Jan 6, 2010

அசல் இசை அலசல்


 

ajith2_002

   தலயின் அடுத்த அவதாரம் தயார். ஃபிப்ரவரி மாதம் விஷாலுடன் மோதுவதற்கு முழு வீச்சில் உழைக்கிறது அசல் டீம். பாடல்கள் நேற்று முன் தினம் வெளியாகிவிட்டன. கேட்டுத்தான் பார்ப்போமே என்று நானும் சிடி வாங்கினேன். பார்ப்போம் வாருங்கள்

1) காற்றை நிறுத்தி... (சுனிதா..)

பரமசிவனில் இருந்தே அஜித்துக்கு ஓப்பனிங் பாடலை பெண்கள் பாடுவது வழக்கமாகிவிட்டதி. பில்லா, ஏகன்(இருவரும்) எனத் தொடர்ந்த இந்த செண்டிமண்ட் இங்கேயும். ஆனால் இது சற்று வித்தியாசமாக. பாடல் என்ற வகையில் செம பாட்டு. Pick of the album எனலாம். எவ்வளவோ யோசித்தும் ”தல போல வருமா” போன்று ஒரு வரி சிக்காததால் அதையே சேர்த்துவிட்டார்கள். ஏற்கனவே கேட்டாகிவிட்டதால் அந்த வரி ஒலிக்கும்போது மட்டும் சற்று சலிப்பு தட்டுகிறது. ஆனால் தல ரசிகர்களை குஷிப்படுத்த சரியான ஆயுதம்தான்.  அஜித் எப்படியும் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்துக் கொண்டு சினிமாவில் அவருக்கு கொ.ப.செ ஆகிவிட்டார் வைரமுத்து.அனல் கக்கும் வரிகள்.

நித்தம் நித்தமும் யுத்தம்-இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை.

சரணுக்கு ஜே போடலாம். நடப்பு புயல் அஜித்துக்கு இதை விட சிறந்த ஓப்பனிங் சாங் போடவே முடியாது. ”நட”த்து தல.

2) யே துஷ்யந்தா ( சுர்முகி, குமரன்)

என்னா பீட்டு? என்ன சாங்? பரத்வாஜ் பிரித்து மேய்ந்திருக்கிறார். வார்த்தைகள் மட்டும் சற்று பிசிறுதட்டுகிறது. அர்த்தம், கதை இதையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு மெட்டுக்கேற்ற வரிகள் போட்டிருந்தால் உண்மையாகவே அட்டகாசமாய், அமர்க்களமாய் அசல் இசையாய் வந்திருக்கக்கூடும். மிஸ் செய்துவிட்டார்கள். ”அந்த நீல நதிக்கரை”என்று சுர்முகி ஏறும்போது என் உச்சிமண்டையில் சுர்ரென்று ஏறுகிறது. வெயிட்டான ரிதம். பாட்டின் இடையே “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் வரிகளை அழகாய் சேர்த்திருக்கிறார்கள். கடைசியில் பழைய பாடலின் பல்லவியை இணைத்தவிதம் அழகு. உண்மையில் துஷ்யந்தாவை விட பார்த்த ஞாபகம் என்ற வரிகளுக்கு இந்த பீட் செமையா செட் ஆகுது. எம்.எஸ்.வியின் மெட்டு கிளாசிக் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. மொத்த ஆல்பத்தையும் கேட்டபிறகு நம் மனதில் ஒலிப்பது “அந்த நீல நதிக்கரையோரம்” தான். குமரன் என்ற ஒருவரும் பாடியிருக்கிறாராம். கேட்டதாக நினைவிலில்லை. அடித்து சொல்கிறேன் இந்தப் பாட்டுக்கு பாவனாதான்.

பூங்காவில் மழை வந்ததும்

புதர் ஒன்று குடையானதும்

மழை வந்து நனைக்காமலே (அடுத்த வரியை யூகியுங்கள்)

  பாவனவை இப்படி கற்பனை செய்து பாருங்கள் ஆதி.(பாவனா ரசிகர் மன்றத் தலைவர்)

3) அதிரி புதிரி பண்ணிக்கடா (முகேஷ், ஜனனி)

விஜய் மட்டும்தான் குத்தாட்டம் போடுவாரா? நாமளும் ரவுடிதான் என்று ஒவ்வொருப் படத்திலும் தலயும் ஒரு பாடலுக்கு ஆட்டுவார். அந்தப் பாடல்தான் இது. வழக்கமான தமிழ் மசாலா குத்து என்றாலும், மசாலா இலக்கணப்படி இந்தப் பாடலில் அமைந்த ஒரு வார்த்தை செம மாஸ். அந்த ஒரு வார்த்தைக்காகவே எஃப்.எம்மில் ஒலிக்கும். படம் க்ளைமேக்ஸை நெருங்கும் வேளை, தனது எதிரிகளை தல வேட்டையாட ஆரம்பிக்கும் முன்பு சமீராவை சந்திக்க, அவரும் என் உயரத்திற்கும் உருவத்திற்கும் ஏற்ற ஒரே ஹீரோ இந்தியாவிலே நீதான் என்று கொஞ்ச.. டொண்ட்டடொய்ங்… திரையில் பாட்டு ஆரம்பம். அது என்ன வார்த்தையா? நீங்களே கேட்டு தெரிஞ்சிக்கோங்க.இல்லைன்னா இந்த பத்தியில் தான் இருக்கு. தேடி சொல்லுங்க. இதுக்கெல்லாம் முகேஷ..ம்ம் பரத்வாஜ் கோட்டை விடுவது இது போல்தான்

பணயக் கைதி போல என்னை ஆட்டிப் படைக்கிற

பங்கு சந்தை போல என்னை ஏத்தி இறக்குற.

இது பரவாயில்லை.தங்கத்துக்கு என்ன சொல்றாரு தெரியுமா? டொண்ட்டடொய்ங். பாட்டைக் கேளுங்க.

4) என் தந்தை... (பரத்வாஜ்)

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் இல்லையா? அதான் அவரைப் பற்றி ஒரு பாடல். படத்தில் அஜித் இரட்டைவேடம். அப்பா அஜித்தைப் பற்றிய பாடல். பெரிதாய் ஒன்றுமில்லை, அப்பா அஜித் மகனை விட வயதில் பெரியவர் என்பதைத் தவிர.  நெக்ஸ்ட்டு

5) எங்கே எங்கே...(எஸ்.பி.பி.)

கன்ஃபார்ம்டு.படம் புதிய பறவையின் ரீமிக்ஸ். அல்லது அந்த சாயலில் ஒரு கதை. அஜித்த்தான் சிவாஜி, சமீரா சரோஜாதேவி, செளகார் ஜானகிதான் பாவனா. பார்த்த ஞாபகம்தான் துஷ்யந்தா என்று பார்த்தோம் அல்லவா? எங்கே நிம்மதிதான் எங்கே எங்கே. அனேகமாக எம்.ஆர்.ராதா ரோலில் பிரபு நடிக்கலாம். ஆனால் அவர் என்னவோ நல்லவராகத்தான் நடிப்பார் என்றும் தோன்றுகிறது. படம் பார்ப்பவர்கள் மறக்காமல் சொல்லுங்கள்.பாட்டைப் பற்றியா? பாடலில் வரிகள் ஒருவனின் ஏமாற்றத்தை சொல்கிறது. எஸ்.பி.பியின் குரல் விடுதலை வீரனைப் போல் கர்ஜிக்கிறது. பரத்வாஜின் இசை இன்னொரு பக்கம் செல்கிறது. சகிக்கல.

6) குதிரைக்கு ஜாக்கி (சுர்முகி, ஸ்ரீசரண்)

எல்லாப் பாடல்களிலும் தொடக்கம் ஈர்க்கிறது.. மீண்டும் மீண்டும் கேட்கும்போது அயர்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடலிலும் அப்படித்தான். பல்லவியில்

தொட்டுவிடு ஒருதரம்
தொல்லைகொடு இருதரம்
முத்தமிடு மூனுதரம்
முகர்ந்திடு நாலுதரம்
அள்ளிஎடு ஐந்துதரம்
கொள்ளையிடு ஆறுதரம்
இன்பம் கொடு ஏழுதரம்

இப்படியாக போய் ”குதிக்கும் குதிரையை” என்று அதிர்வேட்டு போடுகிறார் வைரமுத்து. எனக்கு என்னென்னவோ அர்த்தம் புரிகிறது. சென்சார் என்ன செய்யுதுன்னு பார்க்கலாம்.இதிலும் பாடகிக்கே முக்கியத்துவம்.

___________________________________________________________________________________

மொத்தத்தில் மூன்று பாடல்கள் அட போட வைக்கின்றன. படம் வந்து ஹிட்டானால் பாடல்களும் ஹிட்டாகலாம்.. அஜித் அதிகம் வாயசைக்க தேவை இருக்காது. சொல்லாஆஆஆஆஆஆஅமல் தொட்ட்ட்டு செல்ல்ல்ல்லும் தென்ன்ன்ன்றல் போல் பெர்ஃபார்ம் செய்ய அவருக்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் பெண்கள் ஆதிக்கம், எங்கெ எங்கேவைத் தவிர. இசையில் ஏகனில் இருந்த இளமை இதில் மிஸ்ஸிங். ஆனால் பரத்வாஜின் சமீபத்திய சிறந்த ஆல்பம் எனலாம். படம் ஹிட்டாக வாழ்த்துகள்.

40 கருத்துக்குத்து:

ஜிகர்தண்டா Karthik on January 6, 2010 at 9:05 AM said...

அசல் பாடல் அலசல் அருமை...
டொடொ.... டொயின்

pappu on January 6, 2010 at 9:05 AM said...

மீ த பர்ஸ்ட்?

pappu on January 6, 2010 at 9:05 AM said...

fraction of the second ல மிஸ்ட்!

ஜிகர்தண்டா Karthik on January 6, 2010 at 9:05 AM said...

இந்த படமாவது அஜித்தின் அசல் திறமையை காட்டுகிறதா என்று பாப்போம்.

♠ ராஜு ♠ on January 6, 2010 at 9:15 AM said...

ரைட்டுண்ணா..!

நாதஸ் on January 6, 2010 at 9:18 AM said...

// யே துஷ்யந்தா //

Beats are from "Jabe we Met" Song.
http://www.youtube.com/watch?v=0uEYri4fO4E

வெற்றி on January 6, 2010 at 9:23 AM said...

//படம் ஹிட்டாக வாழ்த்துகள்.//

இதுதாங்க விஜய் ரசிகரின் பெருந்தன்மை என்பது!

Rajalakshmi Pakkirisamy on January 6, 2010 at 9:33 AM said...

//படம் ஹிட்டாக வாழ்த்துகள்.//

:)

பரிசல்காரன் on January 6, 2010 at 10:17 AM said...

இன்னும் வாங்கல தல.

வாங்கிடறேன்....

Anonymous said...

அஜீத்தோட மீசை சகிக்கலை.

நாய்க்குட்டி மனசு on January 6, 2010 at 10:24 AM said...

படம் வந்து ஹிட்டானால் பாடல்களும் ஹிட்டாகலாம்//
வழக்கமா பாட்டு ஹிட் ஆகி பழகிப் போன பிறகு தானே
படம் வரும்
இதில அப்படி இல்லையா ?

rajan RADHAMANALAN on January 6, 2010 at 10:51 AM said...

தியேட்டர்ல கேட்டுக்கலாம் !

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on January 6, 2010 at 11:24 AM said...

ரைட்டுங்கண்ணா...

Anbu on January 6, 2010 at 11:48 AM said...

உங்கள் விமர்சனம் அருமை அண்ணா...
என்னுடைய விமர்சன தவறுகளை புரிந்துகொண்டேன்...
அடுத்தமுறை எழுதும் போது இதே மாதிரி எழுத முயற்சிக்கிறேன்...

கும்க்கி on January 6, 2010 at 11:56 AM said...

அய்யன்மீர்,
பதிவை வாசித்தேன்,
மிக்க நன்றி.

கார்க்கி on January 6, 2010 at 12:07 PM said...

நன்றி ஜிகிர்தண்டா. வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாரு? :))

பப்பு, ஜஸ்ட் மிஸ்தாம்ப்ப்பா

ராஜூ, நீ கொடுத்த செக்குக்கு இவ்ளோதாம்ப்பா கூவ முடியும் :))

நாதஸ், மொத பாட்டும் அப்படித்தான். நான் சொன்னா புலி உறுமுது பாட்டோட மெட்டே தாய்லாந்து நாட்டுப்புறப்பாட்டு. அதை ஏன் சொல்லலன்னு கேட்பாங்க. அதான் :)

ஹிஹிஹி.நன்றி வெற்றி

நன்றி ராஜலக்‌ஷ்மி

பரிசல்.. லின்க் வேணுமா? :))

அம்மிணிக்கு ஒரு கிலோ ஸ்வீட் பார்சேல்ல்ல்

அந்த அளவுக்கு இல்லங்க நாய்க்குட்டி

ராஜன், உங்களுக்கு தைரியம் அதிகம்ங்க:))

நன்றி பாலகுமாரன்.

அன்பு, நீ வேறப்பா. யாராவ்து பார்த்தா என்னைத்தான் கும்முவாங்க :))))

rajan RADHAMANALAN on January 6, 2010 at 12:08 PM said...

//ராஜன், உங்களுக்கு தைரியம் அதிகம்ங்க:))//


இதுல எதுனா உள்குத்து இருக்கா ?

RaGhaV on January 6, 2010 at 12:28 PM said...

சகா ஒரு சந்தேகம்.. இசை எங்கிருந்து வருது..? ;-)

Nataraj on January 6, 2010 at 12:30 PM said...

மிக மிக சுமாரான ஆல்பம். ராகாவில் 10 செகண்டுகளுக்கு மேல் ஒரு பாட்டை கூட கேட்க முடியவில்லை.
ஜீவி பிரகாஷ் , யுவன், ஹாரிஸ், vijay ஆண்டனி, ஏன் james வசந்தன் கூட எங்கோ போய் கொண்டிருக்க பரத்வாஜ் அப்படியே தேங்கி நிற்கிறார். இதை போய் நல்லாருக்குன்னு சொல்றீங்களே..முதல்ல சரண் பாரத்வாஜ விட்டு ஒழிஞ்சா தான் படம் பிளாப் குடுக்கறது குறையும்.

ஒன் சைடா பேசலை. அமர்க்களம், அட்டகாசம் பாடல்களை இவர்கள் காம்பினஷனில் ரசித்தவன் தான் நான். இப்போ பரத்வாஜுக்கு சரக்கு தீந்து போச்சு. ஆட்டோக்ராப்க்கு அப்புறம் ஒரு படம் ஒரு பாட்டு கூட உருப்படியா குடுக்கலை.

ILA(@)இளா on January 6, 2010 at 12:35 PM said...
This comment has been removed by the author.
ILA(@)இளா on January 6, 2010 at 12:36 PM said...

அசல்- பரவாயில்லை ரகம். ஆனா பரத்வாஜின் Heavy Rock புதுசு

ஜெட்லி on January 6, 2010 at 12:37 PM said...

//கன்ஃபார்ம்டு.படம் புதிய பறவையின் ரீமிக்ஸ். அல்லது அந்த சாயலில் ஒரு கதை//

புதுசா இருக்கே...நியூஸ்ஸை சொன்னேன்...!!
பார்ப்போம்..

சுசி on January 6, 2010 at 1:01 PM said...

//பார்ப்போம் வாருங்கள்//
ஆவ்வ்வ்... அப்போ கேக்க முடியாதா கார்க்கி?

அதிரி புதிரி விமர்சனம் சூப்பர்.

//அப்பா அஜித் மகனை விட வயதில் பெரியவர் என்பதைத் தவிர. நெக்ஸ்ட்டு //
ஹஹாஹா.. சூப்பரேய்..

//படம் பார்ப்பவர்கள் மறக்காமல் சொல்லுங்கள். //
அப்போ நீங்க?

Anonymous said...

நடுநிலையான அலசல்

விக்னேஷ்வரி on January 6, 2010 at 1:10 PM said...

ம், சிடி செலவு மிச்சம். ஒரு தரம் கேக்க ராகா போதும்.

கார்க்கி on January 6, 2010 at 1:39 PM said...

ராஜன், தெரியலையேப்பா

ராகவ், எனக்கு என் ஐபோடுல இருந்து சகா.. :))

நடராஜ், எனக்கு என்னவோ மூனு பாட்டு தேறுமுன்னு தோணுது. நம்ம அறிவு அவ்ளோதான் சார் :))). ஆனா ஒன்னு பரத்வாஜ் விட்டு பிரிஞ்ச பிறகு கொடுத்த மோதி விளையாடிதன அவரின் மாபெரும் ஃப்ளாப். :))

இளா, உங்கள புரிஞ்சிக்கவே முடியல. வேட்டைக்காரன் குப்பைன்னு சொன்னிங்க. இப்பொ அசல் சுமார்னு சொல்றிங்க. :))

ஜெட்லீ, பார்ப்போம்

சுசி, நானெல்லாம் ஹேய்..ஹேஹேய்

நன்றி ஆனந்த்.

நன்றி விக்கி. கேட்டுட்டு சொல்லுங்க

rajesh on January 6, 2010 at 4:14 PM said...

sagaa.. naanum thala fan thaan. irunthalum ungalakkum fan. enakku oru paattuthaan pudichuthu. aanaa neenga moonu paattu supernu ezuthinatha padichittu santhoshama en friends kitta kaamichen.enga groupla naanum innoruthan mattumthaan thala fans. mathavanga ellaam vijay fans.appathaan innoru thala fan sila matter sonnaan. ennaala namba mudiyala.

evlo nalla asal fotos irukkum pothu en intha fotova pottinga?

first song pathie zuthum pothu lady voices, "nada"thu thalanu vaari irukkinga

thushyantha songla naduvula en uchi mandaila surrunnu gapla vettaikatan songs ezuthi irukkinga

athiri puthiri songla unga aalu nija dancernum thala vadivelu maathirinum maraimukama thaakki irukkinga

en thanthai songla appaa ajithkkum, maganukkum thala entha differencum kaatta maattaarumnnu solli irukkinga

ellaa paattilum femaile voice dominate seythunnu solli thalaya damage pandringa..


thala lip movementayum kindal panni irukkinga

post fullaave sarcastica thalaya pathi ezuthi irukkinga.anganga vijayayium thooki udaringa

en friend sonnapparumthaan ithellaam enakku therinjuthu. why sagaa? irunthaalum evlo supera ezuthi irukkingannu solli karki fana maari oodi vanthutten. naane nonthu poi irukken. neenga vera? enakaga thalaya pathi nallatha oru post poduvingala? unga fan odaya request consider pannunga sagaa

கடைக்குட்டி on January 6, 2010 at 5:45 PM said...

ஹி ஹி:-)

வினோத்கெளதம் on January 6, 2010 at 6:34 PM said...

படம் வந்தப்பிறகு இன்னும் நல்லா இருக்கிற மாதிரி இருக்கும்..:)

rasukutty on January 6, 2010 at 6:40 PM said...

தங்கத்துக்கு என்ன சொல்றாரு தெரியுமா?
thala pola varuma

ILA(@)இளா on January 6, 2010 at 8:11 PM said...

//வேட்டைக்காரன் குப்பைன்னு சொன்னிங்க//
ஏன்னா வேட்டைக்காரனுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு அப்படி. விஜய்கிட்ட இருந்து புதுசா ஏதாவது வரும்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். அசல்’ஐ எல்லாம் வரட்டும் பார்த்துக்கலாம்னு விட்டிருக்கேன். அதான் விசயமே.

தர்ஷன் on January 6, 2010 at 10:30 PM said...

எள்ளல் இழையோடுகிறது உங்கள் எழுத்தில்
Opening song ரொம்ப ஓவர் இல்ல
பரமசிவனில் வரும் பாட்டு ஒரு குத்து பாட்டையா தலயின் அருமை பெருமை எல்லாம் சொல்லவில்லை
//நடப்பு புயல் அஜித்துக்கு இதை விட சிறந்த ஓப்பனிங் சாங் போடவே முடியாது. ”நட”த்து தல.//
நக்கல்
//இப்படியாக போய் ”குதிக்கும் குதிரையை” என்று அதிர்வேட்டு போடுகிறார் வைரமுத்து. எனக்கு என்னென்னவோ அர்த்தம் புரிகிறது. சென்சார் என்ன செய்யுதுன்னு பார்க்கலாம்.இதிலும் பாடகிக்கே முக்கியத்துவம். //
என்ன வயசான மாதிரி பதறுறீங்க இதையெல்லாம் இப்படி இலைமறை காய்மறையாக சொல்ல கள்ளிகாட்டுக் கம்பனை விட்டால் ஆள் கிடையாது என்ன சொல்லுறீங்க
ம்ம் அறிவுமதியும் ஒக்கே "செம்பூவே பூவே" பாடல் ஞாபகம் வருகிறதா

கார்க்கி on January 7, 2010 at 8:30 AM said...

@ராஜேஷ்,
ஆவ்வ்.. அந்த நண்பர் கூட அதிகம் பழகாதிங்க சகா.. நான் வேணும்பே இதெல்லாம் செய்யல. :))) கூடிய சீக்கிரம் தல புராணம் எழுதறேன். ரொம்ப நன்றி சகா

@வினோத்,
எப்படி சகா?படத்த விட பாட்டு எவ்ளோ பெட்டர்னு தோணுமா? :)))

@கடைக்குட்டி,
நன்றி

@ராசு,
வாய்ப்பெ இல்லைங்க.வராது

@இளா,
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்

@தர்ஷன்,
இலை மறையா இருந்தா பரவாயில்லையே.. :))))

Karthik on January 7, 2010 at 7:30 PM said...

நன்றிகள். :)

Karthik on January 7, 2010 at 7:34 PM said...

சின்ன அம்மிணி said...
அஜீத்தோட மீசை சகிக்கலை.//

கேரக்டர் டிமாண்ட் பண்ணுதுங்க. கதை அப்படி. ;)

கார்க்கி said...
அம்மிணிக்கு ஒரு கிலோ ஸ்வீட் பார்சேல்ல்ல்//

நன்றிகள திரும்ப வாங்கிட்டு வந்திருங்கப்பா. :)

தமிழ்ப்பறவை on January 7, 2010 at 9:32 PM said...

இசை ரசிப்பில் உங்கள் சுய விருப்புவெறுப்பு எடுக்காமல் சொல்லியிருப்பது பிடித்தது...
‘அசல்’ பாட்டு கேட்கணும்னு ஆசை தோணலை.. பார்க்கலாம்...
‘கோவா’ வந்துடுச்சா...கொஞ்சமா கேட்டேன். நல்லாத்தான் இருந்தது. யுவன் அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்னு நினைக்கிறேன்...
யுவன்,பவா,கார்த்திக்ராஜா,வெங்கட்பிரபு,பிரேம்ஜி பாடிய கங்கை அமரன் எழுதிய ‘ஏழேழு தலைமுறைக்கும்’னு ஒரு (இளையராஜா) குடும்பப் பாடல் இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க சகா...

LOSHAN on January 8, 2010 at 11:30 AM said...

அருமையான பார்வை சகா.. உங்கள் எண்ணமே ஆனது எண்ணமும்..
வானொலியில் அறிமுகப் படுத்தியபோதே நினைத்தேன்.. மூன்று தான் தேறும் என்று..
ஆனால் எனக்கு 'தந்தை' பாடலும் பிடிச்சிருக்கு..

அசல், டொட்டடொயிங்,துஷ்யந்தா இப்பவே ஹிட்..

உங்கள் குறும்புகள் சிலவற்றை ரசித்தேன்..
//நடப்பு புயல் அஜித்துக்கு இதை விட சிறந்த ஓப்பனிங் சாங் போடவே முடியாது. ”நட”த்து தல.
//

// பெரிதாய் ஒன்றுமில்லை, அப்பா அஜித் மகனை விட வயதில் பெரியவர் என்பதைத் தவிர. //

பேரரசன் on January 8, 2010 at 11:08 PM said...

அழகான ஆராய்வு நண்பரே.. கேட்க தூண்டுகின்றது.....

goma on January 10, 2010 at 10:13 AM said...

நல்லாத்தான் அலசி புழிஞ்சு காயப் போட்டு க்ளிப் மாட்டி வைக்கிறீங்க...கார்க்கி லாண்ட்ரின்னு போர்டு மாட்டுங்க [மன அழுக்கு நீங்க
நீங்கள் கேட்காமலேயே துவைக்கப் படுவீர்கள்]

Tamil Baby Names on November 25, 2011 at 5:06 PM said...

நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்..

Tamil Baby Names

 

all rights reserved to www.karkibava.com