Nov 26, 2009

டம்ளருக்குள் நீச்சல் ஏனடா?


 

  அழகான மாலை வேளை அது. சூரியன் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் எங்களுக்கு ரோஜாவாகாத்தான் தெரிந்தது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் அவளுக்கும். பிப்ரவரி 14. காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

  கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம். அலைகள் சுருதி சேராமல் பாடிக் கொண்டிருந்தன. அலை வந்து மோதுகிறதே என்று பாறைகள் நகர்வதாய் தெரியவில்லை. பாறைகள் நம்மோடு வருவதில்லையே என்று அலைகளும் விடுவதாயில்லை.

“நான் தான் பாறையா?” என்றாள். எப்படி அவளுக்கு நான் யோசிப்பது தெரிந்தது  என்றுத் தெரியவில்லை.

நீதான் வந்துட்டியே.

நீ விடாம துரத்துன. சரி விடு. இப்ப அதுவா முக்கியம். நான் என்ன கிஃப்ட் வாங்கியிருக்கேன் சொல்லு?

எது வாங்கினாலும் எனக்குப் புடிக்கும்.

எப்படி சொல்ற?

எனக்கு யாரு தர்றாங்கிறதுதான் முக்கியம்.

என் கையில எதுவுமே இல்லையே. என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணேன்.

அப்படின்னா பெருசா எதுவோ வாங்கியிருக்க. இல்லைன்னா இப்ப கூட்டிட்டு போய் வாங்கலாம்னு சொல்லுவ.

ஏண்டா இவ்ளோ அறிவாளியா இருக்க? எதையுமே செய்ய முடியல.நம்ம கெளரி கடைல இருக்கு. இங்கேயே இரு. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.

  அவள் எழுந்து செல்வதைக் கண்ட அலைகள்  அவளை பின் தொடர ஆசைப்பட்டு இன்னும் வீரியத்துடன் எழுந்தன. நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு சோகத்துடன் விழுந்தன. விழும் நேரத்தில் எழுந்த சத்தம் அலையின் அழுகுரல் போலவே கேட்டது எனக்கு. 1987க்கு முன்னால் கடலில் உப்புத்தன்மை இருந்ததா என்று பார்க்க வேண்டும்.

கையில் பெரிய பெட்டியுடன் வந்துக் கொண்டிருந்தாள். என்னவாக இருக்கும் என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையாக எனக்குத் தெரியவில்லை.

To my porikki என்று எழுதப்பட்டிருந்தது.

Happy Valentine's day டா என்றாள்.

கையில் வாங்கினேன். என்னவென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் பிரிக்கப் போனவனைத் தடுத்தவள் “ மூனு சாய்ஸ். என்னன்னு சொல்லிட்டு பிரி” என்றாள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. “ஷேர்ட், வாட்ச், மொபைல்” என்று சொல்லிவிட்டு பிரித்தேன். சிரித்துக் கொண்டே சொன்னாள் ” உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”

என்னால் நம்ப முடியவில்லை. இதை எப்படி யோசிக்காமல் போனேன்? அழகிய கிடார். என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. எனக்கு உடனே அவளை அணைத்து ஒரு முத்தமிட வேண்டும் போலிருந்தது. ஆனால் கையில் கிடார். அந்தப் பாறையில் எங்கேயும் அதை வைக்க மனம் வரவில்லை. கிடார் எனக்கு முதல் காதலி. என் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவள் கன்னத்தை காட்டினாள். ப்ச்.

தேங்ஸ்டா என்றேன்.

எனக்கு என்ன கிஃப்ட்?

உன்னையேக் கூட்டிட்டு போய் வாங்கலாம்னு வந்தேன்.

எனக்கு இப்பவே வேணும்.

அதான் கொடுத்தேனே.

ச்சீ. அது இல்ல. ஒரு பாட்டு பாடுடா

இங்கேயா?

ஆமாம்.நான் மாஸ்டர்கிட்ட கொடுத்து ட்யூன் பண்ணிதான் எடுத்துட்டு வந்தேன்.

கிட்டாரை என் ஸ்டைலில் கையிலெடுத்தேன். அப்படியே  தலை சாய்த்து சொன்னாள் “இதான்டா. நீ இத வாசிக்கும் போதெல்லாம் கிடார்தான் நான்னு நினைச்சுக்கோ. இப்படி கட்டிபுடிச்சுட்டே  வாசிப்பில்ல. அதான்டா வேணும்”

நான் கிடாரை முத்தமிட்டேன். அவள் சிலிர்த்தாள்.கொஞ்ச நேரம் கண்மூடி ரசித்தாள்.

ஏதாவது பாடுடா. உனக்கு பிடிச்ச பாட்டு.

யோசிக்காமல் தொடங்கினேன்.

“என் இனிய பொன் நிலாவே.

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம்....தர தத் தரா..

தொடருதே தினம் தினம்.. தர தத் தரா..”

**************************

   நினைவுகளில் இருந்து மீண்டேன். கடிகாரம் ஃபிப்ரவரி 12 என்று மட்டும்தான் காட்டியது. வருடத்தை காட்டவில்லை. என்னோடு அவளும்,கிடாராக. இறுக அணைத்துக் கொண்டேன். தேடிப்பிடித்து அதே பாறையில் உட்கார்ந்துக் கொண்டேன். பாடுடா என்று அவள் சொன்னது இன்னுமும் அங்கேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.  கிடாரை முத்தமிட்டு பாடத் தொடங்கினேன்.

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் விளையாடும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி
மறு வாசல் வைப்பான் இறைவன்

பாடி முடித்தவுடன் கைத்தட்டல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். wow.It was awesome என்றது அந்த பூங்கொத்து. I am Radhika என்று தட்டிய கைகளில் ஒன்றையும் நீட்டினாள்.

சரியான பாடலைத்தான் பாடியிருக்கிறேன்.

 

24 கருத்துக்குத்து:

Anonymous said...

//ஒரு வாசல் மூடி
மறு வாசல் வைப்பான் இறைவன்//

அந்த நம்பிக்கை இல்லாட்டி வாழ்க்கை ஏது. நல்லாருக்கு இந்த காதல்.

விக்னேஷ்வரி on November 26, 2009 at 11:02 AM said...

முதல் முறை படிச்சப்பவே போரடிச்ச பதிவு. மீள் பதிவா வேறயா... :(

விக்னேஷ்வரி on November 26, 2009 at 11:04 AM said...

பாடி முடித்தவுடன் கைத்தட்டல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். wow.It was awesomeஎன்றது அந்த பூங்கொத்து. I am Radhika என்று தட்டிய கைகளில் ஒன்றையும் நீட்டினாள். //
ஆஹா, இதைப் பார்க்காமே விட்டுட்டேனே. மேட்டர் இது தானா... வாழ்த்துக்கள்.

பாலாஜி on November 26, 2009 at 11:05 AM said...

தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

Karthik Viswanathan on November 26, 2009 at 12:09 PM said...

//“ஷேர்ட், வாட்ச், மொபைல்”//

இதெல்லாம் கிடார் சைசுக்கு பெருசாவா இருக்கும்.
எங்க நீங்க உங்க போட்டோவ போடுங்க... :D

கரிசல்காரன் on November 26, 2009 at 12:09 PM said...

//ஏதாவது பாடுடா. உனக்கு பிடிச்ச பாட்டு.

யோசிக்காமல் தொடங்கினேன்.

“என் இனிய பொன் நிலாவே.

பொன்நிலவில் என் கனாவே//

வார‌ண‌ம் ஆயிர‌ம் ப‌ட‌ம் பார்த்த‌ப்ப‌வே யோசிச்சேன் கார்க்கி ஐடியா மாதிரி இருக்கேன்னு ?

இப்ப‌ உறுதி ஆயிருச்சு
எப்ப‌டி உங்க‌ளால‌ ம‌ட்டும் .........

இப்ப‌டிக்கு
ஏழுவை த‌விர்த்து எதை எழுதினாலும் எதிர்ப்போர் ச‌ங்க‌ம்

RaGhaV on November 26, 2009 at 12:29 PM said...

மிக மிக அழகான பதிவு கார்க்கி.. :-)))

புன்னகை on November 26, 2009 at 12:38 PM said...

மீள் பதிவா என்று நினைத்து படித்துக் கொண்டே வந்தால், இது "FEEL" பதிவு என்று கடைசியில் தான் புரிந்தது! ;-)

நர்சிம் on November 26, 2009 at 12:42 PM said...

இன்னும் பணிச்சுமையில் இருந்து ’மீள’வில்லையா சகா?

நர்சிம் on November 26, 2009 at 12:43 PM said...

//புன்னகை said...
மீள் பதிவா என்று நினைத்து படித்துக் கொண்டே வந்தால், இது "FEEL" பதிவு என்று கடைசியில் தான் புரிந்தது! ;-)
//
நல்ல பின்னூட்டம்ங்க.

susi on November 26, 2009 at 12:51 PM said...

ப.ப ல நந்தினி மீ.ப ல ராதிகாவா???

நல்லாருங்க நல்லாருங்க.

மீள் பதிவுன்னா கூட உண்மைய சொல்றீங்க பாருங்க... ஐ லைக் யுவர் எண்ணம்.

ஸ்ரீமதி on November 26, 2009 at 3:21 PM said...

//நர்சிம் on November 26, 2009 12:42 PM said...
இன்னும் பணிச்சுமையில் இருந்து ’மீள’வில்லையா சகா?//

ரிப்பீட்டு.....................

Sangkavi on November 26, 2009 at 3:49 PM said...

//நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை//

அழகான கவிதை.....

ராதிகா எப்படி இருக்கிறாங்க?

தர்ஷன் on November 26, 2009 at 4:38 PM said...

அன்னைக்கி ஹரிணினு சொன்னீங்க இப்ப ராதிகாவா சரி கடலிலேயே நீந்துறீங்க

//கரிசல்காரன் said

ஏழுவை த‌விர்த்து எதை எழுதினாலும் எதிர்ப்போர் ச‌ங்க‌ம்//

நானும் சங்கத்தில் சேரணும் ஏதும் விதிமுறைகள் உண்டா

தர்ஷன் on November 26, 2009 at 4:47 PM said...

வேட்டைக்காரன் trailer பற்றி ஒன்னும் சொல்லல்ல
எனக்கேதோ வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்ததைப் போல இருப்பதாக தோன்றியது

முரளிகுமார் பத்மநாபன் on November 26, 2009 at 6:26 PM said...

சகா, டச் பண்ணிடிங்க சகா டச் பண்ணிட்டிங்க..

தமிழ்ப்பறவை on November 26, 2009 at 8:09 PM said...

:-)

ஆதிமூலகிருஷ்ணன் on November 26, 2009 at 10:32 PM said...

உனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இல்ல இது.?

அழகு.!

dharshini on November 26, 2009 at 11:23 PM said...

இன்னும் மீளவே இல்லையா?! :)

dharshini on November 26, 2009 at 11:23 PM said...
This comment has been removed by the author.
பட்டிக்காட்டான்.. on November 26, 2009 at 11:58 PM said...

//.. சரியான பாடலைத்தான் பாடியிருக்கிறேன் ..//

சகா.. அந்த பாட்ட நீங்களா பாடுனிங்க, சொல்லவே இல்ல.. :-))

பின்னோக்கி on November 27, 2009 at 11:13 AM said...

பாவம். மீண்டு வாங்க.

பட்டாம்பூச்சி on November 27, 2009 at 2:40 PM said...

அழகு காதல்
காதல் அழகு:)

Karthik on December 1, 2009 at 9:09 AM said...

ஆரம்பிச்சிட்டாருப்பா!!

 

all rights reserved to www.karkibava.com