Nov 19, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

Massiev solutions என்ற பெயர் வைத்தாகிவிட்டது நம்ம கன்சல்டன்சிக்கு. அதற்கு தோதாக ஏதாவது tagline வைக்கலாமே என்று யோசிக்கத் தொடங்கினோம். பல ஐடியாக்கள் வந்தன. வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் வைக்க வேண்டும்.  தமிழில் வைத்தால் சும்மா உள்ள பூந்து வூடு கட்டலாம். ஆனால் இங்கிலீஷ் என்பதால் inside enter house constructing முடியாமல் போச்சு. அப்படி இப்படி என்று 20 ஒன் லைனர்கள் வைத்து ஒவ்வொன்றாக ஒதுக்கி வைத்து கடைசியில் Geometry of  recruitment என்று முடிவு செய்தோம். இது வேலை தேடுபவர்கள், வேலைக்கு ஆள் தேடுபவர்கள் என இருவருக்கும் தோதான ஒன்றாக தெரிகிறது. உங்க கை  வசம் ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கப்பூ.

தமிழில் நான் சொன்னது “வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்”. எப்பூடீ?

***********************************************************

இந்தியாவில் இதயப் பிரச்சினை  அதிகம் இருப்பதற்கு காரணம் அதிக அளவில் எண்ணெய் சேர்ப்பதனால்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் படித்த செய்தி அதிர்ச்சியாய் இருந்தது. ஐரோப்பியர்கள் அதிகம் எண்ணெய் பயன்படுத்துவதால்தான் இதயப் பிரச்சினை குறைவாம். நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லையாம். என்னங்கடா கதை விடறீங்க? எங்க ஊர் பஜ்ஜி எல்லாம் நீங்க பார்த்ததே இல்லையா என்று கையை முறுக்கிய பின்தான் பார்த்தேன், அவர்கள் சொல்வது ஆலிவ் ஆயில். அதை நாம மூஞ்சிக்குத்தானே போடுவோம்? விலை அதிகம் என்றாலும் முயற்சி செய்து பார்ப்போமே. சமையலில். ஏனெனில் இது நிரூபிக்கப்பட்ட ஒன்றாம். For long live, Use Olive.

**********************************************************

அமெரிக்க போன்ற நாடுகளின் முதலாளித்துவத்தை எதிர்த்து பொங்கும் பதிவர் அவர். நம்ம மண் சார்ந்த உழைப்பாளியை வாழ வைக்க அவர்களின் விளைபொருட்களை பயன்படுத்துங்கள் என்று அடிக்கடி சொல்பவர். கோக்கை விட இளநீரை குடிங்க கார்க்கி என்பார். சென்னையில் இளநீர் 15 ரூபாய் என்று சொல்கிறான். எனக்கு வேண்டாம் என்பேன். அப்படியென்றால் bovonto குடிங்க என்றார்.  பல விஷயங்களில் அவரின் கோபம் நியாயமானதாகத்தான் எனக்கும் தோன்றியது. சென்னைக்கு வந்திருந்த போது பேசிக் கொண்டிருந்தோம். ஈரான் நாட்டுப் படங்களைப் பார்ப்பீர்களா என்றார். இல்லைங்க. நான் நாட்டரசன் கோட்டை நாயகன் பேரரசு படம் தான் பார்ப்பேன். நம்ம ஊரு கலைஞர்களை வாழ வைக்க வேண்டாமா என்றேன். அன்றிரவே மண்ணின் மைந்தன் இயக்கிய , மண்ணின் மைந்தன் நடித்த, மண்ணின் மைந்தன் தயாரித்த ஆதவன் பார்க்க அழைத்தேன். அதற்கு அவர்.. சரி விடுங்க செல்ஃப் டேமேஜ் இப்பலாம் அதிகம் பண்ணிக்கறேன்.

**********************************************************

பேராண்மை படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகரும் ஜெயம் ரவியும் ராசியாகி விட்டார்களாம். விரைவில் ஜெயம் ரவி “victory ravi” என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். ஜெயம் ரவிக்கு குயின் மேக்கர் என்ற பட்டம் உண்டு தெரியுமா? அவருடன் முதலில் நடித்த அசின் மேலே வந்து விட்டார். சதாவுக்கு ஷங்கர் பட யோகம். ஸ்ரேயாவுக்கு சூப்பர் ஸ்டார் ஜோடியாகும் வாய்ப்பு. ஆனால் பாவம் ரேணுகா மேனனுன், காம்னாஜெத்மலானியும் காணாமல் போய் விட்டார்கள். அதை விடுங்க, இவர் தமிழையே அழ்ழ்ழ்கா பேசுவார். ம்ம்ம்ம்

***********************************************************

நேற்று நம்ம சூர்யா-ஜோ மேட்டர் போட்டாலும் போட்டேன். கால், எஸ்.எம்.எஸ். மின்னஞ்சல் என பலர் அவங்க யாருங்க என கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அடடா கார்க்கி மேல இன்னும் நம்பிக்கை வச்சிருக்கிரவங்கள ஏமாத்தக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா அதுக்காக அவங்க அனுமதி இல்லாம யாருன்னு சொல்லக் கூடாது இல்லையா?. யோசிச்சுப் பார்த்ததுல அவங்கள பத்தி ஒரு க்ளூ கொடுக்கலாம்னு முடிவு செய்தேன். அந்த இருவரில் ஒருவர் பெண் பதிவர். இன்னொருவர் ஆண் பதிவர். போதுமா? பின்ன என்னங்க? ஹரிணி பத்தி ஒருத்தராவது கேட்டிங்களா? நானெல்லாம் லவ்வே பண்னக் கூடாதா? அதான் உடனே ஒரு கவிதை சொல்லி உங்கள டரியல் பண்ணலாம்ன்னு முடிவு செய்திட்டேன்.

மறக்கத்தான் தோணவில்லை

அவள் மடியில் சாய்ந்திருந்த நொடியை.

நினைக்கத்தான் முடியவில்லை

அவள் பிரிந்த அந்த நொடியை..

இடியாய் ஒலிக்கும் அவள் நினைவு

மின்னல் ஒளியென வரும் அவள் அழகு

எதிர்காலம் இல்லாதவனாய் இருக்கிறேன்

ஆனால்

இன்னும் நெஞ்சுக்குள் காதல் வளர்க்கிறேன்

யாருமில்லா அறைக்குள் நான் புலம்பும் ஓசை

நான் மட்டும் கேட்கிறேன்

நாளைய விடியலிலாவது

காடு தேடி ஒருத்தி வருவாளா என்று

36 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on November 19, 2009 at 10:52 AM said...

//“வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்”.//

அப்படின்னா வெல குடுக்க மாட்டீங்களா??

ஸ்ரீமதி on November 19, 2009 at 10:57 AM said...

//For long live, Use Olive. //

நம்மாளுங்களுக்கு எல்லா உணவு வகைகளிலும் ருசி முக்கியம்.. முதல் முதல்ல மேகி ஹைதைல விக்காததுக்கு காரணம் அதுல அந்த மசாலா பொடி இல்லாதது தான்.. நீங்க சொல்ற மாதிரி ஆலிவ் ஆயில் யூஸ் பண்ணா நீங்களே சாப்டமாட்டீங்க.. (சும்மா வீம்புக்கு சாப்பிடுவேனேன்னு சொன்னீங்கன்னு வைங்க வாழ்க்கை முழுக்க உங்களுக்கு ஆலிவ் ஆயில் சாப்பாடே கிடைக்கக்கடவதுன்னு சாபம் விட்டுடுவேன் ஆமா... :)))) ஆனா ரொம்ப உபயோகமான தகவல். :))

ஸ்ரீமதி on November 19, 2009 at 10:58 AM said...

//நாட்டரசன் கோட்டை நாயகன் பேரரசு படம் தான் பார்ப்பேன்.//

ரசனை... அப்பகூட மணிரத்னம் ஞாபகம் வரலல்ல?

ஸ்ரீமதி on November 19, 2009 at 11:00 AM said...

//அந்த இருவரில் ஒருவர் பெண் பதிவர். இன்னொருவர் ஆண் பதிவர். போதுமா?//

எக்ஸ்ட்ராடினரி...

//ஹரிணி பத்தி ஒருத்தராவது கேட்டிங்களா?//

ஒன்னு, ரெண்டு இருந்தா கேட்கலாம்.. உங்ககிட்ட கேட்க போய் தெனாலி கமல் "எல்லாம் பய மயம்" சொல்ற மாதிரி பல கதைகள் வெச்சிருப்பீங்க.. அதெல்லாம் கேட்க எங்களால முடியாதப்பா... ;)))))))

ஸ்ரீமதி on November 19, 2009 at 11:02 AM said...

//மின்னல் ஒளியை வரும் அவள் அழகு//

ஒளியென?

ஸ்ரீமதி on November 19, 2009 at 11:03 AM said...

// ஸ்ரீமதி said...
//“வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்”.//

அப்படின்னா "வெல" குடுக்க மாட்டீங்களா??//

"வேலை"- சாரி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்..

விக்னேஷ்வரி on November 19, 2009 at 11:18 AM said...

நீங்க தான் தமிழ்ல பூந்து விளையாடுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியுமே.

எங்க வீட்டு சமையல்ல ஆலிவ் ஆயில் உண்டுங்க. To start with, have Bread toast with Olive oil.

செல்ஃப் டேமேஜ் இப்பலாம் அதிகம் பண்ணிக்கறேன்.//
நீங்க எப்போவுமே பண்றது தானேங்க.

கவிதை எழுதினா மட்டும் உங்க காதலுக்கு நாங்க மரியாதை குடுத்திடுவோமா... Never. :)
கெசில்லா இல்லைனா ஹரிணி - இதுக்குப் பேர் காதலா.... கிர்ர்ர்ர்
By the way, கவிதை நல்லாருக்கு.

டம்பி மேவீ on November 19, 2009 at 11:34 AM said...

“வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்”.


app enakku ange idam irukku nnu sollunga ...

he he he he

enakku thane vettiya iruppathu romba pidikkum

டம்பி மேவீ on November 19, 2009 at 11:35 AM said...

நாட்டு ல இந்த கோழி அதிபர்களின் தொல்லை தாங்க முடியலப்பா

Rishi on November 19, 2009 at 11:47 AM said...

My taglings

Our INSIGHT.Your VALUE
Cultivating possibilities in you

எம்.எம்.அப்துல்லா on November 19, 2009 at 11:56 AM said...

//வெட்டிபயல்களின் வேடந்தாங்கல் //

அந்த ஆபிஸையும், அதுல இருக்குற உன்னையும் சொல்ற மாதிரி இருக்கு :)

பட்டாம்பூச்சி on November 19, 2009 at 11:58 AM said...

கவிதை நல்லாருக்கு.
//“வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்”.//
:)

Anonymous said...

//அந்த இருவரில் ஒருவர் பெண் பதிவர். இன்னொருவர் ஆண் பதிவர். //

என்னா கார்க்கி, இதெல்லாம் ஒரு க்ளூவா? ஏதாச்சு கா ஆரம்பிச்சு கில முடியும் . இப்படி க்ளூ குடுங்க

அனுஜன்யா on November 19, 2009 at 12:08 PM said...

Taglines:

MASSIEV SOLUTIONS
- No problems

MASSIEV SOLUTIONS
- The Career people

MSSSIEV SOLUTIONS
- The Job Gurus

இதுக்கு என் கவிதையே பரவாயில்லையா?

உன்னோட usual pep missing. வேலைப்பளுவா?

அனுஜன்யா

கார்க்கி on November 19, 2009 at 12:25 PM said...

ஸ்ரீமதி, வேலை இல்லைன்னு நல்லா தெரியுது. ஃப்ரீயா இருக்கோம்னு கவிதை எழுதாம இப்படி பின்னூட்டம் போட்டா நாங்க சந்தோஷப்படுவோம்.

விக்னேஷ்வரி, டேஸ்ட் நல்லா இருக்குமாங்க? ஸ்ரீமதி பயமுறுத்தறாங்க.
//கெசில்லா இல்லைனா ஹரிணி - இதுக்குப் பேர் காதலா.... கிர்ர்ர்ர்//

கெசில்லா ஓக்கே சொன்னா நான் ஏன் ஹரிணிய பார்க்கிறேன்?

டம்பீ மேவி, கோழி அதிபர்களா? ஆவ்வ்வ்

நன்றி ரிஷி

அப்துல்லா அண்ணே, வேணாம். நான் அழுதுறுவேன்

நன்றி பட்டாம்பூச்சி. நீங்கதான் சரியா சொல்லியிருக்கிங்க

அம்மிணி, அப்படி ஒரு க்ளு கொடுக்கனுன்னுதான் நானுன் பார்க்குறேன்.. ம்ம்ம் நடக்க மாட்டேங்குது

அனுஜன்யா, நன்றி தல..நல்லாத்தான் இருக்கு. ஆனா இன்னும் பெட்ட்ரா எதிர்பார்க்கிறேன். Hiring the fires ன்னு சொன்னா மாமா, இவ்ளோ aggressive வேணாம்னு சொல்றாரு. natural force in human resource எப்படி இருக்கு?

தராசு on November 19, 2009 at 1:02 PM said...

//அதை நாம மூஞ்சிக்குத்தானே போடுவோம்//

ஹலோ, ஆலிவ் எண்ணை போட்ட மூஞ்சியா இது????

//சரி விடுங்க செல்ஃப் டேமேஜ் இப்பலாம் அதிகம் பண்ணிக்கறேன். //

சுசி on November 19, 2009 at 1:14 PM said...

//வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்//
பப்லு மாமாவுக்கு ஒரு கொட்டு ப்ளீஸ்... இதில எப்பூடீ வேற.

//இந்தியாவில் இதயப் பிரச்சினை அதிகம் இருப்பதற்கு காரணம் //
கார்க்கியின் பதிவு படிக்கும் பழக்கமா இருக்குமோ???

//பல விஷயங்களில் அவரின் கோபம் நியாயமானதாகத்தான் எனக்கும் தோன்றியது. //
பின்ன உங்க மொக்கைக்கு கோபம் வரலேன்னா....

//இவர் தமிழையே அழ்ழ்ழ்கா பேசுவார்//
எவர் ஜெயம் ரவி???

//காடு தேடி ஒருத்தி வருவாளா //
இன்னுமா வரல... ம்ம்ம்????

மொத்தத்தில் வாழ்க தொழிலதிபர், வளர்க உங்கள் தொழில்...

Truth on November 19, 2009 at 1:36 PM said...

MASSIEV SOLUTIONS
- yes only solutions.

என்ன கஜமா? :)

நர்சிம் on November 19, 2009 at 2:02 PM said...

ரைட்டு சகா.

ஆதிமூலகிருஷ்ணன் on November 19, 2009 at 2:40 PM said...

யூஷுவல் சுவாரசியம்.

கவிதைதான் கொஞ்சம் கலவரம்.!

கார்ல்ஸ்பெர்க் on November 19, 2009 at 2:42 PM said...

நான் இப்ப last 3 yeas'a Olive Oil மட்டும் தான்.. இல்லன்னா, Maintanance ரெம்ப கஷ்டம்'ணா..

Vijayashankar on November 19, 2009 at 3:02 PM said...

கவிதை சூப்பர்! :-)

ராஜன் on November 19, 2009 at 3:18 PM said...

MASSIEV SOLUTIONS or
MASSIVE SOLUTIONS, which is correct ?

வாழ்க தொழிலதிபர், வளர்க உங்கள் தொழில்...

எனக்கு தோன்றிய சில Taglines....( நான் படிச்சது கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில் தான், முதல்லேயே சொல்லிப்புட்டேன்... ஆமாம்...)

job crew
Nice job
job in hand
swift job
job factory
Skydive job factory
get, set, catch a job
only acceptable solutions
Growth Is Forever
ALL-IN-ONE
Work In Trouble Is A Temporary Thing
Dare to Be Yourself
makes a better...

Tale Of No
WORK IS LIFE, And your CHOICE
Charity minus the money
Virgin in mind

கொஞ்சம் உங்கள் கம்பெனி பற்றி எனக்கு தட்டி விடுங்கள்...

டம்பி மேவீ on November 19, 2009 at 4:13 PM said...

job revolutionaries...

resource historians...

waves and tides...

(yetho silathu enakku thontriyavai)

pappu on November 19, 2009 at 4:15 PM said...

நீங்க உங்க மாஸிவ் என்கிற பேருக்கு தகுந்தாற்போல தேர்ந்தெடுங்க. ifuture dreamங்கிற கம்பெனிக்கு look beyond what you seeனு தேர்வு செஞ்சோம். அது மாதிரி செய்யலாம். இல்ல நாங்க தான் மாசு வேலையெல்லாம் தூசுன்னு கூட ட்ரை செய்யுங்களேன்.massiev? வர வர ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட கம்பெனிக்கு பெயர் வைக்கிறது ஃபேஷனாப் போயிடுச்சு.

bovonto? மதுரைப் பதிவரா? எனக்கு நம்ம நாட்டு சரக்குன்னு சொன்னதுமே ஹிண்ட் கெடச்ச மாதிரி இருக்கு.

பித்தன் on November 19, 2009 at 4:45 PM said...

வளர்க உங்கள் தொழில்...

கார்க்கி on November 19, 2009 at 5:19 PM said...

ட்ரூத், ஆனா நான் இருந்தா problems மட்டும்தானே இருக்கும் சகா?

நர்சிம்.ம்ம்ம்ம்

ஆதி, எல்லாம் உங்க பதிவின் தாக்கம்தான்

கார்ல்ஸ்எர்க், நீ எதுக்குப்பா சொல்ற? :)

நன்றி விஜயஷங்கர்

ராஜன், massive தான் சரி. ஆனா இது massiev solutions. ஏன்னு இன்னொரு நாள் சொல்றேன். நன்றி சகா

மேவீ, கலக்குறப்பா

பப்பு, நல்லா இருக்கே.. அப்புரம் அவரு மதுரை இல்லைப்பா

நன்றி பித்தன்.,

பின்னோக்கி on November 19, 2009 at 5:36 PM said...

ஆலிவ் ஆயில் சாப்பிடுவாங்களா என்ன ?..ம்ம்ம்

கார்ல்ஸ்பெர்க் on November 19, 2009 at 6:41 PM said...

//கார்ல்ஸ்எர்க், நீ எதுக்குப்பா சொல்ற? :)//

என்னோட Orkut fotos'a நீங்க பார்க்கவே இல்லன்னு நல்லாவே தெரியுது.. :) சீக்கிரமா பாருங்க..

அது என்னன்னு இங்கயே சொன்னா அப்பறம் தேவை இல்லாத விளம்பரம் மாதிரி ஆயிடும்.. :))

தமிழ்ப்பறவை on November 19, 2009 at 7:03 PM said...

ஆலிவ் ஆயிலுக்கெல்லாம் ஒன்லைனர் நல்லா வருது.. உங்க கம்பெனிக்கு வரலையா...?
கவிதை பற்றி...
தேறவே மாட்ட கார்க்கி....
:-)

கல்யாணி சுரேஷ் on November 19, 2009 at 7:36 PM said...

//“வெட்டிபயல்களின் வேடந்தாங்கல்”.//
இந்த விஷயம் நம்ம VIP ங்களுக்கு தெரிஞ்சுது, லாரி நிறைய ஆட்கள் வந்துடப் போறாங்க.
கவிதை நல்லா இருக்கு கார்க்கி.

பட்டிக்காட்டான்.. on November 19, 2009 at 11:57 PM said...

சகா கவித எனக்கா..???!!

ஊர்சுற்றி on November 20, 2009 at 1:06 AM said...

// ஹரிணி பத்தி ஒருத்தராவது கேட்டிங்களா? நானெல்லாம் லவ்வே பண்னக் கூடாதா? // யாருங்க அது? அது என்ன மேட்டர்னு மெயில் பண்ணுங்க!

செந்தில் நாதன் on November 20, 2009 at 5:16 AM said...

inside enter house constructing -> இது சூப்பர்...

ஆலிவ் ஆயில் உண்மை தான்..

மண்குதிரை on November 20, 2009 at 10:43 AM said...

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நண்பா

காக்டெயிலை ரசித்தேன்

யோ வொய்ஸ் (யோகா) on November 21, 2009 at 12:27 PM said...

:))

 

all rights reserved to www.karkibava.com