Jan 13, 2010

தமிழ் சினிமாவில் இசை சுனாமி


 

இசை ரசிகர்கள் கவனித்தார்களா எனத் தெரியவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைத்திருக்கிறது தமிழ் சினிமாவில். சென்ற வருடமெல்லாம்  மாதத்திற்கு ஒன்றிரண்டு பாடல்களையே கேட்க வேண்டிய சூழ்நிலை. 2010 ஜனவரியிலே ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ். தனித்தனியே இசை விமர்சனம் எழுதினால் போரடித்துவிடும் என்பதால் ஒரு கலெக்‌ஷன் பதிவு.

கோவா:

சரோஜா என்னை ஆரம்பத்தில் ஈர்க்கவில்லை.அதே போல்தான் இதுவும். இரண்டு கிராமத்து குத்துகள் விதிவிலக்கு. அதிலும் அந்தக் குடும்பப் பாட்டு தூள்.ஏழேழு தலைமுறைக்கும் என்று தொடங்குகிறது பாடல். தபேலாவின் டெப்த்தில் இருந்து எல்லாமே அச்சு அசல் ராஜா ஸ்டைல். யுவனுக்கு பதில் இந்தப் பாட்டு மட்டும் ராஜாவே போட்டாரோ என்று நினைக்கும்படி இருந்தது. இடையில் வரும் ”அம்மிகுத்துற” என்ற தொகையறாவுக்கும் கிடார் கார்ட்ஸ் கொடுத்து தனது லேபிளைக் குத்துகிறார் யுவன். வயதுக்கு மரியாதை கொடுத்து கார்த்திக்ராஜா முதல் வரியைத் தொடங்க வெங்கட், பிரேம்ஜி எனத் தொடர்ந்து கடைசியாக யுவன் குரல் ஒலிக்கிறது. மீதி மூவரும் மண்மணம் மாறாமல் பாட, யுவனால் மட்டும் அவர்களோடு ஒட்டவே முடியாதது சாதகமா பாதகமா எனத் தெரியவில்லை. உங்க மெலடியும்,வெஸ்டர்னும் ரிப்பீட் ஆவது போன்று தெரியுது யுவன். கொஞ்சம் கவனம் தேவை.

அப்ப இருந்து இப்ப வரை.. எங்களுக்கு என்ன குறை..

எப்பொழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை”

மடை திறந்து பாடலில் ஒரு வரி “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே”. என்று வரும். “தெய்வங்களா!!தமிழ் பேசும் நல்லுலகமே உங்களுக்கு நன்றி சொல்லுது. அடிச்சு போயிட்டே இருங்க பாஸ்”

மற்ற பாடல்களும் சுமார்தான் என்றாலும் இதை மட்டும்தான் கேட்க நேரமிருக்கிறது.

தமிழ்(ப்)படம்:

இதன் டிரெயிலர் 1000 வாட்ஸ் பவர் இல்லைனாலும் எதிர்பார்ப்பை தூண்டியது. “மொக்கை கேம் சார்” என்ற சிவாவின் டைமிங்கும் மாடுலேஷனும் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த மாற்றமுமில்லாமல் அதே ஸ்லாங்கில் அவர் பேசினாலே போதும். படம் ஹிட்டுதான். இளாவின் ஸ்டேட்டஸ் பார்த்து சிடி வாங்கினேன். குட்டி, அசல்,கோவா என ஏமாற்றங்களுக்கு இடையில் சர்ப்ரைஸ் கிஃப்ட் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் முறை கேட்கும்போதே எல்லாப் பாடல்களும் ஓக்கே. அதிலும் பச்சை மஞ்சள் பிங்க் தமிழன் என்ற பாடல் அதிரடி அட்டாக்.

சுனாமியின் பினாமியே..குள்ள நரிகளை ஒழிக்க வந்த நல்ல நரியே..

பாட்டு முழுவதும் சின்ன புன்னகையினூடேதான் கேட்ட முடிகிறது. ஒ மகசியா நல்ல பகடி என்றாலும் ஒரு அருமையான மெலடியை வீணடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஷங்கர் மகாதேவன் குரலில் “இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிர்கிறது” என்று கேட்கும்பொழுது குபீர் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. ஆயிரத்தில் ஒருவன் பொங்கலை தவறவிட்டால் தமிழ்படம்தான் என் சாய்ஸ். இந்தப் படம் வெளிவந்த பின் யாருக்கு எதிர்காலம் இருக்கோ இல்லையோ இசையமைப்பாளருக்கு நிச்சயம். கை கொடுங்க பாஸ்.

விண்ணைத் தாண்டி வருவாயா:

ஒன்னும் சொல்வதற்கில்லை. வாரணம் ஆயிரம் அளவுக்கு எல்லாப் பாடலும் ஹிட்டில்லை. ஆனால் ஹொசன்னாவுக்கும், ஓமனப் பெண்னேவுக்கும் ஈடாக எந்தப் பாடலும் இல்லை.மிஸ் பண்ணக் கூடாத ஆல்பம். ரகுமான் மேலும் மேலும் உயர போய் கொண்டேயிருக்கிறார்.

_______________________________________________________________________________

குட்டி, தீராத விளையாட்டுப் பிள்ளை, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கமெல்லாம் மேலே சொன்ன சுனாமிகளில் காணாமல் போகின்றன. அசல் படத்தில் எனக்கு ரெண்டு பாட்டு பிடித்திருக்கிறது, இவையில்லாமல் நாணயம் படத்தில் நான் போகிறேன் என்ற பாலு பாடிய பாட்டும் ஈர்க்கிறது. இந்த ஆரோக்கியமான சூழல் இந்த வருடம் முழுவதும் நிலைக்க வேண்டுமென ஆசை. பார்ப்போம்.

சிறந்த 5 ஆல்பங்கள்:

1) விண்ணைத் தாண்டி வருவாயா

2) தமிழ்படம்

3) பையா

4) ஆயிரத்தில் ஒருவன்

5) கோவா

சமீபத்திய பாடல்களில் என ஃபேவரிட் 10.

1) ஹொசன்னா (விண்ணைத் தாண்டி வருவாயா)

2) துளி துளி (பையா)

3) ஏழேழு தலைமுறைக்கும் (கோவா)

4) ஓமனப் பெண்ணே (விண்ணைத் தாண்டி வருவாயா)

5) நான் போகிறேன் (நாணயம்)

6) பச்சை மஞ்சள் பிங்க் தமிழன் (தமிழ்படம்)

7) அடடா மழைடா (பையா)

8) ஒரு சூறாவளி (தமிழ்படம்)

9) துஷ்யந்தா (அசல்)

10) சின்னத் தாமரை (வேட்டைக்காரன்)

இதில் கொடுமை என்னவென்றால் குட்டி, இ.கோ.மு.சி, தீராத வி.பிள்ளை படத்தில் ஒரு பாடல் கூட மீண்டும் கேட்க தோன்றவில்லை. ஆயிரத்தில் ஒருவன் ஆயிரம் முறைக் கேட்டுவிட்டதால் அதுவும் லிஸ்ட்டில் இல்லை.

39 கருத்துக்குத்து:

எம்.எம்.அப்துல்லா on January 13, 2010 at 8:39 AM said...

இதெல்லாம் என்னடா பாட்டு?? சென்னை சங்கமம் மேடைகளில் “சென்னை அழகிய சென்னை” அப்படின்னு ஒரு பாட்டு போடுறாங்க. ச்சும்மா பின்னுது. கிராமியமும், ஆனந்த பைரவியையும் ஒண்ணாமண்ணா கலந்து ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க. அதுல ”தஞ்சம் கொடுத்திடும் சென்னை, இது நெஞ்சம் சுரந்திடும் அன்னை” அப்படின்னு நம்பளமாதிரி பஞ்சம் பொழைக்கவந்த நாயிகளுக்கு ஒரு லைன் இருக்கு. ஆட்டத்தோட ஃபீல்லும் பண்ண வச்சுட்டாய்ங்க.

♠ ராஜு ♠ on January 13, 2010 at 9:10 AM said...

ம்ம்..தமிழ்ப்படம் எதிர்பார்ப்பைத் தூண்டுது..!

பச்சை.மஞ்ச்.பிங்க் - காமெடி கலாட்டா. (ஏஞ்சலனா ஜூலியவே ஏங்கவ்ச்ச அழகன் நான்..!)

இ.கோ.மு.சி. பாடல்கள் ஒருவேளை விஷுவல் ட்ரீட்டாக இருக்குமோ..?

தீ.வி.பி - நோ கமெண்ட்ஸ்.

குட்டி - Feel My Love is OK(K).

அது ஓமனப்பெண்ணேவா இல்ல ஓ..மணப்பெண்ணேவா தல..?
:-)

taaru on January 13, 2010 at 9:25 AM said...

அண்ணே உங்கவுட்டு பதிவு பாத்து தாண்ணே நான் பாட்டே கேக்குறேன்..chance ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ இல்லை.. வாழ்த்து. மற்றும் பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்.

Cable Sankar on January 13, 2010 at 9:28 AM said...

ஆமாம்ணே.. அதை பத்தி கூட எழுதியிருகேன்.

Cable Sankar on January 13, 2010 at 9:29 AM said...

ஓமணப்பெண்ணேயில் பிண்ணயில் வரும் நாதஸ்வரத்தை கேட்டீர்களா..?

கார்க்கி on January 13, 2010 at 9:57 AM said...

போன வாரம் மிஸ் பண்ணிட்டேன். இந்த வாரம் போயிடுவண்னே.. ரெக்கார்ட் பண்ணி பதிவுல போட்டுடலாம்.

ராஜூ,அந்தப் பாட்டுல இந்த அந்த வரின்னு இல்ல. எல்லாமே நச்.. இ.கோ.மு.சி. லட்சுமிராய் தான் ஒரே ஹோப். குட்டி சன் டிவி புண்ணியத்தில் பாட்டு ஹிட்டாகலாம். ஆனா ஒப்பீட்டளவில் வேஸ்ட். அது கேரளா ஸ்டைல் பாட்டு. அதனால ஓமனப் பெண்ணே தான்.

நன்றி டாரு. பொங்கல் வாழ்த்துகள்

கேபிள், அந்தப் பாட்டுல எப்ப என்ன வாத்தியம் வருதுன்னு யூகிக்கவே முடியல. குட்டி குட்டி சர்ப்ரைஸ் நிறைய. நாதஸ்வரமும் அப்படித்தான். செமப் பாட்டு.. அடிக்டட்:))

அதுக்குள்ள ஒரு மைனஸ். இப்படித்தான் இருக்கனும். காலைல வந்தவுடனே என் பதிவ படிச்சிட்டு அப்புறம்தான் வேலை செய்யனும். ஓக்கே.. :)))

KaveriGanesh on January 13, 2010 at 9:58 AM said...

நல்ல அலசல் கார்க்கி.

வாழ்த்துக்கள்

Anbu on January 13, 2010 at 10:11 AM said...

பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா....

நல்ல அலசல்..

நான் எழுத வேண்டும் என்று நினைத்தேன்...அதுக்குள்ள எழுதிட்டீங்க...

Chitra on January 13, 2010 at 10:40 AM said...

பாடல்கள் - சிறப்பு கண்ணோட்டம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மோகன் குமார் on January 13, 2010 at 10:41 AM said...

அருமை சகா. உங்க அலசல் பிடித்தது. சற்று அதிகமாகவே அப்துல்லாவின் emotional பின்னோட்டமும் பிடித்தது. இது போன்ற பின்னூட்டங்கள் அரிது.. பொதுவாகவே

pappu on January 13, 2010 at 11:18 AM said...

ரெஹ்மான் பாடலகள் புல்லரிக்கீறது.

‘ஆரோமலே’ பிச்சு உதறிங்.

’அன்பில் அவன்’ புத்துணர்வு.

எல்லாருக்கும் ரீச் ஆகுறது கஷ்டம். சாதாரண ஆல்பம் இல்ல. ஆனா சிறந்த ஆல்பம்.

இது முன்னாடி பையாவே காணாமல் போகிறது.

எட்வின் on January 13, 2010 at 12:14 PM said...

ஹோசன்னா கேட்கிறேன் ...கேட்கிறேன்... கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

நிச்சயமாய் ரஹ்மான் புதிய உயரத்தை எட்டியிருக்கிறார்... இன்னும் எட்டுவார்

@♠ ராஜு ♠ ஓமன பெண் என்பது மலையாள வார்த்தை நண்பரே

@ Cable Sankar ஆமாம் அண்ணே நாதஸ்வரத்தையும் தொட்டிருக்கிறார் ஆஸ்கர் நாயகன்

ரோஜா காதலன் on January 13, 2010 at 12:22 PM said...

//

pappu said...
ரெஹ்மான் பாடலகள் புல்லரிக்கீறது.

‘ஆரோமலே’ பிச்சு உதறிங்.
//

Its an ecstasy...

பலா பட்டறை on January 13, 2010 at 12:46 PM said...

நல்ல அ(ல)சல் :) கார்க்கி..:))

தர்ஷன் on January 13, 2010 at 12:56 PM said...

நானும் ஹோசானவை எத்தனை முறைக் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. மற்றவை எல்லாம் பச்சக் என ஒட்டிக் கொள்ளும் ரகமில்லை என்றாலும் ரஹ்மானின் வழக்கப் படி கேட்க கேட்கப் பிடிக்கும் என நினைக்கிறேன்.
கோவாவில் அன்ட்ரியாவின் குரலில் "இதுவரை" பாடல் பிடித்தது.
தமிழ்ப்படத்தில் டைட்டில் பாடல் எள்ளலான அந்த வரிகளுக்காக

வணங்காமுடி...! on January 13, 2010 at 12:56 PM said...

தனித்தனி பதிவாவே போட்டிருக்கலாமே பாஸ்....

என்னை மாதிரி வெளிநாட்டுல ஆணி புடுங்குற ஆளுங்களுக்கு, உங்க இசை விமர்சன பதிவுகள் ரொம்பவே ஹெல்ப்ஃபுல்...

நன்றி...

சுந்தர்
ருவாண்டா

கல்யாணி சுரேஷ் on January 13, 2010 at 12:56 PM said...

பாட்டை கேட்டுட்டு சொல்றேன்.

ஜெட்லி on January 13, 2010 at 12:57 PM said...

நாணயத்தில் கா கா பாட்டு
கூட நல்லா இருக்கும்....
போர்க்களம் கேட்டிங்களா??

வெற்றி on January 13, 2010 at 12:57 PM said...

சகா ஆயிரத்தில் ஒருவனுக்கு தாராளமா இரண்டாம் இடம் கொடுக்கலாம் என்பது என் எண்ணம்..

பையால பழைய மெட்டு ரொம்ப இருக்கிறதுனால அது பெரிதாக என்னை ஈர்க்கவில்லை..

வெற்றி on January 13, 2010 at 1:00 PM said...

இன்னைக்கு மைனஸ் வோட் டே-வா சகா..
கேபிள்ளுக்கும் உங்களுக்கும் சரமாரியா குத்து விழுகுது..

பட்டிக்காட்டான்.. on January 13, 2010 at 1:36 PM said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சகா..

சுசி on January 13, 2010 at 2:00 PM said...

எழுதுட்டீங்க இல்ல.. கேட்டுட்டு சொல்றேன் கார்க்கி..

உங்க விமர்சனம் பாத்தாதான் பாடல்/படம் வந்திருக்கிறதே தெரியுது :)))

Anonymous said...

கார்கி,

உங்கள் கருத்தோடு நான் ஒத்து போகிறேன்..போன வருஷம் எப்படா புது பாட்டு வரும்னு...குத்த வெச்சு உக்காந்திருப்பேன். இப்ப நெலமை நேர்மாறு. அட் எ டைம்ல அட்டாக் பண்ண ஆரம்பிச்சுடாங்க.....

நீங்க குறிப்பிட மறந்தது -

கோவாவில்
ஆண்ட்ரியா, அஜீஸ்( சமீபத்திய ஏர்டெல் சூப்பர் சிங்கர்) சேர்ந்து பாடிய "இது வரை" - தாறு மாற இருக்கு.

இடைவழி ஒரு காதல் செய் - கேட்க கேட்க அந்த டியுன். நல்லா இருக்கு.

"வாலிபா வா வா" - எஸ் பி பி, இளையராஜாவும் ஒரு தோள்மேல கையபோட்டுடு பாடுன மாறி ஜாலியா பாடிட்டு இருக்கும் போது...அப்புதிய நம்ப சித்ராக்கா மார்கழி சீசன்ல பாடறா மாதிரி ஒரு என்ட்ரி குடுத்திட்டு அப்புடியே அவங்களும் அந்த டியுன்ல கலந்திருவாங்க... இதுவும் ஒரு நல்ல பாடல்

எழேழு தலைமுறைக்கும் - கண்டிப்பா டைட்டில் சாங்கா இருக்கும் போல :)

தமிழ்படம்:

மசாலா பாட்டுக்கு - குத்து விளக்கு குடும்ப குத்து விளக்கு அப்படின்னு பாட்டு போட்ருக்காங்க...படத்தோட எதிர்பார்ப்ப பாடல்களும் எகுற வெக்குது :)

வி. தா. வா:
முதல் முறை கேட்டப்ப வழக்கம் போல தாமரைய காணவே காணோம். தல போட்டு அமுக்கிடாப்ள. ஆனா சரக்கு சீம சரக்கில்ல மைல்டா ஏறுது.
கேபிள் சொன்னது மாதிரி - "ஓமனப்பெண்ணே" நாதஸ்வரம், அப்புறம் "கண்ணுக்குள் கண்ணை" - வயலின், ஆரோமலே - ஸ்டார்டிங் கிடார் எல்லாம் டாப்பு டக்கர்.

அப்பறம் 3 இடியட்ஸ் கேட்டீங்களா...அதுவும் ஒரு சிறந்த ஆல்பம்.. "ஜானே நஹி" என்னோட சாய்ஸ்.
பி.கு: முஜே இந்தி நஹி மாலும் ஹை :)

Mohan on January 13, 2010 at 3:48 PM said...

சித்து +2‍வில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய 'பூவே பூவே' பாடலும், 'போர்க்களம்' படப் பாடல்களும் கூட நன்றாகவே இருக்கின்றன.

கார்க்கி on January 13, 2010 at 4:20 PM said...

நம்றி காவேரி கணேஷ்

நன்றி அன்பு. எழுதுப்பா

நன்றி சித்ரா

மோகன், உண்மைதான்

பப்பு, வி.தா.வ க்கும் மற்ற படங்களுக்கும் வித்தியாசம் என்னவோ மிக அதிகம் :))

எட்வின், ரோஜா காதலன், மிகச் சரி. அசரடிக்கிறார் ரகுமான்

நன்றி பலா. உள்குத்து? :))

தர்ஷன், அந்தப் பாட்டு இன்னும் ஃபேவரிட் ஆகல

வணங்காமுடி, நிறைய படம் இருக்கு தல. அதான். நன்றி

கல்யாணி மேடம் கேட்டுட்டு சொல்லுங்க

ஜெட்லீ, இன்னும் சில நல்ல பாட்டு இருக்கு. கேட்கனும்

வெற்றி, அது கேட்டு கேட்டு சலிச்சிசுடுச்சு. அதாம்ப்பா

வாழ்த்துகள் பட்டிக்காட்டான்

சுசி, கேளுங்க..

மோகன், கேட்கறேன் பாஸ்..

பாலா, கோவாவின் எல்லாப் பாடும் கேட்கும் ரகம் தான். ஆனால் பெரிதாக ஈர்க்கவில்லை. பதிவில் சொன்னது போல லேட் பிக்கப் ஆகலாம். 3 இடியட்ஸ் பாட்டு கேட்கல... :))

ILA(@)இளா on January 13, 2010 at 5:21 PM said...

நான் எழுதனும்னு நினைச்ச பதிவு, அப்படியே உங்க பதிவுல இருக்கு. தமிழ் படம் நல்ல மெட்டுக்கள் இருக்கு, வரிகள் பகடிதாங்கிறதால, கொஞ்சம் நெருடல். மத்தபடி எனக்குப் பிடித்த வரிசை, தமிழ்படம், பையா, வி.தா.வ, கோவா.

நாய்க்குட்டி மனசு on January 13, 2010 at 6:09 PM said...

HAPPY PONGAL

பித்தன் on January 13, 2010 at 7:16 PM said...

பொங்கல் நல்வாழ்த்துகள்

டம்பி மேவீ on January 13, 2010 at 8:32 PM said...

naan puthusaai vantha entha pattaiyum ketkavillai.... padam vanthaal parthu kollalam nnu loose la vittuten

கும்க்கி on January 13, 2010 at 11:45 PM said...

:--)))

மன்னிக்க....நேரமில்லை..

||| Romeo ||| on January 14, 2010 at 1:15 AM said...

\\1) ஹொசன்னா//

கண்டிப்பா செம ஹிட் ஆகும். ஆனால் பழைய ட்யூன் போல இருக்கு சில இடத்தில்.

RaGhaV on January 14, 2010 at 2:44 AM said...

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. :-))

விக்னேஷ்வரி on January 14, 2010 at 10:49 AM said...

அசலுக்கு அப்புறம் வேட்டைக்காரனா? ஓகே.

vellinila on January 14, 2010 at 11:50 AM said...

இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தமிழ்ப்பறவை on January 15, 2010 at 9:42 PM said...

நான் இன்னும் எல்லாப் பாட்டும் கேட்கலை சகா... பையா,கோவாதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
கோவா கேட்கக்கேட்கப் பிடிக்கிறது...
இடைவழி பாடல் வித்தியாசம்.. இதுவரை மிகப் பிடித்தது... கிராமிய ட்யூன்களில் வருவது அடித்துச் சொல்வேன் ராஜா பாடல்கள் என.. இதை யுவனே பண்ணி இருந்தால் ஹாட்ஸ் ஆஃப் டூ ஹிம்...இதுபோல் இன்னும் எதிர்பார்க்கிறேன்...
தமிழ்ப்படம் ‘ஓ மஹஜீயா’ கேட்டேன். தங்கள் கருத்தே என் கருத்தும்.. நல்ல மெலடி...பகிடியில்(நீங்களும் இலக்கியவாதி ஆயிட்டீங்க) மாட்டிக் கொண்டது பரிதாபம்.. மற்ற பாடல்கள் கேட்க வேண்டும்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஹொசன்னா மட்டும் கேட்டேன். கேட்க வேண்டும்...
http://kaalapayani.blogspot.com/2010/01/blog-post_13.html
இதைப் படித்ததும், ஆவல் கூடி விட்டது கேட்க.. பார்க்கலாம்...
தீராத விளையாட்டுப் பிள்ளை இன்னும் கேட்க வில்லை...
நாலைந்து பதிவுகளை ஒரே நேரத்துல கொடுத்துட்டீஙக்ளே.... :-(எவ்வளவு ந்ந்நீளப் பின்னூட்டம் இட வேண்டியிருக்கிறது பாருங்கள்... :-(

யோ வொய்ஸ் (யோகா) on January 16, 2010 at 9:03 AM said...

விண்ணைத் தாண்டி வருவாயா கலக்கல் சகா, ரகுமான் பாடல்கள் ஹிட் ஆக காலம் எடுக்கும் காரணம் ஹாரிஸ் ஜெயராஜ் போல் அவர் ஏற்கனவே ஹிட் ஆன பாடல்களை மீண்டும் தருவதில்லை என்பதாலாகும்

Dhar on January 19, 2010 at 12:20 PM said...

Romeo, ஆம் சிறிது "எனக்கு 20 உனக்கு 18" பாதிப்பு தெரிகிறது...
யோகா சொல்வது சரியே...

PopGalley on January 22, 2010 at 6:58 PM said...

Arrahman songs are superb in Vinnaithandi Varuvaya..Chanceless

மின்னல்ப்ரியன் on January 30, 2010 at 2:23 PM said...

உங்கள் கமெண்ட் பார்த்தேன் கார்க்கி அவர்களே ..மன்னிக்கவும் உடனே
பதில் அளிக்க முடியவில்லை.தமிழ்படம் பாடல்கள் பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு
நன்றி . உங்கள் எதிர்பார்ப்பை போலவே படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.
அனைத்து பதிவர்களும் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பின்னூட்டம் மூலம்
அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . உங்கள் விமர்சனத்தையும்
எதிர்பார்க்கிறேன் கார்க்கி ......... நன்றி .

கே.சந்துரு
தொடர்புக்கு ...9791177444

 

all rights reserved to www.karkibava.com