Jan 11, 2010

யானை முன்னே.மணியோசை பின்னே


 

புத்தக சந்தையில்தான் இவரை சந்தித்தேன். சிறந்த வாசிப்பாளி. புத்தகங்களை தேடித்தேடி வாங்குவது ஒரு வகை. பார்த்து பிடித்திருந்தால் வாங்குவது ஒரு வகை. பார்த்ததையெல்லாம் வாங்குவது ஒரு வகை. இவர் எல்லா வகையில் வாங்கி குவித்துக் கொண்டிருந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்த நர்சிம்மிடம் என்னய்யா என்றேன். நீ வேற சகா. ஊருல அவரு வீட்டுல 25000 புக்ஸ் இருக்கும் தெரியுமா என்றார். இலவச இணைப்பாக இன்னொன்றையும் சொன்னார். கி.ராவின்  வண்ணதாசனின் கதையில் நெல்லையில் இருக்கும் ஒரு தெருவை அழகாக குறிப்பிட்டிருந்தாராம். மதுரையை சேர்ந்த இவர் இதற்காக நெல்லைப் போய் அந்தத் தெருவைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். என் பிளாகையும் படிப்பாராம். அவர் புட்டிக்கதையை வாசித்துவிட்டு டாஸ்மாக்குக்கு போகாமல் இருக்க எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்வோம்.

____________________________________________________________________________________

வார்த்தை வித்தகர் அவர். பின்னூட்டங்களிலும், பதிவிலும், ஏன் கதைத் தலைப்புகளிலும் கூட வார்த்தை விளையாட்டு நடத்துபவர். ஒரு நாள் தானே சமைத்து அண்ணியை அசரடிக்க நினைத்த அண்ணன் ரசம் வைத்திருக்கிறார். எப்படியோ அது இனிப்பாக இருந்திருக்கிறது. ரசம் எங்கேயாவது ஸ்வீட்டா இருக்குமா என்று கேலி பேசியிருக்கிறார் அண்ணி. உண்டே. அதி”ரசம் ஸ்வீட்டாதானே இருக்கும் என்றாராம். அண்ணனை முறைத்த அண்ணி பூரிக்கட்டையை கையிலெடுத்து சொன்னாராம் ”தபாருங்க. இந்த வேலையெல்லாம் பிளாகோடு நிறுத்திக்கோங்க. எங்கிட்ட விளையாண்டா விபரீதமாய்டும்”. அதனால்தான் இப்போதெல்லாம் கலக்கல் சகா, நல்லாயிருக்குங்க என்பதோடு எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.இவரையும் கவிஞர் கென்னையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்தேன். ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு விஷயத்துக்கு காரணமானவரை கிராஃபிக்ஸ்ல உள்ள கொண்டு வர வசதியா இருக்கும்படி நடுவில் கேப் விட்டே நின்றார்கள். விரைவில் வெளியீடு. ___________________________________________________________________________________

புத்தகச் சந்தையில் அந்த நல்ல கவிஞரை சந்தித்தேன். சாரு அவரை தன் வாரிசாக அறிவித்திருந்தாலும் எனக்கு அவர் மேல் மரியாதை உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது ரிட்டன்(return) டிக்கெடோடுதான் வந்ததாகவும் உடனே கிளம்ப இருப்பதாகவும் சொன்னார். ரிட்டன்(written) டிக்கெட்ன்னா எப்படி சகா, கையால எழுதி தருவாங்களா என்ற என் அறிவு செறிந்த கேள்வி புரியாமல் விழித்தார். கவிதை புரிந்து என்ன பயன்?மொக்கை புரியலையே என்றேன். அதற்கெல்லாம் மொக்கையா இருக்கனும் என்றார். அதுசரி. அதனால் தானே அவரிடம் கேட்டேன் அந்தக் கேள்வியை.

___________________________________________________________________________________

சில நாட்களுக்கு முன்பு ஒரு அரிச்சந்திரனின்  ஹிட் ரேட்ஸைக் குறித்து எழுதி இருந்தேன். வழக்கம் போல் அவரின் ரசிகர்கள் சில பேரிடமிருந்து அழகிய தமிழில் அர்ச்சணை மெயில்கள் வந்தன. சரியான பயந்தாங்கொள்ளியான நான் இனிமேல் எழுத மாட்டேங்க என்ற ரீதியில் பதில் அனுப்பி தற்காலிகமாக ஆட்டோ வரும் அபாயத்தை தவிர்த்தேன். இப்போது அப்படியெல்லாம் தவறு செய்ததற்கு பரிகாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலே சொன்ன பதிவு எழுதிய நாள் திசம்பர் 26,2009. அப்போது அவரது தளத்தின் ஹிட்ஸ் 22 லட்சம் என்று சொல்லியிருந்தேன். நிச்சயம் உங்களில் பலர் உடனே அங்கே போய் சரி பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.அவரது கணக்குப்படி பார்த்தால் 41 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன், சில நாட்களுக்கு முன்பு சந்திரலேகா என்பவரிடமிருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் உடனே அரிச்சந்திரனின் ஹிட்ஸ் கவுண்ட்டரைப் பார்க்க சொல்லி இருந்தார். போய் பார்த்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!44 லட்சத்தைத் தாண்டி மின்னல் வேகத்தில் செல்கிறது. வெறும் 17 நாளில் 22 லட்சம் பேர் படித்திருக்கிறார்கள். இப்போது சொல்கிறேன் தமிழ் எழுத்துலகின் சூப்பர்ஸ்டார் இவர்தான். இனிமேல் நானும் அரிச்சந்திரனின் வாரிசு.. ச்சே அவரின் விசிறி.

பி.கு: சைடு பாரில் அரிச்சந்திரனின் சாம்பிள் ஹிட்ஸ் கவுண்ட்டரை இணைத்திருக்கிறேன். புரொஃபைலுக்கு கீழே இருக்கிறது

40 கருத்துக்குத்து:

Anbu on January 11, 2010 at 8:22 AM said...

me the first

விஜய் ஆனந்த் on January 11, 2010 at 8:26 AM said...

:-)))...

ஒத்துக்கறேன்...

அத்திரி on January 11, 2010 at 8:41 AM said...

சகா ஒரு கவிதை கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன் வந்து பாரு

Anonymous said...

க்ளூ எல்லாம் புரிஞ்ச்சிடுச்சு. இந்த பாணி நல்லா இருக்கு

♠ ராஜு ♠ on January 11, 2010 at 8:57 AM said...

\\"யானை முன்னே.மணியோசை பின்னே"\\

இது காக்டெயிலுக்கு டிரைலரா..?

rajesh on January 11, 2010 at 9:05 AM said...

when will charu change? I think he is incorrigible. better we avoid him. Cheap

Cable Sankar on January 11, 2010 at 9:23 AM said...

அட லூசுல விடு கார்க்கி:))

முகிலன் on January 11, 2010 at 9:25 AM said...

நீங்க ஏங்க 44,00,000தோட நிறுத்திட்டிங்க. நாலு கோடியத் தொட்டிருக்கலாமே?

தராசு on January 11, 2010 at 9:49 AM said...

ஏய்யா, மறுபடியும் மறுபடியும் அரிச்சந்திரனை வம்புக்கு இழுக்கறீங்க, விடுங்கப்பா.

சங்கர் on January 11, 2010 at 9:51 AM said...

அந்த புத்தகப் புலி யாருன்னு சொன்னா, அவருகிட்டே வாங்க வேண்டிய புத்தகங்கள் பத்தி கேட்கலாம்

சங்கர் on January 11, 2010 at 9:53 AM said...

//மகரநெடுங்குழைகாதனை //

புரியலையே,

முரளிகுமார் பத்மநாபன் on January 11, 2010 at 9:57 AM said...

அடடே நம்ம அரிசந்திரரா..... கி கி கி

சங்கர் on January 11, 2010 at 10:05 AM said...

அந்த கவுண்டர் எங்கே கிடைக்குது :))))

கார்க்கி on January 11, 2010 at 10:08 AM said...

வாங்க அன்பு

விஜய், எதை ஒத்துக்கிறீங்க?

அத்திரி, இதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டிங்க?

அம்மிணி, க்ளூ கொடுக்கவே இல்லையே!!:)

ராஜூ, மீண்டும் படி. மேட்டர் புரியும்

ராஜேஷ், உண்மைதான்

கேபிள், லூசுல விட சொல்றீங்களா? இல்லை லூச விடுன்னு சொல்றீங்களா?

முகிலன், குருவை மிஞ்சிய சிஷ்யம் ஆயிருக்கலாம் இல்ல? மிஸ் பண்ணிட்டேன் சகா

தராசு, வம்பா? இதை எப்படிங்க சொல்லாம இருக்க முடியும்? இப்படியெல்லாம் பண்ணா ஜோக்கர்ன்னு சொல்லாமா கிங்குன்னா சொல்லுவாங்க?

ஷங்கர், அவர் சொல்ர புக்க எல்லாம் வாங்கினீங்கன்னா உங்க கூட பேசவே மாட்டேன் சொல்லிட்டேன் :))
மகரனெடுங்குழைகாதகன் என்பவர் பதிவர்களுக்கு குலதெய்வம்.

முரளி, கிகிகி.. அவர நேரில் பார்க்கிறவங்க எல்லாம் இப்படி சிரிச்சா போதும். எப்படியிருக்கும்?

பீர் | Peer on January 11, 2010 at 10:15 AM said...

அந்த மொக்க மேட்டர் ஒண்ணும் புரியலையே, கார்க்கி. :)

பலா பட்டறை on January 11, 2010 at 10:22 AM said...

பதிவர்களுக்கு குலதெய்வம்.//

::))

pappu on January 11, 2010 at 10:24 AM said...

நம்ம ஹிட்ஸயே நம்ப முடியல! ”இதை அப்படியே தஞ்சாவூர்ல கல்வெட்டு செதுக்கி பக்கத்துல உட்கார்ந்திடு. பின்னால வர்றவங்க படிச்சு தெரிஞ்சுகட்டும்” - கவுண்டர்.

மோகன் குமார் on January 11, 2010 at 10:29 AM said...

என்ன கார்க்கி Profile போட்டோவில் பாத்தா சட்டுன்னு சாமியார் மாதிரி இருக்கீங்க?

அந்த ரசம் மேட்டர் கொஞ்சம் நரசிம் மாதிரியும் இருக்கு. :)) (இருக்காதுன்னு தெரியும்.. இருந்தாலும் கொஞ்சம் அந்த மாதிரி இருக்கு )

நர்சிம் on January 11, 2010 at 11:05 AM said...

ரைட்ட்ட்டு சகா

குசும்பன் on January 11, 2010 at 11:53 AM said...

இப்படி இருக்குமோ? ஒரு கிளிக் செஞ்சா 1000 பாயிண்ட்ஸ் ஏறுமோ?

கார்க்கி on January 11, 2010 at 11:58 AM said...

பீர், எது? ரிட்டன் டிக்கெட்டா? ஆவ்வ்வ்

பலா, உண்மைதாங்க. நான் எழுத வந்ததில் இருந்து பலர் சொல்றாங்க

பப்பு, நவீன கல்வெட்டுதானே சகா பிளாகு!!!

மோகன், அப்படின்னா சட்டுன்னு பார்க்காதிங்க கொஞ்சம் ஆற அமர பாருங்களேன் :))

நர்சிம், சாரு மேட்டர் ரைட்டுன்னு சொல்றீங்களா? இல்லை அவர் செய்தது ரைட்டுன்னு சொல்றீஙக்ளா? :)))

குசும்பரே, அபப்டிச் செஞ்சா கூட 22 லட்சம்???? கில்லாடிங்க அவரு..

விக்னேஷ்வரி on January 11, 2010 at 12:56 PM said...

Present Sir.

Chitra on January 11, 2010 at 12:57 PM said...

அடேங்கப்பா....... பதிவர்கள் பற்றிய தகவல்களில் கலக்குறீங்க. தொடர்ந்து அசத்துங்க.

சுசி on January 11, 2010 at 1:02 PM said...

//சைடு பாரில் அரிச்சந்திரனின் சாம்பிள் ஹிட்ஸ் கவுண்ட்டரை இணைத்திருக்கிறேன். புரொஃபைலுக்கு கீழே இருக்கிறது//

பாத்தாச்சு பாத்தாச்சு..
உங்க புரொஃபைலுக்கு கீழே இல்ல.. இன்னும் கொஞ்சம் கீ...ழே இருந்துது.

என்னம்மோ நடக்குது கார்க்கி..

கிரி on January 11, 2010 at 1:07 PM said...

கார்க்கி http://www.jstracker.com/ உட்பட பல ஹிட் கவுன்ட்டர்கள் டுபாக்கூர் ஹிட் கவுன்ட்டர்கள் தான்..இஷ்டம் போல அப்படியே ஏற்றி வைத்துக்கொள்ளாலாம்.. அதுவுமில்லாமல் ஆன்லைனிலும் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் இருபது பேர் (இரட்டிப்பு) காட்டும்.

பெரும்பாலும் இப்படித்தான்

இருப்பதிலே ஓரளவு சரியான ஹிட் கவுண்ட்டர் என்றால் நீங்கள் தற்போது வைத்து இருக்கும் http://www.histats.com/ தான் மற்றதெல்லாம் தாறுமாறாக எண்ணிக்கையை கூட்டும். அவை எல்லாம் உண்மையான வருகை எண்ணிக்கையே அல்ல.

இதை நம்பாதவர்கள் இரண்டையும் வைத்து பார்த்தால் உண்மை அறியலாம். எது ஆட்டோ மீட்டர் மாதிரி சுத்துது என்று ;-)

சுசி on January 11, 2010 at 1:16 PM said...

//பதிவர்களுக்கு குலதெய்வம்.//

யாரு உங்க புரொஃபைல இருக்கிறவரா கார்க்கி??

கிரி on January 11, 2010 at 1:16 PM said...

http://www.histats.com/ இதிலும் உயர்த்தலாம் ஆனா ஒவ்வொருமுறையும் அனைத்தையும் மாற்ற வேண்டும்.. ஆனால் அதுவாக இப்படி தாறுமாறாக உயர்த்தி காட்டாது..

ஒரு சிலர் காமெடியாக வருகை எண்ணிக்கையை விட பக்கங்கள் பார்த்த எண்ணிக்கை குறைவாக இருக்கும் படி வைத்து இருப்பார்கள்.

எனவே என்னோட ஓட்டு இதற்கு தான்

Karthik on January 11, 2010 at 1:29 PM said...

இப்போது சொல்கிறேன் தமிழ் எழுத்துலகின் சூப்பர்ஸ்டார் இவர்தான்.//

சொல்லிட்டாருப்பா. இது இப்பதான் உங்களுக்கு தெரிஞ்சுதா? அமெரிக்கால இருந்து இங்கிலிபீஷ் எல்லாம் தெரிஞ்ச 21 வயசு ரசிகர், சாருவை தமிழ் இலக்கியத்தின் கடவுள்ன்னிருக்காரு. நீங்க வேற.

கன்னியாகுமரியில் சிலை வெக்கலாமானு யோசிங்க. :)

Karthik on January 11, 2010 at 1:33 PM said...

ப்ரொபைல் போட்டோ பத்தி கருத்து சொல்லணுமா, சரி சரி. எனக்கு நடிகர் ஜீவன் மாதிரி இருக்கு. ;)

'நீ அழுவடா. இந்த போலீஸ் வேலைக்கு ஏன் வந்தோம்னு நெனைச்சு நெனச்சு அழுவடா. பார்க்கலாமாடா?'

LOL. :)))

கார்க்கி on January 11, 2010 at 1:54 PM said...

profile ஃபோட்டோ மாத்திவிட்டேன்

______________

வாங்க விக்கி

நன்றி சித்ரா

சுசி ..அவரேதான்

கிரி. சரியா சொன்னிங்க. மேலும் என் கவுண்ட்டரை யார் க்ளிக் செய்தாலும் மாதம் வாரியாக ஹிட்ஸ் கணக்கை பார்க்கலாம் :))

கார்த்திக், கண்யாகுமரியா? அவருக்கு பாரிஸ்தாம்ப்பா கரெக்ட். தபால் தலை வெளியுடுவதற்கு பதில் ஒரு சரக்குக்கு அவர் பெயர் வைக்கலாம். ஃபோட்டோ மாத்திட்டேன். பார்த்து சொல்லு

வால்பையன் on January 11, 2010 at 5:23 PM said...

”ஹிட்ஸ்” செம ஹாட்டு!

நாய்க்குட்டி மனசு on January 11, 2010 at 5:34 PM said...

சாரு அவரை தன் வாரிசாக அறிவித்திருந்தாலும் எனக்கு அவர் மேல் மரியாதை உண்டு//
இதுக்கு பேர் தான் குசும்பா?
ரசம் வைக்க முறை கேட்டு அடுப்பில் வைக்க சொல்லாததால் வைக்காமல் ருசி பார்க்க வந்தவங்க ஊதிப் பார்க்கும் போது அசடு வழிந்த ரசமான அனுபவம் நினைவு வந்தது.

பட்டிக்காட்டான்.. on January 11, 2010 at 7:24 PM said...

உங்கள் profile போட்டோவில் குற்றம் உள்ளது..

Romeoboy on January 11, 2010 at 7:47 PM said...

ஹிட் ஹிட்ன்னு ஏதோ சொல்லுறன்களே அப்படினா என்ன சகா ??

பித்தன் on January 11, 2010 at 7:54 PM said...

ok ok

கும்க்கி on January 11, 2010 at 9:32 PM said...

:--))

வெற்றி on January 11, 2010 at 9:55 PM said...

சகா ஆணிய புடுங்க வேணாம்னு சொல்றீங்களா இல்ல அசல பாக்க வேணாம்னு சொல்றீங்களா.. :))

பரிசல்காரன் on January 12, 2010 at 10:08 AM said...

சகா

தலைப்புக்கான காரணத்தை நீ சொன்னப்ப அசந்துட்டேன்ப்பா! யாரும் அதை கவனிக்கலையா!

வெற்றி on January 12, 2010 at 12:21 PM said...

தலைப்புக்கு என்ன காரணம் சகா?

ஆதிமூலகிருஷ்ணன் on January 28, 2010 at 8:34 PM said...

ஆமா, மொத பாரா யாரைப்பத்தி.?

 

all rights reserved to www.karkibava.com