Jan 18, 2010

பெரிய மனுஷன் ஆவது எப்படி?


 

     உலகிலே மிகக் கடினமான விஷயம் எதுவென்று என்னைக் கேட்டால் எளிதில் சொல்லிவிடுவேன், தண்ணியடிக்கும் பழக்கமில்லாத ஒருவன் தண்ணி பார்ட்டிக்கு செல்வது என்று. சிறுவயதில் இருந்தே எனக்கு இந்த நல்லப் பழக்கம் உண்டு. அதாங்க தண்ணியடிக்காமல் இருப்பது. அப்போது எனக்கு 18 வயது(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா). கல்லூரி நண்பன் ஒருவன் பார்ட்டி தருவதாக சொன்னான். அதுவும் தண்ணி பார்ட்டிடா என்று அழுத்தி சொன்னான். எனக்கு விருப்பமில்லை என்றேன். இன்னொரு நண்பன் தான் சும்மா வந்து வேடிக்கை பாரு மச்சி. கலக்கலா இருக்குமென்று பவர் சோப் போட்டு பிரயின் வாஷ் செய்தான். அதைத் தொடர்ந்து நான் வருவதாகவும் ஆனால் தண்ணியடிக்க சொல்லி தொல்லைப் பண்ணக்கூடாதென்றும் பார்ட்டி தருபவனிடம் சொன்னேன். அது உன் இஷ்டம் மச்சி என்றவனிடம் என்னடா ஸ்பெஷல் என்றேன். ”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றான்.

     அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைத் தொடர்ந்து பல பார்ட்டிகளுக்கு செல்லத் தொடங்கினேன். ஏ.சி பாரில் அன்லிமிட்டெட் சைட் டிஷ் என்பதால் டின்னரையும் அங்கேயே முடித்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவு சைட் டிஷ் வைத்தாலும் சில நிமிடங்களில் அரைத்து தள்ளியதால் கிரைண்டர் கார்க்கி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. இது என்னடா ஃப்ரீயா கொடுக்கிறத சாப்பிட்டா கூடவே ஃப்ரீயா டைட்டிலும் தர்றாங்களேன்னு ஆச்சரியமாக இருந்தது. உண்மையை சொல்லப் போனால் நான் இது போன்ற பார்ட்டிகளுக்கு செல்ல முக்கிய காரணம் சைடு டிஷ் மட்டும் அல்ல. சரக்கு உள்ளே போகும் வரை கந்தசாமியாக இருப்பவன் முதல் கல்ப் அடித்ததும் கம்யூனிஸ்டாக மாறுவான். ஸ்மால் அடித்தவன் சுவாமிகள் ஸ்ரீஸ்ரீ ஆயா பகவானின் லீலைகளை எடுத்துரைப்பான். லார்ஜ் அடித்தவன் இந்தியாவின் லா& ஆர்டர் குறித்து கவலை தெரிவிப்பான். லைட்ஸ் ஆன் சுனிலை மட்டுமே படிப்பவன் என்று நினைக்கும் ப்ரகஸ்பதி தோப்பில் முகமது மீரானைத் தெரியுமா என்று மிரள வைப்பான்.

     இந்த வயதில், அதாங்க 18 வயதில் தண்ணியடிப்பவர்களில் இரண்டு பேராவது காதல் தோல்வியில் இருப்பார்கள். அவர்களின் ஃபீலிங்க்ஸ் கொடுமை சொல்லி மாளாது. நாத்தம் புடிச்ச குப்பைத்தொட்டிக்கு பக்கத்தில் அவளைப் பார்த்ததில் தொடங்கி, அவளது கூந்தல் மணம் வரை மணிக்கணிக்கில் சிலாகிப்பார்கள். தண்ணியடிக்காமல் ஸ்டெடியாக இருக்கும் என்னைப் போன்றவர்கள் தான் அவர்களின் டார்கெட். அந்தக் கதைக்கெல்லாம் பல சமயம் ரிப்பீட் ஆடியன்சாக இருந்த கொடுமையும் நேர்ந்ததுண்டு. இரண்டாம் முறை கேட்கும்போது அந்த கதை நமக்கு தெரியாதது போல் நடிக்க வேண்டும். இல்லையெனில் நாமும் அந்த ஜீலியட்டுக்கு நூல் விட்டதாக நினைத்துக் கொண்டு ரோமியோ நம் மீது பாய்ந்துவிடும் அபாயமுண்டு. கடைசியாக அவர் ஆஃபாயில் போடும் சமயம் வந்ததும் ”விடு மச்சி. உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பொறக்க போறா?” என்ற டயலாக்கோடு நகர்ந்து விட வேண்டும். இல்லையெனில் கறை நல்லது விளம்பரத்தில் நம் கதையும் வந்துவிடக்கூடும்.

      காதல் கதைகள் பெரும்பாலும் சுவாரஸ்யமாக இருந்துவிடுமென்பதால் தப்பித்து விடலாம். ஆனால் தப்பித் தவறி அரசியல் ஆர்வலரிடம் மாட்டிக் கொண்டால் செத்தோம். வட்ட செயலாளரின் தகிடுதத்தத்தில் ஆரம்பிக்கும் பேச்சு பில்கேட்ஸுக்கும் சிதம்பரத்திற்கும் இடையே நடந்த டீலிங் வரை செல்லும். மாட்டையும் மக்களையும் வைத்து கம்யூனிசத்திற்கும் ஃபாஸிஸத்திற்கும் இன்னும் பல இஸத்திற்கும் விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் நம் மூளையில் நெப்போலியன் நர்த்தனம் ஆடத் தொடங்குவார். “உன்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒன்னை பக்கத்தில் இருக்கிறவன்கிட்ட கொடுத்தா அது சோஷலிசம். ரெண்டு மாடையும் அரசே எடுத்துக்கிட்டு உனக்கு பால மட்டும் ஃப்ரீயா கொடுத்தா அது கம்யூனிஸம். அந்த பாலுக்கு காசு கேட்டா அது ஃபாஸிஸம்.ஒரு மாட்ட வித்து ஒரு காளை மாட்ட நீ வாங்கினா அது கேப்பிட்டிலிஸம்” இப்படி போகும் இஸ ரயிலில்  இருந்து ரன்னிங்கில் இறங்கி வரத் தெரியாதவர்கள் இது போன்ற பார்ட்டிகளுக்கு போகாமல் இருப்பதே உசிதம்.

      ரன்னிங்கில் இறங்கி இந்தப் பக்கம் பார்த்தால் பாபா முத்திரையோடு நித்திரையில் ஆழ்ந்திருப்பார் ஆன்மிக குடிகாரர். தெரியாமல் அவரை எழுப்பிவிட்டால் அவ்வளவுதான். இதெல்லாம் சிற்றின்பம். பதரே பேரின்பம் அவனிடத்தில் உண்டு என மேலே கையை காட்டுவார்கள். ஆனால் அவர் கண்கள் கீழ் நோக்கி இருக்கும். நாம் மேலேதான் பார்க்க வேண்டும். கட்டாயம் ஒரு குரு-சீடன் கதை சொல்வார். நாமும் பயபக்தியுடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஓஷோ தெரியுமா என்றால் ஆம் என்று சொல்லக்கூடாது. தவறி சொல்லிவிட்டால் நீ நினைக்கிற மாதிரியான ஆளில்ல அவரு என்று நம் மனதில் இருப்பதைப் புட்டு புட்டு வைப்பார். இன்பம்-துன்பம்,நல்லது-கெட்டது, ஆசை-ஏமாற்றம் என போகும் பிரசங்கத்தை லாவகமாக முடிக்க தெரிந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் போல அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும்,

     குடிக்கும் வரை கோலாகலமாக செல்லும் வைபவம் திரும்பும் வழியில் சொதப்பும். அத்தனை பேரும் பிரச்சினை செய்ய மாட்டார்கள். ஆனால் நிச்சயம் ஒருவன் செய்துவிடுவான். அவனை பத்திரமாக ஹாஸ்டலில் சேர்க்க வேண்டிய தார்மீக கடமை ஓசியில் சைட் டிஷ் சாப்பிட்டவனுக்கே அதிகம். வரும் வழியில் தேமேவென மேமேன்னு கத்திக் கொண்டிருக்கும் ஆட்டிடம் சென்று பேசத் தொடங்குவார் அன்றைய மேன் ஆஃப் தி மேட்ச். ஆட்டை, ராஜ பாளையத்து நாய் என நினைத்து வீரமாக அதன் எதிரில் நின்று பழங்கதைகள் பேசுவார். ”அன்னைக்கு என்ன துரத்துன இல்ல. இப்ப என் மச்சான் கூட இருக்கான். தொரத்து பார்ப்போம்” என அருகிலிருக்கும் ஏதாவது ஒரு மச்சான் மீது கை போட்டுக் கொள்வார். அரைகுறை மப்பில் இருக்கும் மச்சானும் மாப்பிள்ளைக்காக அந்த ஆட்டை மிரட்டுவார். அது மிரண்டு ஓடும். விடாமல் துரத்தி மாப்பிள்ளையின் நன்மதிப்பை பெற்றிடுவார் மச்சான். மறுநாள் ஏண்டா ஆட்டை துரத்தினன்னு யாராவது கேட்டா, மச்சான் அந்த சமயத்துல மட்டன் கேட்டான். கடையெல்லாம் மூடிட்டாங்க. அதுக்காக மச்சான்கிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா என்று தயார் செய்து வைத்திருக்கும் புனைவை பிரசுரிப்பார்கள். அவசரப்பட்டு சிரித்துவிட்டால் அடுத்த பார்ட்டியில் காராசேவு கிடைக்காதென்பதால் நானும் வாய் மூடி இருந்துவிடுவேன்.

    இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கால் கிலோ மிக்சருக்கும், வறுத்த கடலைக்கும் நான் பட்ட பாட்டைக் கண்டு எனக்கு வெறுப்பு வந்தது. என்னடா செய்யலாமென்று பல ஆங்கிளில் யோசித்து ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல முடிவு எடுத்தேன். எடுத்த முடிவின்படி கச்சிதமாக காரியத்தை முடித்த பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இன்னொரு நண்பனையும் பார்ட்டிக்கு  அழைத்தேன். என்னடா விசேஷம் பார்ட்டியெல்லாம் தர்ற என்றான்.

”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றேன்

57 கருத்துக்குத்து:

Nataraj on January 18, 2010 at 7:19 AM said...

A lot of resemblance with Dubukku's post on the same topic..

Cable Sankar on January 18, 2010 at 8:50 AM said...

கார்க்கி.. ஹா..ஹா..ஹா.. சூப்பர்

rajesh on January 18, 2010 at 8:53 AM said...

செமயா வந்திருக்கு சகா. மொக்கை மட்டும் இல்ல, நகைச்சுவையும் உமக்கு அருமையா வருமென்று சொல்கிறது.

அன்புடன்-மணிகண்டன் on January 18, 2010 at 8:57 AM said...

அப்படின்னா.. பதினெட்டு வயசுல சைட்-டிஷ்'ல ஆரம்பிச்சு பத்தொன்பது வயசுலேயே சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க.. ஒத்துக்கறோம்.. பெரிய மனுஷன்னு ஒத்துகறோம்... ;)

டம்பி மேவீ on January 18, 2010 at 9:29 AM said...

இந்த பதிவிற்கும் உலக சினிமாவுக்கும், சாருவுக்கும் எதாச்சு தொடர்ப்பு இருக்கா ????

(ஏதோ என்னால் முடிந்தது)

டம்பி மேவீ on January 18, 2010 at 9:30 AM said...

"உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்..."

கடைசி வரி ல ஏதோ டபுள் மீனிங் இருக்கிற மாதிரி இருக்கே ????

தராசு on January 18, 2010 at 9:32 AM said...

டெம்ப்ளேட் பின்னூட்டம் போடக் கூடாதுங்கற கொள்கையில உறுதியா இருக்கறதுனால, ஒரு கேள்வி,

நீங்க எப்ப கிரைண்டர் கார்க்கில இருந்து மொக்கை கார்க்கியா மாறுனீங்க??

டம்பி மேவீ on January 18, 2010 at 9:49 AM said...

"தராசு said...

நீங்க எப்ப கிரைண்டர் கார்க்கில இருந்து மொக்கை கார்க்கியா மாறுனீங்க??"


கிரைண்டர் மொன்னையான பொழுது மொக்கை ஆகிட்டாரு

♠ ராஜு ♠ on January 18, 2010 at 9:59 AM said...

இப்படியாக,நான் ரிப்பிட்டட் ஆடியன்ஸாக ம.தி.மு.க.வின் பல பராக்கிரமங்களை கேட்டுள்ளேன்.
என்ன செய்ய, எனக்கு வாய்த்தவர் வை.கோ. அனுதாபி...!

Anonymous said...

//வந்து வேடிக்கை பாரு மச்சி. கலக்கலா இருக்குமென்று பவர் சோப் போட்டு பிரயின் வாஷ் செய்தான்//

//ஏ.சி பாரில் அன்லிமிட்டெட் சைட் டிஷ் என்பதால் டின்னரையும் அங்கேயே முடித்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவு சைட் டிஷ் வைத்தாலும் சில நிமிடங்களில் அரைத்து தள்ளியதால் கிரைண்டர் கார்க்கி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. இது என்னடா ஃப்ரீயா கொடுக்கிறத சாப்பிட்டா கூடவே ஃப்ரீயா டைட்டிலும் தர்றாங்களேன்னு ஆச்சரியமாக இருந்தது//

நல்லாச் சிரிச்சேன்....

பித்தன் on January 18, 2010 at 10:12 AM said...

ஹா..ஹா..ஹா..

மோகன் குமார் on January 18, 2010 at 10:20 AM said...

:)) Nice. Ending is like a story punch.

||| Romeo ||| on January 18, 2010 at 10:23 AM said...

\\கிரைண்டர் கார்க்கி //

ஆள பார்க்கும் போதே தெரிஞ்சது. செம தீனி சாப்பிடுவிங்கன்னு .

ஸ்ரீமதி on January 18, 2010 at 10:24 AM said...

:)))))))))

கார்க்கி on January 18, 2010 at 10:33 AM said...

நன்றி நடராஜ்

நன்றி கேபிள்

நன்றி ராஜேஷ்

நன்றி மணி :))

மேவீ, உனக்கு இருக்கு..

தராசண்ணே, பதிவு முடியும்போதே நான் கிரைண்டர் கார்க்கியா இல்லாம ஆயிட்டேனே :))

ராஜூ, ஆனாலும் உன் நிலமை ரொம்ப மோசம்ப்பா

நன்றி தமிழரசி

நன்றி பித்தல்

நன்றி மோகன்

ரோமியோ, இப்ப யாராவது கேட்டாஙக்ளா சகா? :))

ஸ்ரீமதி, மறுபடியும் முதல்ல இருந்தா??????ஆவ்வ்வ்

தர்ஷன் on January 18, 2010 at 10:43 AM said...

As Usual நல்லா இருந்துச்சு

Anbu on January 18, 2010 at 10:52 AM said...

:-)))))

ஜ்யோவ்ராம் சுந்தர் on January 18, 2010 at 11:03 AM said...

கார்க்கி, நல்லா எழுதியிருக்கீங்க. தூள்!

காயத்ரி சித்தார்த் on January 18, 2010 at 11:24 AM said...

//கடைசியாக அவர் ஆஃபாயில் போடும் சமயம் வந்ததும் ”விடு மச்சி. உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பொறக்க போறா?” என்ற டயலாக்கோடு நகர்ந்து விட வேண்டும். இல்லையெனில் கறை நல்லது விளம்பரத்தில் நம் கதையும் வந்துவிடக்கூடும்.//

:))))))))))))

அனுஜன்யா on January 18, 2010 at 11:33 AM said...

சுவாரஸ்ய நடை. நல்லா இருக்கு கார்க்கி.

அனுஜன்யா

ப்ரியமுடன் பாலா on January 18, 2010 at 11:48 AM said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் கார்க்கி!!!

இந்த விஷயத்தில் நானும் உங்கள் கட்சி என்பதால், பலவற்றையும் அனுபவித்து இருக்கிறேன்.

BTW, கடைசி வரி உண்மையா? :-)

taaru on January 18, 2010 at 11:56 AM said...

கார்க்கி: ஆத்தா நானும் பாசாயிட்டேன்... பின்ரீகளே தல..

பலா பட்டறை on January 18, 2010 at 11:57 AM said...

//”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றேன்//

நீராட்டு விழாவா கார்க்கி.. வாழ்த்துக்கள். ::))

நர்சிம் on January 18, 2010 at 12:06 PM said...

கார்க்கி உங்க மகரா?

பரிசல்காரன் on January 18, 2010 at 12:23 PM said...

சகா...

தூள்ன்னு பெரிய தலைகளே சொல்லிடுச்சு. அப்பறம் என்ன?

இப்படித்தான் சகா. .. நாம மொக்கைன்னு நெனைக்கறது நகைச்சுவையாய்டும், நகைச்சுவைன்னு போடறது மொக்கையாய்டும். இந்த ரீடர்ஸ புரிஞ்சுக்கவே முடியலடா நாராயணா.....

பிள்ளையாண்டான் on January 18, 2010 at 12:42 PM said...

எழுத்து நடை நல்லாயிருக்கு! மேலே சொன்ன எல்லா உளற‌ல்களையும் நீங்களும் தற்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்... யார் அடுத்த பெரிய மனுஷன்? :‍‍)))))))))))))

குசும்பன் on January 18, 2010 at 1:02 PM said...

//கால் கிலோ மிக்சருக்கும், வறுத்த கடலைக்கும் நன பட்ட பாட்டைக் கண்டு எனக்கு வெறுப்பு வந்தது.//

அப்படி எல்லாம் கோவம் வரக்கூடாது, நமக்கு நோக்கம் என்ன சைட் டிஸ் அதுல மட்டும் குறியா இருக்கனும், வெறும் பெப்ஸி மட்டும் குடிச்சுட்டு நாம கொடுக்கும் அலப்பறைய பார்த்து அவன் அவன் மிரளனும் அப்படி செஞ்சா பேசாம இருப்பானுவோ!

எத்தனை வருச அனுபவம், எத்தனை டேபிள் எத்தனை நண்பர்கள்!

இன்னும் அதே பெப்ஸியுடன்

கார்க்கி on January 18, 2010 at 2:25 PM said...

நன்றி தர்ஷன்

நன்றி அன்பு

நன்றி சுந்தர்ஜி

நன்றி காயத்ரி

அனு, என்ன இது? பெரிய தலைங்க எல்லாம் பாராட்டுறத பார்த்தா.. இது காமெடியா இல்லையா?ஆவ்வ்

ஹிஹிஹி.நன்றி பாலா. இப்படி பப்ளிகல கேட்டா எப்படி? :))

டாரு, தாறுமாறா? நன்றி

பலா, பீராட்டு விழா மாம்ஸ்

நர்சிம், அதானா? இருந்தாலும் விளங்கறாப்ல சொல்லுங்களேன்

பரிசல், யோவ் நான் என்ன இத மொக்கைன்னு உங்க கிட்ட சொன்னேனா?லேபிள் கூட நகைச்சுவை மட்டும்தான்(மட்டம் இல்லைங்கண்னா)

பிள்லையாண்டான், அப்படியென்றும் கூற இயலாது :))

குசும்பன், பெப்சியவாது மாத்துங்க தல..

சுசி on January 18, 2010 at 2:27 PM said...

நகைச்சுவையும் எழுத்துநடையும் கலந்துகட்டி கலக்குது கார்க்கி..

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க :)))

சி.வேல் on January 18, 2010 at 2:51 PM said...

கார்க்கி.. ஹா..ஹா..ஹா.. சூப்பர்

repeat

புன்னகை on January 18, 2010 at 3:01 PM said...

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதிரி, உங்கப் பதிவுக்கு பெண்களை முந்திக் கொண்டு ஆண்கள் கூட்டம் அணிவகுத்து வந்து பின்னூட்டம் போட்டிருக்காங்க??? என்ன நடக்குது??? :p

புன்னகை on January 18, 2010 at 3:14 PM said...

//எனக்கு 18 வயது(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா).//
மறைந்திருந்து சொல்லவரும் மர்மம் தான் என்ன??? ;-)
இப்படி மறச்சு போட்டா நாங்க கண்டு பிடிக்க மாட்டோமா??? வயசாகுதுன்னு ரொம்ப வருத்தப்படுற மாதிரி தெரியுது. உங்க வீட்டு தொலைபேசி நம்பர் தாங்க. அம்மா கிட்ட பேசிடறோம். எங்களுக்காக எவ்ளோ எழுதுறீங்க! உங்களுக்காக இது கூட செய்யலைனா எப்படி??? :-)

நர்சிம் on January 18, 2010 at 3:17 PM said...

//புன்னகை said...
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதிரி, உங்கப் பதிவுக்கு பெண்களை முந்திக் கொண்டு ஆண்கள் கூட்டம் அணிவகுத்து வந்து பின்னூட்டம் போட்டிருக்காங்க??? என்ன நடக்குது??? :p
//

ரைட்ட்ட்ட்ட்டு..

//நர்சிம், அதானா? இருந்தாலும் விளங்கறாப்ல சொல்லுங்களேன்//

அதே தான் சகா..அசோகரு உங்க மகரா மாதிரி..கலக்கல்..

குறும்ப‌ன் on January 18, 2010 at 3:49 PM said...

'க‌ல‌க்கிட்டீங்க‌' - நான் ப‌திவை சொன்னேன்:)))

பேரரசன் on January 18, 2010 at 3:58 PM said...

சகா அழகு ...!ஆனா நீங்க ரொம்ப கெட்ட பையன் .....

Anbarasu Selvarasu on January 18, 2010 at 4:08 PM said...

நீங்க பன்றது சரியா கார்க்கி?. எப்படியோ நல்லா எழுதியிருக்கீங்க.

அன்பரசு செல்வராசு

அன்புடன் அருணா on January 18, 2010 at 4:39 PM said...

ஹா..ஹா..ஹா.. சூப்பர் கார்க்கி!கடைசி வரி உண்மையாயில்லாமல் இருக்கட்டும்....

கார்க்கி on January 18, 2010 at 4:53 PM said...

நன்றி சுசி

நன்றி வேல்

// புன்னகை said...
//எனக்கு 18 வயது(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா).//
மறைந்திருந்து சொல்லவரும் மர்மம் தான் என்ன???//

கண்டுபுடிச்சிட்டிங்களா? அது ஒருத்தருக்கு சீக்ரெட் கோடுங்க.. :))

நர்சிம், செம கலக்கல் பாஸ். :))

குறும்பன், நன்றி

பேரரசன் அப்போ நான் பேரழகனா?

நன்றி அன்பரசு. எதுங்க தப்பு?

டீச்சர் , நான் நல்லப் பையன் தான் டீச்சர் :))

வெற்றி on January 18, 2010 at 4:54 PM said...

ஹா ஹா ஹா :))..

எல்லா வரிகளிலும் நகைச்சுவை இரண்டற கலந்திருக்கிறது சகா..:)))

வெற்றி on January 18, 2010 at 4:56 PM said...

போன பதிவுல டேமேஜ் ஆன உங்க இமேஜ இந்த பதிவு தூக்கி நிறுத்திடும் :P

Tamilmoviecenter on January 18, 2010 at 6:16 PM said...

சூப்பர் சகா

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on January 18, 2010 at 6:28 PM said...

//.. பேரரசன் அப்போ நான் பேரழகனா? ..//

இதுதான் சூப்பர் நகைச்சுவை..

@ பேரரசன், இந்த அவமானம் உங்களுக்கு தேவையா..??!!

அதிலை on January 18, 2010 at 7:08 PM said...

very nice.. oru flash back poyittu vara vasathiya irunthathu

பேரரசன் on January 18, 2010 at 7:49 PM said...

பேரரசன் அப்போ நான் பேரழகனா?

சகா.. நீங் கண்டிப்பா...

பெயர் அழகன் தான்......

எப்பூடி...?

@பட்டிகாட்டான்
என்னை வச்சு காமெடி,கீமடி பண்ணுலையே...

Anbarasu Selvarasu on January 18, 2010 at 8:13 PM said...

சரியாய் போச்சி. ”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா"

இரா. வசந்த குமார். on January 18, 2010 at 10:17 PM said...

dear karki...

have a look here.i tried to fulfill ur wish. :)

http://kaalapayani.blogspot.com/2010/01/blog-post_18.html

Tnx.

தமிழ்ப்பறவை on January 18, 2010 at 10:55 PM said...

ரசித்தேன்...
ஏழுவோட முன்கதையை எவ்ளோ சீரியஸா எழுதி இருக்கீங்க... மிக ரசித்தேன்...

Subha on January 18, 2010 at 10:57 PM said...

karki, nice flow...
I want to share something here. I introduced blogs to a few of my friends a while ago...last week one of them phoned me and asked about, why alcohol is being the integral part of blogging....his perception is..out of 10 bligs he read..at least one talk about greatness of alcohol....apparently being a reader i have no answer...but all writers will have some....you may give a "pinnavinuthuva" answer to the poor chap...

தாரணி பிரியா on January 18, 2010 at 11:14 PM said...

//சிறுவயதில் இருந்தே எனக்கு//

siruvayathil mattum :) appadinu irakanum

தாரணி பிரியா on January 18, 2010 at 11:14 PM said...

aha me the 50 :) treat edu kondadu :)

கார்க்கி on January 18, 2010 at 11:16 PM said...

அனைவருக்கும் நன்றி..

வசந்த், ரொம்ப நன்றி சகா

சுபா,
அபப்டியா? நான் நகைச்சுவைக்கு மட்டுமே அதை பயன்படுத்துகிறேன். தண்ணியடித்தால் காமெடியாகிறது என்றால் அதை சப்போர்ட் செய்கிரேன் என்று அர்த்தம் இல்லையே :)))

தாரணி பிரியா on January 18, 2010 at 11:18 PM said...

//(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா).//

ஆ. ஒ லாஜிக்கே சூப்பர்

//உன்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒன்னை பக்கத்தில் இருக்கிறவன்கிட்ட கொடுத்தா அது சோஷலிசம். ரெண்டு மாடையும் அரசே எடுத்துக்கிட்டு உனக்கு பால மட்டும் ஃப்ரீயா கொடுத்தா அது கம்யூனிஸம். அந்த பாலுக்கு காசு கேட்டா அது ஃபாஸிஸம்.ஒரு மாட்ட வித்து ஒரு காளை மாட்ட நீ வாங்கினா அது கேப்பிட்டிலிஸம்//

நிஜமாவே தேங்க்ஸ். இப்படி ஈஸியா புரிய வெச்சதுக்கு

தாரணி பிரியா on January 18, 2010 at 11:19 PM said...

சூப்பர் கார்க்கி :)

ஜோ/Joe on January 20, 2010 at 12:01 PM said...

கலக்கலா வந்திருக்கு!

problogger on January 20, 2010 at 12:16 PM said...

hi whats up guys guess what i have just started a funny facebook status updates some
ultimate creative facebook status updates on net

Karthik on January 20, 2010 at 2:14 PM said...

மீள்பதிவோ நு நினைச்சேன். உங்களோட பழைய ஸ்டைல். அட்டகாசம்ப்பா!!

amas on September 22, 2011 at 6:00 PM said...

What justification, only you can do it convincingly! (yours convincingly :)) )
amas32

 

all rights reserved to www.karkibava.com