Jan 31, 2010

C.S.அமுதனின் பூந்தி

42 கருத்துக்குத்து

 

tamil-padam-08 

    வழக்கமாய் எல்லோரும் நிறைகளை முதலில் சொல்லிவிட்டு குறைகளை சொல்வார்கள். நாம் குறையை சொல்லி ஆரம்பிப்போம். எனக்கு அதுதான் தெரியுமாமே!!

“சத்தியமா இது வித்தியாசமான படம் அல்ல”

    என்னய்யா நினைச்சுக்கிறீங்க? இதைப் போல் ஒரு படம் தமிழில் வந்திருக்கா? எல்லாத் தமிழ்ப்படத்தை வைச்சுதான் இந்த தமிழ்ப்படம் எடுக்கப்பட்டாலும் இது புதுசுதான். இது எல்லாம் வித்தியாசம் இல்லைன்னு நினைக்கிறதாலதான் “போறவங்க வர்றவங்க” எல்லாம் உலகப் படமா எடுக்கிறாங்க.

    கதை, கந்தாயம் எல்லாம் இந்நேரம் தெரிந்துக் கொண்டிருப்பீர்கள். வசனம், வெங்காயம் எல்லாம் படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். அப்ப நான் என்னதான் எழுதப் போறேன்? என் கொண்டாட்ட மனநிலையை. வீட்டில் ஒரு திருமணம் நடந்தால் எப்படி ஃபீல் பண்ணுவோமா கிட்டததட்ட அப்படியொரு சந்தோஷத்தை இரண்டு மணி நேரத்தில் தந்திருக்கிறார்கள். காலத்துக்கும் மறக்க மாட்டோம் பாஸ்.(நீங்க ப்பாஸ் பண்ணிட்டிங்க. அதான் பாஸ்..) இனி குறைகளை பார்ப்போம். குறைகளை மட்டும் பார்ப்போம்.

   ஒவ்வொரு காமெடியும் புன்னகையெல்லாம் இல்லை, ஹாஹாவென விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. மனசாட்சி வேண்டாம்? ஒரு மனுஷன் இவ்வளவுதான் சிரிக்க முடியும் என்று ஒரு கணக்கு வேண்டாமா என வடிவேலு பாணியில் கேட்க வைக்கிறார்கள். பார்வையாளர்களை வதைக்கும் தல, தளபதிகளை கிண்டலடிக்கிறேன் என்று நீங்களும்தான் வதைக்கிறீர்கள். திரும்பும் வழியில் சிக்னலில் தனியே சிரித்துக் கொண்டிருந்த  என்னைக் கண்டு ஒதுங்கியது ஒரு ஃபிகர். படத்தின் முதல் குறை. அளவில்லா காமெடி. ஃபிகர் போனதால் என்னைப் பொறுத்த வரை எக்ஸ்ட்ரா லார்ஜ் குறைதான்.

   இடைவிடாமல் சிரித்துக் கொண்ட எனக்கு பெரும் அதிர்ச்சி தந்தார்கள். என்னால் அந்தக் காட்சியை இப்போது வரை ஜீரணிக்க முடியவில்லை. எடிட்டருக்கு நிச்சயம் கல்மனசுதான். இல்லையெனில் இப்படி செய்ய முடியாது.  இடைவேளையாம். தேவையா அந்த கருமம்? இது குறையில்லையா?

    இந்த மாதிரி படத்தில் தான் லாஜிக் பார்க்க வேண்டுமாமே!! பெரியவங்க சொன்னாங்க.  டூயட் பாட வெளிநாடு சென்று திரும்பும் நாயகனிடம் எங்கடா ரெண்டு நாளா காணோம்ன்னு பாட்டி கேட்க, உண்மையை உரக்க சொல்கிறார். ஊர் எல்லையில் இருந்த அம்மன் சிலை திடிரென எழுந்து ஆட..ஆஹா லாஜிக் மிஸ் ஆகுதே என்று பார்த்தால், அதற்கும் ஒரு காரணம். நம்பும்படி. வில்லனுக்கு D என பேர் எப்படி வைக்கலாம்? டா என்றுதானே வைக்கனும்? அதற்கும் க்ளைமேக்ஸில் சரியான பதில்.  சின்ன சின்ன லாஜிக் கூட மிஸ் ஆகவில்லை. அப்புறம் எப்படித்தான் நாங்க பதிவெழுதுவது? அடுத்த குறை.

      2007ல் டாடாவில் வேலை செய்து கொண்டிருந்தேன். சென்னை, நந்தனத்தில் தான் அலுவலகம். அப்போதுதான் சென்னை-28 கலக்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் வேகமாய் வெளிவந்து ரோட்டை கடந்தவன், ஒருவரைப் பார்த்து நம்ம உலகநாயகன் நாயகியை பார்த்து பேக் அடிப்பது போல் அடித்தேன். என்னை முந்திக் கொண்டு அவர் ஹாய் சொன்னார். அவர் ஷிவா. சில நிமிடங்கள் பேசினோம். அதே மாதிரிதான் படம் முழுக்க பேசியிருக்கிறார். சின்ன வித்தியாசம் கூட இல்லை. நடிப்பு என்றால் இப்படியா? சுத்தமாக  பிடிக்கவில்லை ஷிவா. வசனம் முடியும்போது கண்கள் மூடி தலை சாய்க்கும் மேனரிசம் சகிக்கலை. அதே போல் “செம” என்ற வார்த்தையின் மாடுலேஷன். சுத்தமாக பிடிக்கவில்லை.ஷிவா. இன்னொரு குறை.

    இசை. ஏற்கனவே பாடல்கள் பற்றி எழுதிவிட்டேன். இருந்தாலும். ஹரிஹரனுக்கு தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை. எப்படித்தான் லாலாக்கு..லாலாக்கு டோல் டப்பிமாவை சிரிக்காமல் பாட முடிந்தது? அதற்கு ஷிவாவின் ரியாக்‌ஷன். ங்கொய்யால. அலறுகிறது தியேட்டர். அழகான ஒரு மெலடியை இதைவிட அதிகமாக டேமேஜ் செய்ய முடியாது. இந்தப் பாவத்திற்கு எமதர்மன் உங்களுக்கு “சினிமாப்பட்டி சிங்கம் வாடா. சிரிசிரிக்க வைச்சு போடா” என்ற தண்டனைதான் தரப்போகிறார். அதே போல் ஒரு சூறாவளி கிளம்பியதே பாடல். காஃபி ஆறினால் என்ன? வில்லனுக்குத்தானே? அதற்காக பாட்டை ரெண்டே நிமிடத்தில் முடிப்பதா? மூளை இல்ல? மோசக்காரங்களா. குறையோ குறை இது.

    வசனம். கெட்ட வார்த்தைதான் வருது.எனக்கு. வசனகர்த்தாவுக்கு இல்ல.  அந்த ஷிவாவைப் பார்த்தாலே சிரிப்பு வருது. இதுல வசனத்த வேற இப்படி எழுதி கொடுத்தா? பணத்தை விட மனுஷங்கதான் முக்கியம் என்று சொல்வதற்கு முகேஷை விட சரியா உதாரணம் தர முடியுமா? அதே போல் மணிரத்னம் டைப் வசனம். பாஸ்.உண்மைய சொல்லுங்க. படம் முடிந்த பின் வரும் அந்த வாக்கிங் மேட்டர், நீங்க எழுதி தந்ததுதானே? செம மொக்கை. படத்தின் இன்னொரு பெரிய குறை.

      இப்படி அடுக்கிக் கொண்டே போகிறேனே. நல்ல விஷயமே இல்லையா என்று கேட்கறீங்களா? படத்தின் கடைசி சில சீன்கள் நல்லா இருக்கு. இவ்ளோ மொக்கையான படத்தை 2 மணி நேரத்தில் முடிச்சது நல்லா இருக்கு. தலைப்பு பூந்தி என வைத்ததற்கு காரணம் உண்டு. அய்யய்யோ அது இல்லைங்க. உதிரியாக காமெடி சூப்பர் என்றாலும் முழுப்படமாக இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். இருந்திருந்தால் அமுதனின் லட்டு என்று தலைப்பு வைத்திருப்பேன்.

     ஒட்டு மொத்த யூனிட்டுக்கும் ஒரு பெரிய நன்றி. நீங்கள் சேர்த்திருக்கும் புண்ணியத்தை இனி தொடர்ந்து வரப் போகும் ஸ்பூஃப் படங்களும், கதையே கேட்காமல் ஷிவா நடிக்கப் போகும் படங்களோ வந்து தீர்த்துக் கட்டட்டும். நீங்கள் தீர்க்கமாக இதே போல் ஆராவாரமான இன்னொரு படத்திற்கு தயாராகுங்கள்.

தமிழ்ப்படம் : தங்கமான படம்.

Jan 28, 2010

என் இனிய பொன் நிலாவே

68 கருத்துக்குத்து

 

ஏதாவது புது மாதிரி பதிவு போடனும்னு யோசிச்சப்ப தோன்றிய ஐடியா.

விளையாட்டாக ரெக்கார்ட் பண்ணது.  விஷயம் கேள்விப்பட்டு உடனே ஓடி வந்து கும்மும் குசும்பன்கள் ஜாக்கிரதை :)))

அவ்ளோ சரியா இல்லையே சகா என்பவர்களுக்கு, இந்தப் பாட்டில் D Sharp நோட்ஸ் தான் நிறைய. நாமதான் மொக்கையாச்சே. எங்க இருந்து ஷார்ப் வாசிக்கிறது?

அலுவலகத்தில் வீடியோ திறக்காத நண்பர்கள் iamkarki@gmail.com க்கு மெயில் அனுப்பினால் ஆயுதம் இன்பாக்ஸூக்கு அனுப்பப்படும். என்ன இருக்கு பதிவில் என்றே தெரியாத அன்பர்களுக்கு, என் இனிய பொன் நிலாவே ஆரம்ப கிட்டார் பிட்டை நான் வாசிச்சு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியமான குறிப்பு. நல்லா இருக்குன்னு சொல்லிட்டிங்கன்னா இதோட போச்சு. இல்லைன்னா நல்லா இருக்குன்னு சொல்ற வரைக்கும் கஜினிதான். சொல்லிட்டேன்

Jan 27, 2010

மன்னரின் புது சட்டம்

32 கருத்துக்குத்து

 

முந்தைய அத்தியாயங்கள் படிக்க

டமடமடமடம.

நம் தண்டோரா மக்களுக்கு சொல்ல வந்த விஷயத்தை சொல்லும் முன் நாம் தண்டோராவைப் பற்றி பார்த்துவிடுவோம். எப்போதும் தகவலுக்கு முன் தனது முத்திரைப் பாடல் ஒன்றைப் பாடிவிட்டு செய்தி சொல்லத் தொடங்குவது தண்டோராவுக்குப் பிடித்தமான செயல். பிற்காலத்தில் ஏ.ஆர்.ரகுமானின் முதல் இந்திப்படமான ரங்கீலாவில் வந்த யாய்ரே பாடலின் மெட்டு  தண்டோராவின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

தண்டோரா.. தண்டோரா தகவல் சொல்ல வந்தாரா..

தண்டோரா தண்டோரா. தாளத்தோடு சொன்னாரா

என்று பாடி முடிக்க மக்கள் கை தட்டி இன்னொரு தபா என்று கேட்பது கண்டு புளங்காங்கிதமடைந்த தண்டோரா சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கிக் கொண்டு அந்த நேரத்தில் பாடுவோமென பாடினார். மக்கள் அனைவரும் தத்தமது மனைவிகள் பதுக்கி வைத்திருக்கும் தேவைக்கதிகமான தங்கத்தையும், ஆபரணங்களையும் உடனடியாக அரசிடம் சேர்க்க வேண்டுமென்று சொல்ல வந்த தண்டோரா, மக்கள் அனைவரும் தேவைக்கதிகமாக வைத்திருக்கும் மனைவிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உளறிக் கொண்டே பாடத் தொடங்கினார்

தண்டோரா தண்டோரா தப்புகளின்றி சொன்னாரா.

புது மன்னரை நன்கு அறிந்த குடிமக்கள் எதற்கு வம்பு என்று தத்தமது லார்ஜ் வீட்டைத் தவிர கட்டிங், ஸ்மால்,மீடியம் என  அனைவரையும் அந்தப்புரத்தில் சேர்த்தனர்.

மறுநாள் தர்பார் கூடியது

அழுகுணி: மன்னா!! அளவுக்கு அதிகமாக இருப்பு வைத்திருப்பபவரிடம் இருந்து அதைக் கைப்பற்றி அரசுக்கு சொந்தமாக்க நீங்களிட்ட உத்தரவு பல சச்சரவுகளை உண்டாக்கியிருக்கிறது.

மன்னர் : அருமை. கஜானா நிரம்பிவிட்டதா? என்னவாம் அந்த கொழுத்த பன்றிகளுக்கு? வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள்?

அழுகுணி: பிரச்சினை அதுவல்ல மன்னா.கஜானா நிரம்பவில்லை. நிரம்பியது நம் அந்தப்புரம்தான்.

மன்னர்: என்ன உளறுகிறீர்கள் அமைச்சரே

அழுகுணி: ஆம் மன்னா. பொருள் இல்லாவிடினும் நம் குடிமக்கள் ஆளுக்கு குறைந்தது இரண்டு வைப்பாட்டி வைத்திருக்கிறார்கள். அதுவும் தேவைக்கதிகம்தானே என்று ஒப்படைத்துவிட்டார்கள்.

மன்னர்: அழுகுணி. என்ன சொல்கிறாய்? நம் மக்கள் ”நற்குடி” இல்லையா?

அழுகுணி: ஆம் மன்னா. வெகு சிலரே ஒழுக்கசீலராக இருக்கிறார்கள். என்னைப் போல.

(மற்ற மந்திரிகளை முறைக்கிறார். )

முந்திரிக்கொட்டை முத்தையாவை இனி மு.மு என்போம்.

மு.மு: அவசரம் வேண்டாம் வேந்தே. அழுகுணி மனைவியும் அந்தப்புரத்தில்தான் இருக்கிறார்.

மன்னர்: மனைவியை எதற்கு கைப்பற்றினீர்கள்? தேவைக்கதிகமாக இருந்தால்தானே கைப்பற்ற வேண்டும்?

மு.மு: இவனுக்கெல்லாம். மன்னிக்க அரசே.. இவருக்கெல்லாம் ஒன்றே அதிகம் என்று அவராகத்தான் அந்தப்புரத்திற்கு வந்துவிட்டார் அரசே.

அழுகுணி அழுது கொண்டே அந்தப்புரத்திற்கு ஓட, ஒற்றன் ஒருவன் ஓலையோடு ஓடி வருகிறான். அண்டை நாட்டு மன்னன் மொக்கைவர்மனின் சாதூர்ய திட்டங்கள் கேட்டு ஆச்சரியப்பட்டு அனுப்பிய பாராட்டு ஓலை அது.

படித்துக் காட்டுகிறான்.

“பார்” போற்றும் மொக்கைவர்ம பல்லவனுக்கு,

சித்திரையில் மட்டும்  தான் வெக்கை வரும்-ஆனால்

சிந்திக்கும்போதெல்லாம் மொக்கை வருவது உமக்கு மட்டும்தான்.

போட்டியிட்டு வரும் அரசர்களை மட்டுமல்ல

பாட்டிகளை கூட புறமுதுகிட்டு ஓட வைத்த வீரன் நீ”

அப்படியாக நீண்டது அந்த ஓலை. எட்டு ஓலைகள் இருக்கிறதே என்று கட்டுக்கடங்காத வெறியில் இருந்த ஒற்றன் அதைக் கவிதையாகப் படிக்காமல் கையேந்திபவனில் ரெண்டு இட்லி ஒரு வடை என சொல்வது போல் படித்துச் சென்றதை மன்னனைத் தவிர யாரும் ரசிக்க முடியாமல்  லேசாக கண்மூடிய நேரம் மன்னருக்கு  இதெல்லாம் கனவா என சந்தேகம் எழ தன் கையென எண்ணி அருகில் சாமரம் வீசிக் கொண்டிருந்த கனிமரத்தைக் கிள்ளிவிட, வலி தாங்காமல் அந்த மரம் மன்னர் என்று கூடப் பார்க்காமல் “ சனியனே.. அதான் அந்தப்புரம் ரொம்பிடுச்சு இல்ல. அங்க போய் வீரத்தைக் காட்டாமல் என்னை புண்ணாக்கிறயே புண்ணாக்கு” என்று வசைபாடியதை கண்ணயர்ந்தவர்களோ இன்னமும் தோசை,பொங்கல் என ஆர்டர் செய்து கொண்டிருந்த ஒற்றனோ கவனித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அரசியிடம் திட்டு வாங்கும்போதெல்லாம் தன் முன்னோர்கள் செய்யும் அதே நற்காரியமாக மன்னர் ஹாஹாவென சிரிக்க, அலாரம் அடித்தது போல் அவை முழுவதும் முழித்துக் கொள்ள முந்திரிக்கொட்டை மட்டும் வாயில் ஒழுகிய எச்சிலை விழுங்கியபடி மன்னா என்று எழுந்து நிற்க, ஆனியன் ரவாவில் ஆர்டரை நிறுத்தினான் ஒற்றன்.

ஒற்றன்:  மன்னா.. தங்களின் புகழ் உலக அளவில் பிரபலமாகிவிட்டது. உலகின் எல்லா மூலைகளிலும் தங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மன்னர்: உண்மையாகவா?

மு.மு: வேந்தே. உலகம்தான் உருண்டையாக இருக்கிறதே. அதற்கேது மூலை?தங்களுக்கு யாரும் ரசிகர்கள் கிடையாது என்பதை அருமையாக பகடி செய்கிறான் இந்த ஒற்றன்

மன்னர்: முந்திரிக்கொட்டை மந்திரி. நம் கதை நடப்பது கி.பி1200.. அப்போ எங்கே கலிலியோ இருந்தார்?அவர் 1564ல் தானே பிறந்தார்? வாசகர்கள் லாஜிக் கேட்க மாட்டார்களா?

மு.மு: இல்லை மன்னா.. நல்ல படங்களுக்கே இப்போதெல்லாம்  லாஜிக் பார்க்க வேண்டாமென அமைச்சர் அனானஸ் சொல்லியிருக்கிறார். நமது மொக்கை தர்பார்தானே. கண்டு கொள்ள மாடடர்கள்

மன்னர்: அனானஸே சொல்லியிருக்கிறாரா! அப்படியென்றால் சரி.

இந்த இடத்தில் அனானஸைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆனால் அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

மொக்குவோம்.

Jan 24, 2010

கார்க்கியின் காக்டெய்ல்

59 கருத்துக்குத்து

 

 

   குட்டி பார்த்தேன். தனுஷுக்கு நன்றாக நடிக்க வருகிறது. ஆனால் good looking என்று சொல்ல முடியவில்லை. இளமை கொப்பளித்தாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே ஒரு ஃபீல். ஜெயம்ராஜாவும், ரவியும் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றாலும் பல காட்சிகளில் தனுஷ் இடத்தில் ரவியை நினைத்தாலே பயமாக இருக்கிறது. குறிப்பாக கடைசியில் தனுஷ் கண்கலங்கும் காட்சி. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இன்னமும் எனக்கு தனுஷும், ஜீவாவும்தான் இருக்கிறார்கள். தெலுங்கில் இருந்த தெளிவான திரைக்கதை இதில் மிஸ்ஸிங். மூவரும் ஊர் மாறிப் போகும் போது பல சீன்கள் மிஸ் ஆவது போல் தெரிகிறது. ஆனாலும் Neat family entertainer. பாடல்கள் மட்டும் சொதப்பல். குட்டி. இன்னும் கொஞ்சம் பெருசாக இருந்திருக்கலாம்.

_____________________________________________________________________________________

   போராட்டம் நடத்துவது சரிதான். ஆனால் எதெதுக்கு நடத்தறாங்க தெரியுமா? கோபாலபுரத்தில் கலைஞரின் வீட்டுக்கு செல்லும் சாலையில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டப்பட்டிருந்தது.

“தமிழக அரசு அவர்களே,

பாட்டில்லுக்கு இரண்டு முதல் நான்கு ரூபாய் வரை அதிகம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு”

தமிழக அரசு என்று அவர்கள் யாரை சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. முதலமைச்சர் தினமும் செல்லும் சாலை. கண்களில் பட்டிருக்குமோ?

_____________________________________________________________________________________

பப்லு பற்றி எழுதுவதில்லையே என சிலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். அவர்களுக்காக.

   விடுமுறைக்காக யு.எஸ் சென்ற இடத்தில் அக்காவின் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள், அங்கே ஒரு அங்கிள்(அவனுக்கு) ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த பப்லு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே “எங்க கார்க்கி மாமாவுக்கே இன்னும் ஆகல”.

_____________________________________________________________________________________

ஆர்யா 2வில் மகா ஹிட்டடித்தப் பாடல் ரிங்கா ரிங்கா. தேவிஸ்ரீயின் இளமை இசைக்கு ஆந்திரா மட்டுமல்ல தமிழகத்திலும் பலர் ஆடினர். அந்தப் பாடலை தமிழில் விஜய் ஆடினால் நன்றாக இருக்குமென பதிவு போட்டிருந்தார் சங்கமம் இளா. சமீபத்தில் ஒரு இணையத்தளத்தில் பார்த்த செய்தி “சுறாவில் ரிங்க ரிங்கா குத்து”. இது உண்மையென்றால் எனக்கு என்னவோ இளாவின் பதிவைப் பார்த்து யாராவது தந்த ஐடியாவாக இருக்குமோ என்று ஒரு எண்ணம்.எப்படியோ நன்றி இளா. பாட்டைப் பார்க்காதவங்க இங்க பாருங்க. 

டாக்டர் விஜய் என்பதை போதும் போதுமெனும் அளவுக்கு கிண்டல் அடிச்சாச்சு.இனி பத்மஸ்ரீக்கு தயாராகிக்கோங்க. நிஜமாத்தாங்க. இந்த வருடம் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பட்ட லிஸ்ட்டில்(20பேர்) தளபதியின் பெயரும் இருக்கிறதாம். 7 பேர் வரைக்கும் விருது கிடைக்க வாய்ப்பிருப்பதால் அனேகமாக கிடைத்துவிடுமென்கிறது தளபதி வட்டாரம். பாவம் விஜய். இதற்காகவும் பதிவர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளப் போகிறார்

_____________________________________________________________________________________

சில நாட்களுக்கு முன் ”யானை முன்னே. மனியோசைப் பின்னே” என்றொரு பதிவு போட்டிருந்தேன். தலைப்பு ஏன் இப்படின்னு ராஜூ மட்டும்தான் கேட்டிருந்தார். இன்னும் சிலர் மெயிலில் தலைப்புக்கான காரணத்தை கேட்டிருந்தார்கள். யாருமே பதில் சொல்லவில்லை.மேட்டர் என்னவென்றால் முதல் பத்தியில் யார் பெயர் இருக்கிறதோ அவர்தான் அடுத்த பத்திக்கான நாயகன். உதாரணம்.முதல் பத்தியில் விஷயம் வேறொருவரைப் பற்றி என்றாலும் நர்சிம்மின் பெயர் இருக்கும். அடுத்த மேட்டரின் நாயகன் நர்சிம்.நர்சிம் பற்றிய மேட்டரில் கென்னின் பெயர் இருக்கும். மூன்றாம் பத்தி அவரைப் பற்றி.  புதுசா ஏதாவது படமெடுத்தா மட்டும் கண்ண மூடிக்கிட்டு ஆதரிங்க. பதிவுல செஞ்சா கண்டுக்க மாட்டிங்களே :)))))

_____________________________________________________________________________________

குறும்பன் என்றொரு பதிவரின் பின்னூட்டத்தில் நடந்த விஷயம் இது. ஜனனி என்பவர் hahahahaha என்று கமெண்ட்ட, குறும்பன் thanks for the Palindrome comment என்று பதில் போட்டார். பாலிண்ட்ரோம் என்பதை தமிழில் மாலை மாற்று என்று சொல்வார்கள். நான் உடனே “விகடகவி” அய்யா நீர் என்று பின்னூட்டம் இட்டேன். அவர் உடனே “கார்க்கி நீங்க வந்ததுக்கு மேளதாளமே வாசிக்கலாம்” என்று பதிலிட்டார்.

நான் உடனே “தேருவருதே என்றால் வாசிக்கலாம். எனக்கு எதுக்கு பாஸ்” என்றேன்

“மறுபடியும் கார்க்கி.இது என்ன மாயமா” என்று பதில் தந்தார்.

இது என்னடா வம்பா போச்சுன்னு நான் அடுத்த பின்னூட்டம் போட்டேன்

சகா நீங்க சென்னையா?
மாலா போலாமா” ???
மாலா என்பது ஒரு நலல் தீம் ரெஸ்ட்டாரண்ட் என்பதை அறிக ”

அதோடு விட்டுவார்ன்னு பார்த்தா அவர் பதிலுக்கு ”அங்க மோரு தருமோ”ன்னு போட்டார்.

அதுக்கு மேல் என்னிடம் சரக்கு இல்லாததால் தற்காலிக ஃபுல்ஸ்டாப் வச்சிருக்கோம். வேறு ஏதாவது வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.

Jan 23, 2010

மாடியில் வளரும் காதல்

34 கருத்துக்குத்து

2136410242_e08720b6c4

உலர்ந்த ஆடைகளை
எடுக்க வந்தவள்
ஆடைகளோடு என்
மனதையும்
மடித்து
பத்திரப்படுத்தி போனாள்.உலரப்பட்ட ஆடைகளில்
நீல நிற சட்டை மட்டும்
என்னுடன் பேசியது.
அன்று பெருத்து இருந்தாயே!!
ஏன் இளைத்தாய் என்றேன்.
அந்த ரகசியம் என்னுடையதல்ல
என்று
வெட்கி நாணி கூனி
ஓடிவிட்டது
அவளைப் போலவே.

________________________________

வானில் மேய்ந்த சூரியன்
மாடியில் மேய்ந்த நிலவிடம் கேட்டது
உன்னிடம் இருந்து
ஒளி வாங்கும்படி
சாபமிட்டது யாரோ?
பாவம்.
வரத்திற்கும் சாபத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவன்

________________________________


ஏய். இந்தப் பாட்டைக் கேளேன்
என்று ஐபோடிலிருந்து நீளும்
இயர்ஃபோனை
உன் காதில் மாட்டினேன்
நல்லா இருக்குடா என்று
நீ தந்த பின் இன்னொருமுறைக் கேட்டேன்
பாடலில் முன்பில்லாத ஓசைகள் கேட்டது.

________________________________


ஏன் நேற்று மாடிக்கு வரவில்லை
என கோவப்படாதே .
உன்னை எப்போதும்
பார்த்துக் கொண்டேயிருக்க
விரும்புவதில்லை நான்
ஆயிரம் ஆண்டு வாழ்ந்து
என்ன செய்யப் போகிறேன்?

Jan 21, 2010

குடியரசு தினமும் மறைந்த என் ஒளிவட்டமும்

42 கருத்துக்குத்து

 

  நேற்றிரவு நடந்த காமெடி இது.பப்லுவின் தமிழாசிரியை குடியரசு தின விழாவைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வர சொல்லியிருந்தார்கள் .  பிளாகுல எல்லாம் எழுதறியே. அதான் மிஸ்கிட்ட எங்க மாமா நல்லா எழுதுவாருன்னு சொன்னேன். எழுதிக் கொடு என்றான் நானும் வெகு ஜோராக ஆரம்பித்தேன் ”இந்தியா 1950 ,ஜனவரி 26ஆம் தேதி குடியரசானது” அப்புறம்? எவ்ளோ யோசிச்சும் அடுத்த வரி வரவில்லை. என்னடா என்பது போல் பார்த்தான் பப்லு.  இருடா செல்லம் என  அலைபேசி சித்தருக்கு அலைபேசினேன். அந்த உரையாடல்

ஹலோ

சொல்லு சகா. ஆயிரத்..

இருங்க. இது வேற மேட்டர் (மேட்டர் விளக்கப்படுகிறது)

இவ்ளோதானா? எழுதிக்கோ சகா “இன்றோடு இந்தியா குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகின்றன”. ………….

அப்புறம் சகா…

அப்புறம் என்ன சகா? வீட்டுல எல்லாம் செளக்கியமா?

யோவ். குடியரசு தினம் பற்றி…

இரு சகா. என் நண்பர் ஒருத்தர்.. நல்லா சொல்லுவார் (கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்)

ஹலோ செளந்தர். நான் $%^& பேசறேன். குடியரசு தினத்தைப் பத்தி ஒரு அஞ்சு லைன் வேணும். கார்க்கி தெரியும்ல? லைன்லதான் இருக்காரு

அப்படியா? நல்லா இருக்கிங்களா சகா?

ஆங். இருக்கேன். சொல்ல்லுங்க எழுதிக்கிறேன்

இப்பவேவா? நாளைக்கு சொல்லவா?

டொக்.

நான் என்ன ஆனந்த விகடனில் போடவா கேட்டேன்? மீண்டும் நானும் அலைபேசி சித்தரும் தொடர்ந்தோம். இரு சகா கூகிளில் தேடலாமென்றார். சரியென்றேன்

குடியரசு தினத்தைப் பற்றி…(கூகிளாண்டவர் கருணை காட்டுகிறார்)

சகா சொல்றேன் எழுதிக்கோ

இருங்க. பேனா எடுக்கிறேன்.ம்ம்

“தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது”  இந்த மேட்டர் சேர்த்து அஞ்சு வரி எழுதலாமே சகா.

(எழுதும்போதே பப்லுவின் பால் கலர், சிவப்பாக மாறியதை நான் கவனிக்கவில்லை )

ஆமாம். போதும். ரொம்ப டேங்க்ஸூங்க

அட இதுல என்ன. சரி. நாளைக்கு என்ன போஸ்ட்.

இனிமேல்தான் யோசிக்கனும்.

டொக்.

வைத்த பின் தான் படித்துப் பார்த்தேன், பிரக்ஞை என்பது போன்ற வார்த்தைகள் குறித்த பிரக்ஞை எனக்கே இல்லாத பப்லு என்ன செய்வான்? அந்த பேப்பரைக் காட்டு என்றான். இல்லடா நான் வேற எழுதறேன்னு அடுத்த கால் போட்டேன் சிரிப்பு பதிவருக்கு. அவர் பி.ஏ ஹிஸ்டரி.

சொல்லு தோஸ்த்

(மேட்டர் இவருக்கும் விளக்கப்படுகிறது)

இதெல்லாம் என்னை கேட்கனும். %^&* க்கு என்ன தெரியும்? நான் ஹிஸ்டரி ஸ்டூடண்ட் தெரியுமில்ல?

நீ ஸ்டூண்டட்டா இருந்த ஹிஸ்டரி எனக்குத் தெரியும். ஆனா.

டேய். பப்லுக்காக சொல்றேன்.1947ல சுதந்திரம் வாங்கினோமா?அப்புறமா அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் இயற்ற ஒரு குழு அமைச்சாங்க. அந்த குழு இப்ப இருக்கிற குழு மாதிரி பஜ்ஜி போண்டா சாப்பிடமா ரெண்டு வருஷத்தில ரெடி பண்ணிட்டாங்க. அந்த நாள் தான் குடியசுதினம்.

இதுவா பப்லுவுக்கு சொன்னது? எப்படி தோஸ்த் அஞ்சு வரில?

அது உன் வேலை. எனக்கு வேற வேலை இருக்கு

டொக்.

மீண்டும் பப்லு. மீண்டும் சிவப்பு. மீண்டும் ஃபோன் எடுக்க போனவனைத் தடுத்தான். நீ ஆணியே புடுங்க வேணாம், நான் பார்த்துக்கிறேன். நீ போய் பிளாகுல மொக்கைப் போடு என்றான். என் பின்னால் சுற்றி வந்த ஒளிவட்டம் மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. பப்லுவிடம் இரண்டு அடி, ஒரு குத்துவுடன் ஒரு நாள் டைமும் வாங்கியிருக்கிறேன்.

 

Jan 20, 2010

ஆயிரத்தில் ஒருவன் – விலக்கத்திற்கான விளக்கம்

67 கருத்துக்குத்து

 

   ஆயிரத்தில் ஒருவன். செல்வாவின் கனவின் மீது பெரும் மதிப்பும், இந்தப் படத்தையெல்லாம் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணமும்தான் முதல் நாள் இரவு 12 மணி என்ற போதும், டிக்கெட் விலை 220 என்ற போது பார்த்தே ஆக வேண்டுமென்று தூண்டியது. இது போன்ற படங்களை ஆதரிப்பது என்பது திரையரங்கில் சென்று பார்ப்பது என்பதுதான். அதை நான் செய்தேன். அதன் பின் படத்தைப் பற்றிய என் பார்வை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதில் யாரும் தலையிட முடியாது. இது எல்லோருக்கும் பொருந்தும்.

     படம் எனக்குப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட ஒரு விதமான மனநிலைக்குத் தள்ளப்பட்டேன். அதை அப்படியே பதிவு செய்ததன் விளைவுதான் இது. இருந்தாலும் அதை அன்றே பதிவேற்றாமல் மறுநாள் இரவுதான் செய்தேன். ஏராளமான கேள்விகள். அதில் 25% கேள்விகளுக்குத்தான்  பதில் கேட்டிருந்தேன். எதிர்பதிவுகளும், கருத்துகளும் வருமென்று தெரியும்தான். ஆனால் அது என் கேள்விகளுக்கு விடையும் படத்தைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் தருமென்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. விஜய் மீதான என் அபிமானத்தை முன் வைத்து சிலர் பின்னூட்டம் இடக்கூடுமென்றும் எதிர்பார்த்தேன். ஆனால் கிட்டத்தட்ட அனைவருமே அந்த ஆயுதத்தை கையிலெடுத்தது அதிர்ச்சிதான். அந்த ஆயுத்தத்தை மட்டுமே கையிலெடுத்தவர்கள் ஏராளம். இதில் எனக்கு எந்த வருத்தமமுமில்லை. யாரிடம் என்ன எதிர்ப்பார்க்கலாம் எனன்று எனக்கு தெரிந்திருக்கிறது. போதுமான வலுவான காரணம் இல்லாத போது இப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டுவது மனித இயல்புதான். வேட்டைக்காரன் என்னை திருப்திபடுத்தாத போது அதன் வசூல் என்னும் முகமூடிக்குப் பின்னால் நான் ஒளிந்துக் கொண்டதைப் போல.இவர்களுக்கு வித்தியாசம் என்னும் முகமூடி.

     ஆயிரத்தில் ஒருவனை நான் ஏற்றுக் கொள்ள ஏதோ ஈகோ தடுப்பதாக லக்கி சொல்கிறார்.  அவர் இந்த அனுமானத்திற்கு வரத் தூண்டியது எதுவென்று தெரியவில்லை. எனக்கும் அந்த டீமிற்கும் என்ன பிரச்சினை? ஒரு வேளை அது அஜித் நடித்த படமென்றால் கூட அந்த முடிவுக்கு வருவதில் நியாயம் உண்டு. அண்ணாச்சி ஒரு படி மேலே சென்று, அதற்கு ஒரு உதாரணம் எல்லாம் தந்தார். மெல்ல எழுந்து நடந்து வரும் குழந்தையை கேலி செய்கிறோமென்று. எல்லோரின் பதிலையும் ஒன்று சேர்த்த போது எனக்கு கீழ்கண்டவை மட்டுமே புரிந்தது

1) வழக்கமான சினிமாவில் இருந்து வித்தியாசம்.

2) மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார்கள்

3) புதிவிதமாக யோசித்திருக்கிறார்கள்

4) கடுமையாக உழைத்திருக்கிறார்கள்

       யாருமே கும்க்கியோ, நானோ கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சி செய்யவில்லை. மாறாக தமிழ் சினிமாவில் லாஜிக் பார்க்க எப்போது ஆரம்பித்தீர்கள் என்று பதில் கேள்வி கேட்டதன்  மூலம் அவர்களாகவே அது இன்னொரு தமிழ்சினிமா என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். இன்னொரு பதிவர் நாங்கள் எல்லாம் பீத்தப் பதிவர் என்று சொல்லிவிட்டார். மிக்க நன்றி.

     இன்னொருவர். இதில் ஈழத்தின் வலி பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். நேற்று செல்வா பிரஸ் மீட்டில் சொல்லியிருக்கிறார், இந்தக் காட்சிகள் அதெல்லாம் நடப்பதற்கு முன்பே ஷூட் செய்யப்பட்டதாம். அப்படியெனில் கடந்த ஒரு வருடமாகத்தான் ஈழத்தில் அந்தக் கொடுமைகள் நடப்பதாக சொல்கிறார் செல்வா. ஈழம் பற்றி அவருக்குத் தெரிந்ததை அவரே ஒப்புக் கொண்டுவிட்டார். அவர் வலிகளை பதிவு செய்கிறாராம். அதற்கு ஆதரவு வேண்டுமாம்.

     நம் ரசனைக்கு மாறாக யாராவது சொல்லிவிட்டால், அது அவர் கருத்து என்று சொல்லக் கூடிய பக்குவம் எத்தனைப் பேருக்கு இருக்கிறது? நம் ரசனைதான் உயர்ந்தது என்ற மனோபாவத்திலே வாழும் இவர்கள் சொல்கிறார்கள், எங்கள் மேதமையைக் காட்டுவதற்காகவே படம் பார்த்து விமர்சிக்கிறோமென்று. அறிவுஜீவிகளே, படம் பார்த்து எங்களுக்கு புரியவில்லை என்று எங்கள் அறியாமையைத்தான் சொல்கிறோம். புரிந்துக் கொண்ட மேதைகள்தானே எங்களுக்கு விளக்க வேண்டும்? அதை விட்டு படத்தைப் போலவே பூடகமாக பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?

     பதிவின் முக்கியமான இடம் இதுதான். நீங்கள் தெலுங்கில் சமீபத்தில் ஹிட்டடித்த மகதீரா படம் பார்த்தீர்களா? பாருங்கள். கிட்டத்தட்ட இதே பட்ஜெட். இல்லை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் மூன்று வருடங்கள் ஆகவில்லை. படத்தின் திரைக்கதையில் லாஜிக் ஓட்டைகள் அதிகம் இல்லை. கிராஃபிக்சில் பல் இளிக்கவில்லை. அதுவும் ராஜா காலத்து கதைதான். அந்தப் படத்தில் வரும் அந்த அரச காட்சிகளில் ஏதாவது ஒரு காட்சி ஆயிரத்தில் ஒருவனை விட குறைவு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? நான் ஆயிரத்தில் ஒருவனை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடவில்லை. மகதீராவோடு ஒப்பிடுகிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதிலும் ஆ.ஒ.ப்போல ஒரு சண்டை காட்சி உண்டு. அதெல்லாம் ஆயிரத்தில் ஒருவனை விட ஆயிரம் மடங்கு சிறப்பாக எடுக்கப்பட்டது.மேலே சொன்ன நான்கு காரணங்களிலும் ஆ.ஒனை விட மகதீரா பல மடங்கு சிறப்பானது.

  இட்லி வடை சாப்பிட்டு போரடிக்கிறது என்றால் என்றாவது ஒரு நாள் மெனக்கெட்டு பணியாரம் செய்து சாப்பிடலாம். ஆனால் வித்தியாசம் என்பதற்காக, யாராலும் முடியாது என்பதற்காக ட்யூப்லைட்டை சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது காலம் கடந்து நிற்கும் படமென்று நீங்கள் சொல்கிறீர்கள். இல்லையென்கிறேன் நான். வரலாற்றை நானோ, நீங்களோ மட்டும் எழுதி விட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்ப்போம்.

Jan 19, 2010

புதிய மன்னர் பராக் பராக்

32 கருத்துக்குத்து

 

நம் கதைக்கு முன்கதை சுருக்கம் எல்லாம் தேவைப்படாதென்று முன்னரே சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் சொல்ல முயற்சி செய்கிறேன்.  இருபத்தி ஏழரையாம் நக்கல்வர்மன் - பல்லவராஜா-72வயது- வாரிசு – முதலாம் மொக்கைவர்மன். இதான் சார் மேட்டர். இனிமேல் முன்கதையெல்லாம் கேட்காதீர்கள். பின்னால் வரப்போகும் 12 அத்தியாயங்களுக்கும் கதை என்று பெரிதாய் எதுவும் என் கைவசம் இல்லாதபோது முன்கதை எழுத என் கை கூசுகிறது. இனி இந்த அத்தியாயத்திற்குள் நுழைவோம்.

     மாமன்னர் தனக்கு வயதான காரணத்தால் 16 வயதே நிரம்பிய மொக்கைவர்மனை மன்னராக ஆக்குவதென்று முடிவு செய்கிறார். அழுகுணி சிம்மனின் தலைமையில் ஒரு சாரார் இதை பலமாக ஆதரிக்க, படைத்தளபதி சொங்கி சொக்கன் தலைமையில் சிலர் வேண்டாமென்று தத்தம் இருக்கையைத் தட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.  88 வயதான மன்னர் ”அமைதி அமைதி” என்று மிக அமைதியாக சொன்னதை சட்டை மட்டுமல்ல யாரும் டிராயர் கூட செய்யவில்லை. இறுதியாக இரு சாராரும் இது குறித்து விவாதித்து முடிவெடுக்க ஒப்புக் கொண்டனர்.

முதலில் அழுகுணி ஆரம்பித்தார். “இளவரசர் கத்திச்சண்டையில் தேர்ந்தவர். எந்த ஒரு மன்னனும் தன்னைத் தற்காத்து கொள்வதில் பிறரின் உதவியை எதிர்பாராமல் இருப்பது அவசியம். அந்த வகையில் இளவரசர் பல முறை வாள்சண்டைப் போட்டு தப்பித்ததை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் மன்னா” என்றார்

பெருமை பீறிட என்ன சொல்கிறீர்கள் என்பது போல் எதிரணியைப் பார்த்தார் மாமன்னர்.

மன்னா!! அழுகுணி சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் அது நீங்கள் நினைக்கும் வாள்சண்டையல்ல. அடுத்த நாட்டில் சோமபானம் சிறப்பான முறையில் தயாராவதைத் தெரிந்து வைத்திருக்கும் இளவரசர் அங்கே சென்று மூக்கு முட்ட குடித்துவிட்டு பிரச்சினை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த நாட்டு இளைஞர்கள் அடிக்க வந்தால் வாள் வாள் என கத்தி சண்டை போடுவார் இளவரசர். இவரின் சரீரத்தைக் கண்டு சண்டைக்கு தயாராகும் எதிரிகள் இவரது சாரீரத்தைக் கேட்டு காதுகளை மூடிய படி ஓடிவிடுவார்கள். அதைத்தான் “கத்தி”சண்டை, “வாள்”சண்டையென சொல்கிறார்கள் எதிரணியினர் என்று கொக்கரித்தார் சொங்கி.

மன்னர் பார்த்தபோது முகம் திருப்பிக் கொண்டனர் எதிரணியினர். அவமானம் தாங்காமல் அழுகுணியைப் பார்த்தார் மன்னர்

அது கிடக்கட்டும் அரசே!! இளவரசரை வாள்சண்டையில் வெல்ல முடியாது என்று தெரிந்துக் கொண்ட எதிரிகள் உலகிலே எந்த மன்னனும் உபயோகிக்காத ஒரு விதமான படையை ஏவினார்கள். அவர்களை  புறமுதுகிட்டு ஓட செய்தார் நம் இளவரசர். அது தெரியுமா இந்த மூடர்களுக்கு?

மீண்டும் கெத்தாக திரும்பி பார்த்தார் அரசர்.

அவசரம் வேண்டாம் அரசே. இவன் என்னடா பேடியாக இருக்கிறான் என்று தங்கள் நாட்டு வயதான கிழவிகளை விட்டு இளவரசரை அடிக்க நினைத்தார்கள் எதிரிகள். 12 கிழவிகள் இளவரசரை சூழ்ந்தபோது அவர்கள்  புடவைகளை உருவியிருக்கிறார் நம் வீரத்திருமகன். மானம் போனாலும் பரவாயில்லை என்று சண்டையிட அவர்கள் என்ன பல்லவ சம்ஸ்தான மன்னர் பரம்பரையா? மறைவிடம் தேடி ஓடியிருக்கிறார்கள். வெற்றுடம்போடு அவர்கள் ஓடியதைத்தான் புறமுதுகிட்டு ஓட வைத்ததாக பீற்றிக் கொள்கிறார் அழுகுனி.

அடுத்து நடவடிக்கையாக  எதிரணியினர் காறி உமிழக்கூடும் என அஞ்சி அழுகுணியைப் பார்த்தார் மன்னர்.

விதண்டாவாதம் வேண்டாம். எங்கள் இளவரசர் செய்த போர் தந்திரத்தைக் கண்டு அந்த நாட்டில் அவர் பெயரில் ஒரு நாடகமே நடத்துகிறார்கள். அதுவும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறதாம்.அவர்களுக்கு தெரிந்ததது கூட நம் நாட்டில் இருக்கும் பதர்களுக்கு தெரியவில்லையே மன்னா!! அய்யகோ

இந்த முறை சற்று சந்தேகத்துடன் ஓரக் கண்ணால் பார்த்தார் மன்னர்.

ஹாஹாஹா. மன்னா!! இவனுக்கெல்லாம் கொரில்லா தந்திரம் வேண்டாம். தெருநாய் போதுமென இரண்டு நாய்களை ஏவிவிட்டிருக்கிறார்கள். தலைதெறிக்க நம் இளவரசர் ஓடியதை பார்த்து நாடகத்திற்கு இவர் பெயர் வைத்தால் நன்றாக ஓடுமே என்று இளவரசரில் பெயரில் ஒரு நகைச்சுவை நாடகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் இப்போது ஓடு ஓடுவென ஓடி சக்கைப் போடு போடுகிறதாம். அடுத்த நாடகத்திற்கு தங்களின் திருநாமத்தை வைக்க அனுமதி கேட்டு வந்தவர்களை நான் தான் ஓட ஓட விரட்டினேன் என்று முடித்தார் தளபதி.

என்ன செய்தும் இனி வெல்ல முடியாது என்று தெரிந்து அழுகுணி பிரம்மாஸ்திரத்தை உபயோகித்தார். ”இளவரசருக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமென்று ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இந்த வயதான வக்கற்ற மன்னருக்கு இளவரசர் நல்ல மாற்றா இல்லையா” என வினவிய அழுகுனியை ஆரத் தழுவிக் கொண்டார் தளபதி.அதன் பின் முதலாம் மொக்கைவர்ம இளவரசர் மன்னராகும் வைபவத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

-மொக்குவோம்.

Jan 18, 2010

பெரிய மனுஷன் ஆவது எப்படி?

57 கருத்துக்குத்து

 

     உலகிலே மிகக் கடினமான விஷயம் எதுவென்று என்னைக் கேட்டால் எளிதில் சொல்லிவிடுவேன், தண்ணியடிக்கும் பழக்கமில்லாத ஒருவன் தண்ணி பார்ட்டிக்கு செல்வது என்று. சிறுவயதில் இருந்தே எனக்கு இந்த நல்லப் பழக்கம் உண்டு. அதாங்க தண்ணியடிக்காமல் இருப்பது. அப்போது எனக்கு 18 வயது(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா). கல்லூரி நண்பன் ஒருவன் பார்ட்டி தருவதாக சொன்னான். அதுவும் தண்ணி பார்ட்டிடா என்று அழுத்தி சொன்னான். எனக்கு விருப்பமில்லை என்றேன். இன்னொரு நண்பன் தான் சும்மா வந்து வேடிக்கை பாரு மச்சி. கலக்கலா இருக்குமென்று பவர் சோப் போட்டு பிரயின் வாஷ் செய்தான். அதைத் தொடர்ந்து நான் வருவதாகவும் ஆனால் தண்ணியடிக்க சொல்லி தொல்லைப் பண்ணக்கூடாதென்றும் பார்ட்டி தருபவனிடம் சொன்னேன். அது உன் இஷ்டம் மச்சி என்றவனிடம் என்னடா ஸ்பெஷல் என்றேன். ”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றான்.

     அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைத் தொடர்ந்து பல பார்ட்டிகளுக்கு செல்லத் தொடங்கினேன். ஏ.சி பாரில் அன்லிமிட்டெட் சைட் டிஷ் என்பதால் டின்னரையும் அங்கேயே முடித்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவு சைட் டிஷ் வைத்தாலும் சில நிமிடங்களில் அரைத்து தள்ளியதால் கிரைண்டர் கார்க்கி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. இது என்னடா ஃப்ரீயா கொடுக்கிறத சாப்பிட்டா கூடவே ஃப்ரீயா டைட்டிலும் தர்றாங்களேன்னு ஆச்சரியமாக இருந்தது. உண்மையை சொல்லப் போனால் நான் இது போன்ற பார்ட்டிகளுக்கு செல்ல முக்கிய காரணம் சைடு டிஷ் மட்டும் அல்ல. சரக்கு உள்ளே போகும் வரை கந்தசாமியாக இருப்பவன் முதல் கல்ப் அடித்ததும் கம்யூனிஸ்டாக மாறுவான். ஸ்மால் அடித்தவன் சுவாமிகள் ஸ்ரீஸ்ரீ ஆயா பகவானின் லீலைகளை எடுத்துரைப்பான். லார்ஜ் அடித்தவன் இந்தியாவின் லா& ஆர்டர் குறித்து கவலை தெரிவிப்பான். லைட்ஸ் ஆன் சுனிலை மட்டுமே படிப்பவன் என்று நினைக்கும் ப்ரகஸ்பதி தோப்பில் முகமது மீரானைத் தெரியுமா என்று மிரள வைப்பான்.

     இந்த வயதில், அதாங்க 18 வயதில் தண்ணியடிப்பவர்களில் இரண்டு பேராவது காதல் தோல்வியில் இருப்பார்கள். அவர்களின் ஃபீலிங்க்ஸ் கொடுமை சொல்லி மாளாது. நாத்தம் புடிச்ச குப்பைத்தொட்டிக்கு பக்கத்தில் அவளைப் பார்த்ததில் தொடங்கி, அவளது கூந்தல் மணம் வரை மணிக்கணிக்கில் சிலாகிப்பார்கள். தண்ணியடிக்காமல் ஸ்டெடியாக இருக்கும் என்னைப் போன்றவர்கள் தான் அவர்களின் டார்கெட். அந்தக் கதைக்கெல்லாம் பல சமயம் ரிப்பீட் ஆடியன்சாக இருந்த கொடுமையும் நேர்ந்ததுண்டு. இரண்டாம் முறை கேட்கும்போது அந்த கதை நமக்கு தெரியாதது போல் நடிக்க வேண்டும். இல்லையெனில் நாமும் அந்த ஜீலியட்டுக்கு நூல் விட்டதாக நினைத்துக் கொண்டு ரோமியோ நம் மீது பாய்ந்துவிடும் அபாயமுண்டு. கடைசியாக அவர் ஆஃபாயில் போடும் சமயம் வந்ததும் ”விடு மச்சி. உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பொறக்க போறா?” என்ற டயலாக்கோடு நகர்ந்து விட வேண்டும். இல்லையெனில் கறை நல்லது விளம்பரத்தில் நம் கதையும் வந்துவிடக்கூடும்.

      காதல் கதைகள் பெரும்பாலும் சுவாரஸ்யமாக இருந்துவிடுமென்பதால் தப்பித்து விடலாம். ஆனால் தப்பித் தவறி அரசியல் ஆர்வலரிடம் மாட்டிக் கொண்டால் செத்தோம். வட்ட செயலாளரின் தகிடுதத்தத்தில் ஆரம்பிக்கும் பேச்சு பில்கேட்ஸுக்கும் சிதம்பரத்திற்கும் இடையே நடந்த டீலிங் வரை செல்லும். மாட்டையும் மக்களையும் வைத்து கம்யூனிசத்திற்கும் ஃபாஸிஸத்திற்கும் இன்னும் பல இஸத்திற்கும் விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் நம் மூளையில் நெப்போலியன் நர்த்தனம் ஆடத் தொடங்குவார். “உன்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒன்னை பக்கத்தில் இருக்கிறவன்கிட்ட கொடுத்தா அது சோஷலிசம். ரெண்டு மாடையும் அரசே எடுத்துக்கிட்டு உனக்கு பால மட்டும் ஃப்ரீயா கொடுத்தா அது கம்யூனிஸம். அந்த பாலுக்கு காசு கேட்டா அது ஃபாஸிஸம்.ஒரு மாட்ட வித்து ஒரு காளை மாட்ட நீ வாங்கினா அது கேப்பிட்டிலிஸம்” இப்படி போகும் இஸ ரயிலில்  இருந்து ரன்னிங்கில் இறங்கி வரத் தெரியாதவர்கள் இது போன்ற பார்ட்டிகளுக்கு போகாமல் இருப்பதே உசிதம்.

      ரன்னிங்கில் இறங்கி இந்தப் பக்கம் பார்த்தால் பாபா முத்திரையோடு நித்திரையில் ஆழ்ந்திருப்பார் ஆன்மிக குடிகாரர். தெரியாமல் அவரை எழுப்பிவிட்டால் அவ்வளவுதான். இதெல்லாம் சிற்றின்பம். பதரே பேரின்பம் அவனிடத்தில் உண்டு என மேலே கையை காட்டுவார்கள். ஆனால் அவர் கண்கள் கீழ் நோக்கி இருக்கும். நாம் மேலேதான் பார்க்க வேண்டும். கட்டாயம் ஒரு குரு-சீடன் கதை சொல்வார். நாமும் பயபக்தியுடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஓஷோ தெரியுமா என்றால் ஆம் என்று சொல்லக்கூடாது. தவறி சொல்லிவிட்டால் நீ நினைக்கிற மாதிரியான ஆளில்ல அவரு என்று நம் மனதில் இருப்பதைப் புட்டு புட்டு வைப்பார். இன்பம்-துன்பம்,நல்லது-கெட்டது, ஆசை-ஏமாற்றம் என போகும் பிரசங்கத்தை லாவகமாக முடிக்க தெரிந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் போல அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும்,

     குடிக்கும் வரை கோலாகலமாக செல்லும் வைபவம் திரும்பும் வழியில் சொதப்பும். அத்தனை பேரும் பிரச்சினை செய்ய மாட்டார்கள். ஆனால் நிச்சயம் ஒருவன் செய்துவிடுவான். அவனை பத்திரமாக ஹாஸ்டலில் சேர்க்க வேண்டிய தார்மீக கடமை ஓசியில் சைட் டிஷ் சாப்பிட்டவனுக்கே அதிகம். வரும் வழியில் தேமேவென மேமேன்னு கத்திக் கொண்டிருக்கும் ஆட்டிடம் சென்று பேசத் தொடங்குவார் அன்றைய மேன் ஆஃப் தி மேட்ச். ஆட்டை, ராஜ பாளையத்து நாய் என நினைத்து வீரமாக அதன் எதிரில் நின்று பழங்கதைகள் பேசுவார். ”அன்னைக்கு என்ன துரத்துன இல்ல. இப்ப என் மச்சான் கூட இருக்கான். தொரத்து பார்ப்போம்” என அருகிலிருக்கும் ஏதாவது ஒரு மச்சான் மீது கை போட்டுக் கொள்வார். அரைகுறை மப்பில் இருக்கும் மச்சானும் மாப்பிள்ளைக்காக அந்த ஆட்டை மிரட்டுவார். அது மிரண்டு ஓடும். விடாமல் துரத்தி மாப்பிள்ளையின் நன்மதிப்பை பெற்றிடுவார் மச்சான். மறுநாள் ஏண்டா ஆட்டை துரத்தினன்னு யாராவது கேட்டா, மச்சான் அந்த சமயத்துல மட்டன் கேட்டான். கடையெல்லாம் மூடிட்டாங்க. அதுக்காக மச்சான்கிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா என்று தயார் செய்து வைத்திருக்கும் புனைவை பிரசுரிப்பார்கள். அவசரப்பட்டு சிரித்துவிட்டால் அடுத்த பார்ட்டியில் காராசேவு கிடைக்காதென்பதால் நானும் வாய் மூடி இருந்துவிடுவேன்.

    இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கால் கிலோ மிக்சருக்கும், வறுத்த கடலைக்கும் நான் பட்ட பாட்டைக் கண்டு எனக்கு வெறுப்பு வந்தது. என்னடா செய்யலாமென்று பல ஆங்கிளில் யோசித்து ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல முடிவு எடுத்தேன். எடுத்த முடிவின்படி கச்சிதமாக காரியத்தை முடித்த பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இன்னொரு நண்பனையும் பார்ட்டிக்கு  அழைத்தேன். என்னடா விசேஷம் பார்ட்டியெல்லாம் தர்ற என்றான்.

”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றேன்

Jan 15, 2010

செல்வாவின் வாந்தி

82 கருத்துக்குத்து

 

ஆயிரத்தில் ஒருவனை சிலர் கொண்டாடலாம். வாழ்க அந்த புண்ணியவான்கள். இந்த கருமத்தை பார்த்து தொலைத்ததற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று யாராவது சொன்னால் தேவலை. பொதுவாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எல்லாம் எழுதுவது கிடையாது. ஒரு ரசிகனின் பார்வையில் என்று விஜய் படத்திற்கும் இன்னும் சில படங்களுக்கும் எழுதியதுண்டு. அதெல்லாம் விமர்சனம் கிடையாது. இந்தப் பதிவும் அப்படித்தான்.

கேட்டதையெல்லாம் உடனே கொடுக்க தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அப்படி ஒரு இ.வான்னா கிடைத்துவிட்டார் செல்வாவுக்கு. அதற்காக ஸ்கிரிப்ட்டில் கூட அவர் சடாரென புது புது ஐட்டங்களை சொருகிக் கொண்டே போவது தலைவலி.

ஆண்ட்ரியாவிடம் கல்யாணம் பண்ணா உங்களதான் பண்ணுவேன்னு சொல்லும் போது கார்த்தி ஆஃப்ரிக்காவின் சிட்டிசனாக தெரிகிறார். படியிறங்கி வந்து ரீமா சென்னிடம் ரிப்பீட் செய்யும்போது இங்கிலாந்து சிட்டிசனாக ஜொலிக்கிறார்.

முதலில் சந்திக்கும் காட்டுவாசிகளிடம் அவர்களின் மொழியில் பேசுகிறார் ஆண்ட்ரியா. காணாமல் போன அவரின் அப்பா அவருக்கு அஞ்சல் வழியில் சொல்லிக் கொடுத்திருப்பாரோ?காட்டுவாசிகளின் போஸ்ட் மேன் வாழ்க.

அடுத்த செட் காட்டுவாசிகள் அட்டாக் ஒரு காமெடி. ரீமாவைத் தாண்டி போய் பின்னாலிருப்பவரையெல்லாம் போட்டுத் தாக்கும் போது இவர் தீபாவளி கேப் வெடிப்பது போல் ஜாலியா சுட்டுக் கொண்டிருக்கிறார். என்னா மேக்கிங்?

இன்னொரு காமெடி. கூட்டத்தில் பாதி பேருக்கு மேல் கொல்லப்பட்டாலும் அடுத்தக் காட்சிகளில் மீண்டும் கூட்டமாக செல்கிறார்கள். செல்வாவுக்கு என்ன தோன்றுகிறதோ அதற்கேற்றார் போல நடிகர்களின் எண்ணிக்கையும் சூழ்நிலைகளும் மாற்றிக் கொள்வார். போன காட்சியில் இத்தனை பேர் இல்லையே என்றெல்லாம் கேட்கக்கூடாது.

பாம்புகள் துரத்தம் காமெடி டாப். வெளியே ஆயிரக் கணக்கில் பாம்புகள் சூழ திடிரென டெண்ட்டுக்கள் இருந்து அதே தீபாவளி துப்பாக்கியுடன் வரும் ரீமா பாம்புகளை தைரியமாக சுட்டுத் தள்ளுவார். ஆனால் அந்தக் காட்சி முடிவில் கார்த்தி மீது ஆண்ட்ரியாவும் ரீமாவும் ஏறினால் நல்லா இருக்குமே என்று செல்வாவுக்குத் தோன்ற ரீமா அலறியபடி ஏறுவார். அப்படித்தான். கம்முனு பாருங்க

எதிர்பாராமல் வந்த பாம்புகளால் எல்லாத்தையும் அம்போ என விட்டுவிட்டு தண்ணீரில் குதித்து செல்லும் மூவர் குழுவுக்கு திடிரென ஓலைச்சுவடியும் திசைக்காட்டியும் தேவைப்பட சட்டென வந்துவிடும். தயாரிப்பாளர் உடனே கொடுத்தா ஓக்கே. திரைக்கதை ஆசிரியரும் தேவைப்படும் வஸ்துக்களை நினைத்த நேரத்திற்கு சொருகுவது. ங்கொய்யால

இந்த மூவரும் போகும் வழியில் சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காமல் தவிப்பார்களாம். ஆனால் அந்தப் பாலைவனத்தில் அவ்வளவு பெரிய பாறைகளை அசால்ட்டாக தள்ளிவிடுவார்களாம். அதுவும் அந்த கடைசி ஃப்ரேமில் மூவரும் ஆளுக்கு ஒரு கல்லை தள்ளிவிடுவார்களாம். டேய் டேய். கதைல வெயிட்டா எதுவுமே இல்லைன்னு யாராவது சொல்லிடப் போறாங்கன்னு வச்சிங்களா?

இப்போ ஒரு பாட்டு வச்சா நல்லா இருக்குமில்ல? குத்துப் பாட்டு வைக்கனுமே? ஆனா லாஜிக்(?) மீறக்கூடாது. அப்ப மூவரும் சரக்கடிக்கனும். காணாம போன ஆராய்ச்சியாளர் பை ஒன்ன தொங்க விடு. விட்டேன் சார். அந்த பள்ளத்துல சரக்கு பாட்டில் ஒன்னு போடு. போட்டேன் சார். மூணு பேரும் குடிங்க. குடிச்சோம் சார். ரைட்டு பாட்டு. உன் மேல ஆசதான். டேய் டேய் டேய்

பாட்டு முடிஞ்சுது. ரொம்ப நேரமா ஓடறோமோ? இண்ட்டெர்வெல். சும்மா விட்டா எப்படி? கார்த்தி ஆண்டிரியவ அடி. கார்த்தியை சுடும்மா ரீமா. கார்த்தி கீழ விழாதிங்க. இது ஃபேண்ட்டசி படம். அப்படியே நெஞ்சுல குண்டோட ஓடுங்க. ஒன் நிமிட். சும்மா ஓடுனா எப்படி? லூசு மாதிரி சிரிச்சிட்டே ஓடுங்க. பார்க்கிறவங்க அப்படி ஆயிட்டாலும் படத்தோட ஒன்றிட்டோம்னு நினைப்பாங்க இல்ல. ஆங். பிரேக்.

அதுக்கப்புறம் அன்லிமிட்டெட் சிரிப்புதான். அதெல்லாம் எழுதினா அவ்ளோதான். எனக்கு புரிஞ்ச ஒரு விஷயம். அந்த சோழ மக்களை ஈழத்தமிழர்களாக சித்தரிக்கிறார்கள். ரீமா சோனியா போல் அவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். இதில் பார்த்திபன் பிரபாகரனாம். ஆனால் கடைசியில் கார்த்தியை காட்டி சோழனின் பயணம் தொடரும் என்கிறார்கள். அப்போ கார்த்தி யாரு? வைகோவா? ஐ.பி.கே.எஃபின் கொடுமைகளை ஒத்த காட்சிகளும் உண்டு. ஆனா அதன் பிறகுதானே சோனியா பழிவாங்க தூண்டிய சம்பவம் நடந்தது?இதெல்லாம் என் கற்பனைதான் என்றாலும் அதற்கான காரணங்களை என்னால் சொல்ல முடியும்

யாருமே நுழைய முடியாத அந்த இடத்தில் இருந்து அழகம்பெருமாள் தனது செல்லில் தகவல் சொல்லுவாராம். ஆயிரக்கணக்கில் வீரர்கள் ஹெலிகாப்டரில் வருவார்களாம். வருபவர்கள் எல்லாமே ரவுடிகள் போலவே இருப்பார்களாம். கூடவே கேஸ் கேஸாக பியரோடு வருவார்களாம்.இன்னும் ஆயிராமாயிரம் ளாம்.

சோழ நாட்டு பெண்களின் மார்பில் இருந்து ரத்தம் வருவதைப் போல் காட்டினார்கள். பஞ்சமாம். எல்லாம் சோமாலிய நாட்டினர் போல் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையும் விட்டுவைக்கவில்லை நம்ம ராணுவம். வாயில் வண்டை வண்டையாக வருகிறது.

இதெல்லாம் உலக சினிமா. பின்நவீனத்துவ படமென்று சொல்பவர்களுக்கு… இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவிக்கனும்ன்னு சொல்பவர்களுக்கு. முதலில் முழு ஸ்க்ரிப்ட்டை தயார் செய்தபின் ஷூட்டிங் செல்ல வேண்டுமென்ற பால பாடம் கூட தெரியாத இயக்குனர்கள் இருக்கும் வரை தமிழ்சினிமா உருப்படாது.

பார்த்திபன் வரும் காட்சிகளுக்கு ஜி.வி.பிரகாஷின் பிண்ணனி இசை மசலா மிக்ஸை நினைவுப்படுத்துகிறது. சி.ஜி வேலையெல்லாம் பல் இளிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவும் கலையும் ஆறுதல் என்றாலும் செத்தவனுக்கு பால் ஊற்றுவது போலதான்.செல்வா? உங்கள் மேலிருந்த மதிப்பு, நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகிவிட்டன. பாவம் கார்த்தி. பாவம் தயாரிப்பாளர். பாவம் நான். தப்பித்தவர் ரீமா மட்டுமே.

பி.கு: மசால பட ரசிகனான உனக்கு இதெல்லாம் ஓவரா இல்லையா என்பவர்கள் படம் பார்த்துவிட்டு திட்டுங்கள்.

படம் பார்த்துவிட்டு வந்தவுடன் எழுதியது. மீண்டும் படித்து சரிபார்க்க பிடிக்கவில்லை. அந்த மனநிலையை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு வேளை உங்களுக்கு புரியவில்லை என்றால் இதையும் பின்நவீனத்துவ பதிவென்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது எனக்கும் செல்வாவுக்கு ஒரே ஒரு வித்தியாசம். நான் என் செலவில் என் ஆசையைத் தீர்த்துக் கொண்டேன். ஆனால் உங்கள் ஒருவரின் ஆசைக்கு………..

Jan 13, 2010

தமிழ் சினிமாவில் இசை சுனாமி

39 கருத்துக்குத்து

 

இசை ரசிகர்கள் கவனித்தார்களா எனத் தெரியவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைத்திருக்கிறது தமிழ் சினிமாவில். சென்ற வருடமெல்லாம்  மாதத்திற்கு ஒன்றிரண்டு பாடல்களையே கேட்க வேண்டிய சூழ்நிலை. 2010 ஜனவரியிலே ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ். தனித்தனியே இசை விமர்சனம் எழுதினால் போரடித்துவிடும் என்பதால் ஒரு கலெக்‌ஷன் பதிவு.

கோவா:

சரோஜா என்னை ஆரம்பத்தில் ஈர்க்கவில்லை.அதே போல்தான் இதுவும். இரண்டு கிராமத்து குத்துகள் விதிவிலக்கு. அதிலும் அந்தக் குடும்பப் பாட்டு தூள்.ஏழேழு தலைமுறைக்கும் என்று தொடங்குகிறது பாடல். தபேலாவின் டெப்த்தில் இருந்து எல்லாமே அச்சு அசல் ராஜா ஸ்டைல். யுவனுக்கு பதில் இந்தப் பாட்டு மட்டும் ராஜாவே போட்டாரோ என்று நினைக்கும்படி இருந்தது. இடையில் வரும் ”அம்மிகுத்துற” என்ற தொகையறாவுக்கும் கிடார் கார்ட்ஸ் கொடுத்து தனது லேபிளைக் குத்துகிறார் யுவன். வயதுக்கு மரியாதை கொடுத்து கார்த்திக்ராஜா முதல் வரியைத் தொடங்க வெங்கட், பிரேம்ஜி எனத் தொடர்ந்து கடைசியாக யுவன் குரல் ஒலிக்கிறது. மீதி மூவரும் மண்மணம் மாறாமல் பாட, யுவனால் மட்டும் அவர்களோடு ஒட்டவே முடியாதது சாதகமா பாதகமா எனத் தெரியவில்லை. உங்க மெலடியும்,வெஸ்டர்னும் ரிப்பீட் ஆவது போன்று தெரியுது யுவன். கொஞ்சம் கவனம் தேவை.

அப்ப இருந்து இப்ப வரை.. எங்களுக்கு என்ன குறை..

எப்பொழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை”

மடை திறந்து பாடலில் ஒரு வரி “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே”. என்று வரும். “தெய்வங்களா!!தமிழ் பேசும் நல்லுலகமே உங்களுக்கு நன்றி சொல்லுது. அடிச்சு போயிட்டே இருங்க பாஸ்”

மற்ற பாடல்களும் சுமார்தான் என்றாலும் இதை மட்டும்தான் கேட்க நேரமிருக்கிறது.

தமிழ்(ப்)படம்:

இதன் டிரெயிலர் 1000 வாட்ஸ் பவர் இல்லைனாலும் எதிர்பார்ப்பை தூண்டியது. “மொக்கை கேம் சார்” என்ற சிவாவின் டைமிங்கும் மாடுலேஷனும் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த மாற்றமுமில்லாமல் அதே ஸ்லாங்கில் அவர் பேசினாலே போதும். படம் ஹிட்டுதான். இளாவின் ஸ்டேட்டஸ் பார்த்து சிடி வாங்கினேன். குட்டி, அசல்,கோவா என ஏமாற்றங்களுக்கு இடையில் சர்ப்ரைஸ் கிஃப்ட் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் முறை கேட்கும்போதே எல்லாப் பாடல்களும் ஓக்கே. அதிலும் பச்சை மஞ்சள் பிங்க் தமிழன் என்ற பாடல் அதிரடி அட்டாக்.

சுனாமியின் பினாமியே..குள்ள நரிகளை ஒழிக்க வந்த நல்ல நரியே..

பாட்டு முழுவதும் சின்ன புன்னகையினூடேதான் கேட்ட முடிகிறது. ஒ மகசியா நல்ல பகடி என்றாலும் ஒரு அருமையான மெலடியை வீணடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஷங்கர் மகாதேவன் குரலில் “இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிர்கிறது” என்று கேட்கும்பொழுது குபீர் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. ஆயிரத்தில் ஒருவன் பொங்கலை தவறவிட்டால் தமிழ்படம்தான் என் சாய்ஸ். இந்தப் படம் வெளிவந்த பின் யாருக்கு எதிர்காலம் இருக்கோ இல்லையோ இசையமைப்பாளருக்கு நிச்சயம். கை கொடுங்க பாஸ்.

விண்ணைத் தாண்டி வருவாயா:

ஒன்னும் சொல்வதற்கில்லை. வாரணம் ஆயிரம் அளவுக்கு எல்லாப் பாடலும் ஹிட்டில்லை. ஆனால் ஹொசன்னாவுக்கும், ஓமனப் பெண்னேவுக்கும் ஈடாக எந்தப் பாடலும் இல்லை.மிஸ் பண்ணக் கூடாத ஆல்பம். ரகுமான் மேலும் மேலும் உயர போய் கொண்டேயிருக்கிறார்.

_______________________________________________________________________________

குட்டி, தீராத விளையாட்டுப் பிள்ளை, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கமெல்லாம் மேலே சொன்ன சுனாமிகளில் காணாமல் போகின்றன. அசல் படத்தில் எனக்கு ரெண்டு பாட்டு பிடித்திருக்கிறது, இவையில்லாமல் நாணயம் படத்தில் நான் போகிறேன் என்ற பாலு பாடிய பாட்டும் ஈர்க்கிறது. இந்த ஆரோக்கியமான சூழல் இந்த வருடம் முழுவதும் நிலைக்க வேண்டுமென ஆசை. பார்ப்போம்.

சிறந்த 5 ஆல்பங்கள்:

1) விண்ணைத் தாண்டி வருவாயா

2) தமிழ்படம்

3) பையா

4) ஆயிரத்தில் ஒருவன்

5) கோவா

சமீபத்திய பாடல்களில் என ஃபேவரிட் 10.

1) ஹொசன்னா (விண்ணைத் தாண்டி வருவாயா)

2) துளி துளி (பையா)

3) ஏழேழு தலைமுறைக்கும் (கோவா)

4) ஓமனப் பெண்ணே (விண்ணைத் தாண்டி வருவாயா)

5) நான் போகிறேன் (நாணயம்)

6) பச்சை மஞ்சள் பிங்க் தமிழன் (தமிழ்படம்)

7) அடடா மழைடா (பையா)

8) ஒரு சூறாவளி (தமிழ்படம்)

9) துஷ்யந்தா (அசல்)

10) சின்னத் தாமரை (வேட்டைக்காரன்)

இதில் கொடுமை என்னவென்றால் குட்டி, இ.கோ.மு.சி, தீராத வி.பிள்ளை படத்தில் ஒரு பாடல் கூட மீண்டும் கேட்க தோன்றவில்லை. ஆயிரத்தில் ஒருவன் ஆயிரம் முறைக் கேட்டுவிட்டதால் அதுவும் லிஸ்ட்டில் இல்லை.

Jan 11, 2010

மொக்கைவர்மன் பிறந்த கதை

39 கருத்துக்குத்து

 

இந்த அத்தியாயத்தில் மொக்கைவர்ம மகாராஜாவின் பிறப்பு, பெயர் காரணம் இன்னும் சில இத்யாதிகள் குறித்துப் பார்ப்போம்.

ஆந்தைகள் பிளிறும் நேரம்தான். ஆனால் பல்லவ அரசின் சமஸ்தான எல்லைக்குள் இருக்கும் ஆந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும் அவை எழுப்பும் குறட்டை சத்தம் பிளிறுவதை விட கர்ணகொடூரமாக இருக்குமென்பதால் அந்த ஒலியின் மூலம் நாம் நள்ளிரவு என்பதை அறியலாம். இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா வாயிலில் அங்கிங்கும் அலைந்து கொண்டிருந்தார். 28ஆம் நக்கல் வர்மனாகத்தான் இவர் பெயர் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவரது அண்ணன் 27ஆம் நையாண்டி வர்மன் சிறிது காலம் அரசாண்டு விட்டு ஒரு போருக்கு பயந்து ஓடியதால் இவர் பதவியேற்றார். பாதியில் பதவியேற்றதால் இருபத்து ஏழரையாம் நக்கல் வர்ம மகாராஜா ஆகிவிட்டார். வாயிலுக்கு வருவோம். அது அலர்ஜி என்பவர்கள் காட்டனுக்கோ, சில்க்குக்கோ வரலாம்.ஆனால் நான் வாயிலுக்குத்தான் செல்கிறேன்.

மன்னரின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன. பல்லவ சமஸ்தானத்தை அவ்வபோது எதிரிகள் சூழ்ந்து கொண்டு போருக்கு அழைக்கும்போது கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிடுவது மன்னரின் வழக்கம்.அப்படியாகத்தான் மன்னரின் முகத்திலும் ரேகைகள் வந்திருக்ககூடுமென சீனாவில் இருந்து வந்த ஷியோமியோகியோ என்ற பிரயாணி தனது குறிப்பில் சொல்லியிருக்கிறார். வரலாறு என்பதால் தேவைப்படும் இடங்களில் ஆதாரத்தையும் காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி குறிப்பிடும் ஆதாரத்தை நம்பாமல் அந்த ஆதாரத்திற்கு ஆதாரத்தை நீங்கள் கேட்கக்கூடும்.அப்படி கேட்பவர்களுக்கு ஆவென அலறும்படி தாரம் அமையுமென சாபம் விடுகிறேன். விஷயத்திற்கு வருவோம். 72வது வயதில் மகாராணி(அவருக்கு 54 வயது) கர்ப்பமுற்றால் எந்த மன்னருக்குத்தான் பயம் தோன்றாது? இருந்தாலும் நாற்பத்தியெட்டு ஏக்கருக்கு பரந்த விரிந்த சம்ஸ்தானத்தை ஆள ஒரு ஆள் தேவையென்பதால் மன்னர் அதை லூஸில் விட்டுவிட்டார். பிறக்க போவதே ஒரு லூஸ் என்பது முன்னரே மன்னருக்கு தெரிந்ததா என்பது தெரியவில்லை.  ஆனால் புதிதாக பணியில் சேர்ந்த ஜோசிய அப்ரண்ட்டிஸின் மூளையின் ஒரு மூலையில் மும்தாஜ் மூடிக் கொண்டு ஆடியது.

மாமன்னா! பிறக்கப் போகும் குழந்தை தங்களைப் போல் இல்லாமல் அரசியைப் போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று சமயோஜித புத்தியே இல்லாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

ஹாஹாஹாவென சிரித்த மன்னரின் மகா சிரிப்பில் அரண்மனை ஆந்தைகளே சற்று பயந்துதான் போனது. எழுபத்தி இரண்டு வயதில் கூட இப்படி சிரிக்கும் மன்னன் இன்னும் பத்து வருடம் கழித்தும் இளவரசனோ இளவரசியோ பெற்றெடுக்கக்கூடுமென நினைத்தார் அப்ரண்ட்டீஸ். மன்னரை விட மகாராணி வீரமானவர். இது தெரியாமல் கேட்டு வைத்தார் அப்ரண்ட்டீஸ்.

மன்னர் மகாராணியை மணந்த கதை சுவையானது. ஏற்கனவே சொன்னது போல் சரித்திரத் தொடரில் இது ஒரு இம்சை.(உன் தொடரே இம்சை என்பவர்களுக்கு வைத்துக் கொள்கிறேன் கச்சேரியை). எல்லாவாற்றிற்கும் டொய்ங்க் என சுத்தி ஒரு ஒளிப்பின்னாடியையோ(அதாங்க ஃப்ளாஷ்பேக்) அல்லது ஆதாரத்தையோ காட்ட வேண்டும். இப்போது டொய்ங்ங். பல்லவ எல்லை மட்டுமல்ல, எட்டுத்திக்கும் இருந்து வந்த பல வீரர்களால் அடக்க முடியாத காளை ஒன்று மகாராணியாரின் தந்தையிடம் இருந்தது. அதை அடக்கித்தான் மகாராணியாரை மணந்தார் மன்னன். அந்தக் காளையை அடக்கும் வீரனால் தான் இந்த அடங்காப் பிடறியை அடக்க முடியும் என்று அவர் தந்தை நினைத்தது மன்னருக்குத் தெரியாமல் போனது அவரது துரதிர்ஷடவசம்தான். அதனால் பிறக்கப் போகும் குழந்தை அவரைப் போல் இருக்கக்கூடாது என்பதற்காக அதற்கு தேவையான பூஜைகளை உடனே அப்ரண்டீசை செய்ய சொன்னார் மன்னர். கடந்த காலம் முடிந்து நிகழ்காலம் வந்த போது டொய்ங்க் என சக்கரத்தை ரிவர்ஸில் சுற்ற மறந்துவிட்டேன். இது போன்ற லாஜிக்கெல்லாம் விஜய் படம் பார்க்கும் ரசிகர்கள் போல மறந்துவிடுவது நலம். அதைவிட்டு ஈரானிய படத்தில் என்று துவங்கும் வாசகர்கள் மதனின் வந்தார்கள் வென்றார்களை படிக்கலாம். அல்லது படிக்காமலே ஒரு விமர்சனம் எழுதலாம். விஜய் பட ரசிகர்கள் என் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள். நாம் இப்போது அரசி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழையப் போகிறோம்.

உள்ளே வலியால் துடித்துக் கொண்டிருந்தார் அரசி. அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்த மன்னன் வைத்தியம் பார்க்கும் பாட்டியிடம் விசாரித்தார். இரட்டைப் பிள்ளை போல் தெரிகிறது. இந்த வயதிலும் எப்படி அரசே என்று கேட்டார் பாட்டி. வழக்கம் போல் மன்னர் சிரித்துவிட்டு பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். மன்னரின் சிரிப்புக் கேட்ட உள்ளே ஓடிவந்த தலைமை மந்திரி நிலவரம் புரியாமல் வழக்கம் போல் ”அவர் எனர்ஜி மன்னா” என்று சொன்னார்

இதைக்  கேட்டு உள்ளே இருந்த அனைத்து வைத்தியரும் தாதியரும் சிரித்த சிரிப்பு விண்ணையே பிளந்திருக்க வேண்டும். மேற்புறம் கூரை இருந்ததால் அப்படியெதுவும் ஆகவில்லை. மந்திரி சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கிறது என வலி மறந்து சிரித்த அரசியும் சிறிது நேரத்தில் அலற, அறையில் இருந்த அனைவரும் மெளனமானார்கள். ஆனால் ஒரே ஒரு சிரிப்பு சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அப்போதுதான் அரசிக்கும் பிரசவம் ஆனது. குழந்தை அழுது கொண்டே பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தக் குழந்தை  சிரித்துக் கொண்டேயிருந்தது. ரோஜாப்பூ நீரில் குளித்து முடித்த இளவரசர் மன்னரின் கைக்கு வந்தார். பிறக்கும் போதே சிரித்த உனக்கு மொக்கை வர்மன் என்ற பெயரே பொருத்தமானது. இது போன்று யாரும் இதுவரை பிறக்காததால் ”முதலாம் மொக்கை வர்ம பல்லவன்” என அழைக்கப்படுவாய் என்றார் மன்னர். குழந்தையை மேலே தூக்கிப் போட்டு விளையாடிய மன்னர் கூடவே தனது ட்ரேட்மார்க் சிரிப்பையும் உதிர்க்க, டென்ஷனான இளவரசர் மன்னரின் முகத்தில் நீர்ப்பாசனம் செய்தார். இனிப்புக்கு பதில் தவறுதலாக உப்புப் போட்டு அரசி போடும் கொட்டைவடிநீர் என நினைத்து சப்புக் கொட்டிய மன்னனின் முகத்தில் காலால் ஒரு டிஷ்யும் விட்ட நம் கதாவேந்தர்  தனக்கு பெரிய தலைவலியாக வருவார் என்பதை மன்னர் அப்போது அறியவில்லை.

-மொக்குவோம்

sample

0 கருத்துக்குத்து
Ravikumar 
Dr. Ravikumar is a Production Engineer. He has done his post graduation in Management from the Jamnalal Bajaj Institute of Management Studies, Mumbai and Ph D from the Central University, Aligarh Muslim University.
He has 30 years of work experience in the areas of Human Resources Management, Quality, Industrial Engineering and Employee Relations in reputed Indian and Multinational Companies.  He has been responsible for the HR functions in various Industry segments like Manufacturing, Engineering, Chemicals, Pharmaceuticals, Food Retail, Information Technology and Financial Services. 
He started his career in Tata Motors in the year 1980 and worked for fourteen years.  He then moved to ICICI Bank as Vice President – HR.  Subsequently, he joined the multinational pharmaceutical company, Parke Davis, as Director- Human Resources.  He also worked as V P- HR and Quality with Blue Star, Sr. Vice President – HR with Jubilant Organosys etc . Before joining his current job, he was working as Sr. VP-HR at Reliance Retail heading the pan India HR operations of their mega Retail venture .
Currently, he is working as Director HR-Textiles at Raymond Ltd. He is responsible for the HR functions of the seven manufacturing units , Sales & Marketing Division and International Business covering more than 9000 employees. He has been recently selected as a top talent by the Raymond Management.
Dr. Ravikumarhas been trained in Japan and USA in the area of Human Resources Management.  He is accredited as a Management Teacher by All India Management Association.  He is certified to conduct psychological tests like MBTI, Thomas Profiling and Predictive Index (PI).  He is also certified as a Master Practitioner of Neuro Linguistic Programming (NLP).  He has been trained as an Executive Coach. 
He is a Life Member of the National HRD Network.  He is also a Fellow Member of The Institution of Engineers and Member of the All India Management Association. He is a member of the CII National Committee on HR for the year 2010-11.

யானை முன்னே.மணியோசை பின்னே

40 கருத்துக்குத்து

 

புத்தக சந்தையில்தான் இவரை சந்தித்தேன். சிறந்த வாசிப்பாளி. புத்தகங்களை தேடித்தேடி வாங்குவது ஒரு வகை. பார்த்து பிடித்திருந்தால் வாங்குவது ஒரு வகை. பார்த்ததையெல்லாம் வாங்குவது ஒரு வகை. இவர் எல்லா வகையில் வாங்கி குவித்துக் கொண்டிருந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்த நர்சிம்மிடம் என்னய்யா என்றேன். நீ வேற சகா. ஊருல அவரு வீட்டுல 25000 புக்ஸ் இருக்கும் தெரியுமா என்றார். இலவச இணைப்பாக இன்னொன்றையும் சொன்னார். கி.ராவின்  வண்ணதாசனின் கதையில் நெல்லையில் இருக்கும் ஒரு தெருவை அழகாக குறிப்பிட்டிருந்தாராம். மதுரையை சேர்ந்த இவர் இதற்காக நெல்லைப் போய் அந்தத் தெருவைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். என் பிளாகையும் படிப்பாராம். அவர் புட்டிக்கதையை வாசித்துவிட்டு டாஸ்மாக்குக்கு போகாமல் இருக்க எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்வோம்.

____________________________________________________________________________________

வார்த்தை வித்தகர் அவர். பின்னூட்டங்களிலும், பதிவிலும், ஏன் கதைத் தலைப்புகளிலும் கூட வார்த்தை விளையாட்டு நடத்துபவர். ஒரு நாள் தானே சமைத்து அண்ணியை அசரடிக்க நினைத்த அண்ணன் ரசம் வைத்திருக்கிறார். எப்படியோ அது இனிப்பாக இருந்திருக்கிறது. ரசம் எங்கேயாவது ஸ்வீட்டா இருக்குமா என்று கேலி பேசியிருக்கிறார் அண்ணி. உண்டே. அதி”ரசம் ஸ்வீட்டாதானே இருக்கும் என்றாராம். அண்ணனை முறைத்த அண்ணி பூரிக்கட்டையை கையிலெடுத்து சொன்னாராம் ”தபாருங்க. இந்த வேலையெல்லாம் பிளாகோடு நிறுத்திக்கோங்க. எங்கிட்ட விளையாண்டா விபரீதமாய்டும்”. அதனால்தான் இப்போதெல்லாம் கலக்கல் சகா, நல்லாயிருக்குங்க என்பதோடு எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.இவரையும் கவிஞர் கென்னையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்தேன். ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு விஷயத்துக்கு காரணமானவரை கிராஃபிக்ஸ்ல உள்ள கொண்டு வர வசதியா இருக்கும்படி நடுவில் கேப் விட்டே நின்றார்கள். விரைவில் வெளியீடு. ___________________________________________________________________________________

புத்தகச் சந்தையில் அந்த நல்ல கவிஞரை சந்தித்தேன். சாரு அவரை தன் வாரிசாக அறிவித்திருந்தாலும் எனக்கு அவர் மேல் மரியாதை உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது ரிட்டன்(return) டிக்கெடோடுதான் வந்ததாகவும் உடனே கிளம்ப இருப்பதாகவும் சொன்னார். ரிட்டன்(written) டிக்கெட்ன்னா எப்படி சகா, கையால எழுதி தருவாங்களா என்ற என் அறிவு செறிந்த கேள்வி புரியாமல் விழித்தார். கவிதை புரிந்து என்ன பயன்?மொக்கை புரியலையே என்றேன். அதற்கெல்லாம் மொக்கையா இருக்கனும் என்றார். அதுசரி. அதனால் தானே அவரிடம் கேட்டேன் அந்தக் கேள்வியை.

___________________________________________________________________________________

சில நாட்களுக்கு முன்பு ஒரு அரிச்சந்திரனின்  ஹிட் ரேட்ஸைக் குறித்து எழுதி இருந்தேன். வழக்கம் போல் அவரின் ரசிகர்கள் சில பேரிடமிருந்து அழகிய தமிழில் அர்ச்சணை மெயில்கள் வந்தன. சரியான பயந்தாங்கொள்ளியான நான் இனிமேல் எழுத மாட்டேங்க என்ற ரீதியில் பதில் அனுப்பி தற்காலிகமாக ஆட்டோ வரும் அபாயத்தை தவிர்த்தேன். இப்போது அப்படியெல்லாம் தவறு செய்ததற்கு பரிகாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலே சொன்ன பதிவு எழுதிய நாள் திசம்பர் 26,2009. அப்போது அவரது தளத்தின் ஹிட்ஸ் 22 லட்சம் என்று சொல்லியிருந்தேன். நிச்சயம் உங்களில் பலர் உடனே அங்கே போய் சரி பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.அவரது கணக்குப்படி பார்த்தால் 41 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன், சில நாட்களுக்கு முன்பு சந்திரலேகா என்பவரிடமிருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் உடனே அரிச்சந்திரனின் ஹிட்ஸ் கவுண்ட்டரைப் பார்க்க சொல்லி இருந்தார். போய் பார்த்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!44 லட்சத்தைத் தாண்டி மின்னல் வேகத்தில் செல்கிறது. வெறும் 17 நாளில் 22 லட்சம் பேர் படித்திருக்கிறார்கள். இப்போது சொல்கிறேன் தமிழ் எழுத்துலகின் சூப்பர்ஸ்டார் இவர்தான். இனிமேல் நானும் அரிச்சந்திரனின் வாரிசு.. ச்சே அவரின் விசிறி.

பி.கு: சைடு பாரில் அரிச்சந்திரனின் சாம்பிள் ஹிட்ஸ் கவுண்ட்டரை இணைத்திருக்கிறேன். புரொஃபைலுக்கு கீழே இருக்கிறது

Jan 9, 2010

எஸ்.ஐ.,யை காப்பாற்ற ஆம்புலன்சுக்கு காத்திருந்த அமைச்சர்கள்

55 கருத்துக்குத்து

 

tblfpnnews_88100397587

 

திருநெல்வேலி : நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.

தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது. வெற்றிவேல் பிற்பகல் 2.40 மணிக்கு வெட்டப்பட்டார். 20 நிமிடங்களுக்கு பிறகே அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் கொண்டுசெல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின், எதிரே வந்த ஆம்புலன்சில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

நன்றி: தினமலர்

___________________________________

கொடூரமான அந்த வீடியோவை இங்கே பதிவேற்ற மனம் வரவில்லை. நல்லா இருங்கப்பா. தண்ணி கொடுக்கிறவர் மற்றவர்களை விட  கொஞ்சம் பரவாயில்லைனாலும் அந்த தண்ணியை குடிக்க முடியாமல் காவலர் படும் அவஸ்தை. ச்சே. நடந்ததற்கு அரசு ஒன்னும் செய்யமுடியாதுதான். ஆனால் அந்த அமைச்சர்கள் மேல் என்ன நடவடிக்க எடுக்கப் போகிறது?

Jan 8, 2010

பெட்ரமாக்ஸ் லைட்டேஏஏ வேணுமா?

86 கருத்துக்குத்து

 

மு.கு:  மேலிருக்கும் வீடியோவை பார்க்க முடியாத சகாக்கள் ஒரு முறை கவுண்டமணியின் பெட்ரமாக்ஸ் லைட்  நகைச்சுவையை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். அதன் பின் பதிவைப் படிக்கவும். முடிந்தவரை வசனங்களை படத்தில் வரும் அதே மாடுலேஷனில் படித்தல் நலம். அவ்ளோதாம்ப்பா

_______________________________________________________________________________

இடம்:  அசல் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம்.

பங்கேற்போர்: தல அஜித், மற்றும் ஒரு தல ரசிகர்

தல: அஜித்த பாருடி..அல்டிமேட் ஸ்டாருடி.. அர்ணாக்கயிறு நீளம்டி

ரசிகர்: தல.

தல: டேய். ரொம்ப நாளைக்கப்புறம் என் படம் வரப் போது. ஒர்ர்ர்ரு வாரம் ஓடும். அதான் நான் கம்முன்னு இருக்கேன்

ரசிகர்: என் சந்தேகத்தை தீர்த்து வைங்க தல.

தல: என்னடா?

ரசிகர்: உங்க படம் எப்படி தல ஒரு வாரம் ஓடுது?

தல: ஆங்ங்ங். அப்படி வா.இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு அல்டிமேட் ஸ்டார் தேவைங்கிறது. அடேய் அரைவேக்காடு ரசிகா. இதுக்கு பேருதான் சிடி. என்னை மாதிரி இல்லாம சப்பையா இருக்கு பாரு. இதுக்கு பேரு சிடி பிளேயர். இதுல இருந்துதான் அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சல் சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் கேட்கும்.

(பாட்டைக் கேட்ட கடுப்பான ரசிகன் சிடியைப் கீழே போட்டு உடைத்தபடி சொல்கிறார்)

ரசிகர்: இந்தப் பாட்டு எப்படி தல ஹிட்டாகும்? போங்க தல

(தனது ட்ரேட் மார்க்கான முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத ரியாக்‌ஷனை காட்டுகிறார் தல.பதறிய ரசிகர் தொடர்கிறார்)

ரசிகர்: என்ன தல மொக்கையா பாட்டு போட்டிருக்கீங்க?

(மீண்டும் அதே ரியாக்‌ஷன். அந்த வழியாக ரேடியோ மிர்ச்சி ஆர்.ஜே ஒருவர் வருகிறார் கையில் மைக்குடன்)

ஆர்.ஜே: ஏங்க. இங்க ஆள் ரவுண்டா இருப்பாரே அஜித்குமார். அவர் படம் எதுங்க?

ரசிகர்: அசல்

(அஜித் ரசிகரை முறைக்க ”தலை” குனிகிறார் அவர். அதூஊஊஊ என்கிறார் தல)

தல: அசல் என் படம் தாங்க.

ஆர்.ஜே: சாயந்திரம் என் புரொகிராம்ல பாட்டு போடனும். அதுக்கொரு சூப்பர் ஹிட் புதுப் பாட்டு வேணும்.

(அந்த மியுசிக்கை எப்படி டைப் பண்றதுன்னு தெரியல. நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். எஸ்ஸாகிறார் ரசிகர்)

தல: ஏங்க. சூப்பர் ஹிட் பாட்டேஏஏஏஏ வேணுமா?

ஆர்.ஜே: ஆமாங்க

தல: இந்த சொத்தைப் பாட்டெல்லாம் போடக்கூடாதுங்க?

ஆர்.ஜே: சொத்தைப் பாட்டா?ம்ஹும். அதெல்லாம் வேணாங்க

தல: அப்ப சூப்பர் ஹிட் பாட்டு கொடுக்கறதில்ல.மைக் வச்சிருக்குவங்களுக்கு எல்லாம் பாட்டு கொடுக்கிறதில்ல

______________________________________________________________________________

பி.கு : விஜயை கிண்டலடித்து வந்த மெயில் மற்றும் குறுஞ்செய்திகளால் கடுப்பான நண்பன் ஒருவன் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து எழுதியது. ஆயிரம் பேருக்காவது அனுப்பப் போவதாக சொல்லியிருக்கிறான். அப்படியே குறுஞ்செய்தியும் சொல்லிடறேன். உங்களுக்கு இதே எஸ்.எம்.எஸ் வந்தா சொல்லுங்க.

ஏண்டா அசல் பாட்ட ம்யூட்ல வச்சு கேட்கிற?அவ்ளோ கொடுமையாவா இருக்கு?

இல்லங்க. அசல் படத்தோட டேக்லைன் என்ன சொல்லுது “The power of silence”. அதான் சவுண்டேயில்லாம கேட்கிறோம்.தல ராக்ஸ்.

Jan 7, 2010

நீ காற்று நான் மரம்

36 கருத்துக்குத்து

 

ஊரெங்கும் பனிபெய்து கொண்டிருந்த
ஒரு மார்கழி காலையில்
என் வீட்டினுள்ளே வந்து உட்கார்ந்தார்கள்
மங்கி கேப் அணிந்த அந்த இருவரும்.
அவன் புத்தகப் பையை கழட்டி ஓரம் வைத்தான்.
அவள் முதுகில் சுமந்தபடியே அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் அமைதி காத்த இருவரும்
ஒருவரை ஒருவர் பரஸ்பரம் முறைத்துக் கொண்டனர்
'நீ அலை நான் கடல்'
என்று பாடினான் அவன்.
'கடல் இல்ல, நான் கரை'
என்று சிரித்தாள் அவள்.
என்னிடம் கேட்டபோது 
கரைதான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு என்று சத்தம் போட்டாள்.
அவன் அடுத்து தேன் தேன் தேன் என்றான்.
இருவரும் 
காற்றாக மாறிக் கொண்டிருந்தார்கள்  
நான் மரமாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்

Jan 6, 2010

அசல் இசை அலசல்

40 கருத்துக்குத்து

 

ajith2_002

   தலயின் அடுத்த அவதாரம் தயார். ஃபிப்ரவரி மாதம் விஷாலுடன் மோதுவதற்கு முழு வீச்சில் உழைக்கிறது அசல் டீம். பாடல்கள் நேற்று முன் தினம் வெளியாகிவிட்டன. கேட்டுத்தான் பார்ப்போமே என்று நானும் சிடி வாங்கினேன். பார்ப்போம் வாருங்கள்

1) காற்றை நிறுத்தி... (சுனிதா..)

பரமசிவனில் இருந்தே அஜித்துக்கு ஓப்பனிங் பாடலை பெண்கள் பாடுவது வழக்கமாகிவிட்டதி. பில்லா, ஏகன்(இருவரும்) எனத் தொடர்ந்த இந்த செண்டிமண்ட் இங்கேயும். ஆனால் இது சற்று வித்தியாசமாக. பாடல் என்ற வகையில் செம பாட்டு. Pick of the album எனலாம். எவ்வளவோ யோசித்தும் ”தல போல வருமா” போன்று ஒரு வரி சிக்காததால் அதையே சேர்த்துவிட்டார்கள். ஏற்கனவே கேட்டாகிவிட்டதால் அந்த வரி ஒலிக்கும்போது மட்டும் சற்று சலிப்பு தட்டுகிறது. ஆனால் தல ரசிகர்களை குஷிப்படுத்த சரியான ஆயுதம்தான்.  அஜித் எப்படியும் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்துக் கொண்டு சினிமாவில் அவருக்கு கொ.ப.செ ஆகிவிட்டார் வைரமுத்து.அனல் கக்கும் வரிகள்.

நித்தம் நித்தமும் யுத்தம்-இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை.

சரணுக்கு ஜே போடலாம். நடப்பு புயல் அஜித்துக்கு இதை விட சிறந்த ஓப்பனிங் சாங் போடவே முடியாது. ”நட”த்து தல.

2) யே துஷ்யந்தா ( சுர்முகி, குமரன்)

என்னா பீட்டு? என்ன சாங்? பரத்வாஜ் பிரித்து மேய்ந்திருக்கிறார். வார்த்தைகள் மட்டும் சற்று பிசிறுதட்டுகிறது. அர்த்தம், கதை இதையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு மெட்டுக்கேற்ற வரிகள் போட்டிருந்தால் உண்மையாகவே அட்டகாசமாய், அமர்க்களமாய் அசல் இசையாய் வந்திருக்கக்கூடும். மிஸ் செய்துவிட்டார்கள். ”அந்த நீல நதிக்கரை”என்று சுர்முகி ஏறும்போது என் உச்சிமண்டையில் சுர்ரென்று ஏறுகிறது. வெயிட்டான ரிதம். பாட்டின் இடையே “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் வரிகளை அழகாய் சேர்த்திருக்கிறார்கள். கடைசியில் பழைய பாடலின் பல்லவியை இணைத்தவிதம் அழகு. உண்மையில் துஷ்யந்தாவை விட பார்த்த ஞாபகம் என்ற வரிகளுக்கு இந்த பீட் செமையா செட் ஆகுது. எம்.எஸ்.வியின் மெட்டு கிளாசிக் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. மொத்த ஆல்பத்தையும் கேட்டபிறகு நம் மனதில் ஒலிப்பது “அந்த நீல நதிக்கரையோரம்” தான். குமரன் என்ற ஒருவரும் பாடியிருக்கிறாராம். கேட்டதாக நினைவிலில்லை. அடித்து சொல்கிறேன் இந்தப் பாட்டுக்கு பாவனாதான்.

பூங்காவில் மழை வந்ததும்

புதர் ஒன்று குடையானதும்

மழை வந்து நனைக்காமலே (அடுத்த வரியை யூகியுங்கள்)

  பாவனவை இப்படி கற்பனை செய்து பாருங்கள் ஆதி.(பாவனா ரசிகர் மன்றத் தலைவர்)

3) அதிரி புதிரி பண்ணிக்கடா (முகேஷ், ஜனனி)

விஜய் மட்டும்தான் குத்தாட்டம் போடுவாரா? நாமளும் ரவுடிதான் என்று ஒவ்வொருப் படத்திலும் தலயும் ஒரு பாடலுக்கு ஆட்டுவார். அந்தப் பாடல்தான் இது. வழக்கமான தமிழ் மசாலா குத்து என்றாலும், மசாலா இலக்கணப்படி இந்தப் பாடலில் அமைந்த ஒரு வார்த்தை செம மாஸ். அந்த ஒரு வார்த்தைக்காகவே எஃப்.எம்மில் ஒலிக்கும். படம் க்ளைமேக்ஸை நெருங்கும் வேளை, தனது எதிரிகளை தல வேட்டையாட ஆரம்பிக்கும் முன்பு சமீராவை சந்திக்க, அவரும் என் உயரத்திற்கும் உருவத்திற்கும் ஏற்ற ஒரே ஹீரோ இந்தியாவிலே நீதான் என்று கொஞ்ச.. டொண்ட்டடொய்ங்… திரையில் பாட்டு ஆரம்பம். அது என்ன வார்த்தையா? நீங்களே கேட்டு தெரிஞ்சிக்கோங்க.இல்லைன்னா இந்த பத்தியில் தான் இருக்கு. தேடி சொல்லுங்க. இதுக்கெல்லாம் முகேஷ..ம்ம் பரத்வாஜ் கோட்டை விடுவது இது போல்தான்

பணயக் கைதி போல என்னை ஆட்டிப் படைக்கிற

பங்கு சந்தை போல என்னை ஏத்தி இறக்குற.

இது பரவாயில்லை.தங்கத்துக்கு என்ன சொல்றாரு தெரியுமா? டொண்ட்டடொய்ங். பாட்டைக் கேளுங்க.

4) என் தந்தை... (பரத்வாஜ்)

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் இல்லையா? அதான் அவரைப் பற்றி ஒரு பாடல். படத்தில் அஜித் இரட்டைவேடம். அப்பா அஜித்தைப் பற்றிய பாடல். பெரிதாய் ஒன்றுமில்லை, அப்பா அஜித் மகனை விட வயதில் பெரியவர் என்பதைத் தவிர.  நெக்ஸ்ட்டு

5) எங்கே எங்கே...(எஸ்.பி.பி.)

கன்ஃபார்ம்டு.படம் புதிய பறவையின் ரீமிக்ஸ். அல்லது அந்த சாயலில் ஒரு கதை. அஜித்த்தான் சிவாஜி, சமீரா சரோஜாதேவி, செளகார் ஜானகிதான் பாவனா. பார்த்த ஞாபகம்தான் துஷ்யந்தா என்று பார்த்தோம் அல்லவா? எங்கே நிம்மதிதான் எங்கே எங்கே. அனேகமாக எம்.ஆர்.ராதா ரோலில் பிரபு நடிக்கலாம். ஆனால் அவர் என்னவோ நல்லவராகத்தான் நடிப்பார் என்றும் தோன்றுகிறது. படம் பார்ப்பவர்கள் மறக்காமல் சொல்லுங்கள்.பாட்டைப் பற்றியா? பாடலில் வரிகள் ஒருவனின் ஏமாற்றத்தை சொல்கிறது. எஸ்.பி.பியின் குரல் விடுதலை வீரனைப் போல் கர்ஜிக்கிறது. பரத்வாஜின் இசை இன்னொரு பக்கம் செல்கிறது. சகிக்கல.

6) குதிரைக்கு ஜாக்கி (சுர்முகி, ஸ்ரீசரண்)

எல்லாப் பாடல்களிலும் தொடக்கம் ஈர்க்கிறது.. மீண்டும் மீண்டும் கேட்கும்போது அயர்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடலிலும் அப்படித்தான். பல்லவியில்

தொட்டுவிடு ஒருதரம்
தொல்லைகொடு இருதரம்
முத்தமிடு மூனுதரம்
முகர்ந்திடு நாலுதரம்
அள்ளிஎடு ஐந்துதரம்
கொள்ளையிடு ஆறுதரம்
இன்பம் கொடு ஏழுதரம்

இப்படியாக போய் ”குதிக்கும் குதிரையை” என்று அதிர்வேட்டு போடுகிறார் வைரமுத்து. எனக்கு என்னென்னவோ அர்த்தம் புரிகிறது. சென்சார் என்ன செய்யுதுன்னு பார்க்கலாம்.இதிலும் பாடகிக்கே முக்கியத்துவம்.

___________________________________________________________________________________

மொத்தத்தில் மூன்று பாடல்கள் அட போட வைக்கின்றன. படம் வந்து ஹிட்டானால் பாடல்களும் ஹிட்டாகலாம்.. அஜித் அதிகம் வாயசைக்க தேவை இருக்காது. சொல்லாஆஆஆஆஆஆஅமல் தொட்ட்ட்டு செல்ல்ல்ல்லும் தென்ன்ன்ன்றல் போல் பெர்ஃபார்ம் செய்ய அவருக்கு வாய்ப்பு இல்லை. எல்லாம் பெண்கள் ஆதிக்கம், எங்கெ எங்கேவைத் தவிர. இசையில் ஏகனில் இருந்த இளமை இதில் மிஸ்ஸிங். ஆனால் பரத்வாஜின் சமீபத்திய சிறந்த ஆல்பம் எனலாம். படம் ஹிட்டாக வாழ்த்துகள்.

Jan 4, 2010

மொக்கை தர்பார் - புதிய தொடர்

44 கருத்துக்குத்து

 

இந்தப் புத்தாண்டில் புதிதாக, சற்று பெரிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன். எழுதி பழகிய பல பதிவுகள் டிராஃப்ட்டில் தூங்க, அதில் சிலவற்றை மட்டும் தூசு தட்டினேன். புட்டிக்கதையை மற்ற பதிவர்கள் அவரவர் ஸ்டைலில் எழுதினால் எப்படி இருக்குமென்று ஒரு பதிவு இருந்தது. நர்சிம்மின் மாறவர்மன் ஏழுவாக மாறினால் எப்படியிருக்கும் என்று எழுதியதை படிக்கும் போது ஒரு மின்னல் தெறித்தது.

”சோமபானம்தான் எத்தனை பெருமை பெற்றது? கயவர்க்கும், கள்வர்க்கும், காதலர்க்கும் மூளையில் ஏறி மூலையில் சாய்த்து உயர்திணையை அஃறினையாக்கும்  தந்திர திரவம்.

சந்திர வெளிச்சமும் தீப்பந்த ஒளியும் மீறி அடந்து கிடந்த இருட்டின் நடுவில் படர்ந்து இருந்த கூடாரத்திற்குள் கூடி இருந்தது வீரவிக்ரமனும் அவன் தளபதிகளும்.

தளபதி வீரவிக்ரமனும் இளஞ்செழியனும் இன்னபிற தளபதிகளும் ஓவர் போதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்..

ஒரு ஆழ்ந்த நித்திரைக்குப் பின் எழுந்த வீரவிக்ரமன் ஒரு யவ்வனமான நிலையில் அமர்ந்திருந்தபடி ஆஃப்பாயில் போட்டுக் கொண்டிருந்தான்”

தெறித்த மின்னல் இன்னும் செறிவேறியது. பற்பல ஐடியாக்கள் சமையலறையை உருட்டும் எலியைப் போல என் மண்டைக்குள் அலைபாய்ந்தது. ஒரு சரித்திர தொடர் எழுதினால் என்ன? அதுவும் நகைச்சுவை சரித்திர தொடர். ஏற்கனவே இம்சை அரசன் படம் வந்திருந்தாலும் பதிவுலகிற்கு இது கொஞ்சம்  புதிது என்பது போல் தோன்றியது. தொடர்ந்து பல இரவுகள் தூக்கம் தொலைத்து உருவாக்கிய பாத்திரம்தான்

”மாமன்னன் முதலாம் மொக்கைவர்ம பல்லவ மகாராஜா”

இவனோடு, மாமன்னன் மன்னிக்க.. இவரோடு இவரது முதன்மை அமைச்சர்

”அழுகுனி சிம்மன்”

சேர்ந்துக் கொண்டு அடிக்கும் கொட்டங்களை சரித்திர பாணியில் எழுதுவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. சரித்திர தொடர் எழுத ஏதாவது அடிப்படைத் தகுதி இருக்கக்கூடுமோ என்று அஞ்சினேன். புட்டிக்கதைகள் எழுதும் முன் குடித்து பழக்கமில்லையே என்று நான் அஞ்சவில்லை. இதற்கு மட்டும் ஏன் என்று கேட்டது மனசாட்சி. சரிதான் என்று தொடங்கிவிட்டேன்.

ஏழுவைப் போல் நம மொக்கைவர்மன் சோமபானம் அருந்திவிட்டு அடித்த கூத்துகளை மட்டுமே சொல்லப் போவதில்லை இந்தத் தொடரில். தினம் தினம் இவர்கள் இருவரும் நிகழ்த்தும் பராக்கிரமங்களை தொகுக்கப் போகிறேன். ”வரலாற்றில்” யார் யாரோ வாழ, அதற்கு முழுத்தகுதியுடைய நம் மாமன்னர் பெயர் இடம்பெறாமல் போன குறையை தீர்க்கப் போகிறேன்.

தொடர்தான் என்றாலும் வாசகர்கள் இதைத் தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்பதில்லை. தனித்தனி அத்தியாயமாக படித்தாலும் ரசிக்கும் வண்ணமே தொடர் இருக்கும். அவ்வபோது சில கதாபாத்திரங்கள் வந்து போவார்கள். வராமலும் போவார்கள். அவர்களையெல்லாம் அப்போது பார்த்துக் கொள்ளலாம். முதலில் கார்க்கியின் காரில் தொற்றிக் கொள்ளுங்கள். நாம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி போக வேண்டியிருக்கிறது. மன்னர் மற்றும் அமைச்சர்  பற்றியும், இந்தத் தொடர் எப்படி போகவிருக்கிறது என்பதைப் பற்றியும்  இன்று ஓரளவு தெரிந்துக் கொள்வோம்.

______________________________________________________________________________

அழுகுனி சிம்மரே!! சமீபகாலமாக எனக்கொரு பிரச்சினை. என் கண்கள் பெண்களை நோக்கியே செல்கின்றன. யுத்த சத்தத்தை விட முத்த சத்தத்தையே என் காதுகள் கேட்க துடிக்கின்றன.இனிப்பில் இருக்கும் சுகரை விட இடைமெலிந்த ஃபிகரையே என் நா தேடுகிறது.   என் எண்ணமெல்லாம் கிண்ணென்று இருக்கும் அந்தப்புர அழகிகளையே..

மன்னா!! நம் அரண்மனையில் ஏது அந்தப்புரம்?

சற்றும் பொறும் அமைச்சரே. குறுக்கே பேசாதீர்கள். நான் ஆற்றுக்கு அந்தப் புறம் சோழ நாட்டு எல்லையில் குளிக்கும் அழகிகளை பற்றி சொல்கிறேன். இந்த எண்ணம், உலகையே இந்த முதலாம் மொக்கைவர்ம பல்லவனின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தை திசை திருப்பி விடுமோ என அஞ்சுகிறேன். காதல் குறித்து உம் கருத்து என்ன?

மாமன்னா!! தாங்கள் சினப்பட மாட்டீர்கள் என்றால் என் கருத்தை சொல்கிறேன். என்ன இருந்தாலும் ஒரு பெண்ணிடம் மட்டும் கொள்ளும் காதலே சிறந்தது என்பது என் தாழ்மையான கருத்து.

அதுவும் சரிதான் அழுகுனி. ஆனால் இந்தப் புலவன் இருக்கிறானே!! அவன் பெயரென்ன? ம்ம்.. தகரடப்பா.. அவன் காதலைப் பற்றி பாடும்போது “காதல் ஒரு சமுத்திரம். அதை விட்டு குவளை நீரில் ஏன் நீச்சலடிக்க வேண்டும்” என்கிறானே!!

மொக்கைவர்ம மகாராஜா!! காதல் என்பது பருகி பருகி ருசிக்க வேண்டியது. மாறாக அள்ளி உடல் மேல் தெளித்துக் கொள்ள வேண்டியது அல்ல. சமுத்திர நீர் உப்பானது. அதை எப்படி பருகுவது? குவளை நீரென்றாலும் அதுதான் தாகம் தீர்க்க வல்லது என்பது என் வாதம்.

நீர் சொல்வதும் சரிதான் அமைச்சரே!!

எந்த நீரை சொல்கிறீர்கள் மன்னா? கடல் நீரா குவளை நீரா?

உம்மையெல்லாம்.. நீர் என்று உன்னைத்தானடா சொன்னேன் அழுகுனி.

ஹிஹிஹி. நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் மன்னா..

இன்னா?

இல்லை மன்னா..

சரி.இதற்கு தீர்வுதான் என்ன?

மன்னா!! முதலில் நீங்கள் ஒரே ஒரு பெண்ணை மட்டும் காதலியுங்கள். அதாவது குவளை நீர். நான் சமுத்திரத்தில் குளிக்கிறேன். சில மாதங்களுக்கு பிறகு நீங்கள் சமுத்திரம் பக்கம் வாருங்கள். அதன் பின் நாம் இருவரும்..

அழுகுனி.. என்ன சொல்கிறாய்?

இல்லை.அது இல்லை மன்னா!! நாம் இருவரும் நம் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டபின் ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொல்ல வருகிறேன்.

சூட்சமக்காரன்தான் நீர். அழகிகளுக்கு கொடுக்க காசுகள் தேவை. கஜானாவோ உன் மண்டையை போல் காலியாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

ஒரு திட்டம் இருக்கிறது மன்னா. மக்களின் வளர்ச்சிக்காக, அவர்களின் அறிவுத்திறனைப் பெருக்க அரசு ”ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு” ஒன்று அமைக்கப் போகிறது. அதை நடத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வரி என்று ஒன்றை அறிமுகப் படுத்தலாம். இதைக் கட்ட முடியாதவர்கள் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பொருட்கள் அல்லது நபர்களை கொடுத்தால் போதும் என்ற சலுகையும் கொடுக்கலாம் மாமன்னா!!

அற்புதம் அமைச்சரே!!

டண்டண்டண்டண்.. இதனால் நாட்டு மக்களுக்கு………………………….

_________________________________________________________________________

சரித்திரத்தில் இடம்பெற்ற எல்லா சரித்திரக் கதைகளைப் போலவே நம் கதையும் சரச சமாச்சாரத்தில் இருந்தே தொடங்குகிறது. இனி வரும் அத்தியாயத்திற்கும் மேலே சொன்னதற்கும் தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் போகலாம். மீனைப் பிடிக்க தூண்டிலில் மாட்டிய மண்புழுவாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். புழுவை மட்டுமே கடித்தவர்கள் எஸ்ஸாகிவிடுங்கள். கொக்கியையும் சேர்த்துக் கடித்தவர்களுக்கு அடுத்த வாரம் இருக்கிறது தண்டனை. இனி வாராவாரம் ”மொக்கை தர்பார்”.

வேட்டை ஆரம்பமாயிடுச்சு டோய்!!!!

Jan 3, 2010

புத்தாண்டு கொண்டாட்டமும் என் ரெசலியூஷனும்

37 கருத்துக்குத்து

 

   இந்தப் புத்தாண்டு கொஞ்சம் நல்லாவே போச்சுங்க.  நானும் சில நண்பர்களும் 31ஆம் தேதி  ECRல் கண்ட்ரி க்ளப் நடத்தில் இசைக் கொண்ட்டாத்திற்கு சென்றோம். பாப் ஷாலினி, கார்த்திக், ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் விஜய் எல்லாம் வந்திருந்தார்கள். நாடக நடிகை பிருந்தா தொகுத்து வழங்கினார். ASIA’S BIGGEST BLAST 2010 என்று ப்ளெக்ஸ் போர்டு வைத்திருந்தார்கள். குழப்பத்தோடு உள்ளே சென்ற பின் தான் புரிந்தது. 20 X 10 சைசில் ஒரு மேடை. அதைத்தான் 2010 என்று குறிப்பிட்டிருந்தார்கள். S என்பது சோளிங்கநல்லூர், I என்பது ஈஞ்சம்பாக்கம் என்பது மட்டும் தெரிந்தது. A என்பது எந்த ஏரியா என்று தெரியவில்லை.

எண்ட்ரீ ஃப்ரீ என்றவர்கள். உள்ளே நுழையும்போது 150 ரூபாய் கேட்டார்கள். அனுமதி இலவசம்தானாம் ஆனால் டின்னர் கட்டாயமாம். அதற்கு 150 ரூபாய்.இன்னும் 12 மணி ஆவல மச்சான். கொடுத்துட்டு வா என்றேன். வருட முதல் செலவே ஏமாந்ததா இருக்கக்கூடாது என்பதுதான் விஷயம். முதலில் சூப். வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்றார் அங்கிருந்தவர். எட்டிப் பார்த்தேன். வெஜ்ஜில் பூச்சிகளும், நான்-வெஜ்ஜில் சிக்கனும் இருக்கவே நான், நான் – வெஜ் என்றேன். எனக்கு முன்பு குடித்த  நண்பனிடம் சூப் சூப்பரா மச்சி என்றேன். மொக்கை அடிப்பதாக நினைத்து சப்புன்னு இருந்ததை சொல்ல சப்பர் மச்சி என்றான். ஆஹா சிக்கிட்டான்யா ஒருத்தன் என்று நினைத்தபடி “நைட்டுல சாப்பிட்டா டின்னர் மச்சி, ஈவ்னிங் சப்பினாதான் சப்பர்” என்றேன்.

அடுத்த ஐட்டம் பிரியாணி பற்றி கூறுவதற்கு யாதொன்றுமில்லை என்பதால் ஐஸ்க்ரீமுக்கு செல்வோம். ஒருவருக்கு ஒன்று என சின்ன கப் ஒன்று கொடுத்தார்கள். ஒரே ஸ்பூனில் ஸ்வாஹா செய்துவிட்டு “இந்த ப்ளேவரே நல்லா இருக்கு. இதுவே கொடுங்க பாஸ்” என்றேன். ”அதான் சார். அவ்ளோதான்” என்றார். அடப்பாவிங்களா இது சாம்பிள் இல்லையா என்ற என்னை சற்று முறைக்கத்தான் செய்தார். ஐஸ்கிரீம் வைக்கிறவர் இப்படி சூடாவக் கூடாதுங்க. உருகிடுமில்ல என்றபடி நகர்ந்தோம் 900 ரூபாயை தொலைத்து.

மேடையேறிய பிருந்தா கூட்டத்தை நோக்கி கேட்ட ஒவ்வொருக் கேள்விக்கும் புல்லட் வேகத்தில் தெறித்த பதில்கள் யார் சொன்னது என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எல்லோரும் எப்படி இருக்கிங்க

“கொஞ்சம் போதையில்தான் இருக்கோம். நீங்க?”

2009 நல்லபடியா போச்சா?

இதுவரைக்கும் நல்லாத்தான் போது. இப்பதானே நீங்க வந்திருக்கிங்க?

நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கத்தான் இங்க வந்திருக்கோம். அதுக்கு நான் கியாரண்டி.

எல்லோருமா?

முதல்ல இன்று கலக்க போகும் கலைஞர்களுக்கு பெரிய ஓ போடலமா?

கேப்பிட்டல் ஓஓஓஓஓஓ.

முதல் பாடல் வந்தே மாத்ரம்.

முதல்ல ஆர்கனைசர்ஸ் வந்து இவங்கள மாத்றோம்ன்னு சொல்லுங்கப்பா.

   மேடையை விட்டு இறங்கி வந்து சிலரிடம் அவங்க நியூ இயர் ரெசலியூஷன் என்னன்னு கேட்டாங்க பிருந்தா. ஒரு புண்ணியவான் இந்த வருஷமாச்சு வாழ்க்கையில் முன்னேறும்ன்னு சொன்னாரு. முத நாளே இங்க வந்து ஆட்டம் போட்டா எப்படி முன்னேறுவீங்கன்னு சேம் சைடு கோல் அடிச்ச பிருந்தாவை அடுத்தொருவர் அப்பீட் ஆக்கினார். 25 வயதிலே கோடீஸ்வரன்(என் வயசு 26ங்க) ஆயிட்டேன். அதான் என்ன செய்றதுன்னு தெரியாம இங்க வந்திருக்கேன் என்றார்.  அவரை அந்த இருட்டிலும் என் கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன். அடுத்து என்னிடம் வந்து உங்க ரெசலியூஷன் என்ன என்றார் பிருந்தா. கேமராவைப் பார்த்தபடி 5 மெகா பிக்ஸல்ஸ் என்றேன்.

______________________________________

 ஒரு போட்டிக் கேள்வி: நானும் என் நண்பர்களும் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சிக்கு சென்றோம்? முதலில் சரியான பதில் சொல்பவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு.

 

all rights reserved to www.karkibava.com