Dec 17, 2009

வர்றான் பாரு வேட்டைக்காரன்..


 

happy vettaikaran day frds..  

இந்நேரம் வேட்டைக்காரனைப் பற்றிய செய்திகள் சிலர் காதுகளுக்கு வந்திருக்ககூடும், நான்  மாலை 6.30மணி காட்சிக்கு ஆல்பர்ட் செல்கிறேன். வந்து நம்ம கச்சேரிய வச்சிக்கிலாம்.

மாயாஜாலில் 40 காட்சிகளாக தொடங்கிய முன்பதிவு,இப்போது 44 காட்சிகளாக உயர்த்தும்படி ஆகியிருக்கிறது. சென்னையில் மட்டும் 45 திரையரங்குகள். கோவையில் ஒரு திரையரங்கையே புதுசாக சேர்த்திருக்கிறார்கள். இதெல்லாம் விட யூ.கேவில் அவதார் படமே நான்கு காட்சிகள்தான். ஆனால் வேட்டைக்காரன் 7 காட்சிகள். நம்ப மாட்டிங்கன்னு தெரியும். நீங்களே போய் பாருங்க. தகவல் தந்த நண்பர் ட்ரூத் அவர்களுக்கு நன்றி,

இப்போதைக்கு

வசூல் வேட்டையாட வரும்

 

vettaikaran-release-date-poster

.

 படக்குழுவினருக்கு வாழ்த்துகள்

40 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on December 17, 2009 at 10:15 PM said...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. தீபாவளிக்கே வந்திருந்தா எனக்கு வடை போயிருக்காது. :-(

பிரியமுடன்...வசந்த் on December 17, 2009 at 10:18 PM said...

வெற்றி முரசு கொட்டட்டும்...!

தங்கள் விமர்சன் எப்பொழுது எதிர் பார்க்கிறேன்..!

karthi KN on December 17, 2009 at 10:44 PM said...

முதல் கொஞ்ச நாளைக்கு வசூல் வேட்டை.. அப்புறம் மனிஷ வேட்டை ?

தர்ஷன் on December 17, 2009 at 10:59 PM said...

வாழ்த்துக்கள் சகா
நான் திங்கட் கிழமை பார்ப்பதாக பிளான் பார்த்து விட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் பதிவு போடுவதா இல்லையா என

பாசக்கார பயபுள்ள... on December 17, 2009 at 11:06 PM said...

என்னதான் எண்ணெயை தேய்ச்சிக்கிட்டு உருண்டாலும் புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்.. அது மாதிரி எனக்கென்னமோ வேட்டைக்காரனை வேட்டையாடிடுவாங்கனு தான் தோணுது!!!

நாஞ்சில் பிரதாப் on December 17, 2009 at 11:07 PM said...

ஆண்டவா தமிழ்நாட்டை காப்பாத்து...

அண்ணாமலையான் on December 17, 2009 at 11:07 PM said...

எப்படி இருந்தாலும் எனக்கு டோரண்ட்டாயக நமஹ. உங்களுக்கும் சேர்த்து பிரார்த்திக்கறேன்

பிரபாகர் on December 17, 2009 at 11:36 PM said...

சகா,

நாம இங்க சனிக்கிழம பார்க்கப்போறோம்ல... பார்த்துட்டு சொல்லுங்க...

பிரபாகர்.

ILA(@)இளா on December 18, 2009 at 12:43 AM said...

படக்குழுவினருக்கு வாழ்த்துகள்

சுசி on December 18, 2009 at 1:18 AM said...

ஹூ..........................ம்..

நாங்க இன்னும் நாலு நாள் வெயிட் பண்ணணுமே கார்க்கி.

இப்போதைக்கு உங்க விமர்சனத்துக்கு வெயிட்டிங்.

பிள்ளையாண்டான் on December 18, 2009 at 1:38 AM said...

சில மணிகளுக்கு முன் தான் திரைப்படத்தை பார்த்து விட்டு வந்து, உங்கள் பதிவை படிக்கிறேன்.

ரஜினியின் பாதைதான் என்று முடிவே செய்து விட்டார். நிறைய பழைய விஜய் படங்களை நினைவு படுத்தினாலும், "குருவி"‍க்கு எவ்வளவே மேல்...

நிறைய இடங்களில், பஞ்ச் டயலாக்குகளால் நெளிய வேண்டியிருக்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை. பஹ்ரைனில் இரண்டு திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட்டிருக்கிறார்கள். மூன்று தினங்களுக்கு, முன்பதிவு முடிந்துவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள்...

Truth on December 18, 2009 at 3:01 AM said...

"எப்படியும்" 200 நாள் ஓடிடும் :-)

டம்பி மேவீ on December 18, 2009 at 8:32 AM said...

raittu....all the best... best of luck.... many more happy returns of the day....

GET WELL SOON

ராஜகோபால் (எறும்பு) on December 18, 2009 at 9:23 AM said...

//நான் மாலை 6.30மணி காட்சிக்கு ஆல்பர்ட் செல்கிறேன்.///

அப்புறம் நாங்க உங்களை எங்க வந்து பாக்கறது??
;)))
கவலையுடன் ராஜகோபால்

Sangkavi on December 18, 2009 at 9:43 AM said...

//நான் மாலை 6.30மணி காட்சிக்கு ஆல்பர்ட் செல்கிறேன்.///

அப்ப மாலை 7.30 மணிக்கு உங்க விமர்ச்சனத்தை பார்க்கலாம்

ஆவலுடன் இருக்கிறேன் உங்க விமர்ச்சனத்திற்காக.............

Mohan Kumar on December 18, 2009 at 10:01 AM said...

நீங்க விஜய் fan-ஆ? சொல்லவே இல்ல??

////நான் மாலை 6.30மணி காட்சிக்கு ஆல்பர்ட் செல்கிறேன்.///

அப்புறம் நாங்க உங்களை எங்க வந்து பாக்கறது??
;)))

Ha ha ha!!!

கல்யாணி சுரேஷ் on December 18, 2009 at 10:38 AM said...

ராஜகோபால் (எறும்பு) Said

//நான் மாலை 6.30மணி காட்சிக்கு ஆல்பர்ட் செல்கிறேன்.///

அப்புறம் நாங்க உங்களை எங்க வந்து பாக்கறது??
கவலையுடன் ராஜகோபால்
ரிப்பீட்டு. :(

Sen22 on December 18, 2009 at 11:16 AM said...

//karthi KN on December 17, 2009 10:44 PM said...
முதல் கொஞ்ச நாளைக்கு வசூல் வேட்டை.. அப்புறம் மனிஷ வேட்டை ?///


Repeatttuuuuu..

அமுதா கிருஷ்ணா on December 18, 2009 at 11:37 AM said...

அபிராமியில் ஞாயிற்று கிழமைக்கு மூன்று டிக்கெட் இருக்கு..இன்னைக்கு மாலை என் மகன் வெற்றிக்கு போறான்..அவன் சொல்வதினை வைத்தும்,,உங்க விமர்சனத்தினை வைத்தும் படம் போலாமா..இல்லையா முடிவு செய்யணும் கார்க்கி...

பேரரசன் on December 18, 2009 at 11:38 AM said...

அவ்....
அவ்....

2012

நெசந்தானோ..? சகா

எம்.எம்.அப்துல்லா on December 18, 2009 at 12:18 PM said...

வேட்டைக்காரன் பார்த்து உடல்நிலை சரியில்லாமல் அட்மிட் ஆகுபவர்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது

_அரசு அறிவிப்பு.

கில்லிகள் on December 18, 2009 at 12:29 PM said...

// எம்.எம்.அப்துல்லா said...
வேட்டைக்காரன் பார்த்து உடல்நிலை சரியில்லாமல் அட்மிட் ஆகுபவர்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது

_அரசு அறிவிப்//

தலைப்பு செய்தி : ”சன் டிவியின் படத்தை கலைஞர் கலாய்த்தது பிடிக்காமல் மாறன் சகோதரர்கள் அதிருப்தி. கலவரத்தில் அறிவாலயம். அப்பாவி ஊழியர்கள் மூன்று பேர் அழகிரி ஆதரவாளர்களால் வெட்டி கொலை.”

மக்கள்: இதுக்கு வேட்டைக்காரனே படமே தேவலாம்.உயிராவது மிஞ்சியிருக்கும்

டம்பி மேவீ on December 18, 2009 at 12:33 PM said...

"Mohan Kumar said...
நீங்க விஜய் fan-ஆ? சொல்லவே இல்ல??"


கார்க்கி பதிவுகளை புதுசா படிக்கிறிங்களா ?????

கார்க்கி on December 18, 2009 at 2:20 PM said...

படத்த பத்தி பாசிட்டிவ் நியூஸ்தான் வருது.. கில்லி ரேஞ்சுக்கு இல்லைனாலும் வெற்றி உறுதி..

அப்துல்லா அண்ணே, ஏங்க??????

senthils on December 18, 2009 at 3:26 PM said...
This comment has been removed by the author.
கார்ல்ஸ்பெர்க் on December 18, 2009 at 4:31 PM said...

நம்ம ஏரியா'ல மூணு ஷோ தான்'ணா.. :(

http://www.cineworld.co.uk/cinemas/46?fallback=false&isMobileAgent=false

chandran on December 18, 2009 at 4:42 PM said...

தற்போது தான் படத்தை பார்த்துவிட்டு வருகிறேன்.
கில்லி போன்ற வேகம்.ரஜினி படம் பார்த்தது போல் உள்ளது.
இங்கு சிங்கப்பூரில் செவ்வாய் வரை முன்பதிவு முடிந்துவிட்டது.

அன்பு
வூட்லண்ட்ஸ்

நாய்க்குட்டி மனசு on December 18, 2009 at 5:29 PM said...

truth said:
"எப்படியும்" 200 நாள் ஓடிடும் :-)//
ஏன் இந்த கொலைவெறி

Prakash on December 18, 2009 at 6:02 PM said...

2nd half மொக்கையாமே? அது கெடக்கட்டும் தலைவி எப்படி கார்க்கி?

Siva on December 18, 2009 at 7:29 PM said...
This comment has been removed by the author.
Siva on December 18, 2009 at 7:39 PM said...

வேட்டைகாரன்னா மிருகங்களை வேட்டையாடுபவன் அல்ல.மனிதர்களை.யாரும் போய் மூன்று மணி நேர ஆபத்தில் சிக்கி கொள்ளாதீர்கள்.அமுதா கிருஷ்ணா அக்கா ஒங்கூட பொறந்த தம்பியா சொல்லுதேன்.தயவு செஞ்சு வீட்லேயே இருந்துக்கா.கொட்டகைக்கு போய் வேட்டையில மாட்டிக்கிடாத.அப்துல்லா அண்ணன் தெரிய படுத்துன, "வேட்டைக்காரன் பார்த்து உடல்நிலை சரியில்லாமல் அட்மிட் ஆகுபவர்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது

_அரசு அறிவிப்பு" எச்சரிக்கையையும் ஒரு தடவ ஞாபக படுத்தி பாத்துக்கா.வேட்டையில் சிக்கினாலும் உயிரோடிருப்பவன்.

சுரேகா.. on December 18, 2009 at 7:56 PM said...

வாழ்த்துக்கள் சகா!

அவரை விட நீங்கதான் மிகவும் டென்ஷனா இருப்பீங்க!

:)

NO on December 18, 2009 at 8:09 PM said...

எங்க ஊர்ருல....
போவியா.....கூட்டிக்கிட்டு போவியா.......போ போயி ஸ்நொவ தள்ளு......
நாளைக்கு உங்களுக்கு முந்தாநாள் தயிரு சாதம்தான்.............. நகைய கேட்டேனா... நாலு காரு கேட்டேன்னா .. ஒரு நல்ல தமிழ் சினிமா கூடிட்டுபோனுதானே சொன்னேன்........

சொந்த ஊருல.....கேட்ட வரைக்கும்.............
ஐயையையா.......ஐயே....... ...ஐயோ உட்டுரு..... நூத்தி அம்பதுடா....உங்கப்பனா சம்பாதிக்கறான்........

ஜெட்லி on December 18, 2009 at 9:49 PM said...

வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த
மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....

Siva on December 18, 2009 at 10:09 PM said...
This comment has been removed by the author.
Xavier on December 18, 2009 at 10:15 PM said...

கார்கி உங்க ஆசை நிறைவேறியதாக நினைகிறேன். இப்போது தான் படம் பார்த்து விட்டு வந்து எழுதுகிறேன். என் நண்பர் தான் சிங்கப்பூர் ல் வினியோக உரிமை எடுத்துள்ளார் அதனால் எல்லா அரங்குக்கும் சென்று பார்த்தேன் நல்ல ரிசல்ட்.

RAJAPPA on December 19, 2009 at 9:02 PM said...

hi boss
where is the film review of vettaikaaran?
I am waiting to read so that I can skip watching it.

sweet on December 21, 2009 at 3:19 AM said...

ரசிகர்களின் பார்வையில் வேட்டைக்காரன்

விஜய் ரசிகன்: படம் செம சூப்பர். விஜய் நோ சான்ஸ். விஜய் பண்ற காமெடி எல்லாம் பட்டய கிளப்புது. ஐநூறு நாள் கண்டிப்பா ஓடும்.


அஜித் ரசிகன்: என்னய்யா படம் இது? கையால குத்தி கல் உடைக்கிறார்??? அந்த அருவியில் குதிக்கிற சீன் நல்ல காமெடி!!! சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவாராம். எனக்கு என்னமோ போன படங்களில் கிடைச்ச ஆப்பு தான் இப்போ அவரை சாந்தமா பேச வச்சு இருக்குனு தோணுது. அசல் வரட்டும். வேட்டைக்காரன் சட்னி ஆகிடுவான். பாருங்க.


ரஜினி ரசிகன்: தலைவரை காப்பி அடிக்குறதை இவர் நிறுத்த போவது இல்லை என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம். விஜய் தம்பி ஆட்டோ ஓட்டினா பாட்ஷா ரஜினி ஆகிட முடியுமா? கால கொடுமை.

கமல் ரசிகன்: எலி வேட்டைக்கு சாரி, புலி வேட்டைக்கு போறவன் எல்லாம் மருத நாயகம் ஆகிட முடியுமா? வரட்டும். அப்போ தெரியும் யார் மாஸ் என்று?


சூர்யா ரசிகன்: டான்ஸ் மட்டும் ஆடினால் போதுமா? நடிக்க வேண்டாமா? அரைச்ச மாவு புளிச்ச வாசம் அதான் இந்த வேட்டைக்காரன்


சராசரி சினிமா ரசிகன்: படம் மொக்கை தான். ஆனால் வில்லு, குருவிக்கு எவ்வளவோ மேல்.
போக்கிரி படம் கிளைமாக்ஸ் தவிர்த்து பத்து தடவை பார்த்து இருக்கேன். அது நல்லா இருந்தது. ஆனால் இதுல ஏதோ ஒண்ணு பெருசா குறைஞ்சு போச்சு. முதல் பாதி போர் அடிக்காம போச்சு. ரெண்டாம் பாதி காதுல மட்டும் இல்லை காலுக்கும் சேர்த்து பூ சுத்துறாங்க.
ஆனா படம் நல்லா ஓடும். தெனவாட்டு படத்தை ஓட வச்ச சன் டிவிக்கு இதை ஓட வைக்கிறது என்ன பெரிய கஷ்டமா?

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 11:06 PM said...

விமர்சனம்னா கூட ஓகே. படம் பாக்க போறேங்கிறதுக்கே ஒரு பதிவு, அதுக்கும் 40 பின்னூட்டம். :-((

வெண்காட்டான் on December 27, 2009 at 12:39 PM said...

in europe and canada most of the tamils protest against vettaikaaran becaue vijay antony sung a song of sinhala raciest singer. he song for sri lankan army..

 

all rights reserved to www.karkibava.com