Dec 15, 2009

அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை


   அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. எனக்கு ஒரு முறை நடந்தது. தேதி நினைவிலில்லை. வருடம் 2002. புத்தம் புது காலை என்றானே!! அப்படியொரு காலைப் பொழுது. என்னையும், என்னுடன் பணிபுரியும் சிலரையும் ஏற்றிக் கொண்டு கிளம்பியது அந்த பேருந்து. அடுத்த தெருவைத் தாண்டினால் கடலைப் பார்க்கலாம். அது திசம்பர் மாதம். தேதிதான் நினைவிலில்லை. திசம்பர் மாத பனிமூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அந்த பனிமூட்டத்தில் கடலைப் பார்ப்பதுதான் எத்தனை சுகம்? காதலைப் போலவே கடலும் முடிவிலியாய் தெரியும். பால் போல் பொங்கி வரும் வெண்ணிற அலைகளில் இறங்கி விளையாடத் தோன்றும். அலைகளின் ஓசையை விட சிறந்ததொரு இசையை நான் இன்னும் கேட்டதில்லை.

  தேதிதான் நினைவிலில்லை. ஆனால் திங்கள் கிழமை. வார இறுதி முடிந்து வேலைக்கு செல்லும் அலுப்பு அனைவரது கண்களிலும் தெரிகிறது. பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்கிறது. ஒருவருக்காக சில நிமிடங்கள்  காத்திருக்கும் வேளையில் கடலை ரசிக்கிறேன்.  சூரியன் மெல்ல மெல்ல எழுந்து வருகிறான். அந்த ரம்மியமான காட்சியில் மனம் லயிக்கிறது. என்றும் இல்லாமல் அன்று மட்டும் மனம் எதையோ தேடுகிறது. இதுவரை கிடைக்காத ஏதோ ஒன்றைத் தேடுகிறது. அதுவும் சுகமாய்த்தான் இருக்கிறது. வழக்கமான அரட்டைகள் ஏனோ திங்கள் காலையில் நடப்பதில்லை. வித்தியாசமாய் முன்னிருப்பவரின் குறட்டை சத்தம் சினமூட்டுகிறது. வெண்பனியும், செந்நிற வானமும், நீலநிற கடலும் சங்கமிக்கும் காட்சியை  ரசிக்க முடியாதவர்களை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் நினைவில் பசுமையாய் இருக்கிறது. தேதிதான் நினைவிலில்லை.


   வேகமெடுக்கிறது பேருந்து. காந்தி சிலையைத் தாண்டி செல்லும் வேளையில் என் கண்ணில் படுகிறது அந்த குழந்தை. மூன்று வயதிருக்கலாம். பெண் குழந்தை. . ஒரு காலைத் தூக்கி இன்னொரு காலால் அடி வைக்கும் அழகு! பால் மணம் மாறா சிரிப்பு!! என என்னை முழுமையாய் ஆட்கொள்கிறாள். பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகள்?   பேருந்து வேகமாய் கடக்கும் அந்த ஒரு சில வினாடிகளில் என் வாழ்க்கை நின்று விடக்கூடாதா என்று ஏங்குகிறேன். நின்றுவிட்டது பேருந்து. வழக்கமாய் இங்கே நிற்காதே என்றெல்லாம் யோசிக்கவில்லை.  அந்த கணம் அந்த மழலைக்கு சமர்ப்பணம் செய்கிறேன். மெல்ல நகர தொடங்கியது பேருந்து. கண்பார்வையில் இருந்து மறையும் வரை எட்டிப் பார்க்கிறேன். சிவப்பு நிற ஃப்ராக்கில் கொள்ளை அழகுடன் குழந்தை. சிவப்பு நிறம் கூட நினைவிலிருக்கிறது. தேதிதான் நினைவிலில்லை.


இந்த குழந்தையைத்தான் மனம் தேடியதோ என்றெண்ணியபடி திரும்புகிறேன். மூன்று வயது குழந்தை நான் திரும்புவதற்குள் வளர்ந்து 20 வயது பெண்ணாக என் எதிரில் அமர்ந்திருக்கிறது. இவளை இதற்கு முன்பு இங்கே பார்த்தது இல்லையே. யார் இவள்? குழப்பமாய் இருக்கிறது. அதே சிரிப்பு. அதே சிவப்பு. சிவப்பு நிற சுடிதார். கிள்ளிப் பார்க்கிறேன். நம்பச் சொல்கிறது வலி. ஆனாலும் முடியவில்லை. அவள் கைகளில் இருப்பது அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் புத்தகம் என்பது நினைவிலிருக்கிறது, தேதிதான் நினைவிலில்லை.


  வளரும்போது குழந்தைத்தனத்தை இழந்துவிடுகிறோம். அதனாலே அழகையும் இழக்கிறோம். இவள் யாரிடத்தில் வரம் வாங்கினாள் என்று தெரியவில்லை. ஆண்டுகள் கூடும்போது அழகும் கூடுமென சிவன் வரம் கொடுப்பானா என்ன? ஒருவரிடத்தில் மட்டுமெல்லாம் வரம் வாங்கினால் இவ்வளவு அழகு கிடைக்காது.  கண், காது, இதழ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரம் வாங்கி வந்தவள் போலிருந்தாள். இன்னும் கடலோரம்தான் பேருந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் என் பார்வை கடலுக்கு எதிர்புறமாய் திரும்பி பல நிமிடங்கள் ஆகிறது. மெல்லிய கீற்றாய் விபூதி, மிகச் சிறியதாய் கம்மல், சற்று பெரியதாக கழுத்து சங்கிலி, மென்மெல்லிய சிவப்பு வர்ணத்தில் உதட்டு சாயமென சில இடையூறுகளைத் தவிர்த்து அவள் அழகை முழுமையாய் ரசிக்கிறேன். உடன் இருந்தவளை அருணா என அழைப்பது கூட நினைவிலிருக்கிறது. தேதிதான் நினைவிலில்லை.


அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ப்ரியா இவளைப் பார்த்து ஹாய்சொல்லிவிட்டு கேட்கிறாள். “பதினாறாம் தேதிதானே வர்றேன்னு சொன்னிங்க”.


”ஹலோ மேடம். இன்னைக்குத்தான் சிக்ஸ்டீன்த்”.


  அலைகளே!!! சற்று அமைதியாய் இருங்களேன். என்னவள் பேசுகிறாள் என்றேன் சத்தமாக, மனதுக்குள்.

என்ன சொன்னாள்? இன்று தேதி பதினாறா??????

**************************************************************************************************************
மில்லிமீட்டருக்கும் குறைவான
விட்டத்து சாரல் தெளித்த
மலர் சிலிர்க்கும் சோலை
மார்கழியின் ஈரம் குளித்து
எழுந்துவிட்ட காலை
வாச பூக்களில் எல்லாம்
வண்ணம் தீட்டி
வெட்கம் உண்ட
தண்ணென்ற சூரியன்
கோடிகோடியாய் கொட்டிக்கொடுத்தாலும்
மீண்டும் மீண்டும் கேட்டு   வாங்கும்
கரையோர காதல் அலைகள்
எனினும், எவையும்
எனைக்கவரவில்லை...
அதிசயமாய் சிவப்பு உடையில்
தேவதையைக் கண்ட நொடியில்...
நிமிட நேரத்தில்
நினைவுகளைக் கொய்தாள்..
ஆதலால்,
இன்றுவரை 
தேதி மட்டும் நினைவிலில்லை...
- ஸ்ரீமதி

50 கருத்துக்குத்து:

Anonymous said...

இன்னைக்கு தேதி பதினாறோ இல்லையோ.. ஆனா இன்னைக்கு அமாவாசை என்பது உறுதி :) நடத்துங்க

செ.சரவணக்குமார் on December 15, 2009 at 10:55 PM said...

//அலைகளின் ஓசையை விட சிறந்ததொரு இசையை நான் இன்னும் கேட்டதில்லை.//

மிக அருமை சகா. பதிவு முழுதும் இழையோடிய அழகு நடையை மிக ரசித்தேன்.

ஆதிமூலகிருஷ்ணன் on December 15, 2009 at 10:58 PM said...

15தான் ஆவுது. ஹிஹி.. ஃபீலிங்க்ஸ் நல்லாத்தான் இருக்குது. ஆனா கொஞ்சம் பழைய ஸ்டைல்.

Hisham Mohamed - هشام on December 15, 2009 at 11:15 PM said...

என்னை மறந்து வாசித்தேன். நல்ல வாழ்த்துக்கள் கார்க்கி....

தமிழ்ப்பறவை on December 15, 2009 at 11:28 PM said...

பேக் டூ ஃபார்ம்...
//மெல்லிய கீற்றாய் விபூதி, மிக சிறியதாய் கம்மல், சற்று பெரியதாக கழுத்து சங்கிலி, மென்மெல்லிய சிவப்பு வர்ணத்தில் உதட்டு சாயமென சில இடையூறுகளைத் தவிர்த்து அவள் அழகை முழுமையாய் ரசிக்கிறேன்.//
ரசித்தேன்...
//உடன் இருந்தவளை அருணா //
ரொம்ப முக்கியம் பாரு...
16ந்தேதி என்ன விசேஷம்...???

பிரியமுடன்...வசந்த் on December 15, 2009 at 11:58 PM said...

//மெல்லிய கீற்றாய் விபூதி, மிக சிறியதாய் கம்மல், சற்று பெரியதாக கழுத்து சங்கிலி, மென்மெல்லிய சிவப்பு வர்ணத்தில் உதட்டு சாயமென//

ரொம்ப நல்லா வர்ணிச்சு எழுதியிருக்கீங்க சகா எழுத்தும் மெருகுகூடி மெருகு கூடிட்டே போயிட்டு இருக்கு வித்யாசம் தெரியுது பதிவு போடும் நேரமும் மாறி மொத்தமும் ஆளே மாறிட்டீங்களே சகா...!

அண்ணாமலையான் on December 16, 2009 at 12:31 AM said...

ம்ம்ம் ....நடத்துங்க...

SK on December 16, 2009 at 12:34 AM said...

என்னடா இன்னைக்கு பதிவு வரலையேன்னு பாத்தேன் :-) வந்துடிச்சு

ILA(@)இளா on December 16, 2009 at 12:56 AM said...

நல்லா இருந்துருச்சுங்க. கிடக்குது கழுதை கருத்து,, வர்ணனை எல்லாமே அட்டகாசம்.

Chitra on December 16, 2009 at 1:54 AM said...

வளரும்போது குழந்தைத்தனத்தை இழந்துவிடுகிறோம். அதனாலே அழகையும் இழக்கிறோ................என்னாமே சொல்லிப்புட்டீக............ சூப்பர் அப்பு!

RaGhaV on December 16, 2009 at 2:21 AM said...

//ஒருவரிடத்தில் மட்டுமெல்லாம் வரம் வாங்கினால் இவ்வளவு அழகு கிடைக்காது//

:-)))

சுசி on December 16, 2009 at 2:47 AM said...

//அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை//

உண்மைதான் கார்க்கி. உங்க இந்த பதிவுக்கு ரொம்பவே பொருந்துது.
அருமையா எழுதி இருக்கீங்க.

சுசி on December 16, 2009 at 2:50 AM said...

//பெண்களே தேவதைகள். //

யாரு கேர்ள்ஸ், பொண்ணுங்க, அம்மாயி.. அவங்களா?

ம்க்கும்..

சுசி on December 16, 2009 at 2:53 AM said...

//மூன்று வயது குழந்தை நான் திரும்புவதற்குள் வளர்ந்து 20 வயது பெண்ணாக என் எதிரில் அமர்ந்திருக்கிறது. //

கிராஃபிக்ஸா இருக்கும்.

(தேதி ஞாபகமில்ல. வயசு மட்டும் கரெக்டா ஞாபகம் இருக்குது பாரு.)

சுசி on December 16, 2009 at 3:00 AM said...

//யார் இவள்? //

பாத்தது நீங்க. எங்ககிட்ட கேட்டா எப்டி?

சுசி on December 16, 2009 at 3:03 AM said...

//வெண்பனியும், செந்நிற வானமும், நீலநிற கடலும் சங்கமிக்கும் காட்சியை ரசிக்க முடியாதவர்களை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். //

சேம் ப்ளட்டுப்பா..

பாலா on December 16, 2009 at 7:02 AM said...

ரொம்பநாளைக்கு அப்புறம் உன் கிட்டேர்ந்து ஒரு சுயபுலம்பல் அதுவும் சான்சே இல்ல
பின்னிட்ட போ மாப்பி

--

Cable Sankar on December 16, 2009 at 7:26 AM said...

ஏன் மகாகவி காளிதாஸ் ஸ்டைல்.:((

Cable Sankar on December 16, 2009 at 7:26 AM said...

/நல்ல வாழ்த்துக்கள் கார்க்கி....
//

தலைவரே வாழ்த்துல நல்ல வாழ்த்து, கெட்ட வாழ்த்துன்னு ஏதாவது இருக்கா என்ன..:))

pappu on December 16, 2009 at 7:45 AM said...

புட்டி எங்கப்பா?

கார்க்கி on December 16, 2009 at 8:22 AM said...

@மயில், :)))

@சரவணக்குமார், ரொம்ப நன்றிங்க

@ஆதி,என்ன சகா இந்த நேரத்தில்?

நன்றி ஹிஷாம்

@பறவை, ஒன்னும் விசேஷம் இல்லைங்கண்ணா. சும்மாதான்.

@வசந்த், நன்றிங்கோவ்.என்ன செய்ய? காலைல டைம் இருக்க மாட்டுது.

நன்றி அண்ணாமலையான்

எஸ்.கே, உங்களுக்கு விஜய் ஆனந்த், பரிசல் மற்றும் ஒரு முக்கியமான வலையுலக தோழிக்கு நன்றி சொல்லனும்ங்க..

நன்றி இளா

நன்றி சித்ரா

ராகவ், சென்னையா ஆன்சைட்டா?

சுசி, நடக்கட்டும். :))

நன்றி மாப்பி. உரையாடல் போட்டிக்கு உன் கவிதை எப்போ ரிலீஸ்?

கேபிள், என்ன செய்ய? உங்கள மாதிரி ஆளுங்க யூத்ன்னு சொல்லிக்கிட்டதால் என்ன மாதிரி ரியல் யூத்துங்க காளிதாஸ் காலத்துக்கு போறோம்

பப்பு, காலி ஆயிடுச்சுப்பா..

Anonymous said...

ப‌டிக்க‌ற‌துக்காக‌ புக்க‌ எடுத்தாலே "அதிச‌ய‌ங்க‌ள் அடிக்க‌டி நிக‌ழ்வ‌தில்லை" இப்ப‌டி தான் சொல்றாங்க‌. என்ன‌ செய்ய‌ற‌து.

க‌ரிச‌ல்கார‌ன் on December 16, 2009 at 8:51 AM said...

//அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை//
அடிக்கடி நிக‌ழ்ந்தா அதுக்கு பேரு அதிச‌ய‌மில்லா ச‌கா!

வெற்றி on December 16, 2009 at 9:33 AM said...

//என்ன சொன்னாள்? இன்று தேதி பதினாறா??????//

ஆமாங்க......இன்னிக்கு தேதி பதினாறு தான்...:-)

"ராஜா" from புலியூரான் on December 16, 2009 at 9:37 AM said...

//பெண்களே தேவதைகள்
கலக்கல் வர்ணனை.... கொஞ்சம் ஜொள்ளும் தெரியுது

♠ ராஜு ♠ on December 16, 2009 at 9:38 AM said...

எனக்கு என்னா மேட்டருன்னு தெரிஞ்சாகனுமே...!

முரளிகுமார் பத்மநாபன் on December 16, 2009 at 9:43 AM said...

சகா, அழகு. படிக்க படிக்க....
கடலும், குழந்தையும், சிவப்புடை தேவதையும் காட்சிப்படுத்தப்பட்டவிதம். அழகு.

தராசு on December 16, 2009 at 9:44 AM said...

//கேபிள், என்ன செய்ய? உங்கள மாதிரி ஆளுங்க யூத்ன்னு சொல்லிக்கிட்டதால் என்ன மாதிரி ரியல் யூத்துங்க காளிதாஸ் காலத்துக்கு போறோம்//

ஹலோ, நாங்கெல்லாம் நிரந்தர யூத்து. நீங்கதான் ரியல் யூத்து அப்புறம் டூப்ளிக்கெட் யூத்து.

நாய்க்குட்டி மனசு on December 16, 2009 at 10:21 AM said...

கடலையும் ரசிக்கிறீங்க
குழந்தையையும் ரசிக்கிறீங்க
குமரியையும் ரசிக்கிறீங்க
எல்லாத்திலையும் உங்க அழகான ரசிக்கும் மனது தான் தெரிகிறது
என்ன தேதின்னு தெரியறதுக்கு அழகான பெண் அழகா டிரஸ் பண்ணி அழகா சொல்ல வேண்டி இருக்கு. ம்ம்ம்ம்

Sangkavi on December 16, 2009 at 10:36 AM said...

//அலைகளே!!! சற்று அமைதியாய் இருங்களேன். என்னவள் பேசுகிறாள் என்றேன் சத்தமாக, மனதுக்குள்//

பார்த்து கார்க்கி அலையில் சிக்கிராதீங்க............

கல்யாணி சுரேஷ் on December 16, 2009 at 10:40 AM said...

என்னாச்சு கார்க்கி? நல்லாதானே போய்கிட்டிருந்துச்சு? உண்மைய சொல்லுங்க, இதெல்லாம் கனவுதானே? பப்லு தானே உங்க தலைல தண்ணி ஊத்தி எழுப்பினான்?

நாஞ்சில் நாதம் on December 16, 2009 at 11:14 AM said...

ம்ம்ம் ....நடத்துங்க...:))

குசும்பன் on December 16, 2009 at 11:32 AM said...

அருமை!

//அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை// உன் பக்கத்தில் ஒரு பொண்ணு உட்காந்ததை சொன்னீயா சகா?

பேரரசன் on December 16, 2009 at 11:50 AM said...

பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகள்?

ரிப்பீட்டேய்...

வளரும்போது குழந்தைத்தனத்தை இழந்துவிடுகிறோம். அதனாலே அழகையும் இழக்கிறோம். இவள் யாரிடத்தில் வரம் வாங்கினாள் என்று தெரியவில்லை. ஆண்டுகள் கூடும்போது அழகும் கூடுமென சிவன் வரம் கொடுப்பானா என்ன?

சூப்பருங்கோ...


(ரொம்ப நாளைக்கு அப்புறம்)

விக்னேஷ்வரி on December 16, 2009 at 12:11 PM said...

மொக்கை சாமி எப்போ ஃபீலிங்க்ஸ் சாமி ஆனார்?

நர்சிம் on December 16, 2009 at 2:06 PM said...

//mayil said...
இன்னைக்கு தேதி பதினாறோ இல்லையோ.. ஆனா இன்னைக்கு அமாவாசை என்பது உறுதி :) நடத்துங்க
//
;)


//செ.சரவணக்குமார் said...
//அலைகளின் ஓசையை விட சிறந்ததொரு இசையை நான் இன்னும் கேட்டதில்லை.//

மிக அருமை சகா. பதிவு முழுதும் இழையோடிய அழகு நடையை மிக ரசித்தேன்.
//

இரண்டுமே என் கருத்தும் சகா..

கவி..தூவி..ம்.

RaGhaV on December 16, 2009 at 2:09 PM said...

சென்னையில தான் இருக்கேன் கார்க்கி..
உங்க பதிவ படிச்சிட்டு ரொம்ப ஃபீல் ஆயிட்டேன்.. இரவெல்லாம் தூக்கமில்ல..
அதனாலதான் அந்நேரமே ஒரு பின்னூட்டம்.. ;-)

ஸ்ரீமதியின் கவிதை சூப்பர்.. :-))

பின்னோக்கி on December 16, 2009 at 2:16 PM said...

ஸ்ரீமதியின் கவிதையை கதையாக்கிய விதம் நன்று.

அன்புடன்-மணிகண்டன் on December 16, 2009 at 2:30 PM said...

கில்லி பதிவு கார்க்கி...

எம்.எம்.அப்துல்லா on December 16, 2009 at 3:00 PM said...

//இன்னைக்கு தேதி பதினாறோ இல்லையோ.. ஆனா இன்னைக்கு அமாவாசை என்பது உறுதி //

பின்னூட்டம் ஆஃப் தி இயர் :)

டம்பி மேவீ on December 16, 2009 at 3:43 PM said...

:)

Karthik on December 16, 2009 at 4:52 PM said...

செம பதிவு.

இப்படியெல்லாம் ஃபீல் பண்ண நம்மால முடிய மட்டேங்குது. மழை மறுபடி பெய்தாலும். நான் மறுபடி நனைந்தாலும். :)

Karthik on December 16, 2009 at 4:54 PM said...

ஸ்ரீமதி கவிதை கூட எழுதுவாங்களா? :-O

Mohan Kumar on December 16, 2009 at 5:49 PM said...

//அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை// உன் பக்கத்தில் ஒரு பொண்ணு உட்காந்ததை சொன்னீயா சகா?

Haa haa haa!!

//ஸ்ரீமதி கவிதை கூட எழுதுவாங்களா? :-O//

Correctu!!

PARTHI on December 16, 2009 at 9:50 PM said...

இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
ரசித்து படித்தேன்.
பார்த்திபன்

தாரணி பிரியா on December 16, 2009 at 11:58 PM said...

:) hm nalla irukkunga karki naduthunga :)

அன்புடன் அருணா on December 17, 2009 at 7:10 PM said...

ம்ம்ம்...ஓகே ...ஃபீலிங்க்ஸ் ஆஃப் கார்க்கி!

அன்புடன் அருணா on December 17, 2009 at 7:10 PM said...

யாருங்க அந்த அருணா?

பட்டாம்பூச்சி on December 18, 2009 at 3:05 PM said...

ரசித்தேன் :)

கார்த்திகேயன் on April 17, 2010 at 3:04 PM said...

மிக அருமை சகா. பதிவு முழுதும் இழையோடிய அழகு நடையை மிக ரசித்தேன்.என்னை மறந்து வாசித்தேன்.

 

all rights reserved to www.karkibava.com