Dec 10, 2009

பிளாகராகிறார் கவுண்டமணி


 

   தனது ஃபேவரிட் இடமான உட்லண்ட்ஸ் டிரைவ் இன் திறக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும், இதன் பிறகும் தனக்கு சினிமா வாய்ப்பு வர்ற வழியே இல்லை என்றறிந்ததும், டைம் பாஸ் செய்ய பிளாக் எழுத தொடங்குகிறார் நக்கல் நையாண்டியின் ஹோல்சேல் டீலர் கவுண்டமணி. விஷயம் கேள்விப்பட்டதும் பதிவர்களிடையே சலசலப்பு ஏற்படுகிறது. வழக்கம் போல் அவரைப் பேட்டியெடுக்க ஸ்க்ரிபிலிங் பேடுடனும், பேனாவுடனும் சீறிப் பாய்கிறார் சில நாட்களாக பதுங்கியிருக்கும் பரிசல்.

வணக்கம் சார். என் பேரு பரிசல்காரன்.

என்னடா நாய பேரு அது பரிசல்காரன். விரிசல்காரன்னு. எப்பவுமே தண்ணியில கிடப்பியா?

அது நான் இல்ல சார்.

அது நான் இல்லன்னா பின்ன என்ன ரொமாலி ரொட்டியா? உங்க வூட்டுல உனக்கு பேரே வைக்கலையா?

கிருஷ்ண குமார் சார்.

ஓ… வைக்கும் போதே சார்ன்னு சேத்து வச்சிட்டாங்களோ? இந்த டகால்ட்டி வேல எல்லாம் எங்கிட்ட வேணாம் மவனே. பேர மட்டும் சொல்லு.

கிருஷ்ண குமார்.

அப்படி வாடி வழிக்கு. என்ன வேணும் உனக்கு?

உங்க பேட்டி ஒன்னு.

ஹே…ஹேய். யார்கிட்ட மேன்?  நான் வேட்டி எல்லாம் கட்டுறத இல்ல. ஐ அம் ஒன்லி ஜீன்ஸ், கார்கோ மேன். பார்த்தியா எனக்கும்  சிக்ஸ் பேக்.  ஐ அம் யூத்யா. அவன்  சூர்யா. சூர்யாவுக்கு இடுப்புக்கு மேல சிக்ஸ் பேக். எனக்கு இடுப்புக்கு கீழ சிக்ஸ் பேக். யூ நோ காஃபி ஷாப்? யூ நோ டிஸ்கோ? ஐ அம் ரியல் யூத்யா.

அதில்ல சார். இண்டெர்வியூ.

ஓஹோ. நீ என்ன தொழிலதிபரா? நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்கல சாமீயோவ். பனியன் விக்கிரவன், பணியாரம் விக்கிரவன் எல்லாம் தொழிலதிபராம். டேய் உங்கிட்ட நான் வேலை கேட்டனா? அப்புறம் ஏண்டா என்னையே துரத்தரீங்க?

சார். சொல்றத புரிஞ்சுக்கோங்க. நான் கேள்வி கேட்பேன். நீங்க பதில் சொல்லனும். அப்..

அடேய்.. நான் அடங்கி ஒடுங்கி போய் கிடைக்கிறேன்றதால எவன் வேண்ணா கேட்கலாமா?. இவரு கேட்பாராமே கொஸ்டீன். ஐன்ஸ்டீன் தெரியுமா?  அவரு நானும் பிரஷ் மேட்ஸ்.

பிரஷ் மேட்ஸா? அப்படின்னா என்னங்கண்ணா?

அடேய் வூடு மாரி பெருச்சாளி. கேப்புல அண்ணன்னு சொல்லிட்ட. எனக்கு கூட பொறந்த, குறையா பொறந்தன்னு தம்பிங்க யாரும் இல்ல. நீ நீயா இரு. அதான் எனக்கு சேஃப்ட்டி. பிரஷ் மேட்ஸா? அந்த ஐன்ஸ்டின் பையனும் நானும் ஹாங்காங்கில் இருந்தப்ப ஒன்னாதான் பல் தேய்ப்போம். அதாண்டா நாய பிரஷ் மேட்ஸ்.

நிஜமாவா சார்? அவரு எவ்ளோ பெரிய ஆளு. அப்புறம்?

அப்புறம் என்னடா செல்ஃபோன் தலையா. தண்ணி ஊத்தி வாய கழுவிட்டு போயிட்டே இருப்போம்.

அதில்லை சார்.

டேய் .முன்ன பின்ன பல் விளக்கியிருக்கிய்யா? எல்லோரும் அதான் செய்வாங்க.

ஓக்கே சார். பிளாகுல என்ன சார் எழுத போறீங்க?

நீ என்னடா நாய எழுதற?

நான் அவியல் எ..

அடேய். நீ பரிசல்காரனா சமையல்காரானா? என்னங்கடா ஃபிலிம் காட்டறீங்க.

அதில்ல சார். இதுக்கு தொகுப்பு பதிவுன்னு பேரு. பார்க்கிறத, கேட்கிறத பத்தி எழுதறது.

ஓஹோ. அப்போ நினைக்கிறத பத்தி எழுதினா துவையல்ன்னு சொல்லுவிங்களா?

சார். தமிழில் முதல்ல 500 ஃபாலொயர்ஸ் தொட்டவன் நான் தான். நான் சொல்ற மாதிரி எழுதினா ஃபேமஸ் ஆகலாம்.

இந்த மங்காத்தா எல்லாம் எங்கிட்ட ஆவாது மவனே. ஃபாலோயர்ஸே தமிழ் கிடையாது. அப்புறம் எப்படி தமிழில் 500 ஃபாலோயர்ஸ் உனக்கு? இந்த ஒண்ணரையணா நோட்டையும், இங்க் ஒழுகுற பேனாவையும் வச்சிக்கிட்டு பார்க்கிறத எல்லாம் நீ எழுதுனா உன்னைப் படிக்கிறாங்களா? வாட் இஸ் திஸ் நான் சென்ஸ்?ஓ மை காட்..

அப்படியில்ல சார். சாதாரண டயலாக்கையும் நீங்க சொல்ற ஸ்டைலில் ரசிக்க வைக்கிறங்க இல்லையா? அதே மாதிரி தெரிஞ்ச விஷயம்னாலும் என் ஸ்டைலில் சுவாரஸ்யமா சொல்லி.

அடேய் பாலிடிக்ஸ் பாபா.. உன் மகுடிக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்டி.  என்னை கேனைகிறுக்கன் நினைச்சியா? எனக்கு ஏத்த ஆளு யாருன்னு தெரிஞ்சிட்டுதாண்டி பிளாகே ஓப்பன் செஞ்சேன். யூ கோ ஹோம் மேன். ஐ கோ ஸீ மை ஃப்ரெண்டு.ஹே..ஹேஹேய்.

(பரிசல் அது யாரு யாரு என்று கேட்டபடியே பின்னால் செல்கிறார். தொல்லை தாங்க முடியாமல் பதில் சொல்கிறார் கவுண்டர் “ உன் பேருக்கு பின்னாடி   ரெண்டெழுத்த சேர்த்து சொன்னியே, அந்த அவிஞ்ச தலையன் தான்”. :

விரைவில் கவுண்டரோடு அந்த ரெண்டெழுத்து ஆசாமியின் கலந்துரையாடல் வரும்.

42 கருத்துக்குத்து:

Ibrahim A on December 10, 2009 at 11:17 PM said...

nice....as usual

நாஞ்சில் பிரதாப் on December 11, 2009 at 1:16 AM said...

நல்லாருந்தது சகா...

ILA(@)இளா on December 11, 2009 at 1:32 AM said...

குத்துங்க எசமான் குத்துங்க..

pappu on December 11, 2009 at 1:40 AM said...

யாரு அந்த சாரு? இருந்தாலும் பரிசல் காரன சைடுவாக்குல உங்க ஆசைக்கு திட்டி இருக்கக் கூடாது:)

சுசி on December 11, 2009 at 1:50 AM said...

//சில நாட்களாக பதுங்கியிருக்கும் பரிசல்.//

ம்க்கும்.. அதான் தேர இழுத்து தெருவுல விட்டுட்டீங்களே.

இனி எங்க அவர் பதுங்க???

சுசி on December 11, 2009 at 2:12 AM said...

//நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்கல சாமீயோவ்.//

நீங்க ரொம்ப நல்லவரு கார்க்கி.

//அடேய் பாலிடிக்ஸ் பாபா.. //

சூப்பர் கார்க்கி..

ரொம்ப சிரிச்சிட்டேன்..

பட்டிக்காட்டான்.. on December 11, 2009 at 2:47 AM said...

சகா.. :-))))

Anonymous said...

//உன் பேருக்கு பின்னாடி ரெண்டெழுத்த சேர்த்து சொன்னியே, அந்த அவிஞ்ச தலையன் தான்”. ://

ஹஹஹா:) பரிசல்காரன் சாரு சமையல்காரன் ஆன கதை சூப்பரு.:)

பிரபு . எம் on December 11, 2009 at 5:41 AM said...

Dhool boss!! :)

விஜய் ஆனந்த் on December 11, 2009 at 7:42 AM said...

நல்லா இருக்கு கார்க்கி!!!

:-)))...

மகேஷ் : ரசிகன் on December 11, 2009 at 8:25 AM said...

வேட்டைக்காரன் ட்ரெய்லர் மாதிரி இருந்தது சகா.

வழக்கமா நீங்க சொல்வீங்க. இப்ப நான் சொல்றேன்.

சரி சரி கவலைப்படாதீங்க. உண்மையிலேயே பட்டாசா இருந்தது.

பரிசல கவுத்துட்டீங்களே.

தியாவின் பேனா on December 11, 2009 at 8:48 AM said...

நல்ல பதிவு வரட்டும் நமக்கும் நல்ல நண்பராகலாம்?

taaru on December 11, 2009 at 9:31 AM said...

கூட இம்பூட்டு நல்லா பழகுன பரிசலாருக்கே இந்த நிலமைன்ன...அடுத்த நபர் கூட கவுண்டமணி..!!!
ஐயோ நினச்சாலே டரியல் ஆகுது...
மச்சி பட்டய கிளப்பிரனும்... இடைல இடைல மானே தேனேனு போட்டு தான் அடுத்த பதிவு வரணும்..

தராசு on December 11, 2009 at 9:56 AM said...

பரிசல் அண்ணனை சாடை மாடையில் திட்டியதற்காக கார்க்கிக்கு கண்டனங்கள்.

Achilles/அக்கிலீஸ் on December 11, 2009 at 10:20 AM said...

சூப்பர் சகா.. :)

கார்க்கி on December 11, 2009 at 10:59 AM said...

நன்றி இப்ராஹிம்

நன்றி பிரதாப்

இளா, உஙக்ளுக்கு ஒரு மேட்டர் வச்சிருக்கேன் டிராஃப்டுல. முடிச்சிட்டு மெயில் அனுப்புகிறேன்

பப்பு, அது நான் இல்லைங்க. கவுண்டரு வேலை

சுசி, அப்ப பரிசல் தேரா? அவ்ளோ பெருசாவா இருக்காரு?

@பட்டிக்காட்டான், என்ன சகா??:))

அம்மிணி, நன்றி

நன்றி பிரபு.

நன்றி விஜய். எப்படி இருக்கிங்க பாஸ்???திசம்பர் 16 வந்துட்டே இருக்கு. :))

நன்றி மகேஷ். வேட்டைக்காரன் ஆக்‌ஷன் படம் சாமீ.. காமெடியாக்காதிங்க :))

நன்றி தியா

டாரு, அவருக்கு உங்க பேரை வச்சுதான் கலாய்க்கலாம்னு இருக்கேன். ரெண்டும் ரைமிங்க்கா இருக்கு இல்ல :))

தராசண்ணே, அப்ப நேரா திட்டுடா ட்யூப் லைட்டுன்னு சொல்றீங்களா? ஆவ்வ்வ்வ்

நன்றி அக்கிலீஸ். பெங்களூர் குளிர் எப்படி இருக்கு

செ.சரவணக்குமார் on December 11, 2009 at 11:08 AM said...

கலக்கல் சகா. ஆமா பரிசல் அண்ணண் மேல ஏன் இந்தக் கொல வெறி?

கல்யாணி சுரேஷ் on December 11, 2009 at 11:19 AM said...

Karki Rocks.......... :)))))))))

விக்னேஷ்வரி on December 11, 2009 at 11:25 AM said...

அடுத்து சாருவா... ம், நடத்துங்க. அடங்க மாட்டீங்க.

நல்லாருக்கு இந்தப் பதிவு.

Rajeswari on December 11, 2009 at 11:40 AM said...

அந்த கடைசி ரெண்டு வரி...

ஹி ஹி ஹி...


கலக்கல்...

ரஞ்சனி on December 11, 2009 at 11:49 AM said...

சூப்பர் கார்க்கி. மியுசிக்கல் நோட்ஸ் மாதிரி உங்க எழுத்து மாடுலேஷனையும் தருது. எந்த இடத்துல கவுண்டமணி சவுண்டி ஏத்துவாரோ அதே மாதிரி படிக்க முடியுது. காமெடிதான்னாலும் சூப்பரா எழுதி இருக்கிங்க. ஆல் தி பெஸ்ட்.

தர்ஷன் on December 11, 2009 at 12:03 PM said...

அடுத்ததுக்கு waiting சகா
ஆனால் கொஞ்சம் பார்த்து கவுண்டமணிய control ஆக பேச சொல்லுங்க

நர்சிம் on December 11, 2009 at 12:04 PM said...

ரைட்டு சகா..

ஸ்ரீமதி on December 11, 2009 at 12:29 PM said...

பதிவு நல்லா இருக்கு. ஆனா, பரிசல் அண்ணா மேல ஏன் இவ்ளோ கொலவெறி? :))

மணிப்பக்கம் on December 11, 2009 at 1:41 PM said...

:)

RaGhaV on December 11, 2009 at 1:45 PM said...

சூப்பர் பதிவு கார்க்கி.. :-))

பூங்குன்றன்.வே on December 11, 2009 at 1:51 PM said...

நல்ல நகைச்சுவையான கற்பனை பாஸ்.அருமையா இருக்கு.

RAMYA on December 11, 2009 at 2:26 PM said...

ம்ம்... நல்லா இருக்கு செம் கலக்கல், கவுண்டமணி ஸ்டைல் தூள் கிளப்பி இருக்கீங்க :-)

சகோதரர் பரிசலை கவுண்டமணிகிட்டே நல்லாவே கோத்து விட்டுடீங்க :(

டம்பி மேவீ on December 11, 2009 at 3:08 PM said...

உரையாடல் போட்டிக்கு எழுதினாதா இது ??????

சொல்லவே இல்லை ... வாழ்த்துக்கள்

(ஹி ஹி ஹி ஹி )கொக்கு மக்காக பின்னோட்டம் போடுவோர் சங்கம்

வருட சந்தா பத்து ரூபாய்

வால்பையன் on December 11, 2009 at 3:20 PM said...

//எப்பவுமே தண்ணியில கிடப்பியா?//

ஆமாமுங்க!

பேநா மூடி on December 11, 2009 at 5:16 PM said...

தலைவர் காமெடி-ஐ நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சு..,

நாஞ்சில் நாதம் on December 11, 2009 at 5:39 PM said...

:)))

பரிசல்காரன் on December 11, 2009 at 5:45 PM said...

நல்லா இருய்யா... நல்லா இரு.

ஏன் இப்படித் தாக்கறன்னு எனக்குத்தான் தெரியும். வெச்சுக்கறேன்யா...

அறிவு GV on December 11, 2009 at 7:20 PM said...

அருமையா இருக்கு. தலைவரும் அந்த ரெண்டெழுத்து ஆசாமியும் எப்போ மீட் பண்ணுவாங்க..? :))

Karthik on December 11, 2009 at 8:21 PM said...

rofl...:)))

அடுத்த பதிவு எப்போ ரிலீஸ் ஆகும்னு சொன்னீங்கன்னா முத நாளே படிச்சிருவேன். :))))

Chitra on December 11, 2009 at 10:11 PM said...

கொய்யால............. சிரிச்சி சிரிச்சி............ கலக்கல் கற்பனை.

ILA(@)இளா on December 11, 2009 at 10:25 PM said...

//இளா, உஙக்ளுக்கு ஒரு மேட்டர் வச்சிருக்கேன் டிராஃப்டுல.//
புள்ளப்பூச்சிய அடிச்ச பாவம் உங்களுக்கெதுக்குங்கிறேன்?

கார்க்கி on December 12, 2009 at 10:44 AM said...

அனைவருக்கும் நன்றி !!

@இளா,

பின்ன.. சிங்கத்துக்கு கூட சண்டை போட்டு என்னை சாக சொல்றீங்களா பாஸ் :)))))

ஆதிமூலகிருஷ்ணன் on December 12, 2009 at 6:00 PM said...

கொலவெறிப்பதிவு. மொத்தத்துல புடிக்கலை.

ஊர்சுற்றி on December 14, 2009 at 10:13 PM said...

கலக்கல் கார்க்கி.

தமிழ்ப்பறவை on December 14, 2009 at 11:02 PM said...

waiting for next part

blogpaandi on December 15, 2009 at 6:30 AM said...

கவுண்டமணி dialogues super :)

 

all rights reserved to www.karkibava.com