Jan 15, 2010

செல்வாவின் வாந்தி


 

ஆயிரத்தில் ஒருவனை சிலர் கொண்டாடலாம். வாழ்க அந்த புண்ணியவான்கள். இந்த கருமத்தை பார்த்து தொலைத்ததற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று யாராவது சொன்னால் தேவலை. பொதுவாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எல்லாம் எழுதுவது கிடையாது. ஒரு ரசிகனின் பார்வையில் என்று விஜய் படத்திற்கும் இன்னும் சில படங்களுக்கும் எழுதியதுண்டு. அதெல்லாம் விமர்சனம் கிடையாது. இந்தப் பதிவும் அப்படித்தான்.

கேட்டதையெல்லாம் உடனே கொடுக்க தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அப்படி ஒரு இ.வான்னா கிடைத்துவிட்டார் செல்வாவுக்கு. அதற்காக ஸ்கிரிப்ட்டில் கூட அவர் சடாரென புது புது ஐட்டங்களை சொருகிக் கொண்டே போவது தலைவலி.

ஆண்ட்ரியாவிடம் கல்யாணம் பண்ணா உங்களதான் பண்ணுவேன்னு சொல்லும் போது கார்த்தி ஆஃப்ரிக்காவின் சிட்டிசனாக தெரிகிறார். படியிறங்கி வந்து ரீமா சென்னிடம் ரிப்பீட் செய்யும்போது இங்கிலாந்து சிட்டிசனாக ஜொலிக்கிறார்.

முதலில் சந்திக்கும் காட்டுவாசிகளிடம் அவர்களின் மொழியில் பேசுகிறார் ஆண்ட்ரியா. காணாமல் போன அவரின் அப்பா அவருக்கு அஞ்சல் வழியில் சொல்லிக் கொடுத்திருப்பாரோ?காட்டுவாசிகளின் போஸ்ட் மேன் வாழ்க.

அடுத்த செட் காட்டுவாசிகள் அட்டாக் ஒரு காமெடி. ரீமாவைத் தாண்டி போய் பின்னாலிருப்பவரையெல்லாம் போட்டுத் தாக்கும் போது இவர் தீபாவளி கேப் வெடிப்பது போல் ஜாலியா சுட்டுக் கொண்டிருக்கிறார். என்னா மேக்கிங்?

இன்னொரு காமெடி. கூட்டத்தில் பாதி பேருக்கு மேல் கொல்லப்பட்டாலும் அடுத்தக் காட்சிகளில் மீண்டும் கூட்டமாக செல்கிறார்கள். செல்வாவுக்கு என்ன தோன்றுகிறதோ அதற்கேற்றார் போல நடிகர்களின் எண்ணிக்கையும் சூழ்நிலைகளும் மாற்றிக் கொள்வார். போன காட்சியில் இத்தனை பேர் இல்லையே என்றெல்லாம் கேட்கக்கூடாது.

பாம்புகள் துரத்தம் காமெடி டாப். வெளியே ஆயிரக் கணக்கில் பாம்புகள் சூழ திடிரென டெண்ட்டுக்கள் இருந்து அதே தீபாவளி துப்பாக்கியுடன் வரும் ரீமா பாம்புகளை தைரியமாக சுட்டுத் தள்ளுவார். ஆனால் அந்தக் காட்சி முடிவில் கார்த்தி மீது ஆண்ட்ரியாவும் ரீமாவும் ஏறினால் நல்லா இருக்குமே என்று செல்வாவுக்குத் தோன்ற ரீமா அலறியபடி ஏறுவார். அப்படித்தான். கம்முனு பாருங்க

எதிர்பாராமல் வந்த பாம்புகளால் எல்லாத்தையும் அம்போ என விட்டுவிட்டு தண்ணீரில் குதித்து செல்லும் மூவர் குழுவுக்கு திடிரென ஓலைச்சுவடியும் திசைக்காட்டியும் தேவைப்பட சட்டென வந்துவிடும். தயாரிப்பாளர் உடனே கொடுத்தா ஓக்கே. திரைக்கதை ஆசிரியரும் தேவைப்படும் வஸ்துக்களை நினைத்த நேரத்திற்கு சொருகுவது. ங்கொய்யால

இந்த மூவரும் போகும் வழியில் சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காமல் தவிப்பார்களாம். ஆனால் அந்தப் பாலைவனத்தில் அவ்வளவு பெரிய பாறைகளை அசால்ட்டாக தள்ளிவிடுவார்களாம். அதுவும் அந்த கடைசி ஃப்ரேமில் மூவரும் ஆளுக்கு ஒரு கல்லை தள்ளிவிடுவார்களாம். டேய் டேய். கதைல வெயிட்டா எதுவுமே இல்லைன்னு யாராவது சொல்லிடப் போறாங்கன்னு வச்சிங்களா?

இப்போ ஒரு பாட்டு வச்சா நல்லா இருக்குமில்ல? குத்துப் பாட்டு வைக்கனுமே? ஆனா லாஜிக்(?) மீறக்கூடாது. அப்ப மூவரும் சரக்கடிக்கனும். காணாம போன ஆராய்ச்சியாளர் பை ஒன்ன தொங்க விடு. விட்டேன் சார். அந்த பள்ளத்துல சரக்கு பாட்டில் ஒன்னு போடு. போட்டேன் சார். மூணு பேரும் குடிங்க. குடிச்சோம் சார். ரைட்டு பாட்டு. உன் மேல ஆசதான். டேய் டேய் டேய்

பாட்டு முடிஞ்சுது. ரொம்ப நேரமா ஓடறோமோ? இண்ட்டெர்வெல். சும்மா விட்டா எப்படி? கார்த்தி ஆண்டிரியவ அடி. கார்த்தியை சுடும்மா ரீமா. கார்த்தி கீழ விழாதிங்க. இது ஃபேண்ட்டசி படம். அப்படியே நெஞ்சுல குண்டோட ஓடுங்க. ஒன் நிமிட். சும்மா ஓடுனா எப்படி? லூசு மாதிரி சிரிச்சிட்டே ஓடுங்க. பார்க்கிறவங்க அப்படி ஆயிட்டாலும் படத்தோட ஒன்றிட்டோம்னு நினைப்பாங்க இல்ல. ஆங். பிரேக்.

அதுக்கப்புறம் அன்லிமிட்டெட் சிரிப்புதான். அதெல்லாம் எழுதினா அவ்ளோதான். எனக்கு புரிஞ்ச ஒரு விஷயம். அந்த சோழ மக்களை ஈழத்தமிழர்களாக சித்தரிக்கிறார்கள். ரீமா சோனியா போல் அவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். இதில் பார்த்திபன் பிரபாகரனாம். ஆனால் கடைசியில் கார்த்தியை காட்டி சோழனின் பயணம் தொடரும் என்கிறார்கள். அப்போ கார்த்தி யாரு? வைகோவா? ஐ.பி.கே.எஃபின் கொடுமைகளை ஒத்த காட்சிகளும் உண்டு. ஆனா அதன் பிறகுதானே சோனியா பழிவாங்க தூண்டிய சம்பவம் நடந்தது?இதெல்லாம் என் கற்பனைதான் என்றாலும் அதற்கான காரணங்களை என்னால் சொல்ல முடியும்

யாருமே நுழைய முடியாத அந்த இடத்தில் இருந்து அழகம்பெருமாள் தனது செல்லில் தகவல் சொல்லுவாராம். ஆயிரக்கணக்கில் வீரர்கள் ஹெலிகாப்டரில் வருவார்களாம். வருபவர்கள் எல்லாமே ரவுடிகள் போலவே இருப்பார்களாம். கூடவே கேஸ் கேஸாக பியரோடு வருவார்களாம்.இன்னும் ஆயிராமாயிரம் ளாம்.

சோழ நாட்டு பெண்களின் மார்பில் இருந்து ரத்தம் வருவதைப் போல் காட்டினார்கள். பஞ்சமாம். எல்லாம் சோமாலிய நாட்டினர் போல் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையும் விட்டுவைக்கவில்லை நம்ம ராணுவம். வாயில் வண்டை வண்டையாக வருகிறது.

இதெல்லாம் உலக சினிமா. பின்நவீனத்துவ படமென்று சொல்பவர்களுக்கு… இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவிக்கனும்ன்னு சொல்பவர்களுக்கு. முதலில் முழு ஸ்க்ரிப்ட்டை தயார் செய்தபின் ஷூட்டிங் செல்ல வேண்டுமென்ற பால பாடம் கூட தெரியாத இயக்குனர்கள் இருக்கும் வரை தமிழ்சினிமா உருப்படாது.

பார்த்திபன் வரும் காட்சிகளுக்கு ஜி.வி.பிரகாஷின் பிண்ணனி இசை மசலா மிக்ஸை நினைவுப்படுத்துகிறது. சி.ஜி வேலையெல்லாம் பல் இளிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவும் கலையும் ஆறுதல் என்றாலும் செத்தவனுக்கு பால் ஊற்றுவது போலதான்.செல்வா? உங்கள் மேலிருந்த மதிப்பு, நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகிவிட்டன. பாவம் கார்த்தி. பாவம் தயாரிப்பாளர். பாவம் நான். தப்பித்தவர் ரீமா மட்டுமே.

பி.கு: மசால பட ரசிகனான உனக்கு இதெல்லாம் ஓவரா இல்லையா என்பவர்கள் படம் பார்த்துவிட்டு திட்டுங்கள்.

படம் பார்த்துவிட்டு வந்தவுடன் எழுதியது. மீண்டும் படித்து சரிபார்க்க பிடிக்கவில்லை. அந்த மனநிலையை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு வேளை உங்களுக்கு புரியவில்லை என்றால் இதையும் பின்நவீனத்துவ பதிவென்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது எனக்கும் செல்வாவுக்கு ஒரே ஒரு வித்தியாசம். நான் என் செலவில் என் ஆசையைத் தீர்த்துக் கொண்டேன். ஆனால் உங்கள் ஒருவரின் ஆசைக்கு………..

82 கருத்துக்குத்து:

சங்கர் on January 15, 2010 at 11:00 PM said...

அதுதான் எல்லாமே கற்பனைன்னு முதலிலேயே டிஸ்கி போட்டுட்டாருல்ல (படம் ஓடும் என்பதயும் சேர்த்து)

நானும் ஒரு வாந்தி எடுக்கலாம்னு இருக்கேன், முடிஞ்சா நாளைக்கு பார்க்கலாம்,

ஆமா, படம் பார்த்ததுக்கு அப்புறம் கேபிள்கிட்ட பேசினீங்களா?

தமிழ்ப்பறவை on January 15, 2010 at 11:14 PM said...

//கார்த்தி மீது ஆண்ட்ரியாவும் ரீமாவும் ஏறினால் நல்லா இருக்குமே//
ஹி...ஹி....அந்த மாதிரிப் போகுதா படம்...ச்சீய்ய்ய்ய்ய்....
//இப்போ ஒரு பாட்டு வச்சா நல்லா இருக்குமில்ல? குத்துப் பாட்டு வைக்கனுமே? ஆனா லாஜிக்(?) மீறக்கூடாது. அப்ப மூவரும் சரக்கடிக்கனும். காணாம போன ஆராய்ச்சியாளர் பை ஒன்ன தொங்க விடு. விட்டேன் சார். அந்த பள்ளத்துல சரக்கு பாட்டில் ஒன்னு போடு. போட்டேன் சார். மூணு பேரும் குடிங்க. குடிச்சோம் சார். ரைட்டு பாட்டு. உன் மேல ஆசதான். டேய் டேய் டேய்//
நல்ல சாங் லீடு...
//முதலில் முழு ஸ்க்ரிப்ட்டை தயார் செய்தபின் ஷூட்டிங் செல்ல வேண்டுமென்ற பால பாடம் கூட தெரியாத இயக்குனர்கள் இருக்கும் வரை தமிழ்சினிமா உருப்படாது.//
சத்தியமான வரிகள்...

gulf-tamilan on January 15, 2010 at 11:27 PM said...

//முதலில் முழு ஸ்க்ரிப்ட்டை தயார் செய்தபின் ஷூட்டிங் செல்ல வேண்டுமென்ற பால பாடம் கூட தெரியாத இயக்குனர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா உருப்படாது.//
உண்மை!!!

அனுஜன்யா on January 15, 2010 at 11:33 PM said...

என்ன கார்க்கி இவ்வளவு கோவம்? பின்ன எப்புடி என்னோட கவிதய மட்டும் ரசிக்கிற? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ? சரி சரி.

எனக்கு என்னமோ எல்லாரும் விஜய் படத்தை நக்கல் பண்ணியதால் நீ இப்படி ஒரு ’நல்ல’ படத்த குறை சொல்றனு தோணுது :))

நீ சொல்ற மாதிரி ஈழ மக்களைப் பற்றிய பூடகமான திரைப்படம்னா அதுக்காகவே செல்வாவைப் பாராட்ட வேண்டாமா?

அனுஜன்யா

தர்ஷன் on January 16, 2010 at 12:09 AM said...

என்ன சகா இத்தனை காட்டம்
எல்லோரும் தளபதி படத்தில் லாஜிக் பார்த்தால் என்ன ஆகும்
வெளியுலகத் தொடர்பின்றி 800 வருடமாய் மீள தம் தேசம் சென்றடைவோம் என நம்பும் ஒரு கூட்டம் அவர்களைத் தேடும் தொல்பொருள் ஆய்வாளர்கள், பலி வாங்குவத்கெனவே வருடங்களாய் காத்திருக்கும் பரம்பரையை சேர்ந்த பெண் என்பதே சுவாரசியமாய் இல்லை.
இதை தெளிவான திரைக்கதை மூலம் சொல்ல வில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
இருந்தாலும் யோசித்துப் பாருங்கள் ஹீரோவுக்கு சம்பளமாகவும் பாடல்களில் செட் போடுவதற்கெனவும் மட்டுமே கோடிகள் செலவுச் செய்யப் படும் நிலையில் கிட்டத் தட்ட அந்த 32 கோடியும் இத்தனைக் காலத்திற்கான உழைப்பும் காட்சிகளில் தெரியவில்லையா? சரியான ஒத்துழைப்பும் இன்னமும் நிதியும் இருந்திருக்கும் பட்சத்தில் படத்தை மேலும் நேர்த்தியாய் எடுத்திருப்பார் என நம்புகிறேன்.
ம்ம் எனக்கு செல்வராகவனை ரொம்பப் பிடிக்கும் So என் கருத்துக்களில் அகவயம் செல்வாக்கு செலுத்தலாம்.
இருந்தாலும் நல்லதாய் ஒரு வார்த்தையும் சொல்ல வில்லையே சகா? குறைகள் மட்டும் சொல்லி இருக்கிறீர்கள்.

முகிலன் on January 16, 2010 at 12:11 AM said...

அய்யா, கார்க்கி படம் நல்லால்லன்னு சொல்லிட்டாரு அப்ப பாக்கலாம்..

;0))

நெஜம்மாவே படம் கொத்தா சகா?

கார்க்கி on January 16, 2010 at 12:17 AM said...

சங்கர், இல்லையே ஏன்?

பறவை, சத்யமா சகிக்கல படம்

நன்றி தமிழன்

அனு, இதை நான் எதிர்பார்த்தேன். ஆனா உங்களிடம் இருந்து இல்லை :))

எல்லா விதமான சினிமாவையும் ரசிப்பவன் நான். ஆனால் அது அதுக்காக நியாயத்தை அவை செய்யும் போது. இது வழக்கமான சினிமா இல்லை. ஆனால் என் கோவமெல்லாம் ஒரு சரியா ஸ்கிர்ப்ட் இல்லாமல் இப்படி வீணடிக்கும் இயக்குனர்கள் எப்படி சினிமா என்னும் கலையை வாழ வைப்பார்கள்? ஏற்கனவே நான் கடவுளிலும் இதே போன்ற கருத்தைத்தான் நான் சொன்னேன். முயற்சியை பாராட்டலாம். ஆனால் ஸ்கிர்ப்ட்டை முழுமை செய்த பின் படமெடுத்திருந்தால் நிச்சயம் இத்தனை வருட உழைப்பு வீணாகி இருக்காது

தர்ஷன்,பி.கு படிச்சிஙக்ளா? படிச்சும் இப்படி ஒரு பின்னூட்டமென்றால் நன்றி.

படிக்கவில்லையென்றால் படிச்சிட்டு வாங்க. காட்சிகளில் தெரியும் உழைப்பு நிச்சயம் நாலு வருடத்திற்கான நியாயத்தை தரவில்லை.

முகிலன், நடத்துங்க பாஸ்> படம் பார்த்துட்டு சொல்லுங்க. ஆனா என் சின்சியர் அட்வைஸ் தயவு செய்து வேண்டான்.

முரளிகுமார் பத்மநாபன் on January 16, 2010 at 12:19 AM said...

cool sakaa, naan keralaavil irukken vanthathum paarkkanum appadinu ninachcha padam, cable-lum neengalum solratha paarthtaa..... sari vidunga oru nalla "thamil padam" paarkkalaam... :-)

Cable Sankar on January 16, 2010 at 12:31 AM said...

ithai vida கோபத்திலிருந்தேன் படம் பார்த்துவிட்டு..

வெற்றி on January 16, 2010 at 12:41 AM said...

சகா நீங்களுமா :((

Saravana Kumar MSK on January 16, 2010 at 12:49 AM said...
This comment has been removed by the author.
Saravana Kumar MSK on January 16, 2010 at 12:50 AM said...

உங்கள் கருத்து உங்களுக்கு சரியெனப்படுகிறது. என் கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. பார்வைகள் வேறு வேறு அவ்ளோதான். என் தளத்திலேயே இந்த பதிவிற்கான பதில்களை எனக்கு தெரிந்தவரை புரிந்தவரை சொல்லிவிட்டேன்.

||| Romeo ||| on January 16, 2010 at 12:57 AM said...

ஒவ்வோருக்கும் ஒரு ரசனை சகா. உங்களுக்கு வாந்தி என்கிற வார்த்தை எனக்கு இருட்டு கடை அல்வா. மற்றவர்களுக்கு அவர் அவர்களுக்கு தெரிந்த வார்த்தை.

susi on January 16, 2010 at 2:18 AM said...

//இந்த கருமத்தை பார்த்து தொலைத்ததற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று யாராவது சொன்னால் தேவலை.//

உங்க தலைப்பே பெரிய பரிகாரம்தான் கார்க்கி :)))

susi on January 16, 2010 at 2:22 AM said...

//கூட்டத்தில் பாதி பேருக்கு மேல் கொல்லப்பட்டாலும் அடுத்தக் காட்சிகளில் மீண்டும் கூட்டமாக செல்கிறார்கள்.//

தலைப்பை படிச்சதுமே லைட்டா ஆரம்பிச்ச சிரிப்பு இத படிச்சதும் ரொம்ப பெரிசாயிடுச்சு..

susi on January 16, 2010 at 2:23 AM said...

//பாட்டு முடிஞ்சுது. ரொம்ப நேரமா ஓடறோமோ? இண்ட்டெர்வெல். சும்மா விட்டா எப்படி? கார்த்தி ஆண்டிரியவ அடி. கார்த்தியை சுடும்மா ரீமா. கார்த்தி கீழ விழாதிங்க. இது ஃபேண்ட்டசி படம். அப்படியே நெஞ்சுல குண்டோட ஓடுங்க. ஒன் நிமிட். சும்மா ஓடுனா எப்படி? லூசு மாதிரி சிரிச்சிட்டே ஓடுங்க. பார்க்கிறவங்க அப்படி ஆயிட்டாலும் படத்தோட ஒன்றிட்டோம்னு நினைப்பாங்க இல்ல. ஆங். பிரேக்.
அதுக்கப்புறம் அன்லிமிட்டெட் சிரிப்புதான். //

அப்புறம் இல்ல நான் இப்பவே..

susi on January 16, 2010 at 2:24 AM said...

//எனக்கு புரிஞ்ச ஒரு விஷயம். அந்த சோழ மக்களை ஈழத்தமிழர்களாக சித்தரிக்கிறார்கள். ரீமா சோனியா போல் அவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். இதில் பார்த்திபன் பிரபாகரனாம். ஆனால் கடைசியில் கார்த்தியை காட்டி சோழனின் பயணம் தொடரும் என்கிறார்கள். அப்போ கார்த்தி யாரு? வைகோவா? ஐ.பி.கே.எஃபின் கொடுமைகளை ஒத்த காட்சிகளும் உண்டு. ஆனா அதன் பிறகுதானே சோனியா பழிவாங்க தூண்டிய சம்பவம் நடந்தது?இதெல்லாம் என் கற்பனைதான் என்றாலும் அதற்கான காரணங்களை என்னால் சொல்ல முடியும்//

இதுக்காக பாக்கலாம்னு தோணுது. ஆனா சமீபத்தில ஒரு படம் பார்த்த இனிய நினைவுகள் என் மனசில இப்பவும் இருக்கு..

அத கெடுத்துக்க வேண்டாமேன்னு பாக்கறேன்..

Anonymous said...

//அனுஜன்யா on January 15, 2010 11:33 PM said...

எனக்கு என்னமோ எல்லாரும் விஜய் படத்தை நக்கல் பண்ணியதால் நீ இப்படி ஒரு ’நல்ல’ படத்த குறை சொல்றனு தோணுது :))//

இந்த லாஜிக் நல்லா இருக்கு :)
ஆனாலும் படம் நாளைக்கு பாக்கத்தான் போறோம்.

பா.ராஜாராம் on January 16, 2010 at 4:48 AM said...

//ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் கல்லூரி நண்பன் அழைத்து எத்தனை முறை பார்த்தாய் என்றான். ரெண்டு தடவடா என்றால், இப்படி ஒரு தல படம்(அவன் அஜித் ஃபேன்) வந்திருந்தால் நான் வீட்டுக்கே போக மாட்டேன். நாலு ஷோவும் பார்ப்பேன் என்கிறான். சத்யமில் வியாழன் வரை 90% ஃபுல் ஆகிவிட்டது. இது படத்தின் மவுத் டாக் வெளிவந்த பின் ரிச்ர்வ் செய்யப்பட்ட நாட்கள். ஆக வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப்படம் என்பது உறுதி ஆகிவிட்டது.//


// பி.கு: மசால பட ரசிகனான உனக்கு இதெல்லாம் ஓவரா இல்லையா என்பவர்கள் படம் பார்த்துவிட்டு திட்டுங்கள்.//

ரெண்டு படமும் பார்த்துட்டேன் சார்.கார்க்கின்னு கூப்பிடுறவன் சார்ன்னு கூப்பிட்டா அது ஒரு திட்டு தானே..ஒத்துக்கிறீங்களா?

ஒத்துகிட்டா..

சார்..சார்..சார்...

என்ன கார்க்கி சார்,நீங்க?

:-)

livingston baba on January 16, 2010 at 7:24 AM said...

silvavin vantheinu title parthean ananal nann selvavea oru vantheinu nenichean .nall padaingalum yholvi padam aga una mathri 2 blogers irunthealea pothum


xdfsdfsdf

sdf
sd
f
sdf
sd
f
sdf
s
df
sd
f
sd
f
sdf
s
df

Karthikeyan G on January 16, 2010 at 8:42 AM said...

ஐயா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை, என் நண்பன் "ஆயிரத்தில் ஒருவன்" படம் பார்த்துட்டு நல்லா இல்லேன்னு சொன்னான், ஏன்னா "இளைய தளபதி விஜய் வாழ்க"னு வசனம் படத்துல இல்லவே இல்லையாம்.

இந்த மாதிரியான தமிழ் சினிமா ரசிகர்களை நினைச்சா 'ரொம்ப பெருமையா' இருக்கு..

டம்பி மேவீ on January 16, 2010 at 9:23 AM said...

"வெளியே ஆயிரக் கணக்கில் பாம்புகள் சூழ திடிரென டெண்ட்டுக்கள் இருந்து அதே தீபாவளி துப்பாக்கியுடன் வரும் ரீமா பாம்புகளை தைரியமாக சுட்டுத் தள்ளுவார். ஆனால் அந்தக் காட்சி முடிவில் கார்த்தி மீது ஆண்ட்ரியாவும் ரீமாவும் ஏறினால் நல்லா இருக்குமே என்று செல்வாவுக்குத் தோன்ற ரீமா அலறியபடி ஏறுவார்."


ஹீரோக்குன்னு எதாச்சு வேலை குடுக்க வேண்டாமா ????

மோகன் குமார் on January 16, 2010 at 9:23 AM said...

கார்க்கி நீங்க எழுதியதில் வாந்தி என்ற ஒரு வார்த்தை தவிர (அந்த வார்த்தையை தவிர்த்திருக்கலாம்) மற்ற அனைத்துடனும் ஒத்து போகிறேன். நீங்க எழுதிய loopholes பல நானும் கவனித்தேன். அவற்றை கூட நல்ல concept என்று மன்னிக்கலாம். ஆனால் பைத்திய காரத்தனமான violence & torture இவற்றை கண்டு வெறுத்து போகிறது. படம் பார்த்து உடனே எழுதி உள்ளீர்கள் என்பது புரிகிறது:))

நானும் விமர்சனம் எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்க..

சங்கர் on January 16, 2010 at 9:24 AM said...

கேபிள் படம் பார்த்துட்டு இன்னும் அதிகமா வாந்தி எடுத்தாராம், அது தான் கேட்டேன்

மோகன் குமார் on January 16, 2010 at 9:25 AM said...

இந்த படத்தை ஆதரிக்கும் பலர் இன்னும் படம் பார்க்கலை. பார்க்காமல் "concept நல்லா இருக்கே!! ஏன் பார்த்தவர்கள் எதிர்க்கிறார்கள்" என்று தான் பேசி கொண்டுள்ளனர். "அந்த கொடுமையை" அவர்களும் அனுபவித்தால் பெரும்பாலான மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

டம்பி மேவீ on January 16, 2010 at 9:32 AM said...

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ........ இரண்டு ஹீரோனி இருக்காங்க ...ஏந்த அளவுக்கு கவர்ச்சி இருக்கு .....

(எனக்கு அது தான் முக்கியம் ....... )


எனக்கு என்னவோ டைரக்டர் செல்வராகவன் king solomon's mines நாவலையும் HG WELLS நாவலையும் ரொம்பவே படிச்சிருக்கார் ன்னு நினைக்கிறேன்

கார்க்கி on January 16, 2010 at 9:44 AM said...

பா.ரா,
ரசனைகள் வேறுபடும் சார். ஆனா நான் சொல்லியிருக்கும் ஓட்டைகளுக்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்? நல்ல படமென்றால் குறைந்தபட்ச லாஜிக்காவது வேண்டாமா அது புனைவென்ற போதும்? அதை பற்றி பேசாமல் வேறேதுதோ பேசி கொண்டே இருக்கிறார்கள்

@லிவிங்க்ஸ்டன் பாலா

படம் பாருங்கள். அதன் பிறகும் இது நல்ல படமென்றால்... நான் தியேட்டைல் 220 கொடுத்து பார்த்திருக்கிறேன். என் பார்வையை சொல்ல எனக்கு முழு தகுதியும் உள்ளது.

@கார்த்திகேயன்.ஜி,
உஙக்ளைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா வாழும் சார். செல்வான்னா அது ஒலகப்படமுன்னு நம்பி கண்மூடித்தன்மாக ஆதிர்ப்பவர்களுக்கும் பாலபிஷேகன் செய்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கொஞ்சமாவது மூளையை உபயோகியுங்கள்(இருந்தால்)

மோகன், அதற்குதான் பி.கு. பார்த்துவிட்டு சொல்லுங்கள்

படத்தை ஒலகப்படமென்ன்னும் அறிவு ஜீவிகள் யாரும் பதிவில் இருக்கும் குறைகளுக்கு விளக்கம் சொல்ல முயல்வில்லை. என்ன அர்த்தம்? நான் தவறாக புரிந்திருந்தால் சரி செய்யுஙக்ளேன்...

தராசு on January 16, 2010 at 10:14 AM said...

சரி, தல,

இதையும் ஒரு Passing cloud ஆ நினைச்சு லூசுல விடுங்க.

கார்க்கி on January 16, 2010 at 10:20 AM said...

தராசண்னே, அது பிராசினையில்லை. சினிமாவை கொண்டாடும் பலருக்கும் ஸ்க்ரிப்பிட்டின் அவசியம் புரியவில்லையே!!! அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஸ்க்ரிப்ட்தான் அதி முக்கியம் என்று ஹாலிவுட்காரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஸ்பீல் பெர்க் ஒரு முறை என் படம் 90% முடிந்துவிட்டது. ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி என்றார். அதை சொன்னால் கூட மறுக்கிறார்கள்.

பல நாடக்ள் அலைந்து செல்லும் அழகம்பெருமாளின் செல்ஃபோனில் ஏது சார்ஜ்? எப்படி அவருக்கு சிக்னல் கிடைத்தது? எப்படி ராணுவ வீரர்களுக்கு வழி சொன்னார்? ஓலைச்சுவடியும் திசைக்காட்இயும் இல்லாம்லே எப்படி அவர வர முடிந்தது? ராணுவ வீரர்கள் வரும்போதே பியரோட வருவார்களா? இது போல் ஆயிராமாயிரம் ஓடை. சொன்னால் அதற்கு விளக்கம் சொல்லாமல் விஜய் வாழ்கன்னு சொலலன்னா சொன்னா, வருத்தம் வருகிறது.

வேதம் புதிதில் குழந்தை சொல்லும் டய்லாக். இப்போ நான் கரையேறிட்டேன். ஆனா நீங்க இன்னும் தண்ணியிலதான் இருக்கிங்க

டம்பி மேவீ on January 16, 2010 at 10:41 AM said...

என் பின்னூட்டத்திற்கு நீங்க பதில் சொல்லவில்லையே .....எதாச்சு அரசியல் காரணங்களா

நாய்க்குட்டி மனசு on January 16, 2010 at 10:54 AM said...

அதுக்கப்புறம் அன்லிமிட்டெட் சிரிப்புதான்//
athaakkaga paarattalaame?
ayyo paavam kaarthi,
vitturunga.

கார்க்கி on January 16, 2010 at 10:56 AM said...

மேவீ, கொலைவெறில இருக்கேன் ..ஓடிப் போயிடு :)))))

தண்டோரா ...... on January 16, 2010 at 11:22 AM said...

வேட்டைக்காரனிலிருந்து கொஞ்சம் வெளியில் வாருங்கள் சகா.

கார்க்கி on January 16, 2010 at 11:30 AM said...

தண்டோரா அண்னே நான் வெளியில் வருவது இருக்கட்டும்.. ராம்ஜி உங்களுக்கு தெரிந்தவர் என்பதற்காக அதையே எல்லோருடைய பின்னூட்டத்தில் போட்டுட்டு இருக்காதிங்க..சினிமால தானே இருக்கிங்க? இந்த படம் பக்கா ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிட்டு ஷூட்டிங்கு போனதுன்னு நினைக்கிறீங்களா? இல்லையெனில் அது ஒரு நல்ல சினிமாவுக்காக முயற்சியா?

Anbu on January 16, 2010 at 11:38 AM said...

Same Blood..

:-(((((

எறும்பு on January 16, 2010 at 11:40 AM said...

இந்த படத்திற்கு ஆகும் காசை மிச்சம் பண்ணி அசல் படத்திற்கு வைத்து கொள்ளலாமா?
:)
இத ஏன் உங்ககிட்ட கேக்கிறேன் என்றால், நீங்கதான் நடுநிலையா பதில் சொல்லுவீங்க..
:)

டம்பி மேவீ on January 16, 2010 at 12:09 PM said...

"கார்க்கி said...
மேவீ, கொலைவெறில இருக்கேன் ..ஓடிப் போயிடு :)))))"

அப்படின்னா வேட்டைக்காரன் படத்தை இன்னொரு வாட்டி பாருங்க ....

damildumil on January 16, 2010 at 1:58 PM said...

மக்களே இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா, பதிவு முழுவது ஸ்கிரிப்டையும் லாஜிக்கையும் பற்றி பேசுகிறீர்களே உங்களின் விஜய் படத்தில் மட்டும் இதெல்லாம் இருக்கிறதா. முப்பது கோடியில் ஒரு குப்பையை எடுத்து அதை ஓட வைப்பதை காட்டிலும் அந்த பணத்தை வைத்து ஒரு வித்தியாசமான படத்தை எடுக்க நினைத்த செல்வா எவ்வளவோ மேல். விஜய்யை தலையில் தூக்கி வைத்து ஆடும் நீங்களேல்லாம் இந்த மாதிரி படங்களை குறை சொல்ல கூடாது. இருநூறு ருபாய் கொடுத்து படம் பார்த்ததால் இந்த படம் வாந்தின்னு சொல்லும் உரிமை இருந்தால் அதே உரிமை எனக்கும் இருக்கிறது. படம் போடுவதற்க்கு முன்னான் விஜய்,அஜித் ரசிகர்கள் உள்ளே வர அனுமதி இல்லைன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கலாம். பார்த்திபன் ஒரே ஆளாய் இருந்து ராணுவத்தை அடித்து துரத்த அவர் என்ன வேட்டைகாரனா, ஆழ்வாரா?

damildumil on January 16, 2010 at 2:09 PM said...

//மக்களே இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா, பதிவு முழுவது ஸ்கிரிப்டையும் லாஜிக்கையும் பற்றி பேசுகிறீர்களே உங்களின் விஜய் படத்தில் மட்டும் இதெல்லாம் இருக்கிறதா. முப்பது கோடியில் ஒரு குப்பையை எடுத்து அதை ஓட வைப்பதை காட்டிலும் அந்த பணத்தை வைத்து ஒரு வித்தியாசமான படத்தை எடுக்க நினைத்த செல்வா எவ்வளவோ மேல். விஜய்யை தலையில் தூக்கி வைத்து ஆடும் நீங்களேல்லாம் இந்த மாதிரி படங்களை குறை சொல்ல கூடாது. இருநூறு ருபாய் கொடுத்து படம் பார்த்ததால் இந்த படம் வாந்தின்னு சொல்லும் உரிமை இருந்தால் அதே உரிமை எனக்கும் இருக்கிறது. படம் போடுவதற்க்கு முன்னான் விஜய்,அஜித் ரசிகர்கள் உள்ளே வர அனுமதி இல்லைன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கலாம். பார்த்திபன் ஒரே ஆளாய் இருந்து ராணுவத்தை அடித்து துரத்த அவர் என்ன வேட்டைகாரனா, ஆழ்வாரா?
//

கிளைம்மேக்சில் சாட்டிலைட் ஃபோன் கூட தான் ரீமாவுக்கு கிடைக்கும் யார் இல்லைனா? அதுக்கா இந்த முயற்சியையே தவறுன்னு சொல்லாமா? யாரோ சொன்ன மாதிரி, துள்ளுவதோ இளமை படம் வந்த பின் அந்த மாதிரி இருபது படம் வந்துச்சு, இதை பார்த்து அதே மாதிரி ஒரு நாலு படம் வந்தா நல்லது தானே

damildumil on January 16, 2010 at 2:14 PM said...

//தீபாவளி துப்பாக்கியுடன் வரும் ரீமா பாம்புகளை தைரியமாக சுட்டுத் தள்ளுவார்//

அதானே அடுத்த முறை விஜயிடம் டியுசன் போக சொல்லனும், சண்டைகளை எப்படி யதார்தமாக எடுப்பதுன்னு

குறும்ப‌ன் on January 16, 2010 at 2:59 PM said...

//ஸ்பீல் பெர்க் ஒரு முறை என் படம் 90% முடிந்துவிட்டது. ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி என்றார்//

ரிலாக்ஸ் கார்க்கி, ந‌ல்ல‌ வேளை செல்வா ஜுராசிக் பார்க், இண்டியானா ஜோன்ஸ் மாதிரி ஒரு ப‌ட‌ம் எடுக்க‌ணும்னு நினைக்க‌லையே!

affable joe on January 16, 2010 at 3:34 PM said...

கார்க்கி ஒரே ஒரு கேள்வி அந்நியன்,சிவாஜி,குருவி,வேட்டைக்காரன்,பில்லா ,கந்தசாமி இதில் எல்லாம் லாஜிக் இருந்ததா இல்லை அறுபது நாட்களில் எடுத்துவிட்டனரா .மணிரத்னம் ,ஷங்கர் போன்றோரது படங்களை மட்டும் சிலாகிக்கும் உங்களது ஆரிய சிந்தனை காரணமா.

யுவகிருஷ்ணா on January 16, 2010 at 3:49 PM said...

உருப்படியாக ஒரு படம் வந்துவிட்டால்... பொறுக்காதே நம் மக்களுக்கு :-)

கார்க்கி on January 16, 2010 at 4:28 PM said...

டமால் டுமீல், உங்கள் ஆழ்ந்த புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது. சொல்லி சொல்லி புளித்த போன உதாரணத்தையே கடைசியாக ஒரு முறை சொல்கிறேன். சரவண பவன் உணவில் சுவையோடு சுகாதரமும் எதிர்பார்ப்பார்கள். கையேந்தி பவனில் சுவை மட்டுமே. மசாலா படத்தில் லாஜிக் ஓட்டை என்று கத்துவதும், இது போன்ற படங்களில் அது இல்லைன்னா பரவாயில்லை என்று சொல்வதும் தான் அறிவுஜீவித்தனமா? போய் வீட்டுல பெரியவங்க யாராவ்து இருந்த வர சொல்லுங்க. போங்க

குறும்பன், இது எல்லாவிதமான படத்துக்கும் பொருந்தும்.

ஜோ, மற்றவர்கள் போல் நீங்களும் அவசரத்தில் கேட்கிறீர். யோசிச்சு சொல்லுங்க. மேலே சொன்ன எந்த படத்தை சிலாகிச்சு நான் பதிவு போட்டேன்? அந்தப் படங்களில் இருப்பது வெறும் எண்ட்டெர்டெய்ன்மென்ட். ஆயிரத்தில் ஒருவனும் அப்படியா? தமிழ்சினிமாவின் மைல்கல்லாமே?

யுவகிருஷ்ணா, தமிழ்படம் இன்னும் ரிலிசாகலையே பாஸ்

கார்க்கி on January 16, 2010 at 4:30 PM said...

இது போன்ற படங்களை வரவேற்போம் என்பவர்களுக்கு, அதற்காகத்தான் முதல் நாளே தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அதற்காக நல்லா இருக்குன்னு சொன்னா அதே தவறோடுதான் படம் எடுப்பார்கள் நம்ம இயக்குனர்கள்

damildumil on January 16, 2010 at 4:49 PM said...

//கார்க்கி மசாலா படத்தில் லாஜிக் ஓட்டை என்று கத்துவதும், இது போன்ற படங்களில் அது இல்லைன்னா பரவாயில்லை என்று சொல்வதும் தான் அறிவுஜீவித்தனமா?//

சரி இதுல உங்க கருத்து தான் என்ன? மசலா படத்துக்கு லாஜிக்கே வேண்டாம், ஆனா இந்த மாதிரி படத்துக்கு கண்டிப்பா வேணும்ன்னு சொல்றீங்களா? இல்ல எந்த படமானாலும் லாஜிக்கோட இருந்தா தான் நான் ரசிப்பேன்னு சொல்றீங்களா

//போய் வீட்டுல பெரியவங்க யாராவ்து இருந்த வர சொல்லுங்க. //

கேட்டேங்க..விஜய் ஃபேனுக்கெல்லாம் இஸ்கூல் பசங்களே பதில் சொன்னா போதுன்னு சொல்லீட்டாங்க.

Balavasakan on January 16, 2010 at 5:25 PM said...

வணக்கம் தலைவா படம்பாத்து பைத்தியமான கதை இன்னா அது இந்த கதைதானுங்கோ எங்க ஊர் தியேட்டர் வாசல்ல ஒரு சைக்கியாடரிக் கிளினிக் ஒண்ணு போடுவதாக உள்ளோம் ... என்னா கொடுமை சார் ஆரம்பத்தில் எல்லோரும் செல்வாவின் வித்தியசமான முயறசி பாக்கவேண்டிய படம இன்னு எழுத மிரண்டு போனேன் உங்களை வரவேறகிறேன் ... கசிப்பு கூட வித்தியசம்தான் காச்சி குடுத்தா குடிப்பங்க போல இருக்கு.. மூணு வருசம் மினக்கெட்ட மனுசன் தயாரிப்பாளரின் காசையும் கார்த்தியயும் வேஸ்ட் பண்ணியதுதான் மிச்சம் நல்ல நடிகர் நாசமாப்போனார் ...ரீமா சென் நல்லா நடிக்கிறாராம் அவர்களுக்கு நடிப்பு என்ன என்று யாராவது சொல்லிகொடுக்க வேணும் விசரனா குடிகாரனா நடிக்கிறதென்றால் எல்லோருந்தான் நடிப்பார்கள் அது நடிப்பல்ல...

உங்கள் தலைப்பு அருமை...

கார்க்கி on January 16, 2010 at 6:40 PM said...

டமால் டுமீல், (பேரா சொன்னாலே அதிருதுப்பா)

மசாலா படமெல்லா தினத்தந்தி போல. அடுத்த நாள் பேப்பர் வந்துட்டா அதுக்கு மதிப்பு கிடையாது. அதனால் என்னவாது செஞ்சு அன்னைக்கு மக்கள எண்டெர்டெய்ன் பண்ணா போதும். என்னப்பா ஹீரோ தலைகீழா சுத்துறாரு. அவர் அடிச்சா வில்லன் பறக்கிறான்னு கேட்கிறது வேஸ்ட்.

ஆனா கிளாசிக்கல் மூவிஸ்ன்னா அப்படியில்லை. அதுல குறைந்த பட்ச நம்பகத்தன்மை வேண்டும். அது ஃபேண்ட்டசினா லாஜிக் வேண்டும். லாஜிக்ன்னா நான் கேட்பது, ஸ்க்ரிப்ட்டில். ஒன்றிரண்டு இடத்தில் சறுக்குனா பரவாயில்லை. தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே சென்றால் பார்வையாளன் கடுப்பாகாமல் வேறென்ன செய்வான்?

விஜய் ஃபேன்னா விவரமா கேள்வி கேட்பான்னு நல்லா எஸ் ஆகறாங்கப்பா பெரியவங்க.

கார்க்கி on January 16, 2010 at 7:01 PM said...

இன்னும் சில கேள்விகள்

செல்போன் அடித்தால் வந்திறங்குகிற ஆயுதங்களும், அது தாங்கி வருகிற ஹெலிகாப்டரும் சம்பவ இடத்திற்கே நேரடியாக வருகிற போது, ஏழு ஆபத்துகளை தாண்டி எதற்காக வர வேண்டும்? ஹெலிகாப்டர் மூலமாகவே சோழ மண்டலத்தை கண்டுபிடித்திருக்கலாமே?

மழையே இல்லை. விவசாயமும் இல்லை. மக்கள் பட்டினி. சோழர்கள் நர மாமிசம் சாப்பிட்டுதான் பசியாறுகிறார்கள் என்றெல்லாம் காட்டுகிறார்கள். ஆனால், மன்னர் பார்த்திபன் வரும்போது இருபுறமும் நின்று பூக்கள் து£வி வரவேற்கிறார்கள். அந்த பூக்கள் எந்த நிலத்தில் விளைந்தன ஐயா?

மழை இல்லை என்று மன்னர் வேதனைப்படுகிற போதே, பின்னணியில் மாடத்திலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறதே? (கேமிரா பியூட்டிக்காக) ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளருக்கு கூட கதையை சொல்லவில்லையா செல்வா?

இத்தனை வெப்பன்ஸ் துணையுடன் வந்து சேருகிறது ரீமாசென் கோஷ்டி. ஆனால் அதற்கு முன்பே, ஒரு துணையும் இல்லாமல் தனியாக சோழ அரண்மனைக்கு வந்து சேர்ந்தாரே, பிரதாப் போத்தன். அது எப்படி?

குப்பன்.யாஹூ on January 16, 2010 at 7:44 PM said...

This is mun naveenathuvam film. For vijay fans like you these kind of mun naveenathuvam films may be boredomw.

Lets enjoy pin naveenathuvam films like Pokkiri, rasigan, aadhi.

kidding, but your review is nice.

If parthiban is prabakaran, who is sarath pon seka, Karthi or pradhap

நேசன்..., on January 16, 2010 at 9:18 PM said...

சகா,நீங்கள் சொன்ன எந்தக் குறைகளையும் யாராலும் மறுக்க முடியவில்லை.நாம் செல்வாவிடம் நிறைய எதிர்பார்த்தோம் ஆனால் நடக்கவில்லை அதைத் தான் நீங்கள் கொஞ்சம் பெரிய எழுத்தில் சொல்லியிருக்கிறீர்கள்!.....இதற்கு செல்வா பதில் சொல்வதே சாலச் சிறந்தது!......சொல்வாரா?.......

கார்க்கி on January 16, 2010 at 10:12 PM said...

அன்பின் தனா, நீங்க உங்க ஆணியடிக்கிற வேலையை பாருங்க. என் பிளாகுல உனக்கு என்ன வேலை?

சி.வேல் on January 16, 2010 at 11:29 PM said...

வணக்கம் கார்க்கி

படம் வேஸ்ட்தான், spot ல் உட்கார்ந்து screen play எழுதினா இதான் result


spot ல் உட்கார்ந்து screen play எழுதினா இதான் result

ஆனால் விஜய் படத்துக்கு இந்தமாதிரி லாஜிக் பார்த்து நீங்க விமர்சனம் சாரி பதிவு எழுதுனா ஒரு படத்துக்கு 10 பக்கம் போடலாம்,
நிறைய interesting மேட்டர் கிடைக்கும்
அதுவும் வேட்டைக்காரன்,,,, சரி சரி விஜய் டைரக்ட் செய்யவில்லையே விட்ருவோம்

கும்க்கி on January 17, 2010 at 8:23 AM said...

ப்ரதர்.,
இது விமர்சனம் இல்லை என்ற, பதிவில் கடுமையான பின்னூட்டம் ஒன்றை போட்டேன்...உடன் செல்லில் அழைத்தவர் “ஏன்யா தனியா ஒரு பதிவே போடலாமே” அப்படின்னார்.
போட்டிருக்கலாம்தான்...வண்டை வண்டையாக வந்திருக்கும்.

இந்த குப்பையை போய் ஆதரித்து பதிவு போடுகிறார்களே என்றுதான் ஆதங்கமாக இருக்கிறது.

ரொம்பவும் கடினமான சப்ஜெக்ட் ஆன புதுப்பேட்டை வன்முறை கலாச்சாரத்தையே குடும்பத்துடன் ரசித்து பார்க்குமளவு எடுத்த செல்வாவா இப்படி எனும்போது கோபம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே வருகிறது...

எந்த உண்மைகளும் இல்லை...சரி திரைப்படத்திற்க்கு அதெல்லாம் தேவையில்லை என்பவர்கள் க்ளைமாக்ஸில் பாலைவனத்தில் முள்ளிவாய்க்கால் போல ஒரு நீர்நிலையை காண்பிப்பது எதற்காக என்று தெரியவில்லை.

படம் மொத்தமுமே சொதப்பல்தான்...காட்சிக்கு காட்சி விவரிக்க முடியும்.

அந்த தயாரிப்பு புன்னியவான் இன்னமும் உயிரோடு இருக்கிறாரா என தெரியவில்லை.

இதனை ஆள் பலமும், 7கோடி பட்ஜெட்டிலிருந்து இந்த முட்டாள்தனத்திற்க்கு 35கோடி வரை அள்ளிகொடுத்த தயாரிப்பாளரும்,
3ஆண்டுகள் காலமும், கார்த்தி போன்ற திறமையான நடிகர்களும்,ரீமா போன்ற எல்லாவற்றையும் அவுக்க தயாராக இருந்த நடிகைகள் இருந்தும் இவ்வளவு சருக்கியிருக்கவேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.

கும்க்கி on January 17, 2010 at 8:26 AM said...

நீங்கள் சட்டைக்கு பட்டன் போடவில்லையானால் கூட விஜய்யை இழுப்பார்கள் போலிருக்கிறது...
எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..நல்லது.
கொ.ப.செ ஆகிவிட்டீர்களா என்ன...

கார்க்கி on January 17, 2010 at 10:26 AM said...

@வேல்,

விஜய் எனக்கு பிடிக்கும்ன்னு பல தடவை சொல்லியிருக்கேன். ஆனா வேட்டைக்காரனும், வில்லும் நல்லா இருக்குன்னு எழுதி இருக்கேனா? பார்த்துட்டு சொல்லுங்க

என் கோவமே அதுதான். ஹாலிவிட் ஈடாக படமெடுக்கிறோம்னு சொல்லும் இந்த இயக்குனர்கள் ஸ்க்ரிப்ட்டே தயார் செய்யாம ஷீட்டிங் போய் சாவடிக்கிறார்கள். அவர்கள் தான் தமிழ்சினிமாவின் முகவரி என்று போற்றுபவர்கள் சராசரி அரசியல் தொண்டனை விட, விசிலடிச்சான் குஞ்சுகளை விட ஆபத்தானவர்கள்.

கும்க்கியண்ணே, இந்த படத்தௌ நல்லா இருக்குன்னு சொல்லும் அறிவுஜீவிகள் என்னுடைய கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் போனவுடன் அந்த மொக்கை ஆயுதத்தை தான் கையிலெடுப்பார்கள் என்று தெரிந்துதான் பி.கு போட்டேன். படமே பார்க்காமல் செல்வா பேரைப் பார்த்து காவடி தூக்குபவர்கள் பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு கக்குகிறார்கள். அதிலும் தனான்னு ஒரு கரப்பன் பூச்சி.. ஸப்பா.....

Anonymous said...

படம் பாத்துட்டேன். உங்க விமரிசனத்தோட ஒத்துப்போகுது என் எண்ணங்கள். ரங்க்ஸ் நொந்துட்டார் படம் பாத்துட்டு.

Naveen on January 17, 2010 at 2:08 PM said...

திரு கார்க்கி அவர்களுக்கு,

உங்களோட வேட்டைக்காரன் விமர்சனமும் படிச்சு இருக்கேன், இப்போ எழுதினால்
நீங்க குறிப்பிட்ட "வாந்தியும்" பார்த்துட்டேன்...
நான் காசு குடுத்து படம் பார்த்துட்டேன் அதனால எனக்கு அதை
விமர்சனம் பண்ணுவேன்னு நீங்க சொல்லுறது... அநியாயம்..

லாஜிக் பதிதி ஒரு மசாலா திரைப்பட ரசிகன் யோசிப்பது தவறு...
ஐம்பது / அறுபது அடி அருவியில இருந்து குதிச்சுட்டு , கண் பார்வை இல்லாதவர் மிகச்சரியாய்
வில்லனை சுட்டு வீழ்த்துவது,
விஜய் படமெல்லாம் நல்ல இருக்கு அப்படின்னு மேலோட்டமா விமர்சனம்
எழுதுறீங்க..
இதையெல்லாம் செய்யல இல்ல அதனால உங்களுக்கு இந்த படமெல்லாம் குப்பையா தான் தெரியும்

ரொம்ப சுகமா ஒரு கணினியும், இணைய இணைப்பும் இருக்குங்கறதுக்காக
அப்படி எடுத்து இருக்கலாம் , இப்படி எடுத்து இருக்கலாம் னு சொல்லுற இந்த
வாத்தியார் தன்னதை விட்டுடுங்க...

எனக்கு பிடிக்கலை / லாஜிக் சரி இல்லை / இப்படி மேலோட்டமா எழுதி இருக்கலாமே..

அடுத்த முறை விமர்சனம் எழுதனும்னு நினைச்சா கொஞ்சம் பார்த்து
எழுதுங்க..

நவீன்

தாரணி பிரியா on January 17, 2010 at 2:24 PM said...

சரிதான்

எறும்பு on January 17, 2010 at 3:03 PM said...

Naveen said...

திரு கார்க்கி அவர்களுக்கு,
லாஜிக் பதிதி ஒரு மசாலா திரைப்பட ரசிகன் யோசிப்பது தவறு...
ஐம்பது / அறுபது அடி அருவியில இருந்து குதிச்சுட்டு , கண் பார்வை இல்லாதவர் மிகச்சரியாய்
வில்லனை சுட்டு வீழ்த்துவது,
விஜய் படமெல்லாம் நல்ல இருக்கு அப்படின்னு மேலோட்டமா விமர்சனம்
எழுதுறீங்க..
இதையெல்லாம் செய்யல இல்ல அதனால உங்களுக்கு இந்த படமெல்லாம் குப்பையா தான் தெரியும் ///

திரு நவீன் அவர்களுக்கு,
அவ்வ்வ்வவ்வ்வ்வவ் என்னால முடியல...
பாவம் கார்க்கியும் எத்தனை தடவை தான் சொல்லுவாரு....
விசய் நடிக்கிறது உலகப்படம் அல்ல,மசாலா படம்... அதுல விசய் அம்பது அடி அல்ல, இமயமலைல இருந்து குதிச்சு கன்யாகுமரியை ரீச் பண்ணுவாரு. ஆனா தமிழ் படத்த அடுத்த கட்டத்துக்கு நகட்ரோம்னு சொல்றவங்க ஒழுங்கா படம் எடுக்கணுமா வேண்டாமா..

:)

//ரொம்ப சுகமா ஒரு கணினியும், இணைய இணைப்பும் இருக்குங்கறதுக்காக
அப்படி எடுத்து இருக்கலாம் , இப்படி எடுத்து இருக்கலாம் னு சொல்லுற இந்த
வாத்தியார் தன்னதை விட்டுடுங்க... //

அய்யா முட்டை போடறது கோழியா இருந்தாலும், அந்த முட்டையில் இருந்து சுவையான ஆம்லேட் போடுவது எப்படின்னு கோழியவிட எங்க தல கார்க்கிக்கு நல்லா தெரியும்...

எறும்பு on January 17, 2010 at 3:06 PM said...

என்ன சகா பிட்டு போதுமா !!!

:))

sara on January 17, 2010 at 5:00 PM said...

நம்ம பழக்கமே இதுதானே சக தமிழன் சாதிச்சா அவன தலைல தட்டி உட்க்கார வச்சிருவோம் ... வாழ்க கார்க்கி.. ஆனா புதுசா லாஜிக்கெல்லாம் பேசுறிங்க அதான் லாஜிக்கே இல்லாம இருக்கு

கார்க்கி on January 17, 2010 at 6:40 PM said...

//காசு குடுத்து படம் பார்த்துட்டேன் அதனால எனக்கு அதை
விமர்சனம் பண்ணுவேன்னு நீங்க சொல்லுறது... அநியாயம்..//

நவீன், காசு கொடுத்து பார்த்தவன் தனக்கு தோன்றுவதை சொல்லும் உரிமை கூட இல்லையா? அய்யகோ

அடுத்த கேள்விகளுக்கு எறும்பு நச்சுன்னு பதில் சொல்லிட்டார் பாருங்க..

நானாவது பரவாயில்லை. பிளாக் ஆரம்பிச்சு தினமும் நேரம் ஒதுக்கி எழுதி, இவனை படிக்கலாம்ப்பான்னு ஒரு சிலரவாது சொல்லும்படி செஞ்சிருக்கேன். நீங்க நோகாம ஒரு ஐடி மட்டும் க்ரியேட் பண்ணி இப்படி எழுதுங்க, அப்படி எழுதுங்கன்னு வாத்யார்த்தனம் பன்றீங்க. படம் பார்த்துட்டு ஒரு பதிவெழுதி பாருங்க சார். எங்க கஷ்டம் புரியும். இப்படி நோகாம அட்வைஸ் கொடுக்கிறத விடுங்க

எறும்பு, எக்கச்சக்கக்க்க பிட்டு சகா. டேங்க்ஸ்

அம்மிணி, தா.பி, புரிஞ்சிக்க மாட்டாங்க. படம் பார்த்தா பேச மாட்டாங்க

சரா, அதாங்க. நம்ம தமிழன் சாதிச்சா பரவாயில்ல. ஆனா ரீமா சென்னும், ஆண்ட்ரியாவும் நல்லா நடிச்சு இருக்காங்க்ன்னு சொன்னா எப்படி? அவங்க என்ன தமிழர்களா? நாங்க எப்பவும் லாஜிக் பார்க்கிறவங்க்தான்.

Kafil on January 18, 2010 at 12:04 AM said...

hi karki,

i have seen your review and went to movie but actually i liked it.. few logics are missing but i liked it pretty well.. opinions differ..

கார்க்கி on January 18, 2010 at 10:21 AM said...

காஃபில், இப்படி சொன்னா ஐ அக்ரி. ஆனா படம் சூப்பர்.. லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாதுன்னு சொன்னா..

ஒரு அறிவாளி. நான் அடிச்சா பாட்டுக்கு முன்னாடி ஒரு கல்ல கையால உடைப்பாரு. அத பார்த்து இது எல்லாம் எப்படு முடியும்ன்னு கேட்டாரு. நான் சிரிச்சுட்டேன்..

இந்த படத்துல எப்படிப்பா ரீமா அவ்ளோ பெரிய கல்ல உருட்டினாங்கன்னு கேட்டா அதெல்லாம் அபப்டி பார்கக் கூடாதாம்.. ரைட்டுன்னு காசை வெட்டிப் போட்டு அவருடைய உறவ முறிச்சிக்கிட்டேன். எனக்கு அறிவுஜீவிகளிடம் அலர்ஜி என்பதே காரணம் :))

பேநா மூடி on January 18, 2010 at 11:27 AM said...

தல.., நேத்து தான் படம் பார்த்தேன் நிறைய கட் பண்ணிட்டாங்க இரண்டரை மணி நேரம் தான் ஓடியது.., படம் எனக்கு பிடிச்சு தான் இருந்துச்சு.., ஆனா தல.., இதுவும் மசாலா படம் தான் கிளாச்சிக் படமெல்லாம் கிடையாது ...,

கார்க்கி on January 18, 2010 at 11:45 AM said...

பேநா,

அரை மணி நேரம் கட் செய்தும் உஙக்ளுக்கு எதுவும் மிஸ் ஆன மாதிரி தெரியல இல்ல? அவ்ளோ நல்ல ஸ்க்ரீன்ப்ளே :)))

3 மணி நேரம் பார்த்த எங்க நிலமைய யோசிச்சு பாருங்க

roomno104 on January 18, 2010 at 2:26 PM said...
This comment has been removed by the author.
roomno104 on January 18, 2010 at 2:28 PM said...

Vanakam Karki,

Padam parthen, ungal review parthen. logic miss avarathu correct than. overala padam nala iruntha mathri irunthathu.

/* Entha padathiyum thalapthi padathiyum compare pandratha ethuka mudiyala - ethukum nigal solra karuthu correct */

கார்க்கி on January 18, 2010 at 2:30 PM said...

ரூம், இந்த படம் லாஜிக் சரியில்ல. ஆனா பிடிச்சிருக்குன்னு சொன்னா அது சரி. ரசனை ஆளாளுக்கு மாறும். ஆனா திரைக்கதை நெருடுதுன்னு சொன்னா, இல்ல இல்ல இது ஒலக சினிமா. அபப்டி இப்படின்னு பில்டப் தந்தா எப்படி சகா?

அமுதா கிருஷ்ணா on January 18, 2010 at 4:38 PM said...

கார்க்கி என்னையும் என் பணத்தையும் காப்பாத்திட்ட....

அத்திரி on January 18, 2010 at 7:42 PM said...

அய்யய்யோ இங்க என்ன நடக்குது .ரொம்ப லேட்டா வந்துட்டேன்..... .அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Nadodi on January 18, 2010 at 8:52 PM said...

இந்த ஆனாஒனா படத்தை பற்றி இரண்டு பேர் மட்டுமே உண்மை விமர்சனத்தை கொடுத்துள்ளீர்கள்.. முதலாமவர் கேபிளார், இரண்டாவது நீங்கள் கார்க்கி..

தசாவதார குப்பைக்கும் நம்ம வலையுலக அறிவாளிகள் சொன்ன விமர்சனம் எவ்வளவு கடினமாக உழைச்சிருக்காங்க அதுக்காகவாவது பார்க்கலாம்னு.. இப்பையும் அது repeatuu..என்னமோ போங்க

உழைப்பை பாராட்டுவோம்.. படம் மொக்கை.. வரலாறுகளை திரித்து, விட்டாலாச்சாரியா பாணியில் எதை எதையோ போட்டு குழப்பி, நீங்க வாந்தினு சொன்னீங்க ஆனா உண்மையிலயே இது ...

தோழர் மதிமாறன் சொல்ற மாதிரி இப்படி ஒலப்பி படம் எடுப்பதற்கு பதில் கரகாட்டகாரன் போல நம்ம மக்கள் ரசிக்கும் படங்களை கொடுக்கலாமே..

பொதுவா மளையாளிகள்தான் அவங்க படங்களில் நம்மை பாண்டி பாண்டினு அசிங்கப்படுத்துவாங்க.. இந்த செல்வராகவனுக்கு என்ன கடுப்போ பாண்டியர்கள் மேல்.. இந்த படத்தை நம்மாளுக ஆளுக்கொரு அர்த்தம் கற்பிக்கிறாங்க.. உண்மையில செல்வராகவெனுக்கே தெரியாது என்ன சொல்ரோம்னு!! என்னத்தை சொல்ல!!!

வாழ்த்துகள் கார்க்கி

**குறிப்பு: பதிவை குறித்து தங்களின் விமர்சனத்தை வைக்காமல் பதிவு செய்தவரை நோண்டுவதும், வீண்வாதம் செய்வதிலும் நம்மை அடிச்சிக்க யாருமில்லங்க.என்னமோ போங்க..

கார்க்கி on January 18, 2010 at 9:58 PM said...

நன்றி நாடோடி. பதில் சொல்ல முடியாத இயலாத நிலை நேரும்போதுதான் இப்படி கருத்து சொன்னவரை தாக்குவது நேரிடும். இந்தப் படத்தை பொறுத்தவரை கஷ்டபட்டாங்க.பாருங்கன்னு சொல்றாங்களே தவிர வெறு வாதம் எடுபடவில்லை. அதான் அந்த நொண்டி சாக்கு.

:)))

பாண்டியன் புதல்வி on January 19, 2010 at 12:25 AM said...

Didn't see the movie yet. Ninnu aduReenga. Kootathodu pora aada illamal unga karutha theliva, dhariyama sonnathukku hats off.

Karthik on January 20, 2010 at 2:30 PM said...

இதுல எல்லாம் நொட்டை சொல்லுங்க. வேட்டைக்காரன்ல சொல்லாதீங்க. உங்கள எல்லாம் செல்வா படத்துல ஹீரோவா போட்டு ஹீரோயின் காலால உதை வாங்க வெக்கணும். :)

ஆதவா on January 20, 2010 at 3:33 PM said...

ரொம்ப நல்லா சொல்லியிருந்தீங்க கார்க்கி.

நானும் நல்ல படமா இருக்கும் என்று (செல்வராகவன் என்ற பெயருக்காக) நம்பித்தான் போனேன். ஆனா பார்க்கப் பார்க்க என்னால் அமர்ந்து பார்க்கவே முடியவில்லை. கதையில் அப்படி ஒரு மிகப்பெரிய ஓட்டை. கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருக்கும்படியான ஓட்டை. இந்த லட்சணத்தில் பார்ட் டூ எடுக்கப் போகிறாராம். ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கவேயில்லையாம். யார் காதில் பூ? பத்து படங்களுக்கும் மேலாக காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் இல்லாமல் இல்லை. முதலில் பண்டைய சோழன் போர்முறைகளைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். குறைந்த பட்சம் பொன்னியின் செல்வனேனும்.

அன்புடன்
ஆதவா

வெ.இராதாகிருஷ்ணன் on January 20, 2010 at 8:42 PM said...

இதே படத்தை வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால் வேறு விதமாக எழுதி இருப்பீர்களா? ஒரு பேச்சுக்குத்தான் கேட்கிறேன்.

திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என்பதே இப்பொழுது மறந்து போய்விட்டது.

வெற்றி பெற்ற உலக திரைப்படங்கள் பார்த்து தமிழ் திரைப்படங்களும் அவ்வாறு சிறப்புடன் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழரின் கனவாக இருக்கும் போலிருக்கிறது.

Lakshmi Narasimhan on January 21, 2010 at 1:00 AM said...

Ennai poruthe varai selvavin kuzhappam thaan inthe sothappalukku kaaranam...avarukku niraiye sinthanaigal thondralaam..ellavatraiyum oru padathil puguthuvathu saathiyamillai..iruopinum muyarichikku paraattu solliye aagavendum.....ungal kovam konjam overaa irukku endru ninaikkiren !!!..may be...

சக்தியின் மனம் on February 2, 2010 at 9:54 AM said...

உங்களுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. நல்ல முயற்சிகள் எப்பொழுதும் இதுவரை புறக்கணிக்க பட்டே வந்து இருக்கின்றன.. படம் அணைக்கும் என்னை சார்ந்த என் நண்பர்களுக்கும் பிடித்து இருக்கிறது.. நாங்கள் வியந்த படம்இது..

Suren on February 10, 2010 at 1:20 PM said...

சாட்டிலைட் போன்னா என்னன்னு தெரியுமா? Discovery சேனல்ல வருகிற Man vs Wild, Survivor Man போன்ற நிகழ்ச்சிகளை பார்த்ததுண்டா? இன்னும் நிறைய விசயங்களை பத்தி நீங்க தெரிஞ்சிக்கணும்...சரி அதெல்லாம் விடுங்க.
உங்களை மாதிரி ஆளுங்கல்லாம் பொய் மொதல்ல 'தமிழ்ப்படம்' பாருங்க! நாங்க பேச வேண்டியதெல்லாம் அவங்க பேசியிருக்காங்க.

danish ahmed on April 15, 2010 at 4:51 PM said...

north indian style temple tower and round pillars.. big mistakes.. reema sen need not sing in telugu as she is a pandyan gal... and only after naykas period telugu became language of songs and all... phewww...

 

all rights reserved to www.karkibava.com