Dec 28, 2009

புதிர் விடைகளும் சிம்புவின் சுக்ர திசையும்


இதுவரை ஒருவர் மட்டுமே ஏழு கேள்விகளுக்கு சரியான பதில் எழுதி இருக்கிறார். அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கிறது கம்பேனீஈஈஈஈஈஈஈஈ.

வாழ்த்துகள் தமிழ்ப்பறவை.

*******************************************

1) தளபதியின் ஆள் இவர். ஆனால் தல இவரை தினமும் கொஞ்சுகிறார். யார் இவர்?

அனுஷ்கா. அஜித் மகளின் பெயர் இதுதான்.

2) மழை இப்படி பெய்தால் தான் சூர்யாவுக்கு பிடிக்கிறதாம். எப்படி?

”ஜோ”ன்னு மழை பெஞ்சாத்தானே சூர்யாவுக்கு பிடிக்கும்?

3) தனது பெயரின் முதல் பாதியை சிவாஜியின் முக்கிய ஐட்டத்தையும், பின் பாதியில் தனது சொந்த ஊர் தொடர்பான ஐட்டத்தையும் வைத்திருக்க்கிறார். யார் இவர்?

விக்ரம்…  சிவாஜியும் ”விக்”கும் கார்க்கியும் மொக்கையும் மாதிரி இல்லையா? அவர் ஊர் பரமக்குடி. அதான் ”ரம்”

4) பசங்க சில பேர் நடிச்ச படத்தில் இவரும் ஒருவர். படம் ஊத்திக் கொண்டாலும் அதிகம் ஆடியவர். இவருக்கு முதன் முதலில் பெயர் வாங்கித் தந்த படத்தையே சமீபத்தில்தான் பார்த்தாராம். யார் இவர்?

BOYZ படத்தில் நடித்த பரத். நல்லாத்தானே ஆடினார் அந்தப் படத்தில்!!! அவருக்கு பேர் வாங்கித் தந்த முதல் படம் “காதல்”. சமீபத்திய படம் “கண்டேன் காதலை”. க்ளூ சரியா?

5) குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கினாலும் போர்வையே இனி எனக்கு வேண்டாமென்று சொல்ல மாட்டார் அஜித். ஏன்?

குளிருக்கு ஷால் போர்த்திப்பாங்க இல்லையா? கோடை வந்தடுச்சுன்னு “ஷால்”இனி வேணாம்ன்னு சொல்லுவாரா தல?

6) நயன்தாரா வரிசையில் இடம்பிடித்தவர் என்றாலும் த்ரிஷாவுக்கும் இவருக்கும் கூட முடிவில் ஒற்றுமை உண்டு. . இவரது பெயரும் பிரபல ஒளிப்பதிவாளரின் பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அவரது கேமராவில் அடங்காத அளவுக்கு வளர்ச்சி கண்ட இந்த நடிகை யார்?

நயன்தாரா வரிசையில் நைண்ட்டிதாரா என்று இடம் பிடித்தவர். திரிஷாவின் கடைசி எழுத்தும் இவரின் கடைசி எழுத்தும் ஷா. அந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. அடங்காத வளர்ச்சி கண்ட நிரோஷா தான் அவர். அவரின் பெயரிலே இன்னொரு க்ளு கொடுக்க நினைத்தேன். கிகிகி

7) உலக நாயகனின் ஓடாத ரத்த ஆற்றில் முக்கிய பங்கு வகித்தவர் என்றாலும் இவர் திரைத்துறைக்கு வந்தது என்னவோ 2002ல்தான். பயணத்தைத் தினம் தினம் ரசிக்கும் இவரின் அடுத்த வெளியீடு விரைவில். யார் இவர்?

ஓடாத ரத்த ஆறு என்றால் குருதிபுனல். அது ஓடாத படம்தானே? அதில் “ஆப்ரேஷன் தனுஷ்” முக்கியமான விஷயம். ஆனால் இவர் நடித்த முதல் படம் வெளிவந்தது 2002ல். இவரது மகனின் பெயர் யாத்ரா. யாத்ராவுக்கு தம்பியோ தங்கையோ விரைவில் வரப் போகிறது. தனுஷ் தான் அவர்

8) காற்றில் பரவும் வஸ்துவால் உலக புகழ்பெற்றவர். காற்றையே தனது முதலெழுத்தாக கொண்டாலும், நான் என்ற அகந்த இல்லாதவர் என்பதை காட்ட அதை மட்டும் அழித்துவிட்டார் போலும். யார் இவர்?

காற்றில பரவும் இசை. காற்று என்றால் AIR. I என்றால் நான். அதை நீக்கிவிட்டால் A R. இனியும் யாரென்று சொல்ல வேண்டுமா?

*******************************

ஏ.ஆர். என்றவுடன் இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இசை லண்டனில் கடந்த 19ஆம்தேதி வெளியிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் எங்கேயும் இசைத்தட்டு கிடைக்கவில்லை. அப்படியென்றால் அன்று நடந்த நிகழ்ச்சி எதற்கு என்று புரியவில்லை. அதெல்லாம் விடுங்க. பிபிசியில் ரகுமானின் பேட்டி ஒளிபரப்பப்பட்ட போது 30 செகண்ட் ஹொசன்னா என்ற பாடலையும் காட்டினார்கள்.

என்ன சொல்றது? வார்த்தையே வரலை. சிம்புவுக்கு சுக்ர திசை சூ,,ப்பரா அடிக்குது..எப்படா சிடி வருமென்று ஏங்க வைக்கும் பாடல்.

26 கருத்துக்குத்து:

கார்த்திகைப் பாண்டியன் on December 28, 2009 at 2:39 PM said...

தல.. if you dont mind.. பதில்களை இப்போ சொல்லலாமா?:-)))

கார்த்திகைப் பாண்டியன் on December 28, 2009 at 2:47 PM said...

//எப்படா சிடி வருமென்று ஏங்க வைக்கும் பாடல்.//

எல்லா சைட்லயும் பாட்டு லிஸ்ட் மட்டும்தான் இருக்கு சகா.. சென்னைல ரிலீஸ் பண்ணிட்டுத்தான் பாட்டு வெளிய விடுவாங்க போல தெரியுது..

உமா on December 28, 2009 at 3:14 PM said...
This comment has been removed by the author.
♠ ராஜு ♠ on December 28, 2009 at 3:16 PM said...

முதல்கேள்வி அனொஷ்கா-அனுஷ்கா..
?!?!?

வி.தா.வ. பாடல்கள் ப்ரொமாஸ் பார்த்தீங்களா..?கலக்கலா இருக்கு.
ஹலோ, இப்போ சிம்பு. அடுத்து யார்ன்னு தெரியும்ல..!
:-)

கார்க்கி on December 28, 2009 at 3:26 PM said...

@கார்த்திகை,

சொல்லுங்க.. பேராசிரியர் இல்ல? இப்படித்தான் இருக்கனும் :)))

@ராஜூ,
இப்படித்தான் மிரட்டல்னு சொன்னிங்க. கஜினி வந்தாரு. அப்புறம் சுறாங்கனின்னு கெளதமே வச்சே சொன்னிங்க. எங்காளு சுறாவாயிட்டாரு. 50வது படம் வெங்கட்டுன்னு சொன்னிங்க. அவரும் விஜய்கிட்ட கதை சொல்றாரு.. எல்லாம் முடிஞ்ச பிறகு சொல்லு நைனா :))

பித்தன் on December 28, 2009 at 4:28 PM said...

ok oke

மோகன் குமார் on December 28, 2009 at 4:43 PM said...

உக்காந்து யோசிப்பீங்களோ??

நாஞ்சில் பிரதாப் on December 28, 2009 at 5:19 PM said...

நான் சொல்லலாம்னு நினைச்சேன்...சரி உங்களுக்கு எதுக்கு வீண் செலவுன்னுதான்... எல்லாமே என்க்கு தெரிஞசவிடைதான்...அதனால ஒண்ணும் பிரச்சனை இல்ல... வர்ட்டா சகா...நெக்ஸ்ட் மீட் பண்றேன்... அவ்வ்வ்

பின்னோக்கி on December 28, 2009 at 5:29 PM said...

அப்பாடி பயங்கர புதிரா இருக்கே.
எப்படித்தான் தமிழ்பறவை கொத்துச்சுன்னு தெரியலை.

ஒன்னுத்துக்கும் பதில் தெரியாததால இனி தமிழ் படம் பார்க்குறதே வேஸ்டுன்னு நினைக்கிறேன்.

அப்புறம் ஒரு சின்ன டவுட்.

// உலக நாயகனின் ஓடாத ரத்த ஆற்றில் முக்கிய பங்கு வகித்தவர்

வகித்தவர் என்பதால் ஒரு உயிருள்ளவற்றின் பெயர் தானே இருக்க வேண்டும்? ஆப்ரேஷன் தனுஷ் என்பது ஒரு திட்டத்தின் பெயர் தானே ?

என் டவுட்டை கொஞ்சம் விளக்கவும். (வேற என்ன எல்லாம் வயித்தெரிச்சல் தான் :) )

அன்புடன்-மணிகண்டன் on December 28, 2009 at 5:36 PM said...

ஆமா கார்க்கி... 30 செகண்டுக்குள்ள மூளைக்கு ஏறுது மியூசிக்.. சிம்பு கொடுத்து வச்சவர் தான்.. :)

சுசி on December 28, 2009 at 5:42 PM said...

சூப்பர் கார்க்கி..

இன்னையோட உங்களுக்கு ஏற்கனவே உள்ள பட்டங்களோட பதிவுலக புதிர்சாமி என்னும் பட்டமும் வழங்கப்படுகிறது.

தமிழ் பறவைக்கு வாழ்த்துக்கள்.

வி தா வ பாடல்கள் உங்க விமர்சனத்தோட கேக்கலாம்னு இருக்கேன் :)))

Anbu on December 28, 2009 at 5:45 PM said...

அண்ணே..தமிழ் பாட்டா..இல்லை...ஆங்கில பாட்டா..

எப்படி இருந்தாலும் இசை விமர்சனம் எழுதுங்க அண்ணே..

Mr.சிங்கம் on December 28, 2009 at 6:27 PM said...

வணக்கம் கார்க்கி
குருதிபுனல் ஓடாத படமா , தங்கள் புதிரில் ப்ழை
பதில்தான் தெரியவில்லை எதாவது கேள்வியாவது கேட்டுவைப்போம்

பானர்ஜீயின் போஸ்டர்கள் on December 28, 2009 at 8:09 PM said...

listen it karki...lyrics r funny..


VTV Mp3 promo http://wign.net/Mp3-Uyirvani.com/Hosanna%20Mp3.mp3

முகிலன் on December 28, 2009 at 8:37 PM said...

தமிழ்ப்பறவைக்கு பிட் பாஸ் பண்ணீங்களா?

இல்லைன்னா தமிழ்ப்பறவை உண்மையிலயே சூப்பர்.

இதுமாதிரி பல புதிகளை வரவேற்கிறோம்.

(என்னால முதல் ரெண்டு கேள்விதவிர வேற எதுக்கும் பதில் தெரியல)

முகிலன் on December 28, 2009 at 8:39 PM said...

நர்சிம் மாதிரி புக் தர்றேன்னு பொய் சொல்லாம நிஜம்மாவே புக் அனுப்பி வைங்க.

தமிழ்ப்பறவை ஃபாலோ-அப் குடுங்க.

தமிழ்ப்பறவை on December 28, 2009 at 10:17 PM said...

ஜெயிச்சிட்டேனா...?! நன்றி சகா...
கடந்த பத்துநாள் தொடர் அலுவலகச் சுமைக்கு இடையில நல்ல ரிலாக்ஸ் கொடுத்த புதிர்ப்போட்டி...(மாலை விடையைப் பார்க்கும்முன்பே 7வது கேள்விக்கான விடையையும் கண்டுபிடித்துவிட்டேன் சகா.இரவில் கமெண்ட்ட நினைத்திருந்தேன்).

வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றிகள்...
முகிலன் கண்டிப்பா வாங்கிருவோம்ல...

கார்க்கி on December 28, 2009 at 10:26 PM said...

நன்றி பித்தன்

மோகன், யோசிக்கும் போது நின்னா கால் வலிக்குங்க. அவ்ளோ நேரம் யோசிப்பேன். அதனால் சிட் டவுன் தான்

பிரதாப், எவ்ளோ நல்லவருங்க நீங்க :)

பின்னோக்கி, டிடி அனுப்பி இருந்தா உங்களுக்கும் பிட் கொடுத்திருப்பேன்

மணி, பாடலின் நடன் இயக்குனரும் சிறந்த கலைஞர். ஒலி ஒளி என இரண்டிலும் பட்டையை கிளப்பும்.

புதிர்சாமியா? சன் நியூஸீல் போட்டுட போறாங்க..ஆவ்வ்வ்

அன்பு, ஆங்கில வார்த்தைகளை கேட்கும் போதே தெரியலையா இது தமிழ் படப்பாட்டு தானென்று

சிங்கம், உங்கள் பிழையில்தான் பிழை உள்ளது. பாருங்க

நன்றி பானர்ஜி. என்ன பேருங்க அது?

ஹலோ, முகிலன்.. அத தமிழ்ப்பறவை கேட்ப்பாரு.. என்ன ஒரு நல்லெண்ணம் பாஸ் உங்களுக்கு :))

பற்வை, நீங்க அறிவாளிங்க. நீங்களே அறிவாளின்னா இந்த கேள்விகளை கேட்டவரு... ஜீனியஸ்ப்பா

ஆதிமூலகிருஷ்ணன் on December 28, 2009 at 10:50 PM said...

சில தவிர அனைத்தும் படு மொக்கையான கேள்விகள். இதைக்கண்டுபிடிக்கவும் ஒரு ஆள் இருந்ததை நினைக்கும்போது மயக்கமே வருகிறது.? அடப்பாவிகளா..

தமிழ்ப்பறவை on December 28, 2009 at 10:54 PM said...

//இதைக்கண்டுபிடிக்கவும் ஒரு ஆள் இருந்ததை நினைக்கும்போது மயக்கமே வருகிறது.? அடப்பாவிகளா.//
நற...நற...

கார்த்திKN on December 28, 2009 at 11:52 PM said...

மியூசிக் அருமை.. சிம்பு படத்தில் பாட்டும் டான்சும் தான் நல்லா இருக்கும் ..இந்த படத்துல பாட்டு ஹிட்டாகும்.. ஆனா படம்..?

கார்க்கி on December 29, 2009 at 8:58 AM said...

@ஆதி,

அச்சச்சோ.. என்ன சகா இப்படி சொல்லிட்டிங்க? நான் எல்லாமே மொக்கை கேள்வியா தானே நினைச்சேன்? தோல்வியை ஒப்புக் கொண்டு இனிவரும் நாளில் 100% மொக்கைக்கு பாடுபடுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்

@கார்த்தி,

பாட்டு ஓக்கே. டான்ஸ் அந்த அளவு தெரியல சகா. அந்த டைப்பான நடனத்தில் ஒரு பரவசம் இருப்பதில்லை. பெர்ஃபெக்‌ஷன் மட்டுமே எனக்கு தெரிகிறது

விக்னேஷ்வரி on December 29, 2009 at 12:23 PM said...

நீங்க யோசிச்சிருக்குறதை நினைச்சாலே எனக்கு தலை வலிக்குது. யப்பா.... என்ன மண்டைப்பா உங்களுக்கு.

விக்னேஷ்வரி on December 29, 2009 at 12:26 PM said...

தோல்வியை ஒப்புக் கொண்டு இனிவரும் நாளில் 100% மொக்கைக்கு பாடுபடுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் //

ஆஹா.... ஆதி, கார்க்கியை உசுப்பேத்தி விட்டுட்டீங்களே. இனி நாம தலையைப் பிச்சிக்க வேண்டியது தான். :(

பரிசல்காரன் on December 30, 2009 at 9:58 AM said...

போடா....

Karthik on January 3, 2010 at 6:25 PM said...

//@ராஜூ,
இப்படித்தான் மிரட்டல்னு சொன்னிங்க. கஜினி வந்தாரு. அப்புறம் சுறாங்கனின்னு கெளதமே வச்சே சொன்னிங்க. எங்காளு சுறாவாயிட்டாரு. 50வது படம் வெங்கட்டுன்னு சொன்னிங்க. அவரும் விஜய்கிட்ட கதை சொல்றாரு.. எல்லாம் முடிஞ்ச பிறகு சொல்லு நைனா :))

http://www.youtube.com/watch?v=kcFavn_LC6Y

thala count down starts...:)

 

all rights reserved to www.karkibava.com