Jan 8, 2010

பெட்ரமாக்ஸ் லைட்டேஏஏ வேணுமா?


 

மு.கு:  மேலிருக்கும் வீடியோவை பார்க்க முடியாத சகாக்கள் ஒரு முறை கவுண்டமணியின் பெட்ரமாக்ஸ் லைட்  நகைச்சுவையை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். அதன் பின் பதிவைப் படிக்கவும். முடிந்தவரை வசனங்களை படத்தில் வரும் அதே மாடுலேஷனில் படித்தல் நலம். அவ்ளோதாம்ப்பா

_______________________________________________________________________________

இடம்:  அசல் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம்.

பங்கேற்போர்: தல அஜித், மற்றும் ஒரு தல ரசிகர்

தல: அஜித்த பாருடி..அல்டிமேட் ஸ்டாருடி.. அர்ணாக்கயிறு நீளம்டி

ரசிகர்: தல.

தல: டேய். ரொம்ப நாளைக்கப்புறம் என் படம் வரப் போது. ஒர்ர்ர்ரு வாரம் ஓடும். அதான் நான் கம்முன்னு இருக்கேன்

ரசிகர்: என் சந்தேகத்தை தீர்த்து வைங்க தல.

தல: என்னடா?

ரசிகர்: உங்க படம் எப்படி தல ஒரு வாரம் ஓடுது?

தல: ஆங்ங்ங். அப்படி வா.இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு அல்டிமேட் ஸ்டார் தேவைங்கிறது. அடேய் அரைவேக்காடு ரசிகா. இதுக்கு பேருதான் சிடி. என்னை மாதிரி இல்லாம சப்பையா இருக்கு பாரு. இதுக்கு பேரு சிடி பிளேயர். இதுல இருந்துதான் அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சல் சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் கேட்கும்.

(பாட்டைக் கேட்ட கடுப்பான ரசிகன் சிடியைப் கீழே போட்டு உடைத்தபடி சொல்கிறார்)

ரசிகர்: இந்தப் பாட்டு எப்படி தல ஹிட்டாகும்? போங்க தல

(தனது ட்ரேட் மார்க்கான முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத ரியாக்‌ஷனை காட்டுகிறார் தல.பதறிய ரசிகர் தொடர்கிறார்)

ரசிகர்: என்ன தல மொக்கையா பாட்டு போட்டிருக்கீங்க?

(மீண்டும் அதே ரியாக்‌ஷன். அந்த வழியாக ரேடியோ மிர்ச்சி ஆர்.ஜே ஒருவர் வருகிறார் கையில் மைக்குடன்)

ஆர்.ஜே: ஏங்க. இங்க ஆள் ரவுண்டா இருப்பாரே அஜித்குமார். அவர் படம் எதுங்க?

ரசிகர்: அசல்

(அஜித் ரசிகரை முறைக்க ”தலை” குனிகிறார் அவர். அதூஊஊஊ என்கிறார் தல)

தல: அசல் என் படம் தாங்க.

ஆர்.ஜே: சாயந்திரம் என் புரொகிராம்ல பாட்டு போடனும். அதுக்கொரு சூப்பர் ஹிட் புதுப் பாட்டு வேணும்.

(அந்த மியுசிக்கை எப்படி டைப் பண்றதுன்னு தெரியல. நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். எஸ்ஸாகிறார் ரசிகர்)

தல: ஏங்க. சூப்பர் ஹிட் பாட்டேஏஏஏஏ வேணுமா?

ஆர்.ஜே: ஆமாங்க

தல: இந்த சொத்தைப் பாட்டெல்லாம் போடக்கூடாதுங்க?

ஆர்.ஜே: சொத்தைப் பாட்டா?ம்ஹும். அதெல்லாம் வேணாங்க

தல: அப்ப சூப்பர் ஹிட் பாட்டு கொடுக்கறதில்ல.மைக் வச்சிருக்குவங்களுக்கு எல்லாம் பாட்டு கொடுக்கிறதில்ல

______________________________________________________________________________

பி.கு : விஜயை கிண்டலடித்து வந்த மெயில் மற்றும் குறுஞ்செய்திகளால் கடுப்பான நண்பன் ஒருவன் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து எழுதியது. ஆயிரம் பேருக்காவது அனுப்பப் போவதாக சொல்லியிருக்கிறான். அப்படியே குறுஞ்செய்தியும் சொல்லிடறேன். உங்களுக்கு இதே எஸ்.எம்.எஸ் வந்தா சொல்லுங்க.

ஏண்டா அசல் பாட்ட ம்யூட்ல வச்சு கேட்கிற?அவ்ளோ கொடுமையாவா இருக்கு?

இல்லங்க. அசல் படத்தோட டேக்லைன் என்ன சொல்லுது “The power of silence”. அதான் சவுண்டேயில்லாம கேட்கிறோம்.தல ராக்ஸ்.

86 கருத்துக்குத்து:

மோகன் on January 8, 2010 at 8:15 AM said...

me the first?????????

Yoganathan.N on January 8, 2010 at 8:46 AM said...

//பி.கு : விஜயை கிண்டலடித்து வந்த மெயில் மற்றும் குறுஞ்செய்திகளால் கடுப்பான நண்பன் ஒருவன் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து எழுதியது. ஆயிரம் பேருக்காவது அனுப்பப் போவதாக சொல்லியிருக்கிறான். அப்படியே குறுஞ்செய்தியும் சொல்லிடறேன். உங்களுக்கு இதே எஸ்.எம்.எஸ் வந்தா சொல்லுங்க. //

ஆமா... விஜயை கிண்டல் பன்னி மெயில்/குறுஞ்செய்தி வந்தால், உடனே அது அஜித் ரசிகரா தான் இருக்கும்... ஏன்... சூர்யா, விக்ரம் பத்தி எழுத வேண்டியது தானே...

கார்க்கி on January 8, 2010 at 8:58 AM said...

ஆமாம் மோகன்..

யோகனாதன், காலைலே வொய் டென்ஷன். சீக்கிரம் சூர்யாவையும் கலாய்த்து விடலாம். ஆனால் கஷ்டப்பட்டு நான் காமெடின்னு நினைச்சு பதிவு போடும் போது
//விஜயை கிண்டல் பன்னி மெயில்/குறுஞ்செய்தி வந்தால், உடனே அது அஜித் ரசிகரா தான் இருக்கும்... ஏன்..//

இப்படி நீங்கள் காமெடி செஞ்சா பதிவை பார்த்து யார் சிரிப்பா? கொஞ்சம் கருணை காட்டுங்கண்ணா

Achilles/அக்கிலீஸ் on January 8, 2010 at 9:07 AM said...

நோ டென்ஸன் கார்க்கி... பதிவு செம காமெடி.. தல ரசிகர்களெல்லாம் கடுப்பாகப் போறாங்க....

புலி உறுமீருச்சுடோய்ய்ய்ய்ய்....

மோகன் on January 8, 2010 at 9:15 AM said...

'ஏழு' லெவல்க்கு எழுத try பண்ணியிருக்கீங்க..ஆனா joke'ஆ இல்லாம dry'ஆகிடுச்சி...உங்க 'தல' வேட்டைக்காரன் படம்போல...better luck next time to you and your 'thala(pathi)

தாரணி பிரியா on January 8, 2010 at 9:18 AM said...

:)))))))))))))

Yoganathan.N on January 8, 2010 at 9:18 AM said...

//விஜயை கிண்டல் பன்னி மெயில்/குறுஞ்செய்தி வந்தால், உடனே அது அஜித் ரசிகரா தான் இருக்கும்... ஏன்..//

இப்படி நீங்கள் காமெடி செஞ்சா பதிவை பார்த்து யார் சிரிப்பா? கொஞ்சம் கருணை காட்டுங்கண்ணா//

என்னோட நிறைய ரஜினி, கமல், சூர்யா ரசிகர்கள் கூட தான் எஸ்.எம்.எஸ்/மெயில் அனுப்பினாங்க...
My point - Why always target Ajithfans???
Of course it also works vice-versa...

தராசு on January 8, 2010 at 9:24 AM said...

அய்யா யோகநாதனு,

காமெடிய காமெடியா மட்டும் பாருங்கய்யா.

கார்க்கி, கி கி கி கி கி

ram on January 8, 2010 at 9:29 AM said...

Hello Karki,

I am reading your blog for the past two months. I have become a regular reader to your blog. Nalla intersting ah elthuringa.

Naanum intha post a enakku therinja tamil pesum nalla makkalukku forward pannirukken.

♠ ராஜு ♠ on January 8, 2010 at 9:34 AM said...

ரைட்டுண்ணா..செம காமெடி.

Yoganathan.N on January 8, 2010 at 9:41 AM said...

//அய்யா யோகநாதனு,

காமெடிய காமெடியா மட்டும் பாருங்கய்யா.//

அய்யா தராசுசு...
அந்த 'பின் குறிப்பு' இல்லாம இருந்திருந்தா, நானும் இந்த பதிவை காமெடியாத் தான் பார்திருப்பேன்...

ரமேஷ் கார்த்திகேயன் on January 8, 2010 at 9:48 AM said...

//தனது ட்ரேட் மார்க்கான முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத ரியாக்‌ஷனை காட்டுகிறார் //

ஏனுங்கன்னா விஜயை எல்லாம் கிண்டல் பண்ணுறீங்க

ரமேஷ் கார்த்திகேயன் on January 8, 2010 at 9:50 AM said...

நல்லா இருக்கு சார்

"ராஜா" from புலியூரான் on January 8, 2010 at 9:52 AM said...

பாத்துங்க இந்த பதிவ அப்டியே remade பண்ணி தலைக்கு பதிலா தலவலிய சீ... தளபதிய போட்டு உங்களுக்கே யாராவது அனுப்புவாங்க..... அவருக்குதான் இது அப்டியே செட் ஆகும்....

Raja Subramaniam on January 8, 2010 at 9:59 AM said...

kalakurenga karki

கார்க்கி on January 8, 2010 at 10:16 AM said...

அக்கிலீஸ்,
சகா இத்தனை நாள் எத்தனை பதிவர்கள், சில தல ரசிகர்கள் ஃபார்ஃபர்டுல வந்ததுன்னு விஜயை போட்டு கலாய்ச்சாங்க. எனக்கு தெரிஞ்சு ஊர்சுற்றி மட்டும்தாம் அதை ஏன்னு கேட்டு பதிவு போட்டாரு. அதிலும் கும்மாங்குத்து ஆடினாங்க தல ஃபேன்ஸ். இப்ப நான் ஒரே ஒரு பதிவு போட்டா எப்படி எகிறுறாங்க பாருங்க. அவங்க பண்ணலாம். நான் பண்ணக்கூடாதா?

மோகன், நேர்மையான கருத்துக்கு நன்றி. ஆனா ஏழு மொக்கை ட்ரை பண்ணல. அப்படியே வசங்னகளை மாற்றியிருக்கிறேன். மேலும் தல, தர ரசிகன் என்ற இரு பெரும் காமெடி இருந்ததால் வேற எதுவும் வேணாம்ன்னு விட்டுட்டேன்

நன்றி தா.பி.

யோகா, உங்க கடைசி வரிலே பதில் இருக்கு.நான் விஜயை கலாய்த்தும் பதிவிட்டுருக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன்

நன்றி தராசு

நன்றி ராம்

ராஜு, எதிர்பதிவு தயாரா?

ரமேஷ், உங்களுக்கும் விஜய் தான் தலயா? நன்றி சகா

புலியூரான், இதுவரை நீங்க அனுப்பின எல்லா எஸ்.எம்.எஸ்ஸிலும் தலயைப் பொருத்தி பாருங்க. அதுதான் 100% செட்டாகும். தைரியம் இருந்தால் விஜய் படத்தில் பாடல்கள் சூப்பட் ஹிட்டாவத்தில்லைன்னு சொல்லிப் பாருங்க. சந்தானம், வடிவேலு , விவேக்கையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது உங்களுக்குத்தான்(2009லதான் தல படமே வரலையே. அதனல உங்களுக்கு போட்டியே இல்லை பாஸ்)

நன்றி ராஜா சுப்ரமணியம்

பிரியமுடன்...வசந்த் on January 8, 2010 at 10:27 AM said...

நீங்க நடத்துங்க சகா...

:)))

புன்னகை on January 8, 2010 at 10:27 AM said...

//தனது ட்ரேட் மார்க்கான முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத ரியாக்‌ஷனை காட்டுகிறார் தல.//
இந்த வரிகளைப் படிச்சிட்டு சிரிக்காம இருக்க முடியல! நேத்து நீங்க சொன்னது சரி தான்! ;-)

வால்பையன் on January 8, 2010 at 10:30 AM said...

இதே மாதிரி நான் ஒன்னு யோசிச்சி வச்சிருந்தேன்! இப்ப வட போச்சு!

முரளிகுமார் பத்மநாபன் on January 8, 2010 at 10:37 AM said...

சேட்ட்ட்டை ஆரம்பிச்சிடுச்சு டோய்.......

கார்க்கி on January 8, 2010 at 10:41 AM said...

டம்பி மேவீ said...
சிறுவர் இலக்கியத்தை பற்றி நல்ல சொல்லி இருக்கீங்க

கவிதை சூப்பர்

உரையாடல் போட்டிக்கு எழுதியதா?

அஜித்யை இன்னும் நன்றாக கிண்டல் அடித்து இருக்கலாம்

video theriyala

விஜய் நடனம் ஆடினால் மட்டுமே பாடல்கள் சூப்பர் ஹிட்

கார்கி...... உண்மை சொல்ல வேண்டுமென்றால் இந்த பதிவில் உங்க ஸ்டைல் மிஸ்ஸிங்
_____________________
@மேவீ,
கோச்சிக்காதப்பா. எனக்கு நிறைய கமெண்ட்ஸ் வர்றதுல்லன்னுதான் நான் நன்றியா சொல்றேனாம். ஒரு அறிவாளி மெயில் அனுப்புறாரு. அதான் எல்லா கமெண்ட்டையும் சேர்த்து போடறேன்

LOGESHWARAN on January 8, 2010 at 10:49 AM said...

Really Extra Ordinary comedy.. Nan itha Padichu sirichu sirichu officelae madikanaen...really super comedy...

கடைக்குட்டி on January 8, 2010 at 11:02 AM said...

ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல.. நெக்ஸ்ட்டு பாப்போம்..

மோகன் குமார் on January 8, 2010 at 11:22 AM said...

தல கொஞ்சம் நல்ல மனுஷன் பாவம் விட்டுடுங்க..

முகிலன் on January 8, 2010 at 11:28 AM said...

//ஆர்.ஜே: ஆமாங்க

தல: இந்த சொத்தைப் பாட்டெல்லாம் போடக்கூடாதுங்க?

ஆர்.ஜே: சொத்தைப் பாட்டா?ம்ஹும். அதெல்லாம் வேணாங்க

தல: அப்ப சூப்பர் ஹிட் பாட்டு கொடுக்கறதில்ல.மைக் வச்சிருக்குவங்களுக்கு எல்லாம் பாட்டு கொடுக்கிறதில்ல

//
சொத்தைப்பாட்டுன்னா? தளபதி பாட்டா? :))

roomno104 on January 8, 2010 at 11:32 AM said...

unkakita irunthu innum konjam athingama ethir parkiren

Anbu on January 8, 2010 at 11:38 AM said...

:-))...நல்லா இருக்கு அண்ணே..

நாய்க்குட்டி மனசு on January 8, 2010 at 12:08 PM said...

அப்போ ஆயிரம் ஆட்டோ நிச்சயம் .

கல்யாணி சுரேஷ் on January 8, 2010 at 12:09 PM said...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா. ஆனா நல்லாத்தான் இருக்கு.

ஜெட்லி on January 8, 2010 at 12:18 PM said...

//அதான் சவுண்டேயில்லாம கேட்கிறோம்.//

total damage....

ராஜகோபால் (எறும்பு) on January 8, 2010 at 12:19 PM said...

:)))

ராஜகோபால் (எறும்பு) on January 8, 2010 at 12:21 PM said...

ஸ்மைலி போட்டதுக்கு மறக்காம எனக்கு நன்றி சொல்லிடுங்க...
:))

raman- Pages on January 8, 2010 at 12:22 PM said...

இருந்தாலும் விஜய்யின் வேட்டைக்காரன் கிண்டல் அளவுக்கு வரலை அடுத்த முறை நன்றாக முயற்சிக்கவும்.. உங்ககிட்ட இருந்து நாங்க இன்னும் நிறிய எதிர்பார்க்கிறோம்.. :-))))

T.V.Radhakrishnan on January 8, 2010 at 12:31 PM said...

:-))

நர்சிம் on January 8, 2010 at 1:19 PM said...

தலைப்பு (ம்) அசத்தல்..இதையும் அதுக்கு அனுப்பவும்

அதிலை on January 8, 2010 at 1:20 PM said...

Nice comedy Karki..you should do this for vijay, vikram, rajini etc also..it has been a new 'culture' in our society to be a fan of someone who is not worth of it.. break it..and you can do it..

oruthar enna senchaalum rasicha appurem rasanai "?" aagi vidukirathu.. btw I am not a fan of any actor

Mrs.Dev on January 8, 2010 at 1:42 PM said...

//ஏண்டா அசல் பாட்ட ம்யூட்ல வச்சு கேட்கிற?அவ்ளோ கொடுமையாவா இருக்கு? இல்லங்க. அசல் படத்தோட டேக்லைன் என்ன சொல்லுது “The power of silence”. அதான் சவுண்டேயில்லாம கேட்கிறோம்.தல ராக்ஸ்.//

:)))

விக்னேஷ்வரி on January 8, 2010 at 2:47 PM said...

லேபில் இல்லாததால தப்பிச்சீங்க. நகைச்சுவைன்னு லேபில் வெச்சிருந்தீங்க, தொலைச்சிருப்பேன்.

damildumil on January 8, 2010 at 3:14 PM said...

காமெடி பண்றது இளைய தலைவலிக்கு மட்டும் தான் வராதுன்னு நினைச்சேன் அவங்க ரசிகர்களுக்குமா....இன்னும் நல்லா யோசிங்க

கிரி on January 8, 2010 at 3:29 PM said...

:-) கார்க்கி ரொம்ப ஜோக்கா இல்ல ... அதென்னமோ இதெல்லாம் விஜய் க்கு மட்டும் தான் செட் ஆகும் போல! ;-)

கார்க்கி on January 8, 2010 at 3:46 PM said...

@கிரி(முதல்ல)
இத படிங்க. செம ஜோக்குன்னு எல்லோரும் சொன்னாங்க
http://www.karkibava.com/2008/08/blog-post_3604.html

சாம்பிளுக்கு ஒரு டயலாக்
"காய்கறியெல்லாம் பார்த்தா இருக்கும் பச்ச பசேலனு
பார்த்தவங்க பச்சையா திட்டின படம்தான் குசேலன்

@டமில்டுமில்,
நன்றி பாஸ். உங்க அளவுக்கு எங்களால முடியல, காமெடி பண்ண. ரெட்டெல்லாம் என்னா சிரிப்பு?

@அதிலை,
இதுவரைக்கும் ரஜினி,விஜய்,அஜித், சிம்பு,விக்ரம்,டீ.ஆர், இன்னும் சிலர கலாய்ச்சிருக்கேன் சகா

@ராமன்,
எதிர்பாருங்க.. :))

@முகிலன்,
ஒரே ட்டமாஷுண்ணே நீங்க

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

"ராஜா" from புலியூரான் on January 8, 2010 at 4:21 PM said...

ஏனுங்கன்னா பாட்டு சூப்பர் ஹிட்டுனா என்ன அர்த்தம்.... காசு கொடுத்து நாலு டீவில தனமும் நாப்பது தடவ போடுறதுங்களா ... அப்டினா அவரு பாட்டுலாம் மெகா ஹிட்டுதானுங்கோ...

(கட்டிபுடாவுக்கு அப்புறம் கலை நயத்தோட அவரு ஏன் ஒரு பாட்டும் மக்களுக்கு தர மாட்டேன்றாறு....)

கார்க்கி on January 8, 2010 at 4:29 PM said...

புலியூரான், இதெல்லாம் உஙக்ளுக்கு சரியா வரல. வழக்கம் போல விஜய் ரீமேக் கிங், நடிக்க தெரியாதவன், மூஞ்சி சரியில்ல, அப்படி இப்படி ஏதாவ்து சொல்லுங்க..

எப்படியும் நைட்டு சாப்பிட ஏதாவது ஒரு கல்யாணத்துக்கு போவிங்க இல்ல? அங்க லைட் மியூசிக்ல கூட நிறைய விஜய் பாட்டுதான் பாடுவாங்க. அவங்க கிட்டயும் கேளுங்க, விஜய் எவ்ளோ காசு தர்றாருன்னு. அப்படியே தல பாட்டு பாட மாட்டிஙக்ளான்னு அவங்க கிட்ட கேளுங்க பதில் சொல்வாரு.

நாராயணா!! இந்த கொசு தொல்ல தாங்கலடா..

Tamilmoviecenter on January 8, 2010 at 4:49 PM said...

சாம்பிளுக்கு ஒரு டயலாக்
"காய்கறியெல்லாம் பார்த்தா இருக்கும் பச்ச பசேலனு
பார்த்தவங்க பச்சையா திட்டின படம்தான் குசேலன்

ilaya thalavali kindal mandrathoda mattum niruthikko saga appuram unga blog terror agividum

Karthik on January 8, 2010 at 4:52 PM said...

ரைட்டு. திருப்பாவை மாதிரி அதிகாலையில் உக்காந்து படிச்சேன். :)

கார்க்கி on January 8, 2010 at 5:06 PM said...

@tamilmovie,

கிரி வந்து இப்படி சொன்னா கம்முன்னு இருக்க முடியுமா? :))))

அதிகாலைன்னா 9 மணிக்கா கார்த்திக்? :)))

Karthik on January 8, 2010 at 5:18 PM said...

அதிகாலைன்னா 9 மணிக்கா கார்த்திக்? :)))//

அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென சொல்லுகிறேன். கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன். :))

வினோத்கெளதம் on January 8, 2010 at 5:26 PM said...

http://www.youtube.com/watch?v=jQCFjJpj8Q8&feature=player_embedded

கார்க்கி on January 8, 2010 at 5:49 PM said...

கார்த்திக், அந்த பாட்டை எழுதியவர் யார்ன்னு தெரியுமா? அவர் உன் பிளாகோட ஃபாலோயர்

@தமிழ்மூவி,

அப்புறம்?

@வினோத்,

http://www.youtube.com/watch?v=cc1fhn7sZD8

vanila on January 8, 2010 at 6:58 PM said...

கார்க்கி.. உண்மைய சொல்லனும்னா.. அஜித் உண்மையாவே, ரொம்ப நல்ல மனுஷன்.. நீங்க உங்களுக்கு திரை உலகில் தெரிந்த யார வேணா கேட்டு பாருங்க.. விஜயைக்கூட அவராத்தான் போய் சந்திப்பாரு.. மத்தபடி விஜயைப்பத்தி தப்பாச்சொல்லல .. நல்ல மனுஷன் விட்டுடுங்க பாவம்.. To Be frank & Proud, Im an adherant fan of Rajini from childhood. Just utter Thalaivar... This title doesn't suit any one other than Rajini.. Even the Table Journalists who misinterpret the name of Rajini, too mention him in their mag as thalivar, without their knowledge... This is my first ever comment in your Blog, even though i was following you for more than 8 months.. விஜயை புகழனும்கருத்துகாக... அஜித் பாவம் தலைவா..

வெற்றி on January 8, 2010 at 8:36 PM said...

சகா 'அடிச்சு' ஆடுங்க(தலய)..ரசிக்க நாங்க இருக்கோம்..
//எப்படியும் நைட்டு சாப்பிட ஏதாவது ஒரு கல்யாணத்துக்கு போவிங்க இல்ல? அங்க லைட் மியூசிக்ல கூட நிறைய விஜய் பாட்டுதான் பாடுவாங்க. அவங்க கிட்டயும் கேளுங்க, விஜய் எவ்ளோ காசு தர்றாருன்னு. அப்படியே தல பாட்டு பாட மாட்டிஙக்ளான்னு அவங்க கிட்ட கேளுங்க பதில் சொல்வாரு.//

சரியா சொன்னீங்க..எதாவது ஒரு விசேசத்துல கலகலன்னு டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு தல பாட்டு கூட கிடையாதுங்கறது தான் உண்மை!

கார்க்கி on January 8, 2010 at 10:04 PM said...

வெண்ணிலா,

ஆறு மாதங்களாக தொடர்வதற்கு நன்றி. இங்கே அஜித் மோசமானவர் என்று எங்கேயுமே சொல்லவில்லையே. அவர் திரைக்குப் பின்னால் எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்லை.

ஒரு பதிவு. ஒரே ஒரு பதிவையே உங்களைப் போன்ற அஜித் ரசிகர்களால் தாங்க முடியவில்லையே. எத்தனை மெயில்கள்? எத்தனை குறுஞ்செய்திகள்? விஜய் ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அதெல்லாம் சம்பந்தமேயில்லாத பதிவுகளென்பதால் லூசில் விட்டு விட்டார்கள். ஆனால் இங்கே அசல் பாட்டு சொதப்பியதை சொன்னதால் பொங்குறார்கள்.

சரி அதெல்லாம் விடுங்கள். அப்படி ஃபார்வர்டில் வந்ததை எத்தனை பதிவுலக அஜித் ரசிகர்களும், பொதுவான ரசிகர்களும் பதிவிட்டார்கள்? அப்போதெல்லாம் ஏன் யாரும் எதுவும் சொல்லவில்லை. மற்றவர்களை விடுங்கள். நீங்கள் உங்கள் நண்பர்கள் பதிவிலாவது வேண்டாமென்றீர்களா? விஜய் மட்டும் என்ன நம்ம வீடு புகுந்தா திருடினார்?

இதெல்லாம் விடுங்க. பதிவை காமெடியா பாருங்க. இனிமேல் அஜித்தை அதிகம் சீண்டமாட்டேன்புலியூரான் ராஜா அமைதியாக இருந்தால் .நன்றி வெண்ணிலா.:))))

@வெற்றி,

:))))

தமிழ்ப்பறவை on January 8, 2010 at 11:03 PM said...

சகா ரசித்தேன்...
இன்னும் ஏழெட்டுப் பிட்டு சேத்துப் போடுங்க இதே போல....மனம்விட்டுச் சிரித்தேன்...

தமிழ்ப்பறவை on January 8, 2010 at 11:03 PM said...

//கார்த்திக், அந்த பாட்டை எழுதியவர் யார்ன்னு தெரியுமா? அவர் உன் பிளாகோட ஃபாலோயர்//
யாருங்க அவரு... விவேகான்னு நினைச்சேன்....

சுசி on January 9, 2010 at 2:06 AM said...

//அதன் பின் பதிவைப் படிக்கவும். முடிந்தவரை வசனங்களை படத்தில் வரும் அதே மாடுலேஷனில் படித்தல் நலம்.//
சூப்பர்.. அதே மாதிரி படிச்சேன்.. சிரிச்சேன்.. ரசிச்சேன்..

ரொம்.......ப நன்றி கார்க்கி. சரியான நேரத்தில எனக்கு உதவி செஞ்சத்துக்கு.
என்ன கடுப்பேத்தினவங்களுக்கு அனுப்பி வைச்சாச்சு :)))

கார்த்தி on January 9, 2010 at 3:09 AM said...

விடுங்க கார்க்கி.... இதே மாதிரி இன்னும் பத்து பதிவு வந்தா விஜய் ரசிகர்கள் மாதிரி அஜித் ரசிகர்களும் "சண்டை'ல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு" பழகிக்குவாங்க(வோம்)...

Anonymous said...

//சூர்யா, விக்ரம் பத்தி எழுத வேண்டியது தானே...//

ஆதவன் பாத்ததிலிருந்து அப்படித்தான் தோணுது. சூர்யாவுக்கு விஜய் மாதிரி படத்துல நடிக்கணும்னு ஆசை வந்திருச்சு போலிருக்கு.

"ராஜா" from புலியூரான் on January 9, 2010 at 10:12 AM said...

கல்யாண வீட்டுல கேட்டேங்க.... விஜய் காசெட்டுதான் விக்காதத எல்லாம் CD கடைல ப்ரீயா தராங்களாம்.... காசு கொடுத்து கெடைக்கிற நல்ல பாட்ட விட ஓசியா கெடைக்கிற சுமாரான பாட்டே எங்களுக்கு போதும்னு சொல்லுறாங்க...

Yoganathan.N on January 9, 2010 at 10:16 AM said...

//சூர்யா, விக்ரம் பத்தி எழுத வேண்டியது தானே...//

ரிப்பீட்ட்டே...

"ராஜா" from புலியூரான் on January 9, 2010 at 10:18 AM said...

கார்க்கி... விஜய் அஜித் சண்ட வேண்டாமே ..... உங்க நடைல பெண்களை கவர சிறந்த 10 வழிகள் அப்டின்னு ஒரு பதிவு போடுங்க... என்ன மாதிரி பசங்களுக்கு உபயோகமா இருக்கும்.... நான் ரொம்ப நாளா உங்க கிட்ட அந்த மாதிரி பதிவ எதிர் பாத்துகிட்டு இருக்கேன்... நேயர் விருப்பமா கேக்குறேன் ... சீக்கிரம் போடுங்க

Yoganathan.N on January 9, 2010 at 10:19 AM said...

//சரியா சொன்னீங்க..எதாவது ஒரு விசேசத்துல கலகலன்னு டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு தல பாட்டு கூட கிடையாதுங்கறது தான் உண்மை!//

அத ஏங்க சுத்தி வளச்சி சொல்லுரீங்க??? 'குத்து' பாட்டுனு நேரடியாவே சொல்லலாமே... :P ;)

கார்க்கி on January 9, 2010 at 11:18 AM said...

@ராஜா,

// "ராஜா" from புலியூரான் said...
கார்க்கி... விஜய் அஜித் சண்ட வேண்டாமே .....//

இது ந்ஆன் எதிர்பாராதது என்றாலும் இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன். இனிமேல் என்னிடம் இருந்து எந்தப் பதிவும் வராது சகா. யாரேனும் தேவையில்லாமல் சீண்டாத வரையில்..

வானம் பெருசுதான் பூமி பெருசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்..

உஙக்ளுக்காக ஸ்பெஷல் டெடிகேஷன்.. அடுத்த வாரம் “:பெண்களை கவர 10 சிறந்த வழிகள்”

யோகா, குத்துப்பாட்டு இல்லாத அஜித் படம் ஒன்னு சொல்லுங்க

வெங்கிராஜா | Venkiraja on January 9, 2010 at 11:29 AM said...

இப்ப என்ன சகா சொல்ல வர்றீங்க? அசல் பாட்டு ஃப்ளாப்னு நீங்க எப்படி முடிவு செஞ்சீங்க? முதல்ல வேட்டைக்காரன் ஹிட்டான்னு கேளுங்க சகா.. திரைத்துறையில் வேலை செய்யும் நபர்களிடம் கன்பர் செய்யுங்க. எங்கப்பா கேபிள் அண்ணன்?

வெங்கிராஜா | Venkiraja on January 9, 2010 at 11:34 AM said...

//யோகா, குத்துப்பாட்டு இல்லாத அஜித் படம் ஒன்னு சொல்லுங்க//
தொடரும்
பவித்ரா
பூவெல்லாம் உன் வாசம்
உயிரோடு உயிராக
காதல் மன்னன்
உல்லாசம்

கார்க்கி on January 9, 2010 at 11:42 AM said...

வெங்கி,

தஙக்ளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கேபிள் அண்னாவிடம் படம் ஹிடான்னு கேட்காதிங்க. பாட்டு ஹிட்டா இல்லையான்னு மட்டும் கேளுங்க. அப்படியே அசல் இசைப் பற்றி என்னுடைய பதிவுலும் தங்களின் மேலான கருத்துக்களை சொல்லவும்.

//தொடரும்
பவித்ரா
பூவெல்லாம் உன் வாசம்
உயிரோடு உயிராக
காதல் மன்னன்
உல்லாசம்
//

இதில் காதல் மன்னனில் ராம்ஜி வரும் பாடல், பவித்ராவில் வடிவேலு பாடும் பாடல், பூ.உன்.வாசத்தில் ஐட்டம் நம்பர் இவையெல்லாம் என்ன கேட்டகிரி பாடல் என்று சொன்னால் நலம். இந்த அப்டங்களோடு வந்த விஜய் படங்களிலும் குத்துப் பாட்டு கிடையாது. இவை வந்தபோது நான் மிகவும் சிறியவன், வயதில்.

தற்கால படத்தில் சொன்னால் நன்றாக இருக்கும்

Karthik on January 9, 2010 at 12:11 PM said...

தமிழ்ப்பறவை said...
யாருங்க அவரு... விவேகான்னு நினைச்சேன்....//

ரமேஷ் வைத்யா எழுதிய பாடலாம் தல அது.. நன்றி கார்க்கி. :)

நான் வேற கலவர பூமியில் வந்து இடைஞ்சலா.. நீங்க கண்டினியூ.. :)))

கார்க்கி on January 9, 2010 at 12:15 PM said...

ஆமாம் பறவை. ரமேஷ் வைத்யா எழுதிய பாடல் அது..

கார்த்திக்,

சற்று முன்பு நிலவரம்
கார்க்கி பதிவில் கலவரம்.. கலவரம்

டிங் டாங்க பாட்டில் மணி

ஓ அது மாதவன் இல்ல?

வெங்கிராஜா | Venkiraja on January 9, 2010 at 12:30 PM said...

கார்க்கி அண்ணா.. பாட்டு நல்லா இல்லைன்னு ட்விட்டர், மன்றமையம் எல்லா இடத்துலயும் நானும் சொல்லிட்டேன். ஆனா, பாட்டு நல்லா விக்குதே.. ஒரு வருசத்துக்கு அப்புறம் எவ்வளவு கேவலமான பாட்டு வந்தாலும் ஸ்டார் வேல்யூவுக்காக விக்கும்.. ஹிட் என்பதுதான் பிரச்சனை இல்லையா?

தவிர, நானும் சின்னப்பய தான்.. எனக்கும் ‘இசைன்னா.. ம்ம் இசை’ ரேஞ்சு அறிவு தான். குத்துப்பாட்டு, கானா பாட்டு இரண்டும் ஒன்றுதானா? குத்துப்பாட்டுன்னா நாயகனும் நாயகியும் வேகமான பீட்டுக்கு நடனமாடுவது என்று தான் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறேன். தெளிவுபடுத்தவும். கானா பாடல்கள் பொதுவாக காதல் தோல்வி, பெண்களை ஏசுதல்/கிண்டலடித்தல் ரகம். ரெண்டும் வேறன்னு நினைக்கிறேன்..

இன்னொண்ணு சொல்லிக்க ஆசைப்படுறேன்.. நான் உங்களை நிச்சயம் தர்க்க/ரசனை ரீதியாக விரோதியாக பாவிக்கவேயில்லை. அவ்வெண்ணம் தொனித்தால் மன்னிக்கக் கோருகிறேன். தங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்பதற்கு அது ஒரு காரணமாக இருப்பின், let us better agree to disagree and move on to better things to discuss on blogs.

வெற்றி on January 9, 2010 at 12:48 PM said...

//கல்யாண வீட்டுல கேட்டேங்க.... விஜய் காசெட்டுதான் விக்காதத எல்லாம் CD கடைல ப்ரீயா தராங்களாம்.... காசு கொடுத்து கெடைக்கிற நல்ல பாட்ட விட ஓசியா கெடைக்கிற சுமாரான பாட்டே எங்களுக்கு போதும்னு சொல்லுறாங்க...//

CD கடைல கேட்டேங்க..'ப்ரீயா கொடுத்தா கூட அஜித் காசெட்ட யாரும் வாங்க மாட்டேன்கிறாங்களே ' ன்னு சொல்றாங்க..

வெற்றி on January 9, 2010 at 12:50 PM said...

சகா இந்த புலியூறான் ராஜா லெக்சுரர் ன்னு உளவுத்துறை சொல்லுது..
பாத்து..பெஞ்ச் மேல நிக்க சொல்லிட போறாரு :))

வெற்றி on January 9, 2010 at 12:53 PM said...

//அத ஏங்க சுத்தி வளச்சி சொல்லுரீங்க??? 'குத்து' பாட்டுனு நேரடியாவே சொல்லலாமே... :P ;)//

நீங்க சிம்பு படத்த தான சொல்றீங்க :P

கார்க்கி on January 9, 2010 at 1:17 PM said...

வெங்கி,

உன் மீதும் உன் ரசனை, எழுத்தின் மீதும் எனக்கு பெரிய ஈர்ப்பு உண்டு. இந்த “உன்” என்பது கூட ஒரு உரிமையே.

//. பாட்டு நல்லா இல்லைன்னு ட்விட்டர், மன்றமையம் எல்லா இடத்துலயும் நானும் சொல்லிட்டேன். ஆனா, பாட்டு நல்லா விக்குதே..//

இதேதான் வேட்டைக்காரனுக்கு நான் சொன்னது. படம் எனக்கும் பிடிக்கவில்லை. ஆனால் ஃப்ளாப் என யார் சொன்னது? மூன்றாம் நாளே 17 சைக்கிள் என்ற கேபிளாரும் இறுதியில் ஏவரேஜ் என்று எழுதி இருக்கிறார். அவர் மொக்கையென்ற எஸ்.எம்.எஸ் பெரிய வெற்றி. அவர் சொல்வது ஒன்றும் 100% உண்மையில்லை.

அதை விடுவோம். இந்தப் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன். தல படப்பாட்டு நல்லா இருக்காதுன்னு. அதை நீயும் ஒப்புக்கொண்டுவிட்டாய். ஒரு பதிவு. இதற்கே இவ்வளவு கோபமென்றால் எத்தனை பேர் விஜயை கிண்டலடித்து பதிவு போட்டார்கள். மனதை தொட்டு சொல். இதிலாவாது ஓரளவு உண்மையின் அடிப்படையில் நையாண்டி செய்திருக்கிறேன். ஆனால் விஜய் குறித்த வந்த பதிவுகளில் 99% தொடர்பே இல்லாதது.

உன் பின்னூட்டத்திற்கு வருவோம். வாடியம்மா ஜக்கம்மா ஐட்டம் நம்பர். ஆனால் குத்துப்பாட்டுதான். கானா அல்ல. கானா பெரும்பாலும் மெதுவாக செல்லும். வாள மீனுக்கு போன்றவௌ. குத்துப்பாட்டுன்னா பீட்ஸ் ஹெவியா இருக்கனும். அதுல லைட்டா ஃபோக் டச் இருக்கனும். அது இல்லைன்னா டேக்ஸி கூட குத்துப் பாட்டு ஆயிடும். ஆனால் சினிமாவில் சொல்லப்படும் குத்துப்பாட்டு கேட்டகிரியில் கானாக்களும் அடங்கும்.

//நான் உங்களை நிச்சயம் தர்க்க/ரசனை ரீதியாக விரோதியாக பாவிக்கவேயில்லை. அவ்வெண்ணம் தொனித்தால் மன்னிக்கக் கோருகிறே/

ஊர்சுற்றி மற்றும் கார்த்திக்கின் பதிவில் மற்ற தல ரசிகர்களை போல் நீயும் குழாயடி (நானும்தான்) சண்டைக்கு வந்ததே என் கோவத்திற்கு காரணம். அது தொடர்ந்து விடக்கூடாதே என்பதே நான் பதில் சொல்ல மாட்டேன் என்றதற்கு காரணம்.

என்னைப் பொறுத்தவரை விஜயும்,அஜித்தும் ஒன்று. ரசிகர்களுக்காக படம் எடுப்பவர்கள். அவ்வளவே.. அதை விட்டு அஜித் ஏதோ பெரிய நடிகர் என்றது போல் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அஜித்தை விட சிறந்த நடிகர்கள் 10 பேராவ்து இருக்கிறார்கள் இன்றைய தமிழ் சினிமாவில். புலியூரான் ராஜா என் பதிவில் தொடர்ந்து திட்டி வந்தார். அவர் பக்கமே நான் போவதில்லை. ஒரே ஒரு பின்னூட்டம் சரியாக போட்டர். அவர் பதிவை போய் படித்தேன். அவர் கேட்டபடி பதிவெழுத போகிறேன்.

லோகுவிடமும் நானே ஃபோன் செய்து என்னப்பா பிரச்சினை. ஏதாவ்து ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுக்கொன்னு சொன்னேன்.

எனக்கு விஜய் அஜித்தை விட நண்பர்கள் முக்கியம். ஆனால் யாராவ்து சீண்டினால் விட்டுக் கொடுக்க மாட்டேன். மேலே இருபதை விட அதிகமாக விஜயை நக்கல் செய்து பதிவிட்டுருக்கிறேன். நீ செய்வாயா?

ரொம்ப பெருசா போது.சோடா குடிச்சிட்டு வறேன். பின்னூட்டத்தை மறுவாசிப்பு செய்ய மாட்டேன். தப்பா இருந்தா திருத்தி வாசிச்சுக்கோ

Yoganathan.N on January 9, 2010 at 1:34 PM said...

//CD கடைல கேட்டேங்க..'ப்ரீயா கொடுத்தா கூட அஜித் காசெட்ட யாரும் வாங்க மாட்டேன்கிறாங்களே ' ன்னு சொல்றாங்க..//

Then, I suppose, news relating to thousands of CD sales on the Audio release day was rumour... :(
Even the pictures and clips taken in various places like Madurai, Coimbature, etc are fake too... :(

வெற்றி on January 9, 2010 at 2:22 PM said...

யோகா விட மாட்டார் போலயே..
யாராவது ஒருத்தர் விடலேனா முடியவே முடியாத சண்டை இது..

நான் நிறுத்திக்கிறேன்..
i ve some other works 2 do..

"ராஜா" from புலியூரான் on January 9, 2010 at 3:02 PM said...

//வானம் பெருசுதான் பூமி பெருசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்..

நன்றி கார்க்கி....

கிரி on January 9, 2010 at 3:07 PM said...

//@கிரி(முதல்ல)
இத படிங்க. செம ஜோக்குன்னு எல்லோரும் சொன்னாங்க
http://www.karkibava.com/2008/08/blog-post_3604.html//

:-)) இது பழசாச்சே! அதுக்கு தான் கமெண்ட் போட்டு இருக்கேனே அதிலேயே!

இப்ப அதை கூறி பதிலுக்கு என்னை டென்ஷன் பண்ண போறீங்களா! :-) இல்லைங்க கார்க்கி இப்பெல்லாம் ரொம்ப டென்ஷன் ஆவதில்லை.. ஓகே னு கேட்டுட்டு போய்டுவேன். முன்பு இருந்த கோபம் எல்லாம் இப்ப இல்ல..அதாவது அர்த்தம் இல்லைன்னு ஆகிடுச்சு!

அப்ப குசேலனை கொத்துகறி போட்டதவை விடவா இப்ப வேட்டைகாரனை திட்டி இருக்க போறாங்க.. வேட்டைகாரனையாவது கிண்டல் தான் பண்ணுறாங்க குசேலனை ரஜினியை அசிங்க அசிங்கமா திட்டி இல்ல பதிவு எழுதினாங்க மறக்க முடியுமா!

அதுவும் இல்லாம இது நீங்க எழுதினது அதனால் கண்டிப்பா டென்ஷன் ஆக மாட்டேன் :-) எப்படி இருந்தாலும் நீங்களும் ஒரு தலைவர் ரசிகர் தானே! :-)

அப்புறம் விஜய் யை கிண்டலடிக்க சென்ற கமெண்ட் இல்லை... உண்மைய சொன்னேன். No personal Pls

"ராஜா" from புலியூரான் on January 9, 2010 at 3:09 PM said...

//சகா இந்த புலியூறான் ராஜா லெக்சுரர் ன்னு உளவுத்துறை சொல்லுது..

உளவுத்துறை அளவுக்கு நான் வொர்த் இல்லங்க..... ஆனா உங்க உளவு துறை நல்லாத்தான் வேலை செய்யிது.... working in mepco schlenk engineering college, sivakasi

Yoganathan.N on January 9, 2010 at 3:54 PM said...

//யோகா விட மாட்டார் போலயே..
யாராவது ஒருத்தர் விடலேனா முடியவே முடியாத சண்டை இது..//

அய்யோ... அப்படி எல்லாம் இல்லேங்க... நீங்க அப்படி சொன்னதுக்கு தான் கமெண்ட் போட்டேன்...

//நான் நிறுத்திக்கிறேன்..
i ve some other works 2 do..//

இத்தோட நானும் நிறுத்திக்கிறென்
I have better things to do... Cheers

அத்திரி on January 9, 2010 at 4:43 PM said...

சகா இத இதத்தான் எதிர்பார்த்தேன்..........சுத்தி சுத்தி அடிச்சாங்க அதுக்கே அசரலை........ஒரு பதிவுக்கே கலங்கிட்டாங்க..........

)))))))))))0

வெங்கிராஜா | Venkiraja on January 9, 2010 at 7:09 PM said...

உண்மை தான். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இப்போதைக்கு ஒன்றுபட்டுக்கலாம். கலாய்க்கிறதை யாருமே (அட்லீஸ்ட் நான்) எதிர்க்கலைன்னு புரிஞ்சுகிட்டா போதும். :)

//சகா இத இதத்தான் எதிர்பார்த்தேன்..........சுத்தி சுத்தி அடிச்சாங்க அதுக்கே அசரலை........ஒரு பதிவுக்கே கலங்கிட்டாங்க..........//
இதுவரை அஜித் பற்றி SMS/மெயிலே வராத மாதிரி சித்தரிக்காதீங்க சகா! சரி வேணாம். நிறுத்திக்குறேன்.

கார்க்கி on January 9, 2010 at 10:07 PM said...

நன்றி கிரி.. தலைவர எல்லாம் கிண்டல் பண்ணுவோமா?

/அப்புறம் விஜய் யை கிண்டலடிக்க சென்ற கமெண்ட் இல்லை... உண்மைய சொன்னேன். No personal Pls//

இதில் உங்கள் நோக்கம் அதுவில்லை எனினும் மீண்டும் விஜயை கிண்டல் செய்றீங்க. பரவாயில்லை. :)))

கார்க்கி on January 9, 2010 at 10:09 PM said...

நண்பர்களே..இனி நாம இருவரையும் கிண்டல் செய்து பதிவு போட வேண்டாம். குறைந்த பட்சம் இந்த பின்னூட்டங்களில் பங்கேற்ற ராஜா,வெற்றி,வெங்கி,மற்ற நண்பர்களாவது இதை செய்வார்கள் என நம்புகிறேன்.. நானும் தான் :))))

goma on January 10, 2010 at 10:04 AM said...

என்னதான் சொல்லுங்க செந்தில் கவுண்ட்ஸ் காமெடின்னா அதுக்கு ஒரு பவர் இருக்கத்தான் செய்து

நாஞ்சில் பிரதாப் on January 10, 2010 at 2:44 PM said...

சகா... ஒண்ணும் பிரயோஜனம் கிடையாது... ஆயிரம் கைகள் மறைத்தாலும்... மிச்சத்தையும் நானே சொல்லுனமா? ஹீஹீஹீ...

கார்க்கி on January 10, 2010 at 6:09 PM said...

//நாஞ்சில் பிரதாப் said...
சகா... ஒண்ணும் பிரயோஜனம் கிடையாது... ஆயிரம் கைகள் மறைத்தாலும்... மிச்சத்தையும் நானே சொல்லுனமா/

போங்க சகா.. நீங்க ஒரு தல ரசிகர் என்பதையும் மறந்து என்னைப் போய் ஆயிரம் கைக்கு சமம்ன்னு சொல்றீங்களே.. மத்த தல ஃபேன்ஸ் கோச்சிக்க போறாங்க..

ஷாஜி on January 14, 2010 at 4:28 PM said...

மு.கு : கார்க்கியின் tamplate, நேற்றைய வேட்டைக்காரன்... நாளையா சுறா-விற்கும் பொருந்தும்..

இடம்: சுறா ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம்.

பங்கேற்போர்: டாக்டர் விஜய் , மற்றும் ஒரு ரசிகர்

தளபதி: விஜய பாருடி..அடுத்த சி.எம் நானடி .. கட்சியில ஒரு ஆளும் இல்லடி

ரசிகர்: தளபதி.

தளபதி: டேய். ரொம்ப நாளைக்கப்புறம் என் படம் வரப் போது. ஒர்ர்ர்ரு வாரம் சன் டி.வி புண்ணியத்துல ஓடும். அதான் நான் கம்முன்னு இருக்கேன்

ரசிகர்: என் சந்தேகத்தை தீர்த்து வைங்க தளபதி.

தளபதி: என்னடா?

ரசிகர்: உங்க படம் எப்படி தளபதி ஒரு வாரம் ஓடுது?

தளபதி: ஆங்ங்ங். அப்படி வா.இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு டாக்டர் தேவைங்கிறது. அடேய் அரைவேக்காடு ரசிகா. இதுக்கு பேருதான் சிடி. என் முஞ்சி மாதிரி இல்லாம சப்பையா இருக்கு பாரு. இதுக்கு பேரு சிடி பிளேயர். இதுல இருந்துதான் சு சு சுர்ரா சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் கேட்கும்.

(பாட்டைக் கேட்ட கடுப்பான ரசிகன் சிடியைப் கீழே போட்டு உடைத்தபடி சொல்கிறார்)

ரசிகர்: இந்தப் பாட்டு எப்படி தளபதி ஹிட்டாகும்? போங்க தளபதி... காமெடி பண்ணாதிங்க...

(தனது ட்ரேட் மார்க்கான முகத்தில் வழக்கம் போல எந்த வித உணர்ச்சியும் இல்லாத ரியாக்‌ஷனை காட்டுகிறார் தளபதி (எல்லாம் வில்லு பிரஸ் மீட் எபிபிச்ட் தான்) .பதறிய ரசிகர் தொடர்கிறார்)

ரசிகர்: என்ன தளபதி மொக்கையா பாட்டு போட்டிருக்கீங்க?

(மீண்டும் அதே ரியாக்‌ஷன். அந்த வழியாக சூரியன் எப்.எம் ஆர்.ஜே ஒருவர் வருகிறார் கையில் மைக்குடன்)

ஆர்.ஜே: ஏங்க. இங்க கொரங்கு மாதிரி ஒருத்தர் இருப்பாரே விஜய் . அவரோட அடுத்த படம் எதுங்க?

ரசிகர்: சுறா

(விஜய் ரசிகரை முறைக்க, எந்த வித உணர்ச்சியும் இல்லாத ரியாக்‌ஷனை காட்டுகிறார் ரசிகர். அதூஊஊஊ என்கிறார் தளபதி )

தளபதி: சுறா என் படம் தாங்க.

ஆர்.ஜே: சாயந்திரம் என் புரொகிராம்ல பாட்டு போடனும். அதுக்கொர

 

all rights reserved to www.karkibava.com