Jan 27, 2010

மன்னரின் புது சட்டம்


 

முந்தைய அத்தியாயங்கள் படிக்க

டமடமடமடம.

நம் தண்டோரா மக்களுக்கு சொல்ல வந்த விஷயத்தை சொல்லும் முன் நாம் தண்டோராவைப் பற்றி பார்த்துவிடுவோம். எப்போதும் தகவலுக்கு முன் தனது முத்திரைப் பாடல் ஒன்றைப் பாடிவிட்டு செய்தி சொல்லத் தொடங்குவது தண்டோராவுக்குப் பிடித்தமான செயல். பிற்காலத்தில் ஏ.ஆர்.ரகுமானின் முதல் இந்திப்படமான ரங்கீலாவில் வந்த யாய்ரே பாடலின் மெட்டு  தண்டோராவின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

தண்டோரா.. தண்டோரா தகவல் சொல்ல வந்தாரா..

தண்டோரா தண்டோரா. தாளத்தோடு சொன்னாரா

என்று பாடி முடிக்க மக்கள் கை தட்டி இன்னொரு தபா என்று கேட்பது கண்டு புளங்காங்கிதமடைந்த தண்டோரா சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கிக் கொண்டு அந்த நேரத்தில் பாடுவோமென பாடினார். மக்கள் அனைவரும் தத்தமது மனைவிகள் பதுக்கி வைத்திருக்கும் தேவைக்கதிகமான தங்கத்தையும், ஆபரணங்களையும் உடனடியாக அரசிடம் சேர்க்க வேண்டுமென்று சொல்ல வந்த தண்டோரா, மக்கள் அனைவரும் தேவைக்கதிகமாக வைத்திருக்கும் மனைவிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உளறிக் கொண்டே பாடத் தொடங்கினார்

தண்டோரா தண்டோரா தப்புகளின்றி சொன்னாரா.

புது மன்னரை நன்கு அறிந்த குடிமக்கள் எதற்கு வம்பு என்று தத்தமது லார்ஜ் வீட்டைத் தவிர கட்டிங், ஸ்மால்,மீடியம் என  அனைவரையும் அந்தப்புரத்தில் சேர்த்தனர்.

மறுநாள் தர்பார் கூடியது

அழுகுணி: மன்னா!! அளவுக்கு அதிகமாக இருப்பு வைத்திருப்பபவரிடம் இருந்து அதைக் கைப்பற்றி அரசுக்கு சொந்தமாக்க நீங்களிட்ட உத்தரவு பல சச்சரவுகளை உண்டாக்கியிருக்கிறது.

மன்னர் : அருமை. கஜானா நிரம்பிவிட்டதா? என்னவாம் அந்த கொழுத்த பன்றிகளுக்கு? வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள்?

அழுகுணி: பிரச்சினை அதுவல்ல மன்னா.கஜானா நிரம்பவில்லை. நிரம்பியது நம் அந்தப்புரம்தான்.

மன்னர்: என்ன உளறுகிறீர்கள் அமைச்சரே

அழுகுணி: ஆம் மன்னா. பொருள் இல்லாவிடினும் நம் குடிமக்கள் ஆளுக்கு குறைந்தது இரண்டு வைப்பாட்டி வைத்திருக்கிறார்கள். அதுவும் தேவைக்கதிகம்தானே என்று ஒப்படைத்துவிட்டார்கள்.

மன்னர்: அழுகுணி. என்ன சொல்கிறாய்? நம் மக்கள் ”நற்குடி” இல்லையா?

அழுகுணி: ஆம் மன்னா. வெகு சிலரே ஒழுக்கசீலராக இருக்கிறார்கள். என்னைப் போல.

(மற்ற மந்திரிகளை முறைக்கிறார். )

முந்திரிக்கொட்டை முத்தையாவை இனி மு.மு என்போம்.

மு.மு: அவசரம் வேண்டாம் வேந்தே. அழுகுணி மனைவியும் அந்தப்புரத்தில்தான் இருக்கிறார்.

மன்னர்: மனைவியை எதற்கு கைப்பற்றினீர்கள்? தேவைக்கதிகமாக இருந்தால்தானே கைப்பற்ற வேண்டும்?

மு.மு: இவனுக்கெல்லாம். மன்னிக்க அரசே.. இவருக்கெல்லாம் ஒன்றே அதிகம் என்று அவராகத்தான் அந்தப்புரத்திற்கு வந்துவிட்டார் அரசே.

அழுகுணி அழுது கொண்டே அந்தப்புரத்திற்கு ஓட, ஒற்றன் ஒருவன் ஓலையோடு ஓடி வருகிறான். அண்டை நாட்டு மன்னன் மொக்கைவர்மனின் சாதூர்ய திட்டங்கள் கேட்டு ஆச்சரியப்பட்டு அனுப்பிய பாராட்டு ஓலை அது.

படித்துக் காட்டுகிறான்.

“பார்” போற்றும் மொக்கைவர்ம பல்லவனுக்கு,

சித்திரையில் மட்டும்  தான் வெக்கை வரும்-ஆனால்

சிந்திக்கும்போதெல்லாம் மொக்கை வருவது உமக்கு மட்டும்தான்.

போட்டியிட்டு வரும் அரசர்களை மட்டுமல்ல

பாட்டிகளை கூட புறமுதுகிட்டு ஓட வைத்த வீரன் நீ”

அப்படியாக நீண்டது அந்த ஓலை. எட்டு ஓலைகள் இருக்கிறதே என்று கட்டுக்கடங்காத வெறியில் இருந்த ஒற்றன் அதைக் கவிதையாகப் படிக்காமல் கையேந்திபவனில் ரெண்டு இட்லி ஒரு வடை என சொல்வது போல் படித்துச் சென்றதை மன்னனைத் தவிர யாரும் ரசிக்க முடியாமல்  லேசாக கண்மூடிய நேரம் மன்னருக்கு  இதெல்லாம் கனவா என சந்தேகம் எழ தன் கையென எண்ணி அருகில் சாமரம் வீசிக் கொண்டிருந்த கனிமரத்தைக் கிள்ளிவிட, வலி தாங்காமல் அந்த மரம் மன்னர் என்று கூடப் பார்க்காமல் “ சனியனே.. அதான் அந்தப்புரம் ரொம்பிடுச்சு இல்ல. அங்க போய் வீரத்தைக் காட்டாமல் என்னை புண்ணாக்கிறயே புண்ணாக்கு” என்று வசைபாடியதை கண்ணயர்ந்தவர்களோ இன்னமும் தோசை,பொங்கல் என ஆர்டர் செய்து கொண்டிருந்த ஒற்றனோ கவனித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அரசியிடம் திட்டு வாங்கும்போதெல்லாம் தன் முன்னோர்கள் செய்யும் அதே நற்காரியமாக மன்னர் ஹாஹாவென சிரிக்க, அலாரம் அடித்தது போல் அவை முழுவதும் முழித்துக் கொள்ள முந்திரிக்கொட்டை மட்டும் வாயில் ஒழுகிய எச்சிலை விழுங்கியபடி மன்னா என்று எழுந்து நிற்க, ஆனியன் ரவாவில் ஆர்டரை நிறுத்தினான் ஒற்றன்.

ஒற்றன்:  மன்னா.. தங்களின் புகழ் உலக அளவில் பிரபலமாகிவிட்டது. உலகின் எல்லா மூலைகளிலும் தங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மன்னர்: உண்மையாகவா?

மு.மு: வேந்தே. உலகம்தான் உருண்டையாக இருக்கிறதே. அதற்கேது மூலை?தங்களுக்கு யாரும் ரசிகர்கள் கிடையாது என்பதை அருமையாக பகடி செய்கிறான் இந்த ஒற்றன்

மன்னர்: முந்திரிக்கொட்டை மந்திரி. நம் கதை நடப்பது கி.பி1200.. அப்போ எங்கே கலிலியோ இருந்தார்?அவர் 1564ல் தானே பிறந்தார்? வாசகர்கள் லாஜிக் கேட்க மாட்டார்களா?

மு.மு: இல்லை மன்னா.. நல்ல படங்களுக்கே இப்போதெல்லாம்  லாஜிக் பார்க்க வேண்டாமென அமைச்சர் அனானஸ் சொல்லியிருக்கிறார். நமது மொக்கை தர்பார்தானே. கண்டு கொள்ள மாடடர்கள்

மன்னர்: அனானஸே சொல்லியிருக்கிறாரா! அப்படியென்றால் சரி.

இந்த இடத்தில் அனானஸைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆனால் அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

மொக்குவோம்.

32 கருத்துக்குத்து:

Jaya on January 27, 2010 at 12:28 AM said...

முந்தைய அத்தியாயங்கள் படிக்க - Andha Link click senchalum innaiku post sencha part thaan varuthu

செந்தழல் ரவி on January 27, 2010 at 1:43 AM said...

கலக்கலா இருக்கு...

செந்தழல் ரவி on January 27, 2010 at 1:43 AM said...

499

முகிலன் on January 27, 2010 at 1:59 AM said...

இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்..

வெற்றி on January 27, 2010 at 2:17 AM said...

சகா எப்போ டைரக்டர் ஆக போறீங்க ? :-)

இந்த பதிவுக்கு copyright போட்டு வச்சுக்கோங்க..இப்போலாம் பதிவை திருடி படமா எடுக்குறாங்கலாம்..

சுசி on January 27, 2010 at 2:18 AM said...

படிச்சு முடிச்சதும் //மக்கள் கை தட்டி இன்னொரு தபா என்று// மறுபடி படிக்கப் போறாங்க கார்க்கி.

அவ்ளோ நல்லா இருக்குப்பா.

வெற்றி on January 27, 2010 at 2:20 AM said...

இதுல தண்டோரா அண்ணனுக்கு ஏதும் உள்குத்து இருக்கா சகா :-)

சுசி on January 27, 2010 at 2:23 AM said...

//தங்களின் புகழ் உலக அளவில் பிரபலமாகிவிட்டது. உலகின் எல்லா மூலைகளிலும் தங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.//

இங்க ஒற்றன் உங்களப் பத்தி சொல்றதாத்தான் எழுதி இருக்கீங்களா கார்க்கி??

Chitra on January 27, 2010 at 6:14 AM said...

மக்கள் அனைவரும் தத்தமது மனைவிகள் பதுக்கி வைத்திருக்கும் தேவைக்கதிகமான தங்கத்தையும், ஆபரணங்களையும் உடனடியாக அரசிடம் சேர்க்க வேண்டுமென்று சொல்ல வந்த தண்டோரா, மக்கள் அனைவரும் தேவைக்கதிகமாக வைத்திருக்கும் மனைவிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உளறிக் கொண்டே பாடத் தொடங்கினார் .............

சிரிச்சு முடியலை. நிச்சயமா வெற்றி சார் சொல்லியபடி, copyright எடுத்து வச்சுக்கோங்க.

Rajalakshmi Pakkirisamy on January 27, 2010 at 8:08 AM said...

:)

தராசு on January 27, 2010 at 8:42 AM said...

சீக்கிரம் 500 அடிக்க வாழ்த்துக்கள்.

ஆரம்பத்துல நிறைய தண்டோரா, தண்டோரானு வருதே அது இன்ன தலைவா......

ஆர்.கே.சதீஷ்குமார் on January 27, 2010 at 8:45 AM said...

கிழி..கிழி..தலைவா

taaru on January 27, 2010 at 8:47 AM said...

அஹா அஹா அஹா அஹா அஹா..["எமதர்மன்" வடிவேலு மாதிரி சிரிச்சிகவும்]..
முடியல...முடியல..முடியல..மொக்கையோ மொக்கை.. வந்து விட்டது கார்க்கி பன்ச்செஸ் [punches] இனி ஒரு பய தப்பிக்க முடியாது... அனானிகள் அன்போடு வரவேற்கப்படுகிறார்கள். சரி தானேதல..

பலா பட்டறை on January 27, 2010 at 10:39 AM said...

உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்..

டம்பி மேவீ on January 27, 2010 at 10:46 AM said...

:))))))))))))))

கார்க்கி on January 27, 2010 at 11:20 AM said...

@ஜெயா,
மொக்கை தர்பாரில் வந்த எல்லா அத்தியாயங்களும் இருக்கும். தலைகீழ் வரிசையில் இருக்கிறது

@ரவி,
நன்றிண்ணா.மறுபடியும் 498 ஆயிடுச்சு. இரண்டாவது முறை இது :(

@முகிலன்,
பாஸ்,உங்க டவுட் க்ளியர் ஆகுதா? கொஞ்சம் வித்தியாசம் இருக்கா?

@வெற்றி,
டேங்க்ஸ் தம்பி. :))). தண்டோராவுக்கு இதுக்கும் சம்பந்தமே இல்ல

@சுசி,
ரொம்ப நன்றிங்க. அப்படி எல்லாம் செய்வேனா?

@சித்ரா,
நன்றி :))

@தராசு,
அது தண்டோராதான் தலைவரே :))

சிரிப்புக்கு நன்றி ராஜி

@சதீஷ்,
ரைட்டு சகா. :)

@டாரு,
நம்ம கடைல அனானிகளுக்கு இடம் கிடையாதே :))

@பலா,
அபப்டின்னா படம் அவுட்டா?

@மேவி,
நீ பேசாம சிரிப்பான் போட்டதே வெற்றிதான் எனக்கு :))

Raja Subramaniam on January 27, 2010 at 11:57 AM said...

//சித்திரையில் மட்டும் தான் வெக்கை வரும்-ஆனால்
சிந்திக்கும்போதெல்லாம் மொக்கை வருவது உமக்கு மட்டும்தான்.//

சிந்திக்கும் போதெல்லாம் உமக்கும் மொக்கை தான் வரும் போலும்

அருமை சகா

நர்சிம் on January 27, 2010 at 1:00 PM said...

சக்கைப் போடு சகா

Busy on January 27, 2010 at 2:27 PM said...

HAhA...............

Kalakal Saka................

பிரியமுடன்...வசந்த் on January 27, 2010 at 2:28 PM said...

டார் டார் சகா...!

கலக்கல்...!

கார்க்கி on January 27, 2010 at 3:16 PM said...

ராஜா,
மொக்கைன்னு சொல்லிட்டிங்க. பரவாயில்ல :)

நன்றி சகா

நன்றி பிசி

நன்றி வசந்த். அடிக்கிற அடியில்.. :))

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on January 27, 2010 at 4:40 PM said...

:-))) சகா..

நாய்க்குட்டி மனசு on January 27, 2010 at 5:16 PM said...

கலக்குங்க

Tamilmoviecenter on January 27, 2010 at 7:07 PM said...

இல்லை மன்னா.. நல்ல படங்களுக்கே இப்போதெல்லாம் லாஜிக் பார்க்க வேண்டாமென அமைச்சர் அனானஸ் சொல்லியிருக்கிறார். நமது மொக்கை தர்பார்தானே. கண்டு கொள்ள மாடடர்கள்

இதில் எதுவும் உள்குத்து இல்லையே

அன்புடன் அருணா on January 27, 2010 at 9:54 PM said...

:))))))))))))))))))))))))

தமிழ்ப்பறவை on January 27, 2010 at 10:34 PM said...

கோயிங் ஃபைன்... :-)

Sundar சுந்தர் on January 28, 2010 at 8:12 AM said...

அருமை!

கார்க்கி on January 28, 2010 at 8:19 AM said...

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி நாய்க்குட்டி

தமிழ்,அதெல்லாம் எதுவும் இல்லிங்கண்ணா

நன்றி டீச்சர்

அப்பாடா.. நன்றி பறவை

நன்றி சுந்தர்

Sundar சுந்தர் on January 28, 2010 at 8:37 AM said...

இப்ப தான் முந்தைய பாகங்களை படித்தேன். ரொம்ப நல்லா வருது. பிளாஷ் பேக் கொஞ்சம் சுத்தல்...மற்ற படி நல்லா கேரக்டர்ஸ் உருவாக்கி இருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்கள்.. கொஞ்சம் எடிட் செய்தால் பத்திரிக்கைகளில் அல்லது புத்தகமாக வெளியிடலாம்னு நினைக்கிறேன்.

விக்னேஷ்வரி on January 28, 2010 at 11:32 AM said...

சூப்பரு.

ஆதிமூலகிருஷ்ணன் on January 28, 2010 at 8:40 PM said...

நன்றாக வந்துகொண்டிருக்கிறது. கவனமாக கொண்டு செல்லவும். சுவாரசியம்.

பரிசல்காரன் on January 29, 2010 at 12:55 PM said...

500க்கு வாழ்த்துகள் சகா. தொடர் மிகவும் நல்லவிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது... தொடர்..!

 

all rights reserved to www.karkibava.com