Dec 3, 2009

பிரமாதம் பிரணவ்


 

   அந்த சிறுவனுக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம். தூர்தர்ஷனில் வந்த மகாபாரத போரை, போரடித்தாலும் பார்த்துக் கொண்டிருப்பான். என்னப்பா இது? ”அம்புல இருந்து நெருப்பு வருது. தண்ணி வருது. ஒரு அம்பு விட்டா நூறா மாறுது.பல மைல் தூரம் போய் அடிக்குது. கேட்டா வரம் வாங்கியிருக்கிறான்னு சொல்றாங்க. கேனத்தனமா இருக்கே” என்றான் தன் தந்தையிடம். அவர் படித்துக் கொண்டிருந்த ஹிந்துவை மூடி வைத்துவிட்டு இவனோட வந்தமர்ந்தார்.

தம்பி, புராணம் இதிகாசம் எல்லாம் உண்மை கிடையாது. ஆனா அதுல சொன்ன கதைகளும், இது மாதிரியான பொருட்களும் சொல்லும் விஷயம்தான் முக்கியம். அதை மட்டும் நாம் எடுத்துக்கிட்டு போயிடனும்.

புரியலையேப்பா

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல ஒரு கதவு இருக்கும் இல்ல.

ஆமா. அண்டா..

அதேதான். அது என்ன மந்திரத்திலா திறக்குது?

இல்ல. அந்த மந்திரம் கேட்ட உடனே உள்ள இருந்து சில பேரு சுத்துவாங்க. திறக்கும்.

அதேதான் கண்ணு. இந்த போருல காட்டுற எல்லாமே சாத்தியம்தான். ஆனா அது எப்படி சாத்தியம்ன்றத கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். இந்த உலகத்துல ஒரு விஷயம் எப்படி நடக்குதுன்னு தெரியற வரைக்கும் அது கடவுள் வேலை. அந்த லாஜிக்க கண்டுபுடிச்சிட்டா அறிவியல். உனக்கு இன்னும் கொஞ்ச வயசு ஆச்சுன்னா நீயே யோசிப்ப.

அந்த உரையாடல் அந்த அளவில் முடிவுற்றது. மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த சிறுவன் யோசிக்கத் தொடங்கினான். இன்றைய பிரபலமான கண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்குமே proto டைப்பாக நம் முன்னோர்கள் கதைகளில் சொல்லியிருப்பதை உணர்ந்தான். ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் செய்த வேலைகளைத்தான் பிரம்மாஸ்திரங்கள் செய்தன. சற்று கூர்ந்து கவனித்தால் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் இப்படி ஒரு ஆதர்சம் இருக்கும்.அந்தப் பையன் யாருன்னு கேட்கறீங்களா? இன்னும் தெரியலைன்னா நீங்க விசுவின் அரங்கங்களை பார்த்ததில்லைன்னு அர்த்தம்.

  ரைட்டு விடுங்க. இதெல்லாம் எதுக்குடான்னு யோசிக்கிறீங்களா? நம்மில் பலருக்கு ஏற்கனவே பரிச்சயமாகிவிட்டிருப்பார் இந்த இளைஞர். பிரணவ், ஆம் Pranav Mistry தான். உலகைமே திருப்பிப் பார்க்கும்படி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார் இந்த குஜராத்திய இளைஞர். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிரணவின் பெயரை விரைவில் உச்சரிக்காத மீடியாக்களே இல்லை எனும் நிலை வரப்போகிறது. இந்தியாவின் பில்கேட்ஸ் என்றெல்லாம் இவரை மீடியாக்கள் கொச்சைப்படுத்தக்கூடும். (அது அவர்களைப் பொறுத்தவரை பாராட்டு). அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்கறீர்களா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

    பட்டணத்தில் பூதம் என்று திரைப்படம். அதில் பூதத்தின் உதவியோடு பல அதிசயங்களை நடத்துவார்கள் இரண்டு நாயPranavMistry2கர்கள்.  நாளிதழ் விளம்பரத்தில் இருந்த சிவாஜி திடிரென “பாட்டும் நானே பாவமும் நானே” என்று பாடத் தொடங்குவார். அடுத்தப் பக்கத்தில் இருந்த கார், நகரத் தொடங்கும்.எல்லாமே பூதத்தின் வேலைதான். அந்த பூதத்தைத்தான் கண்டுபிடித்திருக்கிறார் பிரணவ். அவர் கண்டுபிடித்த பூதத்தை நம் உடலில் வைத்துக் கொண்டால் வெள்ளத்தாளில் வீடியோகேம் ஆடலாம். நம்ம ஊரு இயக்குனர்கள் இரண்டு கைகளை ‘ட’ வடிவத்தில் வைத்து பார்ப்பார்களே,அப்படி புகைப்படம் எடுக்கலாம். எடுத்தப் புகைப்படத்தை கைகளாலே வெட்டி குறுக்கலாம். அல்லது பெரிதாக்கலாம். இதைப் பாருங்கள்.

   இவர் கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம் டிஜிட்டல் உலகையும் நம் வாழும் நிஜ உலகையும் இணைப்பது. நம் உடலில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறு கருவிகளின் வாயிலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நினைத்த நேரத்தில் பயன்படுத்த  செய்வதுதான் பிரணவின் கண்டுபிடிப்பு. கேட்க எளிமையாக தெரிந்தாலும் இதன் பயன்கள் சொல்லி முடியாது. இதற்கு அவர் வைத்திருக்கும் செல்லப்பெயர் Sixth Sense. அடுத்து இன்னொரு பதிவில் இது செயல்படும் முறையை பார்ப்போம்.அதெல்லாம் வீடியோவிலே பார்த்துட்டோம்ன்னு சொல்றீங்களா? பிரணவ் விவரித்ததை தமிழில் கிடைக்கச் செய்ய வேண்டும். கவிதை மட்டுமல்ல, இது போன்ற தொழில் நுட்பங்களும் தமிழில் கிடைக்க வேண்டுமென்பதே என் ஆசை.

sixthsense-pranav-mistry

   பிரணவைப் பற்றி நேரம் ஒதுக்கி எழுதுவதற்கு காரணம் சிக்ஸ்த் சென்ஸ் என்ற மேஜிக் மட்டும்  அல்ல. கோடிக்கணக்கான டாலர்களோடு இந்த தொழில்நுட்பத்தை வாங்க பல நிறுவனங்கள் வரிசையில் நிற்க, மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்பதற்காக இலவசமாக இந்த சேவையை தரப்போகிறேன் என்றாரே!!! அதற்காக. அந்த ஒரே காரணத்திற்காகத்தான் பிரணவை பாராட்ட வேண்டும்.  You are great young man.

34 கருத்துக்குத்து:

பிரியமுடன்...வசந்த் on December 3, 2009 at 11:14 PM said...

யப்பா..என்னவொரு சிந்தனைத்திறன்...

உண்மையிலே வரவேற்க்கத்தகுந்த ஒன்றுதான்...

ப்ராணவ் மனிதருக்கு பாராட்டுக்கள்

தமிழ்ப்பறவை on December 3, 2009 at 11:36 PM said...

பகிர்விற்கு மிக்க நன்றி சகா...
என்ன மனுசன் இவரு...??!!
பின்றாரு...
ப்ரணவுக்கு ஒரு கிரேட் சல்யூட்...

Mr.vettiபைய்யன் on December 4, 2009 at 12:50 AM said...

வணக்கம் கார்க்கி

I am Really Proud My child Name also pranava

Truth on December 4, 2009 at 2:02 AM said...

வாவ். ஓப்பன் சோர்சாக கொடுக்கும் பிரணவை பில் கேட்சுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக பிரணவை கேவலப்படுத்துவது போல் தான்.

பகிர்வுக்கு நன்றி கார்க்கி.

பட்டிக்காட்டான்.. on December 4, 2009 at 2:19 AM said...

நேற்றைக்குதான் நானும் படித்தேன் சகா..

பிரணவுக்கு வாழ்த்துகள்..

சின்ன அம்மிணி on December 4, 2009 at 3:59 AM said...

விகடன்ல இவரைப்பத்தி வந்திருந்தது. க்ரேட்.

Rajalakshmi Pakkirisamy on December 4, 2009 at 4:11 AM said...

good.. .yaarume itha pathi post podalayenu ninaichen...

Mahesh on December 4, 2009 at 5:30 AM said...

அருமையான பகிர்வு... நன்றி,

யோ வொய்ஸ் (யோகா) on December 4, 2009 at 9:04 AM said...

வாவ் என்ன அருமையான ஐடியா, வீடியோவை பார்த்த பின் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

டாங்ஸ் தல, மன்னிக்கவும் உங்களுக்கு தல சொன்ன பிடிக்காது இல்ல..

ஆகவே டாங்ஸ் சகா

Sangkavi on December 4, 2009 at 10:02 AM said...

வாவ்வ்...............

வீடியோ சூப்பர்...................

நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி.................

கல்யாணி சுரேஷ் on December 4, 2009 at 11:21 AM said...

வாழ்த்துகள் ப்ரணவுக்கு மட்டுமல்ல, ஒரு அருமையான விஷயத்தை பகிர்ந்து கொண்ட கார்க்கிக்கும்.

விக்னேஷ்வரி on December 4, 2009 at 11:31 AM said...

நல்ல பதிவு கார்க்கி.

நர்சிம் on December 4, 2009 at 11:32 AM said...

விகடனில் படித்தேன். பகிர்வு அருமை சகா.

சென்ஷி on December 4, 2009 at 12:09 PM said...

அருமையான கண்டுபிடிப்பு.. பகிர்விற்கு நன்றி கார்க்கி!

Asha on December 4, 2009 at 12:46 PM said...

நல்ல பதிவு கார்க்கி!
அதுவும் லேபிள் மிகவும் பொருத்தமாக இருக்கிறது!!

susi on December 4, 2009 at 2:06 PM said...

நல்ல பகிர்வு கார்க்கி.

//கவிதை மட்டுமல்ல, இது போன்ற தொழில் நுட்பங்களும் தமிழில் கிடைக்க வேண்டுமென்பதே என் ஆசை. //
:))))

தர்ஷன் on December 4, 2009 at 7:10 PM said...

நானும் இதைப் பார்த்தேன்
பகிர்வுக்கு நன்றி சகா

வித்யா on December 4, 2009 at 7:33 PM said...

இந்த வீடியோவை நானும் சில வாரங்களுக்கு முன் பார்த்தேன். Real break through in technology. பிரணவிற்கு அப்துல் கலாம் நிறைய சப்போர்ட் செய்ததாக கேள்விப்பட்டேன். நல்ல பகிர்வு.

Karthik on December 4, 2009 at 8:37 PM said...

:) :)

call me cynic, i didn't come to any conclusions yet!

Karthik on December 4, 2009 at 8:39 PM said...

but i'm really really happy that you wrote about this. superb post.

purushothaman on December 4, 2009 at 9:04 PM said...

all the best to mr.pranav. and you 2 karki. thank you so mach.
purushothaman from dubai

தாரணி பிரியா on December 4, 2009 at 11:41 PM said...

விகடனில் படித்தேன் நல்ல பதிவு கார்க்கி

பின்னோக்கி on December 5, 2009 at 1:55 PM said...

எனக்கு என்னவோ பிரணவ்வை விட அவரின் தந்தையை பாராட்டத் தோன்றுகிறது.

யுவகிருஷ்ணா on December 5, 2009 at 2:35 PM said...

குட் :-)

அத்திரி on December 5, 2009 at 3:40 PM said...

பகிர்விற்கு நன்றி சகா

நாஞ்சில் பிரதாப் on December 5, 2009 at 6:11 PM said...

அத்தனை வெள்ளைக்காரர்கள் முன் நம் நாட்டு இளைஞன் பேசிகைத்தட்டுவாங்குவது நமக்கெல்லாம் பெருமைதான்.

வெள்ளைக்காரனை மட்டும் திறமைசாலியாக, புத்திசாலியாகவும் பார்க்கும் மோகம் நம்நாட்டு மக்களிடையே போகவில்லை
என்பதுதான் கசப்பான உண்மை.

சின்னகுட்டி கூட இந்த வீடியோவ போட்டுருந்தாரு. பதிவுபோட்டதற்கு நன்றி கார்க்கி..

நாஞ்சில் பிரதாப் on December 5, 2009 at 6:12 PM said...

அத்தனை வெள்ளைக்காரர்கள் முன் நம் நாட்டு இளைஞன் பேசிகைத்தட்டுவாங்குவது நமக்கெல்லாம் பெருமைதான்.
வெள்ளைக்காரனை மட்டும் திறமைசாலியாக, புத்திசாலியாகவும் பார்க்கும் மோகம் நம்நாட்டு மக்களிடையே போகவில்லை என்பதுதான் கசப்பான உண்மை

சின்னகுட்டி கூட இந்த வீடியோவ போட்டுருந்தாரு. பதிவுபோட்டதற்கு நன்றி கார்க்கி.

tamiluthayam on December 5, 2009 at 10:30 PM said...

நிறைய விஷயங்களை வலைப்பூக்களின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல, தேவையான பதிவு

கமலேஷ் on December 6, 2009 at 3:09 PM said...

நல்ல பயனுள்ள தகவல் நன்றி...
தோழரே...

அன்புடன் அருணா on December 6, 2009 at 5:22 PM said...

பகிர்வுக்குப் பூங்கொத்து கார்க்கி!

அன்பரசன் on December 6, 2009 at 7:23 PM said...

அருமையான ஒரு தகவல்..

கார்க்கி on December 6, 2009 at 10:52 PM said...

அனைவருக்கும் நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் on December 6, 2009 at 11:12 PM said...

ஏற்கனவே படித்து, பார்த்து பிரமித்துவிட்டேன். ஒண்ணும் மேஜிக் வேலையில்லையே..

கொஞ்சம் டெக்னிகல் விஷயங்கள் புரியவில்லை. எளிமையாக ஆனால் டீடெய்லாக விளக்குவாய் என நம்புகிறேன்.

அற்புதம் நிகழ்த்தும் பிரணவ் முழுதும் ஜெயிக்க வாழ்த்துகள்.

sss on December 20, 2009 at 10:35 AM said...

he is not just a big innovator but a a great human.He wants his ideas to reach all people thats where he is outstanding..

 

all rights reserved to www.karkibava.com