Dec 6, 2009

பையா – ஹைய்ய்ய்யா


 

paiya-stills-011   

      பையா. இது கார்த்தியின் இரண்டாவது படமா மூன்றாவது படமா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் கலர் கலர் காஸ்ட்யூமில்  அவர் ஆடுவதை சன் மியூசிக்கில் நாம் பார்க்கப் போகும்  முதல் படமென்பது மட்டும் உண்மை. I strongly believe that karthi would have better dressing sense than any other in his league.

   மொத்தம் ஐந்து பாடல்கள். பொதுவாக லிங்குசாமியின் படத்தில் மெலடிக்கு முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கும்.

ஆனந்தம் - பல்லாங்குழியின், என்ன இதுவோ

ரன் - பொய் சொல்ல, மின்சாரம் என் மீது, பனிக்காற்றே

சண்டக்கோழி - தாவணி போட்ட தீபாவளி

பீமா – முதல் மழை, ரகசிய கனவுகள், எனதுயிரே.

இதிலும் அப்படித்தான் என்று சொல்லலாம். மேலே சொன்ன பட்டியலில் ஒரு படம் குறைவதைக் கண்டுபிடித்தவர்கள் நிச்சயம் அசல் சினிமா ரசிகர்கள் :))

1) துளி துளி (ஹரிச்சரன், தன்வி)

  Wow!! what a start ? ஆரம்பமே கிடார்தான். இந்த பிட்டை ரிங்டோனாக ஆக்கியிருக்கிறேன். கேட்பவர்கள் எல்லாம் முதல் முறை கேட்டவுடனே என்ன படம் என்கிறார்கள். மென்மெல்லிய மெலடி என்று சொல்லலாம். வழக்கம் போல அதே வேண்டுதல்தான். யுவனின் சின்ன சின்ன அதிசயத்தை ரசிக்க ஹெட்ஃபோனில் கேளுங்கள். Interlude.பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையிலோ, சரணத்துக்கும் அனுபல்லவிக்கும் இடையே வரும் பி.ஜி.எம்மைத்தான் interlude என்பார்கள். இதில் இரண்டாவது interlude கவனியுங்கள். ரிதமே இல்லாமல் வருகிறது. இதற்கு முன் இப்படி வந்ததாக எனக்கு நினைவில்லை. எம்மகனில் ஒரு பாட்டு முழுவதுமே இயற்கை சத்தத்தை வைத்தே அமைத்திருந்தார் வித்யாசாகர். ஆனால் கேட்கத்தான் முடியவில்லை. இதில் நன்றாக வந்திருக்கிறது. ஹரிச்சரனின் குரலிலும், பாடுவதிலும் நல்ல முன்னேற்றம். டெடிகேஷன்களுக்கு இன்னொரு ”முதன் முறை” என்று சொல்லலாம். யுவன் ராக்ஸஸ்ஸ்ஸ

2) பூங்காற்றே (பென்னி தயாள்)

பாடியவர் பென்னி தயாள் என்னும்போதே எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. காதலியை கண்டுபிடித்த காதலன் பாடும் பாடல். இந்த மெட்டை எளிதில் ரீச் ஆகும்படி கம்போஸ் செய்திருக்கலாம். யுவன் ஏதோ முயற்சி செய்திருக்கிறார். அதனால் பல்லவியை தவிர்த்து எதுவும் உடனே கவரவில்லை. ஆனால் தொடர்கவனிப்பில் மனதை மயக்குகிறது. இருந்தும் ஏதோ குறைகிறது. Bass guitarன் ஆதிக்கம் அதிகம். இந்த ஒரு கருவியை போதுமடா சாமி என்பது போல் ஆக்கிய பெருமை பரத்வாஜையே சாரும். எதற்கெடுத்தாலும் பேஸ் கிட்டாரைத்தான் நோண்டுவார்  மனுஷன்.

3) என் காதல் சொல்ல (யுவன்)

அதே அதே. போகாதே, பொய் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி என்று யுவன் தனக்கென ஒரு டிராக்  வைத்திருப்பார். சென்ற முறை சர்வத்தில் சொதப்பியவர் கவனமாக இந்த முறை சிக்சர் அடித்திருக்கிறார்.வழக்கமாக காதல் தோல்வியடைந்த பின்தான் யுவன் வருவார். இந்த முறை ஹீரோவுக்கு காதல் வந்தவுடனே யுவனை அழைத்துவிட்டார்கள். அப்படியே உங்களுக்கும் ஒரு துணையை புடிச்சுக்கோங்க பாஸ்.    ஆங்காங்கே ”பொய் சொல்ல” பாடல் நினைவுக்கு வருவதற்கு மெட்டு காரணமல்ல. யுவனின் குரல்தான் காரணம்.

காதல் வந்தாலே கண்ணோடுதான்

கள்ளத்தனம் வந்து குடியேறுமோ

முத்துக்குமார். நீங்க ஆடுங்க தல.

4) அடடா மழைடா (ராகுல் நம்பியார், சைந்தவி)

தமிழ் சினிமா இலக்கணப்படி க்ளைமேக்ஸுக்கு முன்பாக வரும் பாடல். குத்துப்பாட்டு என்று ஒதுக்கிவிட முடியாது. ரசனையாகவே வந்திருக்கு. மெட்டுக்கும், படத்தின் மூடுக்கும் ஏற்றப்படி வார்த்தைகளை அமைப்பதில் முத்துக்குமாரை மிஞ்ச முடியாது. வல்லினத்தில் வித்தைக் காட்டுகிறார். ராகுல் நம்பியாரை கேட்டு எத்தனை நாளாகி விட்டது? சைந்தவியும் ராகுலும் சரியான தேர்வு என்று சொல்ல வைக்கிறார்கள். யப்பா கார்த்தி.. ஆடுவிங்க இல்ல?

5) சுத்துதே சுத்துதே (கார்த்திக்,சுனிதா சாரதி)

பொதுவாக தமிழ் சினிமா பாடல்களில் பல்லவி நன்றாகயிருக்கும்.(அவங்க இல்ல சாமியோவ்) போகப்போக கடுப்படிப்பார்கள். இந்தப் பாடலில் பல்லவியைக் கேட்டு நெக்ஸ்ட் பட்டனை தட்டிவிட்டேன். கடைசியாக கேட்கும் போது ஈர்த்தது. கார்த்திக்குன் குரல் பெரிய பலம். டூயட்தான். இருந்தாலும் இதற்கு நடனம் அமைப்பது சற்றி சிரமம் போல் தெரிகிறது. பார்ப்போம்.

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், சிவா மனசுல சக்தியென்று அட்டகாசமாக 2009ஐ துவக்கினாலும் இடையில் சர்வம், முத்திரை, வாமனன் என்று சறுக்கல்தான் யுவனுக்கு. யோகி நன்றாக இருந்தும் ஹிட்லிஸ்ட்டில் சேரவில்லை.இதோ பையா மூலமாக i am back என்கிறார். துளியும் துளியும், என் காதல் சொல்லவும் இனிவரும் கான்செர்ட்களில் நிச்சயம் இடம் பெறும்.யுவன், முத்துக்குமார் ஜோடியென்றால் பெரிய எதிர்பார்ப்பிருக்கும். ஆனால் பாடல்கள் படத்தோடு ஒன்றாமலே வருவதால் பகீரத பிரயத்தனமில்லாமல் ஜஸ்ட் லைக் தட் எழுதி இருக்கிறார். ஆனாலும் ஹிட்தான்.

Verdict : ஒரிஜினல் சிடி வாங்கலாம்.

பி.கு : பாலு ரசிகர்கள் இந்தப் பாடலை நிச்சயம் இந்நேரம் கேட்டிருப்பீர்கள். நாணயம் என்ற படத்தில், ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ஒரு மெலடி, ”நான் போகிறேன்”. உடன் பாடியிருப்பவர் சித்ரா. கிளாசிக்.

41 கருத்துக்குத்து:

தர்ஷன் on December 6, 2009 at 10:55 PM said...

//மேலே சொன்ன பட்டியலில் ஒரு படம் குறைவதைக் கண்டுபிடித்தவர்கள் நிச்சயம் அசல் சினிமா ரசிகர்கள்//

ஏன் சகா " டிங் டாங் கோயில் மணி " யை சொன்னால் குறைந்தா போய் விடுவீர்கள்.
நான் ஒன்றும் அசல் சினமா ரசிகனல்ல. அசல் மட்டுமில்லை வேட்டைகாரனைப் பார்த்தாலும் காத தூரம் ஓடவே எண்ணம்.

தர்ஷன் on December 6, 2009 at 11:01 PM said...

//போகாதே, பொய் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி என்று யுவன் தனக்கென ஒரு டிராக் வைத்திருப்பார்.//

அழகாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது படத்தில் வரும் கனவே கலைகிறதே இந்த வகையறாதானே
முத்திரை,வாமணன் ஓகே ஏன் சகா சர்வம் ஹிட்தானே(இசை)

தாரணி பிரியா on December 6, 2009 at 11:21 PM said...

நான் அசல் சினிமா ரசிகைதான் கார்க்கி கண்டுபிடிச்சுட்டேனே :)

//ஒரிஜினல் சிடி வாங்கலாம்//

ஒரிஜனல் சிடி நம்ம காசுல வாங்கலாமா அதை சொல்லுங்க :)

கார்த்திக்கு இந்த படமாவது சீக்கிரம் ரிலீஸ் ஆகட்டும்

சர்வம் எனக்கு முதல்ல கொஞ்சம் கூட பிடிக்கலை. ஆனா இப்போ கேட்கும்போது ஏனோ ரொம்ப பிடிக்குது. சுட்ட சூரியனேதான் இப்போ கூட கேட்டுக்கிட்டு இருக்கேன் :)

தமிழ்ப்பறவை on December 7, 2009 at 12:44 AM said...

நானும் இதுக்கு இசைவிமர்சனம் போட நினைச்சேன். சோம்பல்ல விட்டுட்டேன்...(இன்னொரு விஷயம் நான் சிலாகித்து எழுதிய பாடல்களைக் கொண்ட படங்கள் எதுவும் நன்றாக ஓடவில்லை. பையா வாவது பிழைச்சுப் போகட்டும்னு விட்டுட்டேன்..:-) )
நல்லவேளை நீங்க கலக்கிட்டீங்க...
சேம் ஃபீலிங்தான்..
‘பூங்காற்றே’ அவ்வளவாக் கவரலை. கிட்டார் கொஞ்சம் ஓவர்தான்.
‘சுத்துதே பூமி/. பல்லவி வெகுவெகு சுமார்..ஆனா ‘ரா..ரா.ரா..ராதே’ ந்னு ஆரம்பிக்கிறதுல இருந்து பாட்டு சூடு ப்டிச்சிடுது. கார்த்திக் அதகளம் பண்ணி இருக்கார்.
‘துளிதுளி’ பிடிச்சது. ‘அடடா மழடா’ ரொம்ப பிடிச்சது.’ தாவணி போட்ட தீபாவளி’ தோன்றி மறைந்தது.

இன்னொரு விசயம் எந்தப் பாடலுமே டூயட் இல்லை. காதல் அரும்பும்,காதல் விரும்பும் ஒரு இளைஞனின் ரசனையான புலம்பல்களாகவே அமைந்துள்ளது பாடல்கள். முத்துக்குமாரின் வரிகள் தனியாக இல்லாமல் யுவன் ஆர்கெஸ்ட்ரைசேசனில் ஒரு வாத்தியமாகவே மாறி இருக்கிறது.

‘என் காதல் சொல்ல’- நானென்ன சொல்ல... ஐ லைக் யுவன்.கலக்கல்தான். பாடலை நான் ரசிக்க ஆரம்பித்த வரிகளைத்தான் நீஙக்ளும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அப்பாவுக்கு -’பா’
பையனுக்கு- ‘பையா’
சோத்துல ரசம் ஊத்திச் சாப்பிடாம இசை ஊத்திச் சாப்பிடுவாங்க போல... :-)

தமிழ்ப்பறவை on December 7, 2009 at 12:44 AM said...

//
இன்னொரு விசயம் எந்தப் பாடலுமே டூயட் இல்லை. காதல் அரும்பும்,காதல் விரும்பும் ஒரு இளைஞனின் ரசனையான புலம்பல்களாகவே அமைந்துள்ளது பாடல்கள்.//
ஒரு திரைப்படப்பாடல்கள் போல இல்லாமல் தனி ஆல்பம் போல் இருக்கிறது...

சுசி on December 7, 2009 at 2:56 AM said...

//அசல் சினிமா ரசிகர்கள்//

:))))

நான் இன்னும் கேக்கல..

வழக்கம்போல நல்லா எழுதி இருக்கீங்க.

முகிலன் on December 7, 2009 at 5:02 AM said...

//மேலே சொன்ன பட்டியலில் ஒரு படம் குறைவதைக் கண்டுபிடித்தவர்கள் நிச்சயம் அசல் சினிமா ரசிகர்கள்//

These lines prove that you are an average Vijay Fan.

By the way your review gives me a good feeling about this movie's songs. I am eager to listen.

Anonymous said...

கார்த்திக்கு இந்த சினிமாவாச்சும் ரிலீஸ் ஆகட்டும். :)

கார்க்கி on December 7, 2009 at 8:33 AM said...

@தர்ஷன்,
சகா, அதையும் ஒரு படமா போடுவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக அப்படி போட்டேன். யுவனின் அந்த லிஸ்ட்டில் ஏகப்பட்ட பாடல்கள் உண்டு.என் ஃபேவரிட் சரத்குமார் படத்தில் வரும் “ஓ மனே மனே மானே”

@தா.பி,
நீங்க யார் ரசிகையா இருந்தாலும் 18ஆம் தேதி போய்தான் ஆகனும். விடமாட்டானே எங்க ஆளு :)). சர்வம் கேட்கலாம். ஆனால் நிச்சயம் ஹிட் ரகமில்லை

@தமிழ்ப்பறவை,
சகா, இந்த பின்னூட்டத்தையே பதிவா போட்டிருக்கலாம் :)).. நான் சொல்ல நினைத்து மறந்தது, ஐந்து இளம் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். நல்ல விஷயம். நல்ல போட்டி. ரசம் மேட்டர். சூப்பர் சகா. தனி ஆலபம் போல இருக்கிறதென்பதைத்தான் நான்

”ஆனால் பாடல்கள் படத்தோடு ஒன்றாமலே வருவதால் பகீரத பிரயத்தனமில்லாமல் ஜஸ்ட் லைக் தட் எழுதி இருக்கிறார்.”

இப்படி சொல்லியிருக்கிறேன்

@சுசி,
நன்றி

@முகிலன்,
அது ஒரு சுவாரஸ்யத்திற்காக எழுதியது சகா. சொல்லக்கூடாது என்றால் எழுதாமலே விட்டுருப்பேன். நிச்சயம் எல்லோருக்கும் அந்த படம் நினைவில் வந்திருக்காது. இதன் மூலம் தான் நான் விஜய் ரசிகன் என்று நீங்க தெரிந்து கொண்டீர்கள் என்றால் தாங்கள் அடிக்கடி என்னைப் படிப்பதில்லை என்று தெரிகிறது. நன்றி

@அம்மிணி,

படம் ரெடி. 1000ல் ஒருவன் வழிவிட்டால் பொங்கலுக்கு ரிலீஸ். இல்லையென்றாலும் ஃபிப்ரவரியில் நிச்சயம் ரிலீஸ்

பூங்குன்றன்.வே on December 7, 2009 at 8:42 AM said...

//ஒரிஜினல் சிடி வாங்கலாம்.//

நச்..

//ஆனந்தம் - பல்லாங்குழியின்//

மை பெஸ்ட் பேவரட்.

Verdict :நல்ல இசை விமர்சனம் தல.உங்கள் ரசனை புரியுது .

தியாவின் பேனா on December 7, 2009 at 8:48 AM said...

வழக்கம்போல நல்லா எழுதி இருக்கீங்க.

♠ ராஜு ♠ on December 7, 2009 at 9:43 AM said...

தல, நா.மு. அடிச்சு ஆடுறாருல்ல..!

யோ வொய்ஸ் (யோகா) on December 7, 2009 at 10:02 AM said...

பட விமர்சனத்துக்கு தல கேபிள் என்றால், பாட்டு விமர்சனத்திற்கு நம்ம சகாதான்...

உங்க விமர்சனம் கேட்டு இன்னைக்கு நைட் பையா கேட்க தயாராகிட்டேன் சகா

Anbu on December 7, 2009 at 10:11 AM said...

நா.முத்துக்குமார்...யுவன் ராக்கிங் அண்ணா...

என் காதல் சொல்ல நேரமில்லை...
உன் காதல் சொல்ல தேவையில்லை..
நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
உண்மை மறைத்தாலும் மறையாதடி..

Anbu on December 7, 2009 at 10:12 AM said...

படத்தில் எல்லா பாட்டும் நா.முத்துக்குமார் எழுதியதா அண்ணா..

Anbu on December 7, 2009 at 10:14 AM said...

ஆயிரத்தி ஒருவன் பொங்கலுக்கு ரிலிஸ் அண்ணா..

கார்க்கி on December 7, 2009 at 10:19 AM said...

நன்றி பூங்குன்றன்

நன்றி தியா

ராஜூ, அவர் மேல மேல போயிட்டே இருக்காரு

யோ, கேட்டுட்டு சொல்லுங்க சகா

அன்பு, எல்லாப் பாட்டும் முத்துக்குமார்தான். 1000ல் ஒருவன் பொங்கல் என்கிறார்கள். ஆனால் இன்னும் 100% வேலை முடியவில்லையாம்.

நர்சிம் on December 7, 2009 at 10:29 AM said...

பகிர்விற்கு நன்றி சகா.. கேட்கணும்.

பின்னோக்கி on December 7, 2009 at 11:00 AM said...

சரிங்க ஒரிஜினல் சி.டி வாங்கி கேட்கிறேன். அப்புறம் நாணயம் பட ஒரிஜினல் சி.டி வாங்க வேண்டாம்னு சொல்றீங்களா ?.

ஜீ படத்த பத்தி சொல்லாம பெரிய தவறு பண்ணிட்டீங்க. 18 ஆம் தேதி இதன் விளைவுகள் தெரியும் :)

ஸ்ரீமதி on December 7, 2009 at 11:00 AM said...

ஹ்ம்ம் :))

ஆதிமூலகிருஷ்ணன் on December 7, 2009 at 11:14 AM said...

சர்வம், வாமனன் (ரெண்டும் படமும் மொக்கை) ரெண்டிலயும் தலா ஒரு பாட்டு எப்ப டிவில போட்டாலும் வாயத்தொற்றந்து வச்சிக்கிட்டு பார்ப்பேனே.. பாட்டுதான் உடனே ஞாபகம் வரமாட்டேங்குது.

நீ என்னாடான்னா சறுக்கல்ன்றேயே.?

கல்யாணி சுரேஷ் on December 7, 2009 at 11:42 AM said...

பாட்டு கேட்டுட்டு சொல்றேன் கார்க்கி.

குசும்பன் on December 7, 2009 at 11:43 AM said...

I strongly believe that karthi would have better dressing sense than any other in his league. //

யுவர் ஒபிடியண்டிலி
குசும்பன்

அன்புடன்-மணிகண்டன் on December 7, 2009 at 11:43 AM said...

நீங்க சொன்னதும் தான் பாடல்கள் கேட்டேன் கார்க்கி...
ஒருமுறை கேட்கலாம் டைப் தான்... மற்றபடி ஹிட் ஆகும் ரேஞ்சு எல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன்..

நீங்கள் சொன்ன BGM பிட் எனக்கென்னவோ ஷாஜகானின் "மின்னலைப் பிடித்து" பாடலை நினைவூட்டுகிறது..

வரவர... யுவன், ஒருபடத்துக்கு ஒரு பாட்டு ஹிட் கொடுத்தா போதும்னு நினைக்கிறார் போல...

Btw... Good Post!!!

கார்த்திகைப் பாண்டியன் on December 7, 2009 at 12:10 PM said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
சர்வம், வாமனன் (ரெண்டும் படமும் மொக்கை) ரெண்டிலயும் தலா ஒரு பாட்டு எப்ப டிவில போட்டாலும் வாயத்தொற்றந்து வச்சிக்கிட்டு பார்ப்பேனே.. பாட்டுதான் உடனே ஞாபகம் வரமாட்டேங்குது.//


சர்வத்தில் "சில இரவுகள்", "நடுக்காட்டில்" ,

வாமனனில் "ஏதோ செய்கிறாய்", "ஒரு தேவதை"

:-))))

Anonymous said...

என‌க்கு சினிமா அறிவு ரொம்ப‌ க‌ம்மி தான். பாட்டு எல்லாம் ந‌ல்லா இருக்குமா?

அனுஜன்யா on December 7, 2009 at 1:49 PM said...

என்னோட வெர்டிக்ட் : கார்க்கி ஒரு சி.டி. வாங்கி எனக்கு அனுப்பு.

'டிங் டாங்' என்ன சாங்? அதப் போயி உங்க குழாயடிச் சண்டையில் விடலாமா? (சரி சரி 'ஒரு சுவாரஸ்யத்துக்காக' என்று ஆரம்பிக்காதே)

அனுஜன்யா

கார்க்கி on December 7, 2009 at 2:29 PM said...

நன்றி நர்சிம்

நன்றி பின்னோக்கி. நாணயம் படத்தோட டவுன்லோடு லிங்க் நான் கொடுக்கலையே.கேட்டுட்டு பிடிச்சா சிடி வாங்குங்க ஆன்லைன பாட்டு கேட்பது சட்டப்படி செல்லுமாம். ராகா.காம் ஆட்கள் சொன்னது.

என்ன கவிதாயினி?

ஆதி, ஒரே ஒரு பாட்டுதான். அதுவும் எனக்கு என்னவோ ரொம்ப பிடிக்கல.ஆனா மியுசிக்கலி அது யுவனுக்கு சறுக்கல்தான். ஆடியோ சேல்ஸும் சரி, ரீச்சும் சரி.

கேட்டுட்டே சொல்லுங்க கல்யாணி மேடம்

டோண்ட் வொரி. ஹேப்பி குசும்பன்

மணிகண்டன். கண்டிப்பா நாலு பாட்டு ஹிட் ஆகும் தலைவரே. வெய்ட் பண்ணி பாருங்க

கா.பா, நாலு பாட்டுமே பாதிக்கு மேல போரடிக்கல?

மஹா, எனக்கு அறிவே கம்மிதாங்க

@அனுஜன்யா,
தல.. நல்லப் பாட்டுதான். என்ன கும்பகோண தெருவையும், கோவில் ஃபேனையும் காட்டு காட்டி கடுப்படிச்சிட்டாங்க.

//'டிங் டாங்' என்ன சாங்?//

என்ன சாங்க்ன்னு உங்களுக்கே தெரியல பாருங்க

// உங்க குழாயடிச் சண்டையில் விடலாமா//

ஹலோ... இது சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கான சண்டைங்கண்ணா :))

ரசிக்கும் சீமாட்டி on December 7, 2009 at 2:33 PM said...

//நீங்க சொன்னதும் தான் பாடல்கள் கேட்டேன் கார்க்கி...
ஒருமுறை கேட்கலாம் டைப் தான்... மற்றபடி ஹிட் ஆகும் ரேஞ்சு எல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன்..//

ஐ ரிப்பீட்டு...

கேக்க கேக்க பிடிக்குமோ ??!!!

வித்யா on December 7, 2009 at 3:04 PM said...

அடடா மழைடா சாங் ஒகே. மற்றவை டிபிக்கல் யுவன். ஒரே மாதிரியாய்.

ரசிக்கும் சீமாட்டி on December 7, 2009 at 3:09 PM said...

சகா நாணயம் பாட்டு கேக்க ரொம்ப இதமா இருக்கு...
எதோ பழைய spb சித்ரா காம்பினேஷன் கேட்ட மாதிரி.....!!!!!

ரஞ்சனி on December 7, 2009 at 4:40 PM said...

சகா, மியுசிக் விஷயத்துல நீங்க சொல்றது கரெக்டா நடக்கும்ன்னு நினைக்கிறேன். வேட்டைக்காரன், கந்தசாமி, ஆதவனெல்லாம் ஹிட்டாகுமா நினைச்சேன். இதுவரைக்கும் நீங்க எழுதிய எல்லா இசை விமர்சனமும் மக்கள் டேஸ்ட்டோடு ஒத்து போயிருக்கு. இதுவும் அப்படி ஆகும்ன்னு நினைக்கிறேன். ஆனா எனக்கு அவ்வளவா பிடிக்கல :))

ஜெனோவா on December 7, 2009 at 5:07 PM said...

நைட்டு போய் கேட்கிறேன் சகா , அருமையான இசை விமர்சனத்திற்கு நன்றி !

அன்புடன் அருணா on December 7, 2009 at 6:09 PM said...

ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்!

biskothupayal on December 7, 2009 at 6:59 PM said...

சுத்துதே சாங் சண்ட கோழி படத்தில் வரும் கேட்டா கொடுக்ற புமி இது சாங் கொஞ்சம் ஸ்லோவா பாட வைச்சா எப்படியோ அந்த மாதிரி இருக்குமோ
உங்களுக்கு எப்டி தோணுது தல

அறிவிலி on December 7, 2009 at 8:00 PM said...

நல்ல அறிமுகம். நன்றி.

அறிவிலி on December 7, 2009 at 8:00 PM said...

நல்ல அறிமுகம். நன்றி.

Karthik on December 7, 2009 at 9:31 PM said...

//மேலே சொன்ன பட்டியலில் ஒரு படம் குறைவதைக் கண்டுபிடித்தவர்கள் நிச்சயம் அசல் சினிமா ரசிகர்கள் :))

முடியல. குமுதத்தில் தல பேட்டியை படிச்சிருக்க மாட்டீங்க. படிக்கவும் சொல்ல மாட்டேன்.

Karthik on December 7, 2009 at 9:32 PM said...

மத்தபடி பதிவு அருமை. நீங்க அடிக்கடி இசை விமர்சனம் எழுதினா நல்லா இருக்கும். :))

முகிலன் on December 8, 2009 at 10:57 AM said...

பாஸூ நீங்க விஜய் ரசிகன் அப்படிங்கறது எனக்கு ரொம்ப நாளாவே தெரியும். பரிசல் உங்களப் பத்தி எழுதுன கார்க்கி-25 ல இருந்து விஜய அவரோட டான்ஸுக்காகப் பிடிக்கும்னும் தெரியும். ஆனா தளபதிக்காக தலய வெறுக்குற சராசரி விஜய் ரசிகனாயிட்டிங்களோன்னு பயந்துட்டேன்

அறிவு GV on December 8, 2009 at 2:00 PM said...

There is nothing differnet in these songs. Usual Yuvan Songs. I expect more from Yuvan :(
Sad Solo melody - Yuvan please stop singing for this and try a peppy one!!

 

all rights reserved to www.karkibava.com