Dec 31, 2009

2010ல் கார்க்கி-சில மாற்றங்கள்


 

எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது. வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது. மறுநாள் 2ம்தேதி வெள்ளிக்கிழமையாய் போனதால் சற்று சலிப்பு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஹைதைக்கும், சைதைக்கும் பயணம் செய்தே காலம் கழிந்தன அப்போதெல்லாம். பெரிதாய் வாழ்வு ருசிக்கவில்லை எனலாம்.

   சமீபத்திய வருடங்களில் புத்தாண்டை நான் அதிகம் கொண்டாடியதில்லை. திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.ஆனால் 2009ல் நிறைய மாற்றங்கள். குறிப்பாய் வலையுலகம். 2007 ஆகஸ்டிலே பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நணபர்கள் கிடைத்தார்கள். மார்ச்சில் தமிழ்மணம் நட்சத்திரம் ஆனேன். சில இலக்கியவாதிகள் தொடர்பு கிடைத்தது. நின்றுவிட்டு வாசிப்பு மீண்டும் தொடங்கியது. ஐந்து வருடங்களால தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் வலையுலகம் தான்.

ஏழுவை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. புட்டிக்கதைகளுக்காக யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். ஹைதையை விட்டு சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்ற நினைத்தபோது சட்டென்று முடிவெடுக்க  நம்பிக்கை வந்ததற்கு காரணமும் இந்த அணுகுமுறைதான்.எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.

சென்ற ஆண்டில் பல முக்கிய பதிவர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள். யோசித்துப் பார்த்தேன். மொக்கைசாமி லேபிளில் மட்டும் 52 பதிவுகள். வலையுலகம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகளும் பெரும்பாலும் மொக்கைகளே. இந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த இடத்தில் விஜய். பொது வாழ்க்கைக்கு(?) வந்த பிறகு தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.

அதனால் இந்தப் புத்தாண்டில் ஒரு முடிவு எடுக்கலாமென்றிருக்கிறேன். வழக்கமாய் எல்லா புத்தாண்டுகளுக்கும் எந்த உறுதிமொழியும் எடுக்கக்கூடாது என்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். இந்த முறை உண்மையில் எடுக்கப் போகிறேன்.

சென்ற ஆண்டில் எனது மொக்கை உங்களை அதிகம் பாதித்ருந்தாலோ,

ஆணி புடுங்க வேண்டாம் என்ற கதையின் முடிவில்  டமாரென்று அடித்ததைப் போல் வேறு ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தாலோ,

வேட்டைக்காரன், வில்லு எனப் பதிவுகள் போட்டு உங்களை நோகடித்திருந்தாலோ,

ஜே.கே.ஆரின் மந்திரம் என உங்களை நசுக்கி இருந்தாலோ

கவிதைகள் என்ற பெயரில் உங்களை கொலை செய்ய முயன்றிருந்தாலோ

தயவு செய்து உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செஞ்சுக்கோங்க..ஏன்னா

 

 

 

 

இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன். அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். மொக்கைக்கு அந்தப் பக்கம்  இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது. சரிதானே சார்?

சாளரத்தின் வாசகர்கள் அனைவருக்கும்

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR

அடுத்தப் பதிவு திங்கிள்கிழமைதான். மூன்று நாட்கள் விடுமுறை. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக இதை சமர்ப்பிக்கிறேன்.என்ஜாய் மாடி

50 கருத்துக்குத்து:

பாபு on December 31, 2009 at 10:27 AM said...

wish you a very happy new year

maheswaro on December 31, 2009 at 10:28 AM said...

wish you happy new year

for all the blockers and readers

maheswari

Jaya on December 31, 2009 at 10:33 AM said...

Wish you too a Very Happy & Prosperous New Year Karki!! :)

radhika on December 31, 2009 at 10:36 AM said...

happy new year and just be same karki. you rock

ரஞ்சனி on December 31, 2009 at 10:39 AM said...

வாழ்த்துக்கள் சகா.

இப்படியே இருங்க. அது போதும்.இலக்கியமாவது பொழச்சு போகட்டும்.

அன்புடன் அருணா on December 31, 2009 at 10:55 AM said...

வாழ்வை உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ வாழ்த்துக்கள்!

அமுதா கிருஷ்ணா on December 31, 2009 at 11:06 AM said...

சாமி தான் காப்பாத்தனும்..எங்களை..

Anbu on December 31, 2009 at 11:10 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...

அப்பாடா..ஒரு மூன்று நாள் நிம்மதி

KaveriGanesh on December 31, 2009 at 11:17 AM said...

இது தான் கார்க்கி ஸ்டைல், யாருக்காகவும், எதற்காகவும் மாற்றி கொள்ளாத ஸ்டைல்.

வாழ்த்துக்கள் கார்க்கி

ராஜகோபால் (எறும்பு) on December 31, 2009 at 11:25 AM said...

அப்பாடி...எங்க திருந்தீடிங்கலோனு ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன்...
மொக்கையை தொடர வாழ்த்துக்கள்

திருநாவுக்கரசு பழனிசாமி on December 31, 2009 at 12:33 PM said...

wish u a very HAPPY newyear..

தொடர்ந்து உங்களது "ஆணிகளை" அடிக்க வாழ்த்துகள்.

தமிழ்ப்பறவை on December 31, 2009 at 12:41 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா...
//for all the blockers and readers//
’இந்த blockers naa ப்ளாக் எழுதுறவங்களா... இல்ல அதப் படிக்க விடாம ப்ளாக் பண்றவங்களா?

பரிசல்காரன் on December 31, 2009 at 12:44 PM said...

புத்தாண்டு வாழ்த்துகள் சகா.

சென்ற வருடம் (2008) எனக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று உன் நட்பு.

அதை இந்த வருடமும் (2009) பத்திரமாக பாதுகாத்தேன் என நினைக்கிறேன்.

அன்புக்கு நன்றி.

யோ வொய்ஸ் (யோகா) on December 31, 2009 at 12:47 PM said...

யாருக்காகவும் மாற வேண்டாம் சகா, நீங்கள் நீங்களாகவே இருங்கள்..


இனிய ஆங்கில புது வருட வாழ்த்துக்கள்..

பேநா மூடி on December 31, 2009 at 12:53 PM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Sangkavi on December 31, 2009 at 12:58 PM said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே................

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:02 PM said...

//எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது.//

Extraordinary...

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:03 PM said...

//வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது.//

வழக்கமா கிடைக்கிற திட்டு தான் எனக்கு கிடைக்கும். இன்னைக்காவது சீக்கிரம் எழுந்து தொலன்னு..

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:04 PM said...

//திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.//

இங்கயுமா தேவதாஸ்??

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:05 PM said...

//அதற்கு காரணம் வலையுலகம் தான். //

இதுதான் காரணமா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:06 PM said...

//புட்டிக்கதைகளுக்காக யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது.//

நாங்க மொக்கைன்னு இல்ல நினைச்சோம். ;))))))))

வெற்றி on December 31, 2009 at 1:07 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா..
நான் கூட எங்க நீங்க மாறிட போறீங்களோன்னு நெனச்சு பயந்துட்டேன்..

நம்ம பக்கமும் கொஞ்சம் வந்துட்டு போங்க..

http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_30.html

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:09 PM said...

//இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன்.//

இத இத இதத்தான் நான் எதிர்ப்பார்த்தேன். எங்க மாத்தி சொல்லி நல்ல புள்ளையா ஆகிட்டீங்களோன்னு பயந்துட்டேன்...

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:09 PM said...

// வெற்றி said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா..
நான் கூட எங்க நீங்க மாறிட போறீங்களோன்னு நெனச்சு பயந்துட்டேன்..//

ஹைய் சேம் ஸ்வீட்... :)))))))

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:11 PM said...

//அடுத்தப் பதிவு திங்கிள்கிழமைதான். மூன்று நாட்கள் விடுமுறை. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக இதை சமர்ப்பிக்கிறேன்.என்ஜாய் மாடி//

இதவிட சிறந்த புத்தாண்டு பரிசு இதுவரை எனக்கு(எங்களுக்கு) யாரும் தந்ததில்லை. நன்றி கார்க்கி நன்றி. :))))))))

ஸ்ரீமதி on December 31, 2009 at 1:12 PM said...

உங்களுக்கும், உங்கள் வாசக, ரசிக (அது யாரு?!) பெருமக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். (இது எதுக்கு?) ;)))))))))

யுவகிருஷ்ணா on December 31, 2009 at 1:15 PM said...

கார்க்கி!

நீங்களே பதிவில் குறிப்பிட்டிருப்பது போல ‘வலையுலகம்' என்பதை தாண்டி யோசிக்க சமீபமாக மறந்துவிட்டீர்களோ என்று இப்பதிவும் எண்ண வைக்கிறது.

முடிந்தவரை வலை வாசகர்களுக்காக எழுதுவதை குறைத்துவிட்டு, ஒரு வெகுஜன இதழில் எழுதும் இறுமாப்புடன் எழுதிப் பழகவும்.

என்றும் அன்புடன்
லக்கி

தர்ஷன் on December 31, 2009 at 1:52 PM said...

//இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன். அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். //

அதுதானே வாசிக்கும் போது பயந்துட்டேன்

மொக்கை தொடர்ந்து போடுங்கள் சகா, ஆனால் ஒரு நல்ல கமர்சியல் ரைட்டருக்கு உண்டான சகல தகுதிகளும் அதிகமாகவே உங்களுக்கு உள்ளன. So அந்தப் பக்கமும் நிறையவே கவனம் செலுத்துங்கள். அதாவது இன்னும் நிறைய நிறைய நிறைய எழுதுங்கள். புத்தாண்டுவாழ்த்துக்கள்.

RaGhaV on December 31, 2009 at 2:08 PM said...

//சென்ற ஆண்டில் பல முக்கிய பதிவர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள்.//

மொக்கையை குறைக்க வேண்டாம்.. அது அப்படியே இருக்கட்டும்.. மற்றவையை அதிகபடுத்தவும்.. :-)

//தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள்//

தனிப்பட்ட ரசனையில்லாமல் எதையுமே சிறப்பாக செய்ய முடியாது சகா..

//இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன்//

இதைபற்றி வேண்டுமானால் சற்று யோசிக்கவும்.. ;-)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-))

அதுசரி, அதென்ன ப்ளு ஷர்ட்..??

தாரணி பிரியா on December 31, 2009 at 2:13 PM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

கார்த்திகைப் பாண்டியன் on December 31, 2009 at 2:52 PM said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகா..:-)))

butterfly Surya on December 31, 2009 at 3:06 PM said...

அப்பாடி...எங்க திருந்தீடிங்கலோனு ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன்...

keep it up.

hearty wishes..

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

taaru on December 31, 2009 at 3:29 PM said...
This comment has been removed by the author.
taaru on December 31, 2009 at 3:34 PM said...

அடிச்சோட்டி போயிட்டே இருண்ணே.. சாளரத்துக்கு வாழ்த்துக்கள் தல.

வெற்றி on December 31, 2009 at 3:37 PM said...

//ஸ்ரீமதி said...

// வெற்றி said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா..
நான் கூட எங்க நீங்க மாறிட போறீங்களோன்னு நெனச்சு பயந்துட்டேன்..//

ஹைய் சேம் ஸ்வீட்... :)))))))//

ஆமாங்க நான் ஸ்வீட் தான் :)))

சுசி on December 31, 2009 at 3:43 PM said...

உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கார்க்கி.

நீங்க ஒரு விஷயத்தில மட்டும் மாறிடுங்க. மீதி நீங்களாவே இருங்க.. இருப்பீங்கன்னு நம்பறேன். ஏன்னா 2010 உங்க வாழ்க்கையில புது வர(உற)வுகள தரலாம் இல்லையா :))) பிள்ளையார் வேற உங்க மேல கொலை வெறியில இருக்கார்.

ஒத்துக்கிறேம்ப்பா.. நீங்க நிறைய்ய்யய்ய அறிவாளிங்க கூட பேசுறீங்கதான். அவ்ளோ நல்லா இருக்கு உங்க எழுத்து. குறிப்பா இந்த இடம்.
// எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். ஹைதையை விட்டு சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்ற நினைத்தபோது சட்டென்று முடிவெடுக்க நம்பிக்கை வந்ததற்கு காரணமும் இந்த அணுகுமுறைதான். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது. //

2010ல இன்னும் சிறப்பான எழுத்துக்கள எதிர்பார்க்கறேன் கார்க்கி.

பாண்டி-பரணி on December 31, 2009 at 3:47 PM said...

திரிந்தி திருவள்ளுவர் ஆகி திருகுறல எழுதபோரோம் :)

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகா

நேசன்..., on December 31, 2009 at 3:48 PM said...

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR..Sagaa!...

Bavan on December 31, 2009 at 4:23 PM said...

இனிய ஆங்கில புது வருட வாழ்த்துக்கள்..:)

அக்னி பார்வை on December 31, 2009 at 4:26 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பித்தன் on December 31, 2009 at 5:14 PM said...

என் கூட போசுவதைத்தான் நீங்கள் இப்படி சொன்னேர்களோ, எனக்கு பப்ளிக்குட்டி லைகிங் இல்லைங்கோ....

ராஜ நடராஜன் on December 31, 2009 at 6:22 PM said...

வீட்டுக்குள்ளதான் இப்படியா!(மொக்கை).மத்தவங்க கடையில அரட்டை அடிக்கும் போது அர்த்தத்தோடு பேசுறீங்க:)மொக்கை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அத்திரி on December 31, 2009 at 7:59 PM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கனவுகள் விற்பவன் on January 1, 2010 at 2:42 AM said...

//என்ஜாய் மாடி//


நீங்க உங்க வூட்டு மாடில...நாங்க எங்க வூட்டு மாடில...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சந்ரு on January 1, 2010 at 6:21 AM said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

SK on January 1, 2010 at 4:28 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா. நான் சொல்ல வேண்டும் என்று இருந்ததை பலர் சொல்லி விட்டார்கள். அடிச்சு ஆடுங்க :-)

ஷோபிகண்ணு on January 1, 2010 at 11:24 PM said...

//சென்ற ஆண்டில் பல முக்கிய பதிவர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள்.//

அப்போ இனிமே கருத்து சொல்ல ஆரம்பிச்சுருவீங்களோ... கருத்து கார்த்தி

4 பேருக்கு நல்லதுபன்னா எதுவுமே தப்பில்ல.(இப்ப எதுக்கு இந்த டயலாக் இங்க. பராவல்ல இருந்துட்டு போவுட்டும்)

கமென்ட் போடறதுக்கு பதிலே ஒரு பதிவே போட்டுறுவன் போல இங்க.( அப்ப 2 லைந்தான் பதிவா போடுவியா? அப்ப இங்க 2 லைந்தான் இருக்க..?

ஆள விடிங்கடா சாமியோவ்..

Karthik on January 3, 2010 at 4:49 PM said...

கடைசி வரில அப்படியே 9ம் மேகத்துக்கு போய்ட்டேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

//Blogger ஸ்ரீமதி said...
//திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.//
இங்கயுமா தேவதாஸ்??

Haha.. ROFL.. :D :D

இரசிகை on June 3, 2014 at 9:58 PM said...

எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது.

:))))

 

all rights reserved to www.karkibava.com