Dec 23, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

  இந்த வருடம் தமிழ்மண விருதுகள் சீக்கிரமே அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. நாமளும் களத்தில் இறங்கியாச்சு. பிராச்சரத்தை இன்று இனிதே தொடங்கி இன்றே முடித்துவிடலாமென முடிவு செய்திருக்கிறேன். படைப்பிலக்கியம் பிரிவில் ”நிச்சயிக்கப்பட்ட சொர்க்கம்” என்ற பதிவையும், நகைச்சுவை பிரிவில் சூப்பர்ட் ஹிட்டடித்த “சூரியன் எஃப்.எம்மில் ஏழு”வையும் நாமினேட் செய்திருக்கிறேன். பார்த்து செய்ங்க. இது இடை தேர்தல் அல்ல. அதனால் எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. வேண்டுமென்றால் வாரம் ஒரு புட்டிக்கதை, விஜய் பற்றிய பதிவுகளுக்கு முழுவிலக்கு போன்ற வாக்குறுதிகள் தருகிறேன்.

*****************************************************************************************************************

நேற்று யூ.எஸ் கிளம்பிவிட்டான் பப்லு. அரையாண்டு விடுமுறைக்கும் பொங்கல் விடுமுறைக்கும் இடையே இருந்த கேப்பை நிரப்பி தம்பி ஹார்ட்ஃபோர்டுக்கு பறந்துவிட்டார். செம பனியாம். சென்ற வாரம் டாக்டர் அவனுக்கு இரும்பு சத்துக்காக டானிக் கொடுத்தது நினைவிருக்கிறதா? உள்ளே இருக்கும் இரும்பால் மெட்டல் டிடெக்டர் சத்தம் போட்டு இவனை அரெஸ்ட் செஞ்சிடுவாங்கனு ஒரே கவலையா இருந்தான். போய் சேர்ந்து ஃபோன் செய்தால்தான் தெரியும் நடந்த கூத்து.

*****************************************************************************************************************

ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தீர்களா நேற்று? இல்லையென்றால் ஒரு அருமையான பரவசத்தை இழந்துவிட்டீர்கள். ரோஷனும், அல்காவும் ஒருலட்ச ரூபாய்க்காக ரேபிட் ஃபையர் ரவுண்டில் பாடினார்கள். ரோஷன் காற்றின் மொழி, உயிரே உயிரே என மென்மையாய் தொடங்கி வான் நிலா நிலா அல்ல என்று அதிரடியாய் முடித்தார். அல்கா வெள்ளி மலரேவில் தொடங்கி உதயா உதயாவென ஆகி, என்னுடையா ஃபேவரிட் பாடலான கண்ணன் வந்து பாடுகிறானில் முடித்தார். வாவ்!!! நான் அடிக்கடி “வாய்ப்புகளே இல்லை” என்று சொல்வேன். என்னடா அது என்பார் அம்மா. நேற்று சொன்னேன் இதுதாம்மா அது. அல்காவுக்கு ஃபினிஷிங் கொஞ்சம் சரியில்லை. என்னுடைய சாய்ஸ் ரோஷன். இந்த வயதில் உயிரே பாடலை ஜஸ்ட் லைக் தட் பாடிகிறார். ஒரு முறை ரோஷனிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் போலிருக்கிறது.

ரோஷனின் சில அட்டகாசங்கள்

http://www.youtube.com/watch?v=ktVWC86CFCk

http://www.youtube.com/watch?v=jcrZLQxllmc

*****************************************************************************************************************Scan12242009_101711

   ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறுகிறது. ஆம். விகடனில் எனது கவிதை ஒன்று வெளிவந்திருக்கிறது. குங்குமத்தில் ஏற்கனவே ஒரு முறை வந்திருந்தாலும் அது பிளாக் அறிமுகம் என்பதாக இருந்தது. இரண்டிலும் பிரசுரமானது கவிதை என்பது கூடுதல் சிறப்பு. இதற்காக பின்னூட்டங்களில் என்னை கவிஞர்.கார்க்கி என்று அழைப்பதை அறவே வெறுக்கிறேன்.

மேலும் ஜெனோவா, ராஜா சந்திரசேகர் அவர்களின் கவிதையும் வந்திருக்கிறது

 

*****************************************************************************************************************

ஹைக்கூ எழுதுவது பற்றி பலரும் பல விதமாக பேசறாங்களே. எனக்கு சொல்லி தாயேன் கார்க்கி என்றான் நண்பன். துள்ளி எழுந்த நான் அவனுக்கு விளக்கினேன். ஹைக்கூ என்பது மூனு வரி இருக்கணும் மச்சி. கடைசி வரி இல்லாமல் படித்தால் முதல் இரண்டு வரிகள் அர்த்தம் வரக்கூடாது என்றேன்.

புரியலையே மச்சி  என்றவன் உதாரணம் கேட்டான்.

ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மாலில் கதவுக்கு அங்கிட்டு அவள், இங்கிட்டு நான். உடனே சொன்னேன் ஒரு ஹைக்கூ.

அவள் கைவிட்டாள்

நான் கைப்பிடித்தேன்

கதவில் கைப்பிடி.

கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?.பின்னூட்டங்களில் ஹைக்குவுக்கு விளக்கம் கொடுக்காதிங்கப்பா. இது மொக்கை.

*****************************************************************************************************************

நண்பன் ஒருவன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை சில பி.பி.ஓக்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பினேன். வேலை கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.

மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.

கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?

ஆல்செக்(Allsec) BPO டா.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?

என்னைத் திட்டவும் முடியாமல், பதில் சொல்லவும் முடியாமல் வைத்துவிட்டான்

51 கருத்துக்குத்து:

Kathir on December 23, 2009 at 11:16 PM said...

ஹை......
நான் பர்ஸ்ட்டா...

Kathir on December 23, 2009 at 11:36 PM said...

//வேண்டுமென்றால் வாரம் ஒரு புட்டிக்கதை, விஜய் பற்றிய பதிவுகளுக்கு முழுவிலக்கு போன்ற வாக்குறுதிகள் தருகிறேன். //

இதெல்லாம் சரி. பொட்டி அனுப்புவீங்களா??

குறும்ப‌ன் on December 23, 2009 at 11:38 PM said...

க‌விதை வ‌ந்திருக்குங்க‌றீங்க‌, ஹைக்கூ சொல்லி குடுக்க‌றிங்க‌...விஜ‌ய் அர‌ச‌ரா இருந்தா நீங்க‌தானுங்ணா அர‌ச‌வை க‌விஞ‌ர்!

த‌மிழ்ம‌ண‌ம் விருது பெற‌ வாழ்த்துக்க‌ள்:)

Kathir on December 23, 2009 at 11:38 PM said...

//கவிஞர்.கார்க்கி என்று அழைப்பதை அறவே வெறுக்கிறேன்.//

வாழ்த்துக்கள்..

butterfly Surya on December 24, 2009 at 12:25 AM said...

காக்டெயில்.. Good Combination

Chitra on December 24, 2009 at 12:44 AM said...

தமிழ் மணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இடுகை தொகுப்பு நல்லா இருக்குங்க.

சுசி on December 24, 2009 at 12:52 AM said...

//விஜய் பற்றிய பதிவுகளுக்கு முழுவிலக்கு போன்ற வாக்குறுதிகள் தருகிறேன்.//
கிர்ர்ர்ர்.. உடனடியா என் ஓட்ட மாத்தி போட்டுக்கிறேன்.

அப்பாடா.. பப்லுவாவது கொஞ்சநாள் மொக்கை ஃப்ரீ ஸோன்ல இருக்கட்டுமே. என்ஜாய்டா செல்லம்.

//இல்லையென்றால் ஒரு அருமையான பரவசத்தை இழந்துவிட்டீர்கள். //
அட ஆமா.. ரோஷன் சூப்பர்.

சுசி on December 24, 2009 at 1:11 AM said...

//கவிஞர்.கார்க்கி என்று அழைப்பதை அறவே வெறுக்கிறேன்.//

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கவிஞர். கார்க்கி அவர்களே. (இது ஓகேதானே?அவர்களே சேர்த்திருக்கேன்)

// இது மொக்கை.//
இல்ல இது மீ ப.

//என்னைத் திட்டவும் முடியாமல், பதில் சொல்லவும் முடியாமல் வைத்துவிட்டான்//
அப்டியே நேர்ல வந்து கும்மினத சொல்லலையே??

வெற்றி on December 24, 2009 at 1:16 AM said...

தமிழ்மணம் விருது வாங்க வாழ்த்துக்கள்..
//பிராச்சரத்தை இன்று இனிதே தொடங்கி இன்றே முடித்துவிடலாமென முடிவு செய்திருக்கிறேன்//

சரியாதான் சொல்லிருக்கீங்களா? நல்லா கவனிச்சு பாருங்க..:)

kamalesh on December 24, 2009 at 1:38 AM said...

தமிழ் மனம் விருது உங்களுக்குத்தான்...
மிக அழகான பதிவு...

ஹாய் கூ அழகு..

வாழ்த்துக்கள்..

பிரபாகர் on December 24, 2009 at 1:52 AM said...

விகடன் கவிதைக்கு வாழ்த்துக்கள் சகா...

பிரபாகர்.

பா.ராஜாராம் on December 24, 2009 at 5:20 AM said...

// உள்ளே இருக்கும் இரும்பால் மெட்டல் டிடெக்டர் சத்தம் போட்டு இவனை அரெஸ்ட் செஞ்சிடுவாங்கனு ஒரே கவலையா இருந்தான். போய் சேர்ந்து ஃபோன் செய்தால்தான் தெரியும் நடந்த கூத்து.//

//ஹைக்கூ எழுதுவது பற்றி பலரும் பல விதமாக பேசறாங்களே. எனக்கு சொல்லி தாயேன் கார்க்கி என்றான் நண்பன். துள்ளி எழுந்த நான் அவனுக்கு விளக்கினேன். ஹைக்கூ என்பது மூனு வரி இருக்கணும் மச்சி. கடைசி வரி இல்லாமல் படித்தால் முதல் இரண்டு வரிகள் அர்த்தம் வரக்கூடாது என்றேன். புரியலையே மச்சி என்றவன் உதாரணம் கேட்டான். ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மாலில் கதவுக்கு அங்கிட்டு அவள், இங்கிட்டு நான். உடனே சொன்னேன் ஒரு ஹைக்கூ. அவள் கைவிட்டாள் நான் கைப்பிடித்தேன் கதவில் கைப்பிடி. கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?.பின்னூட்டங்களில் ஹைக்குவுக்கு விளக்கம் கொடுக்காதிங்கப்பா.//

:-)))

அருமை!

Anonymous said...

விகடனில் வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.
ஏழுவுக்கு என் ஓட்டு.

வந்தியத்தேவன் on December 24, 2009 at 6:25 AM said...

நானும் நேற்றைய ரோஷனின் பாடல் பார்த்தேன், கலக்கியிருந்தான். ஒளியிலே தெரிவது தேவதையா.. பாடலையும் சூப்பராகப் பாடியிருந்தான். சென்ற முறை தவறவிட்ட சூப்பர் சிங்கரை இம்முறை ரோஷன் பிடித்துவிடுவார் என நினைக்கின்றேன்.

என். உலகநாதன் on December 24, 2009 at 6:36 AM said...

ஹைக்கூவைப் பற்றி ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்ததா நினைவு. அதில் பின்னூட்டத்தில் கூட நர்சிம், "ஹைக்கூவைப் பற்றி சுஜாதா என்ன சொல்லியிருக்காருன்னா, சேரி வேண்டாம் விடுங்க'' என்று எழுதியிருந்ததாக நினைவு.

Sangkavi on December 24, 2009 at 7:01 AM said...

//என்னை கவிஞர்.கார்க்கி என்று அழைப்பதை அறவே வெறுக்கிறேன். //

வேண்டா வேண்டான்னு சொன்னா வேனும்னு தானே அர்த்தம்........

என்ன கார்க்கி சரியா..........?

ராஜகோபால் (எறும்பு) on December 24, 2009 at 9:10 AM said...

கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
கவிஞர்.கார்க்கி
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

தாரணி பிரியா on December 24, 2009 at 9:17 AM said...

ஒட்டு போட்டுடறேன். ஆனா வாக்குறுதியை காப்பதணும்

பப்லு கொஞ்ச நாள் உங்ககிட்ட இருந்து தப்பிச்சுட்டான் :)

ஹை ரோஷன் தான் என் சாய்ஸும். இந்த தடவை சூப்பர் சிங்கர் அவன் தான்.

கவுஜர் கார்க்கி இது ஒகேவா

ஹைகூ கவுஜர் கார்க்கி வாழ்க‌

உங்க ப்ரெண்டா இருந்தாலே பாவம்தானே

pappu on December 24, 2009 at 9:27 AM said...

me the 19th...

வேற என்னத்த சொல்ல? அதான் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்லிட்டாங்களே!

டம்பி மேவீ on December 24, 2009 at 9:39 AM said...

விருந்து ன்னு சொல்லுரிங்க ...அதில எப்புடி தமிழ் வந்துச்சு .......

தமிழ் ஒரு மொழி தானே அதற்கு எப்புடி வாசனை வந்துச்சு

டம்பி மேவீ on December 24, 2009 at 9:40 AM said...

கவலை படாதிங்க ...நீங்க தான் நல்ல TRAINING தந்து அனுப்பி இருக்கிங்களே .....பாவம் AMERICA ....பாவம் பப்லு கிட்ட மாட்டின போலீஸ் காரங்க

டம்பி மேவீ on December 24, 2009 at 9:41 AM said...

எனது விகடன்ல உங்க கவிதை வந்து இருக்கா ....நல்ல பாருங்க கார்க்கி ஒரு வேளை ஜோக்ஸ் பகுதியில் போட்டு இருக்க போறாங்க

டம்பி மேவீ on December 24, 2009 at 9:44 AM said...

நானும் பார்த்தேன் விஜய் டிவி யில் ....ஆன அவங்க பெயர்கள் எல்லாம் நினைவில் இல்லை ..வழக்கம் போல் மறந்து போயிருச்சு ....... நல்ல பாடினாங்க ..ஆனால் நான் உங்க அளவுக்கு interest எடுத்து பார்க்கல

டம்பி மேவீ on December 24, 2009 at 9:48 AM said...

கவிஞர் வேண்டாம் ..."இலக்கிய தூதுவன்" கார்க்கி ன்னு பெயர் வைச்சுரலாம்

டம்பி மேவீ on December 24, 2009 at 9:49 AM said...

இனிமேல் விகடன் வாங்க கூடாதுன்னு நேத்து தான் முடிவெடுத்தேன்....... வாங்க வைசுருவிங்க போல் இருக்கே

பரிசல்காரன் on December 24, 2009 at 9:57 AM said...

கண நேரத்துல ஆடிப்போய்ட்டேன் சகா.. நல்ல வேளை...

-ப.ச.பி.போ.ச
திருப்பூர் கிளை.

taaru on December 24, 2009 at 10:06 AM said...

அனேகமா பப்லு ஒரு blog ஆரம்பிக்க நிறையா வாய்ப்பு இருக்கு.. [குருவ பிரிஞ்ச சிஷ்யர்கள் எல்லாம் அப்பிடி தான் பண்ணி இருக்காங்க.இத நான் சொல்லல, வரலாறு speaking...]

vikatan & தமிழ் மணம் - வா.ழ்.....ள்

அனுஜன்யா on December 24, 2009 at 10:27 AM said...

விகடன்ல என்னோட கவிதை போட முடியாதுன்னு சொன்ன போதே நினெச்சேன். அவங்களுக்கு கவிதை பத்தி ஒண்ணும் தெரியலன்னு. இப்ப கன்ஃ பிர்ம் ஆகி விட்டது. என்ன கொடும இது ! இறைவா நீ இருக்கியா இல்ல இல்லையாஆஆஆ

சரி ஒரு டீல். உன்னோட ஹைக்கூ நல்லா இருக்கு. (அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா).

அனுஜன்யா

ரசிக்கும் சீமாட்டி on December 24, 2009 at 10:33 AM said...

ரோஷன் சான்சே இல்ல..... ரோஷன் இல்ல அல்காதான் இந்த முறை சூப்பர் சிங்கர் ன்னு நான் நினைக்கிறேன்...!!

//

அவள் கைவிட்டாள்

நான் கைப்பிடித்தேன்

கதவில் கைப்பிடி.

//

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....

மண்குதிரை on December 24, 2009 at 11:06 AM said...

விகடன் கவிதை நல்லா இருக்கு நண்பா

RaGhaV on December 24, 2009 at 11:38 AM said...

//ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறுகிறது//

என் மன்மார்ந்த வாழ்த்துக்கள் கார்க்கி.. :-)))

RaGhaV on December 24, 2009 at 11:43 AM said...

//பின்னூட்டங்களில் ஹைக்குவுக்கு விளக்கம் கொடுக்காதிங்கப்பா. இது மொக்கை.//
:-)))

//(Allsec) BPO //

ஏன் ஏன் ஏன் இப்படியெல்லாம்..

ஸ்ரீமதி on December 24, 2009 at 11:52 AM said...

முதல் நாலும் நன்று. கடைசி ரெண்டும் ஹி ஹி ஹி... இங்க சொல்லமாட்டேன். :))))

நர்சிம் on December 24, 2009 at 12:07 PM said...

விகடன் கவிதைக்கு வாழ்த்துக்கள் சகா. காக்டெய்ல்.. போதை.

கார்க்கி on December 24, 2009 at 12:08 PM said...

@கதிர்,
இடைதேர்தல் இல்லைன்னு சொன்னதே பொட்டி கிடையாதுன்னு சொல்றதுக்குத்தான் சகா

@குறும்பன்,
ஹிஹிஹி. அப்ப கூடிய சீக்கிரம்ன்னு சொல்லுங்க

@சூர்யா,
நன்றி பாஸ்

@சித்ரா,
நன்றி மேடம்

@சுசி,
ஹலோ. என் கிட்டயும் மொக்கை ஃப்ரீதாங்க. காசெல்லாம் கிடையாது

@வெற்றி,
24 மணி நேரம் கணக்கு சகா. தேதிய விடுங்க :))

@கமலேஷ்,
நன்றி சகா

@பிரபாகர்,
அட அது என் கவிதைங்க. விகடனுடையது இல்லை.

@பா.ரா,
நன்றி சார்

@அம்மிணி,
நீங்கதான் சரியா சொன்னிங்க. ஏழுவுக்கு பரம ரசிகர்களில் நீங்களும் ஒருவர்ன்னு தெரியாதா எனக்கு

@வந்தி,
ஆமாம் சகா. அவன் தான்

@உலகநாதன்,
உங்க ஞாபக சக்தில நெருப்பள்ளி போட.. :))

@சங்.கவி,
அய்யய்யோ இல்லைங்க எசமான்.

@எறும்பு,
ஹலோ.எவ்ளோ வேலை இருக்கு உஙக்ளுக்கு.அதை விட்டு ஏங்க ஏன்?

@தா.பி,
ஜெய்ச்சா நிச்சயம் காப்பத்துறேன் :)

@பப்பு,
அப்ப எல்லோருக்கும் சொன்னதுதான்/ டேங்க்ஸூப்பா

@மேவீ,
நான் என்ன விஜய்காந்த் மாதிரி கட்சியா ஆரம்பிக்கிரேன். ஜோக்ஸ் பகுதில போட. கவிதை டம்பீ கவிதை

@பரிசல்,
க.பி.ஓ.ட.ஆ.ச
கிளைகள் கிடையாது

@டாரு,
நன்றி பாஸ்

@அனுஜன்யா,
என்னது? நீங்க கவிதை எழுதுவீங்களா? சொல்லவேயில்ல. இருங்க சுந்தர்,லக்கியிடம் கன்ஃபார்ம் பண்ணிட்டு வறேன்..

@சீமாட்டி,
எப்பூடீ?

@மண்குதிரை,
அது என் கவிதை பாஸ்.

@ராகவ்,
நன்றி சகா..

பின்னோக்கி on December 24, 2009 at 12:12 PM said...

விகட கவிக்கு வாழ்த்துக்கள்.

அமெரிக்கா போய்ட்டானா ? அதுக்காக நீங்க அவனப் பத்தி எழுதுறத நிறுத்தாதீங்க. மெட்டல் டிடக்டர், இரும்புச்சத்து மாத்திரை. நல்ல திங்க் பண்றான் உங்கள மாதிரியே.

நான் சூப்பரா பாடியிருக்குன்னு நினைக்கிற குழந்தைய, ஜட்ஜ்ங்க நல்லா பாடலைன்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு இசை அறிவு கம்மியா இல்லை என்னக்கான்னு தெரியலை :)

உங்களுக்கு ஓட்டு போட்டுடறேன். கவர் எங்க வந்து வாங்கணும்னு சொல்லிடுங்க.

ஹைக்கூன்னா......சரி விடுங்க...

மறத்தமிழன் on December 24, 2009 at 12:13 PM said...

விகடன் கவிதைக்கு
வழ்த்துக்கள் கார்க்கி!

கவிஞர் பட்டமெல்லாம் வயசானவர்களுக்கு தான்...

உங்களுக்கு இளைய த.... சே "இளைய கவி" ஓகேவா?

Raja Subramaniam on December 24, 2009 at 1:24 PM said...

congrats.....

கணேஷ் on December 24, 2009 at 11:57 PM said...

கவிதைக்கு வாழ்த்துக்கள்! கடவுளுக்கு 'கட்' பண்ண வேண்டும்

என்ன ஒரு முரண். கவனித்தீர்களா?

உங்கள் கவிதை வந்த நேரம் விகடனில், வேட்டைக்காரன் 38 மார்க், பரபர பத்து நியூஸில் முதலாவதாக விஜய்யை டரியல் ஆக்கியிருந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேல், அட்டைப் படத்தில் 'தல' அஜீத் படம்.

எம்.எம்.அப்துல்லா on December 25, 2009 at 7:45 AM said...

//இந்த வயதில் உயிரே பாடலை ஜஸ்ட் லைக் தட் பாடிகிறார் //

நானும்தான் இப்போ பாடுறேன். என்கிட்டயும் ஆட்டோகிராப் வாங்கு :)

Mohan Kumar on December 25, 2009 at 8:50 AM said...

விகடனில் க‌விதை பார்த்தேன். நம்ம கார்க்கி தானா என கொஞ்சம் டவுட். வாழ்த்துக்கள் கார்க்கி. பல திசைகளிலும் கலந்து கட்டி அடிங்க. அருமை

Mohan Kumar on December 25, 2009 at 8:51 AM said...

//விகடன்ல என்னோட கவிதை போட முடியாதுன்னு சொன்ன போதே நினெச்சேன். அவங்களுக்கு கவிதை பத்தி ஒண்ணும் தெரியலன்னு. இப்ப கன்ஃ பிர்ம் ஆகி விட்டது. என்ன கொடும இது ! இறைவா நீ இருக்கியா இல்ல இல்லையாஆஆஆ //

Ha Ha ha !!

Mohan Kumar on December 25, 2009 at 8:53 AM said...

Abdullaa said:

//இந்த வயதில் உயிரே பாடலை ஜஸ்ட் லைக் தட் பாடிகிறார் //

நானும்தான் இப்போ பாடுறேன். என்கிட்டயும் ஆட்டோகிராப் வாங்கு :)//

நாராயணா இந்த அப்துல்லா தொல்லை தாங்க முடியலை நாராயணா!!

நேசன்..., on December 25, 2009 at 1:02 PM said...

kalakkal!.........

பேநா மூடி on December 25, 2009 at 1:03 PM said...

வாழ்த்துக்கள்...
கவிஞர் கார்க்கி...

kannaki on December 25, 2009 at 2:59 PM said...

கார்க்கி . வாழ்த்துக்கள்.ஆனந்தவிகடனில்(இந்த வாரம்) உங்கள் கடவுளின் குழந்தைகள்.கவிதை. வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.....

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 10:53 PM said...

அனுஜன்யா said...
விகடன்ல என்னோட கவிதை போட முடியாதுன்னு சொன்ன போதே நினெச்சேன். அவங்களுக்கு கவிதை பத்தி ஒண்ணும் தெரியலன்னு. இப்ப கன்ஃ பிர்ம் ஆகி விட்டது. என்ன கொடும இது ! இறைவா நீ இருக்கியா இல்ல இல்லையாஆஆஆ

சரி ஒரு டீல். உன்னோட ஹைக்கூ நல்லா இருக்கு. (அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா).//

ரசித்துச்சிரித்தேன்.

பதிவு வழக்கம்போல்..

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 10:53 PM said...

கவிதை அழகு, விகடனுக்கு வாழ்த்துகள்.!

தமிழ்ப்பறவை on December 26, 2009 at 11:29 PM said...

விகட கவிதைக்கு வாழ்த்துக்கள்...
ஹைக்கூ மொக்கையெனினும் நன்றாகவே இருந்தது கவிஞர் கார்க்கி...

அன்பரசன் on December 27, 2009 at 6:48 PM said...

விகடனில் கவிதை வந்திருக்கா ?
வாழ்த்துக்கள் கவிஞரே

ராஜன் on December 28, 2009 at 3:18 PM said...

//ஆல்செக்(Allsec) BPO டா.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?//

இப்படி எல்லாம் பண்ணா.... மேசிவ் சொல்லுயூசனுக்கு யாரும் வரமாட்டாங்க....

 

all rights reserved to www.karkibava.com