Dec 21, 2009

ஏழுவும் கெமிஸ்ட்ரி மேடமும்


 

மு.கு: புட்டிக்கதைகள் எழுதி வெகு நாட்களாகிவிட்டது. புதிதாய் படிக்க வந்திருப்பவர்கள் இங்கே சென்று ஏழுவைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

*********************************************************************************************************

கடைசி வருடத்திற்கு வந்துவிட்டாலும் கெமிஸ்ட்ரி பிராக்டிக்கல்ஸை மட்டும் க்ளியர் செய்யாமலே இருந்தான் ஏழு. தேர்வுக்கு சென்றிருந்தாலே பாஸ் செய்திருப்பான். இந்த முறையாவது அவனை இழுத்துக் கொண்டு போக வேண்டுமென்று நினைத்தான் பாலாஜி. எப்படியோ ஏமாற்றி முதல் நாள் இரவு ஒரு பியரை அடித்துவிட்டான் ஏழு. விஷயம் தெரிந்த ஆறு குதிக்க, ஏழு உள்ளே வந்தான்

”அவங்க வாய மூடிட்டு இருந்தா இவன் ஒழுங்கா எக்ஸாம் எழுதிட்டு வருவாண்டா.சும்மா சும்மா இவனை கடுப்பேத்துறாங்க” என்று ஏழுவுக்காக வாதாடினான் பாலாஜி,.

”ஆமாம் மச்சி. அவங்க ம்யூட்டா இருந்தா க்யூட்டா இருப்பாங்க” என்றான் ஏழு.

என்னடா சொல்ற?

அதான் மச்சி. அந்த கெமிஸ்ட்ரி கம்முன்னு இருந்தா கும்முன்னு இருப்பாங்க என்று தமிழ்படுத்தியவனை பந்தாடினார்கள் அனைவரும்.

முதல் நாள் மப்பு பாதி இறங்கவில்லை என்று தெரிந்தும் ஏழுவை கெமிஸ்ட்ரி லேபில் கொண்டு போய் டிராப் செய்தான். நடந்துதான் சென்றார்கள். இருந்தாலும் டிராப் செய்தான் என்று சொல்வதே சரியானது. உள்ளே நுழைந்தவனை கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தார்கள் வேதா மேடம்.

எக்ஸாமுக்கு லேட்டாவா வர்றது? 30 நிமிஷத்திலே முடிச்சிடுவியா?

எவ்ளோ பெரிய வீரனா இருந்தாலும் டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது மேடம்.

உன் கூட படிச்சவங்க எல்லாம் எப்போ பாஸ் பண்ணிட்டாங்க. நீ ஏம்ப்பா?

டிரெயின் எவ்ளோ வேகமா போனாலும் கடைசி பொட்டி கடைசியாத்தான் வரும் மேடம்

உன் பேட்ச் மேட்ஸ் எல்லாம் இந்த வருஷம் முடிஞ்சா உன்னை விட்டு போயிடுவாங்க. நீ இங்க தான் வரணும். தெரிஞ்சுக்கோ

சைக்கிள் போனா சைக்கிள் ஸ்டேண்ட் கூடவே போகும். ஆனா பஸ் போனாலும் பஸ் ஸ்டேண்ட் அங்கேயாதான் இருக்கும் மேடம். அங்கேயேதான் இருக்கும்.

கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான். நீ என்னன்னா பிராக்ட்டிகல்ஸையே பாஸ் பண்ன மாட்ற

லன்ச் பேக்ல லன்ச் இருக்கும், ஸ்கூல் பேக்ல ஸ்கூல் இருக்குமா மேடம்?

அவன் கிட்ட கத்துக்கிட்டு வரலாமில்ல?

ப‌ஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னா பஸ் வரும்.ஃபுல் ஸ்டாப் பக்கத்துல நின்னா ஃபுல் இல்ல,ஆஃப் கூட வராது மேடம்.

இன்னைக்கு கஷ்டப்பட்டா நாளைக்கு நீதானே நல்லா இருக்க போற?

இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எழுந்திருக்கலாம் மேடம். நாளைக்கு தூங்கினா இன்னைக்கு எழுந்திருக்க முடியுமா?

இந்த நக்கலுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை.நல்லா படிக்கிற பையன் நீ. எழுதின எக்ஸாமில் எல்லாம் நல்ல மார்க்.

காக்கா கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளைதானே மேடம்.

டயலாக் எல்லாம் சரி. ஆனா எக்ஸாம் எழுதத்தான் வர மாட்ற.

முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதானே

உன்கிட்ட டவுட் கேட்ட பசங்க எல்லாம் பிராக்டிகல்ஸ்ல 100 மார்க் வாங்கிட்டாங்க. தெரியுமா?

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும், பரிசு கைக்குதான் கிடைக்கும்

உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. இதுக்கு பதில் சொன்னா பாஸ் போட்டுடறேன். எந்த திடப்பொருளை எரித்தால் நேரிடையாக வாயுவாகிவிடும்?

தெரியாது மேடம். எந்த திரவத்தை சூடாக்கினால் திடப் பொருளாகும்?இதுக்கு பதில் சொல்லிட்டா நீங்க என்ன ஃபெயில் ஆக்கிடுங்க.

ரொம்ப நேரம் யோசிச்ச கெமிஸ்ட்ரி மேடம், தெரியாது என்று சொல்ல சிரித்துக் கொண்டே சொன்னான் ஏழு

தோசை மாவு மேடம்.

63 கருத்துக்குத்து:

Lakshmi on December 21, 2009 at 11:33 PM said...

:) Dosai Maavu - ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

>>கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான்.
Appadiyaaaaaaa? :)

Me the first?

ரஞ்சனி on December 21, 2009 at 11:40 PM said...

சிரிச்சு மாளல. ராத்திரி 12 மணிக்கு என்னடி சிரிப்புன்னு ஹாஸ்டலில் எல்லோரும் கேட்கறாங்க. ஏங்க இப்படி பண்றீங்க?

ஏழு வந்தாலே களை கட்டுது. rocking post. yabbaa mudiyala.

தமிழினி on December 21, 2009 at 11:46 PM said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

தர்ஷன் on December 22, 2009 at 12:10 AM said...

அட ரொம்ப நாளைக்கி அப்புறம் ஏழு
கலக்கல் சகா
நான் ரொம்ப ரசித்தது ஏழுவின் மேடம் பற்றிய கமெண்டும் பின் அதை தமிழ்ப் படுத்திய விதமும், என்னா Rhyming

Chitra on December 22, 2009 at 1:04 AM said...

///////உன்கிட்ட டவுட் கேட்ட பசங்க எல்லாம் பிராக்டிகல்ஸ்ல 100 மார்க் வாங்கிட்டாங்க. தெரியுமா?

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும், பரிசு கைக்குதான் கிடைக்கும்/////// .............சும்மா சொல்ல கூடாது. நல்லாவே சிரிக்கவே வைக்கிறீங்க. சூப்பர்.

Prakash on December 22, 2009 at 1:29 AM said...

முதல் போஸ்ட் செம காமடி , சூப்பரா எழுதியிருக்கீங்க ( முன்னாடி)

நீங்க கெமிஸ்ட்ரில செண்டும் அவ்வளவுதானே மேட்டர்

வெற்றி on December 22, 2009 at 1:48 AM said...

ஏழுவின் மேடம் பற்றிய கமெண்டு சூப்பர்...

கலக்கல் பதிவு சகா...

Mr.vettiபைய்யன் on December 22, 2009 at 3:01 AM said...

வணக்கம் கார்க்கி

கலக்கல்

வேட்டைகாரனை விட்டு வந்நிங்களே

நன்றி

Raja Subramaniam on December 22, 2009 at 3:04 AM said...

//கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான். நீ என்னன்னா பிராக்ட்டிகல்ஸையே பாஸ் பண்ன மாட்ற//

cycle gapla aeroplane otturengale boss

ella mokkayume konjam old typla irruku..... irrunthallum nalla irruku jj

சுசி on December 22, 2009 at 4:09 AM said...

//உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.//

உங்கள சொல்லல கார்க்கி. நான் சிரிச்சத பாத்து எங்க வீட்ல சொன்னாங்க.

சுசி on December 22, 2009 at 4:10 AM said...

//கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான். //

அப்டியா?????????

//அவங்க ம்யூட்டா இருந்தா க்யூட்டா இருப்பாங்க” //

கலக்கல்.

Anonymous said...

//கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான்//

சைக்கிள் கேப்ல , சரிசரி நடக்கட்டும்.

//லன்ச் பேக்ல லன்ச் இருக்கும், ஸ்கூல் பேக்ல ஸ்கூல் இருக்குமா மேடம்?//

பப்லுவோட டயலாக் மாதிரி இருக்கு

Sangkavi on December 22, 2009 at 7:11 AM said...

நண்பர் கார்க்கி படிக்க படிக்க சிரிப்போ சிரிப்பு.......

எப்படிங்க உங்களாள மட்டும் இப்படி..................
விடிய விடிய யோசிச்சிங்களோ........

பரிசல்காரன் on December 22, 2009 at 7:48 AM said...

கடைசி கமெண்ட் க்ளாஸ் கார்க்கி! ஆமா, அப்படியே சைடுல ஒரு வரலாற்றுக் குறிப்பைப் புகுத்தீட்ட பாரு.. கில்லாடிடா மாமூ நீ!

முரளிகுமார் பத்மநாபன் on December 22, 2009 at 8:23 AM said...

சகா, ரொம்ப நாளைக்கு பிறகு ஏழுவை சந்தித்ததில் மகிழ்ச்சி. கேப் விட்டு வந்தாலும் கேப்பே இல்லாம விளையாடியிருக்கிறார், நம்ம ஏழு.

கலக்கல்.... :-)

அன்புடன்-மணிகண்டன் on December 22, 2009 at 8:28 AM said...

ஏழு, பரீட்சைக்கு வேணுமின்னா லேட்டா போகட்டும்.. பதிவுக்கு சீக்கிரம் அனுப்பிடுங்க கார்க்கி.. :)

க‌ரிச‌ல்கார‌ன் on December 22, 2009 at 8:51 AM said...

எல்லாம் க‌ல‌க்க‌லா இருக்கு ச‌கா அந்த‌ ஒரு வ‌ர‌லாற்று குறிப்பை த‌விர‌

♠ ராஜு ♠ on December 22, 2009 at 9:02 AM said...

தோசை மாவு,LIquid இல்ல,Semisolid ன்னு அண்ணன் கே.வி.ராஜா வந்து சொன்னாலும் சொல்லுவாப்ல்.
:)

உங்க கிளாஸில மொத்தம் ரெண்டு கார்க்கியா..?

♠ ராஜு ♠ on December 22, 2009 at 9:02 AM said...
This comment has been removed by the author.
♠ ராஜு ♠ on December 22, 2009 at 9:03 AM said...
This comment has been removed by the author.
pappu on December 22, 2009 at 9:19 AM said...

>>கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான்.
Appadiyaaaaaaa? :)////

யேய்... இந்த டகால்டிதான வேணாங்கிறது.

pappu on December 22, 2009 at 9:19 AM said...

ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஏழு என போட்டிருக்க வேண்டாமா?

முரளிகண்ணன் on December 22, 2009 at 9:31 AM said...

Excellent karki

நாஞ்சில் நாதம் on December 22, 2009 at 9:38 AM said...

super

நர்சிம் on December 22, 2009 at 10:33 AM said...

//பரிசல்காரன் said...
கடைசி கமெண்ட் க்ளாஸ் கார்க்கி! ஆமா, அப்படியே சைடுல ஒரு வரலாற்றுக் குறிப்பைப் புகுத்தீட்ட பாரு.. கில்லாடிடா மாமூ நீ!
//
;)

தோசை..செம திருப்பம்

கார்க்கி on December 22, 2009 at 10:33 AM said...

வாங்க லட்சுமி. :))

நன்றி ரஞ்சனி.ஆமா, நீங்க சிரிச்சா அந்த அளவுக்கு பயமாவா இருக்கும்? :))

நன்றி தர்ஷன்

நன்றி சித்ரா

பிரகாஷ், ககபோ

நன்றி வெற்றி

வெட்டிப்பையன். நாளைக்கு.. சரி சரி ஓடாதிங்க. வாங்க சகா

@ராஜா, ஆமாம் சகா. தத்துவங்கள் பழசுதான்

சுசி, உங்கள சரியா புரிஞ்சு வச்சிருக்காங்க

அம்மிணி, கிகிகிகி

சங்ககவி, ஒரு “க”விட்டாலும் தப்பா போயிடும். ஏன் இப்படி ஒரு பேரு தல?

பரிசல், ஹிஹிஹி..

நன்றி முரளி

நன்றி மணிகண்டன். ஏழுவை இழுத்துட்டு வர்றது எவ்ளோ கஷ்டம்ன்னு எனக்குதான் தெரியும்

கரிசல், உண்மை கசக்கதான் செய்யும் நண்பா

ராஜூ, ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்.. சரி விடு

பப்பு, ரொம்ப ஓவரா இருக்காது?

நன்றி முரளிக்கண்ணன்

நன்றி நாதம்

பாலா on December 22, 2009 at 12:00 PM said...

கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான்


இதெல்லாம் ரெம்ப ஓவரு

பாலா on December 22, 2009 at 12:01 PM said...

கொய்யால சான்சே இல்லடி

S.A. நவாஸுதீன் on December 22, 2009 at 12:37 PM said...

///////தோசை மாவு///////

தூ......................ள். ஏழுக்கும் வேதாவுக்கும் செம கெமிஸ்ட்ரிங்க கார்க்கி.

Karthik on December 22, 2009 at 2:01 PM said...

நன்றி நன்றி நன்றி..:))

ஆனா நீங்க சென்டம் எடுத்தீங்கறத தான் ஜீரணிக்க முடியல. ஜெலுசில் போட்டுக்கிறேன். :))

தாரணி பிரியா on December 22, 2009 at 2:24 PM said...

நன்றி நன்றி நன்றி

:))

தாரணி பிரியா on December 22, 2009 at 2:26 PM said...

எங்க கெமிஸ்ட்ரி மிஸ் ஏழுகிட்ட மாட்டி இருக்கணும் :). என்னையெல்லாம் படிக்க சொல்லி அவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்காங்க‌

ரமேஷ் கார்த்திகேயன் on December 22, 2009 at 2:55 PM said...

//கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான்.????//
சைக்கிள் கேப் ல ஆட்டோ ஓட்டுறீங்க

RaGhaV on December 22, 2009 at 2:59 PM said...

கலக்கல் காமெடி.. அட்டகாசமான பதிவு.. ;-))

கார்க்கி on December 22, 2009 at 3:15 PM said...

நன்றி நர்சிம்

மாப்பி, சூப்பரா?

நவாஸூதின், எனெர்ஜி லெவெல் எப்படிங்க? கோ ஆர்டினேஷன் பெர்ஃபெக்டா? :))

கார்த்திக், விடப்பா விடப்பா இதெல்லாம் நமக்கு ஜகஜம்

தா.பி, நீங்க எல்லாம் படிச்சேன்னு சொல்றதே கொடுமைதாங்க :)))

ரமேஷ், ஹிஹி ரொம்ப புகழாதிங்க பாஸ்

நன்றி ராகவ். இங்க எல்லாம் சரியா பின்னூட்டம் போடறீங்க. உங்க பதிவுல நான் போட்டதுக்குதான் பதில காணோம் :))

Yuva on December 22, 2009 at 4:00 PM said...

சிரித்து சிரித்து என்னை விழ வைத்தாய்... "மொக்கைகளின் உச்சி" ஏழு வாழ்க!

தாரணி பிரியா on December 22, 2009 at 4:16 PM said...

நான் நிஜமாவே +2ல கெமிஸ்ட்ரில சென்டம் தெரியுமா :)

Anonymous said...

தா.பி எந்த ஸ்கூலில் அக்கவுண்ட்ஸ் க்ரூபில் கெமிஸ்ட்ரி சொல்லிதராக :))

☼ வெயிலான் on December 22, 2009 at 4:42 PM said...

Non-stop Comedy :)

தாரணி பிரியா on December 22, 2009 at 4:52 PM said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா on December 22, 2009 at 4:55 PM said...

//Blogger mayil said...

தா.பி எந்த ஸ்கூலில் அக்கவுண்ட்ஸ் க்ரூபில் கெமிஸ்ட்ரி சொல்லிதராக :))

//

நான் B.Sc chemistry discontinue செஞ்சவ மயில். அதுக்கு பிறகுதான் கரஸ்ல பி.காம் சேர்ந்து அமைதியான பொண்ணா மாறினேன் :)

RaGhaV on December 22, 2009 at 5:23 PM said...

என்ன சகா அந்த பின்னூட்டதுக்கு பதில எங்கிட்ட கேட்டா எப்படி..? :-))

ஷாகுல் on December 22, 2009 at 6:59 PM said...

//கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான். //

செண்டத்துக்கு ஒரு மார்க் கம்மி கேள்விபட்டோம்.

அதாங்க 100ல் முன்னடி இருக்குற 1 கம்மி பன்னிட்டா வ்ருமே அந்த மார்க்.

taaru on December 22, 2009 at 7:09 PM said...

"உன்கிட்ட டவுட் கேட்ட பசங்க எல்லாம் பிராக்டிகல்ஸ்ல 100 மார்க் வாங்கிட்டாங்க"

பரிசலார் said...
//அப்படியே சைடுல ஒரு வரலாற்றுக் குறிப்பைப் புகுத்தீட்ட பாரு.. கில்லாடிடா ...//

என்னா!! தல ...இதையா வரலாற்று குறிப்புன்னு சொல்றீக...?!! :-P ;-))

//தோசை மாவு மேடம்//
ஏன்ண்ணே?.... :-))))

தமிழ்ப்பறவை on December 22, 2009 at 7:32 PM said...

நல்லா இருக்கு சகா....(ஒரே ஒரு வரலாற்று உண்மையைத் தவிர)

சேலம் வசந்த் on December 22, 2009 at 8:09 PM said...

தோசை மேட்டர் சூப்பர்!! ஆபிஸ்ல இத சத்தம் போட்டு சிரிக்காம படிச்சு முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி!!

மறத்தமிழன் on December 22, 2009 at 8:19 PM said...

கார்க்கி,

அகநாழிகை புத்தக வெளியீட்டில் உங்களையும்,நர்சிம்,முரளி,லக்கி,ஜாக்கி,வாசு,உ.த,கேபிள்,தண்டோரா,ஆதி,வெயிலான்,எறும்புகள் ராஜகோபால் ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

ஏழு & மேடம் கமெண்ட்ஸ் பப்லு ரகம் என்றாலும்..ந(கை)ச்..சுவை..!

க்யூட்/ம்யூட்,கம்முன்னு/கும்முன்னு என்னானானானா ரைமிங் !

வேட்டைக்காரன்/ஏழுன்னு பதிவா கலக்குறீங்க.

அன்புடன்,
மறத்தமிழன்.

மறத்தமிழன் on December 22, 2009 at 8:26 PM said...

உ.த,கேபிள்,தண்டோரா,ஆதி, வெயிலான்...
பெயர்கள் விடுபட்டுவிட்டன..

கார்க்கி on December 22, 2009 at 11:38 PM said...

நன்றி யுவா

தா.பி, செண்ட்டம்ன்னா 100% அர்த்தம்.அது சரி. என்ன செஞ்சீங்க காலேஜ் விட்டு அனுப்புற அளவுக்கு

வெயிலானே கமெண்ட் போட்டால்...

அதுவும் சரிதான் ராகவ்.அங்கேயே கேட்டுக்கிறேன் :))

ஷாகுல், அதேதானுங்கண்ணா

டாரு, நீங்க இன்னும் வளரனும்ண்ணே

நன்றி பறவை.

நன்றி வசந்த். நாலு பேரு சிரிச்சா எதுவும் தப்பில்லைன்னு நினைச்சுதான் எழுதறேன் :))

மறத்தமிழன். நீங்க ரொம்ப புதுசுங்க. ஏழுவுக்கு பிறகுதான் பப்லு. பழைய புட்டிக்கதைகள் படிச்சு பாருங்க

Romeoboy on December 23, 2009 at 12:39 AM said...

தோசை மாவை இந்த அளவுக்கு யாருக்கும் யோசிச்சு இருக்க மாட்டாங்க ..

Kiruthikan Kumarasamy on December 23, 2009 at 2:54 AM said...

///கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான்////
இதுதான் அண்டப் புழுகு ஆகாசப் புழுகா... கண்ணை மறைக்குது சகா, சிரிச்சுச் சிரிச்சு வந்த தண்ணி

Mohan Kumar on December 23, 2009 at 10:27 AM said...

ஏழு விடாம தத்துவம் பேசியும் மிஸ் தன்னோட கருத்தை சொல்லிக்கிட்டே இருக்காங்களே. இவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

ஏழு பதிவுகள் சிரிக்காம யாரும் படிக்க முடியாது.

கல்யாணி சுரேஷ் on December 23, 2009 at 10:41 AM said...

//கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான். நீ என்னன்னா பிராக்ட்டிகல்ஸையே பாஸ் பண்ன மாட்ற//

என்ன கொடுமை சார் இது?

Xavier on December 23, 2009 at 1:21 PM said...

சூப்பர் கார்கி! ஏழு கலக்குறார்.

குசும்பன் on December 23, 2009 at 9:24 PM said...

//கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான்.//


இத படிச்சுட்டு பாலாஜி ரெண்டு நாள தூக்கம் இல்லாம கிடக்கிறான்:)

குசும்பன் on December 23, 2009 at 9:26 PM said...

முன்னாடி இதே மேட்டரை ஒரு காவிய நாயகனை, வைத்து எழுதியதாக நினைவு?:) சரியா?

அனுஜன்யா on December 24, 2009 at 11:24 AM said...

அட்டகாசம். அதகளம். ஏழு ஏழு தான்.

அனுஜன்யா

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 11:01 PM said...

ரசித்துச்சிரித்தேன்.

DilKrishna on December 27, 2009 at 9:00 PM said...

fine....nice reading....MR.SEVANU......

DilKrishna on December 27, 2009 at 9:03 PM said...

nalla irundadu....mr.sevanu......

Sankar on December 12, 2011 at 11:16 AM said...

சமீப காலங்களில் என்னை சிரிக்க வைக்கும் ஒன்றே ஒன்று உங்களுடைய நகைச்சுவை வரிகள் தான். அது காணொளியாகட்டும் இல்லை வலைப்பதிவாகட்டும் :-)

Athammohamed on December 12, 2011 at 6:47 PM said...

எல்லாமே கேட்ட ஜோக்ஸ்தான், இருந்தாலும் சூப்பர்.

Athammohamed on December 12, 2011 at 6:47 PM said...

எல்லாமே கேட்ட ஜோக்ஸ்தான், இருந்தாலும் சூப்பர்.

 

all rights reserved to www.karkibava.com