Jan 9, 2010

எஸ்.ஐ.,யை காப்பாற்ற ஆம்புலன்சுக்கு காத்திருந்த அமைச்சர்கள்


 

tblfpnnews_88100397587

 

திருநெல்வேலி : நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.

தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது. வெற்றிவேல் பிற்பகல் 2.40 மணிக்கு வெட்டப்பட்டார். 20 நிமிடங்களுக்கு பிறகே அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் கொண்டுசெல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின், எதிரே வந்த ஆம்புலன்சில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

நன்றி: தினமலர்

___________________________________

கொடூரமான அந்த வீடியோவை இங்கே பதிவேற்ற மனம் வரவில்லை. நல்லா இருங்கப்பா. தண்ணி கொடுக்கிறவர் மற்றவர்களை விட  கொஞ்சம் பரவாயில்லைனாலும் அந்த தண்ணியை குடிக்க முடியாமல் காவலர் படும் அவஸ்தை. ச்சே. நடந்ததற்கு அரசு ஒன்னும் செய்யமுடியாதுதான். ஆனால் அந்த அமைச்சர்கள் மேல் என்ன நடவடிக்க எடுக்கப் போகிறது?

55 கருத்துக்குத்து:

நர்சிம் on January 9, 2010 at 10:58 AM said...

இதை பற்றி எழுதப் போகிறேன் சகா..மிக வெறுப்பாக இருக்கிறது. நம் அதிகாரிகளின் அலட்சியம் பற்றி நான் சென்ற பதிவில் எழுதியது முழுக்க உண்மை தான்.

Romeoboy on January 9, 2010 at 11:05 AM said...

அந்த வீடியோ பார்த்து எனக்கு செம ஆத்திரமா வந்துச்சு.. அதும் தண்ணி குடுக்குற ஆளு ஏதோ தீண்ட தகாதவனை தொடுவது போல நடந்து கொண்டது என்னை ரொம்ப வேதனைபடுத்தியது. மனித உயிர் எவ்வளவு கேவலமா போச்சு இவங்களுக்கு .. ச்சே.

கடைக்குட்டி on January 9, 2010 at 11:07 AM said...

ரொம்ப குடுமையான வீடியோங்க..

பக்குற நமக்கே இப்படி பத்திக்கிட்டு வருதே.. அந்த எஸ்.ஐயோட சொந்தங்கள் நிலைமை...

Anonymous said...

வீடியோ பாக்கற மனவலிமை இல்லீங்க.

வெங்கிராஜா | Venkiraja on January 9, 2010 at 11:30 AM said...

ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. கடைக்குட்டி சொல்வதைப்போல, அவரது மனைவியும் தாயும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்? கொடுத்து உதவ வண்டியே அந்த இடத்தில் இல்லையா? அந்நியனில் வருவதைப்போல இவர்களுக்கு அந்தகூபம் தான் சரி.

வெற்றி on January 9, 2010 at 12:36 PM said...

மிக கொடுமை சகா..
உயிர்களின் மதிப்பு அலட்சியமாக்கபட்டதின் மற்றுமோர் காட்சி..

ராஜகோபால் (எறும்பு) on January 9, 2010 at 12:44 PM said...

என்ன சொல்றதுனே தெரியலை.வேதனையாக இருக்கிறது

:((இதுக்கும் மைனஸ் குத்தா

:(((

susi on January 9, 2010 at 12:51 PM said...

:(((((((((((((

இதுக்கு அவரோட உயிர் உடனவே போயிருந்திருக்கலாம்.

நான் பாக்கல கார்க்கி.
அவ்ளோ மனவலிமை எனக்கு இல்ல.

கார்க்கி on January 9, 2010 at 1:21 PM said...

இதுல எதுக்குங்க நெகட்டிவ் ஓட்டு? நான் அதையெல்லாம் கவனிப்பதில்லை. ஆனால் எதுக்குன்னு சொன்னா நல்லது. அது என் மீதான வெறுப்பா அல்லது மைதீன்கான் என் பதிவை படிக்கிறாரான்னு தெரிஞ்சிக்க வேண்டும்

பரிசல்காரன் on January 9, 2010 at 1:34 PM said...

:-(

கசக்கிறது.

♠ ராஜு ♠ on January 9, 2010 at 1:39 PM said...

கெட்ட கெட்ட வார்த்தையா வாயில வருது...!

:-(((

அன்புடன் அருணா on January 9, 2010 at 1:45 PM said...

/ஆனால் அந்த அமைச்சர்கள் மேல் என்ன நடவடிக்க எடுக்கப் போகிறது?/
எதுவுமே செய்ய மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

தராசு on January 9, 2010 at 1:45 PM said...

இன்ஸ்பெக்டரை வெட்டுனதுக்கு பதிலா இந்த மனித நேயமற்றவர்கள் செத்திருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன்.

இவுனுக எல்லாம் மாண்புமிகுக்கள் வேற, போடாங்....

தராசு on January 9, 2010 at 1:49 PM said...

யாருங்க அந்த பொட்டிக் கடை,

காசு வாங்குனா வெட்டிருவீங்களா? நல்லாருங்கண்ணா.....

கல்யாணி சுரேஷ் on January 9, 2010 at 1:53 PM said...

//Pot"tea" kadai said...

இந்த எஸ் ஐ பாடுகளுக்கு இது வேனும் தான் தம்பி, கை நீட்டி காசு வாங்குனா இது தான் கதி.அந்த வீடியோவையும் போடென் கொஞ்சம்//

இதெல்லாம் அநியாயம். எல்லாரும் இப்படி இருக்கறதில்லை. எங்க பெரியப்பா கூட காவலரா இருந்தவங்கதான். அவங்க உயிரோட இருந்தப்போ கட்டின வீட்டுக்கான வீட்டுக்கடன் இன்னும் முடியல. ( அவங்க இறந்து 11 வருடமாகுது) எங்க அண்ணா ரெண்டு பேர் ( பெரியப்பா பசங்க) police department ல தான் இருக்காங்க. அதுல ஒரு அண்ணா எஸ்.ஐ ஆ தான் இருக்காங்க. இந்த நியூஸ் படிச்சதும் எங்க அண்ணா நினைவுதான் வந்துச்சு. SI training முடிஞ்சதும் Station ட்ரைனிங் ல இருக்கும் போது ஒரு திருடனை விரட்டி போகும் போது பைக் விபத்துக்குள்ளாகி ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் செய்ற தப்பால மொத்த காவல் துறையையும் தப்பு சொல்றது சரியில்ல.

இந்த சம்பவம் நடந்தது எங்க ஊர் பக்கம் தான்.

//Pot"tea" கடை க்கு கொஞ்சம் சொல்லி வைங்க கார்க்கி.

Raja Subramaniam on January 9, 2010 at 1:55 PM said...

இதுல இன்னொரு கேவலம் என்னன்னா நெல்லை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அவரை காப்பாற்ற எல்லா முயற்சியும் எடுகபட்டதுன்னு NDTV ல பேட்டி கொடுக்குறாரு ஒரு போலீஸ் எஸ்.ஐகே இந்த நிலைமை தான்னா பொது ஜனத்துக்கு என்ன நிலைமையோ....

இந்த நிலைமைல நெறைய கட்டுகதைகள் வேற... அவங்க டார்கெட் வெற்றிவேல் இல்ல காக்கி யுனிபார்மும் ஹெல்மட்டும் தான் அவர் உயிரை வாங்கிவிட்டது என்று மீடியா வேற..... இன்னொரு அமைச்சரோ "நெல்லைல இதெல்லாம் ரொம்ப சகஜம்பா"ன்னு பேட்டி கொடுக்குறாரு போற போக்க பார்த்தா யாரு யாரை வேணும்னாலும் கொள்ளலாம் அப்படிங்கற நெலம கூடிய சீக்கிரம் வந்துடும் போல

கல்யாணி சுரேஷ் on January 9, 2010 at 1:57 PM said...

அப்படியே அந்த SI கை நீட்டி காசு வாங்கறவரா இருந்திருந்தாலும் அவரை இழந்து அவரோட குடும்பமும் குழந்தைகளும் கஷ்டபடறது கொடுமை இல்லையா? அதுவும் அந்த கொலை ஆள்மாறாட்டத்தில நடந்த கொலை.

Pot"tea" கடை மாதிரி ஆட்கள் ஏன் இப்படி இருக்காங்க?

KaveriGanesh on January 9, 2010 at 2:33 PM said...

போங்கடா நீங்களும் , உங்க பதவியும்.

2012 ல் உலகம் அழிந்தால் சந்தோசம் அடைய கூடிய முதல் ஆளா நானா தான் இருப்பேன்.

20 தலைமுறைக்கும் சேத்து வச்ச காசு நாசமாக போக, 2012ல் உலகம் அழியனும்.

Subankan on January 9, 2010 at 2:38 PM said...

:(((

கனககோபி on January 9, 2010 at 2:51 PM said...

நிச்சயமாக கோவப்பட வைக்கின்ற செயற்பாடு...
உயிர் என்பது இவர்களுக்கெல்லாம் சாதாரணமாகிப்போய்விட்டதை எண்ணி வருந்துவதைத் தவிர என்ன செய்யவதென்று புரியவில்லை.

Karthik on January 9, 2010 at 2:51 PM said...

நம்ப முடியல முதல்ல. வீடியோவ பார்த்தால்.. ச்சே!! :(((

Karthik on January 9, 2010 at 2:52 PM said...

follow up..

அதிஷா on January 9, 2010 at 2:57 PM said...

நண்பர்களே மேலே பொட்டீக்கடை என்ற பெயரில் வெளியாகியிருக்கும் பின்னூட்டம் போலியான ஒன்று.

நண்பர் பொட்டீக்கடையினுடையது அல்லை.

கார்க்கி அந்த பின்னூட்டத்தை நீக்கி விடவும். அது போலி புரொபைல்.

கபிலன் on January 9, 2010 at 3:11 PM said...

கொடுமை.....நேற்று இரவு டிவி நியூஸ்ல பார்த்துட்டு, தூக்கமே வரல....இரவு ரெண்டு மணிக்கு உட்கார்ந்து நானும் என்னுடைய ஆதங்கத்தை பதிவாக போட்டிருக்கேன்.

http://localtamilan.blogspot.com/2010/01/blog-post.html

ஜெனோவா on January 9, 2010 at 3:43 PM said...

ஒரு உயிர் போராடிக்கொண்டிருக்கும் பொழுது பார்த்துக்கொண்டிருந்த இந்த மனித நேயமற்றவர்களின் சாவும் மிகவும் அசிங்கமான முறையில்தான் நிகழும்னு தோணுது சகா ...

விஷயத்த பார்த்ததிலிருந்தே ரொம்ப ஆத்திரம் ஆத்திரமாக வருது ..... நாசமா போக

// ஆனால் அந்த அமைச்சர்கள் மேல் என்ன நடவடிக்க எடுக்கப் போகிறது? //

எடுக்கவேண்டும் .. ஏதாவது செய்ய வேண்டும் என்றே மனசு அடிக்கிறது .... பார்ப்போம்

நேசன்..., on January 9, 2010 at 3:48 PM said...

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!.........

RajaS* Forever * on January 9, 2010 at 4:49 PM said...

இந்த தவறுக்கு அந்த அமைசர்கள் கண்ண்டிப்பாக தண்டனை அனுபவிப்பார்கள்

kailash,hyderabad on January 9, 2010 at 4:51 PM said...

ரொம்ப கொடூரம். இந்த மா (னங்கெட்ட) மி (ருகங்) க்களுக்கு சொந்தங்கள் இருக்கிறார்களா இல்லையா?
அவர்களுக்கு இப்படி என்றால் இதே மாதிரிதான் நடந்து கொள்வார்களா?
இனிமேல் யாராவது தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் இரண்டு வருடம் ராணுவத்திலும்
அரசு மருத்துவமனையிலும் வேலை செய்திருக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும் .
அப்போதுதான் உயிரின் மதிப்பு தெரியும் .

மதார் on January 9, 2010 at 4:56 PM said...

//நெல்லைல இதெல்லாம் ரொம்ப சகஜம்பா"// இப்படி சொல்லிசொல்லியே திருநெல்வேலிய ஏதோ அந்நிய பூமி மாதிரி ஆக்கிட்டாங்க , யார்கிட்டயும் திருநெல்வேலி பக்கம் ஊருன்னு சொல்ல முடியல சும்மா ஏதோ தீவிரவாதி மாதிரி பாக்குறாங்க. வீடியோ பார்த்தேன் நைட் எப்படி சாப்பிட போறேன்னு தெரியல . மனசுக்குள்ளயே ஓடுது .சினிமால கூட இந்த மாதிரி பார்க்க பயம் .ஆனா காலை பேப்பர் நியூஸ் பார்க்க வச்சுடுச்சு . அந்த மான்புமிகுக்கள சும்மா விடக்கூடாது . இந்த எதிர் கட்சிகள் என்ன செய்யுதுன்னு பார்க்கலாம் .

குப்பன்.யாஹூ on January 9, 2010 at 5:41 PM said...

There were unblasted bombs there, without knowing the news in full, sitting in chennai or Banglore or USA, dont write please.

Please listen all sides of an issue and then write.

அப்பாவி முரு on January 9, 2010 at 6:38 PM said...

//தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளால் பரவும் வன்முறை மற்றும் கொடூரங்களை விட பத்திரிக்கைகளாலே அதிகம் வன்முறையும் கொடூரமும் பரப்பபடுகினறது என்பதற்கு இந்த கானோளியே ஆதாரம்.

இந்த காணொளியை ஒளிபரப்புவதால் தாங்கள் உங்கள் பத்திரிக்கையின் மூலம் சொல்ல விரும்பும் கருத்து தான் என்ன?
by r muru,singapore,Singapore 1/9/2010 5:45:11 AM IST //

தினமலரில் நான் போட்ட காமெண்ட். ஆனால் பதில் சொல்லத்தான் ஆளில்லை....

:(((

Tamilmoviecenter on January 9, 2010 at 6:41 PM said...

kailash,hyderabad said...
இனிமேல் யாராவது தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் இரண்டு வருடம் ராணுவத்திலும்
அரசு மருத்துவமனையிலும் வேலை செய்திருக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும் .
அப்போதுதான் உயிரின் மதிப்பு தெரியும்.

i will agree with you

Mahesh on January 9, 2010 at 7:39 PM said...

கொடுமையிலும் கொடுமைங்க....

http://thuklak.blogspot.com/2010/01/blog-post_09.html

Sangkavi on January 9, 2010 at 7:39 PM said...

அங்கு இருந்த அரசியல்வாதிகள்,அதிகரிகள் அவர்கள் சொந்த பந்தத்தில் ஒருவர் வெட்டுபட்டு இருந்தால் இப்படி பாத்துட்டு இருப்பாங்களா...?

செ.சரவணக்குமார் on January 9, 2010 at 7:48 PM said...

இந்த செய்தியைப் படித்ததிலிருந்து மனம்
கனத்துப் போயுள்ளது. கண் முன்னால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிர் அத்தனை அற்பமாகப் போய்விட்டதா இவர்களுக்கு?

அத்திரி on January 9, 2010 at 8:45 PM said...

ஆங்கில செய்தி சேனல்களில் இந்த வீடியோ காட்சியை பார்த்தௌம் மனம் வெதும்பியது. மனிதாபிமானம் எங்க போச்சின்னு தெரியல....... தமிழ் சேனல்கள் இந்த வீடியோ காட்சிகளை கண்டு கொண்டதாக தெரியல.


உண்மையிலே மனிதம் மரத்துப்போய்க்கொண்டிருக்கிறது

வாசகன் on January 9, 2010 at 9:03 PM said...

{அப்படியே அந்த SI கை நீட்டி காசு வாங்கறவரா இருந்திருந்தாலும் அவரை இழந்து அவரோட குடும்பமும் குழந்தைகளும் கஷ்டபடறது கொடுமை இல்லையா? அதுவும் அந்த கொலை ஆள்மாறாட்டத்தில நடந்த கொலை.

Pot"tea" கடை மாதிரி ஆட்கள் ஏன் இப்படி இருக்காங்க?}

கொடுக்க நிர்பந்தப்பட்டவர்களின் வலி அப்படி இருக்கலாம் கல்யாணி சுரேஷ்.
உங்கள அண்ணன் வேண்டுமானால் காவல் துறையின் நேர்மையான ஒருவராக இருக்கலாம்,ஆனால் மீதி 99 பேர் லஞ்சவாலாக்கள்தான்.

(உங்கள் அண்ணனைப் பொறுத்தவரை நீங்கள் அறியாமல் அவர் கூட வாங்கலாம் ! அப்படித்தான் இருக்கிறது நிலைமை!சாரி,உங்களை வருத்தும் நோக்கம் இல்லை என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.)

Chitra on January 9, 2010 at 9:10 PM said...

மனதை கலங்கடித்த வேதனையான சம்பவம். அவர் நல்லவரோ கெட்டவரோ - மனித உயிரின் மதிப்பு ஒன்றுதான்.

கார்க்கி on January 9, 2010 at 10:00 PM said...

பொட்”டீ” கடை என்ற பெயரில் வந்தது அவருடையது அல்ல என்பதால் நீக்கப்படுகிறது. நன்றி அதிஷா.


முரு, அதனால்தான் நான் காணொளியை போடவில்லை.

சங்கர் on January 10, 2010 at 12:02 AM said...

ஏன் இவனுகளுக்கு எல்லாம் ஓட்டு போட்டு மந்திரி ஆக்கிநிங்க

நாடு ரோட்ல நிக்க வச்சு சுடணும்

கண்ணன் on January 10, 2010 at 6:36 AM said...

என்னால் தூங்க முடியல. இன்னைக்கு நக்கீரன் பார்த்து இன்னும் கோவம் அதிகமாயிடிச்சு..அமைச்சர் இறங்கி ஆறுதல் சொன்னாராம்..கட்டு போட ஏற்பாடு செய்தாராம்..ஏன் இந்த பத்திரிக்கை கூட இவ்வளவு கேவலமா??

http://verrupu.blogspot.com/2010/01/blog-post.html

முகிலன் on January 10, 2010 at 8:57 AM said...

சரிய்யா, அமைச்சர்களுக்கும் மற்ற காவலதிகாரிகளுக்கும் மனம் மரத்துப் போய் விட்டது. இந்த வீடியோவை படமாக்கிய குழுவினருக்கு எங்கேய்யா போய்விட்டது மனிதம்?

கோல்டன் ஹவரைப் பற்றி வகுப்பு எடுக்கிறார்களே இவர்களுக்கு படம் எடுக்கும்போது தெரியாதா கோல்டன் ஹவர் பற்றி?

மோகன் குமார் on January 10, 2010 at 9:42 AM said...

:(

You also write serious articles like this??

LOSHAN on January 10, 2010 at 10:07 AM said...

பார்க்கவே வெறுப்பாகுது சகா.. மனித உயிரின் மதிப்பு அவ்வளவு தானா?
சீ என்ன ஜென்மங்கள் இவர்கள்..
மனது கனத்துவிட்டது

goma on January 10, 2010 at 10:07 AM said...

இதிலே வேடிக்கை பாருங்க ...ஒரு அமைச்சர் ,சுகாதாரத்துக்காம்...மற்றவர் சுற்றுப்புறச்சூழலுக்காம்!!!!!தமிழ்நாடு வெளங்ன மாதிரிதான்.

நாய்க்குட்டி மனசு on January 10, 2010 at 10:20 AM said...

காணொளியை கண்ணிலிருந்து மறைத்து
வன்முறையை வளர்ப்பதை தவிர்த்ததுக்கு
முதல் வாழ்த்து.
கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறை இப்படி உலுக்கிப் போடும் கொலைகள் நடந்து கொண்டு இருப்பது ரொம்ப வேதனை

முரளிகுமார் பத்மநாபன் on January 10, 2010 at 11:19 AM said...

என்னவோ போங்க சகா.... ஒண்ணுமே புடிக்கலை.

பலா பட்டறை on January 10, 2010 at 1:30 PM said...

வாழ்க்கை ஒரு வட்டம்தான் இன்னும் எத்தினி நாளுக்கு இதெல்லாம் பார்க்கனமோ.. போலீஸ் அதிகாரிகள் சுயபரிசோதனை செய்யும் நேரம் வந்துவிட்டது..

shiva... on January 10, 2010 at 2:13 PM said...

ethu la kodumai ennana TN [ health secreatary] kita neenga ethumey seiyaliye endru TIMES NOW reporter keta pothu , his reply was-

" we poured water on his face then in his mouth too "

adapaavigala when a patient bleeds pouring water over bleeding site ll never arrest bleeding n he ll lose more blood.. avaar yellam health secreatary , oru basic first aid kuda theriyalla .. noone packed his bleeding with clothes or anything..

அஹோரி on January 10, 2010 at 3:40 PM said...

இவனுங்க மக்களுக்காக அரசியலுக்கு வந்து இருக்கானுங்க. தினமும் எவண்டா பாராட்டு விழா நடத்துவான்னு ஏங்குற ஜென்மத்துக்கு இந்த விஷயம் போய் சேர்ந்து இருக்குமா?

தண்டோரா ...... on January 10, 2010 at 5:29 PM said...

நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்

கண்ணன் on January 10, 2010 at 7:19 PM said...

@முகிலன், அந்த வீடியோ எடுத்தவரை குற்றம் சொல்ல முடியாது. அது வெளி வரலன்னா யாருக்கும் தெரிஞ்சிரிக்க வாய்ப்பு இல்ல?

கும்க்கி on January 10, 2010 at 8:09 PM said...

:--(((

அதிலை on January 10, 2010 at 9:26 PM said...

pirar uyirai uyira ninaikkaamal mmm...sari vendaam.... avargal uyir avarkalathu udalai vittu piriyum mun antha valiyin aazhathai avarkalukku unartha kadavulai vendikkiren

Anonymous said...

மனிதம் மரித்துப் போனதற்கு இதை விட வேறு சான்று தேவையா?

 

all rights reserved to www.karkibava.com