Jan 3, 2010

புத்தாண்டு கொண்டாட்டமும் என் ரெசலியூஷனும்


 

   இந்தப் புத்தாண்டு கொஞ்சம் நல்லாவே போச்சுங்க.  நானும் சில நண்பர்களும் 31ஆம் தேதி  ECRல் கண்ட்ரி க்ளப் நடத்தில் இசைக் கொண்ட்டாத்திற்கு சென்றோம். பாப் ஷாலினி, கார்த்திக், ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் விஜய் எல்லாம் வந்திருந்தார்கள். நாடக நடிகை பிருந்தா தொகுத்து வழங்கினார். ASIA’S BIGGEST BLAST 2010 என்று ப்ளெக்ஸ் போர்டு வைத்திருந்தார்கள். குழப்பத்தோடு உள்ளே சென்ற பின் தான் புரிந்தது. 20 X 10 சைசில் ஒரு மேடை. அதைத்தான் 2010 என்று குறிப்பிட்டிருந்தார்கள். S என்பது சோளிங்கநல்லூர், I என்பது ஈஞ்சம்பாக்கம் என்பது மட்டும் தெரிந்தது. A என்பது எந்த ஏரியா என்று தெரியவில்லை.

எண்ட்ரீ ஃப்ரீ என்றவர்கள். உள்ளே நுழையும்போது 150 ரூபாய் கேட்டார்கள். அனுமதி இலவசம்தானாம் ஆனால் டின்னர் கட்டாயமாம். அதற்கு 150 ரூபாய்.இன்னும் 12 மணி ஆவல மச்சான். கொடுத்துட்டு வா என்றேன். வருட முதல் செலவே ஏமாந்ததா இருக்கக்கூடாது என்பதுதான் விஷயம். முதலில் சூப். வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்றார் அங்கிருந்தவர். எட்டிப் பார்த்தேன். வெஜ்ஜில் பூச்சிகளும், நான்-வெஜ்ஜில் சிக்கனும் இருக்கவே நான், நான் – வெஜ் என்றேன். எனக்கு முன்பு குடித்த  நண்பனிடம் சூப் சூப்பரா மச்சி என்றேன். மொக்கை அடிப்பதாக நினைத்து சப்புன்னு இருந்ததை சொல்ல சப்பர் மச்சி என்றான். ஆஹா சிக்கிட்டான்யா ஒருத்தன் என்று நினைத்தபடி “நைட்டுல சாப்பிட்டா டின்னர் மச்சி, ஈவ்னிங் சப்பினாதான் சப்பர்” என்றேன்.

அடுத்த ஐட்டம் பிரியாணி பற்றி கூறுவதற்கு யாதொன்றுமில்லை என்பதால் ஐஸ்க்ரீமுக்கு செல்வோம். ஒருவருக்கு ஒன்று என சின்ன கப் ஒன்று கொடுத்தார்கள். ஒரே ஸ்பூனில் ஸ்வாஹா செய்துவிட்டு “இந்த ப்ளேவரே நல்லா இருக்கு. இதுவே கொடுங்க பாஸ்” என்றேன். ”அதான் சார். அவ்ளோதான்” என்றார். அடப்பாவிங்களா இது சாம்பிள் இல்லையா என்ற என்னை சற்று முறைக்கத்தான் செய்தார். ஐஸ்கிரீம் வைக்கிறவர் இப்படி சூடாவக் கூடாதுங்க. உருகிடுமில்ல என்றபடி நகர்ந்தோம் 900 ரூபாயை தொலைத்து.

மேடையேறிய பிருந்தா கூட்டத்தை நோக்கி கேட்ட ஒவ்வொருக் கேள்விக்கும் புல்லட் வேகத்தில் தெறித்த பதில்கள் யார் சொன்னது என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எல்லோரும் எப்படி இருக்கிங்க

“கொஞ்சம் போதையில்தான் இருக்கோம். நீங்க?”

2009 நல்லபடியா போச்சா?

இதுவரைக்கும் நல்லாத்தான் போது. இப்பதானே நீங்க வந்திருக்கிங்க?

நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கத்தான் இங்க வந்திருக்கோம். அதுக்கு நான் கியாரண்டி.

எல்லோருமா?

முதல்ல இன்று கலக்க போகும் கலைஞர்களுக்கு பெரிய ஓ போடலமா?

கேப்பிட்டல் ஓஓஓஓஓஓ.

முதல் பாடல் வந்தே மாத்ரம்.

முதல்ல ஆர்கனைசர்ஸ் வந்து இவங்கள மாத்றோம்ன்னு சொல்லுங்கப்பா.

   மேடையை விட்டு இறங்கி வந்து சிலரிடம் அவங்க நியூ இயர் ரெசலியூஷன் என்னன்னு கேட்டாங்க பிருந்தா. ஒரு புண்ணியவான் இந்த வருஷமாச்சு வாழ்க்கையில் முன்னேறும்ன்னு சொன்னாரு. முத நாளே இங்க வந்து ஆட்டம் போட்டா எப்படி முன்னேறுவீங்கன்னு சேம் சைடு கோல் அடிச்ச பிருந்தாவை அடுத்தொருவர் அப்பீட் ஆக்கினார். 25 வயதிலே கோடீஸ்வரன்(என் வயசு 26ங்க) ஆயிட்டேன். அதான் என்ன செய்றதுன்னு தெரியாம இங்க வந்திருக்கேன் என்றார்.  அவரை அந்த இருட்டிலும் என் கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன். அடுத்து என்னிடம் வந்து உங்க ரெசலியூஷன் என்ன என்றார் பிருந்தா. கேமராவைப் பார்த்தபடி 5 மெகா பிக்ஸல்ஸ் என்றேன்.

______________________________________

 ஒரு போட்டிக் கேள்வி: நானும் என் நண்பர்களும் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிக்கு சென்றோம்? முதலில் சரியான பதில் சொல்பவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு.

37 கருத்துக்குத்து:

அன்புடன்-மணிகண்டன் on January 4, 2010 at 12:01 AM said...

ஏழுவோட சேர்த்து ஆறு பேரா?
//கேமராவைப் பார்த்தபடி 5 மெகா பிக்ஸல்ஸ் என்றேன். //
இந்த பதிலோட ஷோ முடிஞ்சிருக்குமே?

பா.ராஜாராம் on January 4, 2010 at 12:03 AM said...

:-))

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்க்கி!

வெற்றி on January 4, 2010 at 12:05 AM said...

//உள்ளே நுழையும்போது 150 ரூபாய் கேட்டார்கள்
உருகிடுமில்ல என்றபடி நகர்ந்தோம் 900 ரூபாயை தொலைத்து.//

அப்போ ஆறு பேரு போயிருக்கீங்க..சரிதானே சகா?

வெற்றி on January 4, 2010 at 12:10 AM said...

//முதல் பாடல் வந்தே மாத்ரம்.

முதல்ல ஆர்கனைசர்ஸ் வந்து இவங்கள மாத்றோம்ன்னு சொல்லுங்கப்பா.//

:):)

செல்வேந்திரன் on January 4, 2010 at 12:13 AM said...

ரசித்து சிரித்து படித்தேன்.

கடைக்குட்டி on January 4, 2010 at 12:18 AM said...

ஹா ஹா.. சிப்பு சிப்பா வருதுங்க..

கலக்குறீங்க :-)

டைமிங் சூப்பருங்க..

முகிலன் on January 4, 2010 at 12:19 AM said...

//சகாக்களும், சகிக்களும் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இது இடைதேர்தல் அல்ல,பொதுதேர்தல் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் :))
//

சரி காசு வேணாம் இலவச கலர் டிவி குடுங்க.

பரிசல்காரன் on January 4, 2010 at 12:39 AM said...

இதே பேனர்தான் நாங்க போன கண்ட்ரி க்ளப்புலயும்...!

:-)

RaGhaV on January 4, 2010 at 1:25 AM said...

:-)))

Jaya on January 4, 2010 at 1:49 AM said...

Nalla Resolution!! :)

Anonymous said...

//ஒருவருக்கு ஒன்று என சின்ன கப் ஒன்று கொடுத்தார்கள். //

இவ்வளவு சின்ன கப்பா!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஏழு + ஐஞ்சு பேர் தான் போயிருக்கீங்களோ

சுசி on January 4, 2010 at 3:49 AM said...

ஏழு வேலைய இப்போ நீங்க பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா கார்க்கி?

ரொம்ப சிரிச்சுட்டேன்.

சுசி on January 4, 2010 at 3:55 AM said...

//வருட முதல் செலவே ஏமாந்ததா இருக்கக்கூடாது என்பதுதான் விஷயம்.//

அப்டியே ஏமாந்தாலும் செலவு நண்பனோடதுதானே.நீங்கதான்

// கொடுத்துட்டு வா என்றேன்.// ன்னு புத்திசாலியா அட்வைஸ் மட்டும் பண்ணி இருக்கீங்களே. சமத்து கார்க்கி நீங்க :))

கார்க்கி on January 4, 2010 at 8:25 AM said...

@மணி,
என்னைப் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சிக்கல பாஸ்!! 150 ரூபாய்க்கு சாப்பிட்ட ஒரே ஆள் நான் தான். அதனால் போனது ஏழு பேர். :)))

@பா.ரா,
வாழ்த்துகள் தலைவரே

@வெற்றி,
மேல வடை ,ச்சே விடை இருக்குப் பாருப்பா

@செல்வா,
நன்றி சகா. நலமா?

@கடைக்குட்டி,
நன்றி. நீங்க இண்டெல்ல வேலை செய்றீங்களா? chip chipனு சொல்றீங்களே. அதான்..

@முகிலன்,
ஹலோ நான் தே.மு.தி.க.வீடு தேடி பதிவு வரும்ன்னு வேணும்ன்னா வாக்குறுதி தறேன் :))

@பரிசல்,
அப்போ அதே 20க்கு 10 மேடைதானா? உஷா உதூப் மேடயேறி பாடுனங்களா? இல்ல கீழே இருந்தேவா சகா?

@ராகவ்,
நன்றி :))

@ஜெயா,
இப்ப இன்னும் நல்லா ரெசலியூஷன் கேமரா வந்துடுச்சுங்க. 5 மெகா பிக்ஸ்லல்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்லையாம் :))

@அம்மிணி,

ஐந்து+அஞ்சு சேர்த்து ஐஞ்சு என்று புது சொல கண்டுபிடித்ததால் உ.வே.சா(உவ்வே இல்லைங்க)போல உங்களை தமிழ்ப்பா..ஆவ்வ்வ்வ்வ்

@சுசி,
அவ்ளோ அறிவு நமக்கேது? எனக்கு மட்டும் அன்னைக்கு நிலநடுக்கம் இருந்ததால் சேஃப்டிக்கு வாலட் அவன் கைல கொடுத்திருந்தேன் :(((

Cable Sankar on January 4, 2010 at 8:38 AM said...

chinna cup suuper

காயத்ரி சித்தார்த் on January 4, 2010 at 9:12 AM said...

சின்ன கப்.. ரசித்தேன். :) புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்க்கி.

மோகன் குமார் on January 4, 2010 at 9:49 AM said...

நல்லா கொண்டாடுரீங்கபா புது வருஷத்த

Rajalakshmi Pakkirisamy on January 4, 2010 at 9:53 AM said...

Happy New Year!!!

நாஞ்சில் பிரதாப் on January 4, 2010 at 9:55 AM said...

சகா... பிருந்தால்லாம் ஒரு பிகருன்னு அதுக்கிட்டப்போய் டகால்டி கொடுத்திருக்கீங்க... ஆரம்பமே மொக்கை பிகரா?

மொத்தம் ஆறுபேர் போய் நொந்துருக்கீங்க? சரியா?

Sangkavi on January 4, 2010 at 10:07 AM said...

வீட்டுக்குப்போகும் போது ஸ்டடியா போனீங்களா......?

Karthik on January 4, 2010 at 10:08 AM said...

ஹாஹா :))

பதில் சொல்ல எனக்கு மேத்ஸ் வராதுனு தெரியும்ல..

பின்னோக்கி on January 4, 2010 at 10:19 AM said...

கண்ட்ரி கிளப் விளம்பரத்துல வர்றவர பார்த்தாலே பயமா இருக்கும்.

ரிசெல்யூசன் அருமை.

Anonymous said...

ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு இம்புட்டு பெரிய திட்டு. பாட்டின்னு கூப்புடுற அளவுக்கு எம்மேல ஏன் காண்டு? கவனிச்சுக்கறேன்.

நர்சிம் on January 4, 2010 at 11:08 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா.

நல்ல நடையில் எழுதி இருக்கீங்க.

சின்ன கப்பை சின்னதாவே போட்டது நல்லா இருந்தது.

கார்க்கி on January 4, 2010 at 11:54 AM said...

நன்றி கேபிள்

நன்றி காயத்ரி. ஹேப்பி நியூ இயர்

மோகன், ஹிஹிஹி

ஹேப்பி நியூ இயர் ராஜலட்சுமி

நாஞ்சில், என்னாது? மொக்கை ஃபிகரா? நானெல்லாம் அதை ஃபிகர் கேட்டகிரில சொல்லலையே!!! நீங்க ஏன் இப்படி இருக்கிங்க சகா??????

சங்கவி, ஸ்டெடி ஆனாத்தானே வீட்டுக்கு போகனும்னே தோணும் பாஸ்!!

கார்த்திக், சரி பிஸிக்ஸ்ல என்ன விடை வரும்ன்னு சொல்லுப்பா

பின்னோக்கி, ம்ம்ம் ஆமாங்க

அம்மிணி, எவ்ளோ நாள்தான் சின்னதாகவே இருப்பிங்க? வளர்ச்சி வேண்டாமா? :))

நர்சிம், நன்றி சகா..:))

ஆதிமூலகிருஷ்ணன் on January 4, 2010 at 12:54 PM said...

செல்வேந்திரன் said...
ரசித்து சிரித்து படித்தேன்.
//

நானும்.!

rajan RADHAMANALAN on January 4, 2010 at 12:55 PM said...

எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்.

தராசு on January 4, 2010 at 2:05 PM said...

நானும்

கல்யாணி சுரேஷ் on January 4, 2010 at 6:28 PM said...

//அடுத்து என்னிடம் வந்து உங்க ரெசலியூஷன் என்ன என்றார் பிருந்தா. கேமராவைப் பார்த்தபடி 5 மெகா பிக்ஸல்ஸ் என்றேன்.//

எப்படிங்க இப்படி?

புத்தாண்டு வாழ்த்துகள்.

நாய்க்குட்டி மனசு on January 4, 2010 at 8:34 PM said...

ஹா! ஹா! ஹா!
ஒருத்தரையும் விடுறதில்லையா?
நடத்துங்க

அன்புடன் அருணா on January 4, 2010 at 9:10 PM said...

புது ரெசலியூஷன்!

தமிழ்ப்பறவை on January 4, 2010 at 9:27 PM said...

தாங்கலை சகா.... ரெசொல்யூசன் சூப்பர்...

அறிவிலி on January 4, 2010 at 9:40 PM said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

கார்க்கி on January 4, 2010 at 11:24 PM said...

நன்றி ஆதி

நன்றி ராஜன்

நன்றி தராசு

வாழ்த்துகள் மேடம்

கிகிகி.. நன்றி நாய்குட்டி

ஆமாம் டீச்சர்

நன்றி பறவை

வாழ்த்துக்ள் அறிவிலி

Karthik on January 5, 2010 at 9:32 AM said...

கார்த்திக், சரி பிஸிக்ஸ்ல என்ன விடை வரும்ன்னு சொல்லுப்பா//

while the position of the particles..err persons decided, it is just impossible to measure the number with any great degree of accuracy.

aavvv!!!

கார்க்கி on January 5, 2010 at 9:37 AM said...

சாரி.கார்த்திக்.. ஆபாச பின்னூட்டங்களை டெலீட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்

taaru on January 5, 2010 at 10:14 AM said...

5MP - பொறுக்க முடியல சாமீ...
வாழ்த்துக்கள்.

 

all rights reserved to www.karkibava.com