Jan 11, 2010

மொக்கைவர்மன் பிறந்த கதை


 

இந்த அத்தியாயத்தில் மொக்கைவர்ம மகாராஜாவின் பிறப்பு, பெயர் காரணம் இன்னும் சில இத்யாதிகள் குறித்துப் பார்ப்போம்.

ஆந்தைகள் பிளிறும் நேரம்தான். ஆனால் பல்லவ அரசின் சமஸ்தான எல்லைக்குள் இருக்கும் ஆந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும் அவை எழுப்பும் குறட்டை சத்தம் பிளிறுவதை விட கர்ணகொடூரமாக இருக்குமென்பதால் அந்த ஒலியின் மூலம் நாம் நள்ளிரவு என்பதை அறியலாம். இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா வாயிலில் அங்கிங்கும் அலைந்து கொண்டிருந்தார். 28ஆம் நக்கல் வர்மனாகத்தான் இவர் பெயர் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவரது அண்ணன் 27ஆம் நையாண்டி வர்மன் சிறிது காலம் அரசாண்டு விட்டு ஒரு போருக்கு பயந்து ஓடியதால் இவர் பதவியேற்றார். பாதியில் பதவியேற்றதால் இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா ஆகிவிட்டார். வாயிலுக்கு வருவோம். அது அலர்ஜி என்பவர்கள் காட்டனுக்கோ, சில்க்குக்கோ வரலாம்.ஆனால் நான் வாயிலுக்குத்தான் செல்கிறேன்.

மன்னரின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன. பல்லவ சமஸ்தானத்தை அவ்வபோது எதிரிகள் சூழ்ந்து கொண்டு போருக்கு அழைக்கும்போது கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிடுவது மன்னரின் வழக்கம்.அப்படியாகத்தான் மன்னரின் முகத்திலும் ரேகைகள் வந்திருக்ககூடுமென சீனாவில் இருந்து வந்த ஷியோமியோகியோ என்ற பிரயாணி தனது குறிப்பில் சொல்லியிருக்கிறார். வரலாறு என்பதால் தேவைப்படும் இடங்களில் ஆதாரத்தையும் காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி குறிப்பிடும் ஆதாரத்தை நம்பாமல் அந்த ஆதாரத்திற்கு ஆதாரத்தை நீங்கள் கேட்கக்கூடும்.அப்படி கேட்பவர்களுக்கு ஆவென அலறும்படி தாரம் அமையுமென சாபம் விடுகிறேன். விஷயத்திற்கு வருவோம். 72வது வயதில் மகாராணி(அவருக்கு 54 வயது) கர்ப்பமுற்றால் எந்த மன்னருக்குத்தான் பயம் தோன்றாது? இருந்தாலும் நாற்பத்தியெட்டு ஏக்கருக்கு பரந்த விரிந்த சம்ஸ்தானத்தை ஆள ஒரு ஆள் தேவையென்பதால் மன்னர் அதை லூஸில் விட்டுவிட்டார். பிறக்க போவதே ஒரு லூஸ் என்பது முன்னரே மன்னருக்கு தெரிந்ததா என்பது தெரியவில்லை.  ஆனால் புதிதாக பணியில் சேர்ந்த ஜோசிய அப்ரண்ட்டிஸின் மூளையின் ஒரு மூலையில் மும்தாஜ் மூடிக் கொண்டு ஆடியது.

மாமன்னா! பிறக்கப் போகும் குழந்தை தங்களைப் போல் இல்லாமல் அரசியைப் போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று சமயோஜித புத்தியே இல்லாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

ஹாஹாஹாவென சிரித்த மன்னரின் மகா சிரிப்பில் அரண்மனை ஆந்தைகளே சற்று பயந்துதான் போனது. எழுபத்தி இரண்டு வயதில் கூட இப்படி சிரிக்கும் மன்னன் இன்னும் பத்து வருடம் கழித்தும் இளவரசனோ இளவரசியோ பெற்றெடுக்கக்கூடுமென நினைத்தார் அப்ரண்ட்டீஸ். மன்னரை விட மகாராணி வீரமானவர். இது தெரியாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

மன்னர் மகாராணியை மணந்த கதை சுவையானது. ஏற்கனவே சொன்னது போல் சரித்திரத் தொடரில் இது ஒரு இம்சை.(உன் தொடரே இம்சை என்பவர்களுக்கு வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை). எல்லாவாற்றிற்கும் டொய்ங்க் என சுத்தி ஒரு ஒளிப்பின்னாடியையோ(அதாங்க ஃப்ளாஷ்பேக்) அல்லது ஆதாரத்தையோ காட்ட வேண்டும். இப்போது டொய்ங்ங். பல்லவ எல்லை மட்டுமல்ல, எட்டுத்திக்கும் இருந்து வந்த பல வீரர்களால் அடக்க முடியாத காளை ஒன்று மகாராணியாரின் தந்தையிடம் இருந்தது. அதை அடக்கித்தான் மகாராணியாரை மணந்தார் மன்னன். அந்தக் காளையை அடக்கும் வீரனால் தான் இந்த அடங்காப் பிடறியை அடக்க முடியும் என்று அவர் தந்தை நினைத்தது மன்னருக்குத் தெரியாமல் போனது அவரது துரதிர்ஷடவசம்தான். அதனால் பிறக்கப் போகும் குழந்தை அவரைப் போல் இருக்கக்கூடாது என்பதற்காக அதற்கு தேவையான பூஜைகளை உடனே அப்ரண்டீசை செய்ய சொன்னார் மன்னர். கடந்த காலம் முடிந்து நிகழ்காலம் வந்த போது டொய்ங்க் என சக்கரத்தை ரிவர்ஸில் சுற்ற மறந்துவிட்டேன். இது போன்ற லாஜிக்கெல்லாம் விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள் போல மறந்துவிடுவது நலம். அதைவிட்டு ஈரானிய படத்தில் என்று துவங்கும் வாசகர்கள் மதனின் வந்தார்கள் வென்றார்களை படிக்கலாம். அல்லது படிக்காமலே ஒரு விமர்சனம் எழுதலாம். விஜய் பட ரசிகர்கள் என் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள். நாம் இப்போது அரசி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழையப் போகிறோம்.

உள்ளே வலியால் துடித்துக் கொண்டிருந்தார் அரசி. அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்த மன்னன் வைத்தியம் பார்க்கும் பாட்டியிடம் விசாரித்தார். இரட்டைப் பிள்ளை போல் தெரிகிறது. இந்த வயதிலும் எப்படி அரசே என்று கேட்டார் பாட்டி. வழக்கம் போல் மன்னர் சிரித்துவிட்டு பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். மன்னரின் சிரிப்புக் கேட்ட உள்ளே ஓடிவந்த தலைமை மந்திரி நிலவரம் புரியாமல் வழக்கம் போல் ”அவர் எனர்ஜி மன்னா” என்று சொன்னார்

இதைக்  கேட்டு உள்ளே இருந்த அனைத்து வைத்தியரும் தாதியரும் சிரித்த சிரிப்பு விண்ணையே பிளந்திருக்க வேண்டும். மேற்புறம் கூரை இருந்ததால் அப்படியெதுவும் ஆகவில்லை. மந்திரி சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கிறது என வலி மறந்து சிரித்த அரசியும் சிறிது நேரத்தில் அலற, அறையில் இருந்த அனைவரும் மெளனமானார்கள். ஆனால் ஒரே ஒரு சிரிப்பு சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அப்போதுதான் அரசிக்கும் பிரசவம் ஆனது. குழந்தை அழுது கொண்டே பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தக் குழந்தை  சிரித்துக் கொண்டேயிருந்தது. ரோஜாப்பூ நீரில் குளித்து முடித்த இளவரசர் மன்னரின் கைக்கு வந்தார். பிறக்கும் போதே சிரித்த உனக்கு மொக்கை வர்மன் என்ற பெயரே பொருத்தமானது. இது போன்று யாரும் இதுவரை பிறக்காததால் ”முதலாம் மொக்கை வர்ம பல்லவன்” என அழைக்கப்படுவாய் என்றார் மன்னர். குழந்தையை மேலே தூக்கிப் போட்டு விளையாடிய மன்னர் கூடவே தனது ட்ரேட்மார்க் சிரிப்பையும் உதிர்க்க, டென்ஷனான இளவரசர் மன்னரின் முகத்தில் நீர்ப்பாசனம் செய்தார். இனிப்புக்கு பதில் தவறுதலாக உப்புப் போட்டு அரசி போடும் கொட்டைவடிநீர் என நினைத்து சப்புக் கொட்டிய மன்னனின் முகத்தில் காலால் ஒரு டிஷ்யும் விட்ட நம் கதாவேந்தர்  தனக்கு பெரிய தலைவலியாக வருவார் என்பதை மன்னர் அப்போது அறியவில்லை.

-மொக்குவோம்

39 கருத்துக்குத்து:

பிள்ளையாண்டான் on January 12, 2010 at 12:21 AM said...

ஆரம்பமே கொலைவெறியா இருக்கு! யாருப்பா அங்க, கார்க்கி பேருல ஒரு கொலைவெறிப்படை ஆரம்பிங்கப்பா!

வெற்றி on January 12, 2010 at 12:24 AM said...

சகா பயங்கர சிரிப்பு!
எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க..

வெற்றி on January 12, 2010 at 12:27 AM said...

//விஜய் பட ரசிகர்கள் என் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள்.//

பிடித்து கொண்டேன் :))

தேவகோட்டை ஹக்கீம் on January 12, 2010 at 12:28 AM said...

நல்ல காமெடிங்க!தொடர்ந்து எழுதுங்க.

வெற்றி on January 12, 2010 at 12:29 AM said...

//வழக்கம் போல் ”அவர் எனர்ஜி மன்னா” என்று சொன்னார்//

ரசித்தேன்..

வெற்றி on January 12, 2010 at 12:33 AM said...

சகா இந்த தொடர் பதிவ இதோட நிறுத்திக்கோங்க..இத சினிமாவா எடுத்தா படம் பயங்கர ஹிட்..மேற்கொண்டு திரைக்கதையை வெளியே விடாதீர்கள்..சீரியஸாகதான் சொல்கிறேன்..

Chitra on January 12, 2010 at 1:18 AM said...

அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்த மன்னன் வைத்தியம் பார்க்கும் பாட்டியிடம் விசாரித்தார். இரட்டைப் பிள்ளை போல் தெரிகிறது. இந்த வயதிலும் எப்படி அரசே என்று கேட்டார் பாட்டி. வழக்கம் போல் மன்னர் சிரித்துவிட்டு பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். மன்னரின் சிரிப்புக் கேட்ட உள்ளே ஓடிவந்த தலைமை மந்திரி நிலவரம் புரியாமல் வழக்கம் போல் ”அவர் எனர்ஜி மன்னா” என்று சொன்னார் ............... உங்க நகைச்சுவை energy பொங்கி வழியுது. எங்கே டைரக்டர் சங்கர்? எங்கே வடிவேலு? இம்சை அரசன் 24 வது புலிகேசிக்கு கதை ரெடி.

சுசி on January 12, 2010 at 3:01 AM said...

கார்க்கி.. எப்பூடீப்பா??

காப்பி பேஸ்ட் செஞ்சு இது ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா ஏறக்குறைய முழு பதிவும் வந்திடும் போல இருக்கே..

மொக்குங்க மொக்குங்க.. நாங்க சிரிச்சுக்கிட்டே கூட வருவோம் :)))

பலா பட்டறை on January 12, 2010 at 5:22 AM said...

::))))

நாஞ்சில் மைந்தன் on January 12, 2010 at 8:15 AM said...

// வழக்கம் போல் மன்னர் சிரித்துவிட்டு பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். மன்னரின் சிரிப்புக் கேட்ட உள்ளே ஓடிவந்த தலைமை மந்திரி நிலவரம் புரியாமல் வழக்கம் போல் ”அவர் எனர்ஜி மன்னா” என்று சொன்னார்...

ரொம்ப பழைய (1990s) மொக்கை

தராசு on January 12, 2010 at 9:31 AM said...

//(உன் தொடரே இம்சை என்பவர்களுக்கு வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை)//

ஹலோ இதுக்கு மேல கச்சேரிய வேற நாங்க கேக்கணுமா, அய்யோ, அய்யோ

♠ ராஜு ♠ on January 12, 2010 at 9:35 AM said...

ஃப்ளோ அருமையா இருக்குண்ணா..!

* மூளையின் ஒரு மூலையில் மும்தாஜ் மூடிக்கொண்டு ஆடியது..

* வாயில்-காட்டன்-சில்க்.

* ஈரானிய படத்தில் என்று துவங்கும் வாசகர்கள் மதனின் வந்தார்கள் வென்றார்களை படிக்கலாம்.

* விண்ணையே பிளந்திருக்க வேண்டும். மேற்புறம் கூரை இருந்ததால் அப்படியெதுவும் ஆகவில்லை.

அடிக்கும் அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன.
அசத்தல் ரகம்.

taaru on January 12, 2010 at 9:36 AM said...

மீட்டிங்க்ல டேமேஜர்; இத படிச்சு சிரிச்சதுக்கு என்னைய அவையை விட்டு தொரத்தி விட்டான் [ர்].. மெய்யாலுமே இப்போ புலிகேசி ஞாபகம் வரலண்ணே..டாரு மாறு..

Anbu on January 12, 2010 at 9:54 AM said...

//விஜய் பட ரசிகர்கள் என் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள்.//

:-)))

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா..

பரிசல்காரன் on January 12, 2010 at 9:55 AM said...

வெளிப்பின்னாடியையோ(அதாங்க ஃப்ளாஷ்பேக்)//

அது ஒளிப்பின்னாடியா வெளிப்பின்னாடியா சகா?

சகா..

இந்தத் தொடரை நீ எழுதறது எனக்கு உடன்பாடில்லை.

உனக்கொரு மெய்ல் அனுப்பீருக்கேன் படி.

நர்சிம் on January 12, 2010 at 10:29 AM said...

ம்ம்ம்..நடக்கட்டும்.

முகிலன் on January 12, 2010 at 10:45 AM said...

யாருங்க அது ப்ரொஃபைல்ல, தெலுங்குப் பட ஹீரோ மாதிரி..


ஒரு நண்பனா (இதுவரைக்கும் நேர்ல பாக்கலை பழகலைன்னாலும்) ஒரு சஜ்ஜஷன். இது என்னவோ 23ம் புலிகேசி உல்டா மாதிரி இருக்கு.. கொஞ்சம் மாத்தி யோசிங்க சகா..

ஸ்ரீமதி on January 12, 2010 at 11:10 AM said...

தொடர்க :))

டம்பி மேவீ on January 12, 2010 at 11:24 AM said...

சாண்டில்யன் மாதிரிஎ எழுதுறிங்க .......

(நான் பதிவை படிக்கல )

டம்பி மேவீ on January 12, 2010 at 11:26 AM said...

கலியுக வள்ளல் கம்பர்ப்ரியன் வாழ்க

டம்பி மேவீ on January 12, 2010 at 11:28 AM said...

புதினத்தில் புதிய இலக்கியத்தை படைப்போம் ....தொடருங்கள் ......

இலக்கண வாதிகளை கண்டு அஞ்ச வேண்டாம்

rajesh on January 12, 2010 at 11:38 AM said...

saga. naan thaan rajesh.sema comedy. vizunthu vizunthu sirichen.enga officela oru ponnukitta surya fm ezhu link thanthen. ava padichittu ellaa friendsum kaamichanglaam. today everyone is talking about your post mokkai dharbar. nijamathaan sagaa. morning naan enter aanathum everyone were asking your mail id.ippo mattum enga office vanthinga avlothaan. enga MD ungala kolaiye panniduvaaru. ippoo eloorum seven hill posts padikiraanga. plz come to our office once. its in OMR. sathyma super post. adikkadi ezuthunga. inga oru fan clube start pannidarom

டம்பி மேவீ on January 12, 2010 at 11:47 AM said...

narsim enna sonnar

புன்னகை on January 12, 2010 at 11:50 AM said...

//-மொக்குவோம்//
செத்தோமா!!! :-)

அன்புடன் அருணா on January 12, 2010 at 11:51 AM said...

ரைட்டு!

கார்க்கி on January 12, 2010 at 12:01 PM said...

பிள்ளையாண்டான் முதல் கருத்திற்கு நன்றி

@வெற்றி, வெற்றி வெற்றி

நன்றி ஹக்கீம்

நன்றி சித்ரா :))

நன்றி சுசி..

நன்றி பலா.. நலமா?

@நாஞ்சில், ஏங்க? எத்தனை ஜோக் இருக்கு. அதெல்லாம் விட்டு இந்த ஒன்னுத்த சொன்னா எப்படி? :)))

தராசண்னே கேட்டுத்தான் ஆகனும்

ராஜு, டேங்க்ஸுப்பா.. கொஞ்சம் பயந்துட்டே இருந்தேன் :))

டாரு, பாஸாயிட்டேனா? டேங்க்ஸ்

நன்றி அன்பு.

பரிசல்,நானும் மெயிலிலே சொல்றேன்

நன்றி நர்சிம்

முகிலன், நண்பரே!! நன்றி. இன்னும் சில அத்தியாயம் எழுதறேன் படிச்சிட்டு சொல்லுங்க. நிச்சயம் புலிகேசி போலவே இருக்காது. அந்த கேரக்டரின் போக்கை பார்த்துட்டு சொல்லுங்க

@ஸ்ரீமதி, அனுமதிக்கு நன்றி அக்கா :)

@மேவி, ஃபோன்ல வச்சுக்கிறேன்

@ராஜேஷ், சகாஆஆஆஆஆ .. என்ன சொல்றதுன்னே தெரியல.. ஃபோன் நம்பர மெயில் அனுப்புங்க

புன்னகை, சேர்ந்து மொக்குவோம் :))

டீச்சர், அவ்ளோதானா? வேற் எதுவும் சொல்ல மாட்டிங்களா?

புன்னகை on January 12, 2010 at 12:12 PM said...

DP மாத்திடுமா! ;-)

டம்பி மேவீ on January 12, 2010 at 12:18 PM said...

"ஃபோன்ல வச்சுக்கிறேன்"

raittu

விக்னேஷ்வரி on January 12, 2010 at 12:37 PM said...

வரலாறு என்பதால் தேவைப்படும் இடங்களில் ஆதாரத்தையும் காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி குறிப்பிடும் ஆதாரத்தை நம்பாமல் அந்த ஆதாரத்திற்கு ஆதாரத்தை நீங்கள் கேட்கக்கூடும்.அப்படி கேட்பவர்களுக்கு ஆவென அலறும்படி தாரம் அமையுமென சாபம் விடுகிறேன். //
ஹாஹாஹா...

உன் தொடரே இம்சை என்பவர்களுக்கு வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை //
நாங்க சொல்ல நினைச்சதையும் நீங்களே சொல்லிடுறீங்க. :)

லாஜிக்கெல்லாம் விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள் போல மறந்துவிடுவது நலம். //
நல்ல அனுபவம் தான்.

நாம் இப்போது அரசி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழையப் போகிறோம் //
அது அநாகரீகம். மன்னரே வெளியில் நிற்கும் போது நீங்கள் எப்படி அறைக்குள் நுழையலாம்...

நிஜமாவே கடைசில கொஞ்சம் மொக்கையா தான் இருக்கு. உங்க கதை படிச்சதும் தூக்கம் வருது. குட் நைட்.

Jaya on January 12, 2010 at 3:32 PM said...

:))) தர்பார் தொடர்ந்து நடக்கட்டும்!!

RADAAN on January 12, 2010 at 6:03 PM said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

Karthik on January 12, 2010 at 7:12 PM said...

LOL..:)))

SK on January 12, 2010 at 9:30 PM said...

பரிசலை நான் வழி மொழிகிறேன் :(

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) on January 12, 2010 at 10:10 PM said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

தமிழ்ப்பறவை on January 12, 2010 at 10:55 PM said...

சகா... நடை நன்றாகவே இருக்கிறது...
தாராளமாகத் தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

கார்க்கி on January 13, 2010 at 10:06 AM said...

அனைவருக்கும் நன்றி.

விக்கி, ஆவ்வ்வ்வ்

எஸ்.கே, அவர் மெயிலில் என்ன சொன்னாருன்னு தெரியுமா?

நன்றி தமிழ்ப்பறவை.

SK on January 13, 2010 at 7:27 PM said...

theriyaadhu sagaa..

SK on January 13, 2010 at 7:29 PM said...

mudinthaal meyilil pesuvOm.

lekha on January 14, 2010 at 5:59 AM said...

This really good karki..had a hearty laugh :-))

 

all rights reserved to www.karkibava.com