Dec 17, 2009

வீ.சேகர் பதிவு


 

   எனக்கொரு அண்ணன் இருக்கிறான். எல்லா அண்ணன்கள் போலதான் அவனும். அதாவது தம்பியை விட மூத்தவன் என சொல்ல வருகிறேன். சின்ன வயதில் இருந்தே அவன் எனக்கு செக்யுரிட்டியாகவோ அல்லது டிடெக்டிவாகவோ பின் தொடர்ந்து, தப்பு செய்யும் போதெல்லாம் கையும் களவுமாக மாட்டி விடுவான். அண்ணன்களால் வரும் பெரிய தொல்லையே இந்த செகண்ட் ஹேண்ட் பொருட்கள்தான். மெளண்ட்பேட்டன் பிரபுவுக்கு தாடி வளர்ந்த வரலாற்று புத்தகம், செயின் லொடலொடவென ஆடும் பழைய சைக்கிள்  என எல்லாப் பொருட்களும் செகண்ட் ஹேண்டில்தான் நம் கைகளுக்கே வரும். இவ்வாறாக அவனிடம் இருந்து என்னிடம் பாஸாகாத ஒரு பொருள் ஷூக்கள் தான். அவை செகண்ட் ஹேண்ட் என்று அழைக்க முடியாதல்லவா? செகண்ட் லெக்குதானே!!

தற்போது ஸ்காட்லேந்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறான் இந்த மகாத்மா. PROSAIC என்ற பெயரில் நீங்கள் அவனின் பின்னூட்டங்களை எப்போவாது என் பதிவில் பார்த்திருக்கக்கூடும். அல்லது அடிக்கடி வேறு யாருடைய பதிவிலாவது பார்த்திருப்பீர்கள். இதிலிருந்தே அவனுக்கு நல்ல விஷயங்கள் அறவேஏஏஏஏஏ பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டால் நீங்க நம்ம ஆளுங்க. அதான் அறிவாளிங்க. அவன் வாங்கி, யூஸ் செய்யாமல் எனக்கு தந்த ஒரே பொருள் இதுதான். சரி விடுங்க. இன்னைக்கு அண்ணன் அவதரித்த திருநாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, ஒரு பாட்டு போடலாம்ன்னு பார்த்தேன். தம்பியாக இருந்தால் தென்மதுரை வைகை நதி போடலாம். அண்னனுக்கு? ”அண்ணன் என்ன தம்பி என்ன”.. வேண்டாமுங்க. 

  பிரதர் ஹேப்பி பர்த்டேப்பா…தமிழில் வாழ்த்தலாம். ஆனால் ஆங்கிலத்தில் வாழ்த்தும் போது இலவசமாக ஒரு டே போட்டுக் கொல்லலாம்.(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல வெயிலான்)

லாலாலா..லாலாலா

****************************************

மூஞ்சிப்புத்தகம். அதாம்ப்பா ஃபேஸ்புக்கில் farmvilla விளையாட ஆரம்பித்திருக்கிறேன். அதை கவனித்த பப்லு, அவனுக்கும் தனியாக ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்து ஒரு நாலு ஏக்கர் இடத்தை வளைத்துப் போட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அதில் கிடைக்கும் பழங்கள் எல்லாம் பிடிக்கவில்லை அவனுக்கு. பிஸா செடி, பர்கர் கொடியெல்லாம் இல்லையாடான்னு கேட்கிறான். இரவு 1 மணிக்கு எழுந்து “டேய். ஹார்வெஸ்ட் செய்யலாம்டா. இல்லைன்னா வீணா போயிடும்ன்னு” மிரட்டறான். இப்ப பிரச்சினை, தம்பிக்கு neighbours எட்டு பேர் இல்லையாம். அதனால் அருகில் இருக்கும் பொறம்போக்கு இடங்களை வளைத்து போட முடியவில்லை. லோக்கல், எஸ்.டி.டி, ஐ.எஸ்.டின்னு போட்டு ஆள் சேர்க்கிறான். அதனால் யாராவது இந்த கேம் ஆடறவங்க பப்லுவையும் சேர்த்துக்கோங்கப்பா. அவன் தோட்டத்துக்கு லின்க் இதோ. அல்லது sreekesh devanathan னு தேடிப் பாருங்க.

லாலாலா..லாலாலா

************************************

தலைவலி என்று (நல்லாப் படிங்க. “என்ற” இல்லை, என்று) குடும்ப டாக்டரைப் பார்க்க சென்றேன். இத சாப்பிடுங்க வலி இறங்கிடும்ன்னு தந்தார். சில நாட்களில் கண்ணில் பிரச்சினை வந்து கண் மருத்துவரைப் போய் பார்த்தேன். அது சரியான உடனே ஜலதோஷம். இன்று வாய்ப்புண். மனுஷன் இறங்கிடும்ன்னு சொன்னது இப்படின்னு இப்பதான் புரிஞ்சுது. இரும்பு சத்துக்காக பப்லுவுக்கு அவர் ஒரு டானிக் கொடுத்திருக்கிறார். உடனே எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கணும். உள்ளே ஏதாவது பார்ட் துருப்பிடிச்சிருக்கான்னு.

லாலாலா..லாலாலா

******************************

அம்மா வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் கிளாஸ் பெயிண்டிங், தஞ்சாவூர் பெயிண்டிங்ன்னு இறங்கிட்டாங்க. போதாதென்று வீட்டுக்கு வருபவர்களெல்லாம் நல்லா இருக்குன்னு திருமண பரிசுகளுக்கு வாங்கி செல்கிறார்கள். நீயும் என்னவோ எழுதறியே இதெல்லாம் ஃபோட்டோ எடுத்து போட மாட்டியான்னு கேட்டாங்க. ம்ம் என்றேன். வீட்டிற்கு வந்த திருப்பூர் பதிவர்கள் “கார்க்கி பிளாகுல போட சொல்லுங்கம்மா. பரிசாக கொடுக்க இதை விட பெட்டர் ஆப்ஷன் இல்லைன்னு” போட்டு கொடுத்துவிட்டார்கள்.(நாம எப்போ நல்ல விஷயங்களை நம்ம கடைல போட்டிருக்கோம்?) ஃபோட்டோ எடுத்து எங்கே சேவ் செய்தேன்னு தெரியல. இப்போதைக்கு விஷயத்தை சொல்லிவிட்டேன். இன்னொரு நாளில் ஃபோட்டோக்கள்.

லாலாலா..லாலாலா

46 கருத்துக்குத்து:

Anonymous said...

வீ.சேகர் பதிவு, லலாலா எல்லாம் ரசித்தேன். :)

Cable Sankar on December 17, 2009 at 9:46 AM said...

v. sekar pathivunu per vachathu een enakku puriyuthu..:)

Anonymous said...

பப்பு உன் பக்கத்து தோட்டம் என்னோடது :)

அன்புடன்-மணிகண்டன் on December 17, 2009 at 10:08 AM said...

ஏஏஏஏ... நான் தனி ஆள் இல்ல...'ன்னும் தலைப்பு வச்சிருக்கலாம்... ;)
சூப்பர் கார்க்கி...

விக்னேஷ்வரி on December 17, 2009 at 10:09 AM said...

அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மூஞ்சிப்புத்தகம். //
யப்பா.... முடியல.

வர வர உங்க பதிவுகள்ல கடி அதிகமாகுது, ரொம்ப நாளைக்கப்புறம். நல்லாருக்கு.

You can be awarded as a Good Entertaining Blogger of the year. :)

அனுஜன்யா on December 17, 2009 at 10:14 AM said...

முதலில் உங்க அண்ணன் prosaic க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நான், எப்பவுமே அண்ணன் கட்சி. ஏன்னா.. எனக்கும் உன்ன மாதிரி ஒரு useless தம்பி இருக்கிறான். எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.

இந்த போஸ்ட் நல்லா இருக்கு. தலைப்பிலிருந்து. பழைய கார்க்கியின் Smart Alec குறும்புகளுடன். பிட்சா மரம், பர்கர் கொடி...சிறுவர்களின் (பப்லு இன்னமும் அந்த கேடகரி தான்) உலகம், கற்பனை அட்டகாசம் தான்.

அனுஜன்யா

ஸ்ரீமதி on December 17, 2009 at 10:30 AM said...

உங்கள் அண்ணாவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள். :)) அம்மா ஆசையை உடனே நிறைவேற்றவும்.. :)))) மற்றபடி அனுஜன்யா அண்ணாவின் //ஏன்னா.. எனக்கும் உன்ன மாதிரி ஒரு useless தம்பி இருக்கிறான்.// இந்த பின்னூட்டத்தை ரசித்தேன்... :)))))))))))))))))))))

கார்க்கி on December 17, 2009 at 11:10 AM said...

நன்றி அம்மிணி..

கேபிளாரே, உங்களுக்கு தெரியாதா சினிமா சூசகமா?

நன்றி மயில்..:))

மணிகண்டன், நான் நல்லபடியா நினைச்சு வச்சாலும், வந்துடுவாங்கப்பா தல ரசிகர்கள். அதனால் அமைதி காப்போம் (18ஆம் தேதி வரை)

நன்றி நன்றி நன்றி விக்கி.
ஹேய். என்னைய வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே

@அனுஜன்யா,

எப்பவும் வாங்கிய பொருட்களை நீங்க அதிகம் யூஸ் பண்னிட்டு எங்களிடம் தந்துவிடுவதால் நாங்க எல்லாம் use less தம்பிங்கதான் தல..

ஸ்ரீமதி, நினைச்சேன். நல்லா இருங்க யக்கோவ்...

டம்பி மேவீ on December 17, 2009 at 11:18 AM said...

உங்க அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..... என் அண்ணனுக்கு அவன் வேலையே சரியாய் இருக்கும் அதனால் என்னை கண்காணிக்க மாட்டான்...சோ AM ALWAYS A FREE BIRD

டம்பி மேவீ on December 17, 2009 at 11:20 AM said...

எனக்கு முக புத்தகத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ........ புத்தகத்திற்கே நேரம் சரியாய் இருக்கு

டம்பி மேவீ on December 17, 2009 at 11:23 AM said...

"(நாம எப்போ நல்ல விஷயங்களை நம்ம கடைல போட்டிருக்கோம்?) "


நீங்க எழுதறது எல்லாமே நல்ல விஷயங்கள் தான்

யுவகிருஷ்ணா on December 17, 2009 at 11:32 AM said...

இந்தப் பதிவின் ஃபார்மேட் எனக்கு பிடித்திருக்கிறது!

ரஞ்சனி on December 17, 2009 at 11:59 AM said...

typical karki's post.

ரொம்ப நல்லா இருக்கு சகா.

//அவன் வாங்கி, யூஸ் செய்யாமல் எனக்கு தந்த ஒரே பொருள் இதுதான். சரி விடுங்க. இன்னைக்கு அண்ணன் அவதரித்த திருநாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி//

சரக்கு வந்தவுடனே ”அவன்” “அவர்” ஆகிப் போனதை ரசித்தேன். அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துகளும் சொல்லிடுங்க.

தலைப்பு, லாலாலா, டே போடுவது, மூஞ்சிப்புத்தகம், பிஸா செடி, வலி இறங்குவது என வரிக்கு வரி அதிரடி.

//You can be awarded as a Good Entertaining Blogger of the year. :)//

strongly recommended

க‌ரிச‌ல்கார‌ன் on December 17, 2009 at 12:04 PM said...

பிரதர் ஹேப்பி பர்த்டே..

லாலாலா..லாலாலா

//ஃபேஸ்புக்கில் farmvilla விளையாட ஆரம்பித்திருக்கிறேன்//

புட்டிக்க‌தைக‌ள் எழுத‌ நேர‌மில்லை இதுக்கு நேர‌மிருக்கா உங்க‌ தோட்ட‌த்தில் உள்ள செடிக‌ளுக்கெல்லாம் ப‌ற‌வைக் காய்ச்ச‌ல் வ‌ர‌ வேண்டுகிறேன்

லாலாலா..லாலாலா

//தலைவலி என்று (நல்லாப் படிங்க. “என்ற” இல்லை, என்று) குடும்ப டாக்டரைப் பார்க்க சென்றேன்//

சே சே டாக்ட‌ர‌ போய் தப்பா நினைப்போமா?????

லாலாலா..லாலாலா

//நாம எப்போ நல்ல விஷயங்களை நம்ம கடைல போட்டிருக்கோம்//

நாம கடைல போட‌ற‌து எல்லாமே ந‌ல்ல‌ விஷ‌ய‌ந்தான் ச‌கா

எம்.எம்.அப்துல்லா on December 17, 2009 at 12:11 PM said...

அண்ணன் வாழ்க! (பழக்கதோஷம் இல்லை)

:)

எம்.எம்.அப்துல்லா on December 17, 2009 at 12:13 PM said...

// mayil said...
பப்பு உன் பக்கத்து தோட்டம் என்னோடது :)

//

இடம் மாற்றி பின்னூட்டத்தை இங்க போட்டீங்களா??

நர்சிம் on December 17, 2009 at 12:33 PM said...

அனுஜன்யாவையும் யுவகிருஷ்ணாவையும் வழிமொழிகிறேன்.

நல்லா இருக்கு சகா, தலைப்பு விக்ரமன் பதிவா வீ சேகர் பதிவா

gayathri on December 17, 2009 at 1:03 PM said...

nice writing karki.BTW John Cena is the superstar of the year 2009.

டம்பி மேவீ on December 17, 2009 at 1:03 PM said...

enakku oru useful anna irukkirar ....


anaal naan avarukku useful ah irukkiren entru ketkaathinga

நாய்க்குட்டி மனசு on December 17, 2009 at 1:23 PM said...

இது என்ன குடும்ம்ம்மம்ம்ம்ப நாளா? இல்ல குடும்ப உறுப்பினர் எல்லோரையும் பற்றி வந்திட்டுதே அதான் கேட்டேன். நல்ல இருக்கு

☼ வெயிலான் on December 17, 2009 at 1:28 PM said...

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!!

தலைப்பை ரசித்தேன்.

பேநா மூடி on December 17, 2009 at 1:35 PM said...

இது தான் வி.சேகர் பதிவா.... சரி சரி..,

செ.சரவணக்குமார் on December 17, 2009 at 1:35 PM said...

தலைப்பே கலக்கலா இருக்கு தல. அண்ணனுக்கு இனிய‌ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மதுரைநண்பன் on December 17, 2009 at 1:54 PM said...

சகா விடுங்க சகா .நிழல் எப்பவுமே பின்தொடரத்தான் செய்யும்
//அவன் வாங்கி, யூஸ் செய்யாமல் எனக்கு தந்த ஒரே பொருள் இதுதான். ஏன் அது அவருக்கு பிட்டிக்காத //

அண்ணாமலையான் on December 17, 2009 at 1:57 PM said...

அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மண்குதிரை on December 17, 2009 at 2:20 PM said...

வீ சேகர் பதிவு :-)

அவருக்கு என் வாழ்த்துக்களும்.

வெற்றி on December 17, 2009 at 2:34 PM said...

தலைப்பு அருமை...:-)

ரசிக்கும் சீமாட்டி on December 17, 2009 at 2:41 PM said...

ஹலோ உங்க பிரதருக்கு பிறந்த டே விஷ் சொல்லிருங்க....

நீங்க சொன்ன லிங்க ஓபன் பண்ணா என் தோட்டம் தான் ஓபன் ஆவுது !!!

Mohan Kumar on December 17, 2009 at 3:31 PM said...

சூப்பர் கார்க்கி...kalakkal..sirikkaama irukka mudiyathu.

RaGhaV on December 17, 2009 at 3:47 PM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் PROSAIC.. :-))

பதிவு அருமை.. :-))

சுசி on December 17, 2009 at 4:10 PM said...

உங்க அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி.

இந்த மொக்கை மொக்கிட்டு இடையில //லாலாலா..லாலாலா//வா? தலைப்ப போட்டாலும் கிர்ர்ரர்ர்ர்..

சுசி on December 17, 2009 at 4:15 PM said...

என் பொண்ணுக்கிட்ட சொல்லிடறேன் பப்லுவ சேத்துக்க சொல்லி.ஓகே

//தலைவலி என்று (நல்லாப் படிங்க. “என்ற” இல்லை, என்று) குடும்ப டாக்டரைப் பார்க்க சென்றேன். //
நாங்க நல்லாத்தான் படிச்சோம். குடும்ப டாக்டரோட தலைவலி நீங்கதான்னு எழுதி இருக்கீங்க. கரெக்டா கார்க்கி?

அம்மாவோட ஆசைய முதல்ல நிறைவேத்துங்க!!!

Chitra on December 17, 2009 at 4:16 PM said...

எல்லா அண்ணன்கள் போலதான் அவனும். அதாவது தம்பியை விட மூத்தவன் என சொல்ல வருகிறேன். ........ஆரம்பித்தில் இருந்தே humor touch, தூள்!

கல்யாணி சுரேஷ் on December 17, 2009 at 5:49 PM said...

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

யோ வொய்ஸ் (யோகா) on December 17, 2009 at 5:59 PM said...

எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள் சகா

கார்க்கி on December 17, 2009 at 5:59 PM said...

மேவீ, எவ்ளோ நல்லவங்க நாம ரெண்டு பேருமில்ல?

நன்றி யுவகிருஷ்ணா :))

நன்றி ரஞ்சனி

நன்றி கரிசல். கடைசி வரிக்கு லாலாலா மறந்துட்டிங்களே

அப்துல்லா அண்ணே பதிவ முழுசா படிங்க. அவங்க பப்லுவுக்கு பதில் பப்புன்னு போட்டாங்க போல

நர்சிம், வீ.சேகர்தான். விக்ரமன் எனக்கு பிடிக்காது சகா(பூவே உனக்காக விதிவிலக்கு)

தகவலுக்கு நன்றி காயத்ரி :))

நாய்க்குட்டி, அதுக்குதான் இந்த தலைப்பு.:))

நன்றி வெயிலான்

நன்றி பேநாமூடி’

நன்றி சரவணக்குமாரன்

நன்றி மதுரை நண்பா

நன்றி அண்ணாமலையான்

நன்றி மண்குதிரை

நன்றி வெற்றி

சீமாட்டி, இப்பதான் பார்த்தேன்.:((

நன்றி மோகன் குமார்

நன்றி ராகவ்

நன்றி சுசி.பாவம் உங்க பொண்ணு

ஹிஹிஹி..சித்ரா நன்றி

Karthik on December 17, 2009 at 6:38 PM said...

really good one.. :)

annavukku vaazthukkal.. :)

la la la la

Karthik on December 17, 2009 at 6:39 PM said...

criminal law va? civil law va?

don't say it...;)

பா.ராஜாராம் on December 17, 2009 at 7:15 PM said...

விக்னேஸ்வரி...

//You can be awarded as a Good Entertaining Blogger of the year. :)//

yaa!

அன்புடன் அருணா on December 17, 2009 at 7:27 PM said...

அம்மா பெயின்டிங்க் பார்க்க வெயிட்டிங்க்! ஒரு டே போட்டுக்க ஆசைப்பட்டது பிடிச்சிருக்கு!மூஞ்சி புத்தகத்துலே பப்லுவைச் சேர்த்துக்கறேன்!

தமிழ்ப்பறவை on December 17, 2009 at 8:59 PM said...

அட்டகாசம் சகா...
வீருவின் சிக்ஸர்களை நினைவுபடுத்திய பதிவு..
தலைப்பும் நல்லா இருக்கு...
(விக்ரமன் பதிவுன்னு வச்சாக்கூட இன்னும் பெட்டரா இருந்திருக்கும்)
prosaic க்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

கார்க்கி on December 17, 2009 at 9:52 PM said...

//Karthik said...
really good one.. :)//

என்னாது? அப்ப இத்தினி நாளா சொன்னது?

என்ன லா? அது என்னன்னு கண்டுபிடிக்க முடியலயா லா? :)))

நன்றி ராஜாராம்.

டீச்சர்..கூடிய சீக்கிரம்

நன்றி பறவை. தலைப்பு.. ஆமாம். அவர எனக்கு பிடிக்காது சகா :))

எம்.எம்.அப்துல்லா on December 18, 2009 at 12:26 AM said...

//அப்துல்லா அண்ணே பதிவ முழுசா படிங்க. அவங்க பப்லுவுக்கு பதில் பப்புன்னு போட்டாங்க போல //

i know dear :)

முரளிகுமார் பத்மநாபன் on December 18, 2009 at 9:57 AM said...

அம்மாவின் படைப்புகளை விரைவில் பதிவிடுங்கள். :-) ஆவலுடன் முரளி

பேரரசன் on December 18, 2009 at 11:44 AM said...

பப்லுக்கு இன்னோரு ஆள் ..ரெடின்னு சொல்லீருங்க,,சகா..

ஆதிமூலகிருஷ்ணன் on December 26, 2009 at 11:04 PM said...

குடும்ப்பதிவுன்னு இதைச்சொல்லலாமா? குட். அனைவருக்கும் வாழ்த்துகள்.!

 

all rights reserved to www.karkibava.com