Nov 18, 2009

பப்லு, நான் மற்றும் ஹரிணி


 

    சென்ற வாரம் நல்ல மழைநாளில் Domino’s pizza வேண்டுமென்று அடம்பிடித்தான் பப்லு. வேண்டாம் என்று சொல்ல எத்தனித்த நேரத்தில் கெசில்லா ஞாபகம் வர, சரி வா கார்ல போயிட்டு வரலாமென்று கிளம்பினோம். தோமினோஸில் ஒரு கெட்ட விஷயம், கவுண்ட்டரில் இருக்கும் அனைவரும் காதில் ஃபோனை வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். Dine inஐ விட delieveryதான் அவர்களுக்கு முக்கியம். ஆனால் கவுண்ட்டரில் தொங்கிய போர்டில் “ To decide what you want to have will take more time than our service ” என்று காமெடி செய்திருந்தார்கள். அதுவா முக்கியம் என்று நகர்ந்த நேரம் “what you want sir” என்றார் ஒருவர். கெஸீலா என்று என்னையறியாமல் வாய் திறக்க வந்தபோது, பப்லு ”chicken mexican redwave” என்று முந்திக் கொண்டு என்னைக் காப்பாற்றினான். கெசிலா இல்லையென்று முடிவு செய்தபின் தான் கவுண்ட்டரில் இருந்து நகர்ந்தேன்.

excuse me என்று எண்ட்ரீ கொடுத்தார் இன்னொரு க்யூட் தேவதை. இவரும் அநியாயத்துக்கு அழகாக இருந்தார். பப்லு எங்கே இருக்கான் என்று தேடினேன். டேபிளில் இருந்த crossword puzzleஐ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை. அவள் ஆர்டர் செய்துவுடன் கவுன்ட்டரில் இருந்தவர் பேர் கேட்க,  ஹரிணி என்றாள். நல்ல பெயர்தானே? பப்லு எதிரே வந்து அமர்ந்து நம்ம க்யூட் தேவதையை பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம். முகம் மட்டும் ஏனோ படு சீரியஸாக இருந்தது. சிரிக்கவே மாட்டேன் என்று பந்தயம் கட்டிவிட்டார் போலும்.

    எப்படியோ மூக்கு வேர்த்து ஃபோன் செய்தான் வினோத். விஷயத்தை அமுக்கமாக பப்லுவுக்கு கேட்காத மாதிரிதான் சொன்னேன். எப்படியோ கேட்டுவிட்ட பப்லு ”மாமா, யாரு வினோத்தா? என்றான் சத்தமாக. ஒரு லுக் விட்டுவிட்டு திரும்பி விட்டாள் ஹரிணி. அந்த அக்கா பத்திதானே பேசறீங்க என்றான் பப்லு. அக்கா, மாமா மேட்ச் ஆனாலும் எப்படி கேட்டது என்று முழித்தேன். கிளம்பும் போது அந்த அக்காவைப் பார்த்து சிரித்தான் பப்லு. அப்போதும் உம்மென்றே இருந்தாள். கண்ணாடிக் கதவை திறந்து வெளியே வந்தேன் நான். பப்லு பாதி திறந்திருந்த கதவின் வழியாக “ஹரிணி” என்றான். அவள் திரும்பியவுடன் “கொஞ்சம் சிரி நீ” என்று சொல்லிவிட்டு ஓடி வந்தான். நான் சொல்லிக் கொடுத்துதான் பப்லு சொன்னதாக நினைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். ம்க்கும். கிளம்பும்போதுதான் தோணுமா உனக்கு என்றபடி பப்லுவுடன் கிளம்பினேன். ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு.

******************************

உறவினர் வீட்டில் ஒரு விசேஷம். நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். நான் செல்வதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால் பலர் கிளம்பிவிட்டார்கள். “ஏண்டா லேட்டு? எல்லோரும் எங்க கார்க்கி எங்க கார்க்கின்னுதான்” கேட்டாங்க என்றார் அம்மா. தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டு சொன்னான் பப்லு “ அவன் எங்க கார்க்கி. யாருக்கும் தர மாட்டேன்” அவன் மொக்கையை புரிந்துக் கொள்ளாமலே சிரித்தார்கள் அனைவரும்.

*******************************

வலையுலகம் அறியாத வலையுலக காதல் ஜோடி அவர்கள். சூர்யா ஜோ என்று வைத்துக் கொள்வோமா? சூர்யாதான் முதலில் எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிந்தவர் என்றாலும், ஜோ சென்னையிலே இருப்பதால் பப்லுவிடம் அலைபேசி தோஸ்த் ஆகிவிட்டார். விஷம். ச்சே விஷயம்  இதுதான். நம்ம சூர்யா ஒரு மொக்கை அடித்திருக்கிறார். உடனே ஜோ, நான் தான் பப்லுவோட தோஸ்த், அதனால் மொக்கை அடிக்கிறது என்னோட காப்பிரைட்டு என்று சொல்லியிருக்கிறார். சும்மா விடுவாரா சூர்யா? உனக்கு பப்லுதான் தோஸ்து. ஆனா நான் அவன் குருவுக்கே தோஸ்து என்றாராம்.

              ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!

24 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on November 18, 2009 at 11:33 AM said...

கெசிலா இல்லையென்று முடிவு செய்தபின் தான் கவுண்ட்டரில் இருந்து நகர்ந்தேன். //
சீக்கிரம் வீட்டுல பொண்ணு பார்க்க சொல்லுங்க. இல்லைனா இப்படியே ரொம்ப வழிஞ்சு எங்கேயாவது அடி வாங்கிட்டு வரப் போறீங்க. எல்லா நேரத்திலயும் பப்லு காப்பாத்த முடியாது.

அக்கா, மாமா மேட்ச் ஆனாலும் எப்படி கேட்டது என்று முழித்தேன் //
இது திருந்துற கேசில்ல.

ஹரிணி.. கொஞ்சம் சிரி நீ. ரைமிங்காத்தான் சொல்லியிருக்கான் பப்லு.//
உங்க கூடல்ல சுத்திட்டிருக்கான். பின்ன எப்படி இருப்பான்...

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!! ///
இதை விட பெரிய காமெடி என்னவா இருக்க முடியும்..

நர்சிம் on November 18, 2009 at 12:18 PM said...

//வலையுலகம் அறியாத வலையுலக காதல் ஜோடி அவர்கள். சூர்யா ஜோ என்று வைத்துக் கொள்வோமா//

???? இது வேறயா சகா..ரைட்டு.

புன்னகை on November 18, 2009 at 12:27 PM said...

:-)

தராசு on November 18, 2009 at 12:36 PM said...

என்ன தல,

ஆணி அதிகமோ, எழுத்து குறைஞ்சுட்டே போகுது.

சுசி on November 18, 2009 at 12:41 PM said...

//நல்ல பெயர்தானே? //
ஆமா இது எத்தனாவது நல்ல பெயர் கார்க்கி???

//முகம் மட்டும் ஏனோ படு சீரியஸாக இருந்தது. //
பின்ன.... உங்கள பாத்துட்டதுக்கு அப்புறமும்......

//சொன்னான் பப்லு “ அவன் எங்க கார்க்கி. யாருக்கும் தர மாட்டேன்” //
சமத்து!!!

//பப்லுவிடம் அலைபேசி தோஸ்த் ஆகிவிட்டார். விஷம். //
உங்களுக்கு ஏன் இந்த பொறாமை???

புன்னகை on November 18, 2009 at 12:41 PM said...

//excuse me என்று எண்ட்ரீ கொடுத்தார் இன்னொரு க்யூட் தேவதை.//
எல்லாருமே உங்க கண்ணுக்கு தேவதை தானா??? ;-)

//பப்லு எங்கே இருக்கான் என்று தேடினேன்.//
இந்த பயம் எனக்குப் பிடிச்சிருக்கு! :-)

//அவன் எங்க கார்க்கி. யாருக்கும் தர மாட்டேன்//
பச்ச மண்ணு பப்லு!

//ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!//
நிஜமாவா???

அறிவன்#11802717200764379909 on November 18, 2009 at 12:52 PM said...

||//முகம் மட்டும் ஏனோ படு சீரியஸாக இருந்தது. //
பின்ன.... உங்கள பாத்துட்டதுக்கு அப்புறமும்......||

இது சூப்பரு..

கல்யாணி சுரேஷ் on November 18, 2009 at 1:04 PM said...

//பப்லு பாதி திறந்திருந்த கதவின் வழியாக “ஹரிணி” என்றான். அவள் திரும்பியவுடன் “கொஞ்சம் சிரி நீ” என்று சொல்லிவிட்டு ஓடி வந்தான்.//

இப்படியா ஒரு பச்ச புள்ளைய கெடுத்து வைக்கிறது?

//தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டு சொன்னான் பப்லு “ அவன் எங்க கார்க்கி. யாருக்கும் தர மாட்டேன்”//

உங்க மேலதான் எவ்வளவு பாசம்?

//உனக்கு பப்லுதான் தோஸ்து. ஆனா நான் அவன் குருவுக்கே தோஸ்து//

உண்மைதானே? ஹா.. ஹா.. ஹா...

யோ வொய்ஸ் (யோகா) on November 18, 2009 at 1:16 PM said...

மொக்குங்க சகா

பித்தன் on November 18, 2009 at 2:12 PM said...

//ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!//
நிஜமாவா???

கார்க்கி on November 18, 2009 at 3:11 PM said...

@விக்னேஷ்வரி,
காமெடியா?????ஆவ்வ்வ்

@நர்சிம்,
இது வேறதான் சகா :))

@தராசு,
ஆமாங்க. இனிமேல வாரம் ரெண்டோ மூணோதான்..

@சுசி,
அவன் சமத்துதான். என் கழுத்தை பிடிச்சா அபப்டித்தான் சொல்வீங்க

@புன்னகை,
எல்லோரும் தேவதையா தெரியல புன்னகை. தேவதையா எனக்கு தெரியறவங்கள பத்தி மட்டும் எழுதறேன். ஓக்கேவா?

@அறிவன்,
ரைட்டு

@கல்யாணி,
நான் இல்லைங்க. எங்க கத்துட்டு வர்றானே தெரியலை

@யோகா,
நீங்கதானே சகா சொன்னிங்க மொக்கறதிலும், நெஞ்ச நக்கறதிலும் நம்மள அடிச்சிக்க முடியாதுன்னு :))

@பித்தன்,
சகா, சரவெடி வந்தா ஷங்கர், தரணி, லிங்குசாமின்னு எல்லா ஆக்‌ஷன் இயக்குனர்களும் நம்ம பின்னாடிதான்னு ஆதி சொல்லியிருக்காருங்க :))

ஸ்ரீமதி on November 18, 2009 at 4:00 PM said...

:)))))))

அன்புடன் அருணா on November 18, 2009 at 4:50 PM said...

பாவம் பப்லு......இப்பிடி இவ்வ்ளோ சீக்கிரமே உங்களை மாதிரி ஆயிட்டான்!

அனுஜன்யா on November 18, 2009 at 5:34 PM said...

டேய், பப்லுவையாவது நல்லவனாக இருக்க விடு :)

இப்ப சென்னை வந்தால் உன்னை பார்க்க நேரிடும் என்று நினைத்தாலே.....

btw, Domino's எந்த கிளை?

அனுஜன்யா

Vinny on November 18, 2009 at 5:40 PM said...

Naan thanada Harini ya muthalla parthen...enna scene la iruthe cut pannittee

தமிழ்ப்பறவை on November 18, 2009 at 9:17 PM said...

இப்ப பப்லுவால மாட்றாதால கார்க்கிக்குக் கவலைப் படுறாதா இல்லை கார்க்கி கூட இருக்கிறதால பப்லுவுக்குக் கவலைப் படுறதான்னு தெரியலை....

:-) :-)

Anonymous said...

//ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!//

ஹஹா, நல்லா இருக்கு உங்க செல்ப் ப்ரொமொஷன் :)

Truth on November 19, 2009 at 4:04 AM said...

ஹரிணி மேட்டர் நல்லாருக்கு...
அந்த ஆக்ஷ்ன் ஹீரோ யாரு பப்லுவா?

கார்க்கி on November 19, 2009 at 11:26 AM said...

நன்றி ஸ்ரீமதி

அருணா மேம், அவன் என்னை தாண்டி போயிடுவான்னு நினைக்கிறேன்

அனுஜன்யா, வேளச்சேரி கிளைதான் தல

இந்த வின்னி என்பவன் தான் வினோத் :))

தமிழ்ப்பறவை, கிகிகி நல்ல கேள்வி

அம்மிணி, இல்லையா பின்ன?

ட்ரூத், புரொஃபைல் ஃபோட்டோ சூப்பர் பாஸ்

ஆதிமூலகிருஷ்ணன் on November 19, 2009 at 2:44 PM said...

கடைசி மேட்டர் கிளுகிளு.. யாருபா அது.?

பின்னோக்கி on November 19, 2009 at 5:31 PM said...

பப்லு வாழ்க

குசும்பன் on November 19, 2009 at 8:08 PM said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
கடைசி மேட்டர் கிளுகிளு.. யாருபா அது.?
//

ம்ம்ம்ம் ஆதி மூலகிருஷ்ணனும், ஷகிலாவும்! போதுமா! கேள்விய பாரு,காதல் ஜோடிய போன வாரம் வடபழனி கோவிலுக்கு அழைச்சுக்கிட்டு போய்ட்டு வந்த நீங்க அப்படி இருக்கு பொழுது என்ன ஒரு உலக நடிப்பு!

குசும்பன் on November 19, 2009 at 8:10 PM said...

//btw, Domino's எந்த கிளை?

அனுஜன்யா//

பையனுக்கு பொண்ணு பார்க்கவா யூத் அனுஜன்யா? யப்பா கார்க்கி இவருக்கு அந்த பொண்ணு போட்டோ அனுப்பி வைப்பா!

reena on March 14, 2011 at 2:57 PM said...

இன்னுமொரு வலையுலக ஜோடி சூர்யா ஜோ போலவா?
சொல்லவே இல்லை...

www.jillunuorukaadhal2009.blogspot.com

 

all rights reserved to www.karkibava.com