Dec 29, 2009

ஜென் குருவும், பிள்ளையார் மாமாவும்


 

       

தெருமுனை குட்டிச்சுவரை

வளர்த்துவிடும் நோக்கில்shortwall

நால்வர் குழு மேலேறி அமர்ந்தோம்

கடந்து செல்லும் எல்லோருக்கும்

மதிப்பெண் போட்டு

ஆசிரியர் சேவை செய்துக்கொண்டிருந்தோம்.

நீ

கடந்த போது கலவரப்பட்ட நான்

தொப்பென கீழே குதித்தேன்.

உடனிறங்கிய மற்றொரு ஆசிரியர்

ஜென் குருவாகவே மாறிப் போய் சொன்னார்

“இதுவும் கடந்து போகும் மச்சி”

********************************************************************************************************************

    

இப்போதெல்லாம்

பால் குடிப்பதில்லை

என்பதாலோ என்னவோ

ரயில்வேகேட் பிள்ளையாருக்கு

ஓப்பனிங் சரியில்லை.

அவ்வழியே சென்றபோது

உள்நுழைந்த என்னை

“என்னடா மச்சி”

என்றார்கள் நண்பர்கள்.

“பிள்ளையார் மாமா காப்பாத்து”

என்றதை கேலி செய்தவர்களுக்கு

எப்படித் தெரியும்

முன்தினம் தான்

“பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா”

என்று நீ வேண்டியது.

33 கருத்துக்குத்து:

க‌ரிச‌ல்கார‌ன் on December 29, 2009 at 8:51 AM said...

//“பிள்ளையார் மாமா காப்பாத்து”//

ஓஹோ

Anonymous said...

பிள்ளையார் பேச்சிலராச்சே :)

♠ ராஜு ♠ on December 29, 2009 at 9:23 AM said...

உடனடியா “கார்க்கி கொலைவெறிப்படை”ன்னு ஒரு ஸ்தாபனம் ஆரம்பிக்கனும்ன்னு நெனைச்சேன்”. ஆனா, பதிவு லேபிளைப் பார்த்தவுடன் மேட்டர் டிராப்...!

கும்க்கி on December 29, 2009 at 10:05 AM said...

ஊஊஊஊஊஊஊஊஊஊ.

தர்ஷன் on December 29, 2009 at 10:09 AM said...

//“பிள்ளையார் மாமா காப்பாத்து”

என்றதை கேலி செய்தவர்களுக்கு

எப்படித் தெரியும்

முன்தினம் தான்

“பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா”

என்று நீ வேண்டியது.//

ம்ம் ஏற்கனவே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு
பரவாயில்லை தொடருங்கள்

ஸ்ரீமதி on December 29, 2009 at 10:27 AM said...

ரைட்டு...

pappu on December 29, 2009 at 10:47 AM said...

ஆண்டவா! ஏன் இப்படியெல்லாம்?

அன்புடன்-மணிகண்டன் on December 29, 2009 at 10:49 AM said...

அட.. SMS-களைக் கூட கவிதையாக்க முயன்றிப்பது சிறப்பு..

அன்புடன் அருணா on December 29, 2009 at 10:53 AM said...

பாவம் பிள்ளையார் மாமா!

அமுதா கிருஷ்ணா on December 29, 2009 at 11:01 AM said...

”உ” கவிதை நச்....

ஆரூரன் விசுவநாதன் on December 29, 2009 at 11:14 AM said...

"உ" வரிகள் அருமை

கார்க்கி on December 29, 2009 at 11:16 AM said...

@கரிசல்காரன்,
என்ன சகா?

@அம்மிணி,
காலம் மாறிப் போச்சுங்க

@ராஜூ,
தெளிவுடா ராசா நீ!!!

@கும்க்கி,
சங்கு ஊதறீங்களா?

@தர்ஷன்,
ஹிஹிஹி.. எங்கண்ணா?

@ஸ்ரீமதி,
நன்றி டீச்சர்

@பப்பு,
என்னப்பா? என்ன போய். ஆண்டவன்னு...ச்சே.. நெஞ்ச நக்கிட்ட

@மணிகண்டன்,
நன்றிப்பா

@அருணா,
ஏங்க?

@அமுதா,
கவிதையா??ஆவ்வ்

மக்களே, சிலர் ரொம்ப சீரியஸா முன்பு எழுதிய கவிதைஅக்ள் நல்லா இருந்துச்சேன்னு கேட்கறாங்க. தெரியாம “அ” வரிசைல போட்டுட்டேன். ஆனா இதை கவிதைன்னு நினைச்சு எழுடஹ்ல. லேபிள் கூட பாருங்க.இது முற்றிலும் ஒரு மொக்கைக்கான முயற்சியே..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. நம்மளயும் நம்பறாங்கப்பா.. நன்றி ஆனந்த விகடன்

RaGhaV on December 29, 2009 at 11:27 AM said...

என்ன சகா.. வேட்டைகாரன் படத்தோட பாதிப்பு இன்னமும் குறையல போல.. ;-)

அகமது சுபைர் on December 29, 2009 at 11:29 AM said...

நடக்கட்டும் நடக்கட்டும்...

கடைக்குட்டி on December 29, 2009 at 11:48 AM said...

இன்னும் பாதிப்புலேர்ந்து வெளிய வரலியா??? :-)

நர்சிம் on December 29, 2009 at 11:55 AM said...

சகா வாழ்த்துக்கள். நடக்கட்டும்

Anbu on December 29, 2009 at 12:12 PM said...

பிள்ளையார் மாமா...அப்ப அத்தை யாரு..??

விக்னேஷ்வரி on December 29, 2009 at 12:18 PM said...

ஹாஹாஹா.... கவித... கவித....

லேபிளால தப்பிச்சீங்க. ஆனா, நாங்க மாட்டிக்கிட்டோம். :(

பின்னோக்கி on December 29, 2009 at 12:25 PM said...

பிள்ளையார் - மிக அருமை

ஆதிமூலகிருஷ்ணன் on December 29, 2009 at 12:33 PM said...

கொஞ்சம் காதல், கொஞ்சம் நகைச்சுவை, பிடித்திருந்தது.!

முனைவர்.இரா.குணசீலன் on December 29, 2009 at 12:38 PM said...

பிள்ளையார் மாமா காப்பாத்து”

என்றதை கேலி செய்தவர்களுக்கு

எப்படித் தெரியும்

முன்தினம் தான்

“பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா”

என்று நீ வேண்டியது//

ஒரு நகைச்சுவை கவிதையாக..
நன்றாகவுள்ளது..

சுசி on December 29, 2009 at 2:31 PM said...

கேக்கும்போது வந்த கொலைவெறி கவிதையாஆ படிக்கும்போது வரல கார்க்கி :)))

தேங்க்சுப்பா.

நேசன்..., on December 29, 2009 at 3:48 PM said...

பாஸ்!...ரெண்டாவது கவிதை ஏற்கனவே வந்த ஒரு ஜோக் தான?!......

டம்பி மேவீ on December 29, 2009 at 5:05 PM said...

raittu


ennoda puthu blog kku vanga thala....

கார்க்கி on December 29, 2009 at 5:36 PM said...

@ராகவ்,
ஏன் சகா? பதிவு அவ்ளோ சூப்பராவா இருக்கு? :))

நன்றி ஆரூரான்

நன்றி அகமது

கடைக்குட்டி, ம்ம்

@நர்சிம்,
எதுக்கு சகா?

@அன்பு,
தெளிவுடா ராசா நீ :))

@விக்கி,
அரசியல இதெல்லாம் சாதாரணம்ப்பா

@பின்னோக்கி,
பிள்ளையாரிடம் சொல்கிறேன் சார்

@ஆதி,
அப்பாடா!!!

நன்றி முனைவரே

@சுசி,
என்ன செய்யலாம் சொல்லுங்க?

@நேசன்,
கிகிகி.ஆமா சகா

@மேவீ,
நீ நடத்து ராசா

Karthik's Thought Applied on December 29, 2009 at 6:25 PM said...

Superbbbbb !!!! gud one

Raja Subramaniam on December 29, 2009 at 6:47 PM said...

“இதுவும் கடந்து போகும் மச்சி”

nice one

பிரியமுடன்...வசந்த் on December 29, 2009 at 8:49 PM said...அடுத்தவங்களோடதுன்னா ஆஹா...

தன்னோடதுன்னா அவ்வ்வ்...

இதுவும் கடந்து போகும்ன்னு முடிச்சது நல்லாருக்கு சகா...!

தமிழ்ப்பறவை on December 29, 2009 at 11:31 PM said...

'உ’- பிடிச்சிருந்தது சகா...
‘உ’,’ஊ’ இரண்டும் அக்மார்க் கார்க்கி ஸ்டைல் எனினும், முன்னதில் நல்ல கவித்துவமும், பின்னதில் வாரமலர்,குடும்பமலர் பத்துரூபாய்க் கவித்துவமும் தெரிகிறது.

பலா பட்டறை on December 30, 2009 at 7:28 AM said...

சேர்த்து படிச்சாலும்
பிரிச்சி படிச்சாலும்

....

முடியலைங்க வயிறு வயல்ன்ட்டாவுது ...::))

Anonymous said...

வெறித்தனம் பாஸ்!!

Anonymous said...

ஊ கவிதைல வர பொண்ணு காது அப்பா மாதிரியாமே? அப்படியா ?

cheena (சீனா) on May 29, 2011 at 5:55 PM said...

உ ஊ ரெண்டுமே அருமை. ஜென் தத்துவம் - இதுவும் கடந்து போகும் - சூப்பர். பிள்ளையார் மாமா - மொத மொதலா காதுல வுழுது. யாரும் சொல்லாத உறவு. கலக்கறீங்க கார்க்கி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

 

all rights reserved to www.karkibava.com