Jan 20, 2010

ஆயிரத்தில் ஒருவன் – விலக்கத்திற்கான விளக்கம்


 

   ஆயிரத்தில் ஒருவன். செல்வாவின் கனவின் மீது பெரும் மதிப்பும், இந்தப் படத்தையெல்லாம் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணமும்தான் முதல் நாள் இரவு 12 மணி என்ற போதும், டிக்கெட் விலை 220 என்ற போது பார்த்தே ஆக வேண்டுமென்று தூண்டியது. இது போன்ற படங்களை ஆதரிப்பது என்பது திரையரங்கில் சென்று பார்ப்பது என்பதுதான். அதை நான் செய்தேன். அதன் பின் படத்தைப் பற்றிய என் பார்வை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதில் யாரும் தலையிட முடியாது. இது எல்லோருக்கும் பொருந்தும்.

     படம் எனக்குப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட ஒரு விதமான மனநிலைக்குத் தள்ளப்பட்டேன். அதை அப்படியே பதிவு செய்ததன் விளைவுதான் இது. இருந்தாலும் அதை அன்றே பதிவேற்றாமல் மறுநாள் இரவுதான் செய்தேன். ஏராளமான கேள்விகள். அதில் 25% கேள்விகளுக்குத்தான்  பதில் கேட்டிருந்தேன். எதிர்பதிவுகளும், கருத்துகளும் வருமென்று தெரியும்தான். ஆனால் அது என் கேள்விகளுக்கு விடையும் படத்தைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் தருமென்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. விஜய் மீதான என் அபிமானத்தை முன் வைத்து சிலர் பின்னூட்டம் இடக்கூடுமென்றும் எதிர்பார்த்தேன். ஆனால் கிட்டத்தட்ட அனைவருமே அந்த ஆயுதத்தை கையிலெடுத்தது அதிர்ச்சிதான். அந்த ஆயுத்தத்தை மட்டுமே கையிலெடுத்தவர்கள் ஏராளம். இதில் எனக்கு எந்த வருத்தமமுமில்லை. யாரிடம் என்ன எதிர்ப்பார்க்கலாம் எனன்று எனக்கு தெரிந்திருக்கிறது. போதுமான வலுவான காரணம் இல்லாத போது இப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டுவது மனித இயல்புதான். வேட்டைக்காரன் என்னை திருப்திபடுத்தாத போது அதன் வசூல் என்னும் முகமூடிக்குப் பின்னால் நான் ஒளிந்துக் கொண்டதைப் போல.இவர்களுக்கு வித்தியாசம் என்னும் முகமூடி.

     ஆயிரத்தில் ஒருவனை நான் ஏற்றுக் கொள்ள ஏதோ ஈகோ தடுப்பதாக லக்கி சொல்கிறார்.  அவர் இந்த அனுமானத்திற்கு வரத் தூண்டியது எதுவென்று தெரியவில்லை. எனக்கும் அந்த டீமிற்கும் என்ன பிரச்சினை? ஒரு வேளை அது அஜித் நடித்த படமென்றால் கூட அந்த முடிவுக்கு வருவதில் நியாயம் உண்டு. அண்ணாச்சி ஒரு படி மேலே சென்று, அதற்கு ஒரு உதாரணம் எல்லாம் தந்தார். மெல்ல எழுந்து நடந்து வரும் குழந்தையை கேலி செய்கிறோமென்று. எல்லோரின் பதிலையும் ஒன்று சேர்த்த போது எனக்கு கீழ்கண்டவை மட்டுமே புரிந்தது

1) வழக்கமான சினிமாவில் இருந்து வித்தியாசம்.

2) மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார்கள்

3) புதிவிதமாக யோசித்திருக்கிறார்கள்

4) கடுமையாக உழைத்திருக்கிறார்கள்

       யாருமே கும்க்கியோ, நானோ கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சி செய்யவில்லை. மாறாக தமிழ் சினிமாவில் லாஜிக் பார்க்க எப்போது ஆரம்பித்தீர்கள் என்று பதில் கேள்வி கேட்டதன்  மூலம் அவர்களாகவே அது இன்னொரு தமிழ்சினிமா என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். இன்னொரு பதிவர் நாங்கள் எல்லாம் பீத்தப் பதிவர் என்று சொல்லிவிட்டார். மிக்க நன்றி.

     இன்னொருவர். இதில் ஈழத்தின் வலி பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். நேற்று செல்வா பிரஸ் மீட்டில் சொல்லியிருக்கிறார், இந்தக் காட்சிகள் அதெல்லாம் நடப்பதற்கு முன்பே ஷூட் செய்யப்பட்டதாம். அப்படியெனில் கடந்த ஒரு வருடமாகத்தான் ஈழத்தில் அந்தக் கொடுமைகள் நடப்பதாக சொல்கிறார் செல்வா. ஈழம் பற்றி அவருக்குத் தெரிந்ததை அவரே ஒப்புக் கொண்டுவிட்டார். அவர் வலிகளை பதிவு செய்கிறாராம். அதற்கு ஆதரவு வேண்டுமாம்.

     நம் ரசனைக்கு மாறாக யாராவது சொல்லிவிட்டால், அது அவர் கருத்து என்று சொல்லக் கூடிய பக்குவம் எத்தனைப் பேருக்கு இருக்கிறது? நம் ரசனைதான் உயர்ந்தது என்ற மனோபாவத்திலே வாழும் இவர்கள் சொல்கிறார்கள், எங்கள் மேதமையைக் காட்டுவதற்காகவே படம் பார்த்து விமர்சிக்கிறோமென்று. அறிவுஜீவிகளே, படம் பார்த்து எங்களுக்கு புரியவில்லை என்று எங்கள் அறியாமையைத்தான் சொல்கிறோம். புரிந்துக் கொண்ட மேதைகள்தானே எங்களுக்கு விளக்க வேண்டும்? அதை விட்டு படத்தைப் போலவே பூடகமாக பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?

     பதிவின் முக்கியமான இடம் இதுதான். நீங்கள் தெலுங்கில் சமீபத்தில் ஹிட்டடித்த மகதீரா படம் பார்த்தீர்களா? பாருங்கள். கிட்டத்தட்ட இதே பட்ஜெட். இல்லை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் மூன்று வருடங்கள் ஆகவில்லை. படத்தின் திரைக்கதையில் லாஜிக் ஓட்டைகள் அதிகம் இல்லை. கிராஃபிக்சில் பல் இளிக்கவில்லை. அதுவும் ராஜா காலத்து கதைதான். அந்தப் படத்தில் வரும் அந்த அரச காட்சிகளில் ஏதாவது ஒரு காட்சி ஆயிரத்தில் ஒருவனை விட குறைவு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? நான் ஆயிரத்தில் ஒருவனை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடவில்லை. மகதீராவோடு ஒப்பிடுகிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதிலும் ஆ.ஒ.ப்போல ஒரு சண்டை காட்சி உண்டு. அதெல்லாம் ஆயிரத்தில் ஒருவனை விட ஆயிரம் மடங்கு சிறப்பாக எடுக்கப்பட்டது.மேலே சொன்ன நான்கு காரணங்களிலும் ஆ.ஒனை விட மகதீரா பல மடங்கு சிறப்பானது.

  இட்லி வடை சாப்பிட்டு போரடிக்கிறது என்றால் என்றாவது ஒரு நாள் மெனக்கெட்டு பணியாரம் செய்து சாப்பிடலாம். ஆனால் வித்தியாசம் என்பதற்காக, யாராலும் முடியாது என்பதற்காக ட்யூப்லைட்டை சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது காலம் கடந்து நிற்கும் படமென்று நீங்கள் சொல்கிறீர்கள். இல்லையென்கிறேன் நான். வரலாற்றை நானோ, நீங்களோ மட்டும் எழுதி விட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்ப்போம்.

67 கருத்துக்குத்து:

டம்பி மேவீ on January 20, 2010 at 11:09 AM said...

கார்கி.......உலக சினிமா வேறு ...தமிழ் சினிமா வேறு என்று சொல்பவர்களிடம் எது சொன்னாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ......

(ஆமா உலகத்தில் தானே தமிழ் நாடு இருக்கிறது ????? ஸ்கூல் ல சரியாய் படிக்கல ...அதான் டவுட் ...

டம்பி மேவீ on January 20, 2010 at 11:11 AM said...

ஒரு வேளை ஆயிரத்தில் ஒருவனுக்கு தான் என் படம் பிடிக்கும் என்று செல்வா சொல்லாமல் சொல்லிவிட்டாரோ

பலா பட்டறை on January 20, 2010 at 11:12 AM said...

கார்கி நான் இன்னும் படம் பாக்கல..

ஆனா ஒன்னு மட்டும் சொல்ல விருப்பம்

“ஷோல்டர் ரொம்ப வலிக்கிது”:)

pappu on January 20, 2010 at 11:15 AM said...

விடுங்க பாஸ்! உண்மையிலயே அவங்களுக்கு தான் ஈகோ ப்ராப்ளம். அவங்களுக்கு பிடிச்சத அடுத்தவங்க திட்டும்போது கோபம். நீங்க சொந்த கருத்துன்னு சொன்னது கூட கவனிக்கல போல. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் :)

pappu on January 20, 2010 at 11:17 AM said...

ஆனா, நான் படம் பார்க்கலை. படத்த பத்தி உங்க கருத்தை ஆதரிக்கலைன்னாலும். ஒண்ணுமே இல்லாத பட விவகாரத்துக்காக எல்லாரும் அடிச்சுகிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு!

கண்ணா.. on January 20, 2010 at 11:36 AM said...

கார்க்கி,

உங்களின் அந்த விமர்சனம் பார்த்ததும் நீங்க அதிக எதிர்பார்ப்புடனே இந்த படத்திற்கு சென்று அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியடையாமல் வந்ததாகத்தான் தெரிந்தது. நானும் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. நான் படத்தில் எதிர்பார்த்தது குறைவாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

மற்றபடி இரண்டு பக்க விமர்சனுங்களுமே வாந்தி, பீத்த போன்ற கடுமையான வார்த்தைகளில் நடந்தது மிக வருத்தமான விஷயம்தான்.

எனக்கு படம் மிகவும் பிடித்தது. நிறைய லாஜிக் மீறல்கள் படத்தில் இருந்தது அதே போல் நிறைய புது விஷயங்கள்லும் படத்தில் இருந்தது.

அதிலும் பல விமர்சனங்களில் இழுவை என குறிப்பிட்ட இரண்டாம் பாதிதான் எனக்கு மிகவும் பிடிச்சுது. அந்த ராஜா கெட்டப், அந்த மொழி என பல விஷயங்கள் எனக்கு புதுசா இருந்துச்சு. பல பழைய தமிழ் படங்களில் அரண்மனை வேலையாட்கள் கூட 3 இன்ச் மேக் அப்போடு பார்த்த வரிசையில் ஓரு மாறுபட்ட ராஜா வாழ்க்கையை பதிந்திருக்கிறார்.

நீங்கள் இதையே ஒரு மாதம் கழித்து பார்த்தால் ஓரு வேளை உங்களுக்கு பிடிக்கலாம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் லேட் ஹிட் ஆகும் என யூகிக்கிறேன்.

மற்றபடி விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

ஆனால் ஆளாளுக்கு திரைகதையே எழுதவில்லை என்பதை கிட்டே இருந்து பார்த்தை போல விமர்சிப்பதுதான் புரியவில்லை.

ஓருவன்னு முடியுற பட டைட்டில் வாஸ்து படி சரியில்லையோ ( உன்னை போல் ஓருவனுக்கும் பதிவுலகில் பயங்கர பஞ்சாயத்தா இருந்திச்சி )

:)

ஃபீரியா விடு.. மச்சி

குசும்பன் on January 20, 2010 at 11:37 AM said...

என்னது ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆயிட்டா?

ஜோ/Joe on January 20, 2010 at 11:44 AM said...

//இட்லி வடை சாப்பிட்டு போரடிக்கிறது என்றால் என்றாவது ஒரு நாள் மெனக்கெட்டு பணியாரம் செய்து சாப்பிடலாம். ஆனால் வித்தியாசம் என்பதற்காக, யாராலும் முடியாது என்பதற்காக ட்யூப்லைட்டை சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.//

உண்மை .ஆனால் நான் ஆ.ஒ -வனை பணியாரம் என்கிறேன் ..நீங்கள் இல்லை இல்லை இது ட்யூப்லைட் என்கிறீர்கள் ..அவ்வளவு தான் வித்தியாசம் ..இரு வேறு கருத்துக்கள் இருப்பது சகஜம் தானே ..இதற்கு ஏன் இந்த ஆவேசம்?

முரளிகுமார் பத்மநாபன் on January 20, 2010 at 11:51 AM said...

சகா நானும் பார்த்துவிட்டேன். ஒரே வாக்குவாதமாக இருக்கிறது. படத்தை பற்றி. மேக்கிங் ஓக்கே ஆனால் கதை திரைக்கதை லாஜிக் எல்லாம் சொதப்பல். கிட்டதட்ட பைத்தியம் புடிச்சமாதிரி இருந்தது.

நாணயம் பார்த்துவிட்டீர்களா?

தராசு on January 20, 2010 at 11:57 AM said...

தல,

கூல் டவுன்.

விடுங்க. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு.

மோகன் குமார் on January 20, 2010 at 11:59 AM said...

விடுங்க சகா.. ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் விருப்பம். பிடிச்சே ஆகணும்னு யாரும் கம்பெல் பண்ண முடியாது.
***********
குசும்பன் said...
என்னது ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆயிட்டா?

இதான் குசும்புங்கிறது

கார்க்கி on January 20, 2010 at 12:04 PM said...

மேவீ,
நீ நடத்து ராசா

@பலா,
ஹிஹிஹி.. இப்படி விறப்பா நின்னா அபப்டித்தான்.லூஸ்ல விடுங்க பாஸ்:)

@பப்பு,
பல இடங்களில் போய் பின்னூட்டத்தில் பேசிட்டேன். அப்படியே விட்டா நல்லா இருக்காதுன்னுதான். இனிமேல் ஸ்டாப்

@கண்ணா,
ரைட்டுங்கண்ணா

@குசும்பன்,
தெரியாதா? பாஸ் அது நாளைக்கே ஆயிடுச்சு

@ஜோ,
அதுக்குதான் சாம்பிள் சொல்லியிருக்கேன். மகதீராவை சாப்ட்டு சொல்லுங்க :))

@முரளி,
இந்த வாரம் பார்க்கனும் சகா

@தராசு,
நீங்க சொன்னா சரி தல. கப்சிப்

@மோகன்,
இந்த வார கிசுகிசு பதிவர் யாரு பாஸ்?

RamaKarthik on January 20, 2010 at 12:16 PM said...

Romba Naala Vaela Paakama iruntha Moola Thidirnu Perusa ethayavathu Paatha sila naeram thala vallika thaan seiyum. Naan Matriculation School padichaen, IT'la thaan Msc Degree Vaangunaen… Ippa Velinaatla thaan Vaelaikaga Contract'la Vanthurukaen, Apdi onnum naan padicha Seiyulum , ilakanamum enakku marakala, Padam puriyaelaenu solraa alavuku padam onnum kolappamaavum illa... Padathula Varra Tamil unnippa Kavanicha 90% Puriyum… Innimae tamilula Nalla Padam varanumnu aasa iruntha kandipa padam clear'a puriyum...

கார்க்கி on January 20, 2010 at 12:23 PM said...

@ரமா,
படம் குறித்து விவாதம் போதுமென்று நினைத்தேன். உங்களுக்காக மட்டும். அந்த தமிழ் புரியலன்னு நான் எங்க சொல்லி இருக்கேன்? இனிமேலாவது தமிழில் நல்ல படம் வர வேண்டுமென்பதே எனது ஆதங்கமும். இதுதான் விடும்பறாங்கன்னு இன்னொரு ஆயிரத்தில் வரக்கூடாது. மகதீரா வர வேண்டும்.

அது எப்படி சொல்லி வைத்தாற் போல் மகதீராவைப் பற்றி எல்லா ஆ.ஒ.காதலர்களும் பேச மாட்றாங்க?

பேநா மூடி on January 20, 2010 at 12:34 PM said...

மகேந்திராவ தல ரீ-மேக் பண்றாராம் அப்பவும் இப்படி பேசுவிங்களா சகா....

பிள்ளையாண்டான் on January 20, 2010 at 12:35 PM said...

//நம் ரசனைக்கு மாறாக யாராவது சொல்லிவிட்டால், அது அவர் கருத்து என்று சொல்லக் கூடிய பக்குவம் எத்தனைப் பேருக்கு இருக்கிறது//

நிச்சயமாக! உங்கள் பார்வையில், படத்தைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள். வரவேற்கிறேன்... ஆனால் கருத்துகளில் கடுமையான அல்லது விமர்சனங்களில் இடம்பெறக்கூடாத சில வார்த்தைளினால், எதிர்ப்பு அதிகமாக இருந்திருக்கலாம். அந்த வார்த்தைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

அதி பிரதாபன் on January 20, 2010 at 12:49 PM said...

நீங்க சொல்றதப் பாத்தா மகதீரா படம் பாக்கனும்போல இருக்கே...

damildumil on January 20, 2010 at 12:52 PM said...

வெந்ததோ வேகாததோ, பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ ஒருவனுடைய படைப்பை வாந்தின்னு சொல்வது எந்த வகையில் நியாயம் கார்க்கி? இவ்வளவு கடுமையான தலைப்பை வைத்தது கூட உங்களுக்கு தவறாக தெரியலையா?

ஒரு படைப்பாளி வித்தியாசமாக எதேனும் செய்ய முற்பட்டால் அதை அதில் இருக்கும் நல்ல விசியங்களை ஊக்குவித்து தவறுகளை மெல்ல கூறாலாமே.

திரும்பவும் அவரை துள்ளுவதோ இளமை எடுக்க வைத்து விடாதீர்கள்.

நாய்க்குட்டி மனசு on January 20, 2010 at 12:52 PM said...

நம் ரசனைக்கு மாறாக யாராவது சொல்லிவிட்டால், அது அவர் கருத்து என்று சொல்லக் கூடிய பக்குவம் எத்தனைப் பேருக்கு இருக்கிறது?//
romba sari, romba sari

ஜெட்லி on January 20, 2010 at 12:56 PM said...

//

திரும்பவும் அவரை துள்ளுவதோ இளமை எடுக்க வைத்து விடாதீர்கள்.

//

repeatae....

வெற்றி on January 20, 2010 at 12:58 PM said...

//பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்ப்போம்.//

ம்ம்..பார்ப்போம்..

கார்க்கி on January 20, 2010 at 1:02 PM said...

@பேநா,
அது டிராப் ஆயிடுச்சுங்க.:))

@பிள்ளையாண்டான்,
தலைப்பை மட்டும்தான் சொல்ல முடியும். அது கூட எனக்கு ஒரு விதத்தில் சரின்னு தோணுது :))

@அதி,
பாருங்க பாஸ்

@டமால்,
அப்புறம்?

@நாய்க்குட்டி,
நன்றி

@ஜெட்லீ,
அந்த படத்தையும் முதல் நாள் போய் பார்க்கதானே போறீங்க? அப்புறம் என்ன? :))))

ஜோ/Joe on January 20, 2010 at 1:37 PM said...

//அதுக்குதான் சாம்பிள் சொல்லியிருக்கேன். மகதீராவை சாப்ட்டு சொல்லுங்க :))//

மகாதீரா ஏதாவது சாப்பிடுற பொருளா? ஒரு பார்சல் அனுப்பி வச்சா சாப்பிட்டு எப்படி இருக்குண்னு சொல்லுறேன் :))

மகாதீரா நான் பார்க்கவில்லை ..நீங்கள் கொடுத்துள்ள ட்ரெய்லர் பார்த்தேன் ..அதில் காணக்கிடைக்கும் போர்க்கள காட்சிகளில் குளோட்சப் காட்சிகளே அதிகம் இருப்பதால் ,உண்மையான படத்தில் எவ்வளவு விஸ்தீரமாக எடுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை.

அது போக ,ஆ.ஒ -வில் போர்க்கள காட்சிகள் தவிர பல பிரம்மாண்டமான கோணங்கள் இருக்கின்றன ..இருந்தாலும் மகாதீரா பார்த்து விட்டு தான் ஒப்பிட முடியும்

Busy on January 20, 2010 at 2:02 PM said...

Enna Saka,
Alu aluku epadiya onnum ilathathukulam ethir pathivu podurathu..........


Veedunga boss.......

avan avan avanoda velaya pathukutu peikutay erukanum, cinema namma valkai illaya...........


neenga onga mokai darbar thodarunga........

unga cocktaila thodurungaa............

Cable Sankar on January 20, 2010 at 2:09 PM said...

முதல் பாகம் செல்ப் எடுக்காததால் தான் உடனடியாய் பிரஸ்மீட் போட்டிருக்கிறார் செல்வா..

மகதீராவுக்கு அருகில் கூட வரமுடியாது ஆ.ஓ..

பல பேருக்கு ஒரு எங்கே நாம் எல்லோரும் நல்லாருக்கு என்று சொல்லும் போது அதை பாராட்டவில்லை என்றால் நம்மை யும் ஆட்டையில் சேர்த்துக் கொள்ள் மாட்டார்களோ என்கிற பயம். அதனால் தான் மொத்தத்தில் அடுத்த கட்டம் , முதற் கட்டம் என்று உட்டாலக்கடி அடித்திருக்கிறார்கள்.

இவர்கள் மாய்ந்து மாய்ந்து ஈழதமிழரின் கதை, சோழன், சேரன், பாண்டியனின் வரலாறு என்று எழுதி த்ங்களை உயர்த்திக் கொண்டாலும், நிஜமாகவே தமிழில் முதல் முயற்சி என்றெல்லாம் சொல்லவது மிகப் பெரிய பீத்தல்.

முன்னரே கமல் ஹேராம் என்று முயன்று விட்டார். நாசர் கூட தேவததை என்று ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இன்னும் எழுதனுமின்னா நிறைய எழுதலாம்.

வால்பையன் on January 20, 2010 at 2:13 PM said...

இன்னும் கோவம் தீரலை போல!

சரி, பீத்தபதிவர்ன்னா என்ன அர்த்தம்!?,
ஓசியில பீர் குடிக்கிறவர்னா!?

Anonymous said...

கார்க்கி,

பதில் சொல்லிச் சொல்லி ஆயாசமாக இருக்கிறது. லாஜிக் இல்லை, ஸ்கிரிப்ட் எழுதல, 3 வருசம் ஆச்சு, 35 கோடி ஆச்சு என்பதான உன் ஆதங்கம் படத்தின் மீதான விமர்சனமா? அதை எடுத்த டீமின் மீதான விமர்சனமா?

அது சரி வாந்தி எனத் தலைப்பு வைத்து எழுதும் அளவுக்கு பெரிய எழுத்தாளனாகிவிட்ட உன்னிடம் லாஜிக் பார்த்தது என் குற்றம்தான்.

எல்லோரும் படிக்கும் ஒரு பொது இடத்தில் வாந்தி என, அதுவும் தலைப்பில் வைத்து எழுதுகிறாயே உன் மேதமையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எழுத வரும்பொழுது இருக்கும் பணிவு தலைக்குப் பின் ஒளிவட்டம் வந்ததும் காணாமல் போய்விடுவது சாபக்கேடுதான்.

இனி நீ விஜய் படம் மட்டும் பார்; வாந்தி எடுக்க வேண்டியதிருக்காது. அதுதான் உனக்கும் நல்லது பதிவுலகத்திற்கும் நல்லது.

ஆனால் ஒன்று தம்பி, விஜய் படம் பார்த்து பேதி வந்ததாக யாரும் பதிவெழுதியதாக ஞாபகம் இல்லை.

தண்டோரா ...... on January 20, 2010 at 2:29 PM said...

சார்.. சார் ஒன்னுக்கு
தட்டான் மேல ரெண்டுக்கு
நான் போறேன் ஊட்டுக்கு
நாளைக்கு வாரேன் இஸ்கூலுக்கு

கார்க்கி on January 20, 2010 at 2:44 PM said...

முதலில் அண்ணாச்சிக்கு பதில் சொல்லிடலாம்.

அண்ணாச்சி, ________0 (சரண்டர் படம்)

என்னை மன்னிச்சிடுங்க.. ஆயிரத்தில் ஒருவன் சூப்பர் படம். இதுக்கு மட்டும் ஆஸ்கார் தரல நான் தீக்குளிப்பேன்.

@ஜோ,
பாஸ் ஆ.ஒ. நீங்க பணியாரம்ன்னு சொன்னிங்க இல்ல. அதனால் மகதீராவ சாப்பிட்டு பார்க்க சொன்னேன்

@பிசி,
ரைட்டு சகா. நாளைக்கே கலக்கிடுவோ

@கேபிள்,
உங்க பேச்சு நான் கா.. போங்க பாஸ்

@வால்,
கிகிகி.னீங்க பீரெல்லாமா குடிப்பிங்க?

@தண்டோரா,
ஸ்கூல் ஃபீஸ் எடுத்துட்டு வரணும் நாளைக்கு

LOGESHWARAN on January 20, 2010 at 2:53 PM said...

அன்பு கார்க்கி,
நீங்கள் எதிர்பாத்து சென்றது போலவே நானும் சென்றேன் ......எனக்கு படம் மிகவும் பிடித்து இருந்தது......அடுத்த நாள் உங்களின் கட்டுரையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் ....சரி உங்களக்கு படம் பிடிக்கவில்லை என்பர்தற்காக வாந்தி என்பது தவறு ........
அடுத்து மகதீரா படத்தை நானும் பாத்து இருகீன்றேன்...நிச்சயம் ஆ.ஒ மகதீரா இணையானது என்பது என் கருத்து....இத்தனைக்கும் மகதீரா ஆ.ஒ விட இரண்டு மடங்கு அதிக பட்ஜெட் ....

Raja Subramaniam on January 20, 2010 at 3:02 PM said...

உங்களிடம் நெறைய எதிர்பார்த்தேன் ஆனா நீங்க மறுபடியும் ஆயிரத்தில் ஒருவன் ரெண்டாயிரத்தில் ஒருவன்னு அரம்பிச்சுடிங்க

//படம் குறித்து விவாதம் போதுமென்று நினைத்தேன்// maintan pannunga boss

சீக்கிரமா மொக்கை வர்மனை மன்னன் ஆக்குங்க அத விட்டுட்டு....

Karthik on January 20, 2010 at 3:05 PM said...

நீங்க 'நான் படம் பார்த்தேன். எனக்கு இதுனால பிடிக்கல. இது என்னோட கருத்து' அப்படினுல்லாம் சொல்லல கார்க்கி. வாந்தினு தீர்ப்பே சொல்லிட்டீங்க. :)

சரி விடுங்க சுறா (அசல் கூட) வரும். தமிழ் சினிமாவுக்கும் அதன் தயாரிப்பாளருக்கும் நம்மைப் போன்ற ரசிகர்களுக்கும் புண்ணியம் தரும். :)

கில்லிகள் on January 20, 2010 at 3:07 PM said...

//இனி நீ விஜய் படம் மட்டும் பார்; வாந்தி எடுக்க வேண்டியதிருக்காது. அதுதான் உனக்கும் நல்லது பதிவுலகத்திற்கும் நல்லது.

ஆனால் ஒன்று தம்பி, விஜய் படம் பார்த்து பேதி வந்ததாக யாரும் பதிவெழுதியதாக ஞாபகம் இல்லை//

this is ridiculous. everytime when vijay film releases atleast 10 people use to write badly about the movie. even they used more bad words than "vaandhi". why did this great blogger kept quiet that time?

If you guys want to fight do it. What vijay has to do here? If it continues, we need to use harsh words as like what u do.

சுசி on January 20, 2010 at 3:13 PM said...

//செல்வாவின் கனவின் மீது பெரும் மதிப்பும், இந்தப் படத்தையெல்லாம் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணமும்தான் முதல் நாள் இரவு 12 மணி என்ற போதும், டிக்கெட் விலை 220 என்ற போது பார்த்தே ஆக வேண்டுமென்று தூண்டியது. //

:)))))

டம்பி மேவீ on January 20, 2010 at 3:24 PM said...

கார்க்கி .......

யாராச்சு இனிமேல் இதை பற்றி பதிவு போட்ட அவங்களுக்கு "சோழ ராஜாவின் லிங்க தரிசனம் " கிடைக்கும் ....ஆமா சொல்லிபுட்டேன்

இம்சை தங்க முடியல

ees on January 20, 2010 at 3:45 PM said...

//அது எப்படி சொல்லி வைத்தாற் போல் மகதீராவைப் பற்றி எல்லா ஆ.ஒ.காதலர்களும் பேச மாட்றாங்க?//

saha, how come you are expecting that everyone who liked AO cud hav watchd maharatheera.. ?? i think it is not even released in TN yet..

//மகதீராவுக்கு அருகில் கூட வரமுடியாது ஆ.ஓ..//

this is a stupid statement.. the story line of lovers reborn after 400 years can no where stand with this "pandya's search of chozha's" ..
every one knows there are some holes in AO but still i can surely say that maharatheera cannot stand near AO...

ofcourse,maharatheera is a good fantasy movie & i dont understand what logics were missed in AO than maharatheera.. [ Hope u remember the climax fight in maharatheera.. a tata sumo blasting a helicopter, hero fighting with the helicopter wings....]

Anbu on January 20, 2010 at 4:45 PM said...

அட விடுங்க அண்ணா....

கிள்ளிவளவன் on January 20, 2010 at 4:47 PM said...

தோழரே எனக்கு பிடித்திருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் பிடிதவர்களின் விமர்சனம் இந்த படத்தை மிகைபடுதவில்லை அதாவது ரொம்ப சூப்பர் உலக படத்துக்கு,நிகரானதென்று. ஆனால் உங்களை போல் பிடிக்காதவர்களின் விமர்சனம் எந்த அளவுக்கு கேவலபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலபடுத்தி எழுதி இருக்கீரர்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது.

குசும்பன் on January 20, 2010 at 5:01 PM said...

//இனி நீ விஜய் படம் மட்டும் பார்; வாந்தி எடுக்க வேண்டியதிருக்காது. அதுதான் உனக்கும் நல்லது பதிவுலகத்திற்கும் நல்லது. //

அண்ணாச்சி அப்ப ஆ.ஒ பார்த்து ஒரு பொண்ணு வாந்தி எடுத்தா நல்லதா கெட்டதா? அதுக்கு ஆ.ஒ காரணமா இல்ல கார்க்கி காரணமா?

குசும்பன் on January 20, 2010 at 5:03 PM said...

போன பின்னூட்டத்தில் அந்த பொண்ணு வாந்திக்கு ஆயிரத்தில் ஒருவன் காரணம் என்று படிக்காமல், ஆயிரத்தில் ஒருவன் படம் காரணம் என்று திருத்தி படிக்கவும்.

நன்றி சுகுணா

அதி பிரதாபன் on January 20, 2010 at 5:10 PM said...

//குசும்பன் said...
போன பின்னூட்டத்தில் அந்த பொண்ணு வாந்திக்கு ஆயிரத்தில் ஒருவன் காரணம் என்று படிக்காமல், ஆயிரத்தில் ஒருவன் படம் காரணம் என்று திருத்தி படிக்கவும்//

குசும்பன் ஆயிரத்தில் ஒருவன் போலிருக்கு...

கும்க்கி on January 20, 2010 at 5:13 PM said...

ப்ரதர்..,

எனக்கு மிகுந்த சங்கடமாக போய்விட்டது.

இத்தனை நாள் பழகியும் நீங்கள் அந்த விஷயத்தினை என்னிடமிருந்து மறைத்தது மாபெரும் தவறு..

ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள்...

மறுபடியும் சொல்கிறேன்...ரொம்ப சங்கடம்....

எப்படி இருந்தாலும் நான் உங்கள் நண்பனல்ல்வா...நானுமா தவறாக புரிந்துகொண்டிருப்பேன்...

எப்படி இந்த குழப்பம் நிகழ்ந்தது என யோசித்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்.

யார் யாரோ சொல்லும்போது கூட நான் நம்பவில்லை....

ஆனால் இப்போது...மனசாட்சிப்படி சொல்லுங்கள் என்னிடமிருந்து மறைத்த அந்த விஷயத்தை...

இறுதியாக அந்தக்கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்...

”நீங்கள் விஜய் ரசிகரா..?”

கார்க்கி on January 20, 2010 at 5:21 PM said...

போங்கப்பா. இனிமேல யாருக்கும் நன்றியும் கிடையாது. பதிலும் கிடையாது :)))

கும்க்கி, என்னது ? எப்போ? எங்கே? யாரு?

அதிஷா on January 20, 2010 at 5:54 PM said...

நண்பா நீ யார்கிட்ட வேணா திட்டு வாங்கிக்கோங்க.. சண்டை போட்டுக்கோங்க

ஆனா உங்களோட சேர்த்து நம்ம தலைவரையும் அசிங்கப்படுத்துறாய்ங்களே!. நேர்ல வாங்க வாய்ல குத்துறேன்!.

குசும்பன் on January 20, 2010 at 6:05 PM said...

//நேர்ல வாங்க வாய்ல குத்துறேன்!.
//

குசும்பன்: அதிஷா கார்க்கி மேல கொஞ்ச இரக்கம் காட்டுங்க...

அதிஷா: நெஞ்சில் குத்துறேன்..


குசும்பன்: இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க அதிஷா

அதிஷா: மொங்ங்ங்ங்...

Tamilmoviecenter on January 20, 2010 at 6:59 PM said...

what blood same blood அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................

தமிழ்ப்பறவை on January 20, 2010 at 7:36 PM said...

.

பா.ராஜாராம் on January 20, 2010 at 7:52 PM said...

விடுங்க கார்க்கி..

வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்!

செய்யும்!!

:-)

சி.வேல் on January 20, 2010 at 7:52 PM said...

போங்கப்பா. இனிமேல விஜய் பதிவை மட்டும் கார்க்கியிடம் விவாதிக்ககூடாது
நான் விஜய் நல்ல டான்ஸ்சரான்னு ஆல்லுஅர்ஜுன் உடன் ஒப்பிட்டதுக்கு தமிழில் யார் விஜய்யை விட் பெட்டர்ன்னு கேட்டார். இப்ப மகதீரா படம் பார்த்தீர்களான்னு கேள்வியெழுப்புகிறார்,


நான் இதையெல்லாம் சொல்லுவதால் ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம் என்பது இல்லை, கார்க்கியின் நிலைதான் என்னுடையதும்

விஜய் என்ற முகவரி ஒருதலைபட்சமாக உள்ளது
யாருக்கும் நன்றியும் கிடையாது. பதிலும் கிடையாது :)))

ஓகே

வெ.இராதாகிருஷ்ணன் on January 20, 2010 at 8:32 PM said...

//நம் ரசனைக்கு மாறாக யாராவது சொல்லிவிட்டால், அது அவர் கருத்து என்று சொல்லக் கூடிய பக்குவம் எத்தனைப் பேருக்கு இருக்கிறது? நம் ரசனைதான் உயர்ந்தது என்ற மனோபாவத்திலே வாழும் இவர்கள் சொல்கிறார்கள், எங்கள் மேதமையைக் காட்டுவதற்காகவே படம் பார்த்து விமர்சிக்கிறோமென்று.//

கார்க்கி அவர்களே, இதே வரிகளை ஒரு தரம் வாசித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியதுதான்.

உங்களைப் போன்றோர்களை விமர்சித்தவர்களின் விமர்சனமானது தரமற்ற விமர்சனமாகத் தோற்றம் அளிப்பினும் (எழுதியவர்களுக்கு அவ்வாறு தோன்றாது)அது அவர்கள் கருத்துதானே.

சினிமாவுல எல்லாம் லாஜிக் இருக்குமா? வரலாறே ஒரு லாஜிக் இல்லாதது! வல்லவன் வகுத்ததே வரலாறு!

உங்கள் விமர்சனம் விரைவில் படிக்கிறேன்.

Vijayashankar on January 20, 2010 at 9:26 PM said...

Nice review!

The review can close with a comment, should watch or not!

James Arputha Raj on January 20, 2010 at 10:05 PM said...

Selva said its not based on Elam because
the question asked to him was like, is he trying to cash in by making movie about Elam since it's a hot Issue in tamilnadhu nowdays, he only responded in sense he is not trying to make money out of elam issue, movie was started way before this became these crisis hit the headlines in TN.

personally, I respect you Karki, we are big fan of your blog. but I saw the movie yesterday and felt good that someone from tamil Industry had the guts to think outside the box.

friend of mine was sitting next to me and kept saying this is going to be next scene (like "hero is gonna do something", etc) but not even one of his prediction came true, every twist and turn in the movie really unexpected. In a fantasy movie that's what entertains me :) not the justification for fiction.

James Arputha Raj on January 20, 2010 at 10:43 PM said...
This comment has been removed by the author.
முகிலன் on January 20, 2010 at 11:45 PM said...

சகா, நானும் படம் பாத்தேன். எனக்குப் பிடிச்சிருந்தது. லாஜிக் ஓட்டை நிறைய இருந்தாலும், 2000 பேரைக் கட்டி மேச்சதுக்கே பாராட்டலாம். செல்வா டச் கொஞ்சம் கொறச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

இன்னொரு தடவை பாக்கணும்..

James Arputha Raj on January 20, 2010 at 11:52 PM said...

one more thing, magaadeeera is a good movie, but the fight scene you are talking about is same from movie"300", So you are ok with a copy cat but not ok with something original?

Its easier to have 30 min flashback in a movie with 100cr, then to take a movie for 3hrs with 35crs with all this visualization. if you say graphics is poor, that is not directors fault. you should start paying in Dollors if you need Avatar like graphics.

Today i lost my hope on your film opinions :) I know its your personal view on the film, even one of my friend didn't like the movie. but you are making joke about your opinion by going on and on about silly questions.

Just chill :)

அஹோரி on January 20, 2010 at 11:59 PM said...

பாபு , நான் மகதீராவை இரண்டு முறை பார்த்தேன். எனக்கு வரும் சந்தேகம் நீங்கள் மகதீராவை பார்த்தீர்களா என்பதே. அந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிக குறைவு. உயர்ரக பிலிம் ரோல் + ராம் சரனின் குதிரை சவாரி திறமை வேண்டுமானால் உங்களை கவர்ந்திருக்கலாம். அதையும் இதையும் கம்பர் பண்ணாதீர்கள். மனவாடுகள் நம் தமிழ் சினிமா மீது ரொம்ப மரியாதையை வைத்திருப்பது போல உங்களுக்கு வேண்டுமானால் அக்கறை பச்சையாக தெரியலாம்.

ஒரு குரூப் ஏதோ உள்நோக்கத்தோட இப்படி செயல் படுதோன்னு டவுட்டாகீது. பாம்புகள் ( அதாம்பா புரோடியுசர் ) இனிமே உங்கள கேட்டுதான் படம் எடுக்கனும் போல.

கார்க்கி on January 21, 2010 at 12:04 AM said...

அனைவருக்கும் நன்றி

james,

Thanks for reading me. I dont want to explain more or answer your questions. It will lead to more more questions which are silly from ur perspective. :))

FYI, I dont write movie reviews.Rarely i write about movies that too not a review. They are just

கார்த்தி on January 21, 2010 at 1:11 AM said...

Cooling... Karki...

Asal varum pothu kothu parotta potukalam... Yaarum tension aaha maatanga :)

romba yethir paathuteengalo AO'la ???

Prosaic on January 21, 2010 at 5:53 AM said...

ஆயிரத்தில் ஒருவன், செல்வராகவன் என்ற இயக்குனரின் அனுபவத்திற்கும் திறமைக்கும் மீறிய ஒரு முயற்சி, அதனாலேயே இந்தப்படம் ஒரு தோல்வி. அதற்காக இந்தப்படமே வாந்தின்னு சொல்றது எல்லாம் ரொம்ப அதிகம்.

பத்து வருஷத்துக்கு முன்னாடியே இதவிட தரத்தில் மேம்பட்ட படத்தை கமல் ஹேராமில் தந்துவிட்டார்.

BTW, its surprising that nobody has made any reference about the movie, Apocalypse now!!

கார்க்கி on January 21, 2010 at 9:54 AM said...

@அஹோரி,
எனக்கு டவுட்டெல்லாம் இல்லை. நீங்க மகதீராவை பார்க்கவேயில்லை என்பது தெரிகிறது. நேரமிருப்பின் அந்த அரச காட்சிகளின் முடிவில் 300 படத்தைப் போலவே 100 பேரை கொல்வார் ராம். அந்த இடம், காட்சியமைப்பு எல்லாத்தையும் ஒரு முறை பார்த்துட்டு வாங்க.

ஆசை.. அதே டவுட்டுதான் எனக்கும். படம் அவுட்டுன்னு தெரிஞ்சு புரொடியூசர் இப்படி பேச சொல்லி காசு தந்திருக்காரோன்னு. படம் எடுப்பவர்கள் என்றுமே என்னை போல சாதாரண ரசிகனுக்காத்தான் படம் எடுப்பாங்க

@Prosaic,

அந்த வார்த்தை தவறாக படலாம். ஆனால் நிச்சயம் அது தனிமனித தாக்குதல் இல்லை. பி.கு படித்தார்களா எனத் தெரியவில்லை. என் மனநிலையை அபப்டியே பதிவு செய்து வைக்க கூட என் பிளாக் உபயோகப்படாது என்னும் போது.... சரி விடுங்க..

இரண்டு பேரும் படம் நல்லா இல்லைன்னு சொல்றோம். அந்த வாந்தி மட்டும்தான் எக்ஸ்ட்ரா. ஆனா அதுக்காக என்னை நேரிடையாக எப்படியெல்லாம் தாக்கியிருக்கிறார்? உண்மையாக என்னை நண்பனாம நினைத்தால் மெயில் போட்டிருக்கலாமே? ஃபோனில் அழைக்கலாமே? அதையெல்லாம் கேட்கும் நிலையில் நானில்லை என்று அவர் நினைத்தால் கூட இப்படி போடலாமா? அந்த மனநிலையில் நான் ஏடாகூடமாக பதில் சொன்னால் என்ன ஆகும்? தேவையில்லாமல் இன்னொரு பிரச்சினை. படிக்கிரவங்க ஜாலியா இருக்கட்டுமே..அதனால் நான் விட்டுக் கொடுக்கிறேன்..

உங்கள் ரசனைக்கு ஏற்ற மாதிரி படத்தை நாங்க ஆராதிக்கனும். ஆனா எங்க ரசனை மட்டம்னு நீங்க சொல்வீங்க..முடியாதுன்னா எனக்கு திமிர் வந்துடுச்சு.. உண்மைய சொன்னா எனக்கு திமிர் வர்ல.. சிப்பு சிப்பா தன வருது..கிகிகி

Bala on January 21, 2010 at 2:08 PM said...

நண்பா உங்களின் இந்த பதிவு ஆவேசத்தின் வெளிப்பாடா இல்ல ஆதங்கத்தின் வெளிப்பாடான்னு தெரியல. எல்லாரும் இந்த படம் பார்த்தபோது ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து இருப்பார்கள்(நீங்கள் கூட). உதாரணமாக தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான காதல், அடிதடி, நாயகன் ஸ்துதி முதலியவை குறைவாக இருந்ததால். ஆகவே ஒன்றை நாம் சிலாகித்து கொண்டிருக்கும் பொது இன்னொருவர் குறை கூறினால் வரும் கோபமே உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள். ஆனால் என்னை பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக இது தமிழ் சினிமாவின் அடுத்த அடி. அதற்காக ஹாலோவுட் பிச்சை வாங்கணும் அப்படின்னு சொல்லுறதுலாம் ரொம்ப ஓவர்.

பி. கு. நான் ஒரு அஜித் ரசிகன்

கார்க்கி on January 21, 2010 at 3:13 PM said...

பாலா,

நீங்கள் சொன்ன வஸ்துக்கள் குறைவாக இருப்பது என்பது மட்டுமே நல்ல படத்திற்கான அடையாளம் ஆக முடியாதே.. அவர்களுக்கும் பிடித்த படம் எனக்கு பிடிக்க்லைன்னு சொன்னா பின்னூட்டம் இப்படி போடுவாங்களா?

அதுசரி, ஏன் தேவையேஇல்லாம அந்த பி.கு? :)))))

Bala on January 21, 2010 at 4:05 PM said...

இதுவும் உங்கள் பி கு. போலதான்

நம்ம விஜய் ரசிகனா இருப்பதால் நம்மை திட்டுபவர்கள் எல்லாம் அஜித் ரசிகராகவோ இல்ல பொதுவா பேசுறவங்க எல்லாம் சூர்யா விக்ரம் ரசிகராவோ இருப்பாங்க அப்படின்னு உங்களுக்கு தோண கூடாதில்லையா

:)

அஹோரி on January 21, 2010 at 11:45 PM said...

என்னத்த சொல்ல. ரீஜண்டா கம்முன்னு போய்ட வேண்டியதுதான்.

vasoolraja BABL on February 25, 2010 at 12:10 AM said...

அட ஆண்டவா! ஆயிரத்தில் ஒருவன் பாத்துட்டு நான் ரொம்ப பெருமை பட்டேன்.
ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் அவார்ட் வாங்கினத பாத்தப்போ இருந்த அதே பெருமிதம்
இங்க என்னடா னா?
இதை விமர்சிக்கிறவங்க உலக சினிமா வேற எதையும் தயவு செய்து பார்துராதீங்க..

கார்க்கி on February 25, 2010 at 9:52 AM said...

வசூல்ராஜா அவரக்ளே,
நான் பார்க்கவில்ல்லை. ஆனால் நீங்க முதல்ல உலகப்டஙக்ல பார்த்துட்டு வாங்க. இல்லைன்னா இந்த மாதிரி படம்தான் உலகப்படம்னு நம்ப வேண்டியிருக்கும்

mootaipoochi on May 26, 2010 at 6:42 AM said...

@Karki: wow!!!...ivalavu late ah comment ezhudhanumaanu thonuchu...aana ezhudhaama poga manasu varala...A.O adharavaalargaluku edhiraa kitathata oru siru yudhame nadathi irrukinga pola...
vazhthukkal ...ungal poraatathirku alla oru nalla review koduthadharku... naanum niraya kelvigal kettu kettu salichu poitaen...kedaitha attanai badhilgalume ‘its is a very good first attempt for a Tamizh cinema, good graphics, Reema sen super, pudhusa tamizh maari edho oru puriyadha mozhila pesuraanga, Tamizh padathula logic yosika koodadhu’ vagaiyara ottiye erundhana...naan seidha perum thavaru indha padathai parpadharku mun’ the Gladiator, the last samurai, Indiana Jones’ pondra padangalai parthadhum ponniyin selvan vagaiyara noolgalai padithadhum dhaan...yaaro oruthar A.O’vin originality pathi pinootam ezhudhiyirundhaaru...aiya indha moondru padangalaiyum paarunga bitu bit’ah inga konjam anga konjam uruviye Selva muzhu padathaiyum eduthirukaarunu puriyum...originality’nu ellam joke adikadhinga...naan Tamizh padangalai Hollywood padangalodu oppidavillai aanal indha padam Kollowood’kum Hollywood’kum ulla idaiveliya kuraichirukunu solradhella romba periya varthai...makkale Hollywood padangal adhan brammaandarthikaaga kondaadapadubhavai alla...siridhum vazhukaadha kaitherndha muraiyil kadhai sollum nerthiye avatrin sirappaamsam...bramaandamum graphics’um dhaan idaiveliyai kuraikiradhendraal ennai poruthavarai Shivaji’yil Rajini sir seidha and matrix raga fight ondrukaagave andha padam indha idaiveliyai kuraika perum paadu pattirukiradhu enben...’thavamaai thavamirundhu’ pondra padangale Kollywood’ai Hollywood’ku nigaraaga uyarthum...A.O endru solli neengale ungal tharathai thazhthi kolladhirgal...10,000BC yum, Rob-B-Hood’um paarthu idhuvallavo ulaga cinema endru vaayai pilakum ungalukku enge edhellam puriya pogiradhu...naan innum A.O’vin characterization pathiyum logical lapse pathriyum pesave arambhikavillai...adharku munnaidye ivlo ezhudha vendiyadhayiduchu...naan adhai patri ellam ezhudha aarambhichena nirutha mattaen...ivalavu polambinadhe podhum...naan polambuvadharku or nalla vaaipalithamaikaaga migavum nandri Karki.

P.S 1: ungal padhivugalaiyum pinnoottangalaiyum partha piragudhaan therigiradhu ‘vaandhi’ enbadhu aangilathin ‘F’ word’ku equal’aga Tamizhil sollathaga varthai endru...ini podhu idathil andha vaarthaiyai kavanamaaga payanpadutha vendum illati ennayum kumiddaporaanga.

P.S2: naanum oru Vijay rasigai...adhu enna Vijay rasigargalukku ellam A.O pudikaama pogudhe? Idhu edhavadhu sadhiyaga irrukumo? Ilaya Thalapathi’ku Karthick pottiya vandhuduvaarnu poraamaiya? illa indha padathula Thalapathiya podama Selvaragavan Karthika pottadhaala varugira adhangama? Yosika vendiya vishayam.

P.S3: indrilirundhu Luckylook’in cinema vimarisanangalai padithu time waste seyaamal...ungaludaiya vimarisanangalai mattume padipadhu endru mudivu seidhirukiren...:)

 

all rights reserved to www.karkibava.com