Dec 7, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

sunaina 

சில மாதங்களாகவே வலது கண்ணில் சிறு பிரச்சினை இருக்கிறது. மெட்ராஸ் ஐ போல சிவந்து விடும். எரிச்சலும் இருக்கும். சென்ற வாரம் தெரிந்த டாக்டர் ஒருவரிடம் சென்றேன். ஐ டிராப்ஸ் தறேன். போடு என்றார். பின்ன கண்ணுல என்ன பைப் வச்சா மருந்த விட முடியும்? ட்ராப் ட்ராப் தானே டாக்டர் விட முடியுமென்றேன். சிரித்தாரா முறைத்தாரா என்று தெரியவில்லை. நேற்று மீண்டும் அவரிடம் சென்றேன். ரைட் ஐலதானே பிரச்சினை என்றார். ரைட் ஐய்யா இருந்தா எப்படி டாக்டர் பிரச்சினை இருக்கும்? பிரச்சினை இருந்தா எப்படி டாக்டர் ரைட் ஐய்யா இருக்குமென்றேன். முதல் முறையாவது மருந்து எழுதி தந்த பின் தான் பேசினேன். இந்த முறை அதற்கு முன்பே பேசிவிட்டதால் அவர் எழுதி தந்த  ட்ராப்ஸை கண்களில் போடும் திட்டத்தை டிராப் செய்துவிட்டேன். ஏற்கனவே நம்ம கண்ணு பெர்ர்ர்ர்ர்சு. இதுல இன்னும் சுருங்குனா?

***********************************************************

    திருநெல்வேலி அளவுக்கு தூரமும் இல்லாமல் தாம்பரம் அளவுக்கு நெருக்கமும் இல்லாமல் திண்டிவனம் தூரத்தில் நண்பனொருவன் இருக்கிறான். அட!!! அவனும் நானும் திண்டிவனத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள்தான். பெண் குழந்தை பிறந்ததை கூட என்னிடம் சொல்லாமல் பேர் வைப்பதற்கு மட்டும் என்னிடம் வந்தான். அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா. இரண்டையும் இணைத்து ”விபா” என்ற பெயரை சொன்னேன். துள்ளிக் குதித்தான். மிகவும் பிடித்திருப்பதாகவும், வீட்டில் பேசி விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றான். அவன் மனைவியின் உண்மையான பெயர் பாலசரஸ்வதியாம். தீபா செல்லப் பெயராம். அதனால் அந்தப் பெயரை வைத்து ஏதாவது சொல்ல சொன்னான். எவ்வளவு முயன்றும் “பா.வி” என்றுதான் வந்தது. அவனை அழைத்து ” குழந்தைக்கு தாத்தா பேரை வைக்கலாம். ஆனா அப்பா பேரையே எப்படி வைப்பது” என்ற பீடிகையுடன் பா.வியை சொன்னேன். கேனைப்பையன் ஸ்பீக்கரில் போட்டிருக்கிறான். ”இவனையெல்லாம் என் குழந்தைக்கு பேரு வைக்க சொன்னியா”டா என்று மட்டும் கேட்க முடிந்தது லைன் கட் ஆவதற்குள்.

********************************************************

அதோ இதோ என்று பலரை பயமுறுத்தியும் ரசிகர்களை சூடேற்றியும் வந்த வேட்டைக்காரன் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சென்னை சிட்டியில் மட்டும் 20 தியேட்டர் என்கிறார்கள். முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் 4 கோடி கலெக்‌ஷன் எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். மாயாஜாலில் ஒரு நாளைக்கு 40 ஷோவாம். நயாக்ரா நீர்விழ்ச்சியில் தளபதி குளிக்கும் சீனை டிரெயிலரில் இதுவரை பார்க்காதவர்கள் வீட்டில் டிவி இல்லை எனலாம். 

சாமிக்கு முன்னாடி மட்டும்தாண்டா சாந்தமா இருப்பேன். சாக்கடை முன்னாடியெல்லாம் … என்று நறநறக்கிறார் விஜய், சலீம் கெளஸிடம் . எனக்கு என்னவோ இதிலும் விஜய் ஆஸ்காருக்கோ, குறைந்தபட்சம் தேசிய விருதுக்கோ முயற்சித்ததோ மாதிரி தெரியவில்லை. அதே ஒப்பனிங் சாங், அதே மொக்கை காமெடி, அதே லவ் டிராக், அதே குத்துப்பாட்டு, அதே பன்ச் வசனம், அதே க்ளைமேக்ஸ் என்றுதான் தெரிகிறது. அதனால் மூளை இருக்கும் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

   விஜயின் அற்புத நடிப்பை எதிர்பாத்து சென்று ஏமாற்றம் அடைந்து “வேட்டைக்காரன் ஒரு முன்பின்பழமைத்துவ படம்”, ”தொலைந்தது என் 200 ரூபாய்” என்றெல்லாம் பதிவு போடவேண்டிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க… உங்களுக்கு தலைவலி வராமல் இருக்க, தயவு செய்து வேட்டைக்காரனை பார்த்து விடாதீர்கள். அவதார் வருகிறது, “பா” நன்றாக இருக்கிறதாம். “ரேணிகுண்டா” ஹிட்டாம். அங்கே செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று மணி நேரம் ஜாலியாக ரசிக்க நினைப்பவர்கள் என்னுடன் வரலாம். 18ஆம் தேதி காலை ஷோ.உதயம். நானும் இன்னொரு கல்லூரி பதிவரும் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். விரும்புவர்கள் உடனே சொல்லுங்கள்.விஜயின் மாஸை பார்க்கலாம்.

************************************************

”அது ஏண்டா என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட” என்று பப்லுவிடம் நான்காவது முறையாக நான் கேட்டபோது அம்மா, அக்காவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடிப்பதற்குள்  எட்டு முறைக் கேட்டுவிட்டேன் பப்லுவிடம் அதேக் கேள்வியை. அவனும் “வெள்ளை செந்தில்” மாதிரி முழித்துக் கொண்டிருந்தான். அன்று வீட்டில் எட்டு பேருக்கு மேல் இருந்தோம். அவங்களையெல்லாம் விட்டு என் கிட்ட ஏன் கேட்ட என்று நான் மீண்டும் கேட்ட போது எண்ட்ரீ ஆனார் எங்க வூட்டு ராமராஜன் வினோத்.

அப்படி என்னதாண்டா கேட்டான்?

என்ன கேட்டானா? நோபல் பரிசு வாங்கிய முதல் இந்திய பெண்மணி த்ரிஷா தானேன்னு கேட்கிறாண்டா என்றேன்

முகத்தை வாழைப்பழ செந்தில் போல வைத்துக் கொண்டு பதில் சொன்னான் பப்லு “ எங்க மிஸ் mother teresa வை மதர் திரிசான்னு சொன்னாங்க. அது எனக்கு சரியா ஞாபகமில்லை. அதான் த்ரிஷாவான்னு கேட்டேன் என்றான். தலையிலே நங்கென்று குட்டினேன்.

பின் நானே அவனுக்கு நோபல் பரிசென்றால் என்ன என்றும், யார் யார் வாங்கினார்கள் என்றும் விளக்கினேன். த்ரிஷாவுக்கெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்றேன். படித்து முடித்த பின், புத்தகத்தை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சிறிது தூரம் சென்ற பப்லு, அங்கிருந்த எட்டு பேருக்கும் கேட்கும் படி கத்தினான்

“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”

 

46 கருத்துக்குத்து:

Asha on December 7, 2009 at 11:39 PM said...

waiting for vettaikaran :)))))

பாவம் பையன அடிச்சிருக்கீங்க.. மிஸ் தப்பா சொன்னதுக்கு அவன் என்ன பண்ணுவான்.. :)))

//“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”//

கரெக்ட் ஆ தான் சொல்லி இருக்கான்..
babloo is always right...

வந்தியத்தேவன் on December 7, 2009 at 11:40 PM said...

விஜயின் மாஸைப் பார்க்கத் தான் நானும் படம் பார்க்க போகின்றேன். முழுமையான ஒரு பொழுதுபோக்குப்படமாக இருக்கும் என நம்புகின்றேன் வில்லு குருவி போல் கதை இல்லாமல் தளபதி தடுமாறினால் ஒன்றுமே செய்யமுடியாது. போக்கிரி, கில்லி போல் விறுவிறுப்பாக இருந்தால் சரி.

அன்னை திரேசா விடயம சிரிப்புத் தான் வருகின்றது. பாரதியாரை ஒரு படத்தில் யார் என விவேக் ஒரு சிறுவனுடன் கேட்க கே.டி.குஞ்சுமோன் என்பார் அதுபோல் தான் இதுவும் இருக்கின்றது.

சுசி on December 8, 2009 at 12:58 AM said...

//எவ்வளவு முயன்றும் “பா.வி” என்றுதான் வந்தது.//

எப்பவும் உங்க நினைப்பாவே சுத்தினா இப்டித்தானே வரும் கார்க்கி.

சுசி on December 8, 2009 at 1:07 AM said...

இங்க 22 ஆம் தேதி மாலை ஷோ. //விஜயின் மாஸை பார்க்கலாம்.//

யாரும் //18ஆம் தேதி காலை ஷோ.உதயம்.// போய்டாதீங்கப்பா.. பதிவுலக இளைய தளபதிய பாக்க கன்னா பின்னான்னு குவியப் போற கூட்டத்தில சிக்கிச் சீரழிஞ்சு போய்டுவீங்க.

சுசி on December 8, 2009 at 1:12 AM said...

//தலையிலே நங்கென்று குட்டினேன். //

பாவம் பப்லு.

அதான் இன்னும் உங்களுக்கு கண்ணு சரியாகலை :((((

Truth on December 8, 2009 at 3:31 AM said...

//
“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”

ரொம்ப தான் சார்ப்பு! :-)

பா.ராஜாராம் on December 8, 2009 at 3:42 AM said...

காக்டெயில் இது எனக்கு முதல் பாஸ்!

இவ்வளவு கலக்கலா?அருமை கார்க்கி.

"பப்லு,காண்டு மாப்ள.வாடி என் குஞ்சு.நீ நம்மாளா?"

Anonymous said...

//அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா.//

கார்க்கி, விதி(விதீ) ன்னு ஒரு பேர் கூட பொருத்தமாதான் இருக்கும். ஆனா நான் சொன்னேன்னு சொல்லீடாதீங்க :)

**

பப்லு, அது த்ரிஷாதான், வேற என்னமோ பேர் சொல்லி எல்லாரும் உன்னிய குழப்பறாங்க. :)

T.V.Radhakrishnan on December 8, 2009 at 6:24 AM said...

:-)))

blogpaandi on December 8, 2009 at 6:54 AM said...

:)

பச்சிலை புடுங்கி on December 8, 2009 at 7:52 AM said...

//விஜயின் அற்புத நடிப்பை எதிர்பாத்து சென்று ஏமாற்றம் அடைந்து “வேட்டைக்காரன் ஒரு முன்பின்பழமைத்துவ படம்”, ”தொலைந்தது என் 200 ரூபாய்” என்றெல்லாம் பதிவு போடவேண்டிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க //
என்ன ஓய் இப்படி சொல்றீர் ............... தமிழ்நாட்டுல சிவாஜி கமலுக்கு அப்புறம் நடிப்பு டாக்டர் பட்டம் வாங்கினது தளபதிதான் (இளைய தளபதி அடுத்த படத்துல தளபதி ஆகப்போறாராமே :) ) ............... அவர் நடிப்ப விமர்சனம் பண்ணாம வேற யாரு நடிப்ப விமர்சனம் பண்றது ....................

பூங்குன்றன்.வே on December 8, 2009 at 8:40 AM said...

//தயவு செய்து வேட்டைக்காரனை பார்த்து விடாதீர்கள். //

நான் இருக்குற பாக்தாத்துல சினிமா தியேட்டர் எல்லாம் இல்ல.

//என்ன கேட்டானா? நோபல் பரிசு வாங்கிய முதல் இந்திய பெண்மணி த்ரிஷா தானேன்னு கேட்கிறாண்டா //

அப்போ அது உண்மை இல்லையா? நான் கூட அவங்கதான்னு நினைச்சு இருந்தேன் ஸார்.அப்ப எனக்கும் குட்டா?

காக்டெயில் நல்ல போதை தருகிறது பாஸ்.

Cable Sankar on December 8, 2009 at 9:18 AM said...

எனக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணுங்கப்பா..

"ராஜா" from புலியூரான் on December 8, 2009 at 9:51 AM said...

//விஜயின் மாஸை பார்க்கலாம்.

பாஸ் ஆவாரா?

அன்புடன்-மணிகண்டன் on December 8, 2009 at 9:52 AM said...

// நயாக்ரா நீர்விழ்ச்சியில் தளபதி குளிக்கும் சீனை //
கார்க்கி... அது குளிக்கும் சீன் இல்ல.. குதிக்கும் சீன்...

// டிரெயிலரில் இதுவரை பார்க்காதவர்கள் வீட்டில் டிவி இல்லை எனலாம் //
பார்த்தவங்க வீட்லயும் டிவி இல்லையாம் கார்க்கி... தூக்கி போட்டு உடைச்சிட்டாங்கலாம்...

:(

இருப்பினும் எனக்கும் விஜய் ஓரளவு பிடிக்கும் என்பதால்... வேட்டைக்காரன் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

எம்.எம்.அப்துல்லா on December 8, 2009 at 10:09 AM said...

//சாமிக்கு முன்னாடி மட்டும்தாண்டா சாந்தமா இருப்பேன் //

ஏன் விக்ரம்கிட்ட அவ்வளவு பயமா??

ஸ்ரீமதி on December 8, 2009 at 10:10 AM said...

//இன்னொரு கல்லூரி பதிவரும் செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.//

அவர ஆண்டவன் தான் காப்பாத்தனும். ;)))

எம்.எம்.அப்துல்லா on December 8, 2009 at 10:11 AM said...

//அதே ஒப்பனிங் சாங், அதே மொக்கை காமெடி, அதே லவ் டிராக், அதே குத்துப்பாட்டு, அதே பன்ச் வசனம், அதே க்ளைமேக்ஸ் என்றுதான் தெரிகிறது //

ஓ....அப்ப அதே மாதிரியே ஃபிளாப்புன்னு சிம்பாலிக்கா சொல்ல வர்ற??

:))

யோ வொய்ஸ் (யோகா) on December 8, 2009 at 10:12 AM said...

சகா பின்னீட்டீங்க வேட்டைக்காரன் மேட்டர சொன்னேன்..., நானும் வேட்டைக்காரன் பார்க்க போகிறேன், நமக்கு விஜய் படம் நல்ல பொழுது போக்கா இருந்தா சரி... வேற எதையும் எதிர்பார்த்திட்டு விஜய் படத்திற்கு போக மாட்டேன் சகா

த்ரிஷா மேட்டர், தத்ரூபமாக குளியல் காட்சியில் நடித்ததுக்கு நோபல் பரிசு கிடைக்காது, வேண்டுமானால் ஆஸ்கர் முயற்சிக்கலாம்,

Anonymous said...

விபா என்றால் சக்தி வாய்ந்தவள் என்று பொருள். என் சின்ன பொண்ணுக்கு அதான் பேர், விபாஷா - துர்கையின் பெயரும் கூட.. நல்லத்தான் யோசிக்கறீங்க :))

மகேஷ் on December 8, 2009 at 10:24 AM said...

எங்கள் பப்லுவை அடித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :@

Anbu on December 8, 2009 at 10:27 AM said...

\\\\எம்.எம்.அப்துல்லா said...

//அதே ஒப்பனிங் சாங், அதே மொக்கை காமெடி, அதே லவ் டிராக், அதே குத்துப்பாட்டு, அதே பன்ச் வசனம், அதே க்ளைமேக்ஸ் என்றுதான் தெரிகிறது //

ஓ....அப்ப அதே மாதிரியே ஃபிளாப்புன்னு சிம்பாலிக்கா சொல்ல வர்ற??

:))\\\\


Repeeeeeeeaaaaaaattttttttttt...........

தராசு on December 8, 2009 at 10:29 AM said...

//அதனால் மூளை இருக்கும் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். விஜயின் அற்புத நடிப்பை எதிர்பாத்து சென்று ஏமாற்றம் அடைந்து “வேட்டைக்காரன் ஒரு முன்பின்பழமைத்துவ படம்”, ”தொலைந்தது என் 200 ரூபாய்” என்றெல்லாம் பதிவு போடவேண்டிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க… உங்களுக்கு தலைவலி வராமல் இருக்க, தயவு செய்து வேட்டைக்காரனை பார்த்து விடாதீர்கள்.//

எதுக்கும் கொஞ்சம் சேஃபா இருக்கட்டும்னு முன்கூட்டியே கையைத் தூக்கறீங்களே தல....,

Sarathguru Vijayananda on December 8, 2009 at 10:36 AM said...

குக்கர்ல சாதம் வெச்சு, ஆவி அடக்கியதும் அதி முதல் சாதம் ஒரு கைபிடி எடுத்து, மஞ்சா பொடி தூவி, விளக்கெண்ணையை விட்டு, ஒரு துணியில போட்டு, கண்ணில் ஒத்தடம் கொடுங்கள்... என்ன இப்படி சொல்றானென்னு பாக்கிய கார்கி...சேம் ப்ள்ட். பாட்டி வைத்தியம் எனக்கு செல்லியது..உங்களுக்கும் செல்லும்..

வேட்டைக்காரன் ட்ரையலர் பார்ப்பதினால் இந்த விளைவு என்று கண்ணில் வலி வந்தோர் சங்கம் சொல்கிறது.

நர்சிம் on December 8, 2009 at 10:40 AM said...

டாக்டர் மேட்டர் டக்கர்

கல்யாணி சுரேஷ் on December 8, 2009 at 11:27 AM said...

//“ எங்க மிஸ் mother teresa வை மதர் திரிசான்னு சொன்னாங்க. அது எனக்கு சரியா ஞாபகமில்லை. அதான் த்ரிஷாவான்னு கேட்டேன்"// டீச்சர் தப்பா சொல்லி தந்ததுக்கு ஒரு சின்ன பையனை எப்படி அடிக்கலாம்? கேட்கறதுக்கு ஆள் இல்லை னு நினைச்சிங்களா?

//“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”//
கார்க்கிய பத்தி சரியாய் தெரிஞ்சு வச்சிருக்க பப்லு. (இதுக்காகத்தான் சுனைனா படமா?)

ஆதிமூலகிருஷ்ணன் on December 8, 2009 at 1:21 PM said...

eppadippAththAlum entha Angilla pAththAlum sappai figar sunaina. athuvaa un fEvarit? En ippidi irukkuthu un rasanai.? :-))

ஷாகுல் on December 8, 2009 at 1:49 PM said...

படமும் மேட்டரும் சூப்பர்.

பாபு on December 8, 2009 at 1:55 PM said...

//நயாக்ரா நீர்விழ்ச்சியில் தளபதி குளிக்கும் சீனை //

athirampalli falls illyaa???

கார்ல்ஸ்பெர்க் on December 8, 2009 at 3:00 PM said...

கடந்த 8 வருஷத்துல இது தான் முதல் முறை - தூத்துக்குடி'ல இல்லாம வேற ஊருல நம்ம படத்த பார்க்கிறது.. எங்க இருந்தாலும் நம்ம படம் நம்ம ஊருல தான்.. நம்ம ஆளுங்களோட படம் பார்குறதே ஒரு பெரிய Plus point.. பார்க்கலாம், நம்ம படத்துக்கு இங்க opening எப்படி இருக்குன்னு.. :)

கார்க்கி on December 8, 2009 at 4:23 PM said...

அனைவருக்கும் நன்றி.

@ராஜா, அவரு ஃபெயிலானா ஆவறாரு. உங்காளுக்கு பிட் கொடுக்கிற வழிய பாருங்க :))

@அப்துல்லா அண்ணே, மூணு படம்தான் ஃப்ளாப். அதே பார்முலாவில் வந்த திருமலை முதல் போக்கிரி வரை எல்லாம் ஹிட்டுண்ணே

@ஆதி, இது அவரு ஸ்டைல். எல்லோருக்கும் பிடிச்சா நமக்கு பிடிக்காது. ஆமா, ஸ்ரேயா கூட சப்பை ஃபிகர்தானே சகா?

@பாபு, நயாக்ரா ஃபால்ஸ் என்று நான் சொன்னது false. கொஞ்சம் பட்ஜெட் அதிகம்ன்னு காட்டறதுக்காக அப்படி சொன்னேன் :))

@கார்ல்ஸ்பெர்க், கவலை வேண்டாம். ரஜினி,கமலுக்கு அடுத்தபடி ஓவர்சீஸ் மார்கெட் உள்ளவர் நம்மாளுதான்.

@கல்யாணி மேம், அதேதான்

@சுசி, ஏன் இந்த கொலைவெறி?

@ஸ்ரீமதி, அவர(கடவுள்) பார்க்கதான் ரெண்டு பேரும் போறோம் :))

Karthik on December 8, 2009 at 4:32 PM said...

செம காக்டெயில்பா இது! :) :)

Karthik on December 8, 2009 at 4:35 PM said...

அன்புடன்-மணிகண்டன் said...
// டிரெயிலரில் இதுவரை பார்க்காதவர்கள் வீட்டில் டிவி இல்லை எனலாம் //
பார்த்தவங்க வீட்லயும் டிவி இல்லையாம் கார்க்கி... தூக்கி போட்டு உடைச்சிட்டாங்கலாம்...

எம்.எம்.அப்துல்லா said...
//அதே ஒப்பனிங் சாங், அதே மொக்கை காமெடி, அதே லவ் டிராக், அதே குத்துப்பாட்டு, அதே பன்ச் வசனம், அதே க்ளைமேக்ஸ் என்றுதான் தெரிகிறது //
ஓ....அப்ப அதே மாதிரியே ஃபிளாப்புன்னு சிம்பாலிக்கா சொல்ல வர்ற??

ROFL...:D :D

KATHIR = RAY on December 8, 2009 at 6:14 PM said...

VAnthu paarunga Vaalthu sollunga
http://kannivirgin.blogspot.com/2008/09/blog-post.html

Mr.vettiபைய்யன் on December 8, 2009 at 7:00 PM said...

வணக்கம் கார்க்கி

all the best to Vettaikaran

//“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”//

super

வித்யா on December 8, 2009 at 7:22 PM said...

\\சின்ன அம்மிணி on December 8, 2009 3:49 AM said...
//அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா.//

கார்க்கி, விதி(விதீ) ன்னு ஒரு பேர் கூட பொருத்தமாதான் இருக்கும். ஆனா நான் சொன்னேன்னு சொல்லீடாதீங்க :) \\

:))))

angelintotheheaven on December 8, 2009 at 7:24 PM said...

firsteh heroin photo iruke ana onume varalayenu ninaichen fullah read pana apram than theryuthu en nu

தமிழ்ப்பறவை on December 8, 2009 at 9:57 PM said...

after a long time....
கலக்கல் காக்டெய்ல்... எல்லா மேட்டரும் ரசித்தேன்...
:-)

RaGhaV on December 8, 2009 at 10:31 PM said...

காக்டெயில் நல்லா கலக்கியிருக்கீங்க கார்க்கி.. :-)))

S on December 8, 2009 at 10:42 PM said...

விபா. விமல்-பாலசரஸ்வதிக்கும் பொருந்துமய்யா. தளபதி தொடர்ந்து பார்த்திததா இப்படித்தான் ஆயிடும்.

கலக்கல் சூப்பர்.

S on December 8, 2009 at 10:44 PM said...

விபா. விமல்-பாலசரஸ்வதிக்கும் பொருந்துமய்யா. தளபதி படத்தை தொடர்ந்து பார்த்தா இப்படித்தான் ஆயிடும்.

கலக்கல் சூப்பர்.

கும்க்கி on December 8, 2009 at 11:17 PM said...

அய்ய்..ட்ராப்ஸா...

சொன்னியா”டா”
அது சரி,
விபா வுக்கு பதில் விசா”


நயாக்ரா நீர்விழ்ச்சியில் தளபதி குளிக்கும் சீனை...
எப்படியோ......சரி.

சிறிது தூரம் சென்ற பப்லு, அங்கிருந்த எட்டு பேருக்கும் கேட்கும் படி கத்தினான் “சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”

கொடும...சின்ன பையனுக்கு தெரிஞ்சதுகூட.....

டம்பி மேவீ on December 8, 2009 at 11:31 PM said...

pavam karthik.... avarodu thane antha cinemavukku poga poringa????

அத்திரி on December 9, 2009 at 7:30 PM said...

சகா எனக்கொரு டிக்கெட்

damildumil on December 11, 2009 at 4:21 PM said...

//மூன்று மணி நேரம் ஜாலியாக ரசிக்க நினைப்பவர்கள் என்னுடன் வரலாம். 18ஆம் தேதி காலை ஷோ.உதயம். நானும் இன்னொரு கல்லூரி பதிவரும் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். விரும்புவர்கள் உடனே சொல்லுங்கள்.விஜயின் மாஸை பார்க்கலாம்.//

இப்படி சொல்லி தானே குருவி,அதம,வில்லு படத்துக்கெல்லாம் எல்லாரையும் கூட்டிட்டு போயிருப்பீங்க.

Indian on December 14, 2009 at 8:41 AM said...

//உங்களுக்கு தலைவலி வராமல் இருக்க, தயவு செய்து வேட்டைக்காரனை பார்த்து விடாதீர்கள்//

Trailers suggest the movie's saving grace to be Anushka Shetty. She rock in the promos!

 

all rights reserved to www.karkibava.com