Jan 23, 2010

மாடியில் வளரும் காதல்



2136410242_e08720b6c4

உலர்ந்த ஆடைகளை
எடுக்க வந்தவள்
ஆடைகளோடு என்
மனதையும்
மடித்து
பத்திரப்படுத்தி போனாள்.



உலரப்பட்ட ஆடைகளில்
நீல நிற சட்டை மட்டும்
என்னுடன் பேசியது.
அன்று பெருத்து இருந்தாயே!!
ஏன் இளைத்தாய் என்றேன்.
அந்த ரகசியம் என்னுடையதல்ல
என்று
வெட்கி நாணி கூனி
ஓடிவிட்டது
அவளைப் போலவே.

________________________________

வானில் மேய்ந்த சூரியன்
மாடியில் மேய்ந்த நிலவிடம் கேட்டது
உன்னிடம் இருந்து
ஒளி வாங்கும்படி
சாபமிட்டது யாரோ?
பாவம்.
வரத்திற்கும் சாபத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவன்

________________________________


ஏய். இந்தப் பாட்டைக் கேளேன்
என்று ஐபோடிலிருந்து நீளும்
இயர்ஃபோனை
உன் காதில் மாட்டினேன்
நல்லா இருக்குடா என்று
நீ தந்த பின் இன்னொருமுறைக் கேட்டேன்
பாடலில் முன்பில்லாத ஓசைகள் கேட்டது.

________________________________


ஏன் நேற்று மாடிக்கு வரவில்லை
என கோவப்படாதே .
உன்னை எப்போதும்
பார்த்துக் கொண்டேயிருக்க
விரும்புவதில்லை நான்
ஆயிரம் ஆண்டு வாழ்ந்து
என்ன செய்யப் போகிறேன்?

34 கருத்துக்குத்து:

புன்னகை on January 23, 2010 at 1:31 PM said...

:-) simply superb!!!

புன்னகை on January 23, 2010 at 1:31 PM said...

Hey me de 1st pa!!!!!!!!!!!

எறும்பு on January 23, 2010 at 1:32 PM said...

Present thala..

radhika on January 23, 2010 at 1:32 PM said...

it has been long days since your last love post. As usual very nice. my fav

ஏய். இந்தப் பாட்டைக் கேளேன் என்று ஐபோடிலிருந்து நீளும் இயர்ஃபோனை உன் காதில் மாட்டினேன் நல்லா இருக்குடா என்று நீ தந்த பின் இன்னொருமுறைக் கேட்டேன் பாடலில் முன்பில்லாத ஓசைகள் கேட்டது.
________________________________


ஏன் நேற்று மாடிக்கு வரவில்லை என கோவப்படாதே . உன்னை எப்போதும் பார்த்துக் கொண்டேயிருக்க விரும்புவதில்லை நான் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்?

சங்கர் on January 23, 2010 at 1:37 PM said...

இங்க என்ன நடக்குது?

தராசு on January 23, 2010 at 1:39 PM said...

இப்பிடி வேற தனியா ஒரு டிராக் ஓடிக்கிட்டிருக்கா?

ரைட் ரைட்....

அமுதா கிருஷ்ணா on January 23, 2010 at 2:07 PM said...

மாடியில் தோட்டம் வளர்ப்பாங்க பார்த்து இருக்கேன்...சரி, சரி, நல்லா வளர்ந்தா சரி.....

பின்னோக்கி on January 23, 2010 at 2:08 PM said...

மொட்டை மாடி காதல்கள் அருமை.

ஐபோடில் கேட்ட இசை எது ? :)

//மாடியில் மேய்ந்த நிலவிடம் கேட்டது
உன்னிடம் இருந்து

உன்னிடம் ? என்னிடம் ? எது சரி ?

பலா பட்டறை on January 23, 2010 at 2:10 PM said...

கண்ணாலமாம் கண்ணாலம்
கண்ணாலமாம் கண்ணாலம்

(பேக் க்ரவுண்ட் சாங்)

கார்கி பாத்து சூதனமா இருங்கப்பு..:))

குறும்ப‌ன் on January 23, 2010 at 2:58 PM said...

//நான் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்//

இதெல்லாம் ஒரு கேள்வியா, இன்னும் நிறைய‌ மொக்க‌ப்போகிறேன்...ச‌ரியா ச‌கா?:)))

Karthik on January 23, 2010 at 4:28 PM said...

இவரு வேற. போய் புள்ள குட்டிங்களை.. ஸாரி கண்ணாலம் காட்சி பண்ணிக்குங்கய்யா!! ;)

Anbu on January 23, 2010 at 5:09 PM said...

Simply Superb Anna

KaveriGanesh on January 23, 2010 at 5:12 PM said...

மொட்டை மாடி கவிதைகள்-தொகுப்பு கார்க்கி

புத்தகம் வெளீயிட்டு விழா மிக விரைவில்

முரளிகுமார் பத்மநாபன் on January 23, 2010 at 5:26 PM said...

சகா, கலக்கல். :-)

மழை,
நிலா,
பூ,
நீ
இதோடு
கொஞ்சமாய்
என்காதல்
சிதறியிருக்கிறது,
மொட்டை மாடி.


நாங்களும்......
போதும் சகா ரொம்ப புகழாதிங்க....
அவ்வ்வ்வ்வ்வ்

முரளிகுமார் பத்மநாபன் on January 23, 2010 at 5:26 PM said...

சகா, கலக்கல். :-)

மழை,
நிலா,
பூ,
நீ
இதோடு
கொஞ்சமாய்
என்காதல்
சிதறியிருக்கிறது,
மொட்டை மாடி.


நாங்களும்......
போதும் சகா ரொம்ப புகழாதிங்க....
அவ்வ்வ்வ்வ்வ்

நாய்க்குட்டி மனசு on January 23, 2010 at 7:44 PM said...

உலரப்பட்ட ஆடைகளில்//
உலர்த்தப்பட்ட னு இருந்தா நல்லா இருக்குமே,
என்ன சொல்றீங்க?
மொட்டை மாடியில் காதல் பண்ணினவங்களுக்கு எல்லாம் flash back ஓடி இருக்கும்.

யோ வொய்ஸ் (யோகா) on January 23, 2010 at 10:51 PM said...

என்னா ஆச்சு சகா?

வெற்றி on January 23, 2010 at 11:30 PM said...

யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே!!!

வாழவந்தான் on January 23, 2010 at 11:44 PM said...

மொட்ட மாடி... மொட்ட மாடி...
ஒரு லவ் ஜோடி... லவ் ஜோடி...

Chitra on January 23, 2010 at 11:46 PM said...

மொட்டை மாடி ரவுசு, நல்லாத்தான் இருக்கு. :-)

சி.வேல் on January 24, 2010 at 12:04 AM said...

வணக்கம் கார்க்கி


உலர்ந்த ஆடைகளை
எடுக்க வந்தவள்
ஆடைகளோடு என்
மனதையும்
மடித்து
பத்திரப்படுத்தி போனாள்”

கலக்கல் சகா

Rajalakshmi Pakkirisamy on January 24, 2010 at 5:33 AM said...

:)

பித்தன் on January 24, 2010 at 10:09 AM said...

ஆயிரம் ஆண்டு வாழ்ந்து
என்ன செய்யப் போகிறேன்?

superb

அறிவிலி on January 24, 2010 at 11:47 AM said...

ரைட்டு.

(அப்பாடி.. நர்சிம் இன்னும் வரலை)

taaru on January 24, 2010 at 12:59 PM said...

என்னமோ நடக்குது ஒலகத்துல...
ஒண்ணுமே பிரியல..மர்மமா இருக்குது..!!!
சீக்கிரம் கண்ணாளம் ஆக வாழ்த்துக்கள்..

Bharathi on January 24, 2010 at 2:57 PM said...

//நீ தந்த பின் இன்னொருமுறைக் கேட்டேன் பாடலில் முன்பில்லாத ஓசைகள் கேட்டது//

Nice :)

சுசி on January 24, 2010 at 4:08 PM said...

அச்சச்சோ.. மீ த லாஸ்டா?

ரொம்ப நாளைக்கு அப்புறம் காதல்ல கலக்கி இருக்கீங்க கார்க்கி :)))

அத்தனையும் ரொம்பவே ரசிச்சேன்.

இதத்தான் என்ஜாய் மாடின்னு சொல்வாங்களோ..

சுசி on January 24, 2010 at 4:34 PM said...

சொல்ல மறந்திட்டேன் கார்க்கி..

தலைப்பு அருமை :)))

" உழவன் " " Uzhavan " on January 24, 2010 at 5:19 PM said...

நீல நிறச் சட்டை மிக அழகு

கார்க்கி on January 24, 2010 at 11:24 PM said...

அனைவருக்கும் நன்றி. ரெண்டு நாளா பிசி(?) என்பதால் உடனுக்குடன் பதிலளில்ல முடியவில்லை

RaGhaV on January 25, 2010 at 1:19 AM said...

ரொம்ப நாள் கழிச்சு வரேன் சகா.. கவிதை எல்லாம் பின்னியிருக்கீங்க.. ;-)

அன்பரசன் on January 26, 2010 at 6:06 PM said...

சூப்பரு

தமிழ்ப்பறவை on January 27, 2010 at 9:35 PM said...

3வது,4வது ஓகே சகா...
‘மடியில் வளரும் காதல்’ தலைப்பு வச்சிக் கவிதை எழுதினா இன்னும் ஜிவ்வுன்னு இருக்கும்ல... :-)

ஆதிமூலகிருஷ்ணன் on January 28, 2010 at 8:22 PM said...

ரசனை.! தொடர்க..

அது உலரப்பட்ட அல்ல, உலர்ந்த அல்லது உலர்த்தப்பட்ட..

 

all rights reserved to www.karkibava.com