Dec 26, 2009

இலக்கிய அரங்கில் சில கைப்புள்ளைகள்


 

நேற்று மாலை உயிர்மையின் நூல் வெளியீட்டு அரங்கிற்கு(அப்படித்தான் சொல்றாங்க) செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 12 நூல்கள், 11 படைப்பாளிகள். இது போன்ற இலக்கிய கூட்டத்திற்கு நான் சென்றதில்லை. ஒரு ஆர்வத்தில், அதீத ஆசையோடும் எதிர்பார்ப்புகளோடும் சென்றேன். பிரபஞ்சன், ஞானக்கூத்தன் எனப் பலரையும் பார்க்கும் ஆர்வமும் இருந்தது. அரங்கினுள்ளே நுழையும் போதே ஒரு வித பதட்டோத்தோடு சென்றேன். நமக்கென்ன இங்கே வேலை என்பதால் இருக்கலாம். வழக்கம்போல் பதிவர்களிடம் உரையாடிவிட்டு லக்கி,அதிஷா,நர்சிம்,ஆதி,சிவராமன் என சுற்றிலும் பதிவர்கள் சூழ அமர்ந்துக் கொண்டேன்.

சொன்ன நேரத்தில் தொடங்கி என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். பிரபஞ்சனைத் தவிர மற்ற அனைவரும் நேரத்திற்கு வந்ததையே பெரிய விஷயமாக நினைத்தேன்.இலக்கிய வாசனை இனிமேல் நமக்கு ஒட்டுமென்ற என் எண்ணம் மேலும் உறுதியானது. முதலில் தலைமை தாங்கிய தினமணி ஆசிரியர் பேசினார். சரி.தலைவர் என்பதால் இப்படி பேசுகிறார். படைப்பாளிகள் பேசினால் எதிர்பார்த்தது கிடைக்கும் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம் நானும் ஆதியும்.முதலில் சுகுமாறன் என்பவர் தமிழ்நதியின் குறுநாவலைப் பற்றி விமர்சனம் செய்தார். எனக்கு அவர் பேச்சு பிடித்திருந்தது. அடுத்த முறை அழுத்தமாக படைக்க வேண்டுமென்ற அவரின் கடைசி வரி நாவலைப் பற்றி பறைசாற்றியது. அருகிலிருந்த ஆதி ”சுகுமாறன் ****” என்று எழுதினார். நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும் நாலுஸ்டார் அதிகமென்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்து வந்தார் நேற்றைய ஆட்ட நாயகன்  தேவேந்திர பூபதி. லட்சுமி ***(அடுத்த பெயர் தெரியவில்லை) என்பவரது சிறுகதை தொகுப்பை விமர்சனம் செய்தார். லட்சுமி மதுரை, அவர் அண்ணனும் மதுரை, அவர் அப்பாவும் மதுரை, அவர் தாத்தாவும் மதுரை…….. நானும் மதுரை. அதனால் இவரைக் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இன்னும் ஏதேதோ ஒரு வரைமுறையே இல்லாமல், அட ஒரு கமா ஃபுல்ஸ்டாப் கூட இல்லாமல் உளறியவரின் சாராம்சம் “அடுத்த தொகுப்பில் எந்தக் கதையும் இந்த 13ஐ போல் இருக்ககூடாது” என்பதே. அதாவது இந்த தொகுப்பு குப்பை. பேனாவை எடுத்தார் ஆதி. இவருக்கு ***** என்று குறித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் கையெடுத்த பின் தான் தலைப்பு தெரிந்தது. “Mr.Mokkai”

அடுத்து யாரோ பேசினார்கள். அதை விட்டுவிடுவோம். உமாஷக்தியின் கவிதைத் தொகுப்பை இயக்குனர் அறிவழகன் விமர்சனம் செய்தார். வழக்கம் போல் தனது ஈரம் படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் இன்னும் பல ”கள்”கள் பாராட்டியதைப் பற்றி பேசிவிட்டு கவிதைக்கு வந்தார். அவர் அந்தக் கவிதையை சொல்லி சொல்லி விமர்சித்த பாங்கை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார் அந்த புதிய எழுத்தாளர். “சகா. ஹோட்டல்ல ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பொங்கல்ன்னு சொல்ற மாதிரியே கவிதையை சொல்றார் பாருங்க” என்று அவர் சொன்ன போது அவர் வியந்ததற்கான காரணம் அறிந்து வியந்தேன். ஆதி பக்கம் திரும்பினால் “அச்சச்சோ. அதிகபட்சம் அஞ்சு ஸ்டார்தானே” என்று கவலைக் கொண்டார்.

அடுத்த படைப்பாளி விஜய். முழுபெயரும் சொல்லும் முன்னர்  ஒரு காட்சி. அந்த குளிரூட்டப்பட்ட அறையின் கதவுக்கு வெகு அருகில்,ஆனால் வெளியே நின்று புகைக்க ஆரம்பித்தார் அந்த 31 வயது இளைஞர். வெகுண்டெழுந்த ஒரு காமன்மேன்  ”படிச்சு என்ன சார் கிழிக்கிறீங்க. லைப்ரரில, பொது இடத்துல பிடிக்கிறீங்க வெட்கமா இல்லை” என சொன்னதோடு மட்டுமல்லாமல் எல்லா துண்டு சிகரெட்களையும், குப்பைகளையும் எடுக்கத் தொடங்கினார். அவர் மனைவி அதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார். வேண்டாமென்று அவரைத் தடுக்கவில்லை. இந்த இளைஞர் அந்த காமன்மேனை திட்டிக் கொண்டே கீழிறங்கி சென்றார், ஏறிவிட்ட தனது டென்ஷனை ஊதித் தள்ள. அந்த இளைஞரின் பெயர் விஜய மகேந்திரன். அவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பும் நேற்று வெளியிடப்பட்டது. விமர்சிக்க வந்த பாரதி மணி அவர்கள் “இனி வருபவர்கள் இலக்கியத்தைப் பற்றி பேசுவார்கள். கேட்போம்” என்று சென்றுவிட்டார்.செருப்பால் அடித்தது போன்று இருந்தது.

அருகிலிருந்த சகாவுக்கு அழைப்பு வந்தது. “எப்படிய்யா அங்க உட்கார்ந்திருக்கீங்க?” என்றார் அந்த பிரபல எழுத்தாளர். வெளியே சென்றுவிட்டார் போலும். நாங்களும் வெளியே வந்தோம். ”வானிலிருக்கும் நட்சத்திரங்களை மட்டுமல்ல, நான் போட்ட நட்சத்திரங்களையும் எண்ண முடியலையே” என்று வருத்தப்பட்டார் ஆதி. மீண்டும் உள்ளே வந்த போது ஞானக்கூத்தன் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்செல்வன் பேசினார். மிகவும் நன்றாக இருந்தது. அடுத்ததாக எங்கிருந்தோ மேடைக்கு வந்தார் சாரு நிவேதிதா. நான் கிளம்பறேன் சகா என்றவனை இழுத்து பிடித்தார். பிடித்தது சனியன் என்று சொல்ல முடியவில்லை,சகாவின் பிடியில் இருந்ததால்.

திருமண மேடையில் கூட்டணியை உடைக்கும் அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவரல்ல என்று நிரூபித்தார் சாரு. வழக்கம்போல கேரளபுராணம் இத்யாதிகளும் இருந்தன. முடிக்கும் வரை அவர் விமர்சிக்க வேண்டிய புத்தகம் பற்றி ஒரு வரி கூட பேசவில்லை. ஞானியில் தொடங்கி ஜெயமோகன், தமிழ்ச்செல்வன், கமல், வேட்டைக்காரன் என அனைவரையும் துவம்சம் செய்தார். பிச்சை எடுத்து சாப்பிடுகிறேன் என்று காலரைத் தூக்கிவிடும் சாரு, வேட்டைக்காரன் டிக்கெட் வாங்க பிச்சைப் போட்டவருக்கு நரகம்தான் என்று சாபமிட்டிருக்கக்கூடும். அந்த பொன்னான மூன்று மணி நேரத்தில் பாலஸ்தீன கவிஞர் பனியனோ ஜட்டியோவைப் படித்திருக்கலாமே!! உங்களுக்கு அங்க என்னங்க வேலை?

   ஜெயமோகன் எழுதிய குப்பையைப் படித்துக் காட்டியவர், அந்த குப்பையை பிரசுரித்த ஆசிரியரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.ஜெயமோகன் எழுதியது சரியா தவறா என்பது இருக்கட்டும். அதை எழுதவிட்டு,அதை அவரது பத்திரிக்கையிலே பிரசுரித்துவிட்டு  வேடிக்கைப் பார்க்கும் மனுஷ்யபுத்திரன் அவர்களின் நியாயம் எனக்கு புரியவில்லை. சாருவை புறக்கணிப்பதுதான் சரியென்று நான் முடிவெடுத்து அவர் வலைப்பக்கமே நான் போவதில்லை. இது போல எங்கேயாவது தென்படும் விஷயங்களும் அவர் மீதான கோவத்தை அதிகப்படுத்துவதாகவே அமைகிறது. இணையத்தில் அவர் ஒதுக்கப்படுகிறார் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் கீழே.

சென்ற திசம்பர் 15ல் நான் எழுதிய பதிவு. இதன்படி அவரது அப்போதைய ஹிட்ஸ் 513595. அப்போது அவரது தளத்திற்கு தினமும் 10000 ஹிட்ஸ் வருவதாக விளம்பரம் செய்திருந்தார். அப்படியென்றால் மாதத்திற்கு 3லட்சம். ஆண்டிற்கு 36 லட்சம். அதனோடு அந்த 5 லட்சத்தைக் கூட்டினால் 41லட்சம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய ஹிட்ஸ் 22 லட்சம். அதாவது கிட்டத்தட்ட 50% குறைவு.இணையத்தில் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்க இவருக்கு மட்டும் ஏன் குறைகிறது? என்னைப் போன்று பலரும் சாருவை ஒதுக்கிவைத்ததுதான் காரணம். இது புரியாமல் இவரது புத்தக நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஆயிரம், லட்சம் என்பதெல்லாம் பிரியாணி கணக்காக இருக்கும். அதற்கும் யார் அருள் புரிந்தார்களோ?

நேற்றைய நிகழ்வு ஒன்றை மட்டும் சொல்லியது எனக்கு. எதையும் நேரிடையாக அணுகாமல் நமக்குள்ளே பிம்பம் அமைக்கக்கூடாது. இலக்கியத்தை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டம்தான் இது. ரிலையண்சுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை. இவர்களால் தமிழ் இலக்கியம் இம்மியளவும் உயரப்போவதில்லை. கரைவேட்டி கட்டிக் கொள்ளாத கட்சிக்காரர்கள். அவ்வளவே!!!

52 கருத்துக்குத்து:

கார்த்திKN on December 26, 2009 at 1:31 AM said...

அருமையாக இருத்தது.. வாழ்த்துகள் தமிழ்மணத்தில் வெற்றி பெற ..
me the first..

கார்த்திKN on December 26, 2009 at 1:38 AM said...

நான் மிகவும் ரசித்த "பிளாகராகிறார் கவுண்டமணி" இடுகையை தமிழ்மணம் விருதுகளுக்கு பரிந்துரைத்து இருக்கலாம் .

பரிசல்காரன் on December 26, 2009 at 1:41 AM said...

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று
மானமுள்ள தமிழனுக்கு ஔவை சொன்னது..

அது ஔவை சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது!

பரிசல்காரன் on December 26, 2009 at 1:42 AM said...

உயர்ந்த் இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்

கார்த்திKN on December 26, 2009 at 1:46 AM said...

கண்ணதாசன் வரிகளில் கலகிடிங்க பரிசல்..

கார்த்திKN on December 26, 2009 at 1:48 AM said...

" உன் நிலைமை கொஞ்சம் கிழே வந்தால் நிழலும் கூட மிதிக்கும் .." இந்த வரியை விட்டுடீங்களே பரிசல் ..

Anonymous said...

கார்க்கி,

இதில் அதிர்ச்சியடைய வேண்டியது எதுவும் இல்லை. எல்லோரும் 3 வித வாழ்க்கை வாழ்கிறார்கள். தனது எழுத்துக்களில் ஏற்படுத்தும் ஆதர்சத்திற்கும், எழுத்தாளனாக கட்டமைக்கும் பிம்பத்திற்கு, சாதாரண குடும்பஸ்தனாக இருக்கும் வாழ்க்கையும் மூன்ரு திசைகளில்.

இதில் ஏதோ ஒன்றைப் பார்த்து நாம் ஒரு பிம்பம் நமக்குப் பிடித்ததாகக் ஏற்படுத்திக் கொள்கிறோம்.

உண்மை ஏறுக்கு மாறாகவே இருப்பதும் அதனால் நாம் மனம் நோவதும் இயல்பே.

அதனால்தான் சுஜாதா அடிக்கடி சொல்லுவார் நல்ல வாசகன் எழுத்தாளனைத் தேடி அவனது நேரத்தை வீனாக்க மாட்டான் என.

இதில் உச்சகட்ட காமெடி சாருதான்.

பரிசல்காரன் on December 26, 2009 at 2:02 AM said...

கார்த்தி

நீயும் மப்பு நானும் மப்பு
நெனைச்சு பார்த்தா எல்லாம் மப்பு

பா.ராஜாராம் on December 26, 2009 at 2:18 AM said...

GOOD! go ahead!

சுசி on December 26, 2009 at 3:39 AM said...

//சுற்றிலும் பதிவர்கள் சூழ அமர்ந்துக் கொண்டேன்//
சேஃபா..

//எதிர்பார்த்தது கிடைக்கும் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம் //
அச்சச்சோ.. எதுவுமே கிடைக்கல போல இருக்கே.

//அதற்கும் யார் அருள் புரிந்தார்களோ?//
அவங்களுக்காக :( தான் முடியும்.

இப்போ நான் பாத்திட்டு இருக்கிற கந்தசாமி படம் நீங்க போன //இலக்கிய கூட்டத்திற்கு // எவ்வளவோ தேவலைன்னு தோணுது கார்க்கி.

டம்பி மேவீ on December 26, 2009 at 6:42 AM said...

டி கடைக்கு போன ....டி நல்ல இருக்க, பஜ்ஜி சூடாக இருக்க என்று தான் பார்க்க வேண்டுமே தவிர......... டி-மாஸ்டர் குளிதரா என்றெல்லாம் கேட்ட கூடாது .......

அத்திரி on December 26, 2009 at 6:57 AM said...

// “சகா. ஹோட்டல்ல ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பொங்கல்ன்னு சொல்ற மாதிரியே கவிதையை சொல்றார் பாருங்க” என்று //

'))))))))))))))

முரளிகுமார் பத்மநாபன் on December 26, 2009 at 8:49 AM said...

புட்டு புட்டு வச்சிட்டிங்க சகா,
என்னை பொருத்தவரை எழுத்தாளர்களை நேரில் சந்திக்கவே பயப்படுவேன். அவர்களின் நிஜமுகம், அவர்களின் எழுத்தைப் படித்ததினால் ஏற்பட்ட பிம்பம் கலையும்படியாக இருந்துவிடுமோ என்கிற பயம்.

அண்ணாச்சியை வழிமொழிகிறேன்.

கார்க்கி on December 26, 2009 at 9:17 AM said...

@கார்த்தி,
நன்றி சகா. பிளாகராகிறார் கவுண்டமணி சமீபத்தில் எழுதியதால் போட்டிக்கு பரிந்துரைக்க முடியாது. திசமப்ருக்கு முன்பு எழுதிய பதிவுகள் மட்டுமே கணக்கில் உண்டு

@பரிசல்,
நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்பு

@வேலனண்ணாச்சி,
உண்மைதான் தல. ஆனால் உண்மையில் இயக்கியவாதிகள் என்று நான் நினைத்திருந்த கூட்டம் இவ்வளவு தரமிழந்து போவதை (அ)தரமில்லாமல் இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

நன்றி பா.ரா

@சுசி,
நானும் அம்மாவுடன் ஜேசுதாஸீன் கச்சேரிக்கு சென்றிருக்கலாம்.

@மேவீ,
அட பஜ்ஜியெல்லாம் நமுத்துப் போன பஜ்ஜியாகத்தான் இருக்குன்னு சொல்ல வறேன்..

@அத்திரி,
:))

@முரளி,
அது பரவாயில்ல முரளி. ஆனால் இங்கேயும் சிபாரிசும், பணமும் விளையாடுவது போன்று தெரிகிறது.அதுதான் பிரச்சினை.

pappu on December 26, 2009 at 9:43 AM said...

என்ன மாதிரி இலக்கிய அறிவு இல்லாத காமன் ‘பாய்’ களுக்கான இடமில்ல போலயே!

பரிசல் ஃபர்ம்ல இருக்காரு!

மண்குதிரை on December 26, 2009 at 10:19 AM said...

நீங்க உணர்ந்தத நேர்மையா எழுதியிருக்கீங்க் நண்பா

பரிசல்காரன் on December 26, 2009 at 10:24 AM said...

//
பரிசல் ஃபர்ம்ல இருக்காரு!//

அப்ப நான் SPAMல இருந்தேன். வைரஸால் பாதிக்கப்பட்டு...

pappu on December 26, 2009 at 10:45 AM said...

அப்ப நான் SPAMல இருந்தேன். வைரஸால் பாதிக்கப்பட்டு...///

இதுதான் ஃபார்முங்கிறது. அடிச்சு ஆடறீங்க.

கடைசில கார்க்கி தனியே சிக்கவிட்டுட்டீங்களே!

அன்புடன் அருணா on December 26, 2009 at 12:11 PM said...

உண்மையை ரசிக்கும்படி சொல்லியிருக்கீங்க!

மிதக்கும்வெளி on December 26, 2009 at 12:22 PM said...

இயக்குனர்கள் வெற்றிமாறன், ஜனநாதன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் என பலரின் பேச்சு குறிப்பிடும்படியாகத்தான் இருந்தது. அறிவழகன் பேசியது பைபிள் பிரசங்கத்தை நினைவுபடுத்தியது. அவர் சிலாகித்த உமாஷக்தியின் கவிதைகளே குப்பையாக இருந்தது. சுகுமாறன் அன் கோவின் பேச்சைக் கேட்க முடியவில்லை. உண்மையிலேயே சாருவின் பேச்சு நேர்மையாகவும் சரியாகவும் இருந்தது. ஜெயமோகனின் வக்கிரத்தின் உச்சம் மனுஷ்யபுத்திரனைப் பற்றிய அவரது வரிகள். அதற்கு அந்த கோபம் நியாயமானதுதான்.

Subha on December 26, 2009 at 12:37 PM said...

well said karki. I used to open his website on few occasions and completely stopped now for the same reasons you have mentioned

நர்சிம் on December 26, 2009 at 12:50 PM said...
This comment has been removed by a blog administrator.
நர்சிம் on December 26, 2009 at 12:51 PM said...

//Subha said...
well said karki. I used to open his website on few occasions and completely stopped now for the same reasons you have mentioned
//
;)

நர்சிம் on December 26, 2009 at 1:03 PM said...

போலவே, ச.தமிழ்ச்செல்வன் பேசிய திருப்பூர் தொழிலார்களின் நிலைப் பற்றிய பேச்சு மிக முக்கியமாக பதியப் படவேண்டிய ஒன்று.

டாஸ்மாக் அமையும் இடங்களுக்கு இங்கே அரசு தரும் முன்னுரிமை குறித்து பிரபஞ்சன் எழுதியதாக தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டது மிக முக்கிய சமூக அவலம் குறித்தான வருத்தம் தோய்ந்த வார்த்தைகள்.

ராஜகோபால் (எறும்பு) on December 26, 2009 at 1:04 PM said...

ரெம்ப சுவாரசியம்மா எழுதுறீங்க.. தலைப்பும் நல்லாருக்கு ...

அது சரி எலக்கியம்னா என்ன...

பின்னோக்கி on December 26, 2009 at 1:27 PM said...

உங்க சூரியன் எஃப் எம்க்கு ஓட்டு போட்டேன்.

மத்த படி, இலக்கியம் பத்தி என்னவோ எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது.

எனக்கு படிக்க அவதார், வேட்டைக்காரன், சின்ன வயசுல ஒருத்தர் விளையாண்ட விளையாட்டுன்னு நிறைய பதிவு இருக்கு படிக்க. எனக்கு தெரிஞ்ச இலக்கியம் இவ்வளவு தான் :)

மிதக்கும்வெளி on December 26, 2009 at 1:56 PM said...

வழக்கம்போல் தங்கர்பச்சான் தன் ஆண்திமிரை இந்த மேடையிலும் காட்டினார். அவரது பெரும்பாலான பகுதிகள் நியாயமானவைதான். தண்ணீரைக் குறித்து உலகமயமாக்கல் பற்றிய புரிதல் இல்லாது இருந்தபோதும்
அந்த ஆவேசம் தேவையானதுதான். ஆனால் திருவள்ளுவர் இடுப்பை வளைத்து நிற்கிறார், அவர் அரவாணியா என்று கேட்பதற்கு எவ்வளவு ஆண்கொழுப்பு இருக்க வேண்டும்! ஏன், திருவள்ளுவர் அரவாணியாக இருந்திருக்கக் கூடாதா? அவர் ஆண்தான் என்பதற்கு திருவள்ளுவரின் ***** பார்த்தாரா என்ன தங்கர்?

கார்க்கி on December 26, 2009 at 2:03 PM said...

பப்பு, பரிசல் செம ஃபார்ம்ல இருக்காரு.இன்னுமான்னு தெரியல

நன்றி ம்ண்குதிரை

வாங்க டீச்சர்.

@மிதக்கும்வெளி
நானும் தமிழ்ச்செல்வன், ஞானகூத்தனின் பேச்சு நன்றாக இருந்ததாகவே உணர்ந்தேன்.பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.வெற்றிமாறனின் பேச்சு சுவாரஸ்யம்தான். ஆனால் விமர்சிக்கப் போகும் புத்தகத்தை படிக்க கூட நேரமில்லாமல் நிகழ்வுக்கு வரும் என்னைப் போன்றோரை எதற்கு அழைக்கிறீர்கள் என்ற அவரின் கேள்விக்கு விடைதான் என்ன? காமன்மேன்களை இலக்கியம் சென்றடைய வேண்டியே என்று அவர்கள் சொன்ன காரணம் மொக்கை. அதற்கு அவர்களை முன்னிலை வகிக்க சொல்லலாம். எத்ற்கு விமர்சிக்க சொல்கிறார்கள்?

சாருவின் பேச்சு... அது சரியா தவறா எனற பேச்சுக்கே நான் வரவில்லை. இந்த மேடையில் இவர்கள் பஞ்சாயத்தைக் கேட்கவா நேற்று வந்தவர்கள் எல்லாம் வந்தார்கள்? அந்த எழுத்து வக்கிரத்தின் உச்சம் என்றால் ஏன் உயிர்மை அதை வெளியிட்டது? சாருவின் பேச்சில் ஆங்காங்கே மானே தேனே பொன்மானே சேர்த்திருந்தால் வெற்றிக்கொண்டான், வளர்மதி(முன்னாள் அமைச்சர்) பேச்சை ஒத்திருக்கும். பதிவிலே தனிமனித தாக்குதல் வேண்டாமென்றவர்கள், சாரு ”அடேய் மூடனே” என்றதை ஆதரிப்பது ஏன்?

நேற்று வெளியிட்ட தொகுப்புகளில் எத்தனை தேறும்? எப்படி இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது? நான் நேற்று கேள்விப்பட்டது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் புத்தகம் குறித்த விமர்சகர்கள் பார்வை, அது உண்மையாக இருக்கக்கூடுமென்றே உணர்த்தியது. அதனால் தான் இந்தப் பதிவு

வெற்றி on December 26, 2009 at 2:11 PM said...

//அவர் கையெடுத்த பின் தான் தலைப்பு தெரிந்தது. “Mr.Mokkai”//

ஹா ஹா ஹா :) :)

கார்க்கி on December 26, 2009 at 2:13 PM said...

நன்றி சுபா..

@நர்சிம்,
//சாருவை நீங்கள் ஒதுக்கவேண்டும் என்பதால் இந்தப் பதிவு//

எனக்கு அதன் அவசியம் என்ன சகா? அவரது இணையதளத்தில் அதை வைத்துக் கொள்ளலாம். புத்தக விமர்சனம் என்று நம்பி வந்தவர்களுக்கு இவர்களது பஞ்சாயத்தைக் கேட்க வேண்டிய அவசியமென்ன? அதுவும் உயிமையே அதை வெளியிடுமாம். அதை இவர் சாடுவாராம். ஆனால் அது மனுஷ்யபுத்திரனின் தவறு எதுவும் இல்லையாம். ஏன் இந்தக் கேள்விக்கு யாரும் பதில் சொல்வதில்லை? நான் நினைப்பது தவறென்றால் புரிந்தவர்கள் சொன்னால்தானே நான் மாற்றிக் கொள்ள முடியும்?
இலக்கிய கூட்டங்களை புறக்கணிக்கப் போவதில்லை. ஆனால் இந்தக் (உயிர்மை)கூட்டத்தின் தரம் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்று தெரிந்துக் கொண்டேன். பலருக்கு இது முன்னரே தெரிந்திருக்கலாம்.ஆனால் நான் உயிர்மை என்றால் இலக்கியம் என்றே நம்பி இருந்தேன். அதுவும் அரசியல்தான் என்பது வேதனைக்குரியது.

நல்ல விஷயங்கள் மனதில் பதித்துவிட்டேன் சகா. ஆனால் அந்த ஏமாற்றத்தை பதிவு செய்ய விரும்பினேன். நாங்கள் கத்துக்குட்டிகள். கொஞ்சம் முட்டி மோது தெரிந்துக் கொள்கிறோம்.

சுபா அவர்கள் சொன்னதில் என்ன தவறிருக்கிறது? நல்ல எழுத்தை எதிர்பார்த்து சென்றவருக்கு அவரது சொந்த அரசியலையே படைத்துக் கொண்டிருக்கும் சாரு மீது வெறுப்பு வந்து விலகியிருக்கிறார். னான் கொடுத்த தகவலுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? சாருவின் வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? ஆமெனில் ஏன்?

நன்றி எறும்பு

ஓட்டுக்கு நன்றி பின்னோக்கி

உண்மைத் தமிழன்(15270788164745573644) on December 26, 2009 at 2:32 PM said...

எல்லாஞ் சரி தம்பீ..

வெளில நாம ரெண்டு பேரும் பேசினதை பத்தி ஒண்ணுமே எழுதலையே..?

நீ நெசமாவே என்ன பேசுறாங்கன்னு கேக்கத்தான் வந்தியா..?

ஐயோ.. நான்தான் ஏமாந்திட்டனோ..?!!

மிதக்கும்வெளி on December 26, 2009 at 3:48 PM said...

/நான் உயிர்மை என்றால் இலக்கியம் என்றே நம்பி இருந்தேன்/

ச்சூ...ச்சூ... பாவம் பாஸ் நீங்க!

நேசன்..., on December 26, 2009 at 3:59 PM said...

Fantastic Karki,What u said about that Charu is 101% coorect!Biggest noise!

க‌ரிச‌ல்கார‌ன் on December 26, 2009 at 4:09 PM said...

//இணையத்தில் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்க இவருக்கு மட்டும் ஏன் குறைகிறது? என்னைப் போன்று பலரும் சாருவை ஒதுக்கிவைத்ததுதான் காரணம்.//

பிடிக்க‌லேன்னா ப‌டிக்காதீங்க‌ன்னு "அவ‌ங்க‌" தானே சொல்றாங்க‌ ச‌கா அப்புற‌ம் குறைய‌ தான் செய்யும்

Karthikeyan G on December 26, 2009 at 4:43 PM said...

my view abt the same program.. http://vedikai.blogspot.com/2009/12/blog-post_26.html

விஜய் மகேந்திரன் on December 26, 2009 at 5:06 PM said...
This comment has been removed by the author.
Cable Sankar on December 26, 2009 at 5:56 PM said...

நிச்சயம இதுவெல்லாம் இலக்கிய கூட்டமெலலாம் இல்லை நிதர்சனமான ஒரு வியாபார கூட்டம். அதற்கு கூட்டம் சேர்க்க அந்த துறையில் பிரபலமான ஆட்களை கூப்பிட்டால்தான் கூட்டம் கூடும். இம்மாதிரியான கூட்டத்தில் தான் ஏதாவது ஏடாகூடமாய் பேசினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவெழுதலாம். பின்னர் அதையே பின்னூட்டமாய் போடலாம். கல்லாவாவது கட்டும்

கார்க்கி on December 26, 2009 at 5:56 PM said...

@மிதக்கும் வெளி,
தல,இதைத்தான் சொன்னேன். பலருக்கும் தெரிந்திருக்கலாம். நான் புதுசு என்பதால் ஒரு அதிர்ச்சி. அவ்வளவே.

நன்றி நேசன்

கரிசல்காரன். ம்ம். ஆனால் அவர் என்ன சொல்றாருன்னா அவரை பிடிக்கவில்லை என்பவர்கள் கூட அவரை தினமும் ப்டிக்கிறாங்களாம் அப்ப மிசம் இருப்பதிலும் ஒரு பகுதியினர் அவரைப் பிடிக்காதவர்க்ள் என்றால்..

கார்த்திகேயன், பார்க்கிறேன் சகா

@விஜய்,

தனிநபர் தாக்குதலா? எது பாஸ்? அப்படியெதுவும் நான் எழுதவில்லையே. புத்தகம் வெளியிட்டிருக்கும் உங்களுக்கு நூலக வளாகத்துக்குள் புகைப் பிடிக்கக்கூடாது என்பது தெரியாதா?அவர் நடந்தக் கொண்ட வித எப்படியோ!! ஆனால் நீங்கள் புகைத்தது தவறுதானே? என் நண்பர் ஒருவரிடமும் அவர் சுட்டிக் காட்டினார். அவர் அமைதியாக அணைத்துவிட்டு சென்றார். ஆனால் நீங்கள் அவருடன் வாதிட்டது எனக்கு சரியாக படவில்லை சகா.

எதை நீங்கள் தனிநபர் தாக்குதல் என்கிறீர்கள்? அது அப்படியில்லை என்றாலும் உங்கள் கருத்துக்கு மதிப்பிட்டு அழித்துவிடுகிறேன்

மணிப்பக்கம் on December 26, 2009 at 9:00 PM said...

//அடுத்ததாக எங்கிருந்தோ மேடைக்கு வந்தார் சாரு நிவேதிதா// உங்களுக்கு அங்க என்னங்க வேலை? //

- உங்களுக்கு அங்கு வேலை இருக்கும்போது சாருவுக்கு இருக்க கூடாதா ஐயா?


// ஜெயமோகன் எழுதியது சரியா தவறா என்பது இருக்கட்டும். அதை எழுதவிட்டு,அதை அவரது பத்திரிக்கையிலே பிரசுரித்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும் மனுஷ்யபுத்திரன் அவர்களின் நியாயம் எனக்கு புரியவில்லை. //

- எல்லாவற்றையும் தானே பிரசுரிக்க வேண்டும்! blog - ல எழுதும் போது எழுதுபவர்தான் பொறுப்பு, கூகுளா பொறுப்பு?

// சாருவை புறக்கணளப்பதுதான் சரியென்று நான் முடிவெடுத்து அவர் வலைப்பக்கமே நான் போவதில்லை.//

- நஷ்டம் யாருக்கு? உங்களுக்கா? சாருவுக்கா? அல்லது சமூகத்துக்கா?

கார்க்கி on December 26, 2009 at 9:58 PM said...

//மணிப்பக்கம் said...
//அடுத்ததாக எங்கிருந்தோ மேடைக்கு வந்தார் சாரு நிவேதிதா// உங்களுக்கு அங்க என்னங்க வேலை? ///

எதற்கு வெவ்வேறு பத்திகளில் இருந்து இரண்டு வரிகளை ஒன்றாக எடுத்து போட்டிருக்கிறீர்கள்?

//- உங்களுக்கு அங்கு வேலை இருக்கும்போது சாருவுக்கு இருக்க கூடாதா ஐயா//
நான் மசாலா பட ரசிகன். விஜய் ரசிகன். நான் போனேன். தமிழ்படமே தலைவலி என்றவர்.. விஜய் வாழ்க்கையிலே திருந்த மாட்டார் என்றவருக்கு அங்கே என்ன வேலையென்ற அர்த்தத்தில் கேட்டேன்

// எல்லாவற்றையும் தானே பிரசுரிக்க வேண்டும்! blog - ல எழுதும் போது எழுதுபவர்தான் பொறுப்பு, கூகுளா பொறுப்பு//

உங்கள் உதாரணம் அருமை. பொருந்துகிறதா இல்லையா என நான் சொல்வதை விட இனி வருபவர்கள் சொல்லட்டும் :))

//- நஷ்டம் யாருக்கு? உங்களுக்கா? சாருவுக்கா? அல்லது சமூகத்துக்கா//

நிச்சயம் எனக்கில்லை. சமூகத்திற்குமில்லை.

ஒரு விஷயம் நல்லதல்ல என்று தோன்றினால் அதைப் புறக்கணிப்பதே சிறந்த வழி. நானும் சுபா போன்ற சிலரும் அதைத்தான் செய்கிறோம். விஜய் படங்களும், மசாலா படங்களும் ஆரோக்கியமானதல்ல என்றால் அதை புறக்கணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முதல் நாளே பிச்சையெடுத்த அங்கே சென்று தொலைத்தால் அடுத்த முறை பிச்சை போடுபவர்கள் யோசிக்கலாம் அல்லவா?

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 10:47 PM said...

கார்க்கி, நிறைய கருத்துகளை எழுதவேண்டுமென தோன்றுகிறது. அது ஒரு வேளை மிக நீளமாக சென்றுவிடக்கூடும். பிரிதொரு சமயம் எழுதுகிறேன்.

பிரபஞ்சன், ஞானக்கூத்தன், ச.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய படைப்பாளிகளும் இருந்த அரங்கம் அது. அதைவிடவும் முக்கியமாக ஆகத் தகுதியான வாசகர்களும் அங்கே இருந்திருக்கக்கூடும். ஆகவே இன்னும் கூடுதலான அமைதியுடன் இந்தப்பதிவு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று மட்டுமே இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப்பறவை on December 26, 2009 at 11:25 PM said...

எலக்கியவாதியாயாச்சு போல...
வாழ்த்துக்கள்...
பதிவு நடை ரொம்பவே வித்தியாசமா இருக்கு...ஒரு தடவை படிச்சேன். அவ்வளவா புரியலை ஃபர்ஸ்ட் ஹாஃப்...

கும்க்கி on December 26, 2009 at 11:42 PM said...
This comment has been removed by the author.
கும்க்கி on December 26, 2009 at 11:43 PM said...

இலக்கிய வியாபாரம் குறித்து அனேகம் சொல்ல வேண்டியுள்ளது....நேரில்.
இருந்தாலும் நேர்மையாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு ஒரு ஜே”.

Mr.சிங்கம் on December 27, 2009 at 5:22 AM said...

வணக்கம் கார்க்கி

ஏன் ஏன் இந்த கொலைவெறி ?

சாரு யாரு , வேட்டைக்காரன் படத்துல வில்லனா,
கேரளாவுக்கும் அவருக்கும் என்ன "? ,
ஏன் கேரளாவில் புட்டு கடையில் அவரைபத்தி விசாரிக்க சொல்கிறார் ,

சிங்கம் @ வெட்டி பையன்
பெயர் மாத்திடோமில்ல

கார்க்கி on December 27, 2009 at 7:44 AM said...

@ஆதி,
தலைப்பும், பதிவின் கடைசி வரியும் அங்கே வந்த அனைவரையும் குறிப்பது போல் இருப்பதை தாமதமாகத்தான் உணர்கிறேன். நான் குறிப்பிட்டது நிஜமான கைப்புள்ளைகளை. பிரபஞ்சன்,தமிழ்ச்செல்வன் போன்றோரை அல்ல. எனவே தலைப்பை மாத்திவிட்டேன் சகா. ஆனால் இது தமிழ்ச்செலவன் குடியை குறித்து நிஜமான கவலை கொண்டபோது அருமையான பதிலை சொன்னாரே அது பற்றி?

@பறவை,
புரியலையா? அப்போ நெக்ஸ்டு கவிதை :))

@கும்க்கி,
ம்ம்.. என் பார்வை தவறாக இருக்கலாம். ஆனால் நான் உணர்ந்ததை எழுதி இருக்கிறேன்.

நர்சிம் on December 27, 2009 at 10:14 AM said...

சகா, தலைப்பை மாற்றி விட்டதால் இந்தப் பதிவு நன்றாக இருக்கிறது. அதனால் என்னுடைய முந்தைய கருத்துக்களை டெலிட் ஃபார் எவர் கொடுத்துவிடவும்.. ‘சில’ மிக முக்கியம் என்பதுதான் என் கருத்தின் நோக்கமுமே. டெலிட்டிவிடுங்கள் அவற்றை. (லிங்க் இங்க ’ங்’ மட்டும் தான் இருக்கு,அதாவது விட்டு விட்டு வருது, அதனால தான் உங்கள டெலிட்டச் சொல்றேன்)

கும்க்கி on December 27, 2009 at 11:00 AM said...
This comment has been removed by the author.
சுரேகா.. on December 28, 2009 at 5:30 PM said...

சகா...இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க! அடுத்த ரவுண்டு நீங்க இருக்கீங்க! சூப்பரா நிரூபிங்க!

நம்ம உருவாக்குவோம்..இந்த மாதிரி டகால்ட்டி இல்லாத இலக்கியவாதிகளை !

Yuva on December 28, 2009 at 5:58 PM said...

ஒருவேளை இதுதான் "பின் நவீனத்துவ" பேச்சோ? கொஞ்சம் பொறுத்துப் பருங்கள் சகா... கட்டுரை வரலாம் அதுதான் "அக்மார்க்" இலக்கிய பேச்சென்று.

Singa on December 31, 2009 at 11:04 AM said...

>>>ஆரோக்கியமானதல்ல என்றால் அதை புறக்கணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முதல் நாளே பிச்சையெடுத்த அங்கே சென்று தொலைத்தால் அடுத்த முறை பிச்சை போடுபவர்கள் யோசிக்கலாம் அல்லவா?>>>>

Your statement is 100% true and responsible... Even I have been a reqular visitor of charu online.... but Now i don't have any urging intension to visit charu.... Some day i will visit if I am bored... Nothing interesting in his homepage.... He can be compared 100% with vijay movies... Film may be box office Hit but worthless....

லேகா on January 11, 2010 at 5:34 PM said...

:-))))))))

 

all rights reserved to www.karkibava.com