Jan 7, 2010

நீ காற்று நான் மரம்


 

ஊரெங்கும் பனிபெய்து கொண்டிருந்த
ஒரு மார்கழி காலையில்
என் வீட்டினுள்ளே வந்து உட்கார்ந்தார்கள்
மங்கி கேப் அணிந்த அந்த இருவரும்.
அவன் புத்தகப் பையை கழட்டி ஓரம் வைத்தான்.
அவள் முதுகில் சுமந்தபடியே அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் அமைதி காத்த இருவரும்
ஒருவரை ஒருவர் பரஸ்பரம் முறைத்துக் கொண்டனர்
'நீ அலை நான் கடல்'
என்று பாடினான் அவன்.
'கடல் இல்ல, நான் கரை'
என்று சிரித்தாள் அவள்.
என்னிடம் கேட்டபோது 
கரைதான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு என்று சத்தம் போட்டாள்.
அவன் அடுத்து தேன் தேன் தேன் என்றான்.
இருவரும் 
காற்றாக மாறிக் கொண்டிருந்தார்கள்  
நான் மரமாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்

36 கருத்துக்குத்து:

அன்புடன்-மணிகண்டன் on January 7, 2010 at 8:37 AM said...

இன்னும் லேபிள் மாத்தலையா கார்க்கி? என்ன இதெல்லாம்.. :)

Jaya on January 7, 2010 at 8:48 AM said...

ஏன் இப்படி?? :))

Chitra on January 7, 2010 at 8:55 AM said...

'கடல் இல்ல, நான் கரை'
..........கவிதை இல்ல - கவுஜ .......

பொன்.பாரதிராஜா on January 7, 2010 at 9:01 AM said...

ஐயோ ராமா!!!முடியல,ஆள விடு சாமி...

pappu on January 7, 2010 at 9:28 AM said...

எழுத வந்த எல்லாத்தையும் இந்த வைரஸ் அட்டாக் பண்ணிகிட்டு இருக்கு :)

Anbu on January 7, 2010 at 9:58 AM said...

Raittu....

தராசு on January 7, 2010 at 10:13 AM said...

யோவ், அனுஜன்யா அண்ணனே புரியற மாதிரி ரெண்டு செடின்னு எழுத ஆரம்பிச்சுட்டாரய்யா,

நீ ஏன் இப்படி?

பின்னோக்கி on January 7, 2010 at 10:27 AM said...

பொருள் விளக்கம் எங்க கிடைக்கும் ?

மோகன் குமார் on January 7, 2010 at 11:09 AM said...

என்னாதிது?

திருநாவுக்கரசு பழனிசாமி on January 7, 2010 at 11:20 AM said...

தல...இதுதான் பின்நவீனத்துவமா...?

இரசிகை on January 7, 2010 at 11:46 AM said...

//நான் மரமாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்//

aamaa..,neenga yaaru?

குசும்பன் on January 7, 2010 at 11:58 AM said...

//நான் மரமாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்//

நீ மரமண்டைன்னு தெரியும், இப்பதான் கன்பார்ம் ஆச்சு!

அனுஜன்யா on January 7, 2010 at 12:13 PM said...

வாவ், ரொம்ப நல்லா இருக்கு. நான் கனவில் எழுதிய கவிதை காலையில் உன் மின்னஞ்சலுக்கு வந்து விட்டதா? கம் ஆன் கார்க்கி, கண்டின்யூ.

ஹலோ மிஸ்டர் தராசு, இங்க நீட்டி முழக்கி பின்னூட்டம் போட டைம் இருக்கா? அங்க வந்தா பின்னூட்டம் எல்லாம் கிடையாதா? :(((((

அனுஜன்யா

பரிசல்காரன் on January 7, 2010 at 12:15 PM said...

சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா ஆகியோர் எங்கு (ஒளிந்துகொண்டு)இருந்தாலும் மேடைக்கு வரவும்.

ஆதிமூலகிருஷ்ணன் on January 7, 2010 at 12:19 PM said...

ஏய்.. உண்மையிலேயே நல்லாயிருக்குதுபா.! இவனுக்குள்ளேயும் ஏதோ இருந்துருக்குது பாரேன். (அது காற்றாகி அல்ல, காற்றாக என்றிருந்தால் நலம்.)

கார்க்கி on January 7, 2010 at 12:23 PM said...

மணி, a rose is a rose is a rose

ஜெயா, ச்சும்மாங்க..

அதே தான் சித்ரா மேடம்...

பாரதி, கிகிகி..

என்ன செய்ய? போட்டி வச்சிருக்காங்களே பப்பு

என்ன அன்பு? கோச்சிக்கிட்டியா? :))

தராசண்ணே, அப்போ இது புரியலையா? வெற்றி வெற்றி

பின்னோக்கி, டிடியோ செக்கோ அனுப்பினால் உடனே கிடைக்கும்

மோகன்,லேபிளை பாருங்க.தெரியும்:)

திரு, அதுக்கு இன்னும் பின்னாடி போகனுமாம்

ரசிகை, நான் அவனே தான்

குசும்பன், நாங்க இப்பதான் மறினோம் சீனியர்

அனு, நன்றி தல. 15ஆம் தேதிக்குள்ள போட்டிக்கு ஒன்னு சூப்பரா எழுதிட மாட்டேன்?

பரிசல், லக்கியை கூப்பிடாதவரை சந்தோஷம். :))

மகா on January 7, 2010 at 12:38 PM said...

சார் உங்ககிட்ட ஒரு ப்யர் இருக்குது சார்

பூங்குன்றன்.வே on January 7, 2010 at 12:59 PM said...

நடத்துங்க பாஸ்.

வால்பையன் on January 7, 2010 at 1:16 PM said...

பாரெங்கும் இருள் சூழ்ந்திருந்த
ஒரு சண்டே மாலையில்
என் டேபிளினிலருகில் வந்து உட்கார்ந்தார்கள்
மங்கி போல் இருந்த அந்த இருவரும்.
அவன் குவாட்டர் மூடியை கழட்டி ஓரம் வைத்தான்.
இவன் கிளாஸ் கழுவி அருகில் வைத்தான்.
சிறிது நேரம் அமைதி காத்த இருவரும்
ஒருவருக்கு ஒருவர் சியர்ஸ் சொல்லிக் கொண்டனர்ர்
'நீ சரக்கு நான் சைடிஷ்'
என்று சொன்னான் அவன்.
'சரக்கு இல்ல, நான் சைடிஷ்'
என்று சிரித்தாள் இவன்.
என்னிடம் கேட்டபோது
சைடிஷ்தான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு என்று சத்தம் போட்டான்.
அவன் அடுத்து எம்சி எம்சி எம்சி என்றான்.
இருவரும்
மட்டையாகி சாய்ந்து விட்டார்கள்
நான் போதையாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்

நர்சிம் on January 7, 2010 at 1:29 PM said...

அதான் அனுஜன்யாவே சொல்லிட்டாரே சகா..இன்னும்மென்ன?

சுசி on January 7, 2010 at 1:40 PM said...

சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு கார்க்கி..
வர வர நீங்க ரொம்ப வித்தியாசமா எழுதறீங்க.
கற்பனை வளம் கொட்டுது.. :)))

தாரணி பிரியா on January 7, 2010 at 1:41 PM said...

இந்த கவிதை எல்லாம் புரியறதுக்கு டியூசன் ஏதாவது இருக்கா கார்க்கி :)

அகநாழிகை on January 7, 2010 at 1:59 PM said...

நல்லாயிருக்கு கார்க்கி.

//பனி பெய்துக்// ‘க்‘ வராது.

- பொன்.வாசுதேவன்

taaru on January 7, 2010 at 4:07 PM said...

//கரைதான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு //
அய்.. Surf Excelmatic - ரைட்டு; நடந்தா கரை நல்லது...தல பிளிருறீங்க...

விக்னேஷ்வரி on January 7, 2010 at 4:19 PM said...

கவிஞர் கார்க்கி வாழ்க.....
.
.
.
.
.
.
.
.
.

நீங்க எழுதினதுக்கு மேலேயே கூவியாச்சு. இனிமேயாவது இப்படி எழுதுறதை நிறுத்துங்க.

மோனி on January 7, 2010 at 4:39 PM said...

ஹையோ
இந்த வால் பையனுக்கு
பக்கத்துல இருக்குற யாராவது
உடனே ஒரு 270 m.l.
வாங்கி கொடுங்களேன்..
(Capasity OK தானே Mr. வால் ? )

100 k.m. தள்ளி இருக்கேன்பா..
இல்லைனா நானே வாங்கி கொடுத்துடுவேன்.

பட்டிக்காட்டான்.. on January 7, 2010 at 5:32 PM said...

சகா அருமை..
(ஒன்னும் புரியலைன்னு வேற எப்படி சொல்ல..??!!)

henry J on January 7, 2010 at 5:33 PM said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

Karthik on January 7, 2010 at 6:35 PM said...

ரொம்ப நல்லாருக்கு. :)

சத்தியமா டெம்ப்ளேட் பின்னூட்டம் இல்லை.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on January 7, 2010 at 6:39 PM said...

:-( அவ்வ்வ்வவ்வ்வ்

கார்க்கி on January 7, 2010 at 8:07 PM said...

மகா, அப்போ நான் தீப்பொறி திருமுகமா?

ஆதி, மாத்திட்டேன்

பூங்குன்றன், நன்றி பாஸ்

வால், ரைட்டு

நர்சிம். இது பாராட்டா இல்லையா?

ஆனா நன்றி சொல்லி எனக்கு அலுக்கல. அதனால் நன்றி சுசி

தா.பி.கண்டிப்பா, உடனே www.anujanya.blogspot.com போங்க

நன்றி வாசுண்ணா. மாத்திட்டேன்

நன்றி டாரு

நன்றி விக்கி. முடியாது.முடியாது

பட்டிக்காட்டான், எழுதிய எனக்கே புரியல

ஹிஹி.கார்த்திக் நன்றி

என்ன ஆச்சு பாலகுமாரன்?

சி.வேல் on January 7, 2010 at 8:34 PM said...

நர்சிம் விளக்கம் please

தமிழ்ப்பறவை on January 7, 2010 at 9:24 PM said...

ரசித்தேன் சகா நீ ரசித்ததை...

பலா பட்டறை on January 7, 2010 at 9:38 PM said...

உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...//

போட்டாவும் சேர்த்தே போட்டுட்டங்க::)

Anonymous said...

சீக்கிரம் வீட்டுல பொண்ணு பாக்க சொல்லுங்க :)

" உழவன் " " Uzhavan " on January 9, 2010 at 11:54 AM said...

தலையாடித்தானே ஆகவேண்டும். நல்லாருக்கு

 

all rights reserved to www.karkibava.com