Dec 2, 2009

அய்யனார் கம்மா- கமான் நர்சிம்


 

wrapper- ayyanar  

   கடிதங்கள் மறைந்து மின்னஞ்சல்கள் வந்தாயிற்று. எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியிலோ தொலைக்காட்சியிலோ பார்க்க தொடங்கியாயிற்று. இப்படியாக நாம் சாஃப்ட்காப்பிகளை நோக்கி நடை போட்டாலும்,  ஹார்ட்காப்பிகளை காணும்போது ஒரு வித சுகம் ஏற்படுவதை மறுக்கமுடியாது. அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நர்சிம்முக்கு முதலில் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம்.

   மதிராஜின் கைவண்ணத்தில் முகப்பு அட்டை அமர்க்களமாக வந்திருக்கிறது. உள்ளடக்கத்தின் தரத்தை மட்டும் நர்சிம் வசம் ஒப்படைத்துவிட்டு மற்ற வேலைகளை கச்சிதமாக முடித்திருக்கும் அகநாழிகை பதிப்பக உரிமையாளர் பொன்.வாசுதேவனையும் இரு கை குலுங்க வாழ்த்திடுவோம். பதிப்பக விளையாட்டின்  தொடக்க ஆட்டக்காரராக நர்சிம்மை தேர்ந்தெடுத்ததிலே அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.இனி வரும் வீரர்களும் சதமடிக்க வாழ்த்துவோம்.

  கிட்டத்தட்ட எல்லாம் கிடையாது. நர்சிம்மின் அனைத்து புனைவுகளையுமே அவரது வலையில் ஒன்றுக்கும் அதிகமான முறை படித்தவன் நான். அந்த எண்ணிக்கையில் நேற்றிரவு மேலும் ஒன்று கூடியது. ஆங்காங்கே பல இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதையெல்லாம் மாத்திட்டாரே என்று நினைத்த போது, அவை  நம்முள் இன்னமும் அழியாமல் இருந்து நர்சிம்மின் வெற்றிக்கு சான்றாக நிற்கின்றன.

  புனைவு ?

   இரண்டு வெவ்வெறு அனுபவங்களை ஒற்றைப் புள்ளியில் இணைத்து படைக்கும்போது  ஒரு நம்பகத்தனமையும், தனித்துவமும் கிடைக்கக்கூடும். ஒரு உதாரணம். காதல் கொண்டேன் படத்தில் பலருக்கும் பிடித்த ஒரு காட்சி. நாயகன் கடைசி பென்ச்சில் தூங்கிக் கொண்டிருப்பான். வகுப்பெடுக்கும் ஆசிரியர் அவனை அடித்து எழுப்பி ஒரு கணக்கை போட சொல்லுவார்.அவனும் வந்து அதை சரியாக முடித்துவிடுவான்.  அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். பொதுவாக எல்லா வகுப்புகளிலும் இப்படி தூங்கும் மாணவர்களை காண முடியும். ஆசிரியர் சொல்லும் கணக்கை முடிக்கும் மாணவர்களையும் காண முடியும். ஆனால் இரண்டும் செய்யக்கூடிய மாணவனை கண்டிருக்கிறோமா?அங்கேதான் புனைவு நாயகன் உருவாகிறான். இந்த தந்திரத்தை தெரிந்துக் கொள்பவர்களுக்கு, மொழியும் வசப்பட்டால் கொண்டாட்டம்தான். அப்படியொரு படைப்பாளியாய் நர்சிம் மிளிர்கிறார். இந்த தொகுப்பில் உள்ள கதை மாந்தர்கள் நம்மில் ஒருவராகவும், ஆனால் சம்பவங்கள் புதுமையாகவும் தெரிவதற்கு ஆசிரியரின் இந்த சூட்சமமே காரணம் எனலாம்.அல்லது என்கிறேன்.

   நர்சிம்மின் வார்த்தை விளையாட்டு பிரபலமானதே. ”வாசிப்பு என்னும் பள்ளியில் இவர் ஒரு நிரந்தர மாணவர். அதனாலே நிரந்தமானவர்”. இதுவும் அவரின் மாறவர்மன் தொடரில் வந்த ஒரு வாக்கியம் தான். இந்த சொல் விளையாட்டை தலைப்புகளிலே முயற்சி செய்திருக்கிறார். சாதாரண வாசகனுக்கு அது ஒரு வித எதிர்பார்ப்பையும், சுவாரஸ்யத்தையும் தருவதாகவே எனக்கு தோன்றுகிறது. சரியா தவறா என்றெல்லாம் தெரியவில்லை. தொகுப்பை படித்து முடிக்கும் போது நிச்சயம் தமிழில் வந்திருக்கும்  தொகுப்புகளில் மற்றொன்றென ஒதுக்க முடியாது. லக்கியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் பிளாகர் லேங்குவஜில் நாம் படிக்கக் கூடிய முதல் சிறுகதை தொகுப்பு.

பதிமூன்றை பொதுவாக ராசியில்லாத எண் என்பார்கள். அத்தனை கதைகள் இருப்பதால் கட்டு,ஒட்டு,பிட்டு என ஏதாவது ஒன்றை உடைத்தார்கள் என்று யாராவது சொல்லுவார்களா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த 13ல் நர்சிம்மின் சில முக்கிய புனைவுகள் விடுபட்டதாக தெரிகிறது. விகடனில் வந்த ஆறு கதைகளும் இதிலும் உண்டு. கதைகளை தேர்ந்தெடுக்கும் பணியை செவ்வனே செய்ய தவறியது நர்சிம்மா, வாசுதேவனா என்பதை பின்னூட்டத்தில் தெரிந்துக் கொள்ளலாம். நர்சிம்மின் கதைகளில் வழக்கமாக வரக்கூடிய பின்னூட்டம் “வழுக்கும் நடை”. ஆனால் புத்தகத்தில் படிக்கும் போது அந்த நடை மட்டும் நம்மை இழுக்கவில்லை. கதை யூகிக்கக்கூடியதாகவோ, அல்லது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி புஸ்ஸாக்கினாலோ ஏமாற்றமே மிஞ்சுகிறது. தலைவர்கள் கதையைத்தான் சொல்கிறேன். ஏனோ வலையில் படிக்கும் போது அப்படித் தெரியவில்லை.

புத்தகத்தை கைகளில் வாங்கும் போதே கேட்டேன் “பதிவுலகத்துக்கு தானே சமர்ப்பணம்?” நர்சிம்மை நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், வலையுலகம் அவருக்கு ஆகச் சிறந்த துணைவன். அவரை அடித்துப் பார்த்த அதே வலையுலகத்திற்கு அவர் சரியான பதில் தந்திருக்கிறார். மீண்டும் வலையுலகம் அடிக்குமா, அணைக்குமா என்பதை பார்ப்போம்

நூல் : அய்யனார் கம்மா (சிறுகதைகள்)
ஆசிரியர் : நர்சிம் 
விலை : ரூ.40
வெளியீடு : அகநாழிகை,

27 கருத்துக்குத்து:

செ.சரவணக்குமார் on December 2, 2009 at 7:57 PM said...

புத்தகத்தைப் பற்றிய நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள் நர்சிம்.

தமிழ்ப்பறவை on December 2, 2009 at 8:03 PM said...

நல்ல அறிமுகம் கார்க்கி... நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்...
புனைவுக்கான உதாரணம் நன்று...

அத்திரி on December 2, 2009 at 8:15 PM said...

சகாவுக்கு வாழ்த்துக்கள் சகா

T.V.Radhakrishnan on December 2, 2009 at 8:44 PM said...

நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் on December 2, 2009 at 8:51 PM said...

சகாவிற்கு என் வாழ்த்தை சொல்லுங்கள் சகா!

ILA(@)இளா on December 2, 2009 at 9:04 PM said...

நர்சிமரக்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் எழுத்துப் பணி!

செந்தழல் ரவி on December 2, 2009 at 9:12 PM said...

என்னுடைய வாழ்த்துக்களும்...

ஹாட் ஜாப்ஸுக்கு யாரை தொடர்புகொள்வது என்ற மின்னஞ்சலும் இணையேன் சகா..

அன்புடன் அருணா on December 2, 2009 at 9:59 PM said...

எவ்வ்ளோ அழகான அறிமுகம்!பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் நர்சிம்முக்கும்!

இராம்/Raam on December 2, 2009 at 10:39 PM said...

சேட் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... :)

ஊர்சுற்றி on December 2, 2009 at 10:54 PM said...

நர்சிம்முக்கு வாழ்த்துக்களும் அகநாழிகைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :)

மனம் மகிழ்வுறுகிறது.

பட்டிக்காட்டான்.. on December 3, 2009 at 2:34 AM said...

வாழ்த்துகள் நர்சிம்..

நர்சிம் on December 3, 2009 at 6:30 AM said...

நன்றி சகா

டம்பி மேவீ on December 3, 2009 at 8:36 AM said...

நரசிம், மற்றும் அகநாழிகை பதிபகதிற்கும் வாழ்த்துக்கள்.......


நரசிம், எந்த கடையில் புத்தகம் கிடைக்கும்??????

இல்லாட்டி உங்களிடமே காசு தந்து வாங்கி கொள்ளலாமா ?????

♠ ராஜு ♠ on December 3, 2009 at 8:48 AM said...

வாழ்த்துக்கள் தலைவரே..!
கார்க்கிண்ணா நல்லா எழுதியிருக்கீங்க. அதுவும் அந்த "காதல் கொண்டேன்" மேட்டர் சூப்பர்.

Rajeswari on December 3, 2009 at 10:33 AM said...

வாழ்த்துக்கள்!!!

மண்குதிரை on December 3, 2009 at 10:34 AM said...

உங்கள் மூலமாக அவருக்கு என் வாழ்த்துக்கள்

அறிமுகத்திற்கு உங்களுக்கு என் நன்றி நண்பா

தத்துபித்து on December 3, 2009 at 10:34 AM said...

///
சாதாரண வாசகனுக்கு அது ஒரு வித எதிர்பார்ப்பையும், சுவாரஸ்யத்தையும் தருவதாகவே ..////

வாசகன் , சாதாரண வாசகன் என்ன வித்தியாசம்?(தோசைக்கும் ,சாதா தோசைக்கும் உள்ள வித்தியாசம் என சொல்லக் கூடாது )
.
.

கார்க்கி on December 3, 2009 at 10:44 AM said...

நன்றி சரவணக்குமார்

நன்றி பறவை

அத்திரி, நன்றி சகா

டிவிஆர், வாங்க சார்.நலமா?

பா.ரா. சொல்லிடலாமுங்க. உங்களுக்கும்தான்

இளா, நீங்களும் ஒரு முக்கியமான நபர் சகா நர்சிம்மை அடையாளங்கண்டு ஆதரித்ததில்

@ரவி, சேர்த்திட்டேன் சகா. :))

பூங்கொத்துக்கு நன்றி டீச்சர்

ராம், வெள்ளையா இருந்தா சேட்டா? ஆவ்வ்வ்

ஊர்சுற்றி, உண்மை

மேவீ, நிறைய கடைகளில் புத்தகம் கிடிஅக்கும். ஆனா இந்த புத்தகம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

நன்றி டக்ளஸ். எனக்கு நீ டக்ளஸ்தான்

நன்றி ராஜேஷ்வரி,

நன்றி மண்குதிரை. உங்களை பற்றியும் பேச்சு வந்தது சகா.

தத்துபித்து, நீங்க தல ரசிகரா?

சுசி on December 3, 2009 at 3:32 PM said...

//ஹார்ட்காப்பிகளை காணும்போது ஒரு வித சுகம் ஏற்படுவதை மறுக்கமுடியாது. ஹார்ட்காப்பிகளை காணும்போது ஒரு வித சுகம் ஏற்படுவதை மறுக்கமுடியாது. //

:))))

சுசி on December 3, 2009 at 3:34 PM said...

அருமை கார்க்கி. நல்ல விமர்சனம்.

//இனி வரும் வீரர்களும் சதமடிக்க வாழ்த்துவோம். //

வாழ்த்துவோம்... வாழ்த்துவோம்.

சுசி on December 3, 2009 at 3:35 PM said...

நர்சிம், பொன் வாசுதேவனுக்கும் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) on December 3, 2009 at 4:21 PM said...

அன்பின் கார்க்கி

அருமையான அறிமுகம்

அய்யனார் கம்மா - விற்பனையில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்

நர்சிம் - வாசு - இருவருக்கும் பாராட்டுகள்

ஆமா புத்தகம் எங்கு கிடைக்கும்

யாத்ரா on December 3, 2009 at 5:58 PM said...

நண்பர் நர்சிம்முக்கும் அகநாழிகை பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள்

Karthik on December 3, 2009 at 7:43 PM said...

வாழ்த்துக்கள். :) :)

mvalarpirai on December 3, 2009 at 10:27 PM said...

Congrats Narsim !

Nalina on December 4, 2009 at 12:42 PM said...

வாழ்த்துக்கள் நர்சிம். அப்படியே கார்க்கிக்கும்!

எங்கே புத்தகம் கிடைக்கும் என்பதையும் எழுதி இருக்க்லாம்.

எதிர்பார்ப்புகளுடன்,
நளினா

ஆதிமூலகிருஷ்ணன் on December 7, 2009 at 12:37 AM said...

சரியான கருத்துகள். எழுதியவருக்கும், எழுதப்பட்டவருக்கும் வாழ்த்துகள்.

 

all rights reserved to www.karkibava.com