Dec 10, 2009

உரையாடல் போட்டி. டவுன் டவுன்


    

    

என் பெயரோhands
அவள் பெயரோ
எங்கள் பெயர்களோ அற்று
இருக்கும்
இந்தக் கவிதையில்
எங்கேயாவது
காதல் பிடிபடலாம்
அப்போது நீங்கள்
கண்ணீர் சிந்தலாம்.
காறி உமிழலாம்.
கணத்த மனதோடு சிரிக்கலாம்.
அது
எங்கள் காதல் என்பதை மறந்து..

***************************** *****************************  *****************************

                            


லவ் பேர்ட்ஸ் வேண்டுமென்றாள்
கூண்டுடன்
வருவேன் என்று
காத்திருக்கும்
அவளிடம் போய்
எப்படிச் சொல்வது
சுதந்திரமாய்_1820729_birds300pa
அவை காதலிக்க
வானம் விட்டதை.
ஏதேதோ
காரணம் சொல்லி
அவள் இதழ்களில்
முத்தமொன்று பதிக்கலாம்
அப்போது எங்கள் இதழ்களில்
வந்து மலரும்
லவ் பேர்ட்ஸின் புன்னகை.

42 கருத்துக்குத்து:

முரளிகுமார் பத்மநாபன் on December 10, 2009 at 8:38 AM said...

ஊஊஊ........

கலக்கல் சகா! வாழ்த்துக்கள்

க‌ரிச‌ல்கார‌ன் on December 10, 2009 at 8:41 AM said...

//Karthik on December 9, 2009 5:39 PM said...
யாராவது இவர பழைய படி கவிதை எழுதிக்கிட்டு அலையவிடுங்க.. புண்ணியமா போகும்.. :) :)//

நேத்து தான் இவ‌ர் சொன்னார் இன்னிக்கு க‌ல‌க்கிட்டிங்க‌ளே ச‌கா

க‌ரிச‌ல்கார‌ன் on December 10, 2009 at 8:42 AM said...

//இந்தக் கவிதையில்

எங்கேயாவது

எங்கள் காதல் பிடிபடலாம்//

ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌ ப‌ட‌த்துல‌ ந‌ல்லாவே பிடிப‌டுது ச‌கா

க‌ரிச‌ல்கார‌ன் on December 10, 2009 at 8:45 AM said...

//ஏதேதோ

காரணம் சொல்லி

அவள் இதழ்களில்

முத்தமொன்று பதிக்கலாம்//

க‌விஞ‌ர் கார்க்கி இங்க‌ தெரிகிறார்

க‌ரிச‌ல்கார‌ன் on December 10, 2009 at 8:48 AM said...

நேத்து போட்ட‌ ப‌திவினால் கொல‌ வெறியில‌ இருக்கிற‌ ம‌க்க‌ள் யாராவ‌து அப்டி இப்டி பின்னூட்ட‌ம் போட‌லாம்........ நிறுத்த‌க்கூடாது சகா நிறுத்த‌வே கூடாது

தராசு on December 10, 2009 at 9:15 AM said...

எதை எதையோ பின்னூட்டமா போடலாம்.

ஆனால் இப்போதைக்கு கலக்கல்னு ஒரே வார்த்தைதான்.

shortfilmindia.com on December 10, 2009 at 9:50 AM said...

இப்படி கூட எண்டர் பட்டனை தட்டலாமா.. ம்ஹும்ம்ம்

கேபிள் சங்கர்

எறும்பு on December 10, 2009 at 10:03 AM said...

o o
|
-
எனக்கு பேச்சே வரலை

Sangkavi on December 10, 2009 at 10:10 AM said...

//ஏதேதோ

காரணம் சொல்லி

அவள் இதழ்களில்

முத்தமொன்று பதிக்கலாம்

அப்போது எங்கள் இதழ்களில்

வந்த மலரும்

லவ் பேர்ட்ஸின் புன்னகை//

கார்க்கி பின்னீட்டிங்க போங்க............

இத இதத்தான் எதிர்பார்த்தேன் உங்ககிட்ட...... நல்லாயிருக்கு கவிதை

pappu on December 10, 2009 at 10:25 AM said...

கடவுளே, எல்லாம் கேபிளால வந்த வினை!

பூங்குன்றன்.வே on December 10, 2009 at 10:25 AM said...

எப்படிங்க இதெல்லாம்...ரொம்ப நல்லா இருக்கு தல.

Vidhoosh on December 10, 2009 at 10:27 AM said...

உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ, க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ

இன்னும் ஒரு மாசத்துக்கு கார்க்கிக்கு யாராவது லீவு கொடுத்துடுங்கோ...

--வித்யா

ஸ்ரீமதி on December 10, 2009 at 10:28 AM said...

//அப்போது நீங்கள்

கண்ணீர் சிந்தலாம்.

காறி உமிழலாம்.

கணத்த மனதோடு சிரிக்கலாம்.//

இப்போ நான் என்ன பண்ணட்டும்?? (தம்பி மாதவன் ஸ்டைல்ல படிக்கறதும், படிக்காததும் உங்க இஷ்டம்) ;))

//உரையாடல் போட்டி. டவுன் டவுன்//

மறுக்கா கூவிக்கிறேன். :))

இ நன்று.

Rajeswari on December 10, 2009 at 10:31 AM said...

”இ”- மிக அருமை

Anonymous said...

////உரையாடல் போட்டி. டவுன் டவுன்////

என்னை மாதிரி கவிதைன்னா எத்தனை கிலோன்னு கேக்கற ஆளுங்களுக்காகவே தலைப்பு போட்ட மாதிரி இருக்கு. கார்க்கி வாழ்க :)

தர்ஷன் on December 10, 2009 at 11:03 AM said...

ம்ம் பரவாயில்லை
இதை விட நன்றாக இருக்கும் உங்கள் தபூசங்கர் பாணி கவிதைகள்

கல்யாணி சுரேஷ் on December 10, 2009 at 11:37 AM said...

"இ" அருமை.

"ஈ"
//ஏதேதோ
காரணம் சொல்லி
அவள் இதழ்களில்
முத்தமொன்று பதிக்கலாம்//

அடங்க மாட்டீங்களா? (பப்லு கவனிக்கவும்)

கல்யாணி சுரேஷ் on December 10, 2009 at 11:37 AM said...

"ஈ"
இருந்தாலும் கவிதை அருமை கார்க்கி.

T.V.Radhakrishnan on December 10, 2009 at 12:33 PM said...

நல்லாயிருக்கு கவிதை

சுசி on December 10, 2009 at 12:39 PM said...

'இ' டபுள் ஸ்ட்ராங்..

'ஈ' ஸ்ட்ராங்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் கார்க்கி.

சுசி on December 10, 2009 at 12:41 PM said...

//அது
எங்கள் காதல் என்பதை மறந்து.. //

அதெப்பிடி மறக்க முடியும்??

நல்லாவே நினைவிருக்கு(ம்)!!

வித்யா on December 10, 2009 at 12:50 PM said...

தலைப்பு :)

கார்க்கி on December 10, 2009 at 12:59 PM said...

ஆரம்பமே சங்கா? நன்றி முரளி :))

கரிசல்காரன், நேயர் விருப்பம் சகா

தராசண்ணே, மீதியெல்லாம் ஸ்டாக் வச்சிக்கோங்க. அடுத்தடுத்து ஆர்.டி.எக்ஸ்தான் :))

கேபிள், தட்டிட்டே இருங்க

எறும்பு, கிளியே இன்னும் ஒழுங்கா பேசல. வெயிட் பண்ணு :)))

சங்ககவி, எதை பாஸ்? முத்தத்தையா? தெளிவா சொல்லுங்க :))

பப்பு, கடவுளே கேபிளின் வினையால் வந்தவர்தானா? ஆவ்வ்

நன்றி பூங்குன்றன. அது எப்படின்னா. முதல்ல.. வேணாம் சாமீ. அப்புறம், நீங்க உரையாடல் போட்டில ஜெயிச்சிடுவீங்க :))

@விதூஷ், நமக்கு லீவா? ஹே ஹேஹே ஹேஹேஹே

@ஸ்ரீமதி, மாதவன் உனக்கு தம்பியா? அண்ணன்னு இல்ல உங்க பதிவுல சொல்லியிருக்கிங்க?

@ராஜேஷ்வரி, இதுக்குதாங்க ரெண்டு ரெண்டு கவிதையா போடறது. ஏதாவ்து ஒன்னு பெட்டர்ன்னு சொல்லுவீங்க இல்ல :))))

சின்ன அம்மிணி, இங்க எங்கேயுமா நான் இதை கவிதைன்னு சொல்லவேயில்லையே மேடம்

நன்றி தர்ஷன், சீக்கிரம் போட்டுடலாம். சென்னை வந்ததில் இருந்து ரொமான்ஸுக்கு நேரமே இல்லை :))

கல்யாணி மேடம், அவன எதுக்கு கூப்ப்டறீங்க. பயபுள்ள half yearly examக்கு படிக்காம கேம்ஸ் ஆடிட்டு இருக்கான்

நன்றி டி.வி.ஆர்

ஹலோ சுசி, இங்க என்ன டீயா போட்டுட்டு இருக்கேன்? ஸ்ட்ராங்க டபுள் ஸ்ட்ராங்கன்னு. பீலிங்க்ஸ்.. கவிதை.. தெரியுமா?

@வித்யா, பின்னூட்டம் :)))

சுசி on December 10, 2009 at 1:32 PM said...

ஹலோ கார்க்கி!

நீங்க காக்டெயில் கிங்குப்பா..

என்ன டீ மாஸ்டர் ரேஞ்சுக்கு போய்ட்டீங்க?

காக்டெயில் மாதிரியே உங்க 'கவிதை'யும் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.

pappu on December 10, 2009 at 1:34 PM said...

பப்பு, கடவுளே கேபிளின் வினையால் வந்தவர்தானா? ஆவ்வ்///

நமக்கு ஏதாவது பிரச்சனைன்னா அந்த ஆண்டவர்கிட்ட போவோம்.

அந்த ஆண்டவருக்கே பிரச்சனைன்னா எங்ங்ங்கப்பாஆஆ... போறதூஊஊ!
(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

அன்புடன்-மணிகண்டன் on December 10, 2009 at 1:53 PM said...

வித்யா said...

//இன்னும் ஒரு மாசத்துக்கு கார்க்கிக்கு யாராவது லீவு கொடுத்துடுங்கோ...//

போதுமா மேடம்??? :)

Karthik on December 10, 2009 at 3:51 PM said...

முதல் கவிதை செம. :)

@கரிசல்காரன் : நீங்க வேற. ஒரு புட்டிக்கதைகள் எழுதுங்கனு எவ்ளோ நாளா சொல்றேன்...

Karthik on December 10, 2009 at 3:54 PM said...

ஸ்ரீமதி said...
தம்பி மாதவன் ஸ்டைல்ல படிக்கறதும், படிக்காததும் உங்க இஷ்டம்

கார்க்கி said...
மாதவன் உனக்கு தம்பியா? அண்ணன்னு இல்ல உங்க பதிவுல சொல்லியிருக்கிங்க?

haha chanceless.. rofl.. :)))

கல்யாணி சுரேஷ் on December 10, 2009 at 6:19 PM said...

//கல்யாணி மேடம், அவன எதுக்கு கூப்ப்டறீங்க. பயபுள்ள half yearly examக்கு படிக்காம கேம்ஸ் ஆடிட்டு இருக்கான்//

உங்க கூட சேர்ந்தா அப்படித்தான்.

RaGhaV on December 10, 2009 at 7:17 PM said...

நேத்துதான் "இந்த பொன்னுங்களே இப்படிதான்" ங்கிர ரேஞ்சுக்கு பதிவிட்டிருந்தீங்க.. இன்னைக்கு என்னடானா..??

போங்க சகா..

கவிதைகள் அருமை.. :-)) பின்றீங்க..

தமிழ்ப்பறவை on December 10, 2009 at 7:25 PM said...

'இ’ ரொம்பப் பிடிச்சது சகா...

அத்திரி on December 10, 2009 at 8:13 PM said...

இந்த மாதம்............. கவிதை மாதம்

பட்டிக்காட்டான்.. on December 10, 2009 at 11:33 PM said...

//.. மீதியெல்லாம் ஸ்டாக் வச்சிக்கோங்க. அடுத்தடுத்து ஆர்.டி.எக்ஸ்தான் :)) ..//

இன்னுமா...???!!!

கார்க்கி on December 11, 2009 at 10:19 AM said...

நன்றி மணிகண்டன்.

கார்த்திக். ட்ரை பண்றேம்ப்ப்பா

கல்யாணி மேடம், அவன் கூட சேர்ந்துதான் நான் கேம்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டேன்

ராகவ், இதான் டெக்னிக். அப்பப்ப இப்படி ஐஸ் வச்சிட்டா அவங்க அப்படியே இருப்பாங்க :))

நன்றி பறவை

அத்திரி, நான் டிசம்பர் நினைச்சிட்டேன் சகா

பட்டிக்காட்டான், இது சும்மா டிரெயிலர்தான். இன்னும் மெயின் பிகசர் பார்க்கலையே.. :))

குசும்பன் on December 11, 2009 at 10:48 AM said...

நன்றி சகா!

Anonymous said...

//இங்க எங்கேயுமா நான் இதை கவிதைன்னு சொல்லவேயில்லையே //

ஸ்மைலியில்லாம் சொல்லீட்டீங்க கவிதை இல்லைன்னே . ம் ஒக்கே.ஒத்துக்கவேண்டியதுதான்

கமலேஷ் on December 11, 2009 at 8:54 PM said...

கவிதை ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்...

அண்ணாமலையான் on December 11, 2009 at 9:58 PM said...

என்னையும் ஆட்டத்துல சேத்துக்கறீங்களா?

Anonymous said...

இரண்டு கவிதையிலும் ஈரம் சொட்டுகிறது...

ஆதிமூலகிருஷ்ணன் on December 12, 2009 at 6:27 PM said...

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ரெண்டுமே ரொம்ப சூப்பரா வந்திருக்கும்.! கான்செப்ட் ரொம்ப அழகு.

நாளைப்போவான் on December 15, 2009 at 11:52 PM said...

eppadinga ithellam? Athuva varuma?

கவிநா... on October 11, 2010 at 6:52 PM said...

ரசித்தேன்... கவிதைகள் அருமை.... அதிலும் முதல் கவிதை மிக நன்று....

 

all rights reserved to www.karkibava.com