Jan 4, 2010

மொக்கை தர்பார் - புதிய தொடர்


 

இந்தப் புத்தாண்டில் புதிதாக, சற்று பெரிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன். எழுதி பழகிய பல பதிவுகள் டிராஃப்ட்டில் தூங்க, அதில் சிலவற்றை மட்டும் தூசு தட்டினேன். புட்டிக்கதையை மற்ற பதிவர்கள் அவரவர் ஸ்டைலில் எழுதினால் எப்படி இருக்குமென்று ஒரு பதிவு இருந்தது. நர்சிம்மின் மாறவர்மன் ஏழுவாக மாறினால் எப்படியிருக்கும் என்று எழுதியதை படிக்கும் போது ஒரு மின்னல் தெறித்தது.

”சோமபானம்தான் எத்தனை பெருமை பெற்றது? கயவர்க்கும், கள்வர்க்கும், காதலர்க்கும் மூளையில் ஏறி மூலையில் சாய்த்து உயர்திணையை அஃறினையாக்கும்  தந்திர திரவம்.

சந்திர வெளிச்சமும் தீப்பந்த ஒளியும் மீறி அடந்து கிடந்த இருட்டின் நடுவில் படர்ந்து இருந்த கூடாரத்திற்குள் கூடி இருந்தது வீரவிக்ரமனும் அவன் தளபதிகளும்.

தளபதி வீரவிக்ரமனும் இளஞ்செழியனும் இன்னபிற தளபதிகளும் ஓவர் போதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்..

ஒரு ஆழ்ந்த நித்திரைக்குப் பின் எழுந்த வீரவிக்ரமன் ஒரு யவ்வனமான நிலையில் அமர்ந்திருந்தபடி ஆஃப்பாயில் போட்டுக் கொண்டிருந்தான்”

தெறித்த மின்னல் இன்னும் செறிவேறியது. பற்பல ஐடியாக்கள் சமையலறையை உருட்டும் எலியைப் போல என் மண்டைக்குள் அலைபாய்ந்தது. ஒரு சரித்திர தொடர் எழுதினால் என்ன? அதுவும் நகைச்சுவை சரித்திர தொடர். ஏற்கனவே இம்சை அரசன் படம் வந்திருந்தாலும் பதிவுலகிற்கு இது கொஞ்சம்  புதிது என்பது போல் தோன்றியது. தொடர்ந்து பல இரவுகள் தூக்கம் தொலைத்து உருவாக்கிய பாத்திரம்தான்

”மாமன்னன் முதலாம் மொக்கைவர்ம பல்லவ மகாராஜா”

இவனோடு, மாமன்னன் மன்னிக்க.. இவரோடு இவரது முதன்மை அமைச்சர்

”அழுகுனி சிம்மன்”

சேர்ந்துக் கொண்டு அடிக்கும் கொட்டங்களை சரித்திர பாணியில் எழுதுவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. சரித்திர தொடர் எழுத ஏதாவது அடிப்படைத் தகுதி இருக்கக்கூடுமோ என்று அஞ்சினேன். புட்டிக்கதைகள் எழுதும் முன் குடித்து பழக்கமில்லையே என்று நான் அஞ்சவில்லை. இதற்கு மட்டும் ஏன் என்று கேட்டது மனசாட்சி. சரிதான் என்று தொடங்கிவிட்டேன்.

ஏழுவைப் போல் நம மொக்கைவர்மன் சோமபானம் அருந்திவிட்டு அடித்த கூத்துகளை மட்டுமே சொல்லப் போவதில்லை இந்தத் தொடரில். தினம் தினம் இவர்கள் இருவரும் நிகழ்த்தும் பராக்கிரமங்களை தொகுக்கப் போகிறேன். ”வரலாற்றில்” யார் யாரோ வாழ, அதற்கு முழுத்தகுதியுடைய நம் மாமன்னர் பெயர் இடம்பெறாமல் போன குறையை தீர்க்கப் போகிறேன்.

தொடர்தான் என்றாலும் வாசகர்கள் இதைத் தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்பதில்லை. தனித்தனி அத்தியாயமாக படித்தாலும் ரசிக்கும் வண்ணமே தொடர் இருக்கும். அவ்வபோது சில கதாபாத்திரங்கள் வந்து போவார்கள். வராமலும் போவார்கள். அவர்களையெல்லாம் அப்போது பார்த்துக் கொள்ளலாம். முதலில் கார்க்கியின் காரில் தொற்றிக் கொள்ளுங்கள். நாம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி போக வேண்டியிருக்கிறது. மன்னர் மற்றும் அமைச்சர்  பற்றியும், இந்தத் தொடர் எப்படி போகவிருக்கிறது என்பதைப் பற்றியும்  இன்று ஓரளவு தெரிந்துக் கொள்வோம்.

______________________________________________________________________________

அழுகுனி சிம்மரே!! சமீபகாலமாக எனக்கொரு பிரச்சினை. என் கண்கள் பெண்களை நோக்கியே செல்கின்றன. யுத்த சத்தத்தை விட முத்த சத்தத்தையே என் காதுகள் கேட்க துடிக்கின்றன.இனிப்பில் இருக்கும் சுகரை விட இடைமெலிந்த ஃபிகரையே என் நா தேடுகிறது.   என் எண்ணமெல்லாம் கிண்ணென்று இருக்கும் அந்தப்புர அழகிகளையே..

மன்னா!! நம் அரண்மனையில் ஏது அந்தப்புரம்?

சற்றும் பொறும் அமைச்சரே. குறுக்கே பேசாதீர்கள். நான் ஆற்றுக்கு அந்தப் புறம் சோழ நாட்டு எல்லையில் குளிக்கும் அழகிகளை பற்றி சொல்கிறேன். இந்த எண்ணம், உலகையே இந்த முதலாம் மொக்கைவர்ம பல்லவனின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தை திசை திருப்பி விடுமோ என அஞ்சுகிறேன். காதல் குறித்து உம் கருத்து என்ன?

மாமன்னா!! தாங்கள் சினப்பட மாட்டீர்கள் என்றால் என் கருத்தை சொல்கிறேன். என்ன இருந்தாலும் ஒரு பெண்ணிடம் மட்டும் கொள்ளும் காதலே சிறந்தது என்பது என் தாழ்மையான கருத்து.

அதுவும் சரிதான் அழுகுனி. ஆனால் இந்தப் புலவன் இருக்கிறானே!! அவன் பெயரென்ன? ம்ம்.. தகரடப்பா.. அவன் காதலைப் பற்றி பாடும்போது “காதல் ஒரு சமுத்திரம். அதை விட்டு குவளை நீரில் ஏன் நீச்சலடிக்க வேண்டும்” என்கிறானே!!

மொக்கைவர்ம மகாராஜா!! காதல் என்பது பருகி பருகி ருசிக்க வேண்டியது. மாறாக அள்ளி உடல் மேல் தெளித்துக் கொள்ள வேண்டியது அல்ல. சமுத்திர நீர் உப்பானது. அதை எப்படி பருகுவது? குவளை நீரென்றாலும் அதுதான் தாகம் தீர்க்க வல்லது என்பது என் வாதம்.

நீர் சொல்வதும் சரிதான் அமைச்சரே!!

எந்த நீரை சொல்கிறீர்கள் மன்னா? கடல் நீரா குவளை நீரா?

உம்மையெல்லாம்.. நீர் என்று உன்னைத்தானடா சொன்னேன் அழுகுனி.

ஹிஹிஹி. நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் மன்னா..

இன்னா?

இல்லை மன்னா..

சரி.இதற்கு தீர்வுதான் என்ன?

மன்னா!! முதலில் நீங்கள் ஒரே ஒரு பெண்ணை மட்டும் காதலியுங்கள். அதாவது குவளை நீர். நான் சமுத்திரத்தில் குளிக்கிறேன். சில மாதங்களுக்கு பிறகு நீங்கள் சமுத்திரம் பக்கம் வாருங்கள். அதன் பின் நாம் இருவரும்..

அழுகுனி.. என்ன சொல்கிறாய்?

இல்லை.அது இல்லை மன்னா!! நாம் இருவரும் நம் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டபின் ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொல்ல வருகிறேன்.

சூட்சமக்காரன்தான் நீர். அழகிகளுக்கு கொடுக்க காசுகள் தேவை. கஜானாவோ உன் மண்டையை போல் காலியாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

ஒரு திட்டம் இருக்கிறது மன்னா. மக்களின் வளர்ச்சிக்காக, அவர்களின் அறிவுத்திறனைப் பெருக்க அரசு ”ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு” ஒன்று அமைக்கப் போகிறது. அதை நடத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வரி என்று ஒன்றை அறிமுகப் படுத்தலாம். இதைக் கட்ட முடியாதவர்கள் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பொருட்கள் அல்லது நபர்களை கொடுத்தால் போதும் என்ற சலுகையும் கொடுக்கலாம் மாமன்னா!!

அற்புதம் அமைச்சரே!!

டண்டண்டண்டண்.. இதனால் நாட்டு மக்களுக்கு………………………….

_________________________________________________________________________

சரித்திரத்தில் இடம்பெற்ற எல்லா சரித்திரக் கதைகளைப் போலவே நம் கதையும் சரச சமாச்சாரத்தில் இருந்தே தொடங்குகிறது. இனி வரும் அத்தியாயத்திற்கும் மேலே சொன்னதற்கும் தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் போகலாம். மீனைப் பிடிக்க தூண்டிலில் மாட்டிய மண்புழுவாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். புழுவை மட்டுமே கடித்தவர்கள் எஸ்ஸாகிவிடுங்கள். கொக்கியையும் சேர்த்துக் கடித்தவர்களுக்கு அடுத்த வாரம் இருக்கிறது தண்டனை. இனி வாராவாரம் ”மொக்கை தர்பார்”.

வேட்டை ஆரம்பமாயிடுச்சு டோய்!!!!

44 கருத்துக்குத்து:

பிரியமுடன்...வசந்த் on January 4, 2010 at 10:35 PM said...

//நீர் சொல்வதும் சரிதான் அமைச்சரே!!

எந்த நீரை சொல்கிறீர்கள் மன்னா? கடல் நீரா குவளை நீரா?

உம்மையெல்லாம்.. நீர் என்று உன்னைத்தானடா சொன்னேன் அழுகுனி.
//

கலக்கல் சகா...!

:))))

தமிழ்ப்பறவை on January 4, 2010 at 10:37 PM said...

வாழ்த்துக்கள் சகா...
//அதாவது குவளை நீர். நான் சமுத்திரத்தில் குளிக்கிறேன்//
ராஜதந்திரத்தில் உங்களை விஞ்சி விடுவான் போலிருக்கிறதே இந்த அழுகுனி.... :-)

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் on January 4, 2010 at 10:39 PM said...

மொக்கை போடுவதற்கும் தண்ணித் திறமை வேண்டும்! மன்னிக்கவும், தனித்திறமை வேண்டும்! அது உங்களிடம் நிறையவே இருக்கிறது! சுவாரசியமான படைப்பு!

ஊர்சுற்றி on January 4, 2010 at 10:41 PM said...

நடக்கட்டும் நடக்கட்டும்.... :)

பரிசல்காரன் on January 4, 2010 at 10:50 PM said...

நல்லாத்தான் இருக்கு சகா.

மன்னர் கால நகைச்சுவைகள் வெறும் துணுக்குகளாகவே போகின்றன. அதை தொடராக எழுதுவது நல்ல விஷயம்.

தொடர்!

தாரணி பிரியா on January 4, 2010 at 10:59 PM said...

//இந்தப் புத்தாண்டில் புதிதாக, சற்று பெரிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன்//

கஷ்டப்பட்டு உடம்பை குறைச்சதா சொன்னாங்க. திரும்ப பெருசா ஆகணுமா :)

//”வரலாற்றில்” யார் யாரோ வாழ, //

கிர்ர்ர்ர் நல்லா இருங்க‌ :)

தாரணி பிரியா on January 4, 2010 at 11:00 PM said...

நல்லா இருக்கு கார்க்கி :) தொடருங்க

☀நான் ஆதவன்☀ on January 4, 2010 at 11:22 PM said...

நல்ல முயற்சி சகா. தொடருங்கள்

சுசி on January 5, 2010 at 1:04 AM said...

கார்க்கி.. எப்பூடீ இப்பூடீ?

ரொம்ப நல்லா இருக்கு. நகைச்சுவை துள்ளி விளையாடுது..

தொடர்ந்து எழுதுங்க.

// ”மாமன்னன் முதலாம் மொக்கைவர்ம பல்லவ மகாராஜா” //

வாழ்க..வாழ்க..

சுசி on January 5, 2010 at 1:07 AM said...

//புட்டிக்கதைகள் எழுதும் முன் குடித்து பழக்கமில்லையே என்று நான் அஞ்சவில்லை. இதற்கு மட்டும் ஏன் என்று கேட்டது மனசாட்சி.//

உங்க மனசாட்சிக்கு மனசாட்சி கிடையாதா கார்க்கி???

சுசி on January 5, 2010 at 1:12 AM said...

//முதலில் கார்க்கியின் காரில் தொற்றிக் கொள்ளுங்கள்.//
தொற்றியாச்சு.. போலாம் ரைரை..

//வேட்டை ஆரம்பமாயிடுச்சு டோய்!!!!//
மண்டபம் நிறைந்த கரகோஷங்கள்..

Rajalakshmi Pakkirisamy on January 5, 2010 at 1:44 AM said...

Good One...

//நீர் சொல்வதும் சரிதான் அமைச்சரே!!

எந்த நீரை சொல்கிறீர்கள் மன்னா? கடல் நீரா குவளை நீரா?

உம்மையெல்லாம்.. நீர் என்று உன்னைத்தானடா சொன்னேன் அழுகுனி.
//

ha ha ha

சுசி on January 5, 2010 at 1:48 AM said...

//சூட்சமக்காரன்தான் நீர்.//
ஆவ்வ்வவ்வ்வ்.

//அழகிகளுக்கு கொடுக்க காசுகள் தேவை. //
அதுக்குன்னு ஆ ம மே வரிய படிக்கிறவங்க கிட்டயும் வசூல் செய்திடாதீங்க..

ஜிகர்தண்டா Karthik on January 5, 2010 at 1:52 AM said...

அருமையான முடிவு...
சகா...நீங்க அப்படி கார்ல போய்டே இருங்க...நான் ஊடால வந்து ஜாயின் பண்ணிக்கறேன்....

வெற்றி on January 5, 2010 at 2:29 AM said...

//தகரடப்பா.. அவன் காதலைப் பற்றி பாடும்போது “காதல் ஒரு சமுத்திரம். அதை விட்டு குவளை நீரில் ஏன் நீச்சலடிக்க வேண்டும்” என்கிறானே!! //

தகரடப்பா ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கமல் ரசிகனா சகா?

வெற்றி on January 5, 2010 at 2:31 AM said...

//.இனிப்பில் இருக்கும் சுகரை விட இடைமெலிந்த ஃபிகரையே என் நா தேடுகிறது.//

அட அட அட! இங்க நிக்கிறாருயா கவிஞர் கார்க்கி..

Anonymous said...

அப்பாடி, நீங்க குடுத்த பட்டத்தை திருப்பி குடுக்கும் வாய்ப்பு :)

//காதாலர்க்கும் //

//ஒரு யவ்வணமான//

மொக்கைவர்மனுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து ஆரம்பிச்சிருக்கீங்க.

Chitra on January 5, 2010 at 8:28 AM said...

”மாமன்னன் முதலாம் மொக்கைவர்ம பல்லவ மகாராஜா” ............வருகிறார் ....... பராக்! பராக்! பராக்!
புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்களுக்கும் தங்கள் இம்சை அரசனுக்கும்!

கார்க்கி on January 5, 2010 at 8:38 AM said...

நன்றி வசந்த்

நன்றி பறவை.நாம கொஞ்சம் பதுங்குவோம் சகா

நன்றி கவுதமன் :)

ஊர்சுற்றி, நீங்க மட்டும் வண்டில போவிங்க. நாங்க நடக்கனுமா சகா?

நன்றி பரிசல்.

நன்றி தா.பி. அதெல்லாம் ஒன்னும் குறையுல. அலுவலகம் பக்கத்திலே KFC தொறந்துட்டாங்க :(

நன்றி ஆதவன்

சுசி, அட நம்புங்க. எனக்கு அந்த பழக்கமில்ல :)).. ஐடியாவுக்கு நன்றி. படிப்பவர்களுக்கும் வரி உண்டு. வாக்குகள் மற்றும் பின்னூட்டமாக செலுத்தலாம்.

நன்றி ராஜலட்சுமி

ரைட்டு ஜிகிர்தண்டா.. வரும்போது ஹெல்மட் கொண்டு வாங்க

வெற்றி, வைரம், முத்து சேர்த்து வைரமுத்து இருப்பது போல் தகரம், டப்பா சேர்த்து தகரடப்பா இருக்கக்கூடாதா சகா?

அம்மிணி, இது என் தப்பு இல்ல. நர்சிம்மின் மாறவர்மனில் இருந்து காப்பி பேஸ்ட் செய்தது. ஹிஹிஹி

வாழ்த்துகள் சித்ரா.. நம்ம ராஜாவுக்கு அழகா ஒரு துதி தயார் செய்யனும்..

♠ ராஜு ♠ on January 5, 2010 at 9:19 AM said...

வலையுலக சிம்புதேவனே வருக..!

Karthik on January 5, 2010 at 9:37 AM said...

//வேட்டை ஆரம்பமாயிடுச்சு டோய்!!!!

but unga nermai enakku pudichirukku!!

imsai arasan mathiriye illamal unga stylil thotaravum.. :)

முரளிகுமார் பத்மநாபன் on January 5, 2010 at 10:08 AM said...

சகா, கலக்கலா ஸ்டார்ட் பண்ணிட்டிங்க கண்டினியூ....

அன்புடன் அருணா on January 5, 2010 at 10:14 AM said...

/முதலில் கார்க்கியின் காரில் தொற்றிக் கொள்ளுங்கள். /
கார்க்கியின் ரதத்தில் ஏறிக் கொண்டேன்!

kannaki on January 5, 2010 at 10:24 AM said...

புதுவருச சாதனை....:) எங்கெல்லாம் மொத்துனாங்கன்னு மறக்காம சொல்லுங்க.....???

நர்சிம் on January 5, 2010 at 10:39 AM said...

மாறவர்மனை மறக்காமல் இருப்பதற்கு நன்றி சகா.

நர்சிம் on January 5, 2010 at 10:40 AM said...

தொடரட்டும்..

taaru on January 5, 2010 at 10:41 AM said...

//இருக்குமென்று ஒரு பதிவு இருந்தது..//
//படிக்கும் போது ஒரு மின்னல் தெறித்தது.//
ஒரு புறாவுக்கு போரா? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்குது..!!

//ஏற்கனவே இம்சை அரசன் படம் வந்திருந்தாலும் பதிவுலகிற்கு இது கொஞ்சம் புதிது//
என்ன தான் சொன்னாலும், புலிகேசி ஞாவகமா வருதுண்ணே...

RaGhaV on January 5, 2010 at 12:17 PM said...

அதிரடியான ஆரம்பம் சகா.. வாழ்த்துக்கள்.. :-))

Busy on January 5, 2010 at 12:19 PM said...
This comment has been removed by the author.
Busy on January 5, 2010 at 12:20 PM said...

நல்ல மொக்கை முயற்சி வாழ்த்துக்கள் சகா...

குசும்பன் on January 5, 2010 at 12:32 PM said...

//புட்டிக்கதைகள் எழுதும் முன் குடித்து பழக்கமில்லையே என்று நான் அஞ்சவில்லை. இதற்கு மட்டும் ஏன் என்று கேட்டது மனசாட்சி. சரிதான் என்று தொடங்கிவிட்டேன்.//

ங்கொய்யாலே!!!

Anbu on January 5, 2010 at 12:47 PM said...

Raittu....

ஜெஸ்வந்தி on January 5, 2010 at 1:26 PM said...

மொக்கை வேறு time machine உடன் வருகிறதா? சூப்பர் தொடர் கார்க்கி

ஆதிமூலகிருஷ்ணன் on January 5, 2010 at 3:23 PM said...

குட் ஸ்டார்ட்.!

கார்க்கி on January 5, 2010 at 3:57 PM said...

நன்றி ராஜூ.

நன்றி கார்த்திக். முயற்சி செய்றேன்

நன்றி முரளி

நன்றி டீச்சர். நானும் ரதமன்னு போட்டிருக்கலாமோ?

கண்ணகி, உங்கள எங்கெல்லாம் மொத்தனாங்கன்னு நான் எப்படிங்க சொல்ல முடியும்? :))

நான் மறக்கல சகா. ஆனா நீங்க மறந்தா மாதிரி தெரியுதே!!!!

டாரு, போகப்போக சரியாகிவிடும்

ராகவ், நன்றி

நன்றி பிசி

குசும்பரே அமைதி அமைதி :))

நன்றி அன்பு

நன்றி ஜெஸ்வந்தி

நன்றி ஆதி.. :))

விக்னேஷ்வரி on January 5, 2010 at 4:09 PM said...

ஆஹா ஆரம்பமா.... நடத்துங்க. நல்லா இருக்கு இந்த நடையும்.

மாமன்னன் முதலாம் மொக்கைவர்ம பல்லவ மகாராஜா "கார்க்கி" அப்படின்னு சேர்த்துக்கலாமா... :)

தராசு on January 5, 2010 at 6:15 PM said...

அப்ப ஏழு இனிமே வரமாட்டாரா??

ஏழு மாத்திரம் வராம இருக்கட்டும், ங்கொய்யால, பொளந்து கட்டிருவோம்.

இப்படிக்கு,

ஏழுவை எதிர்பார்ப்போர் சங்கம்

henry J on January 5, 2010 at 8:48 PM said...

தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

கும்க்கி on January 5, 2010 at 9:20 PM said...

:--)))))

கும்க்கி on January 5, 2010 at 9:20 PM said...

அப்போ அந்தப்புறமே இல்லியா...?

கடைக்குட்டி on January 5, 2010 at 11:33 PM said...

கககபோ

Kathir on January 6, 2010 at 12:50 AM said...

நடக்கட்டும் நாசவேலைகள்..

:))

Raja Subramaniam on January 6, 2010 at 2:35 AM said...

sagaa unga "மடக்கிப் போட்ட வரிகள்" aananda vikatanla vasichen congrats....

valakampol mokkai dhoool

ராஜன் on January 6, 2010 at 12:51 PM said...

//மாமன்னன் முதலாம் மொக்கைவர்ம பல்லவ மகாராஜா "கார்க்கி" அப்படின்னு சேர்த்துக்கலாமா... :)//

அக்கா நீங்க எந்த ஊர்... இப்படி கலக்கறீங்க...

 

all rights reserved to www.karkibava.com