப்பா..எப்படியெல்லாம் விமர்சனம் எழுதுராங்க...நல்லாருக்கு

Karthik on January 31, 2010 at 1:39 PM said...

அருமை அட்டகாசம்னு வயித்தெரிச்சலை கிளப்புறீங்களே! எனக்கு அடுத்த வாரம்தாங்க. :((

♠ ராஜு ♠ on January 31, 2010 at 1:41 PM said...

நான் விமர்சனம் பார்த்துட்டு ரோட்டுல நடந்து போகும்போதே சிரிச்சதப் பார்த்து லூசுன்னுட்டானுக..!

ஃபிகர் போச்ச்சே..!

ஷங்கர்.. on January 31, 2010 at 2:36 PM said...

லட்டு விமர்சனம் கார்க்கி:))

அனேகமா எல்லா பதிவும் இப்படித்தான் இருக்கு:) இதுவே ஒரு ரெக்கார்ட்தான்..

வெற்றி on January 31, 2010 at 2:45 PM said...

அது எப்படிங்க சகா? ஒன்னு மட்டும் புரியவே இல்ல..

ஊரில மொக்கைன்னு சொல்ற படத்த பதிவர்கள் கொண்டாடுறீங்க..நல்லா இருக்குன்னு சொல்றத வாந்தின்னு சொல்றீங்க :)

கார்க்கி on January 31, 2010 at 3:01 PM said...

மோகன், பார்த்து பின்னூட்டமிட்டேன்..

எறும்பு, அதானே? படத்தில் பிடித்த ஹீரோயின் வேறு மாநிலம்.ச்சே :))

ஷங்கர். உங்கள் திட்டுட்டு இதையும் அது மாதிரி சொல்ல நினைச்சேன் :))

சதீஷ், நன்றி

கார்த்திக், எப்போன்னு சொல்லு.

ராஜூ, ரோடுன்னா நாலு ஃபிகர் போகத்தாம்ப்பா செய்யும் :))

ஷங்கர் , அவசரம் வேண்டாம். கீழேயிருக்கும் வெற்றியின் கமெண்ட்ட பாருங்க

வெற்றி, அப்ப நீங்க பதிவர் இல்லையா? அது இருக்கட்டும். ஆயிரத்தில் ஒருவனை ஊரில் கொண்டாடறாங்களா? படம் அப்பீட்டு. வசூல் விவரம் வேணுமா? தமிழ்ப்படத்தின் மவுத் டாக் நல்லா இருப்பதால் அபிராமி மாலில் எல்லா திரையிலும் காலை 8.45க்கு சிறப்பு காட்சி. கோவாவுக்கு போடுவதாக இருந்த காட்சியும் தமிழ்ப்படம். ஊரே கொண்டாடுது பாஸ்.

செகண்ட் ஹாஃப் சற்று சறுக்கல்தான். ஆனால் ரசிக்க முடிந்தது. முதல் பாதி 200% என்பதால் அபப்டி தோன்றுகிறது.

வெற்றி on January 31, 2010 at 3:10 PM said...

//அப்ப நீங்க பதிவர் இல்லையா? //

திரை விமர்சனம் எழுதும் பதிவர்களை சொன்னேன் சகா..

நான் சொல்வது எங்க ஊரு நிலவரம் :)இங்க ஆ.ஒ படத்துக்கு கூட்டமாக வந்த நண்பர்கள் இந்த படத்துக்கு கூப்பிடும் போது லொள்ளு சபாவை இரண்டு மணிநேரம் பார்க்க முடியாது என கூறி ஒதுங்கி கொண்டார்கள்..

ஆ.ஒ. நன்றாக இருந்தாய் சொன்னவர்கள் இந்த படம் இரண்டாம் பாதி மொக்கை என்றுதான் சொன்னார்கள்..இதுதான் நான் கேட்ட மவுத் டாக்..

அன்புடன் அருணா on January 31, 2010 at 3:41 PM said...

நிறைய உள்குத்து வெளிக்குத்தெல்லாம் இருக்கு போல!

குறும்ப‌ன் on January 31, 2010 at 3:51 PM said...

நானும் பாத்துட்டேன், இதுமாதிரி நிறைய‌ சினிமா வ‌ந்தா டாக்ட‌ருங்க‌தான் பாவ‌ம்:))

கண்ணா.. on January 31, 2010 at 4:04 PM said...

வாந்தி....பூந்தின்னு சினிமா விமர்சனமெல்லாம் விஜய டிஆர் பாணிலதான் வருது...:)

கே.ரவிஷங்கர் on January 31, 2010 at 4:08 PM said...

விமர்சனம் நன்று தல.இது மாதிரி நக்கல் அடிக்கும் படங்களில் சற்றுத் திகட்டி அலுக்க ஆரம்பிக்கும்.ஆனால் திகட்டாமல்பாலன்ஸ்செய்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முன்னோடி லொள்ளுசபா/சூப்பர் டென்.தங்கபதக்கம் படம் கிண்டல் சாம்பிள்:(சிவாஜி (இன்ஸ்பெக்டர் செளத்ரி)விறைப்பாக (200%)
attentionல் நின்று சல்யூட் அடிக்கும்போது)”யோவ்! நீ சட்டைக்கு கஞ்சிப் போட்டுருக்கியா இல்ல உடம்புக்கு கஞ்சிப் போட்டுருக்கியா?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி on January 31, 2010 at 5:10 PM said...

நல்லா எழுதி இருக்கீங்க...
நன்றி,,

சுசி on January 31, 2010 at 5:21 PM said...

//நாம் குறையை சொல்லி ஆரம்பிப்போம். //
ஆஹா.. சமத்து கார்க்கி நீங்க.

//திரும்பும் வழியில் சிக்னலில் தனியே சிரித்துக் கொண்டிருந்த என்னைக் கண்டு ஒதுங்கியது ஒரு ஃபிகர்.//
கவலைப்படாதீங்க.. அந்த ஃ பிகருக்கு நீ எங்கே + என் இனிய பொன் நிலாவே லிங்க் பார்ஸேஏஏல்..

இவ்ளோ குறைகள் இருக்கிரத்தாலையோ என்னமோ இங்க போடா மாட்றாங்கப்பா.. :((((

கண்டிப்பா எனக்கொரு ஒரிஜினல் டிவிடி அனுப்பிடுங்க. இல்லேன்னா மறுபடி.. வேண்டாம் சொல்லல.. பாக்கும்படி சபிக்கப்படுவீர்கள்.

அறிவிலி on January 31, 2010 at 5:23 PM said...

பூந்தி சுவை அருமை.

அத்திரி on January 31, 2010 at 6:07 PM said...

வித்தியாசமான விமர்சனம்...... பிடிக்கலைனா வாந்தி--பிடிச்சிருந்த பூந்தி

நல்லாத்தான் இருக்கு இந்த டீல்

முரளிகுமார் பத்மநாபன் on January 31, 2010 at 6:10 PM said...

ஐய்யா ஜாலி, சகா நீங்களும் ஒரு மேட்டரை சொல்லவே இல்லையே? :-)
நம்ம நண்பர் பார்க்கும்போது நோட்ஸ் எடுத்துகிட்டு இருந்தவர், இண்டர்வெல்லில் என்னிடம் எக்ஸ்ட்ரா பேப்பர் கேட்டார். :-=)

சத்தியமா ரெண்டு மணி நேரம் பத்தலை சகா. இதுபோதும் சகா கலகலன்னு சிரிச்சிட்டு வரலாம்.

டிக்கெட்டை மிஸ் பண்ணிட்டிங்களாமே? என்ன மாதிரியே :-)

சகா ஸ்டைக்கர் -ல் யுவன் ஒரு பாட்டு மியூசிக் பண்ணி பாடியுமிருக்கார், சொல்ல மறந்திட்டேன்.

டம்பி மேவீ on January 31, 2010 at 6:42 PM said...

படத்தை பார்த்துட்டு நைட் தூங்கிற வரைக்கும் சிரிச்சுட்டே இருந்தேன் பாஸ் .....

ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டு சிரிச்சேன் .... ..


டைட்டில் கார்டு லையே அவங்க லொள்ளு ஆரம்பிச்சு...எண்டு கார்டு வரைக்கும் செம தமாசு ...

அதுவும் அந்த லாலாக்கு டோல் டப்பிமா ........வாய்ப்புகளே இல்லை

டம்பி மேவீ on January 31, 2010 at 6:42 PM said...
This comment has been removed by the author.
டம்பி மேவீ on January 31, 2010 at 6:43 PM said...

வரை முறை இல்லாமல் சிரிக்க வைச்சு இருக்காங்க

கும்க்கி on January 31, 2010 at 6:51 PM said...

ப்ரதர்..,

சிவா வுக்கு பதில் ப்ருத்விராஜை போட்டிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்ற நிறையைத்தாண்டி மற்ற எல்லாமே குறைதான்.

ஒரு அள்ளு அள்ளப்போகிறதென்னவோ உண்மை..

"ராஜா" from புலியூரான் on January 31, 2010 at 7:00 PM said...

ஏங்க செம்ம மொக்க படம் எல்லாரும் நல்லா இருக்குங்கிரீங்க...

என். உலகநாதன் on January 31, 2010 at 7:21 PM said...

கார்க்கி,

படம் பார்க்கலாமா? வேண்டாமா?

சரியா சொல்லுங்க சகா!

பரிசல்காரன் on January 31, 2010 at 9:12 PM said...

//சிவா வுக்கு பதில் ப்ருத்விராஜை போட்டிருந்தால்//

இப்படி யோசிச்சதுக்கே கும்க்கிய குமிய வெச்சு கும்மணும். என்ன ஒரு சிந்தனைடா சாமி! ஆயிரத்தில் ஒருவனை இன்னும் ரெண்டு வாட்டி பார்க்கக்கடவது!

@ கார்க்கி

செம ஐடியா விமர்சனம். ஆனால் சிவா பத்தின பத்திய படிச்சா சீரியஸா திட்டறா மாதிரியே இருக்கு. அதுனால சிலர் குழம்பி (எனக்கு மேல இருக்கற கமெண்ட் பாருங்க) போய்ட்டாங்கன்னு நெனைக்கறேன்.

பரிசல்காரன் on January 31, 2010 at 9:31 PM said...

காலைல உடம்பு சரியில்லாம ஒரு மாதிரி ட்ரௌஸியா இருந்தது. உனக்கு கூப்ட்டு, நீ தியேட்டர்ல இருந்து ஆன் பண்ணி அரை மணி நேரம் பட வசனம் கேட்டதுல ரிஃப்ரெஷ் ஆய்ட்டேன். தாங்க்ஸ் ப்பா!

ஜெட்லி on January 31, 2010 at 10:32 PM said...

முதல்ல வாந்தி,..இப்போ பூந்தி...
அப்போ அசல் லட்டா????

பா.ராஜாராம் on February 1, 2010 at 2:58 AM said...

:-)

தராசு on February 1, 2010 at 10:20 AM said...

உள்ளேன் ஐயா

"ராஜா" from புலியூரான் on February 1, 2010 at 11:04 AM said...

ஆயிரத்தில் ஒருவனுக்கு வந்த பின்னூட்டங்கள் உங்களை இந்த பதிவில் உண்மை பேச விடாமல் தடுத்து விட்டது என்று நினைக்கிறேன்... காட்சிகளாய் பார்க்கும் போது இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியுமே அருமையாகத்தான் இருக்கிறது... ஆனால் அதையே முழு படமாய் பார்க்கும் பொழுது சலிப்பு தட்டி விடுகிறது என்பது உண்மைதானே?

கார்க்கி on February 1, 2010 at 11:25 AM said...

அனைவருக்கும் நன்றி..

ராஜா,

// உதிரியாக காமெடி சூப்பர் என்றாலும் முழுப்படமாக இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். இருந்திருந்தால் அமுதனின் லட்டு என்று தலைப்பு வைத்திருப்பேன்//

இப்ப உங்க பின்னூட்டத்த பாருங்க.ரெண்டும் ஒன்னுதானே? அப்புரம் ஏன் அதை கேட்டிங்க?

பாஸ், இந்த மாதிரி ப்டத்த ஆதரிக்கலைன்னா தல, ள்பதிகள் திருந்த மாட்டாங்கலே!!! :)))

"ராஜா" from புலியூரான் on February 1, 2010 at 12:28 PM said...

//முழுப்படமாக இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம்.
sorry நான் அத கவனிக்கல...

//தல, ள்பதிகள் திருந்த மாட்டாங்கலே

what they do wrong to correct it? அவர்கள் தருவதும் பொழுது போக்குகள்தானே, பிடித்தவர்கள் ரசிப்பார்கள் ... ஆனால் இங்கே உள்ள ஒரே ஒரு பிரச்சனை அதை பிடிக்காதவர்கள் சண்டைக்கு வருவதே...அவர்கள்தான் திருந்த வேண்டும்

குறும்ப‌ன் on February 1, 2010 at 12:47 PM said...

//பிடித்தவர்கள் ரசிப்பார்கள்//

ப்ளீஸ், அப்ப‌டி யாராவ‌து இருந்தா கொஞ்ச‌ம் சொல்லுங்க‌!

நர்சிம் on February 1, 2010 at 1:17 PM said...

கலர்ஃபுல் ஹவுஸ்ஃபுல்..ஆம். கொண்டாட்டம் தான்.

தாரணி பிரியா on February 1, 2010 at 1:34 PM said...

ரொம்பவே சூப்பர்னு சொன்னாங்க. சீக்கிரம் போகணும் :). அதுவும் ப்ரெண்ட்ஸோட போகணுமுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்

"ராஜா" from புலியூரான் on February 1, 2010 at 1:58 PM said...

//அப்ப‌டி யாராவ‌து இருந்தா கொஞ்ச‌ம் சொல்லுங்க‌

அவர்கள் படம் ஓடுகிற theatre க்கு போய் பாருங்க...

தமிழ்ப்பறவை on February 1, 2010 at 10:00 PM said...

நல்ல வித்தியாசமான கார்க்கி டச் விமர்சனம் சகா...படம் பார்க்க வேண்டும்..ரசித்தேன்...

Jaya on February 1, 2010 at 10:31 PM said...

Vithiyasamana Vimarsanam..Aana engaluku boondhi sapida mudiala.
Enga oorla release aagala Kaarki :(

Bharathi on February 2, 2010 at 12:20 PM said...

//நீங்கள் சேர்த்திருக்கும் புண்ணியத்தை இனி தொடர்ந்து வரப் போகும் ஸ்பூஃப் படங்களும், கதையே கேட்காமல் ஷிவா நடிக்கப் போகும் படங்களோ வந்து தீர்த்துக் கட்டட்டும் //

:):):)

SanjaiGandhi™ on February 2, 2010 at 11:04 PM said...

//தமிழ்ப்படம் : தங்கமான படம்.//

அடுத்த வாட்டி சீரியல்களை நக்கலடிச்சி படம் எடுத்தா நீங்க தான் ஈறோ.. ;)

லொள்ளுசபா அளவுக்கெல்லாம் இல்லை கார்க்கி.. அவங்க தான் கலக்கறாங்க..

 

all rights reserved to www.karkibava.com