Nov 11, 2009

என்ன செய்யப் போகிறேன் நான்?


 

சென்னை வரப் போகிறேன் என்றதும் பலரும் கேட்ட கேள்வி “எந்த கம்பெனி?”. இல்ல. வேற பிளான் என்று சொன்னதும் ஃபோனிலே ஒரு மாதிரி பார்த்தார்கள். பிறகு ஒரு கன்சல்டன்சி ஒன்று தொடங்கப் போகிறோம் என்ற போதும் இன்னொரு கண்ணால் அதே மாதிரி பார்த்தார்கள். வலையுலக நண்பர்கள் பலர் என் மேலயும் நம்பிக்கை வைத்து ஊக்கமளித்தார்கள். இது ஒரு சுய புராண பதிவென்று பின்னூட்டப் போடவிருக்கும் அந்தப் புண்ணியவானுக்கு இந்த முன்னுரை போதுமென்று நினைக்கிறேன். விஷயத்துக்கு வருவோம்.

ஃபைனான்ஸ் கம்பெனிகள் அதிகம் மூடப்பட்ட நேரத்தில் வாடகைக்கு எளிதாக இடங்கள் கிடைத்தன. அதை வைத்து பிரவுசிங் செண்டர்களும் ஜாப் கன்சல்டன்சிகளும் புற்றீசல் போல் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஒரு கன்சல்டன்சி தொடங்க சில கணிணிகள், மூன்று ஆட்கள் , லேண்ட்லைன், இணையம் மற்றும் naukri.com ல் ஒரு அக்கவுண்ட். requirement வாங்க சில நிறுவனங்களின் HRஉடன் தொடர்பு. அவ்வளவே. எளிதில் லாபம் அடையலாம். ஆனால் இப்படி தொடங்கப்பட்ட நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்குள்ளே மூடப்பட்டு விடும். அது ஏன் என்பதெல்லாம் விளக்கினால் நீங்கள் கொட்டாவி விடக் கூடிய அபாயம் இருப்பதால் விட்டுவிடுவோம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று மட்டும் சொல்கிறேன்.

நான் ஒரு Recruitment consultant அல்ல. Career consultant. எனது முக்கிய வேலை ஒருவருக்கு வேலை வாங்கித் தருவது மட்டுமல்ல. அவரின் அனுபவம், தகுதி தற்போதைய வேலை இவைகளை வைத்து இவரின் career எந்த பாதையில் செல்லலாம், எதிர்காலத்தில் எந்தெந்த நிறுவனங்களில் பணிபுரியலாம் போன்றவற்றை விளக்குவது. அதன் அடிப்படையில் இருக்கும் openingsல் அவருக்கு ஏற்ற ஒன்றை பரிந்துரைப்பது. ஒரு உதாரணம் பார்ப்போம்.

பாலாஜி என ஒருவர். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படித்துவிட்டு Maintenance engineer ஆக ஆறு வருடம் வேலை செய்து வருகிறார். ஒரு உற்பத்தி நிறுவனத்தில் கடந்த நாலு வருடமாக வேலை செய்து வந்தாலும் சம்பளம் என்னவோ 20ஆயிரம் ரூபாய்தான். இந்த நேரத்தில் ஒரு வாய்ப்பு வருகிறது. ஒரு ஷாப்பிங் மாலில் இருக்கும் சில utility equipmentsக்கு ஆள் தேவை. சம்பளம் 35ரூபாய். utility என்றால் DG set, Compressor, air conditioner முதலியவை. ஒரு மேனுஃபேக்சரிங் நிறுவனத்தில் பல மிஷின்களை பராமரித்த ஆறு வருட அனுபவத்தையெல்லாம் விட்டுவிட்டு அவர் இந்த வேலைக்கு வர 35 ஆயிரம் ரூபாய் என்ற காரணம் போதும்தானே? அவர் அப்படித்தான் நினைப்பார். அவரிடல் பேசும் கன்சல்டன்சி நபரும் அதையே அழுத்தி சொல்வார். காரணம், இவர் அந்த வேலையில் சேர்ந்தால் கன்சல்டன்சிக்கு ஒரு மாதம் சம்பளத்தை வேலைக்கு எடுக்கும் நிறுவனம் தந்துவிடும்.

பாலாஜி என்னிடம் வந்தால் இந்த வேலைக்கு போக வேண்டாமென்று சொல்லிவிடுவேன். அதுதான் ஒரு நல்ல career consultant செய்ய வேண்டும். ஏன்? இவர் ஒரு மேனுஃபேக்ட்சரிங் நிறுவனத்தில் பராமரிப்பு பிரிவின் தலையாக வரக் கூடியவர். அதற்குள் அவசப்பட்டு இந்த வேலைக்கு சென்றால் ஆறு வருட உழைப்பும் வீணாகிவிடும்.பின் கன்சல்டன்சிக்கு எப்படி காசு கிடைக்கும்? career consultant கேண்டிடேட்டிம்தான் சார்ஜ் செய்ய நேரிடும். ஆனால் நம்ம ஊரில் இதுக்கெல்லாம் காசு கொடுக்க அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் எனது திட்டம், இந்த வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லும் நிறுவனத்தின் தேவையை நன்கு உணர்ந்து அதற்கு சரியான ஆளின் ரெஸ்யுமேவை அனுப்பினால், நம்ம ஆளு தேர்வாவது நிச்சயம். அது மட்டுமல்ல, அந்த நபருக்கும் சரியான பாதையை காட்டலாம். இவ்வாறு நல்ல வேலை கிடைத்த நபர் நிச்சயம் அவரின் நண்பர்களுக்கு நம்மைப் பரிந்துரைப்பார். ஆனால் இந்த திட்டம் ஐடிக்கு நிச்சயம் பொருந்தாது.

   இதில் இருக்கும் ஒரு பெரிய சவால், நம்மிடம் வேலை கேட்டு ரெஸ்யும் அனுப்பும் ஆட்களுக்கு இது புரிய வேண்டும். அவருக்கு ஏற்ற வேலை கிடைக்க சில நேரம் எடுக்கும். அதற்குள் அவர் வேறு கன்சல்டன்சி மூலம் வேறு வேலைக்கு சென்றுவிட்டால் அவ்வளவுதான். பொதுவாக கன்சல்டன்சிகள் ரெக்வையர்மெண்ட் கொடுக்கும் நிறுவத்திற்கு ஒரே நாளில் 10 புரொஃபைல் வரை அனுப்புவார்கள். யாராவது ஒருவன் செல்க்ட் ஆகிவிடுவான். ஆனால் அந்த நிறுவனத்திற்கு இது பெரிய செலவு. அத்தனை பேரையும் இண்டெர்வ்யூ செய்ய வேண்டும். ஆனால் என் திட்டப்படி நாமே முதல் கட்ட வடிகட்டுதல் செய்வதால், ஒன்றிரண்டு புரொஃபைல் மட்டுமே அனுப்புவதால் அவர்களுக்கும் வேலை குறைவு. இரண்டாவது இவர்களிடம் இருந்து வரும் புரொஃபைல் நல்லா இருக்குமென்ற நம்பிக்கையும் கிடைக்கும்.அதுதான் நமது மூலதனமே.

மேலும், ஐ.டி நிறுவனத்தில் ஆள் எடுப்பதென்பது தினமும் நடந்துக் கொண்டிருக்கும் செயல். talent acquisition team என்று ஒரு தனிக் குழுவே இதற்காக வேலைசெய்யும். ஆனால் manufacturing industriesல் இது முற்றிலும் வேறு. ஆனால் ஐ.டி நிறுவனங்கள்தான் கன்சல்டன்சிகளுக்கு வரப்பிரசாதம். அதனால் அவர்கள் மேனுஃஃபேக்சரிங்க்குக் அதே முறையை கையாள்வார்கள். அவர்கள் சொல்லும் requirementsஐ புரிந்துக் கொள்ள மாட்டார்கள். production, metal forming, machine shop என்பது போன்ற கீ வேர்ட்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு அவை இருக்கும் ரெஸ்யும்களை தேடி அனுப்புவார்கள்.ஏனென்றால் ஐடி வேலைக்கு java, unix, oracle dba என்று தேடி ரெஸ்யும் அனுப்பினால் போதும். இதனால் அந்த கிளையண்ட் கடுப்பாவது உறுதி. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இதைப் புரிந்துக் கொண்டுதான் இந்த முயற்சியே. ஏற்கனவே பப்லுவின் அப்பா இது போன்றதொரு கன்சல்டன்சியை வெற்றிகரமாக இரண்டு வருடமாக நடத்தி வந்தாலும் தனியாக ஒன்றை தொடங்கவிருக்கிறோம். அது manufacturing industriesஐ மட்டுமே டார்கெட் செய்யும். கன்சல்டண்ட்களும் என்னைப் போன்று manufacturing பேக்கிரவுண்ட் இருக்கும் ஆட்களாகத்தான் எடுக்க இருக்கிறோம்.

ரொம்ப நீண்டுவிட்டது. ஒரு வேளை இந்தப் பதிவு பிடித்திருந்தால், ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். சொல்கிறேன்.

67 கருத்துக்குத்து:

Anonymous said...

all the best karki

தராசு on November 11, 2009 at 10:55 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி,

உங்கள் கான்செப்ட் அருமை. உங்கள் நம்பிக்கை பெருமை கொள்ள வைக்கிறது.

சென்னை வந்தவுடன் நேரில் சந்திக்கிறேன்.

மண்குதிரை on November 11, 2009 at 11:01 AM said...

nalla visiyam

ungkala nampi uurukku varalam

♠ ராஜு ♠ on November 11, 2009 at 11:02 AM said...

வாழ்த்துக்கள்ண்ணா...!

பிரியமுடன்...வசந்த் on November 11, 2009 at 11:22 AM said...

உங்கள் கருத்துக்கள் பிடித்திருக்கின்றன சகா

நல்ல பதிவரா மட்டுமில்ல
நல்ல வழிகாட்டியாவும் இருக்கீங்க

வாழ்த்துக்கள் சகா

பொன்.பாரதிராஜா on November 11, 2009 at 11:24 AM said...

//ஆனால் என் திட்டப்படி நாமே முதல் கட்ட வடிகட்டுதல் செய்வதால், ஒன்றிரண்டு புரொஃபைல் மட்டுமே அனுப்புவதால் அவர்களுக்கும் வேலை குறைவு.

ஆனால் Java,C,C++,siebel,oracle,SQL,.Net போன்ற எல்லா டெக்னாலஜியும் தெரிந்த ஆட்கள் நம்மிடம் இருக்க வேண்டுமே?

நர்சிம் on November 11, 2009 at 11:25 AM said...

வாழ்த்துக்கள் சகா.

எறும்பு on November 11, 2009 at 11:29 AM said...

வாழ்க வளமுடன்....
வாழ்க வளமுடன்....
வாழ்க வளமுடன்....
வாழ்க வளமுடன்....
வாழ்க வளமுடன்....

பரிசல்காரன் on November 11, 2009 at 11:30 AM said...

உன் ப்ளாக்கில் வந்ததில் முக்கியமான பதிவுகளில் இதுவும் ஒன்று சகா.

வாழ்த்துகள்!

rajan on November 11, 2009 at 11:46 AM said...

my wishes!

K.T.M on November 11, 2009 at 11:49 AM said...

அருமையான கான்செப்ட் ...

நல்ல வழிகாட்டியா இருக்க

வாழ்த்துக்கள்

கல்யாணி சுரேஷ் on November 11, 2009 at 11:53 AM said...

அருமையான விஷயம் கார்க்கி. வாழ்த்துகள்.

விக்னேஷ்வரி on November 11, 2009 at 11:56 AM said...

தொழிலதிபர் ஆகிட்டீங்கன்னு தெரியுது.
கலக்குங்க.

யோ வாய்ஸ் (யோகா) on November 11, 2009 at 12:00 PM said...

கலக்குங்க சகா

ஆதிமூலகிருஷ்ணன் on November 11, 2009 at 12:02 PM said...

இன்னும் நிறைய பேக் ஒர்க்ஸ் பண்ணிக்கொண்டிருப்பீர்கள் என் நம்புகிறோம். செய்யப்போகும் காரியத்தில் தெளிவு மிக அவசியம்.

வெற்றிக்கான வாழ்த்துகள்.

தொழிற்சாலைகள் அனுபவத்தில் 10 வருடம் தாண்டிய என்னைப்போன்றோரும் 15 வருடங்களைத் தாண்டிய நர்சிம் போன்ற நண்பர்களும் உதவிக்கு இருக்கிறோம். உதவிகளுக்கு எந்நேரமும் அணுகலாம்.

(நர்சிம் வயது : இப்படியே எழுதி எழுதி சீரியஸ்ஸா ஒரு விஷயம் சொல்லும் போதும் ஜோக்கைத் தவிர்க்கமுடியவில்லை.)

சென்ஷி on November 11, 2009 at 12:05 PM said...

நல்ல விரிவான தகவல் பகிர்வு..!

Anonymous said...

Besh wishes Karki

அறிவிலி on November 11, 2009 at 12:07 PM said...

நானும் அதே டொமைன்தான். நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

முரளிகண்ணன் on November 11, 2009 at 12:20 PM said...

கார்க்கி, கலக்கல்.

T.V.Radhakrishnan on November 11, 2009 at 12:24 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி

ஆயில்யன் on November 11, 2009 at 12:29 PM said...

நல்ல தீர்க்கமான + தெளிவான நோக்கங்களோடு பயணம் தொடங்குகிறது வாழ்த்துக்கள் :)

சஹானா beautiful raga on November 11, 2009 at 12:38 PM said...

வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்

சுசி on November 11, 2009 at 12:44 PM said...

வெற்றி பெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்....

எம்.எம்.அப்துல்லா on November 11, 2009 at 12:51 PM said...

உச்சம்தொட வாழ்த்துகிறேன்

//தொழிற்சாலைகள் அனுபவத்தில் 10 வருடம் தாண்டிய என்னைப்போன்றோரும் 15 வருடங்களைத் தாண்டிய நர்சிம் போன்ற நண்பர்களும் உதவிக்கு இருக்கிறோம். உதவிகளுக்கு எந்நேரமும் அணுகலாம்

//

10 வருடம்,15 வருடம் அனுபவமுள்ள இந்த ரெண்டு பெருசுகளும் எனக்கு மிகவும் வேண்டியவர்கள்.அவர்களிடம் சில கேல்விகள் கேட்க முடியாத போது யூத்தான என்னிடம் கேட்டால் நான் அவர்களிடம் கேட்டுச் சொல்கின்றேன் :)

எம்.எம்.அப்துல்லா on November 11, 2009 at 12:52 PM said...

அப்படியே என் கெரியர் எப்படி இருக்கும்னு சொன்னீன்னா நல்லா இருக்கும் :)

இராகவன் நைஜிரியா on November 11, 2009 at 12:53 PM said...

வாழ்த்துகள் கார்க்கி.

goindu on November 11, 2009 at 12:57 PM said...

All the very best for future

ஆதிமூலகிருஷ்ணன் on November 11, 2009 at 12:57 PM said...

அப்துல் :அப்படியே என் கெரியர் எப்படி இருக்கும்னு சொன்னீன்னா நல்லா இருக்கும் :) //

அவுரு என்ன கிளி சோசியம் பாக்குற கம்பெனியா வைக்கப்போறாரு.?

Achilles/அக்கிலீஸ் on November 11, 2009 at 1:01 PM said...

வாழ்த்துக்கள் சகா.. :))

பட்டிக்காட்டான்.. on November 11, 2009 at 1:03 PM said...

வாழ்த்துகள் சகா..

ரவிசங்கர் on November 11, 2009 at 1:10 PM said...

நல்ல அணுகுமுறை. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

உற்பத்தித் துறையில் உள்ள என் நண்பனுக்கு உங்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன். நன்றி.

ஒவ்வாக்காசு on November 11, 2009 at 1:14 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி...

ஒவ்வாக்காசு.

பைத்தியக்காரன் on November 11, 2009 at 1:35 PM said...

வாழ்த்துகள் கார்க்கி...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Vijayashankar on November 11, 2009 at 2:00 PM said...

Congrats on your new career! Best of Luck!

ஜெனோவா on November 11, 2009 at 2:07 PM said...

வாழ்த்துக்கள் சகா

☀நான் ஆதவன்☀ on November 11, 2009 at 2:17 PM said...

நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள் சகா

செ.சரவணக்குமார் on November 11, 2009 at 2:19 PM said...

அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

அமுதா கிருஷ்ணா on November 11, 2009 at 2:48 PM said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கும்க்கி on November 11, 2009 at 4:14 PM said...

வாழ்த்துக்கள் ப்ரதர்...

நான் வேணா.... அந்த ரெஸ்யூம்ல டிபெக்ட் என்னென்ன என்று
சொல்ல ஒரு கன்சல்டன்ஸியா வரவா?

Cable Sankar on November 11, 2009 at 4:15 PM said...

அப்படியே எனக்கு ஒரு கம்பெனிய பார்த்து விடுங்க கார்க்கி.. என் எக்ஸ்பீரியன்ஸ் என்ன்னனு உங்களுக்கு தெரியும்.. :)

மணிநரேன் on November 11, 2009 at 6:10 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.

paya on November 11, 2009 at 6:20 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.

அத்திரி on November 11, 2009 at 6:47 PM said...

புதிய முயற்சி வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகா

இரா.சிவக்குமரன் on November 11, 2009 at 6:59 PM said...

வாழ்த்துக்கள்

கடைக்குட்டி on November 11, 2009 at 7:14 PM said...

கலக்குங்க,, :-)

தமிழ்ப்பறவை on November 11, 2009 at 7:17 PM said...

இதுக்குப் பின்னாடி இவ்வளவு உழைப்பு இருக்கா...?
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகா...

பீர் | Peer on November 11, 2009 at 7:25 PM said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்க்கி. திருமணமாகுமுன் என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம். திருமணத்திற்குப் பிறகு எடுக்கும் ரிஸ்க் கால்குலேட்டட் ரிஸ்க் ஆக இருக்க வேண்டும்.

நானும் 18 மாதமா பிளாக்கரா இருக்கேன். எனக்கு ஒரு கேரீர் அட்வைஸ் பார்சேல்.

நேசன்..., on November 11, 2009 at 9:41 PM said...

இன்னொரு கலாநிதி மாறனாய் வளர வாழ்துக்கள்!......

தாரணி பிரியா on November 11, 2009 at 10:53 PM said...

புதிய முயற்சி வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்க்கி

K.S.Muthubalakrishnan on November 11, 2009 at 10:55 PM said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கார்க்கி on November 11, 2009 at 11:14 PM said...

!!!!!!!!!

அனைவருக்கும் தனித்தனியே பதில் போட முடியாமல் போனதை தவிர இந்த புது வேலையில் எல்லாமே நல்லபடியாக இருக்கிறது.

அனைவருக்கும் நன்றி...

ILA(@)இளா on November 12, 2009 at 12:52 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

Truth on November 12, 2009 at 1:59 AM said...

கார்க்கி, நீங்க எழுதின பதிவுகள்ல இதுவும் டாப்ல வரும். நல்ல பதிவு கார்க்கி.

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

Itsdifferent on November 12, 2009 at 3:29 AM said...

Best wishes.
Check this site. theladders.com

Few things I liked going through this site is, resume building, continuous appropriate updates through email, conducting regular workshops on various topics etc.

Good Luck, and feel free to reach out if there is anything I can do from here.

செந்தில் நாதன் on November 12, 2009 at 7:33 AM said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Logan on November 12, 2009 at 7:48 AM said...

All the best Karki

பித்தன் on November 12, 2009 at 11:16 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி,

உங்கள் கான்செப்ட் அருமை. உங்கள் நம்பிக்கை பெருமை கொள்ள வைக்கிறது.

சென்னை வந்தவுடன் நேரில் சந்திக்கிறேன்.

Karthik on November 12, 2009 at 11:24 AM said...

எனக்கும் ஒரு கேரியர் கன்சல்டேஷன் பார்சேஏஏஏல்!!! ;))

வாழ்த்துக்கள் கார்க்கி!

Karthik on November 12, 2009 at 11:25 AM said...

தொழிலதிபர்னு சஞ்சய் அண்ணா இருக்கார். நர்சிம் கார்பரேட் கம்பர்ங்கிறாங்க. உங்களுக்கு ஏதாவது பேர் தேடணுமே. உங்க ரசிக கண்மணிகள் வேலையை ஆரம்பிச்சிட்டாங்களா?

எப்பூடி? :))

பட்டாம்பூச்சி on November 12, 2009 at 3:39 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி :)

mohan on November 12, 2009 at 5:01 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி இந்த மாதிரி Career consultant ஐ டி துறையில் இருந்தால் நிச்சயம் நிறைய பேர் பயனடைவார்கள். -மோகன்

மங்களூர் சிவா on November 12, 2009 at 9:10 PM said...

வாழ்த்துகள்.

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்துல் :அப்படியே என் கெரியர் எப்படி இருக்கும்னு சொன்னீன்னா நல்லா இருக்கும் :) //

அவுரு என்ன கிளி சோசியம் பாக்குற கம்பெனியா வைக்கப்போறாரு.?
/

ROTFL
:))

கார்க்கி on November 13, 2009 at 10:23 AM said...

அனைவருக்கும் நன்றி

Sundar on November 15, 2009 at 10:25 PM said...

>>"ஆனால் நம்ம ஊரில் இதுக்கெல்லாம் காசு கொடுக்க அவர்கள் தயாராக இருக்க >>மாட்டார்கள்."

ரொம்ப சரி.
வருமானத்திற்கான வழிகளை நல்லா சரி பார்த்துக்கங்க.

Networking is more critical than great ideas in this segment. also have yourself convinced about competition, what is that you have that differentiates yourself. You also need to think enough on the segments you want to focus and how the trends are there.

Overall if this venture is critical for your survival, you better have a validated business plan, that is more of a plan and preparations than wishful thinking. if you are taking unilateral decision, then you have to critically look at yourself or get your plans reviewed by someone you can trust, just to make sure you know what you are getting into.

அகநாழிகை on November 19, 2009 at 8:52 AM said...

கார்க்கி,

முதலில் எனது வாழ்த்துக்கள்.

பதிவு பற்றி..
உங்கள் பதிவின் நேரடி பேச்சிலான விவரணையே உங்களோடு உரையாடிய உணர்வை தருகிறது. இதுவே உங்களுடைய வெற்றிதான். மறுபடியும் வாழ்த்துக்கள்.

- பொன்.வாசுதேவன்

ராஜன் on November 19, 2009 at 3:45 PM said...

வாழ்த்துகள் கார்க்கி...

 

all rights reserved to www.karkibava.com