Dec 19, 2009

பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும்


 

பதிவெழுதும் அனைவரும் சொல்லும் விஷயம் “இந்த நட்பு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்”. முழுக்க முழுக்க உண்மை. பல சம்பவங்களை சொல்லலாம்

அந்த அண்ணணைப் பார்க்க போகிறவர்களுக்கு தெரியும். இறங்கி தெருவில் நடந்தாலே என்ன சார் என்று இவரிடம் வேலை செய்பவர்கள் அல்ல, அருகில் இருக்கும் கடைகளில் வேலை செய்பவர்கள் கூட கேட்பாகள். அவரிடம் நடுஇரவில் கூட அழைத்து ஜஸ்ட் லைக் தட் எந்த உதவியென்றாலும் என்னால் கேட்க முடிகிறது.

இவரை என் நணபர். இங்கே, இந்த  வேலை செய்கிறார் என்றால், அப்புறம் எப்படி என்பது போல் புருவம் உயர்த்துகிறார்கள். இவரோ சகா சாப்பிட்டியாம்மா என்று கேட்கிறார்.

அநியாயத்திற்கு நல்லவர் ஒருவர் போயும் போயும் இந்த ஊரில் இருக்கிறார். இவர் ஊருக்கு சென்றால் இவர் வேறு ஊருக்கு போய்விட்டார். அடடா என்னும் போது ஸ்விஃப்ட் காரும், டிரைவரும் வந்து “சார் அனுப்பினாருங்க. அவர் ஊரில் இல்லை” என்கிறார்.

இவரது ஓனரே இவரிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தான் பேச முடியும். மேலே சொன்னவர்களெல்லாம் இவரிடம் பேச தினமும் முயற்சி செய்வார்கள். அமாவாசை 15 நாளுக்கு ஒரு முறைதானே? எனக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன். சகா, அவசரமா? ஒரு 10 நிமிஷத்தில் கூப்பிடவா என்ற பதிலாவது நிச்சயம் எனக்கு.

பிரபல பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் இவர். அப்துல் கலாமின் தற்போதைய கனவே இவரின் கண்கள் வழியாகத்தான் கருவாகிறது. இவரோ நம்மை ஓரங்கட்டி “கார்க்கி. இப்படி ட்ரை செய்யலாமே. உனக்கு சரியா வருமென்று” நமக்கு உதவி செய்கிறார்.

இன்னும் ஐ.ஐ.டி, அந்த ஆளு, இந்த கம்பெனி, இந்த காலேஜ்ன்னு என எங்கும் வியாபித்திருக்கும் நண்பர்கள் பலர். இந்த சகாக்கள் துணை இருக்கும்வரை இன்னும் ஒன்றல்ல, ஒன்பது வேட்டைக்காரனை விஜய் தந்தாலும் தைரியமாக பார்ப்பேன். வாழ்க இளைய தளபதி.

35 கருத்துக்குத்து:

கார்க்கி on December 19, 2009 at 9:27 AM said...

என்னுடன் படம் பார்த்த அந்த 7 பெரிய ஆட்களின் பெயர் தெரிந்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணபிக்கலாம். இனி வரும் பின்னூட்டங்களை நான் பார்க்க போவதில்லை. அத்னால் குத்துங்க எசமான் குத்துங்க.

நேற்று அந்த பெரியவர்களுக்கு செய்த பாவத்திற்கு அடுத்த ஜுன் 22ந்தேதி பரிகாரம் செய்யப்படும்

க‌ரிச‌ல்கார‌ன் on December 19, 2009 at 9:31 AM said...

//இந்த சகாக்கள் துணை இருக்கும்வரை இன்னும் ஒன்றல்ல, ஒன்பது வேட்டைக்காரனை விஜய் தந்தாலும் தைரியமாக பார்ப்பேன். வாழ்க இளைய தளபதி.//

வாழ்க இளைய த‌ள‌ப‌தியின் ப‌திவுல‌க‌ த‌ள‌ப‌தி

Sure on December 19, 2009 at 9:46 AM said...

இதை விட சிறந்த விமர்சனத்தை வேற
எந்த ரசிகனாலும் தர முடியாது.

கவலைப்படதிங்க கார்கி, இதுவும்
கடந்து போகும்.

( உங்க பின்னுட்ட விசயத்தை பதிவுலேயே
போட்டு இருக்கலாமே)

தராசு on December 19, 2009 at 9:48 AM said...

//உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...//

தர்ஷன் on December 19, 2009 at 10:27 AM said...

தளராதீங்க சகா
அடுத்தப் படம் எல்லோரினதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்

குசும்பன் on December 19, 2009 at 10:41 AM said...

ஆஹா சைன்டிஸ்டையும் சாச்சுபுட்டானா வேட்டைக்காரன்! ஹா ஹா சூப்பரு!

மீ தி எஸ்கேப்பு:)

டேங்ஸ்:)

பரிசல்காரன் on December 19, 2009 at 11:31 AM said...

நீயே இப்படின்னா அந்த ஆளுக கதியை நெனச்சா ரொம்ம்ப்ப பாவமா இருக்கு!

தீப்பெட்டி on December 19, 2009 at 11:45 AM said...

:?

மணி on December 19, 2009 at 11:50 AM said...

அடப்பாவமே ஒரு விஜய் ரசிகரே இப்படி வெந்து நொந்து போயிருக்காரே...

சுசி on December 19, 2009 at 12:44 PM said...

விடுங்க கார்க்கி.
நண்பர்கள் புரிஞ்சுக்குவாங்க.

Chitra on December 19, 2009 at 1:05 PM said...

இந்த சகாக்கள் துணை இருக்கும்வரை இன்னும் ஒன்றல்ல, ஒன்பது வேட்டைக்காரனை விஜய் தந்தாலும் தைரியமாக பார்ப்பேன். ...............இடுக்கண் நேரத்தில், தோள் கொடுப்பான் தோழன். ஓகே, ஓகே, ஓகே.......

Patta Patti on December 19, 2009 at 1:17 PM said...

நக்கலு???.. ஆனாலும் சூப்பர்.

வெற்றி on December 19, 2009 at 1:19 PM said...

சகா..எந்திரிச்சி வாங்க..உங்க விமர்சனதுக்காக வெயிட்டிங்...:-)

நாஞ்சில் பிரதாப் on December 19, 2009 at 1:20 PM said...

//வாழ்க இளைய தளபதி//

நல்லமனம் வாழ்க... என்ன சகா டோட்டல் டேமேஜா...

taaru on December 19, 2009 at 1:35 PM said...

சத்தியமா... என்னமோ ஏதோன்னு பாத்தா??? இப்பூடியா பண்றது?

இதுல போன பதிவுக்கு commentsல "குருவிக்கு இது தேவலை"னு வேற...

யப்பா ஒரே ஊத்தலூ..but உங்க நிலமைய நினச்சு வருத்த படுறேன் தல...
அடுத்த வருஷம் நீங்க சொன்ன தேதில பாக்கலாம்..
ரசிகசிகாமணிய்யா நீர்...

பேநா மூடி on December 19, 2009 at 2:07 PM said...

ஒன்பது வேட்டைக்காரனை விஜய் தந்தாலும் தைரியமாக பார்ப்பேன். வாழ்க இளைய தளபதி.//

ஹா ஹா..., நீங்களே கவுத்துடீங்களே..,

அனுஜன்யா on December 19, 2009 at 2:39 PM said...

விட்றா, விட்றா. நிறைய பார்த்துட்டோம். ஆனாலும் உன்னோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு.

அனுஜன்யா

யுவகிருஷ்ணா on December 19, 2009 at 2:50 PM said...

cool. Movie is big hit. Broking all the previous histories in collection :-)

அத்திரி on December 19, 2009 at 3:57 PM said...

விடு சகா எவ்ளவோ பாத்துட்டோம்.................. இன்னும் பாப்போமில்ல

Anbu on December 19, 2009 at 5:34 PM said...

\\\\அத்திரி on December 19, 2009 3:57 PM said...

விடு சகா எவ்ளவோ பாத்துட்டோம்.................. இன்னும் பாப்போமில்ல\\\\


எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க போல.....

அன்புடன் அருணா on December 19, 2009 at 5:40 PM said...

/ஆனாலும் உன்னோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. /
எனக்கும் கூட!

உண்மைத் தமிழன்(15270788164745573644) on December 19, 2009 at 5:41 PM said...

நீதாண்டா ரசிகன்..!

KaveriGanesh on December 19, 2009 at 5:55 PM said...

நீயுமா கார்க்கி,

இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

KaveriGanesh on December 19, 2009 at 5:57 PM said...

கார்க்கி,,

இன்று இரவு s.a.c ட்ட பேசுறேன்.

உன்னோட ஆதங்கத்த தெரியப்படுத்துறேன்

நேசன்..., on December 19, 2009 at 6:00 PM said...

நீங்க விஜய்க்கு பக்க வாத்தியம் இல்லீங்க பக்கா வாத்தியம்!.....இந்த சப்பக்கட்டுக்கு வேட்டைக்காரன் எவ்வளவோ தேவலை!

வெண்பூ on December 19, 2009 at 6:18 PM said...

ஆனாலும் ஒரே நேரத்துல ஏழு பேருக்கு சூனியம் வெச்சதும் இல்லாம சொந்த செலவுல உனக்கு நீயேவும் வெச்சிகிட்ட பாரு.. அந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.. :)))

அதி பிரதாபன் on December 19, 2009 at 8:24 PM said...

//நேற்று அந்த பெரியவர்களுக்கு செய்த பாவத்திற்கு அடுத்த ஜுன் 22ந்தேதி பரிகாரம் செய்யப்படும்//
ரைட்டு.

தரா...சு.

//யுவகிருஷ்ணா said...
cool. Movie is big hit. Broking all the previous histories in collection :-)//
இது உண்மை.

உமா on December 19, 2009 at 8:30 PM said...

//என்னுடன் படம் பார்த்த அந்த 7 பெரிய ஆட்களின் பெயர் தெரிந்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணபிக்கலாம்//

அந்த 7 பேரும் பாவம்தான்...

சரவணகுமரன் on December 19, 2009 at 8:32 PM said...

:-)

சுரேகா.. on December 19, 2009 at 9:05 PM said...

:)

வாழ்த்துக்கள் சகா!
நட்புதான் வெல்லும்..!

அண்ணாமலையான் on December 20, 2009 at 10:25 AM said...

பிசிராந்தையார் தோற்றார்...

Karthik on December 20, 2009 at 3:25 PM said...

ஜூன் 22 மறுபடியுமா? :))

Karthik on December 20, 2009 at 3:27 PM said...

jokes apart, it was wonderful time i had with you all.. screw the movie.. i didn't come for that anyway.. :)

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 11:07 PM said...

உன்னயவே பயங்கர செண்டிமெண்ட்ல ஒளறவெச்சிட்டாரு பாரு உங்க டாக்டரு..

:-))

selva ganapathy on February 9, 2012 at 4:34 PM said...

:-)

 

all rights reserved to www.karkibava.com