Jan 21, 2010

குடியரசு தினமும் மறைந்த என் ஒளிவட்டமும்


 

  நேற்றிரவு நடந்த காமெடி இது.பப்லுவின் தமிழாசிரியை குடியரசு தின விழாவைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வர சொல்லியிருந்தார்கள் .  பிளாகுல எல்லாம் எழுதறியே. அதான் மிஸ்கிட்ட எங்க மாமா நல்லா எழுதுவாருன்னு சொன்னேன். எழுதிக் கொடு என்றான் நானும் வெகு ஜோராக ஆரம்பித்தேன் ”இந்தியா 1950 ,ஜனவரி 26ஆம் தேதி குடியரசானது” அப்புறம்? எவ்ளோ யோசிச்சும் அடுத்த வரி வரவில்லை. என்னடா என்பது போல் பார்த்தான் பப்லு.  இருடா செல்லம் என  அலைபேசி சித்தருக்கு அலைபேசினேன். அந்த உரையாடல்

ஹலோ

சொல்லு சகா. ஆயிரத்..

இருங்க. இது வேற மேட்டர் (மேட்டர் விளக்கப்படுகிறது)

இவ்ளோதானா? எழுதிக்கோ சகா “இன்றோடு இந்தியா குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகின்றன”. ………….

அப்புறம் சகா…

அப்புறம் என்ன சகா? வீட்டுல எல்லாம் செளக்கியமா?

யோவ். குடியரசு தினம் பற்றி…

இரு சகா. என் நண்பர் ஒருத்தர்.. நல்லா சொல்லுவார் (கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்)

ஹலோ செளந்தர். நான் $%^& பேசறேன். குடியரசு தினத்தைப் பத்தி ஒரு அஞ்சு லைன் வேணும். கார்க்கி தெரியும்ல? லைன்லதான் இருக்காரு

அப்படியா? நல்லா இருக்கிங்களா சகா?

ஆங். இருக்கேன். சொல்ல்லுங்க எழுதிக்கிறேன்

இப்பவேவா? நாளைக்கு சொல்லவா?

டொக்.

நான் என்ன ஆனந்த விகடனில் போடவா கேட்டேன்? மீண்டும் நானும் அலைபேசி சித்தரும் தொடர்ந்தோம். இரு சகா கூகிளில் தேடலாமென்றார். சரியென்றேன்

குடியரசு தினத்தைப் பற்றி…(கூகிளாண்டவர் கருணை காட்டுகிறார்)

சகா சொல்றேன் எழுதிக்கோ

இருங்க. பேனா எடுக்கிறேன்.ம்ம்

“தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது”  இந்த மேட்டர் சேர்த்து அஞ்சு வரி எழுதலாமே சகா.

(எழுதும்போதே பப்லுவின் பால் கலர், சிவப்பாக மாறியதை நான் கவனிக்கவில்லை )

ஆமாம். போதும். ரொம்ப டேங்க்ஸூங்க

அட இதுல என்ன. சரி. நாளைக்கு என்ன போஸ்ட்.

இனிமேல்தான் யோசிக்கனும்.

டொக்.

வைத்த பின் தான் படித்துப் பார்த்தேன், பிரக்ஞை என்பது போன்ற வார்த்தைகள் குறித்த பிரக்ஞை எனக்கே இல்லாத பப்லு என்ன செய்வான்? அந்த பேப்பரைக் காட்டு என்றான். இல்லடா நான் வேற எழுதறேன்னு அடுத்த கால் போட்டேன் சிரிப்பு பதிவருக்கு. அவர் பி.ஏ ஹிஸ்டரி.

சொல்லு தோஸ்த்

(மேட்டர் இவருக்கும் விளக்கப்படுகிறது)

இதெல்லாம் என்னை கேட்கனும். %^&* க்கு என்ன தெரியும்? நான் ஹிஸ்டரி ஸ்டூடண்ட் தெரியுமில்ல?

நீ ஸ்டூண்டட்டா இருந்த ஹிஸ்டரி எனக்குத் தெரியும். ஆனா.

டேய். பப்லுக்காக சொல்றேன்.1947ல சுதந்திரம் வாங்கினோமா?அப்புறமா அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் இயற்ற ஒரு குழு அமைச்சாங்க. அந்த குழு இப்ப இருக்கிற குழு மாதிரி பஜ்ஜி போண்டா சாப்பிடமா ரெண்டு வருஷத்தில ரெடி பண்ணிட்டாங்க. அந்த நாள் தான் குடியசுதினம்.

இதுவா பப்லுவுக்கு சொன்னது? எப்படி தோஸ்த் அஞ்சு வரில?

அது உன் வேலை. எனக்கு வேற வேலை இருக்கு

டொக்.

மீண்டும் பப்லு. மீண்டும் சிவப்பு. மீண்டும் ஃபோன் எடுக்க போனவனைத் தடுத்தான். நீ ஆணியே புடுங்க வேணாம், நான் பார்த்துக்கிறேன். நீ போய் பிளாகுல மொக்கைப் போடு என்றான். என் பின்னால் சுற்றி வந்த ஒளிவட்டம் மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. பப்லுவிடம் இரண்டு அடி, ஒரு குத்துவுடன் ஒரு நாள் டைமும் வாங்கியிருக்கிறேன்.

 

42 கருத்துக்குத்து:

Muthukumar on January 21, 2010 at 8:31 AM said...

Mike testing 1, 2, 3...
Ohh..sorry throat sari illa..next meet pannuvom

பலா பட்டறை on January 21, 2010 at 8:32 AM said...

தினம் அரசு குடிக்க வைக்குதுன்னு தெரியும் அது என்னாப்பா குடிஅரசு தினம்?? ஒன்னியும் பிரியலயே...

அப்பறம் அந்த ஆயிர....

டொக்.

அலோ கார்க்கி... அலோ அலோ..

பரிசல்காரன் on January 21, 2010 at 8:42 AM said...

பிரக்ஞைன்னா புரியாது உறுதிமொழின்னு எழுதிக்கோன்னு அவரு சொன்னத கான்ஃப்ரன்ஸ்ல நானும் கேட்டேன். ஏன்யா வரலாறை திரிச்சு எழுதற?

ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை எதிர்த்து ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாட காந்திஜி தலைமையில் தீர்மானித்து 1930 முதல் கொண்டாடி வந்தனர். 47ல் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்றானபின், நேரு தலைமையிலான அமைச்சரவை ஜனவரி 26ஐ குடியரசு தினமென அறிவித்தது.

போதுமா? ரெண்டே வரி.

முகிலன் on January 21, 2010 at 9:03 AM said...

இந்தியாவில்
ஜனவரி
இருபத்தியாறாம் தேதி
குடியரசு தினமாகக்
கொண்டாடப் படுகிறது..

எப்பிடி சகா அஞ்சு வரி வந்திருச்சா??

(கேபிள் சங்கர் ப்ளாக படிக்காதன்னா கேக்குறியா??)

தராசு on January 21, 2010 at 9:29 AM said...

பரிசல் என்னன்னா ஒரு கேள்வின்னு கேட்டு மிரட்டறாரு,

நீ இன்னான்னா இத்த எப்டி சொல்றதுன்னு கேக்குற,

எல்லாத்தையும் நாங்களேதான் வந்து சொல்லணுமா?

மோகன் குமார் on January 21, 2010 at 9:54 AM said...

யப்பா என்னமா பதிவுக்கு மேட்டர் சேக்குறீங்க!! முடியல!!

ஜெனோவா on January 21, 2010 at 9:56 AM said...

எங்க அப்பா அம்மா சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாதுண்ணே விட்ருங்க ... அவ்வ்வ்வவ்

ஸ்ரீமதி on January 21, 2010 at 10:12 AM said...

ஒரு தினம் கொண்டாடறோம்னா அதுக்கு நாலு பக்கத்துக்கு வரலாறு இருக்கனுமா??

அனுஜன்யா on January 21, 2010 at 10:12 AM said...

ஹையோ ஹையோ. இதை அவங்க கிட்ட தான் கேட்கணும். குடி ஒருத்தர் கிட்டயும், அரசு (என்றாலே 'அதிகாரம்' எல்லாம் இருக்கு இல்லையா) பத்தி இன்னொருத்தர் கிட்டயும் கேட்டால் உன்னோட 'உரையாடல்' கம்ப்ளீட்.

அனுஜன்யா

Vidhoosh on January 21, 2010 at 10:13 AM said...

2.தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க குடியரசு தின அணிவகுப்பு 100 காமிராக்களில் கண்காணிப்பு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடு.

3.சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், முதல்முறையாக சிறைக்காவலர்களும் பங்கேற்கின்றனர்.

4.,அமெரிக்காவில் இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

5. சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1.குடியரசு தினத்தில் அசல் ரீலிஸ்

இது போதும்னு நினைக்கிறேன்.

கார்க்கி on January 21, 2010 at 10:30 AM said...

@முத்து,
அப்போ பிரியாணி கிடையாது...

@பலா,
சாரி பாஸ்.. சிக்னல் இல்லை

@பரிசல்,
ரெண்டே வரியா? மண்டைல போடுவான் எனக்கு

@முகிலன்,
அப்பாடி.. எல்லோரும் என்னை மாதிரித்தான் இருக்காங்க

@தராசு,
தெரியன்னு சொல்றதுக்கு என்னா பிலடப் சாமீயோவ்..

@மோகன்,
என்ன பிரயோஜனம் பாஸ்? மூணாங்கிளாஸ் பையன் கேட்டத எழுத முடியலையே

@ஜெனோவா,
அப்போ இனிமெல விகடனுக்கு கவிதை அனுப்பமாட்டேன்னும் சத்யம் பண்ணுங்க :))

@ஸ்ரீமதி,
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா

@அனு,
சரிங்க. குடியை பத்தி ஒரு அஞ்சு வரி ப்ளீஸ்.. சாரி சாரி.. வேணாம். பப்லு பாவம். தெரியாம கேட்டுட்டேன் :))

@விதூஷ்,
ப்டம் ஃபிப் 5 தான்..:))

Anbu on January 21, 2010 at 10:39 AM said...

இப்படியும் கூட பதிவு போடலாமோ...

நடத்துங்க..

டம்பி மேவீ on January 21, 2010 at 10:56 AM said...

மன்னிக்கவும் சகா ...... எனக்கு என் அண்ணன் தான் SCHOOL TIME ல கட்டுரை எழுதி தருவாரு...... நான் எழுதின அது மொக்கையா தான் இருக்கும்

புதுகைத் தென்றல் on January 21, 2010 at 11:14 AM said...

விதூஷின் கமெண்டை ரசிச்சேன்

தாரணி பிரியா on January 21, 2010 at 11:44 AM said...

குடிமக்களின் ஆட்சி வரும்போது தானா ஒளிவட்டம் மறைஞ்சுடும் கார்க்கி :).

காயத்ரி சித்தார்த் on January 21, 2010 at 11:49 AM said...

பதிவின் தலைப்பை ரசித்தேன் கார்க்கி.. :) பாவம் பப்லு.

குறும்ப‌ன் on January 21, 2010 at 12:27 PM said...

//என்ன பிரயோஜனம் பாஸ்? மூணாங்கிளாஸ் பையன் கேட்டத எழுத முடியலையே//

விடுங்க‌ ச‌கா, நாம‌ என்ன‌ மூணாங்கிளாஸா??? (ஹும்...எப்ப‌டிலாம் ச‌மாளிக்க‌வேண்டியதாயிருக்கு!)

taaru on January 21, 2010 at 12:55 PM said...

ஹே ஹே ஹே ஹே ஹே ... ஹி ஹி ஹி ஹி ...
பாவம் பப்லு ... மொக்க வர்மனோட STD [STDன்னா வரலாறு தானேனு கேக்கபிடாது] எல்லாம் எழுதுறானே[ரே]னு கேட்டுருக்காப்புல... இந்த லட்சணத்துல ரெண்டு மூணு Phone call வேற...

என்கிட்டே எல்லாம் கேட்டிருந்தா நாங்க நெம்ப டீசென்ட்... சூடம் பொருத்தி சத்யம் பண்ணி இருப்பேன்..தெரியாதுன்னு... ;-(

பேநா மூடி on January 21, 2010 at 1:08 PM said...

நா இனிக்கு லேஆவு.., சீ.., லீவு...,

Karthik on January 21, 2010 at 1:17 PM said...

பப்லுவ வேற ஸ்கூல்ல சேர்த்து விடுங்க. :)

புன்னகை on January 21, 2010 at 3:26 PM said...

1. இந்தியா உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடாகும்.
2. சுதந்திர இந்தியாவிற்கு அரசியலமைப்பை இயற்ற டாக்டர். அம்பேத்கர் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
3. அக்குழுவினரால் இயற்றப்பட்ட அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்ட நாளாம் ஜனவரி 26ஆம் தேதியை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.
4. எழுத்து வடிவில் உள்ள ஒரே அரசியலமைப்புச் சட்டம் நமது தேசத்தின் அரசியலமைப்பு மட்டும் தான்.
5. டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராவார்.

இது போதும்ல??? நாங்களும் ஹிஸ்டரி தான்! தெரிஞ்சுக்கோங்க! :-)

கார்க்கி on January 21, 2010 at 3:34 PM said...

@அன்பு,
இப்படித்தான் எழுதனும்ப்பா. இல்லைன்னா பெரியவங்க திட்டுவாங்க

@மேவீ,
போ.போ. வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா வர சொல்லு

@தென்றல்,
அப்ப விதூஷ் வந்து நன்றி சொல்வாங்க :)). நல்லா இருக்கிங்களாக்கா?

@தாரணி,
நீங்க விஜய்காந்த சொல்லலையே?

@காயத்ரி,
நன்றிங்க. அப்ப நான் பாவமில்லையா?

@குறும்பன்,
ஆச்சுவலி ஸ்பீக்கிங். வெல். எக்ஸாக்ட்லி..

@டாரு,
அதைத்தான் இன்னைக்கு நான் செய்யனும் போல :((

@பேநா,
எஸ்கேப் ஆவாதிங்க சகா. எனக்கு ஒரு வழி சொல்லுங்க

@கார்த்திக்,
ஏம்ப்பா? உங்க ஸ்கூலில் குடியரசு தினம் ஜனவரி மாசம் இல்லையா?

@புன்னகை,
வயித்துல பீர வார்த்தீங்க. நீங்கதான் ஹிஸ்டரி ஸ்டூடண்ட். என் தோஸ்த்தும் இருக்கானே!!! எப்படிங்க? எத்தனை புக் ரெஃபர் பண்னிங்க?

புன்னகை on January 21, 2010 at 3:45 PM said...

//எத்தனை புக் ரெஃபர் பண்னிங்க?//
இதுக்கும் கூட யாரும் புக் எல்லாம் ரெஃபர் பண்ணுவாங்களா என்ன??? எந்த ஸ்கூல் நீங்க??? ;-)

அமுதா கிருஷ்ணா on January 21, 2010 at 4:08 PM said...

கார்க்கி பாயிண்ட்ஸ் மொத்தமும் நம் பதிவர்கள் எழுதிய பின் நான் சரியா,தப்பா பார்த்து சொல்றேன்..ஓகேயா??/

ஷாகுல் on January 21, 2010 at 4:16 PM said...

இந்த எஸ்டீடினா வரலாறுதானே?

Raja Subramaniam on January 21, 2010 at 4:31 PM said...

:))

அன்புடன் அருணா on January 21, 2010 at 4:44 PM said...

/என் பின்னால் சுற்றி வந்த ஒளிவட்டம் மெல்ல மறைந்து கொண்டிருந்தது./
அடடா மறைய விட்டுடாதீங்க கார்க்கி!

சுசி on January 21, 2010 at 4:45 PM said...

பாவம் பப்லு.. உங்ககிட்ட போயி கேட்டாரே..
பாருங்க இப்போ கஷ்டப்படுறது நாங்க இல்ல :)))

//பப்லுவிடம் இரண்டு அடி, ஒரு குத்துவுடன்//
எதுக்கு வஞ்சனை.. மாமாதானே.. இன்னும் ரெண்டு மூணு சேர்த்து வாங்கிக்கோங்க..

//(எழுதும்போதே பப்லுவின் பால் கலர், சிவப்பாக மாறியதை நான் கவனிக்கவில்லை ) //
சூப்பர்..

வெற்றி on January 21, 2010 at 4:54 PM said...

கு
டி


சு

போதுமா சகா? இன்னும் மூணு பாயிண்ட்ஸ் சேர்த்து தர்றேன்..

தி

ம்

:))))

Tamilmoviecenter on January 21, 2010 at 5:43 PM said...

என்னது இந்தியாவுக்கு குடியரசு கிடைச்சாச்சா !!!!!!!!!!!!!!!!

பா.ராஜாராம் on January 21, 2010 at 6:59 PM said...

ஹா..ஹா..

i love u kaarkki!

பழம் விட்டேன்,கார்க்கி.

:-) அசத்தல்.

மு.சீனிவாசன் on January 21, 2010 at 9:34 PM said...

கர்ர்க்கி, கொஞ்ச வருசம் முன்னாடி, அண்ணாநகர் டிப்போகிட்ட அமுதம் சிறப்பு அங்காடி வளாகத்துல ‘குடியரசு’ ஆண்ட்ரூஸ் னு ஒரு ஸ்டிக்கர் ஒட்டி, கறுப்பு கண்ணாடி ரூம்ல ஒருத்தர் இருந்தார். அப்போ அவர் கவுன்சிலர்னு நினைக்கிறேன். அநேகமா இப்போ தலைவர் ஆகியிருக்கலாம். வேணும்னா அவரக் கேட்டுப் பாருங்களேன். ஏதாவது பிரயோஜனமான தகவல் கிடைக்கலாம்.

பித்தன் on January 22, 2010 at 12:03 PM said...

onnume mindla varala thala

"ராஜா" from புலியூரான் on January 22, 2010 at 1:54 PM said...

1.வோட்கா
2.விஸ்கி
3.ரம்
4.பீர்
5.பிராந்தி

இந்திய குடிமகன்கள் இப்டி எல்லாத்தையும் "குடி"ச்சி "அரசு " வருமானத்த பெருக்குற எல்லா நாளுமே குடியரசு நாள்தான்....
குடியினால அரசு கல்லா கட்டுரதுனாலதான் இது குடியரசு நாடு

வால்பையன் on January 22, 2010 at 3:46 PM said...

சனவரி 26 டாஸ்மாக் இருக்கா லீவான்னு முதல்ல சொல்லுங்க, மத்தத அப்புறம் பேசலாம்!

விக்னேஷ்வரி on January 22, 2010 at 5:06 PM said...

தொடர்ந்து பப்லுவிடம் குறையாமல் வாங்க வாழ்த்துகிறேன்.

த‌மிழ் on January 22, 2010 at 6:08 PM said...

ஏற்கெனவே அளவுக்கு மீறிய தகவல்கள் திணிக்கப்பட்டு திணறிக் கொண்டிருக்கிறார்கள் இக்காலக் குழந்தைகள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகளைக் கொடுக்கும் போது, அவர்களது வயதுக்கேற்றவாறு அவர்களே சுயமாக தயாரிக்குமாறு கொடுக்கப் படவேண்டும். பெரியவர்கள் தயாரித்து.. அதை அக்குழந்தைகள் அர்த்தம் புரியாமல் மனனம் செய்து.. பரிசு பெற்று.. எதற்காக இப்போட்டிகள்??

பட்டாபட்டி.. on January 22, 2010 at 6:43 PM said...

என்ன கார்க்கி..
ரொம்ப யோசிக்காதீங்க..

காந்தி குடும்பம் , சுதந்திரம் வாங்கித் தந்தது..
பின்பு குடி கெட்டு குடியரசாகியது...

காந்தி குடும்பம் யாரா ?..
( அட நம்ம ,
இந்திரா,
சோனியா,
ப்ரியங்கா,
ராஜீவ்,
ராகுல்,
சஞ்சய்,
கடைசியா மோகன்லால் ...
எல்லாம் போட்டு பின்னாடி காந்திய சேர்த்துக்
கொள்ளுங்கள்...)

கார்க்கி on January 22, 2010 at 8:15 PM said...

@தமிழ்,
உங்கள் கருத்து சரிதான். குழந்தைகளுக்கு புரியும்வண்ணம் எழுத வெண்டுமென்றுதான் தெரிந்த சில வார்த்தைகளை கூட வேண்டாமென விட்டு விட்டோம். அவர்களுக்கு புரியும்படி எழுதுவதுதான் எங்கள் நோக்கமே.. மேலும் நான் கெட்டது பெரியவர்களுக்கு. எத்தனை பேர் சொன்னார்கள்? நீங்கள்தான் சொல்லுங்களேன்

Tamilmoviecenter on January 22, 2010 at 10:05 PM said...

சகா உடனே வந்து இங்கு http://tamil25.blogspot.com/2010/01/1.html உங்கள் கை வரிசையை காட்டவும்

தமிழ்ப்பறவை on January 27, 2010 at 9:54 PM said...

கலக்கலக்கல் போஸ்ட் சகா.... :-)

அக்கினிச் சித்தன் on April 10, 2010 at 4:58 AM said...

// எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா? // ஓ! அதான் போலிக் குடியரசுன்னு சொல்லுக்கிறாங்களா?

 

all rights reserved to www.karkibava.com