Dec 20, 2009

வேட்டைக்காரனைப் பற்றி


 

OgAAAMQf0gxHVOKmVybguxrrFG4QkkXFYSEBA2FJjyAbzpTGhuk4AQfnK7Nwy0vRTgjKWsFTuipDQ4PZsO-4knHVUvcAm1T1UEKeg7txyfOgHI54f7l7WGFfKBbH

கடைசிப் பதிவை பார்த்து இமெயிலில் பொங்கி விட்டார்கள் சில விஜய் ரசிகர்கள். ”எங்கப்பா இருந்தீங்க இத்தனை நாளா? வேட்டைக்காரன் வரும்வரை எங்கேயும் நான் விஜயை விட்டுக் கொடுத்ததே இல்லை. இந்தப் பதிவிலும் கடைசி வரியே வாழ்க இளைய தளபதிதான்னு” சொன்னாலும் கேட்கவில்லை. அவர்கள் ஆதங்கமெல்லாம் படம் நல்லா இருந்தும் ஏன் இப்படி செஞ்சிங்க என்பதுதான்.

படம் நல்லாயிருக்கான்னு சிரிப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. நான் கேட்டவரை மவுத் டாக் பாசிட்டிவ்தான். சிக்னலில் நின்ற போது பேசிக் கொண்டிருந்த இருவர், அலுவலகத்தில் மொபைலில் பேசியவர், என்னுடன் படம் பார்க்க வந்ததிலே சிலர் என எங்கும் படத்தைப் பற்றி நல்ல டாக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எனக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் யாருக்குமே பிடிக்காது என்பதில்லை. கடைசியாக எனக்கு பிடித்த விஜய் படம், நம்புங்கள் போக்கிரி அல்ல. சச்சின். திருப்பாச்சியெல்லாம் ஏண்டா என்று வெளிவந்தேன் சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து. ஆனால் தமிழகத்தில் அதன் ரிசல்ட் பிளாக்பஸ்டர்.

வேட்டைக்காரனும் திருப்பாச்சியும் பல விஷயங்களில் ஒன்று. இரண்டுமே ஒரே ஃபார்முலா. முதல் பாதி முழுவதும் காதல்,காமெடி. இண்டெர்வல் பிலாக்கில் ஒரு ட்விஸ்ட்டோ, சவாலோ இருக்கும். இரண்டாம் பாதி ஆக்‌ஷன் மேளா.இது புது ரூட்டல்ல. அண்ணாமலை ரூட்தான்.  விஜயைத் தவிர யாரும் இப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று கிண்டலாக சொன்னார் ஒரு பதிவர். வேறு யார் நடித்தாலும் செட்டாகாது என்பதற்கு திருப்பாச்சி,சிவகாசி வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி, தர்மபுரி என்று பாதாளத்திற்கு சென்ற பேரரசுவே சாட்சி. இத்தனைக்கும் அஜித்தும், விஜயகாந்தும் மாஸ் ஹீரோக்கள்தான். விஜய்க்கு இது சரியான பாதையாகத்தான் எனக்கு தெரிகிறது. அவர் படங்கள் பெர்லின் திரைப்பட விழாவுக்கு எல்லாம் போவதில்லை. அதிகபட்சம் திருவனந்தபுரம்தான். ஆனால் பிரச்சினை திரைக்கதை. வில்லனிடம் ஹீரோ மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனம் இருந்தால் என்னால் ரசிக்க முடிகிறது.

உதாரணம் திருவிளையாடல் ஆரம்பம். ஒவ்வொரு காட்சியும் தனுஷ் தனது புத்திசாலித்தனத்தால் பிரகாஷ்ராஜை திணறடிப்பார். அப்படி ஒரு படத்தில் விஜய் நடித்தால் மரண மாஸ். ஆனால் அந்தப் படத்தில் அந்த மாஸ் மிஸ். வேட்டைக்காரனின் குறையாக நான் கண்டது இந்த புத்திசாலித்தனத்தை மட்டும்தான். மற்றபடி இசை,காமெடி, விஜயின் சேஷ்டைகள் என எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் படம் ஸ்கோர் பண்ணுகிறது. முதல் பாதி இரண்டே இரண்டு பாடல்கள்தான். ஆனால் 90 நிமிடம். நிச்சயம் அதை நம்மால் உணர முடியவில்லை. முதல் பாதியில் ஒரே குறை அந்த அருவி சீன். முதல் நாள் ரசிகர்களே அதை ரசிக்கவில்லை. குருவியில் செய்த அதே தவறு. மற்றபடி முதல் பாதி நன்றாகவே இருக்கிறது.

இரண்டாம் பாதியில் ஏற்கனவே ஹிட்டடித்த புலி உறுமுது பாடல் முதலில் வருகிறது. முதலில் சின்னத்தாமரைப் பாட்டு, இரண்டாவதாக புலி உறுமுதுவைப் போட்டிருக்கலாம். படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கும். அம்மன் பாட்டு என்று கிண்டலடித்தவர் கூட திரையில் நன்றாக இருப்பதாக சொன்னார். அடுத்தடுத்த காட்சிகள்தான் வேகத்தடைகள். தன் நண்பனை போட்டுத் தள்ளிய வில்லனின் மகனை விஜய் கொல்லும் சீனில் கொஞ்சம் கூட கோபமே இல்லாமல் “உன் புள்ளைக்கு மொள்ளமாறித்தனம் கத்துக் கொடுத்த. ரவுடித்தனம் செய்ய கத்துக் கொடுத்த. நீச்சல் அடிக்க கத்துக் கொடுத்தியா” என்கிறார் சிரித்துக் கொண்டே. இதைத்தான் அதிஷா “அடிக்கிற சுனாமியில் கிடைக்கிற அல்வாத்துண்டை ரசிக்கவா முடியும்?” என்கிறார். க்ளைமேக்ஸ் மகா கொடுமை. இந்த கடைசி அரை மணி நேரத்தால் படமே மொக்கை என்கின்ற லெவலுக்கு ஆக்கிவிட்டார்கள்.விஜயின் கடைசி மூன்று படங்களிலுமே க்ளைமேக்ஸ் சப்பைதான்.

தமிழ் சினிமா கற்றுக் கொள்ளாத இன்னொரு விஷயம் நேரம். ”2.15 மணி நேரம்தான் படம் ஓடுது. அதனால் இந்த சினிமாவுக்கு போக வேண்டாமென்று” ஆ முதல் இசட் வரை எந்த ஏரியா ரசிகனும் கவலைக் கொள்வதில்லை. இருந்தாலும் 3 மணி நேரம் படம் எடுப்பேன் என்று மல்லுக்கு நிற்கிறார்கள். படம் ஜவ்வு என்று டாக் வந்தவுடன் தியேட்டரிலே எடிட்டிங் நடக்கிறது. ஜி யில் தொடங்கி கந்தசாமி, பொக்கிஷம் என இது தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. வேட்டைக்காரனையும் கொஞ்சம் வெட்டலாம். விறுவிறுப்பு கூடும்.

படத்தில் விஜயிடம் நான் ரசித்தவை: சஞ்சய் ஆடுவதை கொஞ்சம் பெருமையுடனும் நக்கலாக பார்த்து சிரிப்பது, டிரெயின் சீன்,“உங்களுக்கு ஒரு புள்ளை இருந்தா நம்பி அனுப்புவீங்க இல்ல” என்று சொல்லும் இடம், டயலாக் டெலிவரி, ”உனக்கெல்லாம் போலிஸ்காரன் பத்தாதுடா. வேற வேற வேட்டைக்காரன் தாண்டா” என்று கர்ஜிப்பது(இது டிரெய்லரில் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடவில்லை), என் உச்சி பாடலில் தலைகீழாக நடப்பது..

குருவி, வில்லு வந்த போது பதிவர்களில் ஒருவர் கூட நன்றாக இருந்ததாக எழுதவில்லை. ஆனால் வேட்டைக்காரனை லக்கி ஓக்கே என்கிறார். பரிசல் பாஸ் ஆகிவிட்டதாக சொல்கிறார். ஜெட்லீ முதல் பாதி சூப்பர் என்கிறார். சிங்கப்பூர் சேவியர் தூள் என்கிறார். இன்னும் சிலர் நன்றாக இருப்பதாகவே எழுதி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் கல்லூரி நண்பன் அழைத்து எத்தனை முறை பார்த்தாய் என்றான். ரெண்டு தடவடா என்றால், இப்படி ஒரு தல படம்(அவன் அஜித் ஃபேன்) வந்திருந்தால் நான் வீட்டுக்கே போக மாட்டேன். நாலு ஷோவும் பார்ப்பேன் என்கிறான். சத்யமில் வியாழன் வரை 90% ஃபுல் ஆகிவிட்டது. இது படத்தின் மவுத் டாக் வெளிவந்த பின் ரிச்ர்வ் செய்யப்பட்ட நாட்கள். ஆக வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப்படம் என்பது உறுதி ஆகிவிட்டது. எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது பெரிய விஷயமே இல்லை.அதே போல்தான் மற்றவர்களுக்கும்.

வேட்டைக்காரன் எவ்வளவு பெரிய வெற்றி, விஜய்க்கு இது மறுவாழ்வா?, விஜயின் கடந்த கால தோல்விகள்.. இன்னும் பல விஷயங்களைப் பற்றிய என் பார்வை விரைவில்…

49 கருத்துக்குத்து:

அண்ணாமலையான் on December 21, 2009 at 12:03 AM said...

முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க..

தமிழ்ப்பறவை on December 21, 2009 at 12:12 AM said...

ஓ.கே...
எனக்கும் பிடித்தது சச்சின்.
‘அழகிய தமிழ்மகன்’ ஓடியிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். atm ரசித்தேன்.

வெற்றி on December 21, 2009 at 1:04 AM said...

வாங்க உங்களைத்தான் எதிர்பாத்துட்டு இருந்தேன்...ஊரே பாசிட்டிவ் ரிசல்ட் சொல்லும் போது சகா இப்படி சொல்றார்னு நெனச்சேன்...வந்து தெளிவுபடுதிட்டீங்க..:-)
நானும் இது சம்பந்தமா ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்..

Romeoboy on December 21, 2009 at 2:36 AM said...

விடுங்க விடுங்க அடுத்து தல படம் வருது அதை கிண்டல் பண்ணி எழுதி மனச ஆத்திகுங்க

Anonymous said...

கில்லி மாதிரி இருக்கான்னு சொல்லுங்க.

சுசி on December 21, 2009 at 3:48 AM said...

இன்னும் ரெண்டே நாள்தான்.

பாத்துட்டு சொல்றேன் கார்க்கி.

டம்பி மேவீ on December 21, 2009 at 5:53 AM said...

படம் செம ENTERTAINER என்று கேள்வி பட்டேன் சகா......

துபாய் ல என் அண்ணன் கொஞ்சம் முன்னாடியே படம் பார்த்து விட்டு ......படம் நல்ல இருப்பதாய் சொன்னார்.

எல்லா விஜய் படங்களும் entertaining தான்.... வேட்டைக்காரன் எவ்வளவு entertaining அஹ இருக்கு என்பது தான் கேள்வி ?????? அதை சொல்லுங்க ....எனக்கு மௌத் டாக் எல்லாம் வேண்டாம்

(மோதி விளையாடுக்கு பிறகு வரும் அசலை நினைத்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு....)

மகேஷ் : ரசிகன் on December 21, 2009 at 7:52 AM said...

நண்பர்கள் கூட நல்லா இருக்குன்னு தான் சொல்றாங்க.

அன்புடன்-மணிகண்டன் on December 21, 2009 at 8:45 AM said...

உண்மைதான் கார்க்கி.. விஜய்யை விரும்பும் யாருக்கும் இந்த படம் சிறிய பின்னடைவுதான்.. நானும் படம் பார்த்துவிட்டு ரொம்ப கடுப்பாகத்தான் பதிவு போட்டேன்.. பரிசலின் பதிவு பார்த்ததற்கு அப்புறம் அது கடுப்பல்ல சிறிய வருத்தம்தான் என்பதை போட்டுடைத்தேன்.. :)

pappu on December 21, 2009 at 8:46 AM said...

. கடைசியாக எனக்கு பிடித்த விஜய் படம், நம்புங்கள் போக்கிரி அல்ல. ////////
சச்சின் என்னோட ஆல் டைம் ஃபேவரைட். படத்தில நிறைய நல்ல காமெடி.
பதிவுலகத்தில் இன்னும் விஜயை எந்த வகையிலும் பெரிதாக ஓட்டாத ஆள் நான் தான். இதற்கு அவார்டே கொடுக்கனும் ஏன்னா நான் ஒன்னு விஜய் ரசிகன் இல்ல.

Raja on December 21, 2009 at 8:55 AM said...

வேட்டைக்காரன் firsthalf கூட ஓகே ஆனா secondhalf பார்க்குறதுக்கு மூளைய வீட்டுலேயே கழட்டி வச்சுட்டுதான் போகணும். கிளைமாக்ஸ் சீன்ல என் பின்னாடி உட்கார்ந்திருந்தவங்க சிரிக்க அரம்பிசிட்டங்க. என்னத்த சொல்ல 70 ரூபாய சாக்கடைல போட்ட மாதிரி நெனச்சுக்க வேண்டியது தான் . இன்னொரு கொடும என்னன்னா விஜய் பண்றது மட்டும் இல்லாம இவன பார்த்து "சின்ன தளபதி", புரட்சி தளபதி, அப்புறம் நேத்து வந்த நகுல் கூட நம்மள சாவடிக்குரணுக

க‌ரிச‌ல்கார‌ன் on December 21, 2009 at 8:55 AM said...

ந‌ல்ல‌ அல‌ச‌ல் ச‌கா

//எல்லா விஜய் படங்களும் entertaining தான்.... வேட்டைக்காரன் எவ்வளவு entertaining அஹ இருக்கு என்பது தான் கேள்வி ?????? அதை சொல்லுங்க ....எனக்கு மௌத் டாக் எல்லாம் வேண்டாம்//

Repeat

டம்பி மேவீ on December 21, 2009 at 9:08 AM said...

quantity bookings ellam quality agathu......

movies are only remembered based on their quality not wheather its hit or not....


personally i like the promotions whh sun tv did for ths movie...

mayilravanan on December 21, 2009 at 9:13 AM said...

Guys hav a look http://cablesankar.blogspot.com/2009/12/blog-post_19.html

தராசு on December 21, 2009 at 9:43 AM said...

ஒரு வேளை படம் வர்றதுக்கு முன்னாடியே நடந்த ஈ மெயில் காமெடிகள், எஸ்.எம்.எஸ் காமெடிகள், நக்கல் பிரச்சாரங்கள் போன்ற எல்லாம் படத்துக்கு ஒரு எதிர்மறை பிரச்சாரத்தையே குடுத்ததனால, படத்திலிருக்கும் நிறைகளை ரசிக்க முடியலயா தல.

கார்க்கி on December 21, 2009 at 10:19 AM said...

வர்றேங்க அண்ணாமலை..

ஆமாம் பறவை. அத் வழக்கமான விஜய் படமாக எடுத்துவிட்டார் பரதன். ஆனால் விஜய் அது வித்தியாசமாக வருமென்று எதிர்பார்த்தாராம்.வெளிவரும் முன்பே ஊத்திக் கொள்ளும் என்று விஜய் ப்ரிவுயூவின் போது லக்கியிடம் சொல்லியிருக்கிறார்.

வெற்றி, :)))

ரோமியோபாய், நான் ஏகனுக்கே விமர்சனம் எழுதல. நம்ம வேலை அதில்லை சகா..

அம்மிணி, கில்லி மாதிரி ஒரு படம், விஜய்க்கு மட்டுமில்லை தமிழ்சினிமாவுக்கே ரொம்ப கஷ்டம்.

சுசி, உங்களுக்கு ஒரு ஆச்சரியம் படத்தில் இருக்கு

மேவி, எண்டெர்டிய்ன்மெண்ட் அம்சங்கள் கச்சிதம்.பாட்டு,காமெடி என்று கலக்கல்தான்.

மகேஷ், நல்ல செய்தி சகா

மணிகண்டன், ஆனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ்..

பப்பு, உனக்கு என்ன வேணும்ன்னு கேளுப்பா :))

ராஜா, அதேதான் என் கருத்தும் சகா

நன்றி கரிசல்காரன். இந்தப் பதிவுக்கு நீங்களும் ஒரு காரணம்னு தெரியுமில்ல?

மேவீ, சிவாஜியின் படங்கள் காலத்தால் நிற்கும். ஆனால் எம்.ஜி.ஆர்தான் மக்கள் மனதில் நிற்கிறார்.

@மயில், அதைப் பற்றி புதன் கிழமை பதிவு வருகிறது சார்

தராசு, அப்படி ஒன்னும் தெரியலண்ணா.

உண்மைத் தமிழன்(15270788164745573644) on December 21, 2009 at 10:22 AM said...

கார்க்கி..

என்ன இது சின்னப்புள்ளத்தனமா..? நல்ல திரைப்படங்களுக்கு ரசிகரா இருங்க..! நடிகர்களுக்கு வேண்டாம்..! நல்ல நடிகர்களெல்லாம் ஹீரோக்களாக இல்லை.. ஹீரோக்கள் எல்லாம் நல்ல நடிகர்களாகவும் இல்லை..

இன்னிக்குக் காலைல 9 மணிக்கு உதயம் தியேட்டர் டிக்கெட் கவுண்ட்டர்ல எண்ணி 7 பேர்தான் நின்னுக்கிட்டிருந்தாங்க..!

விடுவீங்களா..?

டம்பி மேவீ on December 21, 2009 at 10:26 AM said...

"கார்க்கி said...
மேவீ, சிவாஜியின் படங்கள் காலத்தால் நிற்கும். ஆனால் எம்.ஜி.ஆர்தான் மக்கள் மனதில் நிற்கிறார். "

நான் வேட்டைக்காரன் படத்தை பற்றி மட்டுமே கேட்டு/சொல்லி இருக்கேன் ........

நீங்க சிவாஜி படங்களோடு எம்ஜியார் படங்களை தான் ஒப்பிட்டு சொல்லி இருக்க வேண்டும் ......

சிவாஜி படங்கள் வேறு ..... சிவாஜி என்ற தனி மனிதன் வேறு

அதே மாதிரி எம்ஜியார் வேற ..... எம்ஜியாரின் படங்கள் வேற

(விஜய் என்ற தனி மனிதரின் பக்கமே நான் போகவில்லை)

பரிசல்காரன் on December 21, 2009 at 10:27 AM said...

வேட்டைக்காரனை விடு சகா. உன் பார்வைல, எழுத்துல வந்திருக்கற மெச்சூரிட்டிக்கு ஒரு சல்யூட்.

நேத்து ஈரோடு சந்திப்பப்ப, இந்தப் படத்த நல்லாருக்குன்னு பதிவெழுதினதுக்கு நாலைஞ்சு பேர் என்னைப் போட்டு வறுத்துட்டாங்க.

ஒருவிஷயம், இது நல்லா இல்லன்னு சொல்றவங்க, மேக்ஸிமம் குருவி பார்க்காதவங்களா இருப்பாங்க. வேணும்னா விசாரிச்சுப் பாரு.

டம்பி மேவீ on December 21, 2009 at 10:28 AM said...

"கார்க்கி said...

ரோமியோபாய், நான் ஏகனுக்கே விமர்சனம் எழுதல. நம்ம வேலை அதில்லை சகா.."


athe athe

டம்பி மேவீ on December 21, 2009 at 10:29 AM said...

கார்க்கி, அனுஷ்கா நல்ல காட்டி சாரி நடித்து இருந்தாங்களா ?????

அமுதா கிருஷ்ணா on December 21, 2009 at 10:54 AM said...

போலாமா வேணாமா..முந்தைய பதிவை படித்து விட்டு,என் பெரிய பையன் நல்லாயிருக்கும்மா போங்க என்று சொல்லியும்,நேற்று அபிராமி டிக்கெட்டை என் தம்பிக்கு கொடுத்துவிட்டேனே கார்க்கி....

Anonymous said...

Damn sure, that other films u must have enjoyed are:

1. Naattukku oru Nallavan ( best film)

2. Azhvar (mavane, nee ellam adha nooru thadavai paakanum)

3. Parasuram, divan ( Man u must be made to watch these films )

நர்சிம் on December 21, 2009 at 11:45 AM said...

ஹுக்கும்.. இன்னும் காய்ச்சல் விடல சகா.

ஷாகுல் on December 21, 2009 at 12:15 PM said...

பாஸ் ஒருவாரம் கழித்துதான் பார்க்க வேண்டும். அப்போதான் விசில் சத்தம் இல்லாம பார்க்க முடியும்.

நல்லா இருந்தா சரி.

அனுஜன்யா on December 21, 2009 at 12:22 PM said...

Good effort at damage control :)

Anujanya

செ.சரவணக்குமார் on December 21, 2009 at 12:25 PM said...

//பரிசல்காரன் said...

வேட்டைக்காரனை விடு சகா. உன் பார்வைல, எழுத்துல வந்திருக்கற மெச்சூரிட்டிக்கு ஒரு சல்யூட்.//

ஒரு மிகச் சிறந்த கட்டுரை படிக்கும் உணர்வு. அருமையான உங்கள் நடையில் மேலும் நல்ல கட்டுரைகளையும், புனைவையும் எதிர்பார்க்கிறேன் சகா.

தீப்பெட்டி on December 21, 2009 at 12:27 PM said...

:)

வெற்றி on December 21, 2009 at 12:31 PM said...

சகா வேட்டைகாரனைப் பற்றிய எனது பதிவு.கண்டிப்பா வந்து பாருங்க.

http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_21.html

தாரணி பிரியா on December 21, 2009 at 12:43 PM said...

எங்காளுக்கு இண்டர்வெல் வரைக்கும் ஒஹோ. அதுக்கு பிறகு ஒ.கேவாம் கார்க்கி. 25ந்தேதி ஊருக்கு வந்தவுடன் திரும்ப ஒரு தடவை பாக்கணுமாம்.

sweet on December 21, 2009 at 1:24 PM said...

ரசிகர்களின் பார்வையில் வேட்டைக்காரன்


விஜய் ரசிகன்: படம் செம சூப்பர். விஜய் நோ சான்ஸ். விஜய் பண்ற காமெடி எல்லாம் பட்டய கிளப்புது. ஐநூறு நாள் கண்டிப்பா ஓடும்.
அஜித் ரசிகன்: என்னய்யா படம் இது? கையால குத்தி கல் உடைக்கிறார்??? அந்த அருவியில் குதிக்கிற சீன் நல்ல காமெடி!!! சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவாராம். எனக்கு என்னமோ போன படங்களில் கிடைச்ச ஆப்பு தான் இப்போ அவரை சாந்தமா பேச வச்சு இருக்குனு தோணுது. அசல் வரட்டும். வேட்டைக்காரன் சட்னி ஆகிடுவான். பாருங்க.
ரஜினி ரசிகன்: தலைவரை காப்பி அடிக்குறதை இவர் நிறுத்த போவது இல்லை என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம். விஜய் தம்பி ஆட்டோ ஓட்டினா பாட்ஷா ரஜினி ஆகிட முடியுமா? கால கொடுமை.


கமல் ரசிகன்: எலி வேட்டைக்கு சாரி, புலி வேட்டைக்கு போறவன் எல்லாம் மருத நாயகம் ஆகிட முடியுமா? வரட்டும். அப்போ தெரியும் யார் மாஸ் என்று?
சூர்யா ரசிகன்: டான்ஸ் மட்டும் ஆடினால் போதுமா? நடிக்க வேண்டாமா? அரைச்ச மாவு புளிச்ச வாசம் அதான் இந்த வேட்டைக்காரன்


சராசரி சினிமா ரசிகன்: படம் மொக்கை தான். ஆனால் வில்லு, குருவிக்கு எவ்வளவோ மேல்.போக்கிரி படம் கிளைமாக்ஸ் தவிர்த்து பத்து தடவை பார்த்து இருக்கேன். அது நல்லா இருந்தது. ஆனால் இதுல ஏதோ ஒண்ணு பெருசா குறைஞ்சு போச்சு. முதல் பாதி போர் அடிக்காம போச்சு. ரெண்டாம் பாதி காதுல மட்டும் இல்லை காலுக்கும் சேர்த்து பூ சுத்துறாங்க. ஆனா படம் நல்லா ஓடும். தெனவாட்டு படத்தை ஓட வச்ச சன் டிவிக்கு இதை ஓட வைக்கிறது என்ன பெரிய கஷ்டமா?

Feros on December 21, 2009 at 1:26 PM said...

//படத்தில் விஜயிடம் நான் ரசித்தவை: சஞ்சய் ஆடுவதை கொஞ்சம் பெருமையுடனும் நக்கலாக பார்த்து சிரிப்பது, டிரெயின் சீன்,“உங்களுக்கு ஒரு புள்ளை இருந்தா நம்பி அனுப்புவீங்க இல்ல” என்று சொல்லும் இடம், டயலாக் டெலிவரி, ”உனக்கெல்லாம் போலிஸ்காரன் பத்தாதுடா. வேற வேற வேட்டைக்காரன் தாண்டா” என்று கர்ஜிப்பது(இது டிரெய்லரில் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடவில்லை), என் உச்சி பாடலில் தலைகீழாக நடப்பது..//

super ...

தண்டோரா ...... on December 21, 2009 at 2:50 PM said...

இன்று காலையில் ஜோதி தியேட்டரில் வாகனங்களை எண்ண முடிந்தது.

க‌ரிச‌ல்கார‌ன் on December 21, 2009 at 3:23 PM said...

//தராசு said...
ஒரு வேளை படம் வர்றதுக்கு முன்னாடியே நடந்த ஈ மெயில் காமெடிகள், எஸ்.எம்.எஸ் காமெடிகள், நக்கல் பிரச்சாரங்கள் போன்ற எல்லாம் படத்துக்கு ஒரு எதிர்மறை பிரச்சாரத்தையே குடுத்ததனால, படத்திலிருக்கும் நிறைகளை ரசிக்க முடியலயா தல.//

அதே தான் த‌லைவரே

ஆட்டோ வ‌ராதுங்குற‌ தைரிய‌ம் இருக்குமோ!

அப்புற‌மா காச‌ சாக்கையில போட்ட‌ புண்ணிய‌வான்க‌ளே
முனியாண்டி விலாஸ்ல‌ என்ன‌ கிடைக்கும்னு தெரியாம‌ல் சாப்பிட‌ போனா இப்ப‌டி தான் இருக்கும்
கார‌ம் உட‌ம்புக்கு ஆகாதுனு தெரியும்ல‌? ச‌ர‌வ‌ண‌ப‌வ‌ன்,வ‌ச‌ந்த‌ப‌வ‌ன் இப்ப‌டி பாத்து போங்க‌

Karthik on December 21, 2009 at 3:54 PM said...

whats wrong in the previous post if you're really disappointed with the movie?

admiration doesn't stop one from expressing his genuine disappointment. fanaticism does..

Karthik on December 21, 2009 at 3:56 PM said...

//அம்மன் பாட்டு என்று கிண்டலடித்தவர் கூட திரையில் நன்றாக இருப்பதாக சொன்னார்.

கார்க்கி அண்ணா, நீங்க என்னை சொல்லலதானேங்ணா?! :)

தர்ஷன் on December 21, 2009 at 4:58 PM said...

என்ன சகா இது
ஏதோ ஆதங்கத்தில் முந்தைய பதிவைப் போட்டு விட்டு அடடா அவசரப்பட்டுட்டோமே நல்ல இருக்குனு வேற சொல்றாங்கன்னு சப்பைக்கட்டு கட்டுற மாதிரி ஒரு பதிவு.

கார்க்கி on December 21, 2009 at 5:40 PM said...

@தர்ஷன்,

பதிவ பாருங்க.
“ எனக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் யாருக்குமே பிடிக்காது என்பதில்லை.”
இதை அழுத்தமாகவே சொல்லியிருக்கிறேன். அதற்காக படத்தில் ஒரு காட்சி கூட எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா?

@கார்த்திக்,
இப்ப எனக்கு படம் பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையே!!! படத்தைப் பற்றிய பிறரின் பார்வையையும் சொல்லியிருக்கிரேன்.

@டான்,

இந்தப் படங்களையெல்லாம் நீங்க பார்த்திருக்கிஙக்ளா சகா? நான் இன்னும் பார்க்கவில்லை.

அனைவருக்கும் நன்றி.

Karthik on December 21, 2009 at 8:23 PM said...

//@கார்த்திக்,
இப்ப எனக்கு படம் பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையே!!! படத்தைப் பற்றிய பிறரின் பார்வையையும் சொல்லியிருக்கிரேன்.

ஐ'ம் ஸோ ஸாரி. முதல் கமெண்ட் உங்களுக்கு போட்டதல்ல. உங்களிடம் இமெயிலில் பொங்கிய விஜய் ரசிகர்களுக்கு. '@கார்க்கியிடம்_இமெயிலில்_பொங்கிய_விஜய்_ரசிகர்கள்' என்று கமெண்ட்டில் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம்னு இப்போ தோணுது. :(

நீங்களே சொன்ன மாதிரி பதிவுகள் படிப்பவர்கள் ரொம்ப கம்மி. அப்ப பரிசல் அண்ணா பாஸ் மார்க் போட்டதால் படம் ஹிட் ஆக போறதோ, நீங்க டிஸப்பாய்ன்டிங்னு சொல்றதால ப்ளாப் ஆகப் போறதோ இல்லை தானே? மக்களுக்கு பிடிச்சிருந்தா பார்க்க போறாங்க. :))

ஊர்சுற்றி on December 22, 2009 at 12:31 AM said...

நான் விஜய் ரசிகன் இல்லை, வேட்டைக்காரன் படம் இன்னமும் பார்க்கவில்லை என்று ஆணித்தரமாக இங்கு பதிந்துகொள்கிறேன். :)))

அத்திரி on December 22, 2009 at 8:40 PM said...

சகா ரைட்டு போலாம்........நான் அடுத்த வருசம் தான் பார்ப்பேன்

Xavier on December 23, 2009 at 12:16 PM said...

என் கூட ஒரு விநியோகஸ்தர் இருப்பதால் சொல்லுகிறேன். இங்கு சிங்கப்பூர் ல மூன்று நாள் வசூல் மட்டும் 235000 $. மலேசியாவில் மிக மிக நன்றாக ஓடுவதாக தினமும் அவர்களுக்கு செய்தி வருகிறது. வரும் சனிக்கிழமை விஜய் சிங்கப்பூர் வருகிறார்.

நந்தா on December 23, 2009 at 7:37 PM said...

விஜய் ரசிகரிடமிருந்து வேறு எப்படிப்பட்ட விமர்சனம் வரமுடியும்.

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 11:10 PM said...

பதிவு பூரா ஒரே சப்பைக்கட்டுகள்.

யோ வொய்ஸ் (யோகா) on December 27, 2009 at 1:16 PM said...

படம் பார்த்தேன் சகா, ரொம்ப எதிர்பார்ப்போட போகலை, ஆகவே ரொம்ப டிசபொயின்ட் ஆகல...

படம் ஓகே, ஆனால் பகவதி, திருப்பாச்சியை நினைவு படுத்துது சகா..

சன் டிவீ வட்டாரத்தில் மாபெரும் வெற்றிபடம் என சொல்லுறாங்க

ஜோசப் பால்ராஜ் on December 30, 2009 at 7:04 AM said...

Salute your positive approach.

But mudiyala saha ...
Election la DMK thothuttaalum, kalaingar oru arikkai viduvaru, intha thokuthila vote ithana % uyarthurukku, apdi ipdinu. apdi irukku intha pathivu.

Padathula Comedy irukunnu solirukeenga, padame periya comedy thaanga.

( Sorry for Thanlish , no tamil in office)

ஜோசப் பால்ராஜ் on December 30, 2009 at 7:07 AM said...

solla maranthutten, SUN TV news parkira mathiriye irukku ungaloda intha pathivu.

Sun TV la Kanden Kadhalai padam release akura annaiku morning news laye padam super hit apdinu sonnatha Annan oruthar sonnaru.
Pongalukke vedi vedikiravanunga, deepavalikku summava iruppanunga, athaan Vettaikaran pora varaikkum SUN news parka koodathunnu irukken.

intha pathivu 10 sun news mathiri irukku.
First 7 peru kooda poi padam parthuttu nermaya oru pathivu eluthiruntheenga, ippa antha nermaiya en compromise panikireenga ?

sweet on January 7, 2010 at 3:16 PM said...

mudhalil sangavikku soppu pottu adults only padam nadichaar... vikraman moolama oru great turning point....

thiruvilyaadal padam super hit... dhanush-kku mass illai-nu yaaru sonnadhu?

yaaradi mohini-kku vandha opening enna-nu theriyuma?

chumma vijay umakku basic-a pidikkum-nu point-ai vachu ulara kudathu sariya?

கார்க்கி on January 7, 2010 at 3:53 PM said...

Sweet, ஓப்பனிங்ன்னா எல்லா படத்துக்கும் வரணும் சரியா? விஜயின் சம்பளத்தில் பாதி கூட தனுஷுக்கு கிடையாது. அவர் நடித்த துள்ளுவதோ இளமை என்ன குழந்தைகள் படமா?

உமக்கு தனுஷ் புடிக்கும்ன்றதால அவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்ன்னு உளறக்கூடாது சரியா?

 

all rights reserved to www.karkibava.com