Dec 11, 2009

தலைவாஆஆஆஆ!!!


 

இன்று திசம்பர் 12.

ஒரு சூரியன்..

ஒரு சந்திரன்..

ஒரு சூப்பர்ஸ்டார்.

Rajinikanth131008_1

WISH YOU MANY MORE HAPPY

RETURNS OF THE DAY

THALAIVAAAAAAAAAAA

போன வருடம் எழுதிய பதிவொன்றை மீள் பதிவிடுகிறேன். ரஜினியைப் பற்றி நான் எழுதிய ஒரே பதிவு. அந்த டைமுக்கு ஏற்ற மாதிரி இருப்பதால், புது வாசகர்களுக்கு புரியாமல் போகலாம். அட்ஜஸ்ட்  பண்ணிக்கோங்கப்பா. இன்று இரவு சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போகவிருப்பதால் எதுவும் புதுசா எழுத தோணல. :))

*******************************************************************************************************************

குசேலன் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என சூப்பர் ஸ்டார் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

லக்கிலுக் : மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட டமாரு கொமாருனு ஒரு கேரக்டர் கீது..அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க விகடன் மூவிஸ் வழங்கும் சூப்பர் ஸ்டார் இன்&ஆஸ் "டமாரு கொமாரு" (மயிலாப்பூர் தமிழன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

  அதான்டா இதான்டா டமாரு கொமாரு நாந்தான்டா..
  மயிலாப்பூர் ஏரியாவுல அனைவருக்கும் காவல்டா..
  டாஸ்மாக்கில் படுத்துக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  துண்டு பீடி பிடிச்சுக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  குவார்ட்டர் வாங்கி தந்த ஆள மறப்பதில்லடா..
  ஆனா வாட்டர் பாக்கெட் வாங்க மறந்துபுட்டேன்டா

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீதாம்ப்பா

அய்யனார்: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே முள்ளும் ம‌ல‌ரும் காலத்து ரஜினியாக காட்டும்....

லக்கி : என்ன சொல்றப்பா நீ?ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? குசேலனும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ டமாரு கொமாருதான்.

சத்தி : (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் சார்..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

பரிசல்காரன் : வணக்கம் சார்.அந்த திண்டல்மலை முருகன் ஆசியோடு படத்த ஆரம்பிக்கலாம் சார்.கதை என்னனா, உங்களுக்கு, நாட்ட திருத்துற வேலய விட்டுடுனும்னு வில்லன் ஒரு லெட்டர் எழுதறாரு. நீங்களும் அதை ஏத்துக்குற மாதிரி பதில் லெட்டர் எழுதுறீங்க..அப்போ இன்டெர்வெல். அதுக்கு அப்புறம் அந்த லெட்டர மாத்தி அவரு அசர நேரமா பார்த்து பூந்து வெளயாடுறீங்க..அப்பப்போ மத்த நாட்டு நடப்ப பத்தி நான் எழுதி தர வசனத்த பேசுறீங்க.. இது பன்ச் டயலாக் இல்ல,அவியல் டயலாக் சார்..

ஏ!! லெட்டர் போடு லெட்டர் போடு
தாத்தாவுக்கும் லெட்டர் போடு
தங்கமணிக்கும் லெட்டர் போடு
லதானந் அங்கிளுக்கு லெட்டர் போடு
கயல்விழி ஆன்டிக்கி லெட்டர் போடு

அப்படியே போட்டு தாக்கினிங்கனா அவ்ளோதாண்ணா

ரஜினி : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

ச்சின்னப்பையன் : தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க.லதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

ர‌ஜினி : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.தாமிரானு சொல்லுவாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யான‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ளீச்சிங் ப‌வுட‌ர் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...வேணும்னா கிரிய‌ கேளுங்க‌..

கிரி: ஆமாம் த‌லைவா.. நாளைக்கே ஆளுக்கொரு மொக்க‌ ப‌திவு இதை ப‌த்தி எழுதி சூடாக்கிடுவானுங்க‌..

ம‌ங்க‌ளூர் சிவா: ரிப்பீட்டேய்...

ர‌ஜினி :என்ன‌ப்பா? திருப்பி ச‌ந்திர‌முகி 2 எடுக்க‌லாம்னு சொல்றீயா?

ம‌ங்க‌ளூர் சிவா: இது எங்க‌ பாஷை

ர‌ஜினி:  அட‌ப்பாவி..இது நான் சொன்ன‌துடா

நிஜமா நல்லவன் : எனக்கொரு ஐடியா தலைவா. இதுதான் நீங்க நடிக்க போற கடைசிப் படம்னு டைட்டில்ல போட்டுடுவோம்.படம் முடியும் போது அனைவருக்கும் நன்றி சொல்லிடுங்க... உங்க கடைசி படம்னு எல்லோரும் பார்ப்பாங்க..படம் ஓடினதுக்கப்புறம் அது டைரக்டர் எழுதிக் கொடுத்தது அத நம்பினா நீ உருப்புட மாட்டனு அறிக்கை விட்டுட்டு அடுத்த படம் ஆரம்பிச்சிடலாம்.

ர‌ஜினி: நல்லவனாடா நீ!!!!!!

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். படத்தின் பெயர் உண்மைகன்னடன்/தமிழன்/மராத்தி 5698741259635871.. இதற்கு வரிவிலக்கு நிச்சயம் உண்டு.கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

ர‌ஜினி: ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.க‌ண்ண‌ன் : கால‌ம் மாறும்.உங்க‌ள் செல்வாக்கு உய‌ரும்.எந்த‌ விதியும் கால‌த்தில் அட‌க்க‌ம்.

ர‌ஜினி : ச‌ரியா சொன்னீங்க‌.க‌தைய‌ சொல்லுங்க‌.

கோவி.க‌ண்ண‌ன் : உங்க‌ ப‌ட‌த்த‌ வ‌ச்சு நாலு பேர் கிண்ட‌ல் செஞ்ச‌ மாதிரிதான் என்னையும் செஞ்சாங்க‌. நான் க‌வ‌ல‌ப‌ட‌ல‌யே.. போட்டிக்கு நானும் ஒரு க‌மென்ட் அனுப்பி ந‌டுவ‌ரோட‌ பாராட்டையும் வாங்கிட்டேன்.அதே மாதிரி குசேல‌ன‌ கிண்ட‌ல் ப‌ன்னி ஒரு ட‌ய‌லாக் எழுதி விவேக்க‌ பேச‌ வ‌ச்சுடுவோம்.

"காய்கறியெல்லாம் பார்த்தா இருக்கும் பச்ச பசேலனு
பார்த்தவங்க பச்சையா திட்டின படம்தான் குசேலன்"

"பதினேழு முறை படையெடுத்து ஜெயிச்சவன் கஜினி
பன்னாட பீ.வாசுவ நம்பி தோத்தவன் இந்த ரஜினி"

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குசேலன் ஏன் ஓடலனா பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. சிவாஜி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

  " மொக்க போடுறா மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு பல்லேலக்கா மெட்டில் போட்டோம்னா கர்னாடக காவிரி மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல...

     சற்று முன் கிடைத்த தகவல்படி சூப்பர்ஸ்டார் தற்போது இமயமலையில் உள்ளார்.கதை சொல்ல விரும்பும் மீதிப் பதிவர்கள் பின்னூட்டத்தில் கதையை சொன்னால் அவரிடம் சொல்லப்படும்.அந்தக் கதையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க பால்ராஜ் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார்.வெற்றி பெறுவோருக்கு பாலபாரதியின் "அவன்,அவள்,அது" புத்தகம் ஆசிப் அண்ணாச்சியின் கைகளால் பரிசளிக்கப்படும்

34 கருத்துக்குத்து:

karthi KN on December 11, 2009 at 11:14 PM said...

அருமையாக இருந்தது.. நன்றி..
me the first...

karthi KN on December 11, 2009 at 11:21 PM said...

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

தாரணி பிரியா on December 11, 2009 at 11:32 PM said...

தலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லிடுங்க கார்க்கி

Chitra on December 12, 2009 at 2:39 AM said...

HAPPY BIRTHDAY, RAJINI!

Anonymous said...

இப்ப படிச்சாலும் நல்லா இருக்கு கார்க்கி.

MORURAN on December 12, 2009 at 2:43 AM said...

ஏண்டா பொறந்தோம்னு கலீஜ் ஆஹாதே
தலைவா?இவிங்க எப்ப்வுமே இப்படித்தான்.ஆனா ஒன்னு சொல்றேன்,
உன் படத்தவிட இவிங்க கலாயிப்பு
நல்லாத்தான் இருக்கு.

சரி,பொற்ந்ததுக்கு வாழ்த்து.

Sangkavi on December 12, 2009 at 2:57 AM said...

என் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்........

Truth on December 12, 2009 at 3:18 AM said...

சூப்பர். :-)

சுசி on December 12, 2009 at 4:33 AM said...

//ஒரு சூரியன்..
ஒரு சந்திரன்..
ஒரு சூப்பர்ஸ்டார்..//

ஒரு கார்க்கி..

அவர் //ரஜினியைப் பற்றி// //எழுதிய ஒரே பதிவு.//

போதும் (பதிவு)உலகுக்கு.

சுசி on December 12, 2009 at 4:37 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார்.

வாழ்த்த வைத்த பதிவுலக சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள் (கார்க்கி இன்னும் அக்கவுண்டுக்கு பணம் வரல)

பூங்குன்றன்.வே on December 12, 2009 at 5:52 AM said...

மிக நன்று.சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.

தியாவின் பேனா on December 12, 2009 at 8:59 AM said...

அருமை ,கலக்கல் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

♠ ராஜு ♠ on December 12, 2009 at 9:34 AM said...

அடப்பாவிகளா..பொக்கிஷம், பரிசலோட கதையா..? இது தெரியாம, எல்லாரும் சேரனைப் போய் கும்மீட்டாங்களேப்பா..!

அண்ணாமலையான் on December 12, 2009 at 9:37 AM said...

தலைவனுக்கு ஜே...

கிரி on December 12, 2009 at 9:45 AM said...

:-))

Cable Sankar on December 12, 2009 at 10:12 AM said...

/அடப்பாவிகளா..பொக்கிஷம், பரிசலோட கதையா..? இது தெரியாம, எல்லாரும் சேரனைப் போய் கும்மீட்டாங்களேப்பா.//

அட ஆமாமில்லை...

RAMYA on December 12, 2009 at 10:36 AM said...

தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நானும் சொல்லிக்கறேன் கார்க்கி!

எல்லாருடைய கதையும் நல்லா இருக்கு...

பஸ்ட் கம் பஸ்ட் இந்த ஆர்டரில் தலைவருகிட்டே நடிக்க கால்ஷீட்டு கேளுங்க :-)

சிங்கக்குட்டி on December 12, 2009 at 10:47 AM said...

வாழ்த்துக்கள்.

திரும்ப படிச்சாலும் நல்லா இருக்கு கார்க்கி

குசும்பன் on December 12, 2009 at 11:07 AM said...

//இன்று இரவு சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போகவிருப்பதால் எதுவும் புதுசா எழுத தோணல. :))//

கார்க்கிக்கு வாழ்த்துக்கள்!!!:)

அன்புடன்-மணிகண்டன் on December 12, 2009 at 11:55 AM said...

//ஒரு சூரியன்..

ஒரு சந்திரன்..

ஒரு சூப்பர்ஸ்டார்.
//

உண்மை கார்க்கி..

கல்யாணி சுரேஷ் on December 12, 2009 at 12:01 PM said...

//சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார்.

வாழ்த்த வைத்த பதிவுலக சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள் (கார்க்கி இன்னும் அக்கவுண்டுக்கு பணம் வரல)//

எவ்வளவு நாளா நடக்குது இது?

Rajeswari on December 12, 2009 at 12:10 PM said...

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்

அருள்மொழியன் on December 12, 2009 at 12:18 PM said...

ரோஜா பூவில் முள் இருக்கும்
அது போல‌
உங்கள் பதிவு வாழ்த்தி கலாய்த்ததில்
ஒரு "முள்ளும் மலரும்"

தர்ஷன் on December 12, 2009 at 12:54 PM said...

சூப்பர் சகா
தலைவனுக்கு வாழ்த்துக்கள்
நானும் ஒரு பதிவிட்டேன் தலைவரின் படங்கள் பற்றி நேரமிருந்தால் வந்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்

http://sridharshan.blogspot.com/2009/12/10.html

செ.சரவணக்குமார் on December 12, 2009 at 1:40 PM said...

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மீள் பதிவு என்றாலும் மிக அருமை சகா.

Karthik on December 12, 2009 at 3:11 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

//ம‌ங்க‌ளூர் சிவா: ரிப்பீட்டேய்...

ROFL...:))))

டம்பி மேவீ on December 12, 2009 at 4:00 PM said...

bday wishes... rajini kku

யாழினி on December 12, 2009 at 4:17 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க கார்க்கி

KaveriGanesh on December 12, 2009 at 5:10 PM said...

அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html

ஆதிமூலகிருஷ்ணன் on December 12, 2009 at 5:52 PM said...

சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்துகள்.

பாலா on December 12, 2009 at 7:37 PM said...

machaan nalla irukku
vaazhthukkal unakkum
namma thalaivarukkum

Mr.vettiபைய்யன் on December 12, 2009 at 9:59 PM said...

வணக்கம் கார்க்கி

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வித்யா on December 13, 2009 at 10:17 AM said...

வாழ்த்துகள்.

Mohan Kumar on December 13, 2009 at 8:37 PM said...

அட கார்க்கி ரஜினி பத்தி நான் ரெண்டு நாளில் ரெண்டு பதிவு போட்டுட்டேன் வந்து பாருங்க!!

 

all rights reserved to www.karkibava.com