Dec 1, 2009

மடக்கிப் போட்ட வரிகள்


 

     

தொலைந்தது எதுவென்று

தெரியாமலும்

தொலைந்தது கிடைத்ததாவென்று

அறியாமலும்

இன்னமும் தேடிக் கொண்டிருப்பவர்களை

இன்னார்கள் என்று சொல்ல

இயல்பாய் ஒரு பதத்தைத் தேடி

மொழியின் சுழலில் சிக்கித் தவிக்கிறேன்.

கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள் சிலர்.

அதுவாயின்

கடவுளுக்கு உடனடியாய் தேவை

மூணு கிலோ அரிசியும்

முன்னூறு ரூபாயும்.

****************************************************

           

கோபியுடன் வந்தேன்.

தந்தேன்.

முகம் சுளித்துக் கொண்டு வந்தாள்

மனுஷ்யபுத்திரனை

தத்துக் கொடுத்தேன்.

சோர்ந்து போய் வந்தாள்.

இவனை விட்டு யுவனை படியென்றேன்.

சிவனே என்று திரும்பினாள்.

முன்னரே

தபு சங்கரை தந்திருந்தால்

முத்தமிட்டிருக்கலாம்

என்றேன் நண்பனிடம்.

சாரு என்றான் அவன்..

நான் ஒரு பெண்ணிடம் பேசியதை

நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்.

 

34 கருத்துக்குத்து:

டம்பி மேவீ on December 1, 2009 at 9:34 AM said...

semaiya irukku nnu solla matten


enna naanum innum padikkala

padichittu varen

டம்பி மேவீ on December 1, 2009 at 9:36 AM said...

"சாரு என்றான் அவன்.. நான் ஒரு பெண்ணிடம் பேசியதை நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்."அப்ப எஸ்ராவை தந்து முயற்சித்து பார்த்து இருக்கலாமே

டம்பி மேவீ on December 1, 2009 at 9:38 AM said...

உங்க போஸ்ட் லிங்க் தந்து இருந்தால் பொண்ணு pick up ஆகாமல் drop ஆகிருக்கும்

he he he he

டம்பி மேவீ on December 1, 2009 at 9:40 AM said...

"முன்னரே தபு சங்கரை தந்திருந்தால் முத்தமிட்டிருக்கலாம்"


அடுத்த கட்டத்திற்கு என் கவிதையோட லிங்க் தந்து முயற்சித்து பாருங்க பாஸ்

க‌ரிச‌ல்கார‌ன் on December 1, 2009 at 9:40 AM said...

//இன்னார்கள் என்று சொல்ல

இயல்பாய் ஒரு பதத்தைத் தேடி

மொழியின் சுழலில் சிக்கித் தவிக்கிறேன்.//

க‌ல‌க்க‌ல்
(ஆணி குறைஞ்சிருச்சா ச‌கா)

டம்பி மேவீ on December 1, 2009 at 9:43 AM said...

" உடனடியாய் தேவை மூனு கிலோ அரிசியும் முன்னூறு ரூபாயும். "

ஏதோ பெருசா சொல்லிருக்கிங்க எனக்கு தன புரியல ......

எதுவாக இருந்தாலும் பாரதி சொன்ன மாதிரி எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்... இல்லையென்றால் GOOGLE யை HACK செய்வோம்

Cable Sankar on December 1, 2009 at 9:52 AM said...

மடக்கி
போட்டாவது
எழுதலாம்னு
நினைச்சாலும்
வரவேனாங்கிறது
கவிதை
எனக்கு

Karthik Viswanathan on December 1, 2009 at 10:49 AM said...

Asst. டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...
பின்றார்ப்பா கார்க்கி...

நானும் எப்படிலமோ எழுதறத மடக்கி பாக்கறேன்....
கவித மட்டும் வர மாட்டேங்குது..
இதுவே மடக்கி போட்டதுன்னா..
என்னல்லாம் எழுதீராதடா பாவின்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு...

யோ வொய்ஸ் (யோகா) on December 1, 2009 at 11:01 AM said...

கவிதையா சகா?

வெற்றி on December 1, 2009 at 11:18 AM said...

அருமையான கவிதை தல.....
//டம்பீ மேவி said..." உடனடியாய் தேவை மூனு கிலோ அரிசியும் முன்னூறு ரூபாயும். "

ஏதோ பெருசா சொல்லிருக்கிங்க எனக்கு தன புரியல ......//
உங்களுக்காக முதல் கவிதை எளிமையாக....
அனாதைகள்
கடவுளின் குழந்தைகளாம்
அப்படியானால்
கடவுளுக்கும் தேவை
கட்டாயம்
குடும்பக் கட்டுப்பாடு...

பூங்குன்றன்.வே on December 1, 2009 at 11:19 AM said...

கலக்கீட்டீங்க தல.

செந்தில் நாதன் on December 1, 2009 at 11:28 AM said...

என்ன இது...வர வர எல்லாருமே அருமையா கவித எழுதுறிங்க?

எனக்கு 'ஆ' ரெம்ப புடிச்சுது. வாத்சாயனர் எழுதியத குடுத்து இருக்கனும் தல. வேஸ்ட் பண்ணிடிங்க. :)

'அ'-ல நம்ம ஊரு சாம்பார்-ல இருக்க மாதிரி ஒரு மெலிய காரம் இருந்துது. ஆந்திரா காரம் வேண்டாமா? (ஹைதராபாத்-ல குப்ப வேற கொட்டிருகிங்க. :) )

நர்சிம் on December 1, 2009 at 11:58 AM said...

உரையாடல் நெட் ப்ராக்டீஸே மேச் வின்னிங்கா இருக்கே சகா..

சுசி on December 1, 2009 at 12:48 PM said...

'அ' எளிமையா சொல்லி இருந்தாலும் கோபத்தோட கடுமை தெரியுது.

'ஆ' அட நம்ம கார்க்கி....

இந்த சைடுக்கும் அந்த சைடுக்குமா எழுதின விதமும் நல்லா இருக்கு.

Romeoboy on December 1, 2009 at 1:06 PM said...

சாரு என்றான் அவன்..

நான் ஒரு பெண்ணிடம் பேசியதை

நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்

இது கலக்கல் .

கார்க்கி on December 1, 2009 at 2:30 PM said...

@மேவீ, என் போஸ்டுக்கு லின்க் கொடுக்கலாம். ஆனா எந்த போஸ்டுனு தெரிஞ்சு கொடுக்கனும்ப்பா

@கரிசல்காரன், அது குறையாது சகா. நாமள கேப்புல ஆணி அடிச்சிடனும்.:)

@கேபிள்ஜி, கிகிகி. உங்களுக்கு விரல் வானிலை அறிக்கை தெரியுமில்ல?

@கார்த்திக், ஜ்யோவ்ராம் சுந்தர் மட்டும் உங்கள பார்த்தாரு. அம்புடுதேன்

@யோகா, ஆசை.. அதே டவுட்டுதான் எனக்கும்

நன்றி வெற்றி

நன்றி பூங்குன்றன்

@செந்தில்நாதன், ஆந்திரா காரம் வேணாம்ன்னுதானே சகா சென்னைக்கு ஓடி வந்தேன்

@நர்சிம், கிகி. அதேதான் சகா. சீக்கிரம் ரஞ்சியாவது ஆடிடனும்.

@சுசி, ரெண்டு கவிதைக்கும் வித்தியாசம் காட்டனும் இல்ல :)))

@ரோமியோ, சாருன்னாலே கலக்கல்தானே சகா. அய்யோ அந்த கலக்கல் இல்லைங்கண்ணா

அத்திரி on December 1, 2009 at 7:51 PM said...

ரைட்டு

தமிழ்ப்பறவை on December 1, 2009 at 8:30 PM said...

சகா... ‘அ’ ரொம்ப நல்லா இருந்தது...
கொஞ்சம் வார்த்தை விளையாட்டை மட்டும் குறைத்துக் கொண்டிருக்கலாம்...(எதுகை, மோனைகள் இல்லாமலேயே நன்றாக இருக்கும்)...
வாழ்த்துக்கள்...

ILA(@)இளா on December 1, 2009 at 8:54 PM said...

ஆ! பின் நவீனம் நல்லா இருக்கே..

கும்க்கி on December 1, 2009 at 8:59 PM said...

:-))

பரவால்ல...இடமாற்றம் நல்ல மாற்றம்.

கும்க்கி on December 1, 2009 at 9:00 PM said...

ஏன் ப்ரதர் அந்த ஊர்ல எப்படி இதெல்லாம் தோனுது?

அன்புடன் அருணா on December 1, 2009 at 9:11 PM said...

நல்லா மடக்கிருக்கீங்க!

பட்டிக்காட்டான்.. on December 2, 2009 at 12:19 AM said...

சகா, யார மடக்கி போட்டு எழுதுனிங்க??

பிரியமுடன்...வசந்த் on December 2, 2009 at 1:50 AM said...

//நான் ஒரு பெண்ணிடம் பேசியதை

நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்.

//

லொள்..

அ சூப்பர்சகா... கோபம் தெரி(றிக்)கிறது

Anonymous said...

//சாரு என்றான் அவன்..

நான் ஒரு பெண்ணிடம் பேசியதை

நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்.//

இது கலக்கல்ஸ்

Nanum enn Kadavulum... on December 2, 2009 at 5:12 AM said...

எல்லோரும் எப்போதும் எதையேனும் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள் !
கடவுளின் குழந்தைகள் தொலைத்ததை தேட....
நீங்கள் இயல்பான பதத்தை தேட ....
ரசிக்கின்ற மனதுக்கு உங்கள் கவிதை என்னவோ அருமைதான் !

கமலேஷ் on December 2, 2009 at 9:04 AM said...

நல்ல கவிதைகள்...

Sen22 on December 2, 2009 at 10:07 AM said...

நானும் எவ்வளவோ முயற்ச்சிக்கிறேன், எனக்கு எழுதவே வர மாட்டேங்கிறது..

கலக்கல் கார்க்கி.. :)))


Senthil,
Bangalore..

தாரணி பிரியா on December 2, 2009 at 11:01 AM said...

நல்லாதான் மடக்கி மடக்கி எழுதி இருக்கிங்க அ அச்சச்சோ ஆ அபாரம் :)

ஸ்ரீமதி on December 2, 2009 at 11:16 AM said...

முதலாமாவது நன்று.. :))

பரிசல்காரன் on December 2, 2009 at 11:30 AM said...

ஆ - கொஞ்சம் முயற்சித்திருந்தால் ஆஹாவாகியிருக்கும்.

கல்யாணி சுரேஷ் on December 2, 2009 at 11:43 AM said...

"அ" கலக்கல் கார்க்கி. "ஆ" ok.

விக்னேஷ்வரி on December 2, 2009 at 6:44 PM said...

இது சாளரம் வலை தானா...
கவிஞர் கார்க்கி வாழ்க.

ரொம்ப நல்லாருக்கு கார்க்கி. இப்போவெல்லாம் எப்போவோ ஒன்னு எழுதுறீங்க. இந்த மாதிரி எழுதுங்க. கலக்கல்.

ஆதிமூலகிருஷ்ணன் on December 7, 2009 at 12:41 AM said...

கவிதைகளுக்கான நடை இருக்கிறது.

ஆனால் வேறேதோ ஏதோ மிஸ்ஸாகிறது. எனக்கு புரியாத மாதிரி இருக்கிறது.

 

all rights reserved to www.karkibava.com