Jan 19, 2010

புதிய மன்னர் பராக் பராக்


 

நம் கதைக்கு முன்கதை சுருக்கம் எல்லாம் தேவைப்படாதென்று முன்னரே சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் சொல்ல முயற்சி செய்கிறேன்.  இருபத்தி ஏழரையாம் நக்கல்வர்மன் - பல்லவராஜா-72வயது- வாரிசு – முதலாம் மொக்கைவர்மன். இதான் சார் மேட்டர். இனிமேல் முன்கதையெல்லாம் கேட்காதீர்கள். பின்னால் வரப்போகும் 12 அத்தியாயங்களுக்கும் கதை என்று பெரிதாய் எதுவும் என் கைவசம் இல்லாதபோது முன்கதை எழுத என் கை கூசுகிறது. இனி இந்த அத்தியாயத்திற்குள் நுழைவோம்.

     மாமன்னர் தனக்கு வயதான காரணத்தால் 16 வயதே நிரம்பிய மொக்கைவர்மனை மன்னராக ஆக்குவதென்று முடிவு செய்கிறார். அழுகுணி சிம்மனின் தலைமையில் ஒரு சாரார் இதை பலமாக ஆதரிக்க, படைத்தளபதி சொங்கி சொக்கன் தலைமையில் சிலர் வேண்டாமென்று தத்தம் இருக்கையைத் தட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.  88 வயதான மன்னர் ”அமைதி அமைதி” என்று மிக அமைதியாக சொன்னதை சட்டை மட்டுமல்ல யாரும் டிராயர் கூட செய்யவில்லை. இறுதியாக இரு சாராரும் இது குறித்து விவாதித்து முடிவெடுக்க ஒப்புக் கொண்டனர்.

முதலில் அழுகுணி ஆரம்பித்தார். “இளவரசர் கத்திச்சண்டையில் தேர்ந்தவர். எந்த ஒரு மன்னனும் தன்னைத் தற்காத்து கொள்வதில் பிறரின் உதவியை எதிர்பாராமல் இருப்பது அவசியம். அந்த வகையில் இளவரசர் பல முறை வாள்சண்டைப் போட்டு தப்பித்ததை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் மன்னா” என்றார்

பெருமை பீறிட என்ன சொல்கிறீர்கள் என்பது போல் எதிரணியைப் பார்த்தார் மாமன்னர்.

மன்னா!! அழுகுணி சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் அது நீங்கள் நினைக்கும் வாள்சண்டையல்ல. அடுத்த நாட்டில் சோமபானம் சிறப்பான முறையில் தயாராவதைத் தெரிந்து வைத்திருக்கும் இளவரசர் அங்கே சென்று மூக்கு முட்ட குடித்துவிட்டு பிரச்சினை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த நாட்டு இளைஞர்கள் அடிக்க வந்தால் வாள் வாள் என கத்தி சண்டை போடுவார் இளவரசர். இவரின் சரீரத்தைக் கண்டு சண்டைக்கு தயாராகும் எதிரிகள் இவரது சாரீரத்தைக் கேட்டு காதுகளை மூடிய படி ஓடிவிடுவார்கள். அதைத்தான் “கத்தி”சண்டை, “வாள்”சண்டையென சொல்கிறார்கள் எதிரணியினர் என்று கொக்கரித்தார் சொங்கி.

மன்னர் பார்த்தபோது முகம் திருப்பிக் கொண்டனர் எதிரணியினர். அவமானம் தாங்காமல் அழுகுணியைப் பார்த்தார் மன்னர்

அது கிடக்கட்டும் அரசே!! இளவரசரை வாள்சண்டையில் வெல்ல முடியாது என்று தெரிந்துக் கொண்ட எதிரிகள் உலகிலே எந்த மன்னனும் உபயோகிக்காத ஒரு விதமான படையை ஏவினார்கள். அவர்களை  புறமுதுகிட்டு ஓட செய்தார் நம் இளவரசர். அது தெரியுமா இந்த மூடர்களுக்கு?

மீண்டும் கெத்தாக திரும்பி பார்த்தார் அரசர்.

அவசரம் வேண்டாம் அரசே. இவன் என்னடா பேடியாக இருக்கிறான் என்று தங்கள் நாட்டு வயதான கிழவிகளை விட்டு இளவரசரை அடிக்க நினைத்தார்கள் எதிரிகள். 12 கிழவிகள் இளவரசரை சூழ்ந்தபோது அவர்கள்  புடவைகளை உருவியிருக்கிறார் நம் வீரத்திருமகன். மானம் போனாலும் பரவாயில்லை என்று சண்டையிட அவர்கள் என்ன பல்லவ சம்ஸ்தான மன்னர் பரம்பரையா? மறைவிடம் தேடி ஓடியிருக்கிறார்கள். வெற்றுடம்போடு அவர்கள் ஓடியதைத்தான் புறமுதுகிட்டு ஓட வைத்ததாக பீற்றிக் கொள்கிறார் அழுகுனி.

அடுத்து நடவடிக்கையாக  எதிரணியினர் காறி உமிழக்கூடும் என அஞ்சி அழுகுணியைப் பார்த்தார் மன்னர்.

விதண்டாவாதம் வேண்டாம். எங்கள் இளவரசர் செய்த போர் தந்திரத்தைக் கண்டு அந்த நாட்டில் அவர் பெயரில் ஒரு நாடகமே நடத்துகிறார்கள். அதுவும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறதாம்.அவர்களுக்கு தெரிந்ததது கூட நம் நாட்டில் இருக்கும் பதர்களுக்கு தெரியவில்லையே மன்னா!! அய்யகோ

இந்த முறை சற்று சந்தேகத்துடன் ஓரக் கண்ணால் பார்த்தார் மன்னர்.

ஹாஹாஹா. மன்னா!! இவனுக்கெல்லாம் கொரில்லா தந்திரம் வேண்டாம். தெருநாய் போதுமென இரண்டு நாய்களை ஏவிவிட்டிருக்கிறார்கள். தலைதெறிக்க நம் இளவரசர் ஓடியதை பார்த்து நாடகத்திற்கு இவர் பெயர் வைத்தால் நன்றாக ஓடுமே என்று இளவரசரில் பெயரில் ஒரு நகைச்சுவை நாடகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் இப்போது ஓடு ஓடுவென ஓடி சக்கைப் போடு போடுகிறதாம். அடுத்த நாடகத்திற்கு தங்களின் திருநாமத்தை வைக்க அனுமதி கேட்டு வந்தவர்களை நான் தான் ஓட ஓட விரட்டினேன் என்று முடித்தார் தளபதி.

என்ன செய்தும் இனி வெல்ல முடியாது என்று தெரிந்து அழுகுணி பிரம்மாஸ்திரத்தை உபயோகித்தார். ”இளவரசருக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமென்று ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இந்த வயதான வக்கற்ற மன்னருக்கு இளவரசர் நல்ல மாற்றா இல்லையா” என வினவிய அழுகுனியை ஆரத் தழுவிக் கொண்டார் தளபதி.அதன் பின் முதலாம் மொக்கைவர்ம இளவரசர் மன்னராகும் வைபவத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

-மொக்குவோம்.

32 கருத்துக்குத்து:

dheepan on January 19, 2010 at 2:07 AM said...

உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...

சரி போட்டாச்சு ..சந்தோசமா

Rajalakshmi Pakkirisamy on January 19, 2010 at 2:36 AM said...

:)

சுசி on January 19, 2010 at 4:38 AM said...

பட்டாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிடுங்க கார்க்கி.

//"புதிய மன்னர் பராக் பராக் (கார்க்கி)"//
நல்ல வேளை கார்க்கிய நடுவுல எழுதல.

கத்தி சண்டை, வாள் சண்டை :)))))

Chitra on January 19, 2010 at 5:04 AM said...

-மொக்குவோம். ................நல்லா மொக்குங்க...... இப்படியெல்லாம் பயம் காட்டினாலும், நாங்க இதை படிக்கிறதை நிறுத்த மாட்டோம் அப்பு.!

பலா பட்டறை on January 19, 2010 at 7:46 AM said...

புதிய மன்னர் பராக் பராக் (கார்க்கி)

அந்த ப்ராக்கெட் ல இருக்கறது மன்னர் பெயரா..:)

radhika on January 19, 2010 at 9:42 AM said...

மொக்கை தர்பார்ன்னு பேர் வச்சிட்டு மொக்கையையே காணோம்ன்னு நினைச்சேன். சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்!!!!

வெற்றி on January 19, 2010 at 9:45 AM said...

//சட்டை மட்டுமல்ல யாரும் டிராயர் கூட செய்யவில்லை//

:))

//அழுகுனி சிம்மன்,சொங்கி சொக்கன் //

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க... :))

நாய்க்குட்டி மனசு on January 19, 2010 at 9:47 AM said...

present sir

Cable Sankar on January 19, 2010 at 9:49 AM said...

ஏதோ ஒரு முடிவோடத்தான் எழுத ஆரம்பிச்சிருக்க.. கார்க்கி.. ரைட்டு

pappu on January 19, 2010 at 9:50 AM said...

ஏ யப்பா, இந்த கதைன்னா கூட இரக்கம் இல்லாம மொக்க போடுறீங்களே!

♠ ராஜு ♠ on January 19, 2010 at 10:52 AM said...

பரிசலுக்கு என்ன பதில் சொன்னீங்க..?

புன்னகை on January 19, 2010 at 11:05 AM said...

யாரை நினைச்சு இந்த இளவரசர் பாத்திரத்த எழுதுறீங்க கார்க்கி??? எனக்கென்னவோ உங்களுக்கும் இளவரசருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும் போலத் தெரியுது. ;-)

rajesh on January 19, 2010 at 12:10 PM said...

mokkaiyai vida last episode maathiri ezuthunaa super sagaa. that was really excellent. ithuvum nallaa irukku. but mokkai dharbar antha styleil vanthaal super.

Asha on January 19, 2010 at 12:53 PM said...

//இவனுக்கெல்லாம் கொரில்லா தந்திரம் வேண்டாம். //

அது கெரில்லா போரா? இல்லே கொரில்லா போரா?
ஒரு வேளை கண்ணாடி பாத்துட்டே கொரில்லா போர்னு எழுதிட்டீங்களோ?
'கிரைண்டர் கார்க்கி'! பேருக்கு ஏத்த மாதிரி மொக்கையா அரைச்சிருக்கீங்க!! :))

கார்க்கி on January 19, 2010 at 1:47 PM said...

தீபன் இதுல உள்குத்து ஏதுமில்லையே:) வருகைக்கு நன்றி

நன்றி ராஜி

சுசி, மக்கள் அவர்களாக வர வேண்டும். அழைப்பு வேறு வேண்டுமோ? யாரங்கே.. யாரங்கே.. யாரடா அங்கே.. சரி நானே சொல்லிடறேன். உங்களுக்கு 10 நாள் பாதாள சிறை

சித்ரா, எல்லோரும் உங்கள போல நல்லவங்களா இருக்க மாட்டாஙக்ளா?

பலா, அவர் மாமன்னன்.(ஒரு மா தாம்ப்பா)

ராதிகா, எங்க? ஓடுங்க.. நம்மள சாப்பிட்டற போது

வெற்றி, ஹிஹிஹி

நன்றி நாய்க்குட்டி

கேபிள், ”முடிவோடத்தான் ஆரம்பிக்கிற”. டைரக்டர் டச்

பப்பு, முடிவு பண்ணி இறங்கிட்.. சரி விடு

ராஜூ, எதுக்குப்பா?

புன்னகை, இளவரசருக்கு 16 வயது என்பதை சொல்றீங்களா?

ராஜேஷ், போன அத்தியாயய்த்தில் வந்த கமெண்ட்ட பாருங்க :))

ஆஷா, கொரில்லாக்கு போருல கால் உடைஞ்சா கெரில்லா ஆயிட போது.
கிரண்டர் அரைச்சாலும் மாவ அதுவா சாப்பிடது? அது போலதான் நான் எழுதினாலும் அது உங்கள மாதிரி ஆடக்ளுக்குத்தானே. அதான் மொக்க்க்க்கையா இருக்கு :))

தராசு on January 19, 2010 at 2:25 PM said...

வாள் சண்டை கலக்கல் தல

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on January 19, 2010 at 2:39 PM said...

:-))

Anbu on January 19, 2010 at 4:21 PM said...

:-)))

நேசன்..., on January 19, 2010 at 4:33 PM said...

அடுத்த பதிவுல மொக்கை வர்மனைப் பாராட்டி ஒரு புலவர் பாடுறா மாதிரி ஒரு கவிதையைத் தட்டி விடுங்க சகா!........

பரிசல்காரன் on January 19, 2010 at 6:18 PM said...

@ ராஜூ

??

Tamilmoviecenter on January 19, 2010 at 6:30 PM said...

right கலக்குங்க (நான் பதிவை சொன்னேன்) சகா

யோ வொய்ஸ் (யோகா) on January 19, 2010 at 8:52 PM said...

மொக்கலோ மொக்கல் சகா..

குசும்பன் on January 19, 2010 at 9:18 PM said...

இல்ல சகா..

Balavasakan on January 19, 2010 at 10:58 PM said...

என்ன மாதிரி மொக்குறீங்க தாலைவா.. சூப்பர்ப்பா..

Priya on January 19, 2010 at 11:24 PM said...

ம்ம்ம்...... கலக்குங்க, சாரி மொக்குங்க‌:-)அதுசரி,What's meaning of "மொக்கை"???

K.MURALI on January 20, 2010 at 2:14 AM said...

இதுல உள்குத்து ஏதுமில்லையே.
ஆயிரத்தில் ஒரு(வன்)மொக்கை.
முரளி.

கார்க்கி on January 20, 2010 at 12:00 PM said...

அனைவருக்கும் நன்றி,

@ப்ரியா,

வேற யாரையாவது கேட்டா மொக்கைன்னா கார்க்கின்னு சொல்லி இருப்பாங்க. நானே எப்படி சொல்றது?

படிச்ச முடிச்சவுடன் எழுதியவனை கொல்லனும்ன்னு தோணுச்சுன்னா அதான் நல்ல மொக்கை..:)))

Karthik on January 20, 2010 at 2:03 PM said...

கத்தி வாள் சண்டைனா இதானா? ஆவ்வ் :))

taaru on January 20, 2010 at 3:38 PM said...

பிரம்மாஷ்திரம்!!!! பிளிறிட்டீங்க தல.. சத்தியமா எதிர் பாக்கவே இல்ல..
தாஸ் தாஸ் நீ [ங்க] இப்போ பாஸ் பாஸ்....

taaru on January 20, 2010 at 3:40 PM said...

பரிசலார் நிறுத்த சொல்லிட் டாரு போல.. அதான் நெம்ப நாளா மொக்க வர்மன காணலயோன்னு நினச்சுட்டேன்..இப்போ நெம்ப சந்தோசம்...

கார்க்கி on January 21, 2010 at 8:30 AM said...

@கார்த்திக்,

நேருல வா. ஒரு நாள் சண்டைப் போட்டு பார்க்கலாம் :))

@டாரு,
பாஸ்> ஒரு வாரம்தானே ஆச்சு. செவ்வாய்கிழமை தோறும் மொக்கைதர்பார் :))

roomno104 on January 22, 2010 at 4:45 PM said...

ithula ulur arasial ethuvum illayey...??

 

all rights reserved to www.karkibava.com