Dec 29, 2009

வலையுலக கவிஞர்கள் அதிர்ச்சி


 

    நேற்றைய பதிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த சில வலையுலக கவிஞர்கள் அது குறித்து ஒரு கலந்துரையாடல் செய்ததாக பி.டி.ஐ. செய்தி குறிப்பொன்று சொல்கிறது. உரையாடல்  கவிதைப் போட்டிக்காக அந்தக் கவிதைகளை பரிந்துரைக்காததைக் கண்டு அதன் அமைப்பாளர்களில் ஒருவரான சிவராமன் அதிர்ச்சி வெளிட்டுள்ளார். ரகசியமாக பதிவு செய்யப்பட்ட அந்த கலந்துரையாடல் உங்களுக்காக இதோ.

பைத்தியக்காரன் :  அருமையா எழுதி இருக்காரும்மா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் ஏன் போட்டிக்கு அனுப்பலன்னுதான் தெரியல

ஜ்யோவ்ராம் சுந்தர் : முதல் கவிதைக்கான தலைப்பை பாருங்க. ”உ”ன்னு வச்சிருக்கார். இதுல வாசகனுக்கு அவர் முழு சுதந்திரமும் தருகிறார். அதை உரையாடல் போட்டிக்கென்று படிக்கலாம். அந்த கடைசி வரியில் ஜென் சொன்னது உண்மை என்பதாகவும் நினைக்கலாம். அதை வாசகனின் ,முடிவுக்கே விட்டதைத்தான் நான் ரசிக்கிறேன். வாசகனின் அனுபவத்திற்கேற்ப எந்த தலைப்பும் வைத்து படிக்கலாம், பிரதி அனுமதிக்கும் எல்லைக்குட்பட்டு.

கேபிள் சங்கர்: ஆனால் சில வரிகள் புரியலையே. சொல்லுங்களேன் சுந்தர்ஜி

ஜ்.சுந்தர்: கவிதைக்கு அர்த்தம் சொல்லுவது போல் சள்ளை பிடித்த வேலை எதுவுமில்லை. இந்த எண்டர் கவிதை ஆட்களையெல்லாம் ஏன் சேர்த்துக் கொண்டீர்கள்?

பை.காரன் :சுந்தரின் வார்த்தையை கவனியுங்கள். முதல் கவிதைக்கான தலைப்பு என்னும்போது அது கவிதை என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். இதுவே கார்க்கிக்கு பெரிய வெற்றிதான். போலவே இரண்டாவதும் கவிதை என்பது அதே வரியின் மூலம் நாமறியலாம். அவருக்கு அது பிடிக்கவில்லை என்பது பெரிய விஷயல்ல. அதுவும் கவிதை என்பதை மட்டும் பதிவு செய்ய விழைகிறேன்.

கேபிள்: இருந்தாலும் யாராவது அர்த்தம் சொன்னால்..

அனுஜன்யா: கேபிள். முதல் கவிதையில் முதல் வரியைப் பாருங்கள். ”குட்டிச் சுவற்றை வளர்க்கும் நோக்கில்” என்கிறார். அதாவது அதன் மேல் இந்த நால்வரும் ஏறும்போது அந்த குட்டிச் சுவர் கூட பெருமை அடைகிறதாம். அந்த நால்வரையும் நாசுக்காக பெருமைப் படுத்தி சொல்கிறார் கவிஞர்.

பை.காரன்: இப்படியும் பார்க்கலாம் அனு. ஏற்கனவே குட்டிசுவர் கருங்கல்லால் ஆனது என்பதை புகைப்படத்தின் மூலம் பதிவு செய்த கவிஞர், அதன் மேல் நால்வரும் அமர்ந்து நாங்களும் கருங்கல்தான். எனவே சுவர் பெரியதாகிறது என்று சொல்வதாகவும் அர்த்தம் வருகிறது.

ஜ்.சுந்தர்: இதைத்தான் சொல்கிறேன். வாசகன் புத்திசாலி என்றால் அனு சொன்னது போல். வாசகன் கல்லு என்றால் இரண்டாவது. வாவ்!!Fantastic

கேபிள்: கடந்து செல்லும் எல்லோருக்கும் மதிப்பெண் போடுவது எதற்கு?

அனுஜன்யா: முதல் வரிகளில் நால்வரின் பெருமையை சொன்ன படைப்பாளி, இங்கே அந்தச் சுவற்றின் பெருமையை சொல்கிறார். அதாவது பாஸாகவே தடுமாறிய மாணவர்கள், இந்தச் சுவற்றை அடைந்தவுடன் ஆசிரியர் ஆகும் அளவிற்கு அறிவாளி ஆவதாக குறிப்பிடுகிறார் கவிஞர். என்ன ஒரு சொல்லாடல்!!!

பை.காரன்: ஆமோதிக்கிறேன்

கேபிள்: அவர் காதலியை கண்டதும் கீழே குதிப்பதாக சொல்கிறாரே. அப்படியென்றால் காதலித்தால் விழுந்துவிடுவோம் என்கிறாரா?

அனுஜன்யா: ஒரு பெண்ணிடத்தில் விழுந்துவிடுவதுதானே காதல்?

பை.க்காரன்: அப்படி மட்டும் இல்லை. கல்லின் மேல் இருக்கும் போது ஆசிரியர் ஆன நண்பர், கீழே குதிக்கும் போது ஜென் குருவாகவே ஆகிவிடுகிறார். இது எப்படி சாத்தியம்? யோசிக்க வேண்டும். காதலில் விழுந்தவரை அருகில் இருந்து பார்க்கிறார். யோசிக்கிறார். ஜென்னாக மாறுகிறார்.ஆனால் காதலிப்பவரோ ஜென்னாக மாறவில்லை எனக் குறிப்பால் உணர்த்துகிறார் கவிஞர். இதன் அர்த்தம், அனுபவம் என்பது நாம் அனுபவித்துதான் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்பதில்லை. உலகை உற்றுப் பார்க்க வேண்டுமென்கிறார். என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை?

ஜ்.சுந்தர்: நகுலனின் பல கவிதைகளில் இந்தக் கூறுகளை நாம் காண முடியும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது கவிதை.

கேபிள்: எனக்கும் ஒன்று தோன்றுகிறது. தரையில் இருந்தவன் சுவரின் மேலேறுகிறான். மீண்டும் தரைக்கே வருகிறான். வாழ்க்கை ஒரு வட்டம் என்று திருமலையில் விஜய் சொன்னதை கவிதையினூடே சொல்லி தான் ஒரு விஜய் ரசிகன் என்பதை சொல்ல வருகிறார்.

அனுஜன்யா: கொஞ்சம் அமைதியா இருங்க. இல்லைன்னா சட்டையில் இருக்கும்  பட்டனை தட்டிட்டே இருங்க.

பை.காரன்: இதை ஏன் அவர் உரையாடல் போட்டிக்கு.

அனுஜன்யா: இல்லை சிவா. கவனியுங்கள். நண்பர்கள் இடையே நடந்த உரையாடல்தான் இரண்டு கவிதைகளிலும் முக்கிய கரு. உரையாடல் கவிதைப் போட்டிக்கு என்பதை இதை விட சிறப்பாய் எப்படி உணர்த்த முடியும்? பாருங்கள். இது முதலில் படிக்கும் போது தெரியவில்லை நமக்கு.

ஜ்.சுந்தர்: அடுத்ததைப் பாருங்கள். பிள்ளையாருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஒரு சாராரும், இல்லையென்று ஒரு சாராரும் சொல்ல, கவிஞர் அவருக்கு திருமணத்தோடு ஒரு மகளையும் கொடுத்து கடைசியில் மருமகனையும் தருகிறார். இது எப்பேற்பட்ட கட்டுடைப்பு? அசாத்திய துணிச்சல் தேவை இதற்கு

இப்படி செல்லும் அந்த கலந்துரையாடலின் முழு வடிவம் இன்னும் கிடைக்கவில்லை. இன்னமும் அது தொடர்வதாக சமீபத்தில் வந்தச் செய்தி ஒன்று சொல்கிறது.

38 கருத்துக்குத்து:

தமிழ் பிரியன் on December 29, 2009 at 11:22 PM said...

கலக்கல் சகா!

gulf-tamilan on December 29, 2009 at 11:24 PM said...

இதுக்கு உங்க கவிதயே பரவாயில்லை :))))

தமிழ்ப்பறவை on December 29, 2009 at 11:55 PM said...

:-) ROTFL...
பாவம் கேபிளாரைத்தான் அதிமுக ஆட்சி சபாநாயகர் மாதிரி ஓரங்கட்டீட்டீங்க...

அனுஜன்யா on December 29, 2009 at 11:58 PM said...

டேய், இந்தப் பின் குறிப்புகளோடு அனுப்பினால் ஒரு வேளை பரிசு கிடைத்தாலும் கிடைக்கும். அட்டகாசம்.

அனுஜன்யா

மணிகண்டன் on December 30, 2009 at 12:11 AM said...

fantastic karki. I enjoyed every word of this post :)-

தர்ஷன் on December 30, 2009 at 12:46 AM said...

//நகுலனின் பல கவிதைகளில் இந்தக் கூறுகளை நாம் காண முடியும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது கவிதை.//

அட

//வாழ்க்கை ஒரு வட்டம் என்று திருமலையில் விஜய் சொன்னதை கவிதையினூடே சொல்லி தான் ஒரு விஜய் ரசிகன் என்பதை சொல்ல வருகிறார்.//

பின்ன அது பெரிய பெருமை இல்லையா

ஏன் சகா எல்லோரும் ரசிக்கும் விதமாக அதுவும் தினமொரு தினுசாக மொக்கை போடுகிறீர்களே, எப்படி இப்படியெல்லாம்
உங்கள் ஆற்றல் அபாரமானது சகா

Cable Sankar on December 30, 2009 at 1:14 AM said...

கலக்கல். நீ சொன்னதை விட.. கண்டின்யூ

கும்க்கி on December 30, 2009 at 1:17 AM said...

அடப்பாவிங்க ப்ரதர்.,’
அய்யோ கொலகாரப்பாவிங்க ப்ரதர்”

என்ன ஒன்னு மரியாதையா திட்டலாம்னு தோணுச்சு.....

கும்க்கி on December 30, 2009 at 1:18 AM said...

இருந்தாலுமே என்னமோ ஒன்னு உங்க கிட்டயிருக்கு ப்ரதர்....

உஸ் அப்பா தப்பிசமடா சாமீ....

பா.ராஜாராம் on December 30, 2009 at 4:51 AM said...

ஹா..ஹா..ஹா.ஹா..ஹா..ஹா..ஹா..

ரொம்ப நாளாச்சு கார்க்கி இப்படி மனசு விட்டு சிரிச்சு.

fine job!

சுசி on December 30, 2009 at 4:59 AM said...

ரொம்பவே சிரிச்சுட்டேன் கார்க்கி.

வரவர உங்க சிந்தனை + எழுத்து ரொம்ப வித்தியாசமா இருக்கு.

வாழ்த்துக்கள்.

சுசி on December 30, 2009 at 5:05 AM said...

//வாழ்க்கை ஒரு வட்டம் என்று திருமலையில் விஜய் சொன்னதை கவிதையினூடே சொல்லி தான் ஒரு விஜய் ரசிகன் என்பதை சொல்ல வருகிறார்.//
அவ்வவ்வ்வ்வ்..

//பிள்ளையாருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஒரு சாராரும், இல்லையென்று ஒரு சாராரும் சொல்ல, கவிஞர் அவருக்கு திருமணத்தோடு ஒரு மகளையும் கொடுத்து கடைசியில் மருமகனையும் தருகிறார். //
ஆவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

//இது எப்பேற்பட்ட கட்டுடைப்பு? அசாத்திய துணிச்சல் தேவை இதற்கு//
இன்னைக்கு கனவுல யானை உங்கள துரத்தும் பாருங்க. அப்புறம் சொல்லுங்க பிள்ளையார் மாமான்னு கத்தினிங்களான்னு :)))

சரவணகுமரன் on December 30, 2009 at 7:55 AM said...

ஹா ஹா ஹா

Anbu on December 30, 2009 at 8:14 AM said...

எப்படிண்ணே...ரூம் போட்டு யோசிப்பிங்களோ..

அன்புடன்-மணிகண்டன் on December 30, 2009 at 9:07 AM said...

கார்க்க்க்க்க்க்க்கி.... இந்த பதிவுக்கெல்லாம் சூப்பர் பத்தாது.. வேற வேற... டபுள் சூப்பர்'தான்..

Sangkavi on December 30, 2009 at 9:51 AM said...

நல்லாயிருக்கு நண்பரே.........

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............

pappu on December 30, 2009 at 9:56 AM said...

கொழுப்பய்யா!

ஸ்ரீமதி on December 30, 2009 at 10:00 AM said...

:))) ம்ம்ம்ம்ம்

அகமது சுபைர் on December 30, 2009 at 10:03 AM said...

முடியல... :-)

நர்சிம் on December 30, 2009 at 10:10 AM said...

மிகச் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று சகா.. பகடி செய்யும் போது அந்தத் தொனி வரவேண்டும்.. அது சர்வ நிச்சயமாக வருகிறது படிக்கும் போது.. சுந்தர்ஜியையும் அனுஜன்யாவையும் அவர்கள் குரலிலேயே படித்தேன்.

கலக்கல்

க‌ரிச‌ல்கார‌ன் on December 30, 2009 at 10:21 AM said...

சூப்ப‌ர் ச‌கா

//இது எப்பேற்பட்ட கட்டுடைப்பு? அசாத்திய துணிச்சல் தேவை இதற்கு//

க‌ட்டுடைப்பு க‌விஞ‌ரே

அடுத்து போஸ்ட் மாட‌ர்னிச‌ம்,மேஜிக‌ல் ரிய‌லிசம் இன்னும் என்ன‌ என்ன‌ இச‌ங்க‌ள் இருக்கிறோதோ அத எல்லாம் போட்டு பொரியுங்க‌ள்

மண்குதிரை on December 30, 2009 at 10:27 AM said...

டிபிக்கல் ஸ்ட்ரோக்

Rajkumar on December 30, 2009 at 10:41 AM said...

எப்பா சாமி, முடியல.

கவிதை நல்லா இருக்கு.
இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன் அருணா on December 30, 2009 at 10:44 AM said...

ஹா ஹா ஹா ஹாஹா!

வால்பையன் on December 30, 2009 at 11:00 AM said...

அடங்கப்பா!

இப்படியெல்லாமா யோசிப்பிங்க!

butterfly Surya on December 30, 2009 at 11:19 AM said...

நடத்துங்க...

புது வருட வாழ்த்துகள்.

RaGhaV on December 30, 2009 at 11:22 AM said...

Acutally இந்த பதிவிற்கு பொருத்தமான Label.. இதுதான்.. "தூக்கம் கலையாமல் எழுதிய பதிவு".. ;-))

கடைக்குட்டி on December 30, 2009 at 11:34 AM said...

இவர்களுடைய முகம் தெரிஞ்சு இருந்தா இன்னும் சிரிச்சுருக்கலாம் போல..

கேபிள்க்கு நீங்க குடுத்த டயலாக்ஸ் சூப்பர்.. :-)

ஆனா கடைசில தொடரும்ன்னு போட்டீங்களே..

******** மீண்டுமா ????????

வெற்றி on December 30, 2009 at 12:38 PM said...

சகா நீங்க டைரக்டர் ஆனா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது..

ரொம்ப நாளா ஒரு டவுட்டு..கட்டுடைத்தல்னா என்ன?

'கட்' 'உடைத்தல்'-ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான?

ஒருவேளை நடுசென்டர்,ஷாப்கடை மாதிரிதானா இதுவும்.. :)

ஆதிமூலகிருஷ்ணன் on December 30, 2009 at 12:54 PM said...

கட்டுடைப்பது இருக்கட்டும்.. உன் மண்டையை உடைக்க யாரும் இல்லையா.? :-))

(அவர்கள் குரலிலேயே படித்தால் Awesome)

குசும்பன் on December 30, 2009 at 1:27 PM said...

:)))

//வாழ்க்கை ஒரு வட்டம் என்று திருமலையில் விஜய் சொன்னதை கவிதையினூடே சொல்லி தான் ஒரு விஜய் ரசிகன் என்பதை சொல்ல வருகிறார்.//

படத்தோட ரிசல்ட்டும் அதே மாதிரி வட்டம் தானே?:))

கார்க்கி on December 30, 2009 at 1:48 PM said...

நன்றி தமிழ்பிரியன்

கல்ஃப் தமிழன், அப்போ நாளைக்கே உங்க மெயிலுக்கு ஸ்பெஷல் கவிதை நாலு பார்சேல்ல்ல்

பறவை, நன்றி. ஹிஹிஹி

@அனுஜன்யா,அப்ப கூட டவுட்டுதானா தல? பரிசு கன்ஃபார்ம் இல்லையா?

நன்றி மணிகண்டன்

நன்றி தர்ஷன்.. எல்லாம் அதுவா வருது சகா :))

நன்றி கேபிள்..

சரிங்க கும்க்கியண்ணா

நன்றி பா.ரா

நன்றி சுசி. கொஞ்ச நாளா அறிவாளிங்ககிட்ட நிறைய பேசறேன். அதன் தாக்கமோ என்னவோ!!

நன்றி சரவணகுமரன்

நன்றி அன்பு. அதெல்லாம் இல்லப்பா. இப்ப ஒரு ஆஃபிஸே வாடகை எடுத்து யோசிக்கிறேன் :))

அப்போ நன்றி பத்தாது மணி, ரொம்ப்ப்ப்ப நன்றி :))

வாழ்த்துகள் சங்கவி

பப்பு, யாருக்கு? அந்த கவிஞர்களுக்குதானே?

கார்க்கி on December 30, 2009 at 1:58 PM said...

நன்றி ஸ்ரீமதி

நன்றி அகம்து

நன்றி நர்சிம்.அடுத்த வார ஸ்பெஷல் ”நர்சிம்,பரிசல்,ஆதி மற்றும் ஒரு இலக்கியவாதி ”:))

கரிசல், சமைச்சிடுவோம்

நன்றி மண்குதிரை

நன்றி ராஜ்குமார்

நன்றி டீச்சர்

வால், என்ன செய்ய? வண்டிய ஓட்டனுமே :))

வாழ்த்துகள் பட்டர்ஃப்ளை

ராகவ்.. ஏதாவ்து சொல்லிடப்போறேன் சகா.. நைட்டு தூக்கம் கெட்டு கண்முழிச்சு எழுதி இருக்கேன் :)))

கடைக்குட்டி, பயப்படாதிங்க. :))

வெற்றி, அது கட் அல்ல கட்டு. கட்டை உடைப்பது.

ஆதி, தல மேல கைய வச்சா சும்மா இருபாங்களா? ஐ மீன் என் தல மேல. அதாவ்து என்னுடைய தலையின் மீது

ஆமா குசும்பரே.. வெற்றியும் வட்டம்தான். மாறி மாறி வரும்..:))

கும்க்கி on December 30, 2009 at 5:54 PM said...

:--))

அந்த நேரம் அப்படி...
திரும்ப வாசித்தேன்...
கமெண்ட்டை டெலீட்டவும் வழியில்லை.
நோ டென்ஷன் ப்ளீஸ்.

Raja Subramaniam on December 30, 2009 at 11:40 PM said...

ஏன் இந்த கொலைவெறி

நாய்க்குட்டி மனசு on December 31, 2009 at 10:24 AM said...

பல சமயங்களில் நீங்கள் விளையாட்டா சீரியஸ் விஷயங்களை எழுதுறது போல தோணுது. சில சமயம் விளையாட்டா தோணுது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு உங்கள் வாழ்வில் பல நற்செயல்களை புரியட்டும்!!

Karthik on January 3, 2010 at 5:32 PM said...

அட்டகாசம்!! :D :D

Karthik on January 3, 2010 at 5:36 PM said...

அடுத்த முறை ஸ்ரீமதி யை விட்டுவிடலாகாது என்று கேட்டுக் கொள்கிறேன். :)

பிசாசு என்ற வார்த்தை என் காதில் விழாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். ;)

 

all rights reserved to www.karkibava.com