Dec 22, 2009

சோடா விக்கும் சொக்க தங்கமே


 

   திருவல்லிக்கேனி மேன்ஷன். கோவையில் பிறந்தவர் என்றாலும் சென்னை செந்தமிழில் பட்டையைக் கிளப்பும் அதிஷாவும், காதல் பித்தன் எம்.எஸ்.கேவும், பின்நவீனத்துவ பீரங்கி அனுஜன்யாவும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். எதிர்த்துக் கடை ஃபிகரை யார் கரெக்ட் பண்ணுவது என்ற மோதல் நடந்துக் கொண்டிருந்தது.

அதிஷா: இன்னா நைனா? யாரான்டா பிலிம் காட்டற? அவ என் டாவு.

எம்.எஸ்.கே: அன்பை சுமந்துக் கொன்டு வாழ்பவன் நான். அவள் அன்பின் மொத்த உருவம்

அனுஜன்யா: விழியின் வழியில் மொழியின் சுழலில் வழியும் கவிதை அவள். மழலை சிரிப்பும் அழகின் பிறப்பும் அவளின் இடத்தில்.

அதிஷா: இன்னா எழவோ? இன்னொரு தபா அவளப் பத்தி இப்டித் தப்புத் தப்பா பேசின.. மவனே கீசிடுவேன்

எம்.எஸ்.கே: என்ன மனிதர்கள் இவர்கள்? அமிழ்த்துகிற காதலைத் தாண்டி வெளியே வரத் துடிக்கும் பந்து நான். என்னை உதைத்தத் தள்ளத் துடிக்கும் கட்டை நீங்கள்.

அதிஷா: மவனே அப்டியே கட்டையால அட்ச்சேன் வை. வாயி வெத்தலப்பாக்கு போட்டுக்கும். இன்னாடா பெர்சா சொல்ட்ட நீ? அவள பத்தி நான் சொல்றேன் கேளு.

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

எம்.எஸ்.கே: குவளைக்குள் அடைத்து வைக்கப்பட்ட

வெறும் நீரென என் காதலை எண்ணிவிடாதே

உள்ளுக்குள் வெடிக்க தயாராயிருக்கும்

வாயுவைப் போன்றது அது

அனுஜன்யா: விடலைகளின் பார்வைகளால்
நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த முகம்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்

அதிஷா : தபாரு. முட்ஞ்சா தமில்ல சொல்லு. இல்லீன்னா போய்ட்டே இரு..உன் மூஞ்சில என் லெஃப்ட் ஹேண்ட வைக்க.

அனுஜன்யா: உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;

அதிஷா: எப்பிதான் ஒரு அர்த்தமும் இல்லாம பாரா பாராவ எய்தி தள்றியோ நீ. போட்டி மாமு. அவ அய்க பத்தி மூனு பேரும் பாடுவோம். யார்து சோக்கா கீதுனு அவ்ளே சொல்ட்டும். டீலூ ஓக்ககேவா?

எம்.எஸ்.கே: நான் தயார், என் கவிதையை கேளுங்கள்

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

அதிஷா: இன்னா நைனா இது? நீ வேலைக்காவ மாட்ட. இத்த கேளு.

மச்சான் பாடப் போறேன் கானா

உன்க்கு மத்ததெல்லாம் வேனா

உன் லிப்ஸ்தான் உனக்கு பேனா

அதுல இங்க் என்ன ஸ்பெஷல் தேனா?

எம்.எஸ்.கே: ம்ஹூம். சார் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.

அனுஜன்யா: ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே

அதிஷா: தபாரு. நீயும் நானும் ரவுடி ரேஞ்சுக்கு யூத்னு சொல்ட்டு திரியற. கவிதையும் என்ன மாதிரி ஷோக்கா எழுத தெர்ல. டீசண்ட்டா ஒதுங்கிக்கோ. இன்னா நான் சொல்றது?

அனுஜன்யா:

பேச்சுக்குமிழியின்
முட்டைகளுடைத்தவனுக்கு
எனது முத்தங்கள்
திரையின் பின்னாலிருந்து
மொழியுமிழ்தலென்பது
சுய புணர்வையொத்தது
பேச்சுக்களற்ற வெளி அபாயகரமானதென
எவன் சொன்னது
மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...

அதிஷா : சாமீ.. எனக்கு அந்தப் பொண்ணும் வோணாம். இவனும் வோணாம். இப்டியே சாவடிச்சிடுவான்.

எம்.எஸ்.கே: நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா..
-0-
ஆனால் எதிர்ப்பார்ப்புகளேதுமின்றி வா..
உனக்கென்று கொடுக்க
என்னிடம் இருப்பதெல்லாம்
அளவற்ற நேசமும்
குறைவற்ற முத்தங்களும் மட்டுமே.

அதிஷா: இது கொஞ்சம் சுமார்ப்பா. நீ காம்பெடிஷன்ல கீற. ஆனா அவன அடிச்சு துரத்திடு. இன்னொரு தபா என் கண்ல பட்டான் மவனே டாராந்துடுவான்.

இருவரின் கவிதயைப் படித்த சோடக் கடை ஃபிகர்,

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

பாடலை தேர்வு செய்து விட, அதிஷா ஆனந்தக் கூத்தாடுகிறார். வழக்கம் போல சோக கவிதை எழுதுகிறார் எம்.எஸ்.கே

46 கருத்துக்குத்து:

குறும்ப‌ன் on December 23, 2009 at 12:05 AM said...

கார்க்கி, முத‌ல் த‌ட‌வையா உங்க‌ ப‌திவுல‌ 0 க‌ருத்துக்குத்துங்க‌ற‌த‌ பாக்க‌றேன். ஒருவேளை போட்ட‌ குத்துக‌ளை இன்னும் அப்ரூவ‌ல் ப‌ண்ணலையோ?

ஏதோ ஒண்ணு, நானும் ஒரு குத்து குத்திக்க‌றேன், அ...வ‌ர்ட்டா!

குறும்ப‌ன் on December 23, 2009 at 12:06 AM said...

அட‌ மீ த‌ ஃப்ர்ஸ்ட்டா!

Karthik Viswanathan on December 23, 2009 at 12:34 AM said...

இதோ படிச்சுட்டு வரேன்..

Raja Subramaniam on December 23, 2009 at 1:33 AM said...

intha competition la neenga kalathu kiteenganna ungaluku than ponnu...

அனுஜன்யாwin kavithaigalai vaasikka konjam kastapatten

ungal blog ennai dinamum vasikka toondugirathu... thanks...

keep blogging(rocking) saga....

வெற்றி on December 23, 2009 at 1:45 AM said...

நல்லா இருக்கு :)

பிரியமுடன்...வசந்த் on December 23, 2009 at 2:09 AM said...

எப்படியோ தல அனுஜன்யா மாதிரி கவிதை எழுதிட்டீங்க...

கவிதையெல்லாம் பட்டாசு

அதுலயும் அதிஷாவோட சோடாவிக்கும் சொக்கத்தங்கமே தவுசண்ட் வாலா சகா

ஹேய் கார்க்கீயும் அனுஜன்யாவுக்கு போட்டியா வந்துட்டாரே...!

சுசி on December 23, 2009 at 2:59 AM said...

//எம்.எஸ்.கே: நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா..
-0-
ஆனால் எதிர்ப்பார்ப்புகளேதுமின்றி வா..
உனக்கென்று கொடுக்க
என்னிடம் இருப்பதெல்லாம்
அளவற்ற நேசமும்
குறைவற்ற முத்தங்களும் மட்டுமே.//

சூப்பர் கார்க்கி.

நேத்து சிரிப்பு மழை இன்னைக்கு கவிதை கலந்த சிரிப்பு மழையா :)

Prakash on December 23, 2009 at 3:25 AM said...

:)

Anonymous said...

//அனுஜன்யா: விடலைகளின் பார்வைகளால்
நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த முகம்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்//

அச்சச்சோ , இந்தக்கவிதை புரிஞ்சுடுச்சே.

அப்பன் on December 23, 2009 at 6:35 AM said...

விழியின் வழியில் மொழியின் சுழலில் வழியும் கவிதை நல்லா இருக்குது,,

இராம்/Raam on December 23, 2009 at 8:24 AM said...

கலக்கல்.. :)

அன்புடன்-மணிகண்டன் on December 23, 2009 at 8:32 AM said...

நல்லா இருக்குனு சொல்ல மாட்டேன்... ரொம்ப நல்லா இருக்குன்னு வேணுமின்னா சொல்றேன்.. :)

முரளிகுமார் பத்மநாபன் on December 23, 2009 at 8:50 AM said...

சகா எனக்கு அனுஜன்யாவிடமும், எம் எஸ் கேவிடமும் பேசியதில்லை, இனி அந்த குறையுமில்லை. கலக்குங்க

Cable Sankar on December 23, 2009 at 9:14 AM said...

suuppppppeerrr.....

நாஞ்சில் பிரதாப் on December 23, 2009 at 9:44 AM said...

:-)))

பரிசல்காரன் on December 23, 2009 at 9:53 AM said...

வேலை பிஸியா சகா?

ஸ்ரீமதி on December 23, 2009 at 10:04 AM said...

ரொம்ப பிஸியோ?

டம்பி மேவீ on December 23, 2009 at 10:05 AM said...

"பரிசல்காரன் said...
வேலை பிஸியா சகா?"


puriyala

irunthalum parisal sonnathinal

repeatu giren

Sangkavi on December 23, 2009 at 10:10 AM said...

நண்பரே கற்பனை சூப்பர்..............

♠ ராஜு ♠ on December 23, 2009 at 10:30 AM said...

ஒரு ஃபுல் ”மீள்ஸ்” சாப்பிட்ட மாதிரி இருக்குண்ணா..!
:-)

Mohan Kumar on December 23, 2009 at 10:33 AM said...

ச்சே! ஆபிசில் படிச்சு தொலைச்சுட்டேன். ஒரே சிரிப்பு. எங்க.... யூத்து அனுவெல்லாம் காணும்!!

Mohan on December 23, 2009 at 10:35 AM said...

கலக்கல் :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) on December 23, 2009 at 10:41 AM said...

நல்லாயிருந்ததுண்ணே..!

திருநாவுக்கரசு பழனிசாமி on December 23, 2009 at 10:54 AM said...

தல,,கவிதைகள் கலக்கல்..
போட்டியில நீங்க இல்லையா...

கார்க்கி on December 23, 2009 at 11:07 AM said...

@குறும்பன்,
பதிவு போட்ட அடுத்த நிமிஷமே வந்தா என்ன இருக்கும் சகா?

@கார்த்திக்,
இன்னுமா படிக்கிறீங்க?

@ராஜா சுப்ரமணியம்,
ரொம்ப சந்தோஷம் சகா

@வெற்றி,
டேங்க்ஸூப்பா

@வசந்த்,
அனு வந்து உங்கள காய்ச்சுவாரு.நான் அப்பீட்ட்டு

@சுசி,
என் கவிதை உங்களுக்கு சிரிப்பா? நாளைக்கு சொல்றேன் ஒரு முக்கியமான விஷயத்த.

@பிரகாஷ்,
:)))

@அம்மினி,
அச்சச்சோ!! அப்போ அது அனுஜன்யா கவிதை மாதிரி இல்லையா?

@அப்பன்,
நன்றி

@இராம்,
ரொம்ப நன்றிங்க

@மணிகண்டன்.
டேங்க்ஸு சொல்ல மாட்டேன். ரொம்ப டேங்க்ஸூப்பா

@முரளி,
விஷயம் தெரியுமா சகா? எம்.எஸ்.கேவிடம் நானும் பேசியதில்லை

நன்றி கேபிளாரே

நன்றி நாஞ்சில்

பரிசல், ஸ்ரீமதி கொஞ்சம் நேரம் அமைதியா இருங்கப்பா

@மேவீ,
அது சரி

@சங்.கவி,
நன்றி சாரே

@ராஜு,
பீடா போடறியா? அதாம்ப்பா கமெண்ட்ஸ்லாம் படிக்கிறியான்னு கேட்டேன்

@மோஹன்குமார்,
வருவார் சார். ஒளிஞ்சிருந்து யார் யார் என்னென்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு பீறிட்டு வருவார்.(9யாருக்கு தெரியும். பீர் இட்டுக் கூட வருவாரு)

@மோகன்,
நன்றி

@உ.த,
பதிவு கொஞ்சம் பெருசா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லிடறாதாண்ணே?

@திரு,
நமக்கெல்லாம் போட்டியே கிடையாது பாஸ் :))

ஜ்யோவ்ராம் சுந்தர் on December 23, 2009 at 11:24 AM said...

கார்க்கி, ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே? மீள் பதிவா?

தராசு on December 23, 2009 at 12:19 PM said...

குருஜியை வழி மொழிகிறேன்.

RaGhaV on December 23, 2009 at 12:49 PM said...

உங்க பின்னூட்டதிற்கு பதில் வந்திடுச்சு.. அந்த பக்கம் போகாதீங்க, அப்புறம் என் கடை வாசல்ல ரத்த ஆறுதான்.. :-))


//எப்பிதான் ஒரு அர்த்தமும் இல்லாம பாரா பாராவ எய்தி தள்றியோ நீ. //

என்ன ஒரு வில்லதனம்..

நர்சிம் on December 23, 2009 at 1:45 PM said...

மீ ப? ஆனாலும் சூ.ப.

Chitra on December 23, 2009 at 1:54 PM said...

அவங்களுடைய தனித்துவத்தை நீங்க உள் வாங்கி, நல்ல நகைச்சுவையுடன் பதிவை தந்து, எங்களை ரசிக்க சிரிக்க வைத்ததுக்கு நன்றி.

நாளைப்போவான் on December 23, 2009 at 2:34 PM said...

:) :D

பைத்தியக்காரன் on December 23, 2009 at 2:42 PM said...

நீங்களும் மீள் பதிவா :(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தர்ஷன் on December 23, 2009 at 2:46 PM said...

முன்னமே படித்ததுதான்
இருந்தாலும் வரி விடாமல் படித்தேன்

Yuva on December 23, 2009 at 3:31 PM said...

பின்னூட்டங்களை முழுசா படிச்சதாலே தெரிஞ்சது. மீப-வேதான். இருந்தாலும் ரசிச்சேன்.(தப்பிச்சதுடா மூக்கு அய்யா...)

உமா on December 23, 2009 at 5:03 PM said...

//விடலைகளின் பார்வைகளால்
நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்; //

க்ளாஸ்பா...

அத்திரி on December 23, 2009 at 6:27 PM said...

)))))))))))))

top class

KaveriGanesh on December 23, 2009 at 6:28 PM said...

வேட்டைகாரனிலிருந்து மீளவே இந்த பதிவா?

அறிவிலி on December 23, 2009 at 7:15 PM said...

அப்போ கன்ஃப்ர்ம்டா பிஸிதான்.

மறத்தமிழன் on December 23, 2009 at 8:17 PM said...

சகா(கார்க்கியின் பேடன்ட் ரைட்:),

சித்ராவின் கமெண்ட்டை வழிமொழிகிறேன் !

குறிப்பாக அனுஜன்யா அவர்கள் போல எழுதியது..

pappu on December 23, 2009 at 8:19 PM said...

மீள்ஸு!

Sarathguru Vijayananda on December 23, 2009 at 10:26 PM said...

நைனா...கீசிட்டபா...

கவித அல்லாம் படா ஜோரு
இன்னா ஒண்ணு ஒண்ணியும் பிரியமேட்டேங்குது....

விலக மறுத்த முகம்
கவரவில்லையென்றாலும்...அப்டி போடு நைனா..எங்கியோ வீந்திட்டுகுற...தங்காச்சி எந்த ஊருபா...தில்லிக்கேணியா..

மணல்கயிறு

Sarathguru Vijayananda on December 23, 2009 at 10:27 PM said...

ஓட்டும் குத்தியாச்சு நைனா....

செ.சரவணக்குமார் on December 23, 2009 at 11:50 PM said...

ரைட்டு

அனுஜன்யா on December 24, 2009 at 10:39 AM said...

ம்ம், மீள் சிரிப்பு. (வேற?)

அனுஜன்யா

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 10:57 PM said...

மீள் பதிவு. இருப்பினும் மூவரையும் சிறப்பாக நேரேட் செய்த பதிவு இது. மீண்டும் சிரித்தேன்.

தமிழ்ப்பறவை on December 26, 2009 at 11:33 PM said...

மீப...
சிரித்தேன்...
தல அனுஜன்யா மாதிரியே நல்லா கவிதை எழுதுறீங்க...அப்புறம் ஏன் அவரைக் கலாய்க்கிறீங்க...
நீங்க கவிதையில அடுத்த கட்டத்திற்கோ, வட்டத்திற்கோ போகவேண்டிய நேரம் வந்துடுச்சி...
//நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்//
இதுக்குள்ள இருக்க உள்குத்துக்கு அர்த்தம் என்ன?

 

all rights reserved to www.karkibava.com