Jan 24, 2010

கார்க்கியின் காக்டெய்ல்


 

 

   குட்டி பார்த்தேன். தனுஷுக்கு நன்றாக நடிக்க வருகிறது. ஆனால் good looking என்று சொல்ல முடியவில்லை. இளமை கொப்பளித்தாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே ஒரு ஃபீல். ஜெயம்ராஜாவும், ரவியும் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றாலும் பல காட்சிகளில் தனுஷ் இடத்தில் ரவியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. குறிப்பாக கடைசியில் தனுஷ் கண்கலங்கும் காட்சி. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இன்னமும் எனக்கு தனுஷும், ஜீவாவும்தான் இருக்கிறார்கள். தெலுங்கில் இருந்த தெளிவான திரைக்கதை இதில் மிஸ்ஸிங். மூவரும் ஊர் மாறிப் போகும் போது பல சீன்கள் மிஸ் ஆவது போல் தெரிகிறது. ஆனாலும் Neat family entertainer. பாடல்கள் மட்டும் சொதப்பல். குட்டி. இன்னும் கொஞ்சம் பெருசாக இருந்திருக்கலாம்.

_____________________________________________________________________________________

   போராட்டம் நடத்துவது சரிதான். ஆனால் எதெதுக்கு நடத்தறாங்க தெரியுமா? கோபாலபுரத்தில் கலைஞரின் வீட்டுக்கு செல்லும் சாலையில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டப்பட்டிருந்தது.

“தமிழக அரசு அவர்களே,

பாட்டில்லுக்கு இரண்டு முதல் நான்கு ரூபாய் வரை அதிகம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு”

தமிழக அரசு என்று அவர்கள் யாரை சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. முதலமைச்சர் தினமும் செல்லும் சாலை. கண்களில் பட்டிருக்குமோ?

_____________________________________________________________________________________

பப்லு பற்றி எழுதுவதில்லையே என சிலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். அவர்களுக்காக.

   விடுமுறைக்காக யு.எஸ் சென்ற இடத்தில் அக்காவின் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள், அங்கே ஒரு அங்கிள்(அவனுக்கு) ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த பப்லு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே “எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல”.

_____________________________________________________________________________________

ஆர்யா 2வில் மகா ஹிட்டடித்தப் பாடல் ரிங்கா ரிங்கா. தேவிஸ்ரீயின் இளமை இசைக்கு ஆந்திரா மட்டுமல்ல தமிழகத்திலும் பலர் ஆடினர். அந்தப் பாடலை தமிழில் விஜய் ஆடினால் நன்றாக இருக்குமென பதிவு போட்டிருந்தார் சங்கமம் இளா. சமீபத்தில் ஒரு இணையத்தளத்தில் பார்த்த செய்தி “சுறாவில் ரிங்க ரிங்கா குத்து”. இது உண்மையென்றால் எனக்கு என்னவோ இளாவின் பதிவைப் பார்த்து யாராவது தந்த ஐடியாவாக இருக்குமோ என்று ஒரு எண்ணம்.எப்படியோ நன்றி இளா. பாட்டைப் பார்க்காதவங்க இங்க பாருங்க. 

டாக்டர் விஜய் என்பதை போதும் போதுமெனும் அளவுக்கு கிண்டல் அடிச்சாச்சு.இனி பத்மஸ்ரீக்கு தயாராகிக்கோங்க. நிஜமாத்தாங்க. இந்த வருடம் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பட்ட லிஸ்ட்டில்(20பேர்) தளபதியின் பெயரும் இருக்கிறதாம். 7 பேர் வரைக்கும் விருது கிடைக்க வாய்ப்பிருப்பதால் அனேகமாக கிடைத்துவிடுமென்கிறது தளபதி வட்டாரம். பாவம் விஜய். இதற்காகவும் பதிவர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளப் போகிறார்

_____________________________________________________________________________________

சில நாட்களுக்கு முன் ”யானை முன்னே. மனியோசைப் பின்னே” என்றொரு பதிவு போட்டிருந்தேன். தலைப்பு ஏன் இப்படின்னு ராஜூ மட்டும்தான் கேட்டிருந்தார். இன்னும் சிலர் மெயிலில் தலைப்புக்கான காரணத்தை கேட்டிருந்தார்கள். யாருமே பதில் சொல்லவில்லை.மேட்டர் என்னவென்றால் முதல் பத்தியில் யார் பெயர் இருக்கிறதோ அவர்தான் அடுத்த பத்திக்கான நாயகன். உதாரணம்.முதல் பத்தியில் விஷயம் வேறொருவரைப் பற்றி என்றாலும் நர்சிம்மின் பெயர் இருக்கும். அடுத்த மேட்டரின் நாயகன் நர்சிம்.நர்சிம் பற்றிய மேட்டரில் கென்னின் பெயர் இருக்கும். மூன்றாம் பத்தி அவரைப் பற்றி.  புதுசா ஏதாவது படமெடுத்தா மட்டும் கண்ண மூடிக்கிட்டு ஆதரிங்க. பதிவுல செஞ்சா கண்டுக்க மாட்டிங்களே :)))))

_____________________________________________________________________________________

குறும்பன் என்றொரு பதிவரின் பின்னூட்டத்தில் நடந்த விஷயம் இது. ஜனனி என்பவர் hahahahaha என்று கமெண்ட்ட, குறும்பன் thanks for the Palindrome comment என்று பதில் போட்டார். பாலிண்ட்ரோம் என்பதை தமிழில் மாலை மாற்று என்று சொல்வார்கள். நான் உடனே “விகடகவி” அய்யா நீர் என்று பின்னூட்டம் இட்டேன். அவர் உடனே “கார்க்கி நீங்க வந்ததுக்கு மேளதாளமே வாசிக்கலாம்” என்று பதிலிட்டார்.

நான் உடனே “தேருவருதே என்றால் வாசிக்கலாம். எனக்கு எதுக்கு பாஸ்” என்றேன்

“மறுபடியும் கார்க்கி.இது என்ன மாயமா” என்று பதில் தந்தார்.

இது என்னடா வம்பா போச்சுன்னு நான் அடுத்த பின்னூட்டம் போட்டேன்

சகா நீங்க சென்னையா?
மாலா போலாமா” ???
மாலா என்பது ஒரு நலல் தீம் ரெஸ்ட்டாரண்ட் என்பதை அறிக ”

அதோடு விட்டுவார்ன்னு பார்த்தா அவர் பதிலுக்கு ”அங்க மோரு தருமோ”ன்னு போட்டார்.

அதுக்கு மேல் என்னிடம் சரக்கு இல்லாததால் தற்காலிக ஃபுல்ஸ்டாப் வச்சிருக்கோம். வேறு ஏதாவது வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.

59 கருத்துக்குத்து:

Tamilmoviecenter on January 24, 2010 at 11:20 PM said...

மாலா போலாமா” ???
மாலா என்பது ஒரு நலல் தீம் ரெஸ்ட்டாரண்ட் என்பதை அறிக ”

அது இருக்கட்டும் bar attached தானே

குறும்ப‌ன் on January 24, 2010 at 11:26 PM said...

ம‌றுப‌டியும் ஆட்ட‌த்தை ஆர‌ம்பிக்க‌ணுமா? வேணாம் ச‌கா, நான் பாவ‌ம், சின்ன‌ "பாப்பா":)

Tamilmoviecenter on January 24, 2010 at 11:27 PM said...

எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல”.
இப்படி சொன்னா உங்களை யூத்துன்னு ஒத்துக்குவோம்மா

Tamilmoviecenter on January 24, 2010 at 11:28 PM said...

குறும்ப‌ன் said...

ம‌றுப‌டியும் ஆட்ட‌த்தை ஆர‌ம்பிக்க‌ணுமா? வேணாம் ச‌கா, நான் பாவ‌ம், சின்ன‌ "பாப்பா":)

lets start music

கார்க்கி on January 24, 2010 at 11:30 PM said...

தமிழ், சென்னையில் ரெஸ்ட்டாரண்ட்டில் பொதுவாக் பார் இருப்பதில்லை.

குறும்பன், அதெல்லாம் முடியாது. சீக்கிரமே திரும்ப வருவேன். இப்போதைக்கு “போப்போ”...

மீண்டும், ஒத்துக்கிட்டுதான் ஆகனும் சகா.. இல்லைன்னா கேபிள் மாதிரி ஆட்கள் நாங்கதான் யூத்ன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க:)))

குறும்ப‌ன் on January 24, 2010 at 11:35 PM said...

"சேச்சே" உங்க‌ளுக்கு துளிகூட‌ இர‌க்க‌மே இல்ல‌ ச‌கா:)

Tamilmoviecenter on January 24, 2010 at 11:36 PM said...

தமிழ், சென்னையில் ரெஸ்ட்டாரண்ட்டில் பொதுவாக் பார் இருப்பதில்லை.

அப்போ நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை

Tamilmoviecenter on January 24, 2010 at 11:39 PM said...

ஒத்துக்கிட்டுதான் ஆகனும் சகா.. இல்லைன்னா கேபிள் மாதிரி ஆட்கள் நாங்கதான் யூத்ன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க:

என்னது கேபிள் யூத்தா !!!!!!!!!!!!!!

லேகா on January 25, 2010 at 12:12 AM said...

//புதுசா ஏதாவது படமெடுத்தா மட்டும் கண்ண மூடிக்கிட்டு ஆதரிங்க. பதிவுல செஞ்சா கண்டுக்க மாட்டிங்களே :)))))//

:-))

gulf-tamilan on January 25, 2010 at 1:08 AM said...

`விகடகவி` ஆட்டம் நல்லாயிருக்கு

Chitra on January 25, 2010 at 2:44 AM said...

விகடகவி ----- cheers for the cocktail!

சுசி on January 25, 2010 at 3:35 AM said...

சட்டுன்னு குட்டிப் பார்த்தேன்னு படிச்சிட்டேன் கார்க்கி :)))
நான் பாக்கலை. பாத்தவங்க // Neat family entertainer// னுதான் சொன்னாங்க.

உங்க கண்ணுல பட்டிடுச்சுல்ல..

அடடடா.. பப்லு அளவுக்கு உங்கள யாருமே வீட்ல புரிஞ்சுக்கல போல இருக்கே..

அப்போ பதிவுலக இளைய தளபதிக்கும் விருது வழங்கணுமே..
விஜய்க்கு விருது கிடைச்சா பாவம் கார்க்கி. //இதற்காகவும் பதிவர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளப் போகிறார்//

நான் தலைப்பு பத்தி கேக்கல. ஏன்னா நான் இன்னும் ஆ.ஒ பாக்கல :)))

//குறும்ப‌ன் said...
"சேச்சே" உங்க‌ளுக்கு துளிகூட‌ இர‌க்க‌மே இல்ல‌ ச‌கா:)//
நாளைக்கு இதுக்கு என்ன சொல்றீங்கன்னு பாத்துடலாம்.. :))

கார்க்கியின் காக்டெயில் நல்லா இருக்கு கார்க்கி. தலைப்பையும் சேர்த்துத்தான் சொன்னேன்.

Anonymous said...

//“எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல”. //

வயிரு வலிக்குது. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க. பாவம் பப்லு. லைன் க்ளியராகட்டும் :)

பா.ராஜாராம் on January 25, 2010 at 4:00 AM said...

பப்லு குசும்பனா?குசும்பன் பப்லுவா?

:-))

பிரியமுடன்...வசந்த் on January 25, 2010 at 4:39 AM said...

ரிங்கா ரிங்கா செம்ம குத்து சாங் சகா தலைவர் ஆடினா கேக்கவா வேணும்...!

பிரியமுடன்...வசந்த் on January 25, 2010 at 4:49 AM said...

குறும்பா...

"வா மாமா வா"..

பிரபாகர் on January 25, 2010 at 6:25 AM said...

சாகா, நானும் நேற்றுதான் குட்டி பார்த்தேன், இரண்டாவது பாதியை இழுத்து பொறுமையை சோதித்திருக்கிறார்கள்...

காக்டெயில் சுறு சுறு சு...

பிரபாகர்.

Cable Sankar on January 25, 2010 at 7:01 AM said...

/மீண்டும், ஒத்துக்கிட்டுதான் ஆகனும் சகா.. இல்லைன்னா கேபிள் மாதிரி ஆட்கள் நாங்கதான் யூத்ன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க:))//

அலோவ்வ். வந்தோமா பதிவெழுதினோமான்னு இல்லாம என்னை பத்தி புகழ்ந்து எழுதி.. அட போங்கப்பா...

அகில உலக் யூத் கேபிள் ரசிகர் மன்றம்

வெற்றி on January 25, 2010 at 7:25 AM said...

//புதுசா ஏதாவது படமெடுத்தா மட்டும் கண்ண மூடிக்கிட்டு ஆதரிங்க. பதிவுல செஞ்சா கண்டுக்க மாட்டிங்களே :)))))//

ஒரு பி.கு போட்டிருந்தால் கசக்கி பிழிஞ்சி யோசிச்சிருப்போமே சகா..:)))

பலா பட்டறை on January 25, 2010 at 7:29 AM said...

காக்கா

காக்டெய்ல்
குடிச்சி
கக்க வாவா

தூத்தூ சீச்சீ
போப்போ
:))

பலா பட்டறை on January 25, 2010 at 7:31 AM said...

Cable Sankar said...
/மீண்டும், ஒத்துக்கிட்டுதான் ஆகனும் சகா.. இல்லைன்னா கேபிள் மாதிரி ஆட்கள் நாங்கதான் யூத்ன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க:))//

என்னது கேபிள் பொறந்துட்டாரா..???

SUREஷ் (பழனியிலிருந்து) on January 25, 2010 at 7:34 AM said...

//உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம்.//
அது சரி..,

முகிலன் on January 25, 2010 at 7:56 AM said...

// போராட்டம் நடத்துவது சரிதான். ஆனால் எதெதுக்கு நடத்தறாங்க தெரியுமா? கோபாலபுரத்தில் கலைஞரின் வீட்டுக்கு செல்லும் சாலையில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டப்பட்டிருந்தது.

“தமிழக அரசு அவர்களே,

பாட்டில்லுக்கு இரண்டு முதல் நான்கு ரூபாய் வரை அதிகம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு”

தமிழக அரசு என்று அவர்கள் யாரை சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. முதலமைச்சர் தினமும் செல்லும் சாலை. கண்களில் பட்டிருக்குமோ?//

இதே விஷயத்தை ப்ளாகா எழுதினா கோச்சுக்க மாட்டீங்களா?

டம்பி மேவீ on January 25, 2010 at 8:20 AM said...

"Cable Sankar said...
/மீண்டும், ஒத்துக்கிட்டுதான் ஆகனும் சகா.. இல்லைன்னா கேபிள் மாதிரி ஆட்கள் நாங்கதான் யூத்ன்னு சொல்லிட்டு வந்துடுவாங்க:))//

அலோவ்வ். வந்தோமா பதிவெழுதினோமான்னு இல்லாம என்னை பத்தி புகழ்ந்து எழுதி.. அட போங்கப்பா...

அகில உலக் யூத் கேபிள் ரசிகர் மன்றம்"

anne ithellam ungalukke overaa theriyala....

டம்பி மேவீ on January 25, 2010 at 8:24 AM said...

"posted by கார்க்கி at 11:07 PM on Jan 24, 2010"


INTHA PADIVIL INTHA MATTER THAAN ENAKKU ROMBA PIDICHU IRUKKU


(PUTHUMAIYAA PINNOTTAM POTTALUM SUPPORT PANNUNGA padivalargale)

கார்க்கி on January 25, 2010 at 8:31 AM said...

//குறும்ப‌ன் said...
"சேச்சே" உங்க‌ளுக்கு//

சகா, நான் என்ன “காக்கா”வா? இப்படி சலிச்சுக்றீங்க?

@லேகா,
இந்த சிரிப்புல என்ன வில்லங்கம் இருக்கோ!!!:))

@கல்ஃப்,
நன்றி

@சங்கமித்ரன்,
எதுக்கு இந்த கமெண்ட்?

@சித்ரா,
நன்றி

@சுசி,
பாருங்க. குறும்பனுக்கு பதில் சொல்லிட்டேன். செல்ஃப் டேமேஜ்தான். பரவாயில்லை. ஆட்டம்னு வந்துட்டா........

@அம்மிணி,
ஆமா. இல்லன்னா இன்னும் ரெண்டே வருஷத்துல என் கேர்ள் ஃப்ரெண்ட் இவதான்னு அறிமுகம் செஞ்சுடுவான்

@பாரா,
பப்லு அவ்ளோ மோசமானவன் இல்லிங்க

@வசந்த்,
கன்ஃபார்ம்டுன்னு சொல்றாங்க.

@பிரபாகர்,
ஆமா. ஆனாலும் பார்க்கலாம்

@கேபிள்,
அது சரி. சின்ன எம்.ஜிஆர். ரேஞ்சுக்கு ஆயிட்டிங்க

@வெற்றி,
போடாமலே கண்டுபிடிக்கனும் சகா

@பலா,
:)))))))))))))))))))))))))

@சுரேஷ்,
நன்றி

@முகிலன்,
எவ்ளோ மொக்கை போடும்போது இது மாதிரி நல்ல விஷயங்கள் எழுதினா என்ன தப்பு சகா?

மேவி,
அவருக்கு 48 வயசே அதிகமா தெரியலைலாம்..

♠ ராஜு ♠ on January 25, 2010 at 9:13 AM said...

@குட்டி
இன்னும் திரைக்கதை லாஜிக்கை விடலையா..?

@ யா.மு.ம.பி.
உம் புலமையை எண்ணி, புல்லரிக்கின்றதய்ய்யா புலவரே..!

@பத்மஸ்ரீ
:-)))))

@ குறூம்பன்.
லத கங்டீட்கீக்லக..! !...புப்கங்டுஆ சுச்டிஅ

♠ ராஜு ♠ on January 25, 2010 at 9:14 AM said...

\\சின்ன அம்மிணி said...
வயிரு வலிக்குது. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க. \\

வயித்து வலிக்கி போய், யாராவது கல்யாணம் பண்ணுவாகளா..?

♠ ராஜு ♠ on January 25, 2010 at 9:22 AM said...

\\டம்பி மேவீ said...
anne ithellam ungalukke overaa theriyala....\\

ஹலோ மிஸ்டர்.மேவி. அட்ரஸை இமெயில்ல அனுப்புங்க..!

கொலைவெறிப்படை சார்பில் ஒரு கண்டனக்கடிதம் அனுப்பணும்.

கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
சைதை கிளை.

(புத்தககண்காட்சி கிளைத்தலைவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..)

நாஞ்சில் பிரதாப் on January 25, 2010 at 9:41 AM said...

----
பாட்டிலுக்கு ரெண்டு ரூபா அதிகமா வாங்குறானுங்கன்னு முதல்வர் பார்க்குறமாதிரி போஸ்டர் அடிச்சு தப்புபண்ணிட்டானுங்க...சகா... ஏன்டா குறைவா வாங்குறீங்க இனிமே பாட்டிலுக்கு அஞ்சு ரூபா அதிகமா வாங்குங்குடான்னு உத்தரவு போட்டுரப்போறாரு பெரியவரு...

--
சங்கமித்ரன் உங்க தோஸ்தா...சகா... இந்த கொசுதொல்லை தாங்க முடில..எங்கபோனாலும் இதே கமெண்டை காப்பி பேஸ்ட் பண்ணிப்போட்டுட்டுருக்கு...

பாலாஜி on January 25, 2010 at 10:07 AM said...

மேகலோகமே

மாடு ஓடுமா

திகதி

Karthik on January 25, 2010 at 10:21 AM said...

நாங்கள்லாம் புதுப்பேட்டையில் இருந்தே தனுஷ் மேல நம்பிக்கை வெச்சிருக்கோம். பார்க்கலாம். :)

//டாக்டர் விஜய் என்பதை போதும் போதுமெனும் அளவுக்கு கிண்டல் அடிச்சாச்சு.இனி பத்மஸ்ரீக்கு தயாராகிக்கோங்க.

அவரு சிஎம் ஆவாருன்னுல்ல நாங்க எதிர்பார்த்தோம்? வெறும் பத்மஸ்ரீயா? ப்ச்! :'(

//பதிவுல செஞ்சா கண்டுக்க மாட்டிங்களே

இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்?! :P

Karthik on January 25, 2010 at 10:24 AM said...

காக்டெயில் கலக்கல்பா..:)

மோகன் குமார் on January 25, 2010 at 11:09 AM said...

அந்த கிசு கிசு மேட்டர் இப்போ படிச்சா நல்லா புரியுது. நான் கூட நர்சிம்மை அப்போ சரியா தான் கண்டு பிடிச்சிருக்கேன்.

குறும்பன் எனக்கும் நல்ல நண்பர். ரெண்டு பேரும் செம கும்மி போட்டுட்டுருக்கீங்க??

அனுஜன்யா on January 25, 2010 at 11:38 AM said...

Palindrome - எல்லாமே நல்லா இருக்கு. (மேரு பாருமே - மலையைப் பாரு மாமூ)

யானை மணியோசை - நான் பார்க்கவில்லை. நல்ல புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் மிஸ்டர் கார்க்கி :)

அனுஜன்யா

புன்னகை on January 25, 2010 at 11:45 AM said...

//“எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல”.//
நிஜமாவா??? :P

Anonymous said...

எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல”.//

இதை ஒரு போஸ்டரா அடிச்சு உங்க அம்மா கண்ணில் படுவது மாதிரி வைக்கலாம்.. அப்பவாவது எதாவது நடக்குதான்னு பார்க்கலாம் :)

விக்னேஷ்வரி on January 25, 2010 at 1:04 PM said...

குட்டி பார்த்தேன். //
நீங்க எப்போவும் பண்றது தானே

ஆனா, இந்த மாதிரி முக்கியமான விஷயத்துக்கெல்லாம் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்திடும். உயிர் போறதா இருந்தா தான் அவங்களுக்குப் பெரிசா தெரியாது.

எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல //
இது பப்லு சொன்னதா... இல்லை யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்கன்னு சுய ஆதங்கமா...

பாவம் விஜய் //
கூடவே நீங்களும் தான்.

நீங்க செய்றது பேரு புதுமையா.... கிர்ர்ர்ர்ர்ர்.....

நல்லா இருக்கே இந்த விளையாட்டு. அப்படியே குறும்பன் லிங்கும் குடுக்கலாம் தானே.

PNS on January 25, 2010 at 1:12 PM said...

theyudhe....

குறும்ப‌ன் on January 25, 2010 at 1:20 PM said...

ச‌கா, "க‌க‌க‌" போ - க‌ருத்துக‌ளை க‌ச்சித‌மாக‌ க‌வ்விக்கொண்டீர் போங்க‌ள்:)

ஜெட்லி on January 25, 2010 at 1:34 PM said...

//நம்பிக்கை நட்சத்திரமாக இன்னமும் எனக்கு தனுஷும், ஜீவாவும்தான் இருக்கிறார்கள்//

எனக்கும் தான்...


விஜய்க்கு பத்மஸ்ரீ அவார்ட்டா....
அவர் திறமைக்கு இது கம்மி பாஸ்...

பின்னோக்கி on January 25, 2010 at 1:39 PM said...

- பப்லு தி கிரேட்

- விஜய்க்கு விருது. வி க்கு வி சூப்பர்.

- வித்தியாசமான முயற்சிய பாராட்டுறது இல்லைங்க. இப்ப என் பதிவுகளை பாருங்க. எல்லாமே புது முயற்சி. ஆனா பாராட்டு எல்லாம் கிடைக்குறது இல்லை.

மேலே சொன்னத நீங்க எப்படி வேணா எடுத்துக்கலாம். பார்ப்போம் நீங்க எப்படி புரிஞ்சுக்கிறீங்கன்னு :)

கார்க்கி on January 25, 2010 at 1:53 PM said...

ராஜூ,
லாஜிக்... மேஜிக் வார்த்தை ஆயிடுச்சு இல்ல?

@பிரதாப்,
இல்லவே இல்ல சகா... :))

@பாலாஜி,
ஆஹாஆ.. டேங்ஸுங்க

@கார்த்திக்,
நீ ஃபிசிக்ஸ் பத்தி போஸ்ட் போடுவ இல்ல. அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய

நன்றி மோகன்.

நன்றி அனுஜன்யா. :)))

@புன்னகை,
இதுல எது நிஜமான்னு கேட்கறீங்க. நான் அவனுக்கு மட்டும் மாமாதான்.

@மயில்,
நீங்கதாங்க என் கஷ்டத்த புரிஞ்சிக்கிட்டிங்க

@விக்கி,
பப்ளிக். பப்ளிக். லின்க் கொடுத்தாச்சு

@PNS,
நன்றி

@ஜெட்லி,
ஹிஹிஹி..நடத்துங்க

@பின்னோக்கி,
என் முயற்சிய நான் வாபஸ் வாங்கிக்கிறேன்

@குறும்பன்,

”ககக போ”வா.. ரைட்டு ”மாமா” :))

குறும்ப‌ன் on January 25, 2010 at 2:46 PM said...

ச‌கா, ரைட்டு "மாமா"ன்னா, லெஃப்ட்டு "தாத்தா"வா?

கார்க்கி on January 25, 2010 at 4:08 PM said...

@குறும்பன்,
எது சொன்னாலும் “வாடா வா”னு தயாரா இருந்து அடிச்சா எப்படி? :)))

தாரணி பிரியா on January 25, 2010 at 5:02 PM said...

நீங்க குட்டினாத்தான் தனுஷுக்கு நல்லா நடிக்க வருதா, சரி சரி பிரசன்னா பிடிக்காதா கார்க்கி

பப்லு சொல்லற அளவுக்கு புலம்பல் அதிகமாகி போச்சு போல :)

பாரத் ரத்னா இல்லயா

கடைசி சொல்விளையாட்டு கலக்கல் :)

குறும்ப‌ன் on January 25, 2010 at 5:52 PM said...

அதுக்காக‌, இனிமே என் ப்ளாக் ப‌க்க‌மே வ‌ராத‌, "போடா போ"ன்னு சொல்லிடாதீங்க‌ ச‌கா:)

குறும்ப‌ன் on January 25, 2010 at 5:54 PM said...

போதும்னு நினைக்கிறேன் ச‌கா, ப‌டிக்க‌ற‌வ‌ங்க‌ டென்ஷ‌ன் ஆயிட‌ப்போறாங்க‌, இந்த‌ விளையாட்டுக்கு இப்போதைக்கு "டாட்டா" சொல்லிட‌லாம்:)

கரன் on January 25, 2010 at 8:10 PM said...

இந்த வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
விஜய்க்கு எந்த விருதுகளும் இல்லை.
எதிர்பார்த்ததுதான்.
பணம் கொடுத்து விருது வாங்குவதென்றால் விஜய், பல நடிப்புக்கான விருதுகளைப் பெற்றிருப்பார்(இது, எல்லோருக்கும் பொருந்தும்). ஆனால், அவர் நடிப்புக்காக மிகக்குறைவான விருதுகளே பெற்றுள்ளார்.

இளையராஜா-ரஹ்மானுக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாழ்த்துகள் இருவருக்கும்.

நேசன்..., on January 25, 2010 at 8:38 PM said...

என்னது விஜய்க்கு அவார்ட் தரலையா!.....வட போச்சே!.....

கார்க்கி on January 25, 2010 at 8:41 PM said...

@தா.பி,
பிரசன்னாவும் லிஸ்ட்டில் உண்டு.ஆனால் முன்வரிசையில் இல்லை:))

@குறும்பன்,
ஆமா சகா. அப்புறம் மக்கள் ”காக்கா” விரட்டிற மாதிரி விரட்டிடுவாங்க

@கரன்,

ரைட்டுங்க. ஆனா எவ்ளோ பேர் இன்னும் வாங்காம இருக்கிறப்ப பரிந்துரைல வந்ததே பெரிய விஷயம்ன்னு சொல்லுவோமில்ல :))))

Tamilmoviecenter on January 25, 2010 at 10:00 PM said...

ஹலோ சகா புது காக்டெய்ல் போடுங்க தல sorry (தளபதி) போர் அடிக்குதள
அப்புறம் இன்னும் ஒரு நியூஸ் தளபதிக்கு பத்மஸ்ரீ out

S on January 26, 2010 at 2:02 AM said...

Are u the same one who wrote in Vinavu on 3 idiots?

Ithayam on January 26, 2010 at 1:52 PM said...

// “எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல”//


இது எல்லாம் ஒரு பெருமையா? பாஸ்

விலெகா on January 26, 2010 at 4:05 PM said...

வணக்கம்,
நல்லா இருக்கிறீர்களா?

கார்க்கி on January 27, 2010 at 11:29 AM said...

அனைவருக்கும் நன்றி.

விலேகா, நல்லா இருக்கேன். சிங்கப்பூர் போயாச்சா சகா? எபப்டி இருக்கிங்க?

S, நான் அவன் இல்லை.

தமிழ்ப்பறவை on January 27, 2010 at 9:56 PM said...

விகடகவி விளையாட்டு சுவாரஸ்யம்.. போகப் போகச் சலிப்புத் தட்டுகிறது.
பப்லு=(கார்க்கி)ஸ்கொயர்...

ஆதிமூலகிருஷ்ணன் on January 28, 2010 at 8:28 PM said...

சுவாரசியம்.!

Thilak on January 30, 2010 at 12:35 AM said...

/*அதுக்கு மேல் என்னிடம் சரக்கு இல்லாததால் தற்காலிக ஃபுல்ஸ்டாப் வச்சிருக்கோம். வேறு ஏதாவது வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்*/

"யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காழீயா மாமாயா நீ மாமாயா"
- மாணிக்க வாசகர்

தமிழில் உள்ள மிக நீண்ட மாலை மாற்று

 

all rights reserved to www.karkibava.com