Nov 20, 2009

சென்னைவாசிகளே ஒன் நிமிட்


 

  சில வாரங்களாக சென்னையிலே குப்பைக் கொட்டியதன் விளைவாக சென்னையைப் பற்றி  சிலப் புதிர் கேள்விகள். சென்ற வருடம் இதே மாதத்தில் இந்தப் பதிவு எழுதிய போது நல்ல ரெஸ்பான்ஸ். சில கேள்விகளை மாற்றியிருக்கிறேன். இந்த ஒரு வருடமாக தொடர்ந்து என்னைப் படிக்கும் நண்பர்கள் உங்க ஞாபக சக்தியை டெஸ்ட் செஞ்சிக்கலாம். புதியவர்கள் முயற்சி செய்ங்க.அனைத்திற்கும் சரியாய் பதில் சொல்பவர்கள் "நான் மெட்ராஸ்காரன்டா" என போக்கிரிப் பொங்கல் போட்டுக் கொள்ளுங்கள்.(அதாம்ப்பா,காலர தூக்கி விட்டுக்கோங்க).

1) சென்னையில் முட்டை அதிகம் கிடைக்குமிடம் எது?

2) சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

3) தேநீர் பகுதியில் மக்கள் கூட்டம்.எங்கே?

4) நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

6) விஜயகாந்த் வசிப்பதால் இது வில்லேஜ்தான். ஆனால் சென்னை மாநகரில்தான் உள்ளது.

7) வெளிநாட்டு நிறுவனங்களுக்காக  இங்கே தான் முதலில் கடை கட்டப்பட்டது. வெள்ளைக்காரனுக்காக FLOOR BELL என்று பெயர் மாற்றாமல் இருந்தால் நல்லது

8) சேரிதான். ஆனால் காஸ்ட்லியான சேரி.

9) பேட்டைதான். அதுவும் ராஜபக்‌ஷே பேட்டை.

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

36 கருத்துக்குத்து:

Anonymous said...

நான் மெட்ராஸ் இல்லை. ஓடிபோயர்றேன்.

ச்சின்னப் பையன் on November 20, 2009 at 8:43 AM said...

ஹிஹி. பதில்கள் இங்கே.. எவ்ளோ தப்பா இருக்கோ அவ்வளவுக்கு பரிசுத் தொகையை குறைச்சிக்கோங்க.... :-)))

1. எக்மோர்
2. அவரவர் வீடுகளில்(!!)
3. டி. நகர்
4. மடிப்பாக்கம்
5. போட் ஹவுஸ்
6. ??
7. தரமணி
8. வேளச்சேரி
9. கொசப்பேட்டை??
10. மாம்பலம்

சந்ரு on November 20, 2009 at 9:09 AM said...

எனக்கு எதுவும் தெரியாது...

Sri on November 20, 2009 at 9:24 AM said...

6. மதுரவயல்

Srini

தராசு on November 20, 2009 at 9:29 AM said...

1.எக்மோர்
2.
3.டி.நகர்
4.மடிப்பாக்கம்
5.போட் ஹவுஸ்
6.சாலிகிராமம்
7.தரமணி
8.வேளச்சேரி
9.
10. மாம்பலம்.

சின்னப் பையனுடன் ஒத்துப் போகிறேன்.

டம்பி மேவீ on November 20, 2009 at 9:34 AM said...

டீலா நோ டீலா ?????

காசு எவ்வளவு தருவிங்க

பாலாஜி on November 20, 2009 at 9:35 AM said...

6.சாலிக்ராமம்

sriram on November 20, 2009 at 9:51 AM said...

1. எக்மோர்
2.ஆதம்பாக்கம்
3. டி நகர்
4.MRF
5. மடிப்பாக்கம்
6. சாலிக்கிராமம்
7.தரமணி
8.வேளச்சேரி
9. கொலைகாரன் பேட்டை
10.மாம்பலம்

சீக்கிரம் பேப்பர் திருத்தி மார்க்க சொல்லு சகா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கார்க்கி on November 20, 2009 at 10:01 AM said...

அம்மிணி, பொது அறிவ வளர்த்துக்கோங்க

சின்னப்பையன், 2,6,9 தப்பு

சந்ரு, ஹிஹிஹிஹி

ஸ்ரீ, மதுரவயல்?? விஜய்காந்த் அங்கேயா இருக்காரு?

தராசு, சொன்னவரைக்கும் சரிதான். ஃபோட்டோ ஜூப்பர்..

மேவீ, முதல்ல விடைகளை சொல்லுப்பா!!!

பாலாஜி, சரிதான்

ஸ்ரீராம், 4ம் 5ம் தப்பு... MRF இடமாங்க? 5வதுக்கு மடிப்பாக்கமும் சொல்லலாம். ஆனா இப்ப வந்த ஆளுங்களுக்கு அந்த வரலாறு தெரியுமா?அவர்தான் பேர மாத்திட்டாரே

sriram on November 20, 2009 at 10:02 AM said...

பின் குறிப்பு
4 வது கேள்விக்கு சொல்ல வந்தது
MRF tyre ஆபீஸ் இருக்குமிடம் க்ரீம்ஸ் ரோடு

பரிசல் இருக்க வேண்டிய இடம் மடிப்பாக்கம் - காரணத்துக்காக, பேர் பொருத்தமா சொன்னா - லேக் ஏரியா..

sriram on November 20, 2009 at 10:03 AM said...

சத்தியமா பின் குறிப்பு நீங்க போட்ட பதில் பாக்காம எழுதினது

Sridharan on November 20, 2009 at 10:37 AM said...

I THINK THIS ONE IS RERELEASE (2nd Release) FROM YOUR OLD POST :)

தாரணி பிரியா on November 20, 2009 at 11:01 AM said...

:) எனக்கு எல்லா பதிலும் ஞாபகமிருக்கே

ரஞ்சனி on November 20, 2009 at 11:10 AM said...

//9) பேட்டைதான். அதுவும் ராஜபக்‌ஷே பேட்டை//

kolaikaranpettai. right?

ithuthaan karki touch. super sagaa

ஆதிமூலகிருஷ்ணன் on November 20, 2009 at 11:15 AM said...

முதல் தடவையா இந்தமாதிரி பதிவுக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தேன். நண்பர்கள் அல்ரெடி சொல்லிட்டாங்க.. :-((

அப்புறம் ஸ்ரீராமின் MRF பதிலுக்கு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். நீ அதை திருத்திக்கொண்டிருக்கிறாய்.! :-))

கல்யாணி சுரேஷ் on November 20, 2009 at 11:35 AM said...

எனக்கும் சென்னை இல்லை. so வுடு ஜூட்.

மண்குதிரை on November 20, 2009 at 11:36 AM said...

:-))

pappu on November 20, 2009 at 11:37 AM said...

நான் ஃபெயிலு/ 3 கேள்விக்கே தோராயமா கெஸ் பண்ணேன்.

புன்னகை on November 20, 2009 at 11:51 AM said...

1. எழும்பூர்
2. ஆதம்பாக்கம்
3. தி. நகர்
4. மடிப்பாக்கம்
5. போட் கிளப்???
6. சாலிகிராமம்
7. தரமணி
8. வேளச்சேரி
9. கொலைகாரன் பேட்டை???
10. மாம்பலம்

இப்படியெல்லாம் கேள்வி கேட்பீங்கன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா, சென்னை பக்கமே சேத்திருக்க மாட்டோம்!;-)

விக்னேஷ்வரி on November 20, 2009 at 12:00 PM said...

எல்லா பதிலும் கண்டுபிடிச்சு கமெண்ட்ட வந்தா எல்லாரும் சொல்லிட்டாங்க. :(
கேள்வி நல்லா தான் செட் பண்ணியிருக்கீங்க. :)

ராஜன் on November 20, 2009 at 12:38 PM said...

9) பேட்டைதான். அதுவும் ராஜபக்‌ஷே பேட்டை.

இதுக்கு மட்டும் பதில் தெரியலை...

சுசி on November 20, 2009 at 12:47 PM said...

எப்டி இருக்கீங்க கார்க்கி?

ஆமா இன்னைக்கு பதிவு ஒண்ணுமே போடலையா???

சுசி on November 20, 2009 at 12:52 PM said...

'Domino’s pizza' இருக்கிறதாலயும், பிரபல தொழிலதிபர் இருக்கிறதாலையும் காஸ்ட்லியான சேரி வேளச்சேரின்னு தெரிஞ்சு போச்சு.

மீதிய நீங்க சொல்லும்போது நானே சரி பாத்துக்கிறேன்.

அறிவிலி on November 20, 2009 at 2:09 PM said...

அப்பாடி, நான் மெட்ராஸ் காரன் இல்லன்னு போக்கிரி பொங்கல் போட்டுகிட்டேன்.

பித்தன் on November 20, 2009 at 2:20 PM said...

விடை தெரியும் ஆனால் இப்போ நான் ரொம்ப லேட் சொன்னாலும் செல்லாது அதனால அப்பீட்டு........

Asha on November 20, 2009 at 3:07 PM said...

//போக்கிரிப் பொங்கல் போட்டுக் கொள்ளுங்கள்.(அதாம்ப்பா,காலர தூக்கி விட்டுக்கோங்க). //

:)))))))))

BTW, நான் சென்னை பொண்ணு இல்லே.. அதனாலே எஸ்கேப்...

கார்க்கி on November 20, 2009 at 3:23 PM said...

ஸ்ரீராம், சரிங்கண்ணா.. பரிசல்-போட் கிளப்தான் நான் நினைச்சது..

ஸ்ரீதரன, அத நானே சொல்லியிருக்கேனெ தல!!!

தா.பி , நீங்க யாரு!!!

நன்றி ரஞ்சனி

ஆதி, அவரும் ஜோக்குக்காக சொன்னாருன்னா தெரியல..

கல்யாணி மேடம்..தெரிஞ்சிக்கோங்க

மண்குதிரை, நன்றி

பப்பு, சென்னை தலைநகரம்ப்பா..

புன்னகை, சூப்பர்

விக்னேஷ்வரி, :)))

ராஜன், அது கொலைகாரபேட்டை..

சுசி, இன்னைக்கு பதிவுல தான் கமெண்ட் போட்டிருக்கிங்க

அறிவிலி, பேருலயே தெரியுதுங்க

பித்தன, நல்ல பதில்

ஆஷா, நீங்க சென்னைதாங்க..

தமிழ்ப்பறவை on November 20, 2009 at 7:21 PM said...

S sir....

சூர்யா on November 20, 2009 at 8:06 PM said...

aen thalai chennaiyoda ninuteenga..appadiyae pakkathu oorukku oru vinadivina set pannida vaendiyadhuthanae...
Ennala 5 bathil thaan kandupidikka mudinjudhu..aanalum copy adichi pass pannitaen..

Asha on November 20, 2009 at 9:27 PM said...

//ஆஷா, நீங்க சென்னைதாங்க..//

illaye!! naan kongu naatin ilavarasi :))))

Sure on November 20, 2009 at 10:12 PM said...

ஓ .............கே நட க் கட்டும்

Pi - π on November 20, 2009 at 10:57 PM said...

1.எக்+மோர்
2.ஆ!'தம்'பாக்கம்
3.'T'.நகர்
4.மடிப்பு + ஆக்கம் = மடிப்பாக்கம்
5.'போட்' 'ஹவுஸ்'
6.சாலி'கிராமம்'
7.FLOOR BELL = தரமணி
8.வேளச்'சேரி'
9.கொலைகாரன் பேட்டை
10. மாம்பலம்.

விடைகள் மேலருந்து சுட்டதுதான் ஆனா கொஞ்சம் கறிவேப்பிலை கொதமல்லி எல்லாம் தூவி நல்லா பிரசென்ட் பண்ண ட்ரை பண்ணினேன் :) . After all I am an IT guy you know :)

பட்டிக்காட்டான்.. on November 20, 2009 at 11:31 PM said...

சகா, தர(தரமணி) = FLOOR சரியா??
FLOORனா தளம் தானே, அதான் கேட்டேன்.. :-)

யோ வொய்ஸ் (யோகா) on November 21, 2009 at 12:29 PM said...

::

ஸ்ரீமதி on November 23, 2009 at 11:08 AM said...

1. எக்மோர்.
6. சாலிகிராமம்.
7. தரமணி?
10. மாம்பலம்

இவ்ளோ தான் தெரிஞ்சது :((

கார்க்கி on November 24, 2009 at 10:57 AM said...

பதில் சொன்ன அனைவருக்கும் நன்றி

 

all rights reserved to www.karkibava.com