Dec 27, 2009

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு புத்தகம் பரிசு


 

புதிர்கள் மூளைக்கு வேலை தருகிறதாம். புதிர் போடுபவர்களுக்கா பதில் தேடுபவர்களுக்கா என்பதையெல்லாம் ஓரமாக வைப்போம்.  இங்கே இருக்கும் புதிருக்கான அனைத்து விடைகளையும் சரியாக சொல்லும் மூன்று பேருக்கு இந்த வருட புத்தக கண்காட்சியில் தலா ஒரு புத்தகம் பரிசாக வாங்கித் தரப்படும். நடுவரின் (நான் தாம்ப்பா) தீர்ப்பே இறுதியானது. விடையை மட்டும் சொன்னால் போதாது. கேள்வியில் இருக்கும் க்ளுக்கள் எப்படி பொருந்துகிறது என்பதை விளக்கவும் வேண்டும். விடைகளை பல பின்னூட்டங்களில் சொல்பவர்கள், கடைசியில் தொகுத்து மொத்தமாக ஒரு பின்னூட்டம் போட்டால் வசதியாக இருக்கும். ஸ்டார்ட் மீஸீக்.

1) தளபதியின் ஆள் இவர். ஆனால் தல இவரை தினமும் கொஞ்சுகிறார். யார் இவர்?

2) மழை இப்படி பெய்தால் தான் சூர்யாவுக்கு பிடிக்கிறதாம். எப்படி?

3) தனது பெயரின் முதல் பாதியை சிவாஜியின் முக்கிய ஐட்டத்தையும், பின் பாதியில் தனது சொந்த ஊர் தொடர்பான ஐட்டத்தையும் வைத்திருக்க்கிறார். யார் இவர்?

4) பசங்க சில பேர் நடிச்ச படத்தில் இவரும் ஒருவர். படம் ஊத்திக் கொண்டாலும் அதிகம் ஆடியவர். இவருக்கு முதன் முதலில் பெயர் வாங்கித் தந்த படத்தையே சமீபத்தில்தான் பார்த்தாராம். யார் இவர்?

5) குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கினாலும் போர்வையே இனி எனக்கு வேண்டாமென்று சொல்ல மாட்டார் அஜித். ஏன்?

6) நயன்தாரா வரிசையில் இடம்பிடித்தவர் என்றாலும் த்ரிஷாவுக்கும் இவருக்கும் கூட முடிவில் ஒற்றுமை உண்டு. . இவரது பெயரும் பிரபல ஒளிப்பதிவாளரின் பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அவரது கேமராவில் அடங்காத அளவுக்கு வளர்ச்சி கண்ட இந்த நடிகை யார்?

7) உலக நாயகனின் ஓடாத ரத்த ஆற்றில் முக்கிய பங்கு வகித்தவர் என்றாலும் இவர் திரைத்துறைக்கு வந்தது என்னவோ 2002ல்தான். பயணத்தைத் தினம் தினம் ரசிக்கும் இவரின் அடுத்த வெளியீடு விரைவில். யார் இவர்?

8) காற்றில் பரவும் வஸ்துவால் உலக புகழ்பெற்றவர். காற்றையே தனது முதலெழுத்தாக கொண்டாலும், நான் என்ற அகந்தை இல்லாதவர் என்பதை காட்ட அதை மட்டும் அழித்துவிட்டார் போலும். யார் இவர்?

32 கருத்துக்குத்து:

குப்பன்.யாஹூ on December 27, 2009 at 9:53 PM said...

1, anushka- Vijay's heroin but ajith's daughter

அமுதா கிருஷ்ணா on December 27, 2009 at 10:17 PM said...

எனக்கு புத்தகம் வேணாம்பா!!!!

Raja Subramaniam on December 27, 2009 at 10:42 PM said...

any clues?????

நாஞ்சில் பிரதாப் on December 27, 2009 at 11:15 PM said...

சகா... நான் காசுகொடுத்தே புத்தகம் வாங்கிக்கிறேன்....

யாருப்பா என்னைக்கூப்பிடறது இதோ வந்துட்டேன்... எஸ்கேப்ப்ப்பபு

Subankan on December 27, 2009 at 11:20 PM said...

எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாமே சகா, இதெல்லாம் வேண்டாம். முடியல

shiva... on December 27, 2009 at 11:39 PM said...

1.anuska [ ajith daughter name , anuskha vijay's latest film heroine ]

2."jo" nu ..[ jyothika ]

3.

4. bharath.[ boys]

5. "shal" ini

6. shreya saran [ p.c.sreeram]

7. pasupathy [ kuruthipunal small role, came to limelight from kannathil muthamital 2002]

8.

சென்ஷி on December 27, 2009 at 11:51 PM said...

// அமுதா கிருஷ்ணா said...

எனக்கு புத்தகம் வேணாம்பா!!!!//

:) வழிமொழிந்து செல்கிறேன்...

பரிசல்காரன் on December 28, 2009 at 12:10 AM said...

2) ஜோ

பீர் | Peer on December 28, 2009 at 12:12 AM said...

சகா, இந்த சினிமாவ தாண்டி எங்களையெல்லாம் சிந்திக்க விட மாட்டீங்களா? :)

அதிலை on December 28, 2009 at 12:25 AM said...

7. Aravind Krishna... baaki yosichu solren..

தர்ஷன் on December 28, 2009 at 12:27 AM said...

சவாலுக்கு நான் தயார் சகா

1 அனுஷ்கா
வேட்டைக்காரனின் நாயகியும் தலயின் மகள் பெயரும் ஒன்று என நினைக்கிறேன்

2 சில்லுனு
சில்லுனு ஒரு காதல் சூர்யா படமென்பதால்

6 நமீதான்னு நினைக்கிறேன் சகா
sure இல்ல நீரவ் ஷா ஒளிப்பதிவு
செய்த பில்லாவில் இருந்தார்
இல்லையா ஆனால் பெயர் ஷானு
முடியனுமானு குழப்பமா இருக்கு

7 தனுஷ்
குருதிப்புனல் ஆபரேஷன் தனுஷ்

8 ஏ.ஆர். ரஹ்மான்
இசை காற்றினால் பரவுகிறது initial A. R ஐ Air இல் I ஐ அழித்து விட்டார் என்கிறீர்கள்

இவ்வளவுதான் கண்டுப் பிடிக்க முடிந்தது. இரவு தூங்கும் போது ஏதேனும் என் ஞானத் திருஷ்டிக்கு புலப்பட்டால் நாளை காலை பின்னூட்டம் இடுகிறேன்.

கனவுகள் விற்பவன் on December 28, 2009 at 12:48 AM said...

யாருங்க அடுத்தது...வாங்க. வந்து புத்தகம் வாங்கிட்டு போங்க...

வெற்றி on December 28, 2009 at 12:53 AM said...

1.ஷாலினி
2.ஜோ
4.பரத்
.
.
.
.
நான் வெற்றியோட நண்பன்.உங்க பதிவ உத்துப் பாத்துட்டு இருந்த அவன்,இப்ப தலைமுடிய பிச்சுக்கிட்டு அங்கயும் இங்கயும் ஓடிகிட்டு இருக்கான்..
அந்த புத்தகத்த இவனுக்கே குடுத்துடுங்க.அப்பதான் சரியாவான்னு நெனக்கிறேன்..

தமிழ்ப்பறவை on December 28, 2009 at 12:57 AM said...

சகா.. புதிருக்கான எனது இறுதி விடைகள் இதோ... போன பின்னூட்டத்தை ட்ரையல் கணக்கில் வைத்துக் கொள்ளவும்.
1.அனுஷ்கா(வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஜோடி) (அஜித் மகள் பெயரும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். அனௌஷ்கா. தினமும் அஜித் கொஞ்சுவது அவர் மகளைத்தான்)

2.குளிர்கால மழை அதிகச் சில்லிப்பைத் தரும். அப்போதுதான் சூர்யா, ஜோதிகாவுடன் ‘சில்லுனு ஒரு காதல்’ செய்ய முடியும்.

3.விக்ரம். -முதல் பாதி ‘விக்’- சிவாஜிக்கு உதவிய முக்கிய ஐட்டம் விக்.இரண்டாம்பாதி ‘ரம்’- சொந்த ஊர் பரமக்’குடி’யுடன் தொடர்புடையது ‘ரம்’

4.பரத்- ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமாடி ஆடிப் பிரபலம் ஆனவர்.இவருக்குப் பெயர் வாங்கித்தந்த ‘காதல்’ படத்தைத்தான் சமீபத்தில்தான் பார்த்தார்.

5.அஜித்தின் மனைவி ஷாலினி(ஷால்+இனி). கோடைகாலம் வந்தால் மட்டும் ஷாலினி(போர்வையே(ஷால்)+இனி) வேண்டாமென்றா சொல்லப்போகிறார்.

6.நிரோஷா- நயன் தாரா வரிசையில் தமிழ் சினிமாவில் நீச்சலுடையில் தரிசனம் தந்தவர். பெயர் முடிவில் ‘திரிஷாவுடன்’ ‘ஷா’ என ஒற்றுமை.பிரபல ஒளிப்பதிவாளர் ‘நீரவ்ஷா’ பெயரும் இவர் பெயர் போல்தான். இவரது சமீப வளர்ச்சி இவர் சின்னப்பாப்பா,பெரிய பாப்பா இல்லை.. கேமராவுக்கு அடங்காத பீப்பா எனக்காட்டுகிறது.

7.எஸ்.ராமகிருஷ்ணன் - கமலின் ‘குருதிப்புனல்’ படத்தின் வசனத்தில் பங்களித்திருந்தாலும், 2002 இல் வந்த ‘ஆல்பம்’ ,’பாபா’ மூலம்தான் திரையுலகில் கால்வைத்தது தெரிய வந்தது. தினமும் பயணத்தை ரசிக்கும் ‘தேசாந்திரி’.விரைவில் இவரது வசனத்தில் வரவிருப்பது ‘அசல்’ படம்.

8.A.R.ரஹ்மான்.
காற்றில் பரவும் வஸ்து-இசை. அதில் உலகப்புகழ் ஆஸ்கார் பெற்றார்.
முதலெழுத்து AIR. ’நான்’ அகந்தை இல்லாததால் ‘I' ஐ விட்டுவிட்டு A.R.ரஹ்மான் ஆனார்.

Raja Subramaniam on December 28, 2009 at 1:25 AM said...

ரொம்ப யோசிச்சதுல இவ்ளோ தான் தெரிஞ்சது

1 சஞ்சய் (விஜயின் மகன்)
2 ஜில்லுனு (ஜில்லுனு ஒரு காதல்)
3 ???? (சிவாஜியின் முக்கிய ஐட்டத்தையும் ---- அவ்வவ்வ்வ்வ்)
4 பரத் (boys படத்தில் ரொம்ப ஆடியவர்)
5 அவருக்கு ஜன்னி வந்திருக்கும் (தெரியலப்பா)??????
6 நிரோஷா (நிரவ் ஷா & த்ரிஷா)
7 யூகி சேது (next project அசல் as writer 2002 la பஞ்சதந்திரம் படம்)
8 ????

கார்த்திKN on December 28, 2009 at 1:45 AM said...

கண்டிப்பாக நான் உங்களுக்கு செலவு வைக்கமாட்டேன்.. ஒன்னு தெரியலேனா பரவால ஒண்ணுமே தெரியலேனா எப்படி கார்கி? இதுக்கு காம்பஸ் இன்டெர்வியுவில் கேட்ட்கும் கேள்விகளே தேவல..இப்பவே கண்ணா கட்டுதே..

புதிதாக பதிவெழுத ஆரம்பித்து இருக்கேன்,வந்து பாருங்க.. கம்மெண்டு போடுங்க.. இந்த அழைப்பு கார்க்கிக்கு மட்டும் இல்ல கார்கியின் பதிவுக்கு வரும் அனைவருக்கும்..

சுசி on December 28, 2009 at 3:46 AM said...

//புதிர் போடுபவர்களுக்கா பதில் தேடுபவர்களுக்கா //
நிச்சயமா உங்க மூளைக்குதான் வேலை குடுத்திருக்கீங்க.

பரிசு வாங்க நான் அங்க வர டிக்கட் போட்டு குடுப்பீங்களா கார்க்கி?

//நடுவரின் (நான் தாம்ப்பா) தீர்ப்பே இறுதியானது.//
நடுவர் மேல நம்பிக்கை இல்லாததுனால என் பதில்கள சொல்ல விரும்பல.

பாலராஜன்கீதா on December 28, 2009 at 3:51 AM said...

8. A(I)R Rahman
6. shawlஇனி(யை) வேண்டாம் என்று சொல்லமாட்டார் அஜித்
2. ஜோ-ன்னு
1. அனுஷ்கா (அஜித் ஷாலினியின் மகள்)

செந்தில் நாதன் on December 28, 2009 at 4:31 AM said...

எனக்கும் புத்தகம் வேண்டாம்!!!

கார்க்கி on December 28, 2009 at 8:09 AM said...

@குப்பன் யாஹு,
மற்ற விடைகளும் முயறி செய்யுங்கள்

@ஷிவா,
6,7 தப்பு.

@தமிழ்ப்பறவை,
சகா கலக்கல், 7,2 மட்டும் தப்பு.

@பரிசல்,
ரைட்டு. ஆனா மத்தது

@தர்ஷன்,
எல்லோரும் தப்பா சொன்னதை சரியா சொல்லி இருக்கிங்க. சூப்பர் பாஸ்

@பாலராஜன்கீதா,
சரிங்க. மற்றதையும் சொன்னா புக் பார்சேல்ல்ல்ல்

ஒரு விடை சரியா சொல்லி இருந்தாலும் அந்த பின்னூட்டங்கள் பிறகுதான் ரிலீஸ் செய்யப்படும்

முரளிகுமார் பத்மநாபன் on December 28, 2009 at 9:26 AM said...

அனுஷ்கா, ஜோ அவ்வளவுதான் சகா நம்ம அறிவு

Lakshmi on December 28, 2009 at 9:27 AM said...

Enna sir, imbutu kastama irukku? :)
Nalla yosikareenga :)

2 - Jo'nu malai penchathaan suryaku pidikum
5 - Kodaikaalam vanthalum Shaluvai (Salvai) vendamnu sollmattar Ajith..
6- Ramya Krishnan?

maheswaro on December 28, 2009 at 10:19 AM said...

1. anushkha

கார்க்கி on December 28, 2009 at 10:25 AM said...

@முரளி,

சொன்ன வரை சரிதான் சகா.

@லட்சுமி,
முயற்சி செய்ங்க :))

@ராஜேஷ்,
சினிமாதான் விஷமயம்னாலும் புதிர்கள் யோசிக்க வைக்கலையா சகா?

@maheswaro,
நல்ல ட்ரை. நெருங்கிட்டீங்க. ஆனா அது தவறான விடை

Raja Subramaniam on December 28, 2009 at 10:37 AM said...

நான் எத்தனை கேள்விக்கு சரியா பதில் சொல்லிருக்கேன் சகா ???

இன்னும் என் பேப்பர் கரெக்ட் பண்ணலையா????

கார்க்கி on December 28, 2009 at 10:42 AM said...

@ராஜா சுப்ரமணியம்,

சொன்னதுல4ம், 6ம் சரியான விடை. ஆனாவது நாலாவதுக்கு விளக்கம் தேவை:)))

சஞ்சய்லாம் எப்படி சகா சரியான விடையாகும்?இரண்டாவது விடை ஒரு வகையில் சொல்லலாம். ஆனா மழை ஜில்லுன்னு பெய்யுமா? அது அல்ல விடை
யூகிசேதுவும் சரியல்ல. வில்லனே அவர் படைப்புதான். மேலும் அவருக்கும் பயணத்திற்கும் என்ன தொடர்பு?

angel on December 28, 2009 at 11:01 AM said...

2. "jo"ra irukum
3.
4.
5.
6. shreya?
7.
8.

mathatha yosichu soldren

ஸ்ரீமதி on December 28, 2009 at 12:07 PM said...

//2) மழை இப்படி பெய்தால் தான் சூர்யாவுக்கு பிடிக்கிறதாம். எப்படி?//

"ஜோ"ன்னு

தர்ஷன் on December 28, 2009 at 12:09 PM said...

ஆகா இப்பத்தான் தெரிந்தது சகா சூர்யாவுக்கு மழை "ஜோ" ன்னு பெய்தாத்தான் பிடிக்கும். சில்லுன்னு இல்ல இல்ல
அப்புறம் தனுஷ்க்கு இன்னொரு க்ளூ கொடுத்திருக்கீங்க நான் விளக்கம் சொல்ல இல்ல தலைவர் பேரன் பெயர் யாத்ரா பயணத்தை தினம் தினம் ரசிப்பது

Anbu on December 28, 2009 at 12:26 PM said...

இன்னும் என் பேப்பர் கரெக்ட் பண்ணலையா அண்ணா????

Raja Subramaniam on December 28, 2009 at 12:31 PM said...

சரி சரி சீக்கிரம் பதில் போடுங்க தல

அன்புடன் அருணா on December 28, 2009 at 6:26 PM said...

நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா!

 

all rights reserved to www.karkibava.com